தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், செப்டம்பர் 27, 2018

ச்சீ இந்த ஜூஸ் புளிக்கும்



இப்பதிவின் முந்தைய தொடர்ச்சி கீழே சொடுக்குக...

ண்பர்களே இவைகளை எல்லாம் கடந்து நாம் இந்த நாட்டில் லைசென்ஸ் வாங்கி விட்டோம் என்றால் அது மிகப்பெரிய சாதனைதான் நம்நாட்டில் கல்லூரிப் படிப்பை முடித்து சான்றிதழ் வாங்கியவன் நிலையே என்றால் அது மிகையாகாது இதற்கான கால அளவுகள் ஒரு வருடத்தையும் தாண்டலாம் செலவுகள் எமராத் திர்ஹாம்ஸ் நான்காயிரத்திலிருந்து ஆறாயிரம்வரை ஆகலாம் அதையும் கடந்தும் போகலாம்.

இந்திய லைசென்ஸ் இருந்தால் அதை வைத்து சிறிய அளவு செலவோடு டெஸ்ட்டுக்கு போகலாம் தவறினால் ? ? ? நான் முதலில் இருந்து புரோட்டா திங்கிறேன் நீ எண்ணு மாப்ளே என்ற சூரியின் கதைதான். எனது அலுவலகத்தில் பத்து வருடமாக முயன்று பத்தாயிரம் திர்ஹாம்ஸ் செலவு செய்து ச்சீ இந்த ஜூஸ் புளிக்கும் என்று கைவிட்ட மலையாளி ஒருவன் உண்டு இவ்வளவு மாற்றம் கொண்டு வரக்காரணம் என்ன ? இவையெல்லாம் எந்த நாட்டு சட்டங்கள் தெரியுமா ? உலகிலேயே 0 % விபத்துக்கள் எந்த நாட்டில் நடக்கின்றது தெரியுமா ? நண்பர்களே அந்த இடத்தை இன்றுவரை பிடித்துக் கொண்டு இருப்பது ஸ்வீடன் நாடு மட்டுமே ஆம் ஸ்வீடன் மட்டுமே இது எவ்வளவு பெரிய பெருமை இதன் காரணமாகத்தான் அந்த நாட்டு போக்குவரத்து சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டது எமிரேட்ஸ் நாடு. நல்லதை யார் சொன்னால் என்ன ? அதைக் கேட்டுக் கொள்வதில் தப்பில்லையே...

இந்திய ஆட்சியாளர்களே... நாமும் இதை கையிலெடுத்தால் என்ன ? ஹூம் ஊமையன் சொல்வது செவிடன் காதில் கேட்கவா போகிறது ?  
அதன் பிறகு இந்த நாட்டில் விபத்துக்கள் குறைந்து கொண்டே...... வருவதாக புள்ளி விபர கணக்குகள் சொல்கிறது நண்பர்களே இதை நானும் ஆமோதிப்பேன் ஆம் எனது அலுவலக ஃபைல்களில் இறந்தவர்களின் பேப்பர்கள் வரும் பொழுது அதில் இறந்தவனின் வயதைப் பார்ப்பேன் அதிக பட்சமாக இருபது வயதிலிருந்து நாற்பது வயது வரையே இருக்கும் மரணத்தின் காரணத்தைப் பார்ப்பேன் அதிக பட்சமாக விபத்துக்களே ஆனால் இன்று அந்நிலையில் மாற்றம் உள்ளதை நான் எனது வேலையின் காரணமாக, அனுபவத்தின் வாயிலாக உணர்கின்றேன் இது எனது தனிப்பட்ட கருத்தே காரணம் டிரைவிங் ஸ்கூலின் படிப்பு முறை படிக்கும் பொழுதே விபத்து நடந்தால் அதன் பாதிப்பு எப்படியிருக்கும் என்பதை நமது கண்முன் நிறுத்தி ஒருவித பயத்தையும் படிக்க வைப்பதே இதன் முதன்மையான காரணம் ஒரு காரை ஸ்டாண்டில் நிறுத்தி பெல்ட் அணியாவிட்டால் ? விபத்து நடக்கும் பொழுது நமது நிலைப்பாடு எப்படி ? என்பதை ஒரு பொம்மையை வைத்துக் காண்பிக்கும் பொழுது ஆறறிவு உள்ளவன் கண்டிப்பாக உணர்ந்து கொள்வான் முதலில் தியரி க்ளாஸில் சட்ட திட்டங்களை சொல்லிக் கொடுத்து விடுகின்றார்கள்.

