தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், பிப்ரவரி 22, 2022

ஜாதிகள் உள்ளதடி டாப்பா 2

முந்தைய பகுதியை படிக்க  என்னை  சொடுக்குக..

எனது அலுவலகத்தில் நடந்த அனுபவம் ஒன்று.
 
அல்ஜாஆஃபி ஜாதியைச் சேர்ந்த துணை மேலாளர் என்னிடமிருந்து ஓய்வூதியம் அனுப்ப பெறப்பட்ட முப்பது கோப்புகளை மற்ற ஊழியர்களிடம் வேலைக்கு பிரித்து கொடுக்கின்றாள் அல்காத்ரி எட்டு, அல்ஹமாதி ஐந்து, அல்ருமேத்தி இரண்டு, மற்றவள் பதினைந்து, என்றவாறு சரி மற்றவள் யார் ?

 
அவள் பாலஸ்தீனியோ, அல்லது எஜிப்தியோ என்று தீர்மானித்துக் கொள்ளுங்கள் இதற்கு காரணமென்ன ? இந்த நாட்டுக்காரிக்கு ஒரு அமைப்பு பிழைக்க வந்த அடுத்த நாட்டுக்காரர்களுக்கு வேறு அமைப்பு சரி ஒரே நாட்டைச் சேர்ந்தவர்கள்தானே அல்காத்ரி, அல்ஹமாதி, அல்ருமேத்தி அவர்களுக்கு எதற்காக வேலை கொடுப்பதில் வித்தியாசம் அவர்களில் அல்ருமேத்தி உயர்ந்த ஜாதிக்காரி அல்லவா.
 
இங்கு படிப்பறிவின் காரணமாக வேலைகள் கொடுக்கப்பட்டாலும் ஜாதி ரீதியாக சம்பளங்கள் தீர்மானிக்கப்படுகின்றன் ஆம் அல்ருமேத்தி ஜாதிக்காரி உயர்ந்தவள், கோபக்காரி, அவளுக்கு வேலை கூடுதல் கொடுத்தால் கோப்புகளை வேலை கொடுத்த அல்ஜாஆஃபி முகத்தில் தூக்கி வீசி விட்டா(ள்)ல் ? கோப்புகள் கிழிந்து விடுமே... ஆகவேதான் அவளுக்கு இரண்டு கோப்புகள் இதுவே கூடுதல் அல்லவோ...
 
இதில் மற்றொரு வேடிக்கை தெரியுமா ?
எட்டு கோப்புகள் பெற்ற அல்காத்ரி சீக்கிரம் வேலையை முடித்து கோப்புகளை என்னிடம் சேர்த்து விடுவாள். ஆனால் இரண்டு கோப்புகள் பெற்ற அல்ருமேத்தி எப்பொழுது வேலையை முடிப்பாள் என்பது அபுதாபியை ஆளும் அகிலாண்டேஷ்வரிக்கே வெளிச்சம்.
 
நான் பலமுறை வேண்டுமென்றே கேட்பேன் அல்காத்ரி ஜாதிக்காரியிடம்.
அவளுக்கு மட்டும் கொஞ்சம் உனக்கு அதிகம் ஏன் ?
 
அவள் அல்ருமேத்தி உயர்ந்தவள் வில்லங்கமானவள்.
(ஊவா கபீர் அல்ருமேத்தி முஷ்கில்)
 
இத்தனைக்கும் அவளைவிட இவளுக்கு சம்பளமும் குறைவுதான் அதேநேரம் அனைவருமே அழகில் ஒருவருக்கொருவர் தாழ்ந்தவர்கள் அல்ல ! ரதிகளே எல்லாம் சரி பாலஸ்தீனி, எஜிப்தி, சூடானி இவர்களுக்கே இத்தனை கோப்புகள் என்றால் பிழைக்கப்போன இந்தியன் கில்லர்ஜிக்கு எத்தனை கோப்புகள் என்பதுதானே உங்களது கேள்வி ?
 
மொத்த கோப்புகள் 1 ½  லட்சமும் என்னிடம்தானே உள்ளது கணினியில் கேட்காமலே எந்தக்கோப்பு எவ(ளி)னிடம் என்பதை எனது மூளையின் மூலையில் இருக்கும் கணினி நொடியில் சொல்லி விடும் இப்படித்தானே இவங்களோடு பதினேழு வருசமாக குப்பை கொகூட்டினேன்.
 
திருமணங்களும் அங்கு ஜாதியை வைத்தே தீர்மானிக்கப்படுகின்றன அதேநேரம் பிறநாட்டு பெண்களை அரேபியர்கள் திருமணம் செய்து கொள்கின்றார்களே... எப்படி ? அது வேறுவகை அந்த வகையை மற்றொரு பதிவில் பிறகு காண்போம்.
 
அதாவது காதலுக்கு கண் இல்லை என்று நமது முன்னோர்கள் சொல்லி வைத்த வசனத்தை நம்பிய நம்மவர்கள் கண்டதும் காதல் என்று காதல் கொண்டு, பிறகு இவர்கள், அவர்களை கொன்று விடுவது நடந்து கொண்டுதானே இருக்கின்றது இருப்பினும் இவனை மதமோ, ஜாதியோ, கலாச்சாரங்களோ, ஏற்றத்தாழ்வுகளோ கட்டுப்படுத்துவதில்லை ஆகவே இவைகள் தொடர்கின்றன இல்லையா ?
 
இதேபோல்தான் அங்கும் என்னவொன்று இங்கு காதலால் மோதலாகி உயிர் அழிவுகள் உண்டு, அங்கு காதல்கள் குறைவு திருமணங்கள் கூடுதல் உயிர் அழிவுகள் இல்லை.
 
பெரும்பாலும் மேற்கண்ட ஜாதியைப் பற்றிய இந்த விடயம் பல வருடம் அரபு நாட்டில் வேலை செய்தவர்களுக்கு தெரிவதில்லை. தெரிந்த ஒரு பிரிவினரும் இதை ஏற்பதற்கு சம்மதிப்பதில்லை வேறு சில காரணத்திற்காக மேலும் இந்த ஜாதிப்பிரிவை அது ஜாதியில்லை குடும்பபெயர் என்றும் ஆங்கிலத்தில் Family Name என்றும் சில விபரமானவர்கள் விவரிப்பார்கள் அந்தக் காரணங்கள் வேண்டாமே...
 
அப்படி சம்மதிக்காதவர்களிடம் ஒருயொரு கேள்வி
உமது விருப்பம் அல்நஹ்யான் ஜாதியிலிருந்து... அல்ஜாஆஃபிக்கோ, அல்லது அல்காத்ரி ஜாதியிலிருந்து... அல்ஹமாதிக்கோ, அல்லது அல்முல்லா ஜாதியிலிருந்து... அல்நஹ்யானுக்கோ, இங்கிருந்து அங்கிட்டோ, அங்கிருந்து எங்கிட்டோ திருமணம் செய்து கொள்ளச் சொல்லுங்கள் பார்க்கலாம் ?
 
குறிப்பு - நட்பூக்களே... இவையெல்லாம் எனக்கு தெரிந்த விடயமெனினும் பதிவு எழுத தோன்றிய காரணத்தால் நான் இந்தியாவுக்கு நிரந்தரமாக வரும் கடைசி தருணத்தில் ஆதாரப்பூர்வமாக பல ஆண்களிடமும், பெண்களிடமும் கலந்து பேசி விபரமறிந்து வந்தேன் கில்லர்ஜி
 

Chivas Regal சிவசம்போ-
நாமெல்லாம் நூல் விட முடியாதோ....
 
சிவாதாமஸ்அலி-
ஏன் விட்டுத்தான் பாரேன்...

37 கருத்துகள்:

  1. ஒரே ஒரு File ல் ஒரே ஒரு கையெழுத்து.. அதற்கே மேல் மூச்சு.. கீழ் மூச்சு.. அன்றைய சம்பளம் சரியாய்ப் போச்சு...

    அழகாக சொல்லியிருக்கின்றீர்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி தங்களது வருகைக்கு நன்றி.

      நீக்கு
  2. ஜாதியில்லாத பூமி மீதி ஏதும் இருந்தால் சொல்லுங்கள்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம்ஜி உகாண்டா சென்று வந்த பிறகு சொல்கிறேன்.

      நீக்கு
  3. ஒரே தலை சுத்தல். நல்ல விபரமாக எழுதி வருகிறீர்கள். சுவாரசியமாக இருந்தாலும் மனதின் ஒரு மூலையில் வருத்தமும் ஏற்படுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஒரே தலை சுத்தல்//
      எழுதியதில் ஏதும் குழப்பமா ?

      விபரமாக எழுதி வருவதாகவும் செல்கிறீர்கள் ?

      நீக்கு
    2. இந்த ஜாதிப்பெயர்களைச் சொன்னேன். ஒரே குழப்பமும் தலை சுத்தலுமா இருக்கு. இதில் எப்படி உயர் ஜாதி/கீழ் ஜாதினு கண்டு பிடிக்கிறீங்களோ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

      நீக்கு
    3. ஹா.. ஹா.. இதெல்லாம் எனது கற்பனை ஜாதிகள்... இதில் கீழேது ? மேலேது ?

      நீக்கு
    4. சரியாப் போச்சு போங்க! போட்டீங்களே ஒரு போடு! நான் எல்லாம் உண்மைனு நினைச்சுட்டு இருந்தேனே! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      நீக்கு
    5. மன்னிக்கவும் கடந்த பதிவில் சொன்ன தமிழ் ஜாதிகள்தான் எனது கற்பனை. அரபு ஜாதிகள் உண்மையானவை...

      நீக்கு
    6. ஙேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ

      நீக்கு
  4. அன்பின் தேவகோட்டைஜி,
    நலமுடன் இருங்கள்.

    இத்தனை கொடுமைகளா அங்கே.
    பாவம் அந்த மாற்று சாதிப் பெண்கள்.
    உங்கள் சாமர்த்தியத்தால் நல்ல படியாக
    வந்துவிட்டீர்கள்.



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

      முதல் பதிவு படித்து விட்டீர்களா ?

      நீக்கு
  5. மனிதனை மனிதனாக பார்க்கும் காலம் என்று வருமோ...

    பதிலளிநீக்கு
  6. வலை சித்தரின் கருத்திற்கு நானும் ஒத்து போகிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது வருகைக்கு நன்றி.

      நீக்கு
  7. இதை எழுதுவதற்குக்கூட ஒரு துணிவு வேண்டும் என்பது என் கருத்து.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் வருகைக்கு நன்றி நான் உண்மையை மட்டுமே எழுதுகிறேன்.

      நீக்கு
  8. ஜாதிகள் இல்லையடி பாப்பா.... என்று சொல்வதற்கு இன்னும் எத்தனை காலம் காத்திருக்க வேண்டுமோ....

    தகவல்கள் அறிந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

      நீக்கு
  9. ஜாதிப் பெயர்கள் வேண்டுமானாலும் கற்பனையாக இருக்கலாம், எழுதியிருக்கும் விஷயம் உண்மை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மேடம் கடந்த பதிவில் சொன்ன தமிழ் ஜாதிகள் தான் கற்பனை.

      நீக்கு
  10. பட்டாணி,தக்கணி,லப்பை, இதெல்லாம் ஜாதி பிரிவினைதானா? நண்பரே!

    பதிலளிநீக்கு
  11. பதிவு மூலம் நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.
    ஒரு பாடலில் வரும் ஜாதிகள் இல்லாத பூமி வேண்டும் என்று.
    அது போல மேலோர், கீழோர் என்றும் , உயர்ந்தவ்ர, தாழ்ந்தவர் என்றும் இல்லாமல் இருந்தால் நாடு அமைதி பூங்காவாக இருக்கும்.

    உண்மைகளை சொல்லும் மன தைரியம் வாழ்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

      நீக்கு
  12. கில்லர்ஜி, முதல்ல ஜாதிப் பெயர்களே வாயில் நுழையவில்லை அதை விடுங்க...அவங்களுக்குள்ள பார்க்கறாங்க ஓகே நம்மவர்களை அதாவது வெளிநாட்டவர்களுக்கு அவர்கள் ஜாதி கேட்பதில்லையோ? ஜாதிகள் பெயர்கள் வாயில் நுழையவில்லை என்றாலும் அவர்களுக்குள்ளும் பார்த்து திருமணம், மற்றபடி காதல் என்றால் அழிவு ஓரளவு தெரியும். ஒரு படம் டக்கென்று பெயர் நினைவுக்கு வரவில்லை. இன்டெர்நாஷனல் ஃபில்ம் ஃபெஸ்டிவல் சென்னையில் ந்டந்தப்ப பார்த்தது...அதில் நிறைய தெரிந்தது.

    என்னவோ போங்க.

    உங்கள் நினைவுத்திறன் வியப்பு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //வெளிநாட்டவர்களுக்கு அவர்கள் ஜாதி கேட்பதில்லையோ ?//

      ஹா.. ஹா.. உங்கள் கணக்குப்படி வாயில் நுழையாத அந்த ஜாதி வெளிநாடுகளில் கிடைக்கிறதா ?

      அது அரபு நாட்டில் மட்டுமே விளைகிறது.

      நீக்கு
  13. நிறைய விஷயங்கள் அறிந்தோம்.

    எங்கும் எதிலும் ...... கடவுளே வந்து நின்றாலும் ஜாதியை நிறுத்த முடியாது .

    பதிலளிநீக்கு
  14. வியப்பைத் தரும் செய்திகள்
    அதுவும் சாதிக்கு ஏற்ற ஊதியம்
    பெருவியப்பு நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

      நீக்கு
  15. அவர்கள் திருமணங்களில் எந்தளவு சாதி முக்கியத்துவம் பெறுகிறது என்பதை இன்னும் விரிவாக எழுதுங்கள் கில்லர்ஜி.. புது தகவல் .. சாதி பெயர்களுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ முதல் பகுதி படித்தீர்களா ?

      நீக்கு
  16. சாதிக்கேற்றவாறு பணி பங்கீடா? நினைக்கவே வியப்பாய் இருக்கிறது. இதுவரை தெரியாத தகவல்களை விரிவாகத் தந்தமைக்கு நன்றி! இது போன்ற தகவல்களை மேலும் தாருங்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே வருகைக்கு நன்றி. தொடர்ந்து எழுதி வருகிறேன்.

      நீக்கு