தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, செப்டம்பர் 02, 2018

காலமது கூடியதுநினைவுகள் பின்னோக்கியதே
கனவுகள் நனவாகியதால்
கனவுகள் நனவானது
மனது மகிழ்வானது

என் கனவை நனவாக்கிய
இறைவனுக்கும் என் நன்றி
என் சிந்தை திசை மாறிடாமல்
காத்த கடவுளுக்கும் கன நன்றி

எம் காலமது ஓடிவிட
இளமையதும் ஓடியது
ஓடியதால் குழந்தைகள்
காளையப் பருவமானது

கடந்த காலத்தின் இழப்புகள்
நிகழ் காலத்தில் வரவாகும்
என்னவளே வரவானால்
என் மனமும் நிறைவாகும்

இறுதிவரை இது நிலைத்தால்
இதுவுமொரு சுகமாகும்
இழந்து விட்ட என் சுகமும்
இணைந்து விட்ட நிலையாகும்

முதுமை ஒரு புறமும்,
இளமை மறு புறமும்
வளர்ந்து வந்தது நல் வழியே
வாழ்க செல்வங்கள் இவ்வழியே

கில்லர்ஜி தேவகோட்டை

54 கருத்துகள்:

 1. இறைவன் உங்கள் துணையை வரவாக்குவார்.
  அந்த குழந்தையின் சிரிப்பில் அனைத்தும் கிடைக்கும்.
  வாழ்க வளமுடன்.
  இறைவன் செல்வங்களை வாழ வைப்பார்.
  கவிதை மிக அருமை.
  காளையார் கோவில் படம் நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ விரிவான கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

   நீக்கு
 2. உங்கள் செல்வங்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகள். எல்லா நலனும், எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மீண்டும் வாழ்த்தியமைக்கு நன்றி ஸ்ரீராம்ஜி

   நீக்கு
 3. உங்கள் இன்றைய கவிதை உங்கள் மனநிலையைச் சொல்கிறது. கடமைகள் தொடரும். தொடரட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஜி சட்டென மனதில் தோன்றிய வரிகள் உடன் பதிவாகியது.

   நீக்கு
 4. "பூ முடிப்பாள்... இந்தப் பூங்குழலி.." என்கிற பாடலை இணைத்திருக்கலாம்! எனக்கு அந்தப் பாடல் நினைவுக்கு வருகிறது. அது தங்கைக்காக சிவாஜி (டி எம் எஸ்) பாடும் பாடலாயினும் இங்கும் பொருத்தமாயிருக்கும்.

  https://www.youtube.com/watch?v=IAw7hI6-Ehw

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது நல்ல பாடலே இருப்பினும் சற்றே சோகமும் இழைந்தோடும் தோடிராகம் ஜி

   நீக்கு
 5. உங்கள் மகளும் மருமகனும் எல்லாச் செல்வங்களையும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகள். பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சகோவான் வாழ்த்துகளுக்கும், பிரார்த்தனைகளுக்கும் நன்றி

   நீக்கு
 6. குழந்தைகளுக்கு அன்பு வாழ்த்துகள். நலமுடன் பூரண வாழ்வு மகிழ்ச்சியுடன் வாழ ஆசிகள்.
  உங்களுக்கும் தான் தேவகோட்டையாரே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அம்மா தங்களது ஆசிகள் பலிக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. என் பாஸ் இன்னொரு பாடலை சிபாரிசு செய்கிறார். அவருக்கு மிகவும் பிடித்த பாடல் அது..

  மரகதவல்லிக்கு மணக்கோலம்..
  https://www.youtube.com/watch?v=026qHaAnsFc

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதுதான் பொருத்தமான பாடல் எனக்கும் பிடித்ததும்கூட...

   நீக்கு
 8. தங்கள் மகளுக்கும் மருமகனுக்கும் அன்பு வாழ்த்துகள் நண்பரே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே வாழ்த்துகளுக்கு நன்றி

   நீக்கு
 9. கனவுகள் நனவுகள் ஆகும் காலம் இது..

  என்றும் அவர்கள் சிறப்பொடு மகிழ்வோடு இருக்கட்டும்..

  பதிலளிநீக்கு
 10. உங்கள் கனவு நனவாகட்டும். மகளும்,மருமகனும் எல்லா நலன்களும் பெற்று, மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 11. வணக்கம் சகோதரரே

  கவிதை மூலம் தங்கள் மனவெழுச்சியை வடித்து விட்டீர்கள். கவிதை அருமையாக உள்ளது.. தங்கள் குழந்தைகள் நலமுடன் வாழ்ந்து தங்கள் மனதின் ஆசையை இனிதாக நிறைவேற்றி வைத்திட இறைவனை பிரார்த்திக்கிறேன். தங்கள்
  மகளுக்கும், மருமகனுக்கும் என் அன்பான வாழ்த்துகளை தெரிவியுங்கள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ கவிதையை பாராட்டியமைக்கும், மணமக்களை மீண்டும் வாழ்த்தியமைக்கும் நன்றி.

   நீக்கு
 12. காலமது கைகூடி கனிந்திடும் வேளை
  காத்திடுவார் கடவுள் கருணையோடு
  கனவுகள் நனவாகும் வருங்காலத்தில்
  களைப்புகள் போய் கலகலப்பு கூடிடுமே.

  சந்ததியினர் வாழ்க வளர்க....

  பதிலளிநீக்கு
 13. கவிதை.. கவிதை...

  மீசையைப் புடிச்சி பேரன் இழுக்கணும்..
  அதையும் நீங்க பாட்டாப் பாடணும்...
  நாங்களும் காதாரக் கேக்கணும்!...

  கரி கண்டு மகிழ்ந்து
  கை கொண்டு தொழுது
  சிவதரிசனம் பெற்றனர் பிள்ளைகள்..
  இனி வாழ்வினில் மங்கலம்
  மலர்ந்திடும் நற்றமிழ் முல்லைகள்..

  வாழ்க... வளர்க!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி
   தங்களது கவிதை வழி வாழ்த்துகள் கண்டு மகிழ்ச்சி.

   நீக்கு
 14. உங்கள் வாழ்வின் புதிய ஒரு அத்தியாயம் ஆரம்பம்... அனைத்தும் மகிழ்ச்சியாக நடக்கும் ஜி...

  பதிலளிநீக்கு
 15. தங்கள் இல்லத்தினர் வளம் பல பெற்று வாழ வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே வாழ்த்துகளுக்கு நன்றி.

   நீக்கு
 16. நல்ல கவிதை. வாழ்த்துக்கள். உங்கள் பதிவு எங்கள் தளத்தில் : கில்லர்ஜி | கவிதை | காலமது கூடியது
  https://sigaram6.blogspot.com/2018/09/killergee.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது தளத்தில் அறிமுகம் செய்தது அறிந்து மகிழ்ச்சியும், நன்றியும்.

   நீக்கு
 17. வாழ்க செல்வங்கள்...இனிதே வாழ்க.

  செல்வங்களை இணைத்து மகிழ்வித்த நீங்களும் நீடூழி வாழ்க...வாழ்கவே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மீண்டும் தங்களது வாழ்த்துகள் கண்டு மகிழ்ச்சி நண்பரே

   நீக்கு
 18. கவிதையின் கருத்துகள் மிக சிறப்பு பாராட்டுக்குரியது

  பதிலளிநீக்கு
 19. உங்கள் செல்வங்களுக்கு எங்களது வாழ்த்துகள்.

  கவிதை சிறப்பு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி

   நீக்கு
 20. ￰மனதை கவர்ந்த கவிதை நண்பரே

  பதிலளிநீக்கு
 21. எல்லாம் நல்லபடியாக நடந்ததால் கவிதை பொங்கிவந்திருக்கிறது. நலமாக வாழட்டும்.

  நாற்றை நட்டுவிட்டீர்கள். அது வளர்ந்து பயனுற வாழ்க்கை அமைத்துக்கொள்ளட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தமிழரே மகிழ்ச்சியில் விளைந்த கவிதைதான் வருகைக்கு நன்றி.

   நீக்கு
 22. பிறந்தபோதே இன்னாருக்கு இன்னாரென நினைத்து பெயர் சூட்டி மகிழ்ந்த உங்கள் கனவினை நனவாக்கிய கடவுள் இப்போதிருக்கும் ஆசை, கனவினையும் நனவாக்குவார். கவலைப்படாதீங்கண்ணா! பிள்ளைகள் நல்லா இருப்பாங்க. இனி எல்லாம் சுகமே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது கருத்துரை கண்டு மகிழ்கின்றேன்.

   நீக்கு
 23. உங்கள் உள்ளுணர்வை கவிதை மூலம் அழகாக வெளிபடுத்திய விதம் நன்றாக இருக்கிறது... கில்லர்ஜி சார் என் தளத்திற்கு வந்து ஆதரவு தந்து ஊக்கப்படுத்தி வருவதற்கு நன்றிகள் பல

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் கருத்துரைக்கு நன்றி நண்பா.

   நீக்கு
 24. மன நிலையைக் கவிதையாக்கிய விதம் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முனைவர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

   நீக்கு
 25. தங்களின் கனவுகள் நனவாகட்டும் நண்பரே....!

  பதிலளிநீக்கு
 26. துளசிதரன்: தங்கள் மகளும் மருமகனும் நீடூழி வாழவும் 16 ம் பெற்று பெரு வாழ்வு வாழ்ந்திட பிரார்த்தனைகளுடன் வாழ்த்துகள் கில்லர்ஜி! உங்கள் கவிதை அருமை!

  கீதா: கில்லர்ஜி கவிதையை ரசித்தேன். நடுவுல கொஞ்சம் பக்கம் காணாமப் போனாலும் இப்ப புதியதோர் அத்தியாயம் தொடங்கியிருக்கே...ஜி தாத்தான்ற பொஸிஷன் ரொம்ப ரொம்பச் சிறந்த ஒன்று ஜி. நீங்கள் உங்கள் பிள்ளைகளோடு இருக்க முடியலைனு ரொம்ப வருத்தப்பட்டிருக்கீங்க இல்லையா? அதையெல்லாம் நனவாக்குங்க..உங்க பேரக் குழந்தைகளுக்கு நிறைய நல்ல விதைகளை ஊன்றி விட்டுடுங்க..நாளை அது மிகப் பெரிய நிழல் தரும் மரங்களாக வளர்ந்து எல்லோரிடமும் அன்புடன் நிழல் கொடுக்கும் மரங்களாக வளரட்டும்!!

  பொருள் சொத்து சேர்ப்பதை விட குழந்தைகளின் மனதில் நல்லதை விதைத்து அது வாழையடி வாழையாக அந்த நல்ல விஷயங்கள் தொடர்ந்து வருதல் என்பதுதான் மிகப் பெரிய சொத்து. ஜி!!! எஞ்சாய்!!ஜி உங்கள் மகிழ்ச்சி தொடரட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தங்களது விரிவான கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

   நீக்கு
 27. ஒரு தந்தையின் மன நிலையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது கில்லர்ஜி. மகளும் மருமகனும் வாழ்க வளமுடன் என்று வாழ்த்துவதில் நானும் மன நிறைவுடன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தங்களது வாழ்த்துகள் கண்டு மகிழ்ச்சியும், நன்றியும்.

   நீக்கு