தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், ஜூலை 29, 2019

AUDITOR சித்திரகுப்தன்


நாளை பெறப்போகும் தண்டனைகளுக்காகவே இன்று மனிதன் பாவங்களை செய்கிறான். அப்படியானால் பாதிக்கப்படுபவன் என்ன செய்தான் ?

அவன் முன்பே செய்த பாவங்களுக்கான தண்டனைதான் இது ஒவ்வொரு மனிதர்களுக்கும் கிடைக்கும் நன்மைகளும், தீமைகளும் சக மனிதர்களிடமிருந்தே கிடைத்துக் கொள்கிறது இதுவொரு சங்கிலித்தொடர்.

இறைவன் நேரடியாக தோன்றி இதை செய்ய முடியாது அப்படி செய்தால் உலக மக்களிடம் பல கடவுள்கள், பல மதங்கள் என்ற கொள்கைகள் ஒழிந்து அனைவருமே இறைவனுக்கு பயந்து நன்மைகளை மட்டுமே செய்து நல்லவர்களாகவே வாழ்வார்கள் இதன் காரணமாக எல்லோருமே செல்வந்தராவர்.

அந்நிலையானால் பிறகு யார் கழிவறையை சுத்தம் செய்வது ?

பிறகு வாழ்வில் சுவாரஸ்யம் இருக்காது ஆகவேதான் இறைவன் மனிதன் என்ற பொம்மைகளை வைத்து சித்திரகுப்தன் என்ற ஆடிட்டர் மூலம் விதி என்ற கோட்பாட்டை அமைத்து வழி நடத்துகின்றான்.

ஒருவனின் வாழ்வு உயரத்துக்கு செல்கிறது என்றால் எங்கோவொரு மூலையில் மற்றொரு மனிதனின் வாழ்வு தாழ்வை நோக்கி சறுக்குகிறது என்றே பொருள் ஆம் சுப்பன் தொழில் செய்து வாழ்வில் கடினமாக உழைத்து போராடி பெரும் செல்வத்தை திரட்டி விடுகிறான் அதை எப்படி முதலீடு செய்வது ? வீடு, இடம், வயல்வெளி, பொன் நகைகள் என்று வாங்கி போட்டாலும் செல்வம் மேலும் கொழிக்கிறது என்ன செய்வான் ?

பெரிய வகையில் மாடமாளிகைகள், கட்டிடங்கள் வாங்கியாக வேண்டும் அதற்கு சுப்பன் எங்கு போவான் ? அவன் வாழும் இதே உலகத்தில்தான் வாங்க முடியும் வேறெங்கு செல்வது ஓர் இடத்தை நாம் வாங்க வேண்டுமெனில் அதை விற்பதற்கு ஒரு மனிதன் இருந்தாக வேண்டுமே...
ஆம் அவன்தான் குப்பன்

குப்பனுக்கு உறவுகளின் துரோகத்தால் வாழ்வாதாரம் சறுக்கலை நோக்கி இறங்குகிறது தனது இடத்தை விற்கும் எண்ணங்களுக்கு தள்ளப்படுகிறான் இங்குதான் சுப்பனையும், குப்பனையும் ஒரே நேர்கோட்டில் சந்திக்க வைக்கின்றான் விதியை அமைத்து வைத்த ஆடிட்டர் சித்திரகுப்தன். ஆக ஒருவனுடைய வீழ்ச்சியில்தான், மற்றொருவனுடைய எழுச்சி அடக்கமாகி இருக்கிறது ஒரு மனிதன் பிரதமர் பதவியை விட்டு இறங்கி முன்னாள் பிரதமர் ஆனால்தான் மற்றொரு மனிதன் பிரதமர் நாற்காலியில் அமரமுடியும்.

இந்த இயக்கம் செயலாக்கம் ஆவதற்காகவே மனிதனிடத்தில் அன்பு, பாசம், ஆசை, கோபம், காமம், பகை, ஈகை போன்ற பல்வகை குணங்களை புகுத்தி வாழ வைத்தக்கொன்'று இருக்கிறான் இதை புரிந்துணர்ந்து வாழ்பவன் மனிதன் புரியாமலே திரிபவன் மிருகம்.

