தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, செப்டம்பர் 29, 2017

புரட்டாசி மாதம் 18 ஆம் தேதி


காயம்பட இதயத்தை கல்லால் அடித்து விட்டாயடி
காயல்பட்டணக்காரன் என்னை கோபப்பட வைத்தாயடி

காடு எங்கும் எங்கள் பாரம்பரிய சொத்து நிறைந்ததடி
வீடு தேடி வந்தவனை நாயை விட்டு விரட்டி விட்டாயடி

எங்கள் வீட்டில் யானை கட்டி போர் அடித்த குடும்பமடி
உங்கள் வீட்டில் பூனைக்குகூட சோறு போட முடியாதடி

சிங்கம் போல நடந்த என்னை அசிங்கப்படுத்தி விட்டாயடி
தங்கம் நிறைந்த குடும்பத்தை பங்கம் விளைய வைத்தாயடி

முப்போகமும் விளைந்தது எங்கள் வீட்டில் களஞ்சியமடி
முக்காடு போட வைத்து எங்களை மூழ்கிப்போக செய்தாயடி

வங்கிகளுக்கே கடன் கொடுத்த வள்ளல் பரம்பரை நாங்களடி
வாங்கி குடிக்க வழியில்லாத ஊர் சுற்றும் கூட்டம் நீங்களடி

அழகி என்று உன்மீது ஆசை வைத்தேன் நான் முட்டாளடி
அழுகிப் போனது உன் மனம் என்று தெரிய வைத்தாயடி

சொந்த மாமன் மகள் மாலா எனக்காகவே இருக்காளடி
இந்த சோமன் அவளுக்கு என்றும் பொருத்தமானவனடி

சோமனுக்கும், மாலாவுக்கும் 16 பொருத்தம் இருப்பதாக சோலந்தூர் சோசியர் சோனைமுத்து சொல்ல, வரும் புரட்டாசி மாதம் 18 ஆம் தேதி கோலாகலமாய் நடக்க இருக்கும் திருமணத்துக்கு நாமும் வாழ்த்துவோமே நட்பூக்களே...

66 கருத்துகள்:

 1. ஆகா .. என்ன பொருத்தம் ... இந்த பொருத்தம் ...

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் ஜி !

  பதினாறு பொருத்தம் அடடே......ஏன்னா ஒரு பொருத்தம் வாழ்த்துகள் ஜி மணமக்களுக்கு !

  தமன்னா மூன்று

  பதிலளிநீக்கு
 3. ஆவ்வ்வ்வ்வ்வ் இன்று மீ த 1ஸ்ட்டூஊஊஊஊஊஊஊஊஊஊ இல்லை எனச் சொல்ல வந்தேன்ன்:)..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மணமக்களை வாழ்த்த வரவில்லையோ.... ?

   நீக்கு
  2. நோஓஓஓஓஓ வாழ்த்தமாட்டேன்ன்ன்:).. மணவறையில் வச்சே சோமனுக்கு காப்புப் போட வைப்பேன்ன்:) தங்கத்தில் அல்ல இரும்பில்:)

   நீக்கு
  3. கல்யாண நேரத்தில நல்லதாக நாலு வார்த்தை பேசவேண்டாமா ?

   சோமன் அம்மா அகிலாண்டத்துக்கு தெரிஞ்சது தேம்ஸ் நதிக்கு ஆபத்துதான்....

   நீக்கு
  4. நான் மேசைக்குக் கீழ சேஃப் ஆ இருந்துதானே சவுண்டு விடுறேன் கில்லர்ஜி:).. இப்பூடி விசயங்களில் மீ வலு உஷாராக்கும்:)..

   நீக்கு
  5. அகிலாண்டத்தைப்பற்றி உங்களுக்கு தெரியாது போல ஐயோ பாவம் நீங்க....

   நீக்கு
 4. ம்ஹூம்ம்ம்ம் விடமாட்டேன்ன்ன் மாலாவின் ஃபோன் நம்பர் எனக்கு இப்பவே வேணும்.. மாலாவை சோமனிடம் இருந்து காப்பாத்தியே தீருவேன்ன்ன்ன்ன்ன் கர்ர்ர்ர்ர்ர்ர்:))..

  பிறந்ததிலிருந்து மாமன் மகள் இருக்க.. இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி.. எங்கெங்கெல்லாமோ அலைந்து விட்டு.. அடி வாங்கியபின்னர்தான் மாமன் மகளும் 16 பொருத்தமும் கண்ணுக்குத் தெரிஞ்சதோ?:) விடமாட்டேன்ன்ன்ன்ன் இதோ புறப்படுறேன்ன்ன்ன்.....

  ஊசிக்குறிப்பு:
  இது கொமெடியா உண்மையா கில்லர்ஜி? உண்மை எனில் சரி இந்தப் பேச்செல்லாம் வாணாம் என விட்டிட்டு வாழ்த்திடுறேன்.. கற்பனை எனில்... விடமாட்டேன்ன் மாலாவைக் காப்பாற்றியே தீருவேன்ன்:)..

  அதுசரி 16 பொருத்தம் திருமணத்தில் உண்டா?:)).. அந்த சோனைமுத்து அங்கிளின் மெயில் ஐடியைக் கொஞ்சம் தாங்கோவன்:)..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக....

   எனக்கு எதற்கு வம்பு மாலாவின் நம்பர் 000987654321 இதில் தொடர்பு ‘’கொல்’’க.

   சோலந்தூர் சோசியரின் ஐ.டி இதோ... solanthoor@topetta.com

   நீக்கு
  2. எடுக்கிறேன்ன் எடுக்கிறேன்ன்ன்.. மாலா தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறா என வருதே:)).. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கல்யாணம் முடிஞ்சு... தேவகோட்டையைத் தாண்டி இருப்பினமோ?:).. ஹையோ இப்போ நேக்கு லெக்ஸ்ஸும் ஆடல்ல கான்ஸ்ஸும் ஓடல்ல:)).. மாலாவைக் காப்பாத்தியே தீருவேன்ன்:)..

   ஹா ஹா ஹா சோசியர் துப்பட்டா போட்டிருகிறாரோ?:)... எதைப் பார்த்தாலும் நேக்கு இப்போ தலை சுத்துதே:).. அஞ்சூஊஊஊஊ கொஞ்சம் ஜெல்ப் மீஈஈஈஈஈ:)..

   நீக்கு
  3. சோசியருக்கு உகாண்டாவிலிருந்து அழைப்பு வந்து இருக்கும்.

   நீக்கு
  4. அதிரா ஏன் சோமனை அப்படிச் சொல்லோணும். காதலிப்பது தவறா? அந்தப் பெண் அவனை ஓட்டிவிட்டாள் அதில் இவன் தவறென்ன....தான் அன்பு செய்த பெண் தன்னை விரட்டியதால், தன்னை அன்பு செய்யும் மாலாவைக் கல்யாணம் செய்யலாம்னு முடிவு ...நல்ல ஸ்மார்ட் இல்லையோ சோமன்??!!! ஒரு வாசகம் கூட உண்டு நீ அன்பு செய்பவரை விட உன்னை அன்பு செய்பவரைத் தேர்ந்தெடு...என்று சரிதானே அதிரா??!!!!

   கீதா

   நீக்கு
 5. மணமக்களுக்கு வாழ்த்துக்கள்..
  அந்தக் க்ச்லாவின் நாத்தனார் இங்கேயும் வந்துட்டாங்க!...இனிமேல் நல்லாயிருக்கும்..

  அது சரி.. அது யார் கலா என்று கேட்கிறீர்களா!..

  நேற்று ஸ்ரீராம் எங்கள் பிளாக் தளத்தில் கலா தானே கவிதை நாயகி..

  அங்கே போனால் கலாவையும் கலாவுடைய கவிதையையும் பார்க்கலாம்..

  நன்றி ஜி..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கலாவின் நாத்தனார்ர்?:) ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்:))

   நீக்கு
  2. அன்பின் ஜி
   தங்களது வாழ்த்துகளை மணமக்களுக்கு வழங்கியது கண்டு மகிழ்ச்சி.

   கலாவையும் கோர்த்தது சரி கலகத்தையும் கோர்க்காமல் இருந்தால் செரிதேன்....

   நீக்கு
  3. இதென்ன கலா சீசனா,இன்று என் பதிவிலும் கலா வந்திருக்காங்களே ஜி :)

   நீக்கு
  4. இது கலா"காணும் காலம் ஜி

   நீக்கு
 6. மாலா மாலா மாட்டிப்பாளா?

  துரை செல்வராஜூ ஸார்...

  ஏய்.... கலா... கலா... கண்ணடிச்சா .கலக்கலா....!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம் ஜி பாட்டு பொருத்தமாக வருதே....

   நீக்கு
  2. ஹா ஹா ஹா ஹையோ விடிஞ்சுகூட நல்லாத்தானே இருந்தார் ஸ்ரீராம்:).. கில்லர்ஜியின் லக்‌ஷறி வெடிங் அதுவும் 16 பொருத்தத்தோடு பார்த்ததும் என்னமோ ஆச்சு அவருக்கு:)..

   இந்த முழுப்பொறுப்பையும் கில்லர்ஜி ஏ பொறுப்பேற்கோணும் ஜொள்ளிட்டேன்ன்:)..

   நீக்கு
 7. 2011 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் திருமணம் என்றால் திருமணம் முடிந்து 6 ஆண்டுகள் ஆகியிஊர்க்குமே. மேலும் நவம்பர் மாதத்தில் புரட்டாசி வராதே. ஐப்பசி அல்லவா இருக்கும.

  எப்படியாயினும் மணமக்களுக்கு வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே காலண்டர் குழறுபடியாக இருக்கிறது போல.... வரும் புரட்டாசி என்றால் அடுத்த வாரம்தானே மணமக்களை வாழ்த்தியமைக்கு நன்றி

   நீக்கு
 8. சோமனுக்கும் மாலாவுக்கும்வாழ்த்துக்கள் :)

  16 பொருத்தத்துக்கு பொருத்தமா 16 ஆம் தேதியே கல்யாணத்தை வைச்சிருக்கலாமே :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மணமக்களை வாழ்த்தியமைக்கு நன்றி
   அதானே சோனைமுத்துவுக்கு இது தெரியாமல் போச்சே....

   நீக்கு
 9. மாங்கல்யம் தந்துனானே...

  கடன் கொடுப்பவர்கள் வள்ளல்கள் அல்லவே.

  கோ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பரே அட ஆமால்ல.... சோமன் உளறி விட்டானோ.....

   நீக்கு
 10. இந்த கல்யாணத்தை நிறுத்தியே ஆகணும் !ஊனமுற்ற குழந்தைகள் பிறக்க முக்கிய காரணம் ,சொந்தத்தில் மணமுடிப்பது தான் என்று விஞ்ஞானபூர்வமாய் நிரூபணம் ஆகிவிட்ட இந்த காலத்தில் ,சோமன் வேற பெண்ணை மணப்பதுதான் நல்லது :)

  மாலா மேல் எனக்கும் ஒரு கண் என்று மட்டும் யாரும் கதை கட்டி விடாதீங்க :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மாலாமீது உங்களுக்கும் ஒரு கண்ணா ?

   சோமன் உங்கள்மீது ஒரு கண் வைத்து விடாமல் இருந்தால் சரிதான்.

   நீக்கு
 11. மணமக்களுக்கு வாழ்த்துகள்!த ம 10 தற்போது மதிப்பெண் அளிக்கும்(எனக்கு)சரியாகி விட்டதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா வெளியூர் போயிருந்தேன் இனி தமிழ்மணம் விழும்.

   நீக்கு
 12. மாலாவிற்கு வாழ்த்துகள். த.ம. வாக்கு செலுத்தி விட்டேன். என்னுடைய வலைப்பூவில் தமிழ்மண செயல்படவில்லை. பிரவசர் தொல்லையோ காணாமற் போய் விட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே நன்றி
   நானும் அடிக்கடி வந்தேன் இப்பொழுதுதான் விபரம் அறிகிறேன்

   நண்பர் தனபாலன் அவர்களை தொடர்பு கொள்ளவும்.

   நீக்கு
 13. கவிதையிலும் வழக்காடல் யாரோடோ இம்புட்டு வழக்காடல் செஞ்சிவிட்டு கடைசியில மாமன்மவ இருக்கானு சிலாந்தாச்சு ...சரி எங்கிருந்தாலும் வாழ்க சண்டை சச்சரவுஇல்லாம

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே வாழ்த்தியமைக்கு நன்றி

   நீக்கு
 14. நான் ஆதிரா கட்சி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மாலா கல்யாணத்தை நிறுத்திவிட இந்தக்கூட்டணியா ?

