தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், மே 05, 2022

சர்வதேச உதவி

ட்பூக்களே... வணக்கம் நாம் மாரியம்மன், காளியம்மன், முனியய்யா கோயில்களில் பக்தர்கள் பூக்குழி (தீமிதித்தல்) இறங்குவதை பார்த்து இருக்கிறோம். அதில் பல நூறு நபர்கள் நடப்பார்கள் அதாவது ஓடுவார்கள் என்பதே உண்மை. காரணம் தீயின் உக்கிரம் மேலும் இத்திருவிழாக்கள் நிகழ்வது கத்திரி வெயில் காலமாகத்தான் இருக்கும்.
 
தொடங்கும் இடத்தில் சிறிய பள்ளம் தோண்டி தண்ணீர் ஊற்றி வைக்கோலை போட்டு இருப்பார்கள் முதலில் நடப்பவர் சற்று சிரமத்தோடு ஓடுவார் அதன் பின்னால் வருபவர்கள் எல்லோருமே அவர் மிதித்த அதே தடத்தில் பாதத்தை வைத்து கடந்து விடுவார்கள். இப்படித்தான் வைதீக முறைப்படி அபுதாபி, துபாய், பெர்லின், பாரிஸ், கோலாலம்பூர், கொழும்பு, காட்மண்டு போன்ற இடங்களில் நடக்கிறது நானும் கண்டு இருக்கிறேன். மக்களும் அந்த பூக்குழியை சுற்றி நெருக்கமாகவே நிற்பார்கள், மேலும் சிலர் பக்கத்தில் வீடுகள் இருந்தால் பால்கனியில் நின்று தரிசிப்பார்கள்.
 
கீழ் காணும் காணொளியில் பாருங்கள் எப்படி நிகழ்கிறது என்று இந்த சீரியல்காரங்கே நம்ம வீட்டு பொம்மனாட்டிகளை இவ்வளவு தூரம் இளிச்சவாய்த்தனமாக நினைத்துக் கொண்டு நாடகம் எடுப்பாய்ங்கே என்று நான் கனவில்கூட நினைக்கவில்லை. பூக்குழி இறங்கும்போது பக்தர்கள் தங்களது உடையை கணுக்காலுக்கு மேலே தூக்கித்தான் கட்டி இருப்பார்கள் அப்பொழுதுதான் உடையில் தீயின் கனல்கள் பட்டு கருகி விடாது என்ற உயர்ந்த உரத்த சிந்தனை.
 
இங்கு என்னவென்றால் இந்த பயலும், சிறுக்கியும் பாதம் தழைய, தழைய மஞ்ச வேஷ்டி, ஆனந்தக்கலர் கத்திரிப்பூ ஜரிகை போட்ட பட்டுச்சேலை, மேட்ஜா ஜாக்கெட் உடுத்திக்கிட்டு இறங்குறாங்க.. இதில் அந்த சிறுக்கிக்கு மயக்கம் வர, அந்த பய அவளை தாங்கி பிடித்துக் கொண்டு வசனகர்த்தா எழுதிக்கொடுத்த டயலாக்கை பேசிக்கிட்டு நிற்கிறான். சரி பூசாரியாவது இருந்தும் உதவவில்லை கொஞ்சம் தூரமாக நிற்கிற உறவுக்காரங்க உடனே வந்து உதவி செய்யிறாங்களா ? அதுவும் இல்லை.
 
ஒருவேளை தீயில் கிடந்து சாகட்டும் அடுத்த சீரியல்ல நமக்கு கசாநாயகன், கசாநாயகி சான்ஸ் கிடைக்கும்னு நினைக்கிறாங்களோ... என்னவோ.... இதில் இன்னொரு வேடிக்கை அங்கு இரண்டு பெண்கள் இதனை ரசிக்கிறார்கள். அதாவது இவர்கள் வில்லிகளாம். போங்கடா டேய்... ஏண்டா வயித்தெறிச்சலை கிளப்புறீங்க... இந்த சமூகத்தை திருத்த முயற்சி பண்ணா விட்டாலும் பரவாயில்லைடா மேலும் கூமுட்டைகள் ஆக்கிடாதீங்கடா... இப்படி எல்லாம் சீரியல் எடுக்கச் சொல்லி எங்கிருந்துடா பணம் வருது ? உண்மையிலேயே இதற்கு பின்னால் அரசியல் அல்லது மதத்தை சர்வநாசம் செய்வதற்கு ஏதாவது சர்வதேச உதவி இருக்குதாடா ?
 

