தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, செப்டம்பர் 15, 2018

தன்வினைஇப்பதிவின் தொடர்பான முந்தைய பதிவுகளை படிக்க கீழே சொடுக்குக...

முன்குறிப்பு – இதைப் படிக்கப்போகும் சில நண்பர்களுக்கு என்மீது மனவருத்தம் நேரிடலாம் நான் என் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவத்தை தங்களுடன் பகிர்ந்து கொள்ளத்தான் எழுதுகின்றேனே தவிர வேறு நோக்கமில்லை இது மட்டுமல்ல 1983-ஆம் ஆண்டு பழனி முருகன் கோவில் கருவறையருகில் எனக்கும், கோவில் அரச்சகருக்கும் நடந்த வாக்கு வாதத்தையும் எழுதப்போகிறேன் அன்று எனது அகவை பதினைந்து அதன் பிறகு இறைவழிபாடு தேவையில்லை என்பதை உணர்ந்து இறைபக்தியை மனதார ஏற்றுக்கொண்டு மனசாட்சிக்கு பயந்து இந்த நொடிவரை நியாயமாக வாழ்ந்து மேலும் கடைசிவரை வாழ முயற்சிப்பவன் நான் நன்றி.

பிச்சை எடுக்குமாம் பெருமாளு அதைப் புடுங்குமாம் அனுமாரு என்பது போல் அந்த நான்கிலிருந்து ஒன்றை நான் சுட்டு விட்டேன் மதியம் நான் சாப்பிட உட்காரும்போது அந்தப் பாட்டிலைத் திறந்தால் ? அதில் புழுக்கள் ஊர்ந்தது கண்டு அதிர்ந்தேன் காரணம் என்னவென்று பார்த்தால் அந்தப் பாட்டிலின் Expiry Date நேற்றோடு முடிந்திருந்தது. தன்வினை தன்னைச் சுடும் என்பதின் பொருள் புரிந்தது அந்த வார்டில் மன்ஸூருக்கு, நான் வலது’’கை என்று சொல்வார்களே அதுபோல... என்னுடன் தராதரம் பார்க்காமல் பில்லியார்ட்ஸ் விளையாடியது எதனால் தெரியுமா ? இந்த மாதிரி வேலைகள் செய்வதற்குத்தான்.

காலையில் உள்ளே நுழைந்ததும் அஸ்ஸலாமு வ அலைக்கும் சொல்லி முடித்ததும் தனது சீருந்தின் சாவியை என்னிடம் தந்து விடுவான். மருத்துவமனைக்கு வரும் மருந்து, மாத்திரை, உணவுகள், பழங்கள், தண்ணீர் பாட்டில், பால், டீ, காஃபி பவுடர் இதையெல்லாம் சரியான முறையில் பக்குவமாக பேக்கிங் செய்து மதியம் பனிரெண்டு மணிக்குள் தயார் செய்து விடுவேன். மன்ஸூரிடம் அரபு, ஹிந்தி, ஆங்கில மொழிகளில் பேசினாலும் சில விடயங்களை மௌனமொழியால் விழிகளால் பேசிக் கொள்வோம். இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் நோயாளிகளுக்கு சொந்தக்காரர்கள் வரும்பொழுது பழங்கள், ஸ்வீட், சிகரெட் வாங்கி வருவார்கள். நேரே இன்-சார்ஜிடம் கொடுப்பார்கள் காரணம் அவர்தானே நியாயமாக நேரப்படி நோயாளிகளுக்கு கொடுக்க(?)வேண்டும். அதை வாங்கும் பொழுது மன்ஸூர் சங்கடப்பட்டுக் கொண்டு நெழிவார் காரணம் மற்ற செவிலியர்களும், நானும் ஒரு நமட்டுச் சிரிப்பு சிரிப்பது அவருடைய விழிகளுக்கே விளங்கும்.