ஒரு உண்மைச் சரித்திர நிகழ்வு இந்த சட்டத்தை முதன் முதலாக ஸ்வீடன் நாடு வகுக்கும் பொழுது அந்த நாட்டில் ஒரு போஸ்ட் ஆஃபீஸில் சாதாரண குமாஸ்தாவாக பணியாற்றி ஓய்வு பெற்ற ஒரு எழுபத்து இரண்டு வயது பெரியவருக்கு விருது கொடுத்து கௌரவித்து இருக்கின்றார்கள் எதனால் தெரியுமா ? அவர் லைசென்ஸ் எடுத்து ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது ஐம்பது ஆண்டுகளாக காரும் வைத்திருக்கின்றார் இந்த ஐம்பது வருடத்தில் ஒருநாள்கூட சிறிய அளவில்கூட அவர் விபத்தில் சிக்கவில்லை இதற்காகத்தான் அவருக்கு விருது அவரிடம் ஒரு கேள்வியும் கேட்கப்பட்டது
இது உங்களால் சாத்தியமானது எப்படி ?
அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா ?

///நான் கார் ஓட்டிப்போகும் பொழுது சாலையில் எனக்கு முன்னும் பின்னும் காரோட்டி வரும் அனைவரும் கண்களைக் கட்டிக்கொண்டு ஓட்டுகின்றார்கள் ஆகவே நாம் மட்டுமாவது கண்களைக் திறந்து கொண்டு ஓட்டுவோம் என்று நினைத்து ஓட்டினேன்///

இப்படி நாம் அனைவருமே நினைத்தால் எப்படியிருக்கும் ? விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக கார்கள் பெறுகி வருவதை நாம் தடுக்க முடியாது ஆனால் விபத்துக்களை குறைக்க முயற்சிக்கலாமே... விபத்துக்கள் குறைந்தால் நமக்கு லாபமா ? நஷ்டமா ? என்பதை சிறிது ஆலோசித்து பார்ப்போமே...


நான் ஃப்ரான்ஸ் நாட்டுக்குப் போயிருந்த பொழுது மியூசியத்தில் சுற்றிக்கொண்டு இருந்தேன் ஒரு திடீர் நண்பர் கிடைத்தார் அவர் நம் இந்திய நாட்டின் ஆந்திராவைச் சேரந்தவர் பரஸ்பரம் புகைப்படம் எடுப்பதில் உதவிக் கொண்டதில் பழக்கம் அவர் ஸ்வீடன் நாட்டில் வேலை செய்வதாகவும் சுற்றிப் பார்ப்பதற்காக ஃப்ரான்ஸ் வந்ததாகவும் சொன்னார் அவரை விட்டு பிரிந்தவுடன்தான் எனக்கு ஞாபகம் வந்தது அந்த நாட்டின் போக்குவரத்து விதிமுறைகளைக் குறித்து கேட்க மறந்து விட்டது ஸ்வீடன் என்றாலே எனக்கு சத்ய நாராயணா என்ற அவரின் ஞாபகம் வந்து விடும் நானும் அபுதாபியில் தேடினேன் ஸ்வீடன் நாட்டு மனிதரிடம் பழகும் வாய்ப்பு கடைசிவரை கிடைக்கவே இல்லை.
.
சரி அடுத்து நான் லைசென்ஸ் எடுத்த லெட்சணத்தை பார்ப்போமா ?

 கார்கள் இன்னும் வரும்....

53 கருத்துகள்:

  1. கில்லர்ஜி - நம்ம நாட்டுல இது சாத்தியப்படாது. ஸ்வீடனில் ஆட்கள் குறைவு, முழுவதும் கணிணிமயமாக்கப் பட்டது (அதாவது கேமரா எல்லா இடங்களிலும் என்று நினைக்கிறேன்). துபாயிலேயே (பஹ்ரைனிலும்தான்) கேமரா வரப்போகுது என்று ஸ்பீடைக் குறைப்பதும், கேமரா இல்லாதபோது வேகமாகப் போவதும் நடப்பதால்தான் ரொம்ப கடுமையா தவறு செய்யறவங்களுக்கு தண்டனை கொடுக்கறாங்க (இவ்வளவு ஃபைன் என்று, அல்லது ஸ்டார் கொடுத்து லைசன்சையே பிடிங்கிக்கொள்ளும் அளவு போயிடுவாங்க).

    இங்க சட்டம் போட்ட உடனேயே, அது யாருக்கு லாபமாக முடியும்னு உங்களுக்குத் தெரியும். அதைத் தவிர்ப்பதற்காக (ஃபைனைத் தவிர்க்க), மக்களே லஞ்சம் கொடுக்க முயல்வாங்க.

    இவ்வளவு இருந்தும் அங்கும் விபத்துகள் நடைபெறுகின்றன. ஆனால் கண்காணிப்பு பலமாக இருக்கும். இந்தியாவுல நம்மோட மன நிலை (மைண்ட் செட்) மாறணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே

      சமீபத்தில் பரமக்குடியில் நண்பரிடம் பைக்கில் பின்னால் உட்கார்ந்தவர் ஹெல்மெட் போடவில்லை என்று போலீஸ்காரர் நூறு ரூபாய் கேட்டு மிரட்டி வாங்கி இருக்கிறார்.

      உண்மை மாற்றம் மக்கள் மனதில் தோன்றவேண்டும்.

      நல்ல எண்ணங்கள் மக்களிடம் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.

      நீக்கு
  2. ஆமா, இந்த ஜூஸ் ரொம்ப புளிக்குது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ பதிவை சொல்றீங்களோ...

      நீக்கு
    2. ம்ஹூம், பதிவை சொல்லல. பைசா கொடுத்தா திறக்காத பைலை சொன்னேன்

      நீக்கு
    3. தெரியும் சகோ நானும் சும்மாதான் சொன்னேன்.

      நீக்கு
  3. ஸ்வீடன் உண்மையிலேயே போற்றுதலுக்கு உரிய நாடுதான்
    நாம் என்றுதான் இந்நிலையினைப் பின்பற்றப் போகிறோமோ
    ஏக்கம்தான் வருகிறது நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நாம் மாறவேண்டும் என்ற சிந்தனைக்கே வரவில்லையே...

      நீக்கு
  4. எனக்கு இந்தப் பிரச்னையே இல்லை.. நான் லைசென்ஸ் எடுக்கவே இல்லை..! அதற்கு வண்டி ஓட்டத் தெரியணுமாமே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்ப நீங்க யாருக்கும் கப்பம் கட்டவேண்டாம்.

      நீக்கு
    2. @ஸ்ரீராம்
      ஹா ஹா ஹா... நிம்மதியான வாழ்க்கை.. இந்தியாவில் லைசன்ஸ் எடுக்கோணும் எனக் கட்டாயம் இல்லையே.. ஏனெனில் அங்குதான் நினைத்தபடி ட்றைவர் வைத்துக் கொள்ளலாமெல்லோ.. ஆனா இங்கெல்லாம் அது சாத்தியமில்லை எல்லோ.. அப்படி எனில் பிரைம் மினிஸ்டராகோணும்:))

      நீக்கு
    3. ஸ்ரீராம்ஜி மினிஸ்டராக வேண்டுவோம்.