எல்லாம் சரிதான் தனது வாழ்நாளில் யாருக்குமே துரோகம் செய்யாத முதலில் நினைக்கவே செய்யாத அந்த மனிதனுக்கு உலகையறிந்த காலம் முதல் மரணத்தை தழுவும் காலம் அருகிலிருக்கும்வரை துன்பங்களை மட்டுமே இறைவன் வகுத்து வைத்திருப்பதின் காரணமென்ன... ஒருவேளை கடந்த ஜென்மப்பாவங்களோ ?

அந்த தேவகோட்டையான் செய்த பாவம்தான் என்ன ?

சிவாதாமஸ்அலி-
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்க இருக்கிறதோ... அதுவும் நன்றாகவே நடக்கும்.

காணொளி

67 கருத்துகள்:

  1. பள்ளிக்காலங்களில் ஆசிரியர் எல்லா பரீட்சை பேப்பர்களையும் தானே திருத்துவதற்கு பதில் மாணவர்களுக்கிடையிலேயே கொடுத்து ஒருவருக்கொருவர் திருத்திக் கொள்ளச் செய்வார். அது போலதான் கர்மவினைகளும் சகமனிதர்களிடையே நிகழ்கிறதுபோலும்.

    சமீபத்தில்தான் எங்கள் குடும்பக் குழுமத்தில் இதுபற்றி பேச்சு வந்து அவர் சொன்ன ஒரு புத்தகத்தை இறக்கி வைத்திருக்கிறேன். இன்னும் படிக்க ஆரம்பிக்கவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம்ஜி
      நம்மை நாமே அலசிக்கொள்வது நமது குறைநிறைகளை தெளிவாக்கி காண்பிக்கும்.

      அதுவே நமக்கு தீர்வுக்கான வழியை காட்டும்.

      நீக்கு
  2. இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட... அவை இரண்டும் சேர்ந்தொரு பொம்மையைச் செய்தன தாம் விளையாட...

    இந்தப் பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமையான பாடல் ஜி இந்த வாரம் வெள்ளியில் வருமோ.. ?

      நீக்கு
    2. ஸ்ரீராம்.... அவை இரண்டும் சேர்ந்து ஒரு பொம்மையைச் செய்வதில்லையே... அனேகமா எல்லோரும் ரெண்டு ரெண்டு பொம்மைகள்னா செய்யறாங்க..

      நீக்கு
  3. தேவகோட்டையார் வெள்ளைப் பக்கங்களை பார்க்க மறந்து கருப்புப் பக்கங்களையே பார்க்கிறார் போலும். அவரை இந்தப் பக்கம் திருப்பி விடுங்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒருவேளை இருட்டில் நிற்பதால் வெள்ளை நிறம் காணவில்லையோ...

      நீக்கு
    2. பகல் நேரத்தில் கண்ணை முடிக்கொண்டிருந்தால் உலகமே இருட்டாகத்தான் இருக்கும் இரவு நேரத்தில் கண்ணை முடி இருந்தாலும் அப்பத்தான் இருக்கும் ஆனால் இரவு நேரத்தில் கண்ணை முடி இருப்பதற்கு பதிலாக திற்ந்து பாருங்கள் நிச்சயம் அந்த இருட்டிலும் நமக்கு வழி தெரிய ஆரம்பிக்கும் நிச்சயம் எங்கோ இருந்து வரும் சிறிய ஒளிக்கீற்று நம்மை வழி நடத்தி செல்லும் அதனால் இருண்ட வாழ்விலும் கண்ணை திற்ந்து வைத்து இருக்குனள் கில்லர்ஜி நிச்சயம் ஒளி நமக்கு வழிகாட்டும்

      நீக்கு
    3. வருக நண்பரே தங்களது தன்னம்பிக்கை வரிகளுக்கு நன்றி

      நீக்கு
    4. என்ன நீங்களும் காப்பி பேஸ்ட் செய்ய தடை விதித்து இருக்கீங்க? விமர்சனங்களைக்கூட எடுக்க முடியவில்லை.

      நீக்கு
    5. வருக நண்பரே...
      முன்பு இனிய விரோதியொருவர் எனது பதிவுகளை காப்பி எடுத்து அவரது சிந்தனை போலவே தனது பெயரைப் போட்டு பிரசுரித்து வந்தார்.

      அதன் பிறகு அவருக்கு எச்சரிக்கை கொடுத்து விட்டு இப்படி செய்து விட்டேன்.

      நீக்கு
    6. ''இனிய விரோதியா'' ??? சொல்லாடல் நன்றாக இருக்கிறதே !!!!

      நீக்கு
    7. இது நமது பழக்கதோஷம் நண்பரே...

      நீக்கு
  4. இனிய காலை வணக்கம் கில்லர்ஜி..

    படித்து வரும் போதே தெரிந்துவிட்டது அந்தக் குப்பன் யார் என்று...

    கில்லர்ஜி என்ன சொல்ல என்று தெரியவில்லை. பதிவின் சாராம்சம் விவாதிப்பதற்கான சப்ஜெக்ட்...ஆனால் தனிப்பட்ட முறையில் நோக்கினால் தேவகோட்டையாரின் வருத்தங்கள் விரைவில் நீங்கிட வேண்டும்.

    மனித வாழ்வில் ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தானே செய்யும்...ஏற்றத்தை ஏற்பது போல் மனம் இறக்கத்தையும் ஏற்க வேண்டுமே!.

    மனம் கஷ்டப்பட்டது கில்லர்ஜி. பதிவு பார்த்து. புரிந்து கொள்ள முடிகிறது. விரைவில் எல்லாம் நலம் பெற வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நமது கஷ்டங்களுக்கு காரணத்தை தேடி இறைவனிடமோ, சோசியரிடமோ செல்வதைவிட... நம்மில் நம்மை தேடுவது சிறப்பானவைதானே...

      தங்களது விரிவான அலசலுக்கும், புரிதலுக்கும் நன்றி

      நீக்கு
  5. நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கை கொள்வோம் கில்லர்ஜி.

    பதிலளிநீக்கு
  6. உங்கள் நல்ல மனதிற்கு எல்லாம் நல்ல படியாகவே நடக்கும் நண்பரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது வருகைக்கு நன்றி.

      நீக்கு
  7. சைவ சித்தாந்தத்தில் சஞ்சிதம்,ஆகாமியம், பிராரத்தம் என்று மூன்று வகையான வினைகளைக் கூறுவர். அனைத்தையும் நாம் அனுபவிக்கவேண்டியது என்பது நம் தலையில் எழுதப்பட்டுவிட்டது. இருப்பினும் நல்லதை நினைப்போம், செய்வோம், பகிர்வோம். நேர்மறை எண்ணங்கள் நம்மை மென்மேலும் முன்னுக்கு இட்டுச்செல்லும் என்பது என் நம்பிக்கை, அனுபவமும்கூட.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் வருகைக்கு நன்றி.
      தங்களது கருத்தை முழுமையாக ஏற்கிறேன்

      இனியெனும் நல்லதை நினைத்து அவ்வழியில் பயணிப்பேன் மிக்க நன்றி

      நீக்கு
  8. ஜி... உங்களுக்கு ஏதோ ஒன்று நல்லது நடக்கப் போவதிற்காக, (இந்த சிந்தனை உட்பட) - என்று எனக்கு தோன்றுகிறது...

    // ஒருவனின் (சுப்பனின்) வாழ்வு உயரத்திற்கு செல்கிறது என்றால், எங்கோவொரு மூலையில் மற்றோரு மனிதனின் (குப்பனின்) வாழ்வு தாழ்வை நோக்கி சறுக்கிறது என்றே பொருள்... //

    இது போல் இருக்கலாம் அல்லது நடக்கலாம்... அப்போதெல்லாம் நான் நினைத்துக் கொள்வது, "நம்மால் முடியாது என்று நினைத்ததை, உலகில் யாராவது ஒருவர் முடித்திருப்பார்..."

    // கடந்த ஜென்மப்பாவங்களோ...? // இது போல பல சமயம் எனக்கும் தோன்றியதுண்டு... ஆனால் அந்த சமயங்களில் எல்லாம் மனதை வேறுபக்கம் வலுக்கட்டாயமாக மாற்றுவதும் உண்டு... அப்போது தோல்வியும் உண்டு... வெற்றியும் பெற்றதுண்டு...

    இது போல் ஒரு பதிவு எனது draft-ல் உள்ளது... முடிக்கவில்லை... முடிந்தால் அப்படியே வெளியீடு செய்கிறேன்... இதுவரை அவ்வாறு செய்ததில்லை... பார்ப்போம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஜி... உங்களுக்கு ஏதோ ஒன்று நல்லது நடக்கப் போவதிற்காக, (இந்த சிந்தனை உட்பட) - என்று எனக்கு தோன்றுகிறது//

      மிகவும் மகிழ்சியாக இருக்கிறது ஜி

      தங்களது பதிவு வரட்டும்.

      நீக்கு
  9. நமக்கு என்று விதிக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து விட்டு போவோம்.
    கடைசியில் சிவாதாமஸ்அலி நினைப்பது போல் எல்லாம் நன்றாகவே நடந்தது, நடக்கவிருப்பதும் நன்றாக நடக்கும் என்று நம்புவோம்.
    நம் கடமையை செய்து பிரிதிபலனை எதிர்ப்பார்க்காமல் இருப்போம். எதிர்ப்பார்ப்பு ஏமாற்றம் தரும். நம்மை துன்பத்தில் ஆழ்த்தும்.
    நல்லதையே நினைத்து அவ்வழியிலேயே பயணிப்பேண் என்றது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது விரிவான கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

      //எதிர்ப்பார்ப்பு ஏமாற்றம் தரும்//

      நிதர்சனமான உண்மை.

      நீக்கு
  10. நல்லதே நடக்கட்டும். நம்பிக்கையை இழக்க வேண்டாம். முப்பது வருடம் வாழ்ந்தவரும் இல்லை; முப்பது வருடம் தாழ்ந்தவரும் இல்லை என்பார்கள். அதே போல் உங்களையும் நல்லன தேடி வரும். கடந்த ஜென்மப் பாவங்கள் எல்லாவற்றையும் தான் நிறையவே அனுபவித்து விட்டீர்களே! இனி நல்வாழ்க்கைக்குப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது பிரார்த்தனைகளுக்கு நன்றி.

      நீக்கு
  11. ஒரு சின்ன பாடம் பொறுப்பு யாருக்கு ஒருவனிடம் நீங்கள் இந்நிலையில் இருக்க்சகாரணம்யாரென்றுகேட்டால் பலவிதமாகபதில் வரும் ச்ல சதவீதம் பெற்றோர்கள் சிலசதம் ஆசிரியர் சிலசதவீதம் நண்பர்கள் சில சதவீதம் விதி சில் சதவீடம் அதிர்ஷ்டம் சில சதம் கர்மவினை என்றுபல விதமாகப் பதில் வரும் யாரும் அவர்கள்தான் காரணம் என்று சொல்ல மாட்டார்கள் பொறுப்பு துறப்பதைவிளக்கவே இக்கதைஅதில் ஒரு வித திருப்தி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா தங்களது விளக்கவுரைக்கு நன்றி.
      யாருமே காணொளியை காணவில்லையோ...

      நீக்கு
    2. ஹாஹாஹா, கில்லர்ஜி, நீங்க சொன்னப்புறமாத் தான் காணொளி இருப்பதையே கவனித்தேன். பார்த்தேன், ரசித்தேன். கேள்வி அருமை! டிடி சொல்லி இருப்பதையும் பார்த்தபின்னரே புரிந்தது.

      நீக்கு
    3. வாங்க இந்த பதிவை பலரும் சோகமான கண்ணோட்டத்தில் பார்க்ககூடாது என்பதற்காகத்தான் காணொளியை இணைத்தேன் ஆனால் பலரும் பார்க்கவில்லை போலும்.

      இருந்தாலும் அத்தாம் பெரியஆளை இந்தக்கேள்வி கேட்டதை "கேள்வி அருமை" என்று சொல்வது நன்னாயில்லே கேட்டோ...

      நீக்கு
  12. விளம்பர படங்களில் நடிப்பதில்லை என்று ஒருமுறை பேட்டி கொடுத்தவர்... இன்றைய நிலை...! பணம் அனைத்தையும் செய்யும்... காணொளியில் நீங்கள் கேட்ட கேள்வி செம...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பணம் எல்லாம் செய்யும்//
      உண்மைதான் ஜி மீள் வருகைக்கு நன்றி

      நீக்கு
  13. //துன்பங்களை மட்டுமே இறைவன் கொடுத்திருப்பதன் காரணம்// - அப்படியா கில்லர்ஜி... இருக்கவே இருக்காது. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

    எத்தனை பேருக்கு அடுத்த ஊருக்குக்கூட வாழ்நாளில் செல்லும் பாக்கியம் கிட்டியதில்லை என. எத்தனை லட்சம் பேர் வாழ்நாளில் காரை ஓட்டியதே கிடையாது. ஏன் நீங்கள் ஓட்டிய கார்களை (பிராண்ட்ஸ்), நான் உபயோகித்துப் பார்த்ததே இல்லையே. எத்தனை முறை விமானப் பயணங்கள், பலப் பல நாடுகளுக்குப் போகும் வாய்ப்பு....

    இறைவன் ஒன்றைக் கொடுத்து, பலவற்றை எடுத்துக்கொள்கிறான். பலருக்கு அது புரிவதில்லை. அவ்வளவுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே
      விரிவான விளக்கம் உண்மைதான் நான் எப்பொழுதுமே...

      "உனக்கும் கீழே உள்ளவர் கோடி
      நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு"

      என்ற பாடலை நினைப்பவனே...

      நீக்கு
  14. கில்லர்ஜி... கமலஹாசருக்கு இப்போ நிறைய கடன். அதனால லைகாவுக்கு ஒரு படம் இலவசமா நடிச்சுக் கொடுத்தாகணும். பண வரவுக்காக விளம்பரப் படத்தில் நடித்தாகணும். பிக் பாஸுக்கு நிறைய பணம் கிடைக்கிறது. அப்புறம் ஜவுளிக்கடை விளம்பரம்.

    உங்கள்டயும் எக்ஸ்டிரா பணம் இருந்தால் கொடுத்தீங்கன்னா, தேவகோட்டை உலகத்திலேயே சிறந்த ஊர் என்று விளம்பரப்படுத்தி அங்குள்ள ரியல் எஸ்டேட் விலையை ரொம்ப அதிகமாக்கிடுவாரு.

    விளம்பரத்தில் நடித்ததற்காக, அவர்கிட்ட எங்க ஊர்ல நீங்களும் இடம் வாங்கிப்போடுங்க என்று சொல்வீங்க போலிருக்கே... அரசியல் என்ற புலி மேல ஏறிட்டாரு. இனி என்னதான் செய்வாரு இந்த கமலஹாசன்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தேவகோட்டை உலகத்திலேயே சிறந்த ஊர்//

      பூக்கடைக்கு விளம்பரமா ?
      தேவையே இல்லை நண்பரே...

      இருந்தாலும் உங்கட ஆளு டாய்லெட் பிரஷெல்லாம் தூக்குறது நல்லாவா இருக்கு ?

      அப்பாவி அப்பாஸூ பிழைப்பில் மண் அள்ளிப் போடலாமா ?

      அகலக்கால் அழகேசனாக வாழ்ந்ததால் வந்த வினை.

      நீக்கு
    2. "உங்கட ஆளு" - நான் உங்களுக்கு என்ன துரோகம் செய்தேன். கமலதாசனுக்கு என்னை ரஜிகர் ஆக்கிவிட்டீர்கள்.

      அப்பாஸ் - இந்த மாதிரி விளம்பரத்துக்கெல்லாம் பொறந்து வந்தவர். அவருடைய பிழைப்பில் மண் அள்ளிப்போட்டது பாவம்தான்.

      அகலக்கால் அழகேசன் - கமலஹாசன் சொந்தப் பணத்தை எதுக்கும் செலவழிச்சிருக்காரா என்ன? தயாரிப்பாளர் தலைலதானே எல்லாத்தையும் போடுவாரு..

      நீக்கு
    3. நீங்க அவரு ரஜிகர்ர்ர்ர்ர்ர்ர் இல்லையா ?

      அகலக்கால் அழகேசன் சம்பாத்தியத்தை அழிச்சுட்டதாலதானே... டாய்லெட் பிரஷை கையிலெடுக்க வேண்டிய நிலைக்கு போயிட்டாரு...

      நீக்கு
  15. கண்ணீர் சிந்த வைக்கும் கமல் நிலை!!!!

    நானும் இப்போதான் காணொளி பார்த்தேன்!

    பதிலளிநீக்கு
  16. காலையில் அந்த நீல நிற எழுத்துகளோடு மட்டுமே பதிவு என் கணினியில் வந்ததுகில்லர்ஜி காணொளி முதலில் புரியவில்லை...எதற்கு கில்லர்ஜி போட்டிருக்கிறார் என்று நினைத்தேன்.

    சொர்கம் என்பது நமக்கு சுத்தமான கழிவறைதான்...

    விடுங்க அவரு ஏதோ செஞ்சுட்டுப் போறாரு. இடையில வருவது கொஞ்சம் புரியலை ஜி...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இடையில் கமல்ஜி என்னையும் டாய்லெட் கழுவச் சொல்வது முறையா ?

      அதனால்ணான் நானும் இந்தக்கேள்வி கேட்க வேண்டிய சூழ்நிலை.

      நீக்கு
  17. தேவகோட்டைஜி, அன்பு வாழ்த்துகள். எல்லோரும் இந்த நிலைமையைக் கடந்து கொண்டோ,இல்லை கடந்தோ வந்திருக்கிறோம்.
    எனக்கும் இந்தக் கேள்வி எழுந்து கொண்டே இருக்கும். நம்மைச் சுற்றி எத்தனையோ எதிர்பார்ப்புகள்.
    என் வயதில் எனக்கு வேண்டியது நிம்மதி.
    ஆனால் தெரிந்தோ தெரியாமலோ செய்த தவறுகளுக்கு நான் ஜவாப்தாரி.
    வேறு எந்த விதத்திலும்
    இதற்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை.
    இதுவரை கடமைகள் செய்தாயிற்று. இனிமேலும் இறைவன் பாரமேற்றாமல் என்னை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிலைமையில் தான் இருக்கிறேன்.
    மனம் தளராதீர்கள்.
    இதுதான் வாழ்க்கை. வாழ்ந்துதான் தீர வேண்டும்.
    கமலுக்குப் பணம் வேண்டும் அதற்குண்டானதைச் செய்கிறார்.
    என்னவெல்லாமோ வதந்தி.
    இன்னோருவரைக் கெடுக்காமல் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா
      தங்களது விரிவான கருத்துரைக்கு நன்றி.

      //இன்னொருவரைக் கெடுக்காமல் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும்//

      அருமை அம்மா.

