தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், ஆகஸ்ட் 24, 2015

அழகு


மகள்-
அத்தா, எனக்கு மாப்பிள்ளை பார்க்க போனீங்களே முகம்மது அழகா... அகமது அழகா ?

தந்தை-
மகளே முகம் அது அழகாக வேண்டும்  என்பது முக்கியமில்லை, ஏனெனில் அது நிரந்தரமற்றது. ஆனால்  அகம் அது அழகாக இருக்க வேண்டும். அகம் அழகாய் இருந்தால் உனக்கு கடைசி வரை வாழ்வில் சந்தோஷம் இருக்கும்.

மகள்-
சரி அத்தா நீங்க சொல்ற மாப்பிள்ளையை நான் சந்தோஷமா நிக்ஹா செய்துக்கிறேன். 

சாம்பசிவம்-
என்னய்யா இது, நான் வேற மா3யில நெனைச்சேன், அப்படின்னா அகமதின் அழகு முகமதில் தெரியும்னு பழமொழி சொல்லலாம் போலயே...


46 கருத்துகள்:

 1. ஹாஹ்ஹாஹ்ஹா ஹா ....... சிந்தனைத் திறம் கொண்டவரே ம்..ம் அருமை அருமை ! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வாங்க இப்பத்தான் ஏரியா தெரியுதா..... ம்ம் ம்...

   நீக்கு
 2. உங்களின் பதிவை படித்ததும் ,முன்பு ஒருமுறை படித்ததுஎன் நினைவுக்கு வந்தது இதோ அது .....சிவகவி படத்தில் எம் கே டி அவர்கள் பாடிய 'முகம் அது சந்திர பிம்பமோ 'என்ற வரிகள் 'வதனமே சந்திர பிம்பமோ 'என்று மாற்றப் பட்டதாம் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் ஜி தாங்கள் சொல்வதுபோல மாற்றப்பட்டதே...

   நீக்கு
  2. நான் சொல்ல நினைத்ததை திரு பகவான்ஜி அவர்கள் சொல்லிவிட்டார்.

   நீக்கு
  3. வருக நண்பரே தங்களுக்கு தெரியாத சினிமா விடயங்களும் இருக்கிறதா ?

   நீக்கு
 3. தந்தை சொல்லுக்கு மந்திரமில்லை போலிருக்கு...

  பதிலளிநீக்கு
 4. சூப்பர் .! நல்ல சிந்தனை & கருத்து. எப்படி? உங்களால் இப்படி எழுதமுடியுது.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோ சும்மா இருக்கும் பொழுது சும்மாக்காச்சுக்கும் யோசிச்சது.....

   நீக்கு
 5. உங்கள் ஒப்பீடு அழகு!

  வாழ்த்துக்கள் சகோ!

  த ம.6

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக கவிஞரே வாழ்த்துகளுக்கு நன்றி

   நீக்கு
 6. முகமதுவையும், அகமதுவையும் வைத்து அசத்தி விட்டீர்கள். ரசித்தேன். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் ரசிப்பிற்க்கு நன்றி நண்பரே...

   நீக்கு
 7. ஓகோ. இப்படியும் சிந்திக்கலாமோ? தமிழ் மணம் +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சொல்லாமென நினைத்தேன் சொன்னேன் முனைவரின் வருகைக்கு நன்றி

   நீக்கு
 8. பெரிய கவிஞராக ஆகியிருக்க வேண்டியவர். என்னவொரு சொல்லாடல். முகமதும் அகமதும் வியக்கவைக்கிறது. ரரரரரரசித்தேன்...!!! நண்பரே!
  த ம 9

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கருத்துரையின் வழியே நல்லதொரு நகைச்சுவை தந்தமைக்கு நன்றி நண்பரே...

   நீக்கு
 9. படித்துக் கொண்டு வரும்போதே - முகமது சந்த்ர பிம்பமோ!.. - நினைவுக்கு வந்தது..

  ஆனால் - பகவான் ஜி முந்திக் கொண்டார்..

  ஓய்!.. சதாசிவம் நீரு என்ன சொல்றீரு?..