சுமார் ஒரு மணியளவில் மதிய தொழுகை வேளைவரும் அப்பொழுது மற்ற செவிலியர்களை தொழுகைக்கு தயாராகச் சொல்லி எல்லோரையும் மன்ஸூர் விரட்டுவார் தொழுகையில் அவர்தான் முதல் ஆளாய் நிற்பார் அதாவது இமாம் என்று சொல்வார்களே... அப்படி மற்றவர்கள் பின்புறமாய் நிற்பார்கள் அவர்கள் தொழுகை அறைக்கு போகும் பொழுது என்னுடன் வேலை செய்யும் மற்ற இருவரில் ஒருவர் ஸ்விட்ச் போட தயாராக இருப்பார். தொழுகை தொடங்கும் பொழுது அந்த அறையிலிருந்து சதுர கண்ணாடி ஜன்னல் வழியாக என்னை பார்ப்பார் நான் தொண்ணூறு டிகிரி கோணத்தில் ரிஷப்ஷனுக்கு முன்புறமாக நிற்பேன். மன்னிக்கவும் நிற்க வேண்டும்.

மன்ஸூர் கண்ணை அசைத்து விட்டு தொழுகையை தொடங்குவார் நான் சட்டென தயாராய் வைத்திருந்த சாமான்களை எடுத்துக் கொண்டு வெளியே ஆட்டோமேட்டிக் எலக்ரோனிக் க்ளாஸ் டோர்க்கு ஓட, மற்றவர் ஸ்விட்ச் போடுபவருக்கு கை காட்ட, ஸ்விட்ச் போட்டதும் நான் உடன் நோயாளிகள் வெளியே ஓடிவிடாமல் உள்ளே தள்ளி விட்டு வெளியேறி மன்ஸூரின் கார் டிக்கியைத் திறந்து சாமான்களை வைத்து பூட்டி விட்டு கண்ணாடி கதவுக்கு வர, என்னைக்கண்டு இவர் கை காட்ட, அவர் ஸ்விட்ச் போட, நான் பக்குவமாக நோயாளிகள் வெளியேறி விடாமல் உள்ளே வரவும் இவர் கை காட்டி அவர் ஸ்விட்ச் போட, நான் கதவு பூட்டியதை உறுதி செய்து விட்டு வேகமாக மீண்டும் அதே தொண்ணூறு டிகிரி கோணத்தில் வந்து ரிஷப்ஷனுக்கு முன்புறமாக நிற்பேன்.

இவ்வளவு வேலையும் அவர்கள் இரண்டு ரக்காயத் தொழுது முடிக்கும் முன் செய்து விடவேண்டும் மூன்றாவது ரக்காயத் தொடங்கும் முன் மன்ஸூர் என்னைப் பார்த்து கண் அசைக்க, நான் மேலே சீலிங்கை பார்க்க, நான் கண் அசைக்கவோ, தலையை அசைக்கவோ கூடாது காரணம் பின்புறம் தொழுகையில் நிற்பவர்கள் பார்த்து விட்டால் ? ஆனால் நிச்சயமாக பார்க்க மாட்டார்கள் காரணம் அவர்களின் தொழுகை உண்மையானதே... உஷ்ஷ்ஷ்ஷ் அப்பாடா...... வேலை முடிந்து விட்டது.

இந்த கண்ணசைப்பு வேலை கடைசிவரை பின்புறம் தொழுபவர்களுக்கு தெரியாது ஒருக்கால் தெரிந்தால் ? ? ? மன்ஸூர் என்ன கதியோ கிடக்கட்டும் தேவகோட்டையும், ஸ்விட்ச் போட்ட அருப்புக்கோட்டையும், கை காட்டிய மானாமதுரையும் தனது வாழ்நாள்வரை ஜெயிலில் கிடந்திருக்கலாம் காரணம் எங்கள் மூவரின் பெயர்ராசி அப்படி அவர்கள் பெயர் வேண்டாமே காரணம் எங்களில் ஒருவர் இன்னும் அங்கு வாழ்கிறார் வாழ்க வளமுடன். சரி இந்த பாவத்துக்கு நானும் உடந்தையாக இருந்திருக்கின்றேனே... நாங்கள் என்ன செய்ய முடியும் ? எங்களின் நிலை அப்படி உலகை படைத்த உலக மேலாளனே எங்களை மன்னிக்க வேண்டும். தொடக்கத்தில்1983-ஆம் ஆண்டு பழனி முருகன் கோவிலில் எனக்கும், கோவில் அர்ச்சகருக்கும் வாக்குவாதம் என்று சொல்லி இருந்தேனே... அது என்ன ?

அடுத்த பதிவு பழனியாண்டியில் பார்ப்போமே...
தொடரும்....

50 கருத்துகள்:

 1. சுலைமானிக்குள் இத்தனை விஷயங்களா!..

  சுலை மாமணி தேவலாம் போலிருக்கே!..

  அடுத்து வரும் பழனியாண்டி என்னென்ன கொண்டு வரப்போறாரோ!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி தவறுகள் எங்கும் நிறைந்திருக்கிறது என்பதை சொல்வதே இத்தொடரின் நோக்கம் ஜி.

   நீக்கு
 2. அடேங்கப்பா மன்ஸூர் செம கில்லாடிதான்...அடுத்து உங்க வாக்குவாதம் என்னவாருக்கும்னு ஓரளவு ஊகிக்க முடியுது...இருந்தாலும் வெயிட்டிங்க்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி மன்ஸூரிடம் சொல்கிறேன், காத்திருப்புக்கு நன்றி.

   நீக்கு
 3. 15 ￰வயதிலேயே வாக்குவாதமா .
  அது என்னவென்று அறிய ஆவலுடன் உள்ளேன் நண்பரே

  பதிலளிநீக்கு
 4. பழனிமலை வாக்குவாதத்தை அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன் நண்பரே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரின் வருகைக்கும், காத்திருப்புக்கும் நன்றி.

   நீக்கு
 5. மனித மூளை எப்படி எல்லாம் வேலை செய்கிறது?
  நோயாளிக்கு சொந்தக்காரர்கள் வாங்கி வரும் உணவும் சரியாக கொடுக்க மாட்டார்களா?
  படிக்கவே கஷ்டமாய் இருக்கிறது.
  நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் நாகேஷ் இப்படி செய்வார், மருத்துவர் கல்யாணகுமாரிடம் மாட்டிக் கொண்டு விழிப்பார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ ஓரளவு உணவுகள் கொடுத்து விடுவார்கள், மற்றவைகளில்தான் கோல்மால் வருகைக்கு நன்றி.

   நீக்கு
 6. நீங்க பயங்கர ரிஸ்க் எடுத்திருக்கீங்க. பிடிபட நேர்ந்தால் மன்சூரைக் காட்டிக்கொடுக்கவே முடியாது. யாரும் நம்ப மாட்டார்கள். பழி உங்களைத்தான் வந்து சேரும்.

  இறைவன் அருளால தப்பிச்சிட்டீங்க.

  அது சரி.. இரட்டை இலையை ஏன் மார்க் பண்ணியிருக்கீங்க?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தமிழரே சரியாக சொன்னீர்கள்.

   மார்க் நான் இடவில்லை தண்ணீர் குப்பியில்கூட அரசு விளம்பரத்தை சொருகுவதை வெளிப்படுத்தவே இப்படத்தை உபயோகித்தேன்.

   நீக்கு
  2. கில்லர்ஜி.. என்னோட இன்னொரு அனுபவம் என்னன்னா, முஸ்லீம், இந்து இரண்டுபேர்களுக்குள்ள பிரச்சனை வந்தா அவங்க முஸ்லீமைத்தான் நம்புவாங்க. அதிலும் குரானின் மீது சத்தியம் வைத்தால், கண்ணை மூடிக்கொண்டு நம்பிடுவாங்க (அவங்க எண்ணம் தொழுபவன் பொய் சொல்ல மாட்டான் என்பதுதான்). ஆனா உண்மை வெளில வந்தால், அவங்களுக்கு கூடுதல் தண்டனை என்பதையும் ஒத்துக்கணும்.

   நம்ம ஊர்லதான் சத்தியத்துக்கும் மதிப்பில்லை, தெய்வத்துக்கும் பெரும்பாலும் பயமில்லை. என்ன செய்ய..

   நீக்கு
  3. மிகச்சரியான வார்த்தை.

   இந்தியாவில் 99% மனிதருக்கு இறை பயமே கிடையாது. (நேற்றைய விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தைக் குறித்து எழுதவேண்டும்) ஆனால் அங்கு குர்ஆனை நம்புபவர் 85% மனிதர்கள் உண்டு.

   நீக்கு
 7. ஒருமுறை இரண்டுமுறை என்றால் பரவாயில்லை. தினசரி இப்படிச் செய்யவேண்டும் என்றால் பயங்கர ரிஸ்க்தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஸ்ரீராம்ஜி தற்போது இப்படி நடக்க சாத்தியங்கள் குறைவுதான்.

   காரணம் தற்போது நிச்சயமாக கேமரா இருக்கலாம்.

   நீக்கு
  2. கில்லர்ஜிக்கு ரிஸ்க் எடுப்பது என்பது ரஸ்க் சாப்பிடுவதைப்போல இல்லயா கில்லர்ஜி?:) ஹா ஹா ஹா..

   நீக்கு
  3. ஹா.. ஹா.. ஹா..சரியா சொல்லிட்டீங்க....

   நீக்கு
 8. அடேங்கப்பா... என்னவொரு திட்டமிடல்...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி இதற்கே இப்படியெனில் அரசு கஜானாவை காலி செய்ய எவ்வளவு திட்டம் தீட்டவேண்டும் ?

   நீக்கு
 9. அயல் நாட்டில் மிகவும் ஆபத்தான மனிதனுடன் போராடியிருக்கிறீர்கள். திடமனதுக்காரர் நீங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே 'பணம்' பெறுவதற்கு 'பிணம்' தூக்குவது ஒன்றே வழி என்ற நிலைப்பாடு அன்று.

   நீக்கு
 10. வணக்கம் சகோதரரே

  கடினமான பணிதான். வேறு வழியின்றி நீங்கள் ரிஸ்க் எடுத்து செய்திருப்பதை உணர முடிந்தது. அயல் நாடுகளில். புரியாத மொழி சிரமங்களில், வேலைக்கு செல்பவருக்கு ஏற்படும் சோதனைகள் கலக்கமுறச் செய்கிறது. இந்த மாதிரி ஆபத்தான மனிதர்கள் எங்கும் இருக்கிறார்கள். ஆனால் நீங்கள் ஆபத்தை நேராக சந்தித்தும், போராடியிருக்கிறீர்கள்.. கஸ்டந்தான்.. வேறு என்ன சொல்ல...

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ என்னைப்போல் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வழிகளில் கஷ்டம் இருந்திருக்கும்.

   நீக்கு
 11. பதில்கள்
  1. வருக முனைவர் அவர்களே...
   என்று மீசையை குறை என்றதற்கு என்மீசை, நான் வளர்ப்பேன் என்றேனோ... அன்று தொடங்கியது சிக்கல்.

   நீக்கு
 12. எத்தனை ரிஸ்க் இதில்... அப்பாடி.

  அடுத்த அனுபவப் பகிர்வுக்கு காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 13. என்ன ஒரு கில்லாடி வேலை அந்த மனிதருக்கு.
  தேவகோட்டையாரே இதை எல்லாம் தாண்டி வந்தீர்களே.

  உங்க அம்மா செய்த பாக்கியம். எத்தனையோ கோவில்களில் எத்தனையோ முறை கேடுகள் நடக்கின்றன.
  அலுத்துதான் போகிறது.
  பழனிக் கதைக்குக் காத்திருக்கிறேன். வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அம்மா தங்களது கருத்தை பகிர்ந்தமைக்கும், கதையின் ஆவலுக்கும் நன்றி.

   நீக்கு
 14. அருமையான உரைநடை
  சிந்திக்க வைக்கிறியள்
  நன்றி

  பதிலளிநீக்கு
 15. ரொம்பக் கஷ்டப்பட்டிருக்கீங்க! என்னத்தைச் சொல்றது! மனிதர்களில் எங்கேயுமே இம்மாதிரிச் சில ஊழல் பேர்வழிகளும் இருப்பார்கள். பழனி கோயிலில் நடந்ததைப் படிக்க ஆவலுடன் காத்திருக்கேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் என்ன செய்வது ? வாழவேண்டுமே... வருகைக்கு நன்றி சகோ

   நீக்கு
 16. ஹா ஹா ஹா இப்போதான் புரிகிறது கில்லர்ஜிக்கு ஏன் உடம்பு குண்டாகவில்லை என்பது:).. அந்த 90 டிகிரி கோணமும், ஒரு சுவிச் போட்டு அடுத்த சுவிச் போடுவதற்கும் மின்னல் வேகத்தில் சுழன்று வேலையை முடிக்க வேண்டுமே எனும் வேகமும்தான் காரணம்.. :).