      நீக்கு
  18. வணக்கம் சகோதரரே

    நல்ல பதிவு.வாழ்வில் ஒவ்வொரு ஜீவனும் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப வாழ்ந்ததாக வேண்டிய கட்டாய நிலை, ஜீவன் தோன்றியதிலிருந்து தொடர்ந்து உருவாக்கப்பட்டவைதானே.!எனினும் நாம் நல்லதையே நினைத்தாலும், தொடர்ந்து போராட்டமாக துன்பங்கள் வரும் சமயம் ஏன் இப்படி என்ற சிந்தனை வந்து போகிறது. (சமயத்தில் போகாமலும்,நின்று விடுகிறது. அது வேறு விஷயம்.) எனக்கும் இது அடிக்கடி தோன்றும் எண்ணங்கள்தான்.எது எப்படியாயினும் வாழும் வரை வாழ்ந்துதானே ஆக வேண்டும். இந்த மாதிரி பகிர்ந்து கொள்ளும் போது மனது கொஞ்ச நேரத்திற்காவது துக்கங்களை தூர வைக்கும். உண்மைதான்.! தங்கள் பிரச்சனைகள் முற்றிலும் குறைந்து நல்ல நிம்மதியை தர அந்த ஆண்டவனை நானும் வேண்டிக் கொள்கிறேன். நமக்காக நாம் மட்டும் அல்லாது மற்றவர்களும் வேண்டும் போது நம் பிரச்சனைகள் ஆண்டவன் முன் கண்டிப்பாக பரிசீலிக்கப்படும் என நம்புகிறேன்.

    காணோளி நன்றாக உள்ளது. அதைப்பற்றி கருத்துரைகளும் சற்று விபரமளித்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளி என திருத்தி படிக்கவும். கைபேசியில் தட்டச்சு செய்யும் போது தவறுகள் நிறைய வருகின்றன. நன்றி.

      நீக்கு
    2. வருக சகோ தங்களது அலசல் கருத்துரை கண்டு மகிழ்ச்சி

      தங்களது பிரார்த்தனைகளுக்கும் நன்றி

      நீக்கு
  19. நல்லா அடிச்சிப் புரட்டிக் காயப்படுத்தி....

    இல்லையில்லை...

    நல்லா அடிச்சித் தொவைச்சி காயப்போட்டு இருக்கீங்க!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி மிக்க நன்றி தங்களின் வருகைக்கு...

      நீக்கு
  20. //பிறகு வாழ்வில் சுவாரஸ்யம் இருக்காது...//

    சுவாரஸ்யம் யாருக்கு?

    மனிதன் உட்பட உயிர்களுக்கு என்றால் சரி. விருப்பு வெறுப்பற்ற கடவுளுக்கு இது தேவையா?

    நமக்குள்ள கஷ்டங்களைப் போக்கிகொள்ள அல்லது குறைத்துக்கொள்ள நாமே முயற்சி செய்வோம். முடியாவிட்டால் தாங்கிக்கொள்ளப் பழகுவோம்[வாழ்நாள் வெகு அற்பம்].

    மன்னியுங்கள் கில்லர்ஜி. எப்படிப் படைத்தார், எதற்குப் படைத்தார் என்பதெல்லாம் புரியாத நிலையில் நம் மக்கள் தொட்டதுக்கெல்லாம் கடவுளை முன்னிறுத்துவது எனக்குத் தீராத மன எரிச்சலைத் தருகிறது.

    மிகுந்த தயக்கத்துடன்தான் இந்தக் கருத்துரையைப் பதிவு செய்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுவாரஸ்யம் யாருக்கு ?
      மனிதர்களுக்குதான் ஏற்றதாழ்வு, நல்லவன், கெட்டவனாக இருக்கும்போதுதான் வாழ்க்கையை அலசிப்பார்க்க இயலுகிறது.

      கடவுள் விடயம் தீர்வுக்கு வர இன்னும் மாமாங்கங்கள் கடந்தாலும் தீராது நண்பரே...

      மன்னிப்பு இந்தோனிஷியா மொழியில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை. ஆகவே அவசியமே இல்லை.