   நீக்கு
  2. வாங்க ராஜி.... கல்யாணத்தைத் தடுக்க முடியாதுபோனாலும் தேன்நிலவையாவது தடுத்து நிறுத்தி மாலாவைக் காப்பாற்றுவோம் ஹா ஹா ஹா:)

   நீக்கு
  3. வாங்க நல்ல எண்ணம் நீங்கள் சீரியலில் நடிக்கலாம்.

   நீக்கு
  4. ஓ அப்போ வாங்கோ கில்லர்ஜி ... பகவான் ஜி யின் தோளில் இருக்கும் துண்டில் கையை மறையுங்கோ... விரலைக் காட்டிக் காட்டி வெளியில தெரியாமலே சம்பளத்தை முதலில் பேசிடுவோம்... எனக்கு சம்பளம் கட்டுப்படியாகுமெனில் மிகுதியைப் பேசிடலாம்..:) டீல்?:).

   நீக்கு
  5. கடந்த பதிவில் போட்டிருந்த படத்தை குறித்து எழுதியது போல் இருக்கிறதே...

   நீக்கு
  6. அதிரா கட்சி ...ம்ம் சும்மா அள்ளுது பேரு
   பைவ் சி தந்தால் கட்சியில் சேரலாம் என்று
   செக்கண்ட் ப்ரெயின் சிக்னல் தந்திங்........

   நீக்கு
 15. மணமக்களுக்கு வாழ்த்துக்கள் ஜீ!

  பதிலளிநீக்கு
 16. சோமனுக்கும் மாலாவுக்கும் வாழ்த்துகள் சொல்லிடறோம்...

  சோமன் நல்ல ஸ்மார்ட் ஆள் தான். சரிதான் தான் அன்பு செய்த பெண் தன்னை விரட்டிட, தன்னை அன்பு செய்யும் பெண்ணை மணப்பது புத்திசாலித்தனம் தானே!!! இல்லையா கில்லர்ஜி!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தங்களது செம்மையான கருத்துரைக்கு நன்றி

   நீக்கு
 17. ஆகா
  மணமக்களுக்கு வாழ்த்துக்கள் நண்பரே
  தம +1

  பதிலளிநீக்கு
 18. 16 பொருத்தம் சொன்ன சோசியர்க்கு எவ்வளவு துட்டு கொடுத்தாங்க...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 16 பொருத்தம்னு சொன்னால் பணம் கூடுதலாகவே கிடைத்து இருக்கும் நண்பரே

   நீக்கு
 19. இப்போ வாழ்த்துச் சொல்றதா வேண்டாமானு தெரியலையே! எல்லோரும் வாழ்த்துத் தெரிவிப்பதால் நாமும் ஜோதியிலே ஐக்கியம் ஆயிடுவோம்! மாலாவுக்கும் சோமனுக்கும் வாழ்த்துகள். ஒருத்தி ஏமாற்றும்போது தான் உண்மையான நேசம்னா என்னனு புரியும் போல!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க பட்டால்தானே புத்தி வருகிறது.

   நீக்கு
 20. என்னவோ தெரியலை, உங்க பதிவுகள் தாமதமாகவே அப்டேட் ஆகின்றன! அதுக்குள்ளே இங்கே கூட்டம் கூடிக் கும்மியடிக்கிறாங்க! :))))) (இது உல்லாசக் கும்மிதான்!)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக எனது பதிவுகள் ஒருநாள் விட்டு மறுநாள் கண்டிப்பாக வரும்.

   நீக்கு
 21. காலண்டரில் என்பிறந்த நாள் குறிப்பிடப்பட்டிருக்கிறதே நூறாண்டுகளுக்கு ஒரு முறைதான் இப்படி வருமாம் 11-11-11

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஐயா தேதியின் ஒற்றுமைக்காக இப்படி போட்டேன்.

   நீக்கு
 22. சோமனுக்கும் மாலாவுக்கும் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 23. பதில்கள்
  1. முனைவர் அவர்களின் வருகைக்கு நன்றி

   நீக்கு