தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, நவம்பர் 19, 2022

நான் TAMIL பேசுறேன்

 
லோ நான் தமிழ் பேசுறேன்...
நான் என்ன இங்கிலீஷ்லயா பேசுறேன் ?
? ? ?
 
ஹலோ நான் அன்பு பேசுறேன்...
நான் என்ன அன்பு இல்லாமலா பேசுறேன் ?
? ? ?
 
ஹலோ நான் தங்கம் பேசுறேன்...
நான் என்ன பித்தளையா பேசுறேன் ?
? ? ?
 
ஹலோ நான் ப்ரியா பேசுறேன்...
நான் என்ன பணத்துக்கா பேசுறேன் ?
? ? ?
 
ஹலோ நான் கோடீஸ்வரன் பேசுறேன்...
நான் என்ன பிச்சைக்காரனா பேசுறேன் ?
? ? ?
 
ஹலோ நான் ராஜா பேசுறேன்...
நான் என்ன சேவகனா பேசுறேன் ?
? ? ?
 
ஹலோ நான் ரோசய்யா பேசுறேன்...
நான் என்ன ரோசம் இல்லாமயா பேசுறேன் ?
? ? ?
 
ஹலோ நான் அரசன் பேசுறேன்...
நான் என்ன ஆண்டியா பேசுறேன் ?
? ? ?
 
ஹலோ நான் ஷோபா பேசுறேன்...
நான் என்ன நாற்காலியா பேசுறேன் ?
? ? ?
 
ஹலோ நான் நேரு பேசுறேன்...
நான் என்ன கோணலாவா பேசுறேன் ?
? ? ?
 
ஹலோ நான் முத்தையா பேசுறேன்...
நான் என்ன சொத்தையாவா பேசுறேன் ?
? ? ?
 
ஹலோ நான் அறிவழகன் பேசுறேன்...
நான் என்ன முட்டாளா பேசுறேன் ?
ஆமாடா நீ முட்டாள்தான்டா பேசுறே... மடப்பய மவனே ஏண்டா... யேன்..? ங்கொய்யாலே நீ மட்டும் நேர்ல மாட்டுனே சங்கே கடிச்சு கொதறி துப்பிடுவேன்...
? ? ?
 

சிவாதாமஸ்அலி-
பாவம்யா அந்தப்புள்ள போனைத் தூக்கி வீசிட்டு நடந்துட்டாளே... ரோசக்காரியா இருப்பாளோ...
 
Chivas Regal சிவசம்போ-
அறிவழகன் பொங்கி வெடிச்சிட்டானே...
 
காணொளி

Share this post with your FRIENDS…

26 கருத்துகள்:

 1. ஹாஹா! நல்லா இருக்குங்க உங்களோட அருமையான வம்புப் பதிவு. நான் என்னமோ என்னை மேயர் ப்ரியா பேசறதைத் தான் சொல்லி இருக்கீங்கனு ஓடோடி வந்தால்! இப்புடி ஏமாத்திப்புட்டீங்களே! :))))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க என்னை எதற்கு மேயரோடு மோத விடுறீங்க ?

   நீக்கு
 2. உங்க விளம்பரங்களாலே பதிவே படிக்கக் கஷ்டமாப் போச்சு. அதனால் அதை எல்லாம் நான் வரச்சே நிறுத்தச் சொல்லிட்டேன். :)))))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏதேதோ குழறுபடிகள் வருகிறது சரி செய்கிறேன்.

   நீக்கு
 3. ஹா..  ஹா..  ஹா...  கலக்கி விட்டீர்கள்.

  பதிலளிநீக்கு
 4. நன்றாக இருக்கிறது. ஹலோ நான் வெற்றி பேசறேன்... அப்போ நான் என்ன தோல்வியா பேசறேன்? கண்ணழகி பேசறேன்.. அப்போ நான் நொள்ளைக்கண்ணா? சாந்தி பேசறேன்.. நானென்ன அல்டாப்பா? பாக்கியம் பேசறேன்.. உதய சூரியன் பேசறேன்.... என்றெல்லாம் எழுதிக்கிட்டே போலாம். ஆமா... இந்தப் பிரச்சனை வேண