தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, மார்ச் 24, 2018

தரையடி மந்திரம்


இப்பதிவின் தொடர்புடைய முந்தைய பதிவுகளை படிக்க கீழே சொடுக்குக...

சென்னை குஸ்தி வாத்தியார் குருசாமியின் குடிசை மனைவி மைனாவோடு தட்டியின் மறைவில் மன்னாரு...

ந்தே ஓன்நைனா சொல்லிகினுகீது ஓந்தட்டு வண்டிய ஒந்தங்கச்சி வூட்டுகாரனுக்கு கொடுக்காணு...
ஆமா புள்ளே
ன்னா... ஓமாங்கிறே ? 
நொண்ணன்தானடி,
ந்தே நொண்ணனா... அந்த சோமாறிக்கு கொடுத்தீனா ?  யேன் வயித்துல யேத்தி வச்சுருக்கியே லோடு அதுக்கு நாளேக்கி இன்னா சொல்வே ?
அடிப்பயவுள்ளே இப்புவே மவுனைப்பத்தி கவுலையா ?
ந்தே கம்னாட்டி இந்த ஜல்சா வச்சுகினே கைய ஒட்சுருவேன் கேட்டதினு கம்னுகீரே ?
அடியே... எம்புள்ளே கையஊண்டி கர்ணம் அடிப்பான்டி.
நீ நடந்து போக வாணாம்னு தட்டுவண்டி எடுத்துப் போகசொன்னா நீ எம்புள்ளய கர்ணம் அடிப்பானுங்கிறே.. ?  
இன்னாச்சு ஒன்க்கு எங்க ஆத்தா ஏதும் சொல்லிகினுச்சா ?
ஓன் நோத்தாக்கிட்ட எவ பேசுவா ?
யென்னாடி நீ ரொம்பத்தான் சத்தாய்கிறே..
இந்தே கேட்டுக்க காலைய வண்டிய இழுத்துக்கினு வாரே நீ பேப்பர் பொறுக்கிகினு பொழுது சாய காசிமேடு வா ! நான் அதுக்கள்ளே அங்கே ஒரு குட்சை பாத்துக்கினுகீறேன்.
ன்னாடி சட்டுபுட்டுனு கலாய்கீறே யேன் அப்பன்ட ராவுல கேக்றேண்டி.
அந்த குடிகார கயிதை ன்னா... சொல்லும் தெரியாது ஒன்க்கு காத்தால நீ வாறியா ? வர்லியா ?
அந்த ஏரியாவுல நம்க்கு ஆரும் தெரியாதுடி.
யேன்... லிக்கி கீரான், அரளி கீரான், நம்ம மூஷி கீரான் வேற, ன்னா வேணுங்கீரே.. ?
அவங்கே பூராம் டுமீல் பார்ட்டீடி வேண்டான்டி.
அப்ப ராவுல எங்க ஆத்தா வூட்டுக்கு போறேன்.
யேண்டி கயிதே அடுத்த வாரம் வளைகாப்புனு... மாமு சொல்லிகினு போச்சு.
யேன் வூட்ல வச்சுக்லாம் நீ வந்து துன்னுட்டு போ.
நீ போக வேண்டாமுடி.

மன்னாரு அவள் மீது கையை வைக்க தனது இடது காலால் ஒரு எத்து விட்டாள் மைனா அந்தஅடி அவனது இடுப்பு பாகத்தின், தென்பாக மையத்தில் விழுந்தது உடன் அதிமுக முன்னாள் தலைவியை அழைத்து விட்டு சுருண்டு கொண்டான் கோணிச் சாக்குக்குள் மன்னாரு.

அடுத்து இந்தப் பதிவுகளைப்பற்றி திருமிகு. அதிரா அவர்களுக்கு வேண்டப்பட்டவரின் விமர்சனத்தை பார்ப்போம் – கில்லர்ஜி

62 கருத்துகள்:

  1. ஆஹா தரையில் மந்திரம் இன்னும் தாளமுடியாத தொல்லை போலும் ஜீ!))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இது நிறுத்த இயலாத பிரேக் இல்லாத வண்டி.

      நீக்கு
  2. ஆஜர்....கில்லர்ஜி... வாசித்துவிட்டு வரேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  3. எல்லா வர்கத்து குடும்பங்களிலும் இதே கதைதான்னு சொல்லுறீங்களா ஜி!

    இது சும்மா காரணம் ...இங்க கொசுக்கடி பிச்சு எடுக்குது அதுவும் கொருக்குப் பேட்டைனா...கூவம் பக்கத்துல இன்னும் அதி பயங்கரமா இருக்கும்... அதான் அந்தப் பொண்ணு அம்மா வீட்டுக்குப் போறேன்னு ஹிஹிஹி

    அதிராக்கு விமர்சனம் வைக்கப் போறது 3 அங்கிளும்...ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படினா... மைனாவுக்கு இதுதான் பிரச்சனையா ?

      எடப்பாடிக்கு பெட்டிசன் அனுப்பலாமே...?

      சாம்பசிவம்-
      அதுக்கு பெட்டி வேணுமாமே...