சிவாதாமஸ்அலி-
பூக்குழியை சீரியல் லைட் செட்டிங்ல போடாமல் காட்டுக்கருவேல் மரத்தை போட்டு எரிக்க வச்சு இறங்கச் சொன்னால் தெரியும் உண்மை.
 
சாம்பசிவம்-
உண்மை என்ன தெரியப்போகுது ஒரு சீரியலுக்கு நாலுபேரு சாவாங்கே... அடுத்த சீரியலுக்கு புதுச்சரக்கு வரும்.
 
Chivas Regal சிவசம்போ-
நம்ம பொம்பளைங்க என்னைக்கு டிவி பொட்டியை மூட்டை கட்டி வக்கிறாங்களோ அன்னைக்குத்தான் நாடு திருந்தும்.

காணொளி

37 கருத்துகள்:

  1. நிஜம் போலவே காட்சி எடுத்திருக்கிறார்கள்!  இதில் தீ வேறு எரிகிறது.  சுற்றி இருப்பவர்கள் உதவ கை நீட்டாமலும், பூசாரி விழிப்பதும், வில்லி சிரிப்பதும்...  டிபிகல் தமிழ் சீரியல்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி மக்களை எவ்வளவு தூரம் இழிவாக நினைக்குறாங்கே என்று கோபம்தான் வருகிறது.

      நீக்கு
  2. சின்ன வயதிலிருந்தே நான் இந்தத் தீமிதித் திருவிழா பார்த்ததில்லை.  பார்க்கும் துணிவுவ வந்ததில்லை.  எங்கள் வீட்டுக்கருகே நடக்கும்.  நீங்கள் சொல்லியிருப்பது போல நல்ல வெயில் காலத்தில்தான் நடக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி

      நீக்கு
  3. திரைப்படங்கள், சீரியல்களுக்கே உரித்தான காட்சி. செட்டப் ஆகத்தான் இருக்கும்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  4. ஹாஹாஹா இது சீரியல். கில்லர்ஜி இதற்கெல்லாம் கோபப் படாதீங்க. நிஜமாகவே கோபப்படுவதற்கு எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கிறதே. இது சீரியல் இப்படித்தான் இருக்கும். இதை எல்லாம் நாம் ஒன்றிப் பார்க்காமல் இருப்பது நல்லது ஜி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நானெங்க பார்த்தேன் யூடியூப்பில் சும்மா போனால நம்மை உசுப்பேற்றவே இதை மட்டும் போடுறாங்கே....

      நீக்கு
  5. கில்லர்ஜி நான் இதுவரை இப்படியான நிகழ்வை நேரில் பார்த்ததில்லை. ஏனோ மனம் உடன்படாத ஏற்க முடியாத பக்தி முறைகள் இது போல உடம்பில் அம்பு குத்திக் கொளல் ஊசி குத்திக் கொள்ளல் போன்றவையும் பார்க்கும் மனமில்லை கில்லர்ஜி. ஆனால் அவர்களை நான் குறை சொல்வதில்லை சொல்லவும் மாட்டேன். ஒவ்வொருவரின் தனிப்பட்ட விஷயங்கள். இது ஒரு சில மக்கள் சமூகத்தின் பக்தி முறைகள்.
    ஆனால் சிறு வயதிலிருந்தே என் மனதிற்கு ஏற்பில்லாதவை இது போன்றவை இது என் தனிப்பட்டக் கருத்து.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் இதில் உடன்பாடு இல்லை கடவுள் சக்தி உண்டு என்ற நம்பிக்கை மட்டும் உண்டு.

