தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, ஆகஸ்ட் 28, 2015

திண்டுக்கோட்டை

தேவகல்லும், திண்டுக்கோட்டையும்.

அன்பு நண்பர்களே வணக்கம்...
திண்டுக்கோட்டை Sorry திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இறங்கி கைப்பேசியில் அழைத்தேன் யாரை என்று சொல்லவும் வேண்டுமா ? வேண்டாமே.... ஸ்கூட்டரில் வந்தார் அவரது வீட்டுக்கு அழைத்துப் போனார் அவரது கணினியில் எனது தளத்தை நான் சொல்லச் சொல்ல அழகாக செதுக்கினார் நிறைய சந்தேகங்களும், பல விடயங்களும் கேட்டுத் தீர்த்துக் கொண்டேன் மனிதர் ஒவ்வொன்றுக்கும் ஒரு ஃபைல் வைத்து இருக்கிறார் உடனடியாக அதை திறந்து இணைப்புக்கு கொண்டு வருகிறார் நான் தும்மினால்கூட அதற்கும் ஒரு ஃபைல் போட்டு வைத்திருப்பேன் இவர் என்னைவிடக் கூடுதலாக வைத்திருக்கின்றார் எல்லாவற்றையும் பொருமையாக சொல்லித் தந்தார் பல விசயங்களும் (பொறணி) பேசினோம்.


இடையில் புதுக்கோட்டை கலக்கல் மன்னன் கவிஞர் திரு. நா. முத்து நிலவன் அவர்களிடமிருந்து வலைச்சித்தருக்கு கைப்பேசி வந்தது பேசிவிட்டு என்னிடம் கொடுத்தார் கவிஞர் என்னிடம் கேட்ட முதல் கேள்வி
கில்லரே தமிழ் நாடு முழுவதும் சுற்றுப்பயணமா ? 
உடன் நினைத்தேன் ஆஹா இந்த முறை இத்துடன் நிறுத்திக் கொள்வோம் இல்லையெனில் இவரது கண்ணே பட்டுவிடும் போல் தோன்றியது ஆகவே டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு, குஜராத், ஹரியானா, மாண்டியா, பாலக்காடு (வில்லங்கத்தார்) ஊர்களில் உள்ள பதிவர்களை சந்திப்பதை நிறுத்தி விட்டு இவர்கள் கண்ணுக்குத் தெரியாமல் வெளிநாட்டில் வாழும் பதிவர்களை சந்திப்போம் யாரை சந்திக்கலாம் ? சரி வீட்டுக்குப் போய் ஆலோசிப்போம்.பிறகு நண்பர் பகவான்ஜியை செல்லில் அழைத்தேன் டி.டி நான் பேசுகிறேன் என்று வாங்கி நான்தான் கில்லர்ஜி பேசுறேன் எனச்சொல்லி சுமார்  ¾ மணிநேரம் பேசிவிட்டு செல்லை அணைத்து என்னிடம் கொடுத்து விட்டார் இவ்வளவு நேரமும் என்னிடம் பேசியதாக பகவான்ஜியும் நினைத்துக் கொண்டார் பிறகு தில்லை அகத்தார் சகோ திருமதி. கீதா அவர்களிடம் பேசினோம் நண்பர் டி.டி ஒரு வேளையாக கீழே போய் விட்டு வந்தார் அவர் வருவதற்குள் அவரது கணினியில் எனது மகளிர் ஓட்டுனரில் (Pen Drive ர்) வைத்திருந்த காணொளியை வைத்து உடன்
என்ற சிறிய நகைச்சுவை பதிவை எழுதி வெளியிட்டேன் அதற்க்குள் மதிய உணவு தயார் அன்பின் மிகுதியால் வழக்கமான எனது அளவுக்கு மீறி சாப்பிட்டு...
மீண்டும் பேசிக்கொண்டு இருந்தோம் மாலை குடும்பத்தார்களிடம் விடை பெற்றேன் பிறகு நண்பர் டி.டி ஸ்கூட்டரில் ஏற்றி அங்கு விமான நிலையம் இல்லாத காரணத்தால் பேருந்து நிலையம் கொண்டு வந்து விட்டார் சந்தோஷமான இன்றைய தினம் திண்டுக்கலை விட்டு தி கிரேட் தேவகோட்டை நோக்கி புறப்பட்டேன்.

காண் - ஒளி

எமது சந்திப்பு பதிவுகளைக் காண கீழே இணைப்புகளை சொடுக்கவும்.

வாழ்க வளமுடன்.
சந்திப்புகள் தொடரும்...

59 கருத்துகள்:

 1. வலைச் சித்தரிடமிருந்து
  விலை மதிப்பற்ற சித்து விளையாட்டை
  "கணிணி விளையாட்டை" கற்றுத் தேர்ந்த
  முறுக்கு மீசை முனிவருக்கு வாழ்த்துகள்!
  கொடுத்து வைத்த கொடுவா மீசைக்காரர் அய்யா நீவீர்! வாழ்க!
  வலைச்சித்தருக்கு எமது சிறப்பு வாழ்த்துகள்.
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சுடச் சுட வருகை தந்து கருத்து பதிந்தமைக்கு நன்றி நண்பா...

   நீக்கு
 2. அருமையான பதிவு. நல்ல விருந்தா.. திண்டுக்கல்லில்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பா நல்லதொரு விருந்தோம்பல்...

   நீக்கு
 3. திண்டுக்கல் தனபாலன் சந்திப்பு அருமை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பர் நாகேந்திர பாரதியின் முதல் வருகைக்கு நன்றி.

   நீக்கு
 4. திண்டுக்கல்லில் விமான நிலையம் இல்லா விட்டால் என்ன!..

  அதுதான் கூடுதுறை (துறைமுகம்) இருக்கின்றதே!..

  திண்டுக்கல் சந்திப்பு அருமை.. இனிமை!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி இந்த விசயம் எனக்கு ஞாபகம் வரவில்லையே....

   நீக்கு
 5. படங்களுடன் திண்டுக்கல் சந்திப்பும் கலக்கல்.

  பதிலளிநீக்கு
 6. இந்த தடவை தமிழகம் வந்தபோது நீங்கள் சந்திக்காத பிரபல பதிவர்களே இல்லை போலும். பதிவை இரசித்தேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே நீங்கள் இருக்கின்றீர்களே... சந்திக்க முடியாமல் போனவர்களில்

   நீக்கு
 7. தேவ கல்லும்..திண்டுக்கோட்டையும்..நன்றாகத்தான் இருக்கிறது. வாழ்க! வளர்க!! வாழ்த்துக்கள்!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திண்டு மேலே கோட்டை கட்டினால் நன்றாகத்தான் இருக்கும் நண்பரே..

   நீக்கு
 8. திண்டுக்கல்லாரும் தேவகோட்டையாரும் சந்தித்துக் கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. சந்திப்பினில் ஏற்பட்ட பரவசத்தை உங்கள் படங்களில் இருக்கும் இருவரது முகங்களுமே காட்டுகின்றன. உங்கள் அன்புப் பிடியில் சிக்கிய அடுத்த பதிவர் யார்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே விரைவில் காணலாம் வருகைக்கு நன்றி.

   நீக்கு
 9. மகிழ்வான சந்திப்பு.. அதை அப்பட்டமாய்க் காட்டும் ரசனையான எழுத்து. வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 10. பெயரில்லா8/28/2015 1:07 PM

  அருமை..
  மகிழ்ச்சி.
  நல்ல பதிவு சகோதரா..

  பதிலளிநீக்கு
 11. வணக்கம் ஐயா தங்கள் தளத்திற்கு புதியவன்!! இனி தொடர்ந்து வருவேன் சந்திப்பு பதிவு அழகு அருமை நன்றி!!

  அன்புடன் கருர்பூபகீதன் நனறி!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புதிய வரவு நண்பர் கரூர் பூபகீதன் அவர்களின் முதல் வரவை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறேன் நன்றி.

   நீக்கு
 12. தாய்நாட்டிற்கு வந்தபோது பார்த்த நண்பர்களைப் பற்றிய பகிர்வின் வரிசையில் திண்டுக்கல் தனபாலன் சந்திப்பு மறக்கமுடியாததே, உங்களைப் போல் எங்களுக்கும். புகைவண்டி நிலைய பெயர்ப்பலகையையே மாற்றிவிட்டீர்களே? உங்களால்தான் முடியும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக முனைவரே ரயில்வே நிலையத்துக்கு சென்றேன் பெயர்ப் பலகையை கண்டேன் புகைப்படம் எடுத்தேன் அவ்வளவே....

   நீக்கு
 13. வணக்கம்,
  கல்லும் கோட்டையும் நல்லா தான் இருக்கு,,,,,
  பதிவுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோ கல்லுக்கும், கோட்டைக்கு கருத்துரையோடு ''வாக்கும்'' அளித்தமைக்கு நன்றி

   நீக்கு
 14. ம்ம்ம்ம் வில்லங்கத்தாரச் சொல்லாம விடமாட்டிகளே! ஹஹஹாஹஹ்...திருவள்ளுவரும், திருக்குறளும் அழகாய் மலர்ந்திடும் டெக்னிகல் ஓலைச் சுவடியைக் ண்டோம்... அதாங்க டிடி திருக்குறள்தாசனின் கணினி....அருமை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க உடனே பதிவுக்கு வந்துட்டீங்களே... பலே... பலே....

   நீக்கு
 15. கல கல! கலக்கல்! திண்டுக்கல்!

  பதிலளிநீக்கு
 16. என்றென்றும் இனிக்கும் நினைவுகள் அல்லவா
  இச்சந்திப்பு
  மகிழ்ந்தேன் நண்பரே
  வலைச் சித்தரும் மீசையை முறுக்கி விட்டிருக்கிறாரே
  தங்களைப் பார்த்தால் ஏற்பட்ட மாற்றமா?
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே... அவரும் மீசைக்காரர்தானே...

   நீக்கு
 17. ஆஹா!..
  திண்டுக்கோட்டை பலமாக இருக்கிறது!
  அசைக்க முடியாது!..:)

  அனைத்தும் அருமை சகோ!
  வாழ்க வளமுடன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திண்டு மேல் கோட்டை கட்டினால் அசைக்க முடியாதே... நன்றி சகோ.

   நீக்கு
 18. திரு.தனபாலன் அவர்களுடனான சந்திப்பு பற்றிய விபரங்கள் சுவாரஸ்யமாக இருந்தன! ஒரு மாதம் தான் விடுமுறையில் போகப்போவதாகச் சொன்ன ஞாபகம்! அந்த குறுகிய இடைவெளியில் இத்தனை பேர்களை சந்தித்து விட்டீர்களா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த விடுமுறை பதிவுலத்துக்காக... ஆகவே இன்னும் பலர் இருக்கின்றார்களே... வருகைக்கு நன்றி சகோ....

   நீக்கு
 19. சென்னை பதிவர் சந்திப்பில் அவருடன் இருந்த நிமிடங்கள் இனிமையானவை! அருமையான மனிதர்! பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 20. அன்புள்ள ஜி,
  வலைச்சித்தரும் + தேவகோட்டையாரும் சந்தித்தால்...!

  திண்டுக்கல்லாரைப் பார்த்து இப்படிப் பாடத் தோண்றியதோ...?


  “முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்?
  சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்துவிட்டேன் என்னை

  படித்த பாடம் என்ன உன் கண்கள் பார்க்கும் பார்வை என்ன?......


  ஜில்லாவோ திண்டுக்கல்லு
  சின்னாளம்பட்டி பக்கம் சொல்லு
  நம்ம சிலுக்குவார் பட்டி சிங்கம்
  செம்பு கலக்காத தங்கம்
  அவர் வைச்சிருப்பதோ வருத்தப்படாத வாலிபர் சங்கம்
  அண்ணே அன்புக்கு அன்னை தெரசா
  அறிவுக்கு அப்துல் கலாம்
  அடக்கத்துல நெல்சன் மண்டேலா
  அன்புடன் உதவி செய்வதில் திண்டுக்கல் தனபாலன்
  அய்யான்னு சொல்லு........!

  ஊமையன்கோட்டையுடன் அழகாக தேவகோட்டை
  உண்மையில் இதைப் புகழுது மலைக்கோட்டை

  நன்றி.
  த.ம. 12


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக மணவையாரே வழக்கம் போல் பாடல்கள் அசத்தல் நன்றி

   நீக்கு
 21. மகிழ்ச்சி... அருமை!

  பதிவு சின்னதா இருக்கே? நீங்க ரெண்டு பேர்களும்
  பேசிய உரையாடல்களை விவரமாக வெளியிட்டால்
  என்ன?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பரே சில ராணுவ ரகசியங்கள் தங்களுக்காக வேண்டுமெனில் மின்னஞ்சல் அனுப்புகிறேன்.

   நீக்கு
 22. சகோ ,dd அவர்களின் வீட்டிற்கு போக வேண்டும் என்று நினைத்தாலும் நேரம் கிடைக்கவில்லை ,வெளி நாட்டில் இருந்து வந்து பல பதிவர்கள் சந்தித்த உங்கள் பண்பைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை ..என்ஜாய் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி
   ஒரு மனிதன் மறைந்த பிறகும் வாழுறான்னா... அதன் சூட்சுமம் அவன் வாழ்ந்த முறையில்தான் 80தை முழுமையாக அறிந்தவன் நான் வாழும் வரை மனிதனாக வாழ்வதே எமது கொள்கை.

   நீக்கு
 23. அருமையானதொரு சந்திப்பு...
  நான் சந்திக்க வேண்டும் என்று நினைத்து சந்திக்காமலே இரண்டு பயணங்களாக வரும் மனிதர்... அண்ணன்....
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே அடுத்த முறை சந்தியுங்கள் வருகைக்கு நன்றி

   நீக்கு
 24. ஒரே ஊர்சுற்றல் போலும் டிடியை சந்திக்கும் ஆசை எனக்கும் உண்டு சகோ.

  பதிலளிநீக்கு
 25. அருமையான சந்திப்பை அழகாய் பகிந்தீர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வலைச்சர ஆசிரியரின் வருகைக்கு நன்றி

   நீக்கு
 26. மாயஜாலம் புரியும் டிடியின் கணினியை படம்பிடித்துக் காட்டி விட்டீர்களே .டிடியின் வேகம் உங்களுக்கும் வந்து விட்டது என்று நினைக்கிறன். போகிற போக்கைப் பார்த்தால் ட்ராப்டில் இருக்கும்போதே கண்டறிந்து கருத்திடும் வல்லமை பெற்றுவிடுவீர் என்று நினைக்கிறேன். அசத்துங்கள் கில்லர்ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதெல்லாம் ஓவராகத் தெரியவில்லையா ? நண்பரே...

   நீக்கு
 27. அருமையான சந்திப்பு அழகான பதிவு சகோ.

  பதிலளிநீக்கு
 28. நண்பர்கள் சந்திப்பு அருமை நட்பரே
  தொடரட்டும் சந்திப்பு ....

  பதிலளிநீக்கு