  இங்ஙன ஒருத்தங்கிட்ட இதச் சொன்னேங்.. சண்டக்கி வந்திடாம்லே!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக ஜி யாரு ? சண்டைக்கு வந்தது புரிதல் எல்லோருக்குமே நல்ல பாதையில் சென்றால் நாட்டில் பிரட்சினையே கிடையாதே.... ஜி

   நீக்கு
 10. சூப்பர் சகோ. உங்களால் மட்டும் தான் இப்படி எழுத முடியும்.

  பதிலளிநீக்கு
 11. உங்களை சிந்தனைக் களஞ்சியம் என்று அழைக்கலாமா.?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தகுதி வரும் பொழுது பார்க்கலாம் ஐயா வருகைக்கு நன்றி

   நீக்கு
 12. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற பழமொழியும் உண்டு! எனவே அகம் சிறப்பாக இருந்தால் முகமும் சிறக்கும்! சிறப்பான பதிவு! நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே அவ்வழியே பிறந்ததே இப்பதிவு வருகைக்கு நன்றி

   நீக்கு
 13. அகத்தின் அழகு முகத்தில் தெரியும்தானே!
  சொற்சிலம்பம்

  பதிலளிநீக்கு
 14. எப்படியெல்லாம் சிந்திக்கிறிங்க சகோ.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களுடைய வெண்பாக்களை விடவா ?

   நீக்கு
 15. "அது" (திறமை) இருக்கும் வரை
  உம்மிடம் எதுவும் வேலைக்கு ஆகாது
  (முகம் + அது)
  (அகம் + அது)
  அனைவருக்கும் ஆசை முகம்
  உமது மீசை முகம் அல்லவா?
  அதுசரி நண்பா! உமக்கு பிடித்தது எது?
  ஆசையா? மீசையா?
  இதுக்கும் அகமதுவும், முகமதுவும் வந்துதான் பதில் சொல்ல வேண்டுமா என்ன?
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பா எனக்கு பிடித்ததை பார்த்திபனூர் பாவா பக்ருதீன் வந்து சொல்வார்.

   நீக்கு
 16. நீங்க ஆரம்பிச்ச உடனேயே புரிஞ்சுடுச்சே...என்ன செய்ய...ஹஹஹஹ சரி சரி... ஆனால், ரசித்தோம்...ஜி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் உடனடி வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

   நீக்கு
 17. நீங்கள் சொன்னதும் அழகு தான்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயாவின் அழகான கருத்துரைக்கு நன்றி

   நீக்கு
 18. அன்புள்ள ஜி,

  ‘அழகு’ என்றவுடன் ஓர் அழகான பாட்டு ஞாபகம் வருதே...! பொண்ணுக்கு மாப்பிள்ளை பாடுற இந்தப்பாட்டு புடுச்சிருக்கான்னு கேட்டுச் சொல்லுங்க... பாத்துச் சொல்லுங்க...!


  அழகு தெய்வம் மெல்ல மெல்ல
  அடி எடுத்து வைத்ததோ
  நான் அன்புக் கவிதை சொல்ல சொல்ல
  அடி எடுத்துக் கொடுத்ததோ
  இளநீரைச் சுமந்திருக்கும்
  தென்னை மரம் அல்ல
  மழை மேகம் குடை பிடிக்கும்
  குளிர் நிலவும் அல்ல
  இங்கும் அங்கும் மீன் பாயும்
  நீரோடை அல்ல
  இதற்கு மேலும் இலக்கியத்தில்
  வார்த்தை ஏது சொல்ல......

  ‘முகமது.... அகமது...’யாருக்கு மது பிடிக்காதோ அவரைத்தான் இந்த மாதுக்கு பிடிக்கும்...!

  நன்றி.
  த.ம. 16

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாருங்கள் மணவையாரே...
   அழகான பாடல் வரிகள்
   மது மாது இருவரும் மது''ரைக்காரர்களா ?

   நீக்கு
 19. அகத்தின் அழகே அழகு அருமையா பகிர்வு

  பதிலளிநீக்கு
 20. அகம் அழகாய் இருக்க வேண்டும் அருமை.

  பதிலளிநீக்கு
 21. நீங்கள் கூறுகிறபடி, அகமது அழகானால் நகமது நாளும் பொலியும் முகமதில்!

  (*நகம் = ஒளி).

  பதிலளிநீக்கு