  அதுசரி .. நாம் நேராக நிற்பதைத்தானே சுத்தி வளைச்சு 90 டிகிரி கோணம் என்கிறீங்க..?:)).. நிறையப்பேர் பயந்திருப்ப்பினம் இதைப் படிச்சு ஏதோ வித்தியாசமான கோணத்தில நிற்பீங்களாக்கும் என ஹையோ ஹையோ:)))

  ஆராவது 30 பாகை.. 45 பாகையில் எல்லாம் நிற்பினமோ?:).. என்னா கதை விடுறீங்க?:) என்னை ஆரும் பேய்க்காட்ட முடியாதாகும் பிக்கோஸ் நேக்கு மத்ஸ் லயும் டி ஆக்கும்...:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹலோ ஞானியாரே 45 பாகையில் எல்லாம் நிற்கிறவர் உண்டாக்கும்.....நானும் மத்ஸில் டி ஆக்கும்...ஆனா உங்க டி யானு தெரியாது...ஹா ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
  2. ஹலோ உங்களுக்கு கார் பார்க்கிங் 90 டிகிரி கோணம் தெரியுமா ?

   நீக்கு
  3. ஹா ஹா ஹா கீத்ஸ்.. என்னுடைய டி ஆருமே எடுத்திருக்க மாட்டீங்க:) ஏனெனில் இது ஸ்பெஷல் டி:) ஆக்கும்:)..

   கில்லர்ஜி:) கார் பார்க்க் பண்ணுவதில் எல்லாம் இப்பூடி ரிஸ்க் எடுக்காதீங்க கர்ர்ர்ர்:))

   நீக்கு
  4. இந்தக்காலத்தில 90 வயசுப் பாட்டியும் 90 டிக்கிரில தான் நிக்கிறா கீதா ஹா ஹா ஹா:)

   நீக்கு
 17. அண்மையில் தொலைக்காட்சியில் பார்த்த ஒரு சீன் நடிகர் விஜய் நடித்தது இம்மாதிரி சுவிட்ச் போட்டு நிறுத்தி எதிரிகளை விஜய்தாக்கி வீழ்த்துவார்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா எனது சம்பவம் திரைப்படத்தில் வந்து விட்டதா ?

   நீக்கு
 18. ஒரு திரைப்படக்காட்சி நினைவுக்கு கொண்டு வந்தது உங்கள் லீலா வினோதங்கள்

  பதிலளிநீக்கு
 19. கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்றார்களே!..நண்பரே....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்படியும் சொல்லிக் 'கொல்ல'ளாம் நண்பரே

   நீக்கு
 20. படிக்க வே ரொம்ப த்ரிலிங்கா இருக்கு ..

  அசோ செய்யும் போது...ரொம்பவே கொடுமை..

  பதிலளிநீக்கு
 21. துல்லியமான திட்டமிடல். கொடுக்கப்பட்ட கால நேரத்திற்குள் கொடுக்கப்பட்ட வேலையைக் கச்சிதமாக முடித்து விடும் திறன், தகவல் பரிமாற்றத்திற்கு உடல் மொழி எல்லாம் சரிதான் ஆனால் நிர்பந்தத்தால் செய்த வேலை மட்டும் பெருமைப்படத் தக்கதல்ல. அரசியலும் இப்படிதான் திட்டமிடல், செயல்படுத்தல், தகவல் பரிமாற்றம் எல்லாம் சுயநலவாதிகள் முன்னேற்றத்திற்குதான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது மனம் திறந்த கருத்துரைக்கு நன்றி.

   நீக்கு
 22. பதிவு நன்று பாராட்டுகள்

  பதிலளிநீக்கு