      நீக்கு
  5. போஸ்ட் ஆபீஸ் குமாஸ்தா விபத்தில்லாமல் எப்படி இவ்வளவு வருடங்களாகி கடந்தார் தெரியுமா என்று கேட்டதும் லைசென்ஸ் எடுத்திருந்தாரே தவிர, அவர் காரே ஒட்டவில்லை என்று சொல்லப் போகிறீர்கள் என்று பார்த்தேன்!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. அவரிடம் கார் இல்லையெனில் இந்த விருதும், பாடத்தில் உதாரணம் சொல்லும் நிலைக்கு வரமாட்டாரே... ஸ்ரீராம்ஜி

      நீக்கு
    2. நல்லதொரு விழிப்புணர்வு ஏற்படாத வரையில் நம்மூரில் விபத்துகள் குறைய வாய்ப்பில்லை. எதிலும் பதட்டம். எதிலும் அவசரம்.
      உங்களூரில் விபத்துகள் குறைந்திருப்பது மகிழ்ச்சியே.
      ஸ்வீடன் நாட்டுக் கோட்பாடுகளை உலக மயமாக்கினால் என்ன.
      நம் ஊர் ஆர் டி ஓ லஞ்சம் குறையும்.

      நீக்கு
    3. வாங்க அம்மா தங்களது கோரிக்கையை இந்தியா ஏற்றால் எல்லாம் நலமே...

      நீக்கு
  6. விருதும் சரியான நபருக்கே... அருமை...

    பதிலளிநீக்கு
  7. சட்டத்திட்டங்களை ஒழுங்காய் கடைபிடித்தால் விபத்துக்களை தடுக்கலாம் இல்லையா?
    முறையாக பயிற்சி செய்யாமல் லைசென்ஸ் பெற்று எதற்கு?

    பதிலளிநீக்கு
  8. உண்மைதான் கில்லர்ஜி, ஆனா எவ்வளாவுதான் ரெயினிங் குடுத்து நல்லபடி படிச்சு பாஸ் ஆனாலும், லைசென்ஸ் கையில் எடுத்தபின், தம் மனம் போன போக்குக்கு ஓட்டுபவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்.

    முன்பு இங்கு ரீன் ஏஜ் அக்ஸிடன்ஸ் அதிகமாக இருந்தது, 18 இல் லைசென்ஸ் எடுக்கலாம், அதனால எடுத்தவுடன் ஸ்பீட் பண்ணி ஓடி அடிபடுவது அதிகமாக இருந்தது, அதனால் இப்பொழுது ஒரு சிஸ்டம் கொண்டு வந்திருக்கிறார்கள்.. அவர்களின் காருக்கு இன்சூரன்ஸ் குடுக்கும்போது குரூஸ் செட்டிங் போல செட் பண்ணிக் குடுக்கிறார்கள்.. அப்போ ஸ்பீட் லிமிட் தாண்டி அக்ஸிலரேட்டரை அமத்தினாலும் கார் வேகம் எடுக்காது ஹா ஹா ஹா.. அதனால இப்போ நிறையவே குறைஞ்சிருக்குதாம் அக்ஸிடன்ஸ்.

    நான் எப்பவும் முன் காருக்கும் பின் காருக்கும் இடைவெளி விட்டே ஓடுவேன், சில சமயம் பின் கார்க்காரர் முட்டுவதுபோல ஒட்டிக்கொண்டே வருவார்ர்.. எரிச்சலாகவும் பயமாகவும் இருக்கும், அப்போ உடனே சிக்னலைப் போட்டு சைட் எடுத்து பின்னால் வருபவரை முந்த வச்சிடுவேன்... நமக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:) ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க உங்களது பாலிசி சரியானதே இதை பயம் என்று எடுத்துக் கொள்ளக்கூடாது.

      நமக்கு நமது வாழ்க்கை முக்கியம்.

      நீக்கு
  9. ஓட்டத் தெரியாமல் வாகனங்களை ஓட்டி எவரையும் பரலோகத்திற்கு அனுப்பி வைத்தால் -

    அது ஒன்றும் பெரிய குற்றமில்லை - என்று கூட நடைமுறை ஆகும் நாட்கள் விரைவில் வரலாம்..

    தகாத உறவே குற்றமில்லை என்றாகி விட்டது...

    கலாசார சங்கிலி உடைந்தே போயிற்று...

    சட்டம், நீதி, நேர்மை, ஒழுக்கம் இவை எல்லாம் அருங்காட்சியகத்தில் இருப்பதற்குக் கூட தகுதியற்றுப் போயின.

    வெந்ததைத் தின்று விட்டு
    விதி வந்ததும் .......

    முரட்டுத் தனமாகத் தேரை ஓட்டி
    கன்றைக் கொன்றதற்காக தன் மகனை தேர்க்காலில் நசுக்கினானே சோழன்
    அவன் பைத்தியக்காரன் ஆகி விட்டான்...

    ஒழுக்கம் பேணுவதற்காக
    அர்த்த ராத்திரியில் வீட்டுக் கதவைத்
    தட்டினானே பாண்டியன் அவன் கிறுக்குக் கோடாங்கி ஆகிவிட்டான்...

    ஒருவனுக்கு ஒருத்தி.. அதுபோல
    ஒருத்திக்கும் ஒருவன் தான் என்பதற்காக
    காப்பியம் தீட்டினானே சேரன் மகன்
    அவன் வேறு ஏதாவது செய்திருக்கலாம்..

    முன்னோர்களைக் காட்டுமிராண்டிகளாக்கி
    அவர் முகத்தில் கரியைப் பூசியாயிற்று..

    தீயிலே எரிந்து போகாமல்
    நீதி நூல்கள் பலவற்றைக் காப்பாற்றிய
    தமிழ்த்தாத்தா உ.வே.சா. இன்று இருந்தால் அவருக்கு எத்தனை வேதனை.

    நீதியும் நல்லொழுக்கமும் இனி தேவைப் படாது என்றாகி விட்டது...

    அது சரி... இதைப் பற்றி நமக்கென்ன கவலை...

    இப்போது இரவு 11.30...
    வேலை கிடக்கு ஐயா.. வேலை கிடக்கு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி
      இன்றைய அவல நிலையை உறைக்கும்படி அழகிய வரலாற்று சான்றுகளுடன் சொன்னீர்கள்
      நாம் நமது வேலையை பார்ப்போம் வேறென்ன செய்வது ?
      வாழ்க நலம்

      நீக்கு
    2. துரை சார்... குடிப்பது, புகைப்பது இவைகள் சட்டபூர்வமானதாக ஆக்கப்பட்டுவிட்டன. இனி குட்கா, டிரக்ஸ் இதெல்லாம் தனி மனித உரிமையில் வரும் காலம் தொலைவில் இல்லை போலிருக்கிறது.

      உங்களுக்காக ஒரு செய்தி. இங்கு ஆன்லைன் ஆர்டரிங், மற்றும் பொருட்கள் டெலிவரி கான்சப்ட் அதிகமாகிக்கொண்டே வருகிறது. உதாரணமா, ப்ரொமோட் செய்வதற்காக, முதல் ஆர்டர் (ஒரு ஐட்டம்தான்) 9 ரூபாய்க்கும், நிறைய சமயங்கள் 40% டிஸ்கவுண்ட், மற்றும் 26 ரூபாய்க்கு உணவுப் பொருட்கள் என்று சர மாரியாக மொபைல் மூலம் ஆர்டர் செய்யலாம். ஆர்டர் கொடுத்த 20 நிமிடத்துக்குள் பொருள் நம் வீட்டுக்கதவில். இதுல வகை தொகை இல்லாத குட்டி குட்டி ரெஸ்டாரண்டுகளும் சேர்ந்துவிட்டன. (அப்போ அங்க கிச்சன் இருக்கவேண்டிய தேவையில்லை). பெங்களூரில், நாம் சொல்லும் இடத்தில் பொருளை வாங்கி, சொல்லும் இடத்தில் டெலிவரி செய்கிறார்கள், தனியார். ஆரம்பத்தில் இது இலவசமாக இருந்தது, இப்போது 20 ரூபாய் என்று தோன்றுகிறது. அதாவது, தி.நகர் கடையில் இந்த இந்தப் பொருட்களை வாங்கி, அடையாரில் டெலிவர் செய்துவிடு என்று சொல்லலாம். நீங்கள் என் வீட்டுக்கு வந்து மொபைலை விட்டுவிட்டுப் போனால், அதனை கலெக்ட் செய்து உங்கள் வீட்டுக்கு (சிட்டிக்குள்ள) டெலிவர் செய்யச் சொல்லலாம், 20 ரூபாயில். ரொம்ப உபயோகமான செர்வீஸ் (நம்ம நேரம், ஆட்டோ என்று பணம் மிச்சப்படும்).

      ஆனால், இது மக்களை வாழைப்பழச் சோம்பேறியாக்கி, உடல் நிலைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தோன்றுகிறது...

      நீக்கு
    3. >>> வாழைப் பழச் சோம்பேறிகள்!... <<<

      இதில் இன்னும் ஒரு மேல்படி இருக்கின்றதே...
      அதுவும் கூடிய விரைவில் நடைமுறைக்கு வந்து விடும்...

      நீக்கு
  10. இங்கு ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வண்டியை படு வேகமாக ஓட்டுகிறார்கள்..அதனால் ஒழுங்கா விதிமுறைப்படி ஓட்டுறவர்கள்தான் அதிகம் பாதிப்பு அடைகிறார்கள்.வாகன இன்ஸ்சுரசும் கட்டுவதில்லை. அப்படியே ஒருசிலர் கட்டியிருந்தாலும் இழுப்பீடு வாங்குவதற்கு ஒருஜென்மம் கடந்து விடுகிறது..இது இந்தியாவின் காட்டு தர்பார் நன்பரே...........

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாட்டு மக்களாக ஓட்டுப் போட்டால் நமக்கு நல்லதே நடக்கும் நண்பரே...

      நீக்கு
  11. மக்கள் மனதில் மாற்றம் வர வேண்டும். இப்போத் தான் ஆபத்துக்கால/விபத்துக்கால உடனடி சிகிச்சைக்கு ஒத்துக்கொள்கின்றனர் தனியார் மருத்துவமனைகள். அதோடு அரசாங்கம் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தால் உடனே தனிமனித உரிமை பாதிப்பு, சுதந்திரம் இல்லை, எமர்ஜென்சி நிலை என்றெல்லாம் வாத, விவாதங்கள் நடத்தும் ஊடகங்கள். ஆகவே இது மக்கள் மனம் மாறித் திருந்தினால் தான் இதெல்லாம் நடக்கும். இதுக்கு அனைவருமே வெளிநாடுகளில் சிலகாலமாவது போய் இருந்துட்டு வரணும். முடியற காரியமா இது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் சகோ இன்று மக்களை குழப்பி விட்டு குளிர் காய்வதில் ஊடகங்களுக்கு பெரும் பங்கு இருக்கிறது.

      நீக்கு
    2. கீசா மேடம்... 108 என்பது, அரசாங்க ஆஸ்பத்திரியில் கொண்டுபோய்ச் சேர்க்கணும். ஆனால் 'அவசரம் என்பதால் தனியார் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தோம்' என்ற பெயரில், ஒரு 'டெலிவரி'க்கு 2000 ரூ அந்த டிரைவர்களுக்குக் கிடைக்கிறது,தனியார் மருத்துவமனை, இதையும் சேர்த்து வந்திருக்கும் பேஷண்டிடம் கறந்துவிடுகிறது என்று படித்தேன். எந்தத் திட்டத்தைக் கொண்டுவந்தாலும், அதில் சந்து பொந்துகளைப் பார்த்து தங்களுக்கு லாபமாக்கிக்கொள்வதில் மக்களும், வியாபாரிகளும் முன்னணியில் இருக்கும் தேசம் இது.

      நீக்கு
    3. அன்பின் நெ.த.,

      விபத்துக்குள்ளானவரை அரசு ஆம்புலன்ஸ் தனியார் மருத்துவமனையில் சேர்த்து விட்டு உடையவர்களுக்குத் தகவல் சொல்ல -

      அவர்கள் வந்து போகும் போது - ஆள் பிழைப்பது கடினம்.. மூளைச்சாவு.. உடலில் மிச்சம் மீதி இருப்பதைக் கொடுத்துப் போங்கள் .. என்று அன்பால் மிரட்டி வாங்கிக் கொண்டதாக - நானும் படித்தேன் சென்ற வருடத்தில் ஒருநாள்..

      எந்த ஒரு திட்டத்தையும் ஓட்டை உடைசல்களை வைத்தே கொண்டு வந்தால் என்ன செய்வது?..

      நீக்கு
    4. துரை சார்... ஏற்கனவே இறந்தவரை (வேறு ஹாஸ்பிடல் வேறு மாவட்டம்), தனி ஹெலிக்காப்டரில் சிகிச்சை என்ற பெயரில் சென்னைக்குக் கொண்டுவந்து, முன்னுரிமையை மாற்றி, அரசியல்வாதி என்ற காரணத்தால் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை செய்து, அதைப்பற்றி எந்த அரசியல்வாதியும் கவலைப்படாத மாநிலம் நம்முடையது.

      நீங்கள் சொன்னது பல இடங்களில் நடக்கும். அபூர்வமாக வெளில வந்துவிட்டது போலிருக்கு.

      நீக்கு
  12. இடி மோசமா இருக்கு. மோடம் அணைக்கணும்.

    பதிலளிநீக்கு
  13. நம்ம ஊரில் இப்படி இருந்தா நினைக்கவே நல்லா தான் இருக்கு...

    ஆன வாய்ப்பு தான் இல்ல..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதலில் மக்கள் மனதில் இந்த எண்ணங்கள் வரவேண்டும்.

      நீக்கு
  14. புரோட்டா திங்கறேன் உதாரணம் மிகவும் பொருத்தமாக இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் ரசிப்புக்கு நன்றி.

      நீக்கு
  15. பதிவு பாராட்டுக்குரியது கார்கள் தொடரட்டும்

    பதிலளிநீக்கு
  16. வாகன விபத்துகள் பற்றி பேசும்போது நம் நாட்டு சாலைகள் ஜன அடர்த்தி இவற்றையும் கணக்கிட வேண்டும் accidents just do no happen they are caused காரணங்கள் எண்ணிலடங்காது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா உண்மையான வார்த்தை வருகைக்கு நன்றி

      நீக்கு
  17. உண்மை தான் நண்பரே.சுவீடன் நாட்டில் ஓட்டுநர் உரிமம் எடுப்பது மிக சிரமம்.அடுத்து நீங்கள் எப்படி உரிமம் எடுத்தீர்கள் என்றறிய ஆவலாய் உள்ளோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரின் கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

      நீக்கு
  18. அருமை . தொடர்கிறோம்

    பதிலளிநீக்கு
  19. மேலும் தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  20. விபத்துகள் எச்சரிக்கை அருமை
    விபத்துகளுக்கு சிறந்த பயிற்சி பெறாத ஓட்டுநர்களே காரணம்!

    பதிலளிநீக்கு
  21. இந்தத் தொடர் துபாய் லைசன்ஸ் சிஸ்டம் பற்றிய சிறப்பான பதிவு.

    பதிலளிநீக்கு