      தங்களது கருத்தை பகிர்வதற்கு தயக்கமே வேண்டாம்.

      வெங்கடாசலம் ஐயா பதிவின் இறுதி பகுதி தாங்கள் வாசிக்கவில்லையே...

      நீக்கு
  21. வீடியோ என்பது காண்பதற்கும்[ஒளி] கேட்பதற்கும்[ஒலி] உரியது. எனவே, ‘காணொலி’ என்பதே பொருத்தமானது. தினமணி போன்ற இதழ்கள் ‘காணொலி’ என்று எழுதுவது இதனால்தான் என்று நினைக்கிறேன். பதிவுலக நண்பர்களின் கருத்து என்னவோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரும்பாலும் காணொளிதான் எழுதி வந்தார்கள்.

      சமீப காலமாக நானும் இந்த காணொலி வார்த்தையை பார்க்கத்தான் செய்கிறேன்.

      இதன் பின்னணியில் பிஜேபி இருக்கலாம் என்ற ஐயம் எனக்கு உண்டு.

      நீக்கு
    2. இஃகி,இஃகி,இஃகி!

      நீக்கு
  22. எனக்கு இதுதாங்கோ தோனுது..பாவம் செய்து செத்தவன் உடலும் பாவமே செய்யாம செத்தவன் உடலும் தீ ய்யில வச்சு எரிச்சா ரெண்டு உடலும் சாம்பலாகத்தான் ஆகுமுங்கோ....

    பதிலளிநீக்கு
  23. தேவக்கோட்டைகாரருக்கு எல்லாம் நலமாகுக!

    பதிலளிநீக்கு
  24. தேவகோட்டையாருக்கு நல்லதே நடக்கும்

    பதிலளிநீக்கு
  25. ஜென்ம பாவம் அல்லது முற்பிறவியில் செய்த பாவத்தினால்தான் ஒருவன் வாழ்நாள் முழுவதும் துன்பத்தையே அனுபவிக்கிறானோ என்ற சந்தேகம் எனக்கும் பலமுறை எழுந்துள்ளது. ஆனால் ஒருவன் அனுபவிக்கும் இன்பத்திற்கும் துன்பத்திற்கும் அவன் இந்த பிறவியில் செய்பவைகளே காரணம் என்பதுதான் நான் கண்டறிந்த உண்மை. ஒருவேளை சில exceptions இருக்கக் கூடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா நீண்ட (நான்கு வருட) இடைவெளிக்குப்பிறகு தங்களது வருகை கண்டு மகிழ்ச்சி.

      தங்களது கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி எனது நினைவு தெரிந்த அகவை முதல் நான் பாவம் செய்யவில்லை என்பது எனது ஆணித்தரமான நம்பிக்கை ஐயா.

      நீக்கு
  26. ‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’ என்பதை ஐயன் வள்ளுவர்
    “பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
    பிற்பகல் தாமே வரும்.”
    என்று சொல்லியிருக்கிறாரே. எனவே எப்போது யாருக்கு இன்னல் செய்தோம் என்று ஆராய்வதை விட்டுவிட்டு நல்லதையே நினைப்போம். நல்லதையே நினைப்போம்.

    தேவக்கோட்டையார் எந்த பாவமும் செய்யவில்லை.அவர் செய்த நல்லவைகள் பிறருக்கு நல்லவைகளாக தெரியாமல் இருக்கலாம். அதனால் இடர்பாடுகள் வந்திருக்கலாம். எனவே நல்லது நடக்கும் என காத்திருங்கள்.

    காணொளி(லி)யைப் பார்த்தேன். நண்பர் வலைச்சித்தர் திரு திண்டுக்கல்லார் சரியாக சொல்லிவிட்டார். அதற்கு மேல் என்ன சொல்ல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது விரிவான கருத்துரைக்கும், காணொளியை கண்டு அதனைக் குறித்தும் சொன்னமைக்கு நன்றி.

      நீக்கு