      நீக்கு
  6. கூ முட்டை நாதாரிகள்..
    நெருப்பின் மீது (!) பாயை விரித்துப் போட்டு பால் குடித்துப் பழத்தைத் தின்று பருவ நாடகம் ஆடுவது போல் காட்ட வில்லையே.. என்று சந்தோசப்பட்டுக் கொள்ளுங்கள்... இதனுள்ளே எல்லாம் மாற்றுக் கருத்துடையவர்களின் சொறி பிடித்த கை வண்ணம் உள்ளது என்பதை மட்டும் மறந்து விடாதீர்கள்.. கூடுமான வரைக்கும் ஹிந்துக்கள் சிலரது பழக்க வழக்கங்களை கேவலப் படுத்துவதே இவர்களது நோக்கம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி மதநல்லிணக்கத்தை சீரழிக்கும் கும்பல்களின் வேலை.

      நீக்கு
  7. சர்வதேச நிதி உதவி!...
    தங்களது சந்தேகம் சரியாக
    இருந்தாலும் இருக்கும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயமாக இதன் பின்னணியில் ஏதோவொரு கூட்டு சதி உண்டு ஜி

      நீக்கு
  8. நாளைக்கே கூட முல்லர் ஜி (கில்லர் ஜி) இவ்வளோ பெரிய மீஜை வைத்திருப்பது எதற்கு என்று விசாரிப்பதற்காக உலக அமைதிக் குழு அங்கே வந்தாலும் வரலாம்!..

    பதிலளிநீக்கு
  9. இதையெல்லாம் பார்த்துக் கொண்டா பொழுதைப் போக்குகின்றீர்கள்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை ஜி பதிவெழுத வழி கிடைக்கிறது அவ்வளவே...

      நீக்கு
  10. துபாயில் பார்த்திருக்கிறீர்களா? ஆச்சரியமாக இருக்கிறது. காவல் துறை இதற்கெல்லாம் அனுமதி வழங்கி இருக்கிறதா? சாதாரணமாய் தீபாவளி சமயத்தில் பட்டாசு வெடிப்பதற்கே ஏகப்பட்ட சட்ட திட்டங்கள் இருக்கின்றனவே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ அங்கெல்லாம் கலாச்சாரத்துறையில், தனிப்பிரிவாக தணிக்கை குழுவும் இருக்கிறது.

      அவர்கள் மதபோதனைகளை அவமதிப்பதை ஏற்பதில்லை.

      இங்கு தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்.

      நீக்கு
  11. காணொளி பார்த்தேன், இது போல நெருப்பு எரியாது, தென்னைமட்டையால் எரியும் கொழுந்தை அணைத்து சம படுத்துவார்கள் . சாம்பல் பூத்த நெருப்பாய்தான் இருக்கும் . மிதித்து ஓடி போவார்கள், சிலர் வேகமாய் நடந்து போவார்கள். நான் மாயவரத்தில் மற்றும் சில ஊர்களில் பார்த்து இருக்கிறேன். வாழை மட்டையை ரெடியாக வைத்து இருப்பார்கள். சிலருக்கு பாதம் நெருப்பால் மிகவும் எரிந்தால் வாழை மட்டையை பிழிவார்கள் பாதங்களில். புடவையை தூக்கி கட்டி இருப்பார்கள். குழந்தைகளை தூக்கி கொண்டு ஓடுவார்கள், தடுக்கி விழுந்தால் என்னாவது?

    நாடகத்தில் , சினிமாவில் எல்லாம் மிகையாக காட்டுவது வழக்கம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சகோ நடைமுறையில் இல்லாத ஒன்றை திரைப்படத்திலும், சீரியல்களிலும் சித்தரிப்பதே இவர்களுக்கு வாடிக்கையாகி விட்டது.

      நீக்கு
  12. இவர்களுக்கு வேறு வேலையில்லை ஜி. பார்க்காமல் இருந்து விடுவதே நல்லது. இணையத்தில் உலா வரும்போதும் இந்த மாதிரி காட்சிகளை பார்ப்பதில்லை. பயணம், பயனுள்ள தகவல்கள் என்று பார்ப்பது மட்டுமே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி நானும் பார்ப்பதில்லை எனக்கு வீட்டில் தொலைக்காட்சியே இல்லை. உறவினர் வீட்டிற்கு போனால் சற்றே பார்க்கும் சூழலில் நமக்கு பதிவு எழுத இவ்வளவு சங்கதிகள் கிடைக்கிறது.

      நீக்கு
  13. காணொளியில் அந்த பெண் மஞ்சள் கலர் காட்டன் சேலை அல்லவா கட்டி இருக்கிறாள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏதோ உவமைக்காக எழுதினேன் இவைகளை கூர்ந்து கவனித்து விட்டீர்களே... ஹா... ஹா...ஹா...

      நீக்கு
  14. ஓ...! இப்படி எல்லாம் உண்டா...?

    புராண புரட்டுகளின் எச்சங்கள்...

    பதிலளிநீக்கு
  15. தீயில்லாமலயே நம்மை எரிய வைக்கும் தொலைக்காட்சி.
    உலகத் தாயை அவமானப் படுத்துவது போல ஒரு காட்சி.
    என்ன ஒரு அபத்தம்.:(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா இது அபத்தமான காட்சிகள்தான்...

      நீக்கு
  16. வணக்கம் சகோதரரே

    பதிவும் காணொளியும் பார்த்தேன். தங்கள் எண்ணங்களை அழகாக விவரித்திருக்கிறீர்கள். சீரியல்
    மற்றும் சினிமாவில் இப்படி எல்லாமே அதிகமாக மிகைப்படுத்திதான் காண்ப்பிப்பார்கள். சாதாரண உலக மக்களின் பக்தியை இப்படி காண்பிக்க வேண்டாம். என்ன செய்வது? நானும் இம்மாதிரி நிகழ்வுகளை நேரில் கூட கண்டதில்லை. கோவில் திருவிழாக்களாக டிவி சேனல்களில் காட்டும் போதே பார்ப்பதற்கு கஷ்டமாக இருக்கும். ஆனால் இது அவரவர்களின் பக்தியின் வெளிப்பாடு என மனதை தேற்றிக் கொள்வேன். . தங்களின் பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ வறம்பு மீறி மிகைப்படுத்தி விடுகிறார்கள் என்ன செய்வது ?

      நீக்கு
    2. தீ மிதி எங்க ஊரான பரவாக்கரையில் நேரில் பார்த்திருக்கேன். தீக்குழிக்கு வெளியே வரும் இடத்தில் இன்னொரு சின்னக் குழி வெட்டிப் பாலால் நிரப்பி வைத்திருந்தார்கள். தீமிதிப்பவர்கள் அதிலிருந்து இந்தக் குழிக்கு வந்து பாலில் காலை நனைத்துப் பின்னர் வெளியே வந்தார்கள். அவ்வப்போது சுத்தமான பாலால் குழியை நிரப்பிய வண்ணம் இருந்தனர். எங்க வீட்டில் இதெல்லாம் வழக்கம் இல்லை. ஆனாலும் என் இரண்டாவது நாத்தனார் வேண்டுதல் எனச் சொல்லித் தொண்ணூறுகளில் தீக்குழியில் இறங்கி உடலெங்கும் பலத்த தீக்காயம். நல்லவேளையாக ஊர்ப் பஞ்சாயத்துத் தலைவர் உதவி செய்து காரெல்லாம் கொடுத்துத் துணைக்கு ஆட்களையும் அனுப்பிக் கும்பகோணம் மருத்துவமனையில் சேர்த்துவிட்டு எங்களுக்குத் தகவல் கொடுத்தார். அப்புறம் நம்மவர் கிளம்பிப் போய்ப் பார்த்துக் கும்பகோணத்தில் இருந்து காரில் அழைத்து வந்தார். சென்னையில் இதற்கென்றே இருக்கும் ஓர் மருத்துவமனையில் சேர்த்து நாலைந்து அறுவை சிகிச்சைகள், தோலை வெட்டி ஒட்டுதல் எல்லாம் நடந்தது. ஆறு மாதம் ஆச்சு குணமாக/ :(

      நீக்கு
    3. உங்க காணொளி வரவே இல்லை. வழக்கம் போல். கருத்துக் கூடப் போக மாட்டேன்னு பிடிவாதம் பிடிச்சுட்டுப் பின்னர் அரை மனதாகப் போனது. :))))

      நீக்கு
    4. வருக சகோ தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

      இறைவன் தன்னை வருத்திக் கொண்டு இப்படி வணங்கச் சொல்லி இருக்கின்றாரா ? மக்களின் சிந்தனை ஏன் இப்படி செல்கிறது ?

      நீக்கு
  17. தாங்கள் செருப்பால் அடித்தாலும்...அவியளுக்கு வலிக்கவே வலிக்காது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு