தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், ஏப்ரல் 19, 2016

சிறை வைக்க முடியாது


முன்னறிவிப்பு - புகைப்படம், தலைப்பிற்கும் ஏன் ? பதிவுக்கும்கூட சம்பந்தமில்லை காரணம் எனக்கு அரசியல் தெரியாது நான் பதிவு எழுதிக் கொண்டு இருக்கும் பொழுது உறங்கி விட்டேன் யாரோ எனக்கு வேண்டாதவர்கள் இதை சொருகி விட்டு போய் விட்டார்கள் இது வெளிநாட்டு சதி என்பதை சபையோருக்கு அறியத் தருகிறேன் - கில்லர்ஜி

01. ஆணால் உணர முடியாது ஆனால் ? பெண்ணால் உணர முடியும் அதுவே பிரசவ வலி
02. சில நேரம் உன்னால் முடியாது ஆனால் ? என்னால் சொல்லிக் காட்ட முடியும் அதுவே கைகாட்டி சொல்லும் வழி
03. நான் நினைச்சா உன்னை கடிப்பேன் என்னை நீ கடிக்க முடியாது நான்தான்டா கொசு
04. நீ கிழிந்த நோட்டைக் கொடுத்தால் நான் வாங்க மாட்டேன் பகரமாக நான் கிழித்துக் கொடுப்பேன் நீ வாங்கயே தீரணும் அதுவே பயணச்சீட்டு
05. உன்னை ஒருநாள் நான் தின்பேன் என்னை என்றும் நீ தின்ன முடியாது நான்தான் மண்
06. குத்துச்சண்டை வீரனே உன்னால் என்னைக் குத்த முடியுமா ? பயந்த கோழையே நான்தான்டா முள்
07. சம்சாரத்தை தொட மட்டும் ஆசைப்படும் மனிதா என்னைத்தொடு பார்ப்போம் நான்தான் மின்சாரம்
08. திரைப்படத்தில்100 நபரை வீழ்த்தும் நடிகனே வரும் புரட்டாசி 8 என்னை வீழ்த்து பார்க்கலாம் நான்தான்டா எமன்
09. ஊருக்கெல்லாம் ஜாதகம் சொல்லும் சோலந்தூராரே உனது ஜாதகம் சொல் பார்ப்போம் நான்தான் கேது
10. எத்தனை பேர் வாயில மண்ணை அள்ளிப் போட்டே இன்னைக்கு நான் உன் வாயில போடுறேன் பார்த்தியா ? நான்தான்யா சண்டாளன்
11. நான் உங்களோட ஜீன்ஸ் பேண்ட் போடமுடியும் நீங்க என்னோட சுடிதாரை போட முடியுமா ? மனைவி
12. நீ எவ்வளவுதான் முயன்றாலும் என்னை சிறை வைக்க முடியாது நான் கொல்லைவாசல் வழியாக தப்பிச்சுடுவேன் நான்தான்யா சோறு

நட்பூக்களே... ஒரு ஆட்சி எப்படி நடந்து முடிந்தது என்பது நம்மில் பலருக்கும் தெரியாது குறைய நண்பர்கள் மட்டுமே படித்த இந்த எனது பழைய பதிவை சொடுக்கி படித்து அறிக இதோ - காமராஜர்

55 கருத்துகள்:

  1. வித்தியாசமான பகடி! ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  2. கண்டிப்பா..சிறை வைக்க முடியாதது என்பது உண்மைதான்...

    பதிலளிநீக்கு
  3. அரசியல் தெரியாதுன்னு இவ்வளவு கலக்குறீங்களே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ நானே கலங்கிப்போய் இருக்கேன் கலக்குறேனா.... ?

      நீக்கு
  4. வணக்கம்
    ஜி
    நல்ல கேள்வி பதில்கள் சட்டத்தில் ஒரு ஓட்டை உள்ளது அதன் தப்பலாம்...இது எப்படி.ஜி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  5. பதில்கள்
    1. வருக கவிஞரே சட்டத்துக்கு ஒரே ஓட்டை மனிதனுக்கு....???

      நீக்கு
  6. பதிவுக்கும் படத்துக்கும் சம்பந்தம் இல்லை என்றாலும்... இதுவும் நல்லாயிருக்கே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லவேளை சம்பந்தப்படுத்தி பிரச்சினையைக் கிளப்பி விடாமல் இருந்தீங்களே..

      நீக்கு
  7. அருமையான நக்கல்ஸ்...
    ரசித்தேன் நட்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் யாரையும் நக்கல் செய்யவில்லை நண்பரே நீங்கள் தேவையில்லாமல் வம்பில் இழுத்து விடாதீர்கள்...

      நீக்கு
  8. எல்லாமே பொருத்தம் என்றாலும் ,வேட்டிக்கரை நிறம்தான் சரியில்லை :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி வேஷ்டியில் கொஞ்சம் கை‘’வண்ணம்‘’ காண்பித்து இருப்பேன் ஆனால் நீங்கள் நான்தான் வேஷ்டி கட்டி விட்டேன் அப்படின்னு ‘’வேற‘’மாதிரி பேசுவீங்களே...

      நீக்கு
  9. அருமையான பதிவு
    தொடருங்கள்

    http://tebooks.friendhood.net/

    பதிலளிநீக்கு
  10. சம்மந்தமேயில்லாத தலைப்பும், புகைப்படமும், அரசியல் தெரியாத கில்லர்ஜி அவர்களின் பதிவும் மிக அருமை. ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தாங்கள் கேட்டதால் அரசியல் பதிவு ஆனால் கடந்த இரண்டு பதிவும் அரசியல்தான் நீங்கள் வரவில்லை... இனியும் தேர்தல்வரை எனக்கு தெரியாத அரசியலே... வரும்

      நீக்கு
  11. வரும்.. ஆனா வராது.. அதுதாங்க நிம்மதி..

    ஒழியும்.. ஆனா ஒழியாது.. அதுதாங்க மது..

    கலக்குறீங்க.. ஜி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி சரியான சொல்லாடல் உங்களை விடவா கலக்கல்

      நீக்கு
  12. பதில்கள்
    1. முனைவர் ஐயாவின் ரசிப்புக்கு நன்றி

      நீக்கு
  13. அன்புள்ள ஜி,

    ‘சதி லீலாவதி’ சிறை வைக்க முடியாது... சிந்திக்க வைத்தீர்கள்.

    நன்று.

    த.ம. 8

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக மணவையாரே.. நான் சோற்றைப் பற்றித்தான் குறிப்பிட்டேன் தாங்கள் அவசியமில்லாமல் கழகத்தில் கலகத்தை உருவாக்க நினைக்கின்றீர்கள்.

      நீக்கு
  14. சம்பந்தம் இல்லாததை சம்பந்தப்படுத்தும் அளவு யோசிக்க வைத்துவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக முனைவரே நான் சம்பந்தம் இருக்குன்னு எப்ப சொன்னேன் இருந்தால் தேவலையேன்னு.............

      நீக்கு
  15. முதலில் உங்க படத்தைப் பார்த்ததும் வெடிச் சிரிப்பு ..இதோ படித்துவிட்டுக் கமென்ட் போடறோம்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹலோ அது என்னோட படம் இல்லை யாரோ..... சொன்னாங்க தமிழ் நாட்டு முதல்வர்கள் அப்படின்னு...

      நீக்கு
  16. பதிவை ரசித்தோம் ஜி...செம...8 ம் 10 ம் தான் கொஞ்சம் புரியவில்லை ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 8-வது கசா’’நாயகனின் பாச்சா எமனிடம் பலிக்காது
      10-வது சண்டாளன் சுடுகாட்டில் வேலை செய்பவர்

      நீக்கு
  17. என்ன செய்தாலும் வெல்லமுடியாது...கில்லர்ஜி ...

    பதிலளிநீக்கு
  18. பதில்கள்
    1. வருக சகோ நான்கூட கைகலப்பு உண்டாக்கி விட்ருவீங்களோ’’ன்னு பயந்தேன் ஐயோ...... ஐயோ.........

      நீக்கு

  19. எல்லோராலும் எல்லா தலைப்புகளிலும் எழுதமுடியாது. ஆனால் ஒருவரால் மட்டும் எழுதமுடியும். அவர் திரு KILLERGEE. என்ன சரிதானே நண்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களின் கருத்துரையை பகிர்ந்தமைக்கு நன்றி.

      நீக்கு
  20. அனைத்தும் அருமை சகோ, ஆனால் புரட்டாசி 8 தான் புரியல, சம்பந்தம் தலைப்பும் பதிவும்,, அருமை சகோ,,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ எல்லோரையும் தூக்கிப் போட்டு மிதிக்கிற கசா’’நாயகன் எமனிடம் வாலாட்ட முடியலையே...

      நீக்கு
  21. ரசித்தேன் நண்பரே!
    த ம 12

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களின் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  22. அருமை தோழரே! நீங்க தூங்கியதால், ஹாஸ்யம் மிஸ்ஸிங். இனிமே பதிவை முடிச்சிட்டு தூங்குங்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இனிமேல் அப்படியே இருக்க முயல்கிறேன் நாளைய பதிவுக்கு வாருங்கள் உங்களது ஆசை நிறைவேறலாம் பஞ்சப்பட்டி, பஞ்சாயத்து பஞ்சவர்ணம்

      நீக்கு
  23. நண்பரே நீங்கள் அரசியல் தெரியாதவர்தான்
    நம்பிவிட்டோம்
    தம +1

    பதிலளிநீக்கு
  24. சிரித்தேன் முதலில்!சிந்தித்தேன் பின்பு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா சிரித்து சிந்தித்தமைக்கு நன்றி

      நீக்கு
  25. வணக்கம் ஜி !

    எனக்கு என்னமோ மேலே உள்ள படம் தாங்களாகத்தான் உருவாக்கியது போல இருக்கு ஹா ஹா ஹா !
    எப்படி ஜி நீங்க இப்படி எல்லாம் சிந்திக்கிறீங்கள் !

    அத்தனையும் அருமை ஜி தொடர வாழ்த்துகள் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக பாவலரே வருகைக்கு நன்றி படத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை.
      //எனுக்கு அம்பூட்டு தெறமே கெடையாதூ//

      நீக்கு
  26. அது என்ன புரட்டாசி 8-ம் தேதி. யமன் யாரிடம் வரும் நாள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா அந்த நடிகரின் பெயரைச் சொல்லி பிரச்சினையை உருவாக்க வேண்டாமே... தேதி ஏதோ ஒண்ணு அது கெட்டவனுக்கு எட்டு என்றாக இருக்கட்டுமே... எப்பூடி ?

      நீக்கு
  27. அறையெடுத்துச் சிந்திப்பீர்களோ! செம்மை!

    ஆனால், சண்டாளன் என்பது குறிப்பிட்ட ஒரு சாதியினரை இழிவுபடுத்துவதற்கான சொல். எனவே, அதைப் பயன்படுத்த வேண்டா என நட்பு முறையில் கேட்டுக் கொள்கிறேன். 'கெட்டவன்', தீயவன்', 'இழிவானவன்', 'இரண்டகன்' எனப் பொதுப்படையான சொற்கள், நல்ல தமிழ்ச் சொற்கள் நிறையவே உள்ளன. தமிழ்ச் சொல் இல்லை என்றாலும் 'சண்டாளன்' என்பதற்குப் பதிலாக இந்த இடத்தில் 'துரோகி' என்பது பொருத்தமாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே எங்கள் ஊரில் இடுகாட்டில் வேலை செய்பவரை சண்டாளன் என்பது சொல் வழக்கு பதிவில் சொல்வதும் இடுகாட்டில் வேலை செய்பவரே இந்த இடத்தில் கெட்டவன், தீயவன் பொருந்தாது ஆகவே நேரடியான வார்த்தை சொருகினேன் வருகைக்கு நன்றி

      நீக்கு