      நீக்கு
    2. ஹையோ வேண்டாமடா சாமி!! பொட்டி எல்லாம் தூக்க முடியாதுப்பா...ஸாரி ஸாரி!! பொட்டி எல்லாம் கொடுக்க முடியாதுப்பா...சாம்பசிவம் மாமா கொடுக்கறதா இருந்தா பெட்டிசன் போட்டுரலாம்!! என்ன சொல்லுறீங்க ஜி?!! ஹா ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    3. இதற்கு பதில் சாம்பசிவம் வந்து சொல்லுவார்.

      நீக்கு
  4. அவரவர் வசதிக்கேற்ப மாறுகின்றன காட்சிகள். அடுத்தது என்னவாயிருக்கும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம்ஜி காலம் மாறினாலும் காட்சிகள் மாறாது.

      நீக்கு
  5. ஙே! மந்திரம் தொல்லையா இருக்கே! அடுத்து என்ன? அதிரடி, எங்கிருந்தாலும் ஓடோடி வாங்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அவங்க ஊரணிக்கு போயிருப்பாங்க...

      நீங்க 'மஞ்சத்து மந்திரம்" படிக்கவில்லையா ?

      நீக்கு
    2. வந்துட்டேன்.. கொஞ்சம் கண்ணயர்வதுக்குள்:) என்னென்னமோ ஆகிப்போகுதே ஜாமீஈஈஈஈஈஈ:))

      நீக்கு
    3. மஞ்சத்து மந்திரமும் படிச்சுக் கருத்துச் சொன்ன நினைவு! :) என்றாலும் நான் கொஞ்சம் இல்லை நிறையவே ம.ம. புரிய நாளாகும். :)

      நீக்கு
    4. அதில் கருத்துரை வராததால் கேட்டேன் மன்னர் கால வசனங்களில் பிழை இருக்கிறதா ?

      நீக்கு
    5. பிழை எல்லாம் இல்லை. அதிலேயும் புரியலைனு தான் சொல்லி இருக்கேன். இப்போத் தான் அங்கேயும் போய்ப் பார்த்துட்டு வந்தேன். :)

      நீக்கு
    6. அதாவது இந்த நான்கு பதிவுகளின் விடயம் ஒன்றேதான் காலமாற்றம், இடமாற்றத்தை விவரித்தேன் மீள் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  6. தரையடி மந்திரத்தில் காலடி வேறு இருக்கே!
    தைரியம் நிறைந்த பெண் போல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சகோ ஆச்சாரமான குடும்பத்து பெண்ணாக இருப்பாள்போல...

      நீக்கு
    2. யூ மீன் அடிரா சே சே அதிராவைப்போல:)..

      நீக்கு
  7. ஆகா
    மாறும் காட்சிகள் அருமை நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களின் வருகைக்கு நன்றி

      நீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    சூப்பர்.. ஒவ்வொரு பேச்சு வழக்கிலும் கலக்குறீங்க,.மனிதர்களுக்கு சுயநலங்கள் மண்ணில் விழும் வரை மறையாது..தங்கள் நலத்தை மட்டுமே நினைத்து வாழ்வை தள்ளிவிடுவார்கள். இது சகஜந்தானே! இனி அடுத்து நடப்பது என்னவென காண ஆவலுடன் காத்திருக்கிறேன் நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது அழகிய கருத்துரைக்கும், விமர்சனக் காத்திருப்புக்கும் நன்றி

      நீக்கு
  9. கமல் அங்கிளில் படம் பார்த்த பீலிங்ஸ் வருதே:) ஏதோ ஒரு படத்தில இப்பாசையில் பேசுவாரே ஒண்ணும் புரியுதில்லை.. இருப்பினும் கில்லர்ஜி கெட்டிக்காரர்தான்.. இப்பாசையில மின்னி முழக்கிட்டீங்க நீயூயோர்க் ல இருந்துகொண்டே:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க இதுதான் சென்னைத்தமிழ்
      உங்களுக்கு தெரியாதா ?

      நீக்கு
  10. ///
    மன்னாரு அவள் மீது கையை வைக்க தனது இடது காலால் ஒரு எத்து விட்டாள் மைனா///
    ஹா ஹா ஹா நல்லவேளை:) கட்டிலடி இல்லை:) ... தரையில் வச்டு அடிப்பதுதான் தரையடியோ அவ்வ்வ்வ்வ்வ்:) இது தெரியாமல் போச்சே இவ்ளோ காலமும்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐய்யய்யோ நான் உங்களுக்கு எடுத்து கொடுத்துட்டேனோ...

      நீக்கு
  11. ///உடன் அதிமுக முன்னாள் தலைவியை அழைத்து விட்டு சுருண்டு கொண்டான் கோணிச் சாக்குக்குள் மன்னாரு.///

    ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்:) அது மன்னாரு தன் அம்மாவை அழைச்சிருப்பார்:)... நீங்க கோர்த்து விடுறீங்க:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மன்னாரு நெடுங்காலமாக அ.தி.மு.க. தொண்டனாமே...

      நீக்கு
  12. ///
    அடுத்து இந்தப் பதிவுகளைப்பற்றி திருமிகு. அதிரா அவர்களுக்கு வேண்டப்பட்டவரின் விமர்சனத்தை பார்ப்போம்///
    ஹா ஹா ஹா அதாரது ஜாமீஈஈஈஈ:)... மீ இப்பவே முருங்கில ஏறிடுறேன்ன்ன்ன்:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜேம்ஸ் ஊரணியோரம் மு.மரம் இருக்கிறதா ?

      நீக்கு
    2. கர்ர்ர்ர்ர்ர்ர்:) அது தேம்ஸ் கரையோரமாக்கும்:).. ஆராவது ஜேம்ஸ் என இருந்தா என்னோடு ஜண்டைக்கு வந்திடப்போகினமே வைரவா:)

      நீக்கு
    3. பெயரை மாத்திட்டாங்களா ?

      நீக்கு
  13. பதில்கள்
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்:) சும்ம சிரிப்போருக்கு நன்றி ஜொள்ளீங்க:) முக்கி முக்கி கொமெண்ட்ஸ் போடும் எனக்கு எப்பவாவது ஒரு நன்றி ஜொள்ளியிருக்கிறீங்களா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. இதனாலதான் நான் இப்போ தேம்ஸ்ல குதிப்பதில்லை:)

      நீக்கு
    2. பெரும்பாலும் எனது மறுமொழி கருத்து சொல்வதாகவே இருக்கும்.
      மீள் வருகைக்கு நன்றி

      நீக்கு
  14. இந்த மந்திரக்கதையில் கூவம் மணக்கிறது. வட்டார வழக்கு உங்களுக்கு கைவந்த கலையாகிவிட்டது. அடுத்த பதிவிலும் மண்மணம் தொடரும்தானே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே பதிவு முடிந்து விட்டது அடுத்து இவைகளைக் குறித்த விமர்சனப்பதிவு வரும்.

      நீக்கு
  15. மன்னர் பரம்பரை டு மன்னார் பரம்பரை எல்லா ஆண்களும் மந்திரத்தால் கஷ்டப்படறாங்கன்னு புரியுது :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா சரியான பாயிண்ட் சொல்லி விட்டீர்கள் ஸூப்பர்.

      நீக்கு
    2. என்னாது சூப்பரா?:) அப்பூடி என்னா பொயிண்டு ஜொள்ளிட்டா என் செக்:) கூஊஊ:).. வரவர நாட்டில எதுக்கு நன்றி ஜொல்றாங்க,:) எதுக்கு ஜூப்பர் சொல்றாங்க எண்டே பிரிய மாட்டேங்குதே ஜாமீஈஈஇ:)..

      நீக்கு
    3. மன்னர் ட்டூ மன்னாரு ஸூப்பர்தானே...

      நீக்கு
  16. ///
    அடுத்து இந்தப் பதிவுகளைப்பற்றி திருமிகு. அதிரா அவர்களுக்கு////
    கர்ர்ர்ர்ர்ர்ர் நான் கஸ்டப்பட்டுப் பெற்ற பட்டங்களை இங்கு இணைக்காமல் விட்டமைக்கு என் வன்மையான கண்டங்கள்:)))) ஸ்ஸ்ஸப்பாஆ வந்த வேலை முடிஞ்சுது இனி நேரே முருங்கிதேன்:)...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதான்
      அதிராம்பட்டணம்
      அதிரடி
      அதிரா
      அப்படினு..
      அழைக்கிறோமே...

      நீக்கு
  17. தரையடி மந்திரம் அட்டகாசம் ஜி!

    பதிலளிநீக்கு
  18. காலங்கள் மாறும்காட்சிகள் மாறும் கில்லர்ஜிமட்டும் மாற மாட்டார் இன்னும் எத்தனை மந்திரங்களோ

    பதிலளிநீக்கு
  19. வாங்க ஐயா நான் நானாகவே இருப்பேன்.

    பதிலளிநீக்கு
  20. தொட்டால் கையை வெட்டுவோம்முன்னு இங்கி..லாந்து ஆங்கில மியூசிக் லேடி சொன்னதுதான்..படிக்கும்போது பயமுறுத்தியது நண்பரே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே பயம் நல்லது.
      கௌரவத்தை காப்பாற்றும்.

      நீக்கு
  21. பதில்கள்
    1. முனைவர் அவர்களின் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  22. வீட்டுக்கு வீடு வாசற்படி என்று கோடி காட்டிவிட்டீர்கள் என எண்ணுகிறேன். இரசித்தேன்!

    பதிலளிநீக்கு
  23. எங்கேயும்,எப்போதும் மாறாதது,மாற்றவே(திருத்த)முடியாதது மனைவி மந்திரம். அது மன்னர் ஆனாலும், மன்னார் ஆனாலும்.... சூப்பர் அண்ணா ஜீ சென்னைத்தமிழ்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சகோ உண்மைதான் வருகைக்கு நன்றி

      நீக்கு
  24. சென்னை நடைபாதை வாசிகளின் பேச்சுமொழியை எதார்த்தமாகப் பதிவு செய்திருக்கிறீர்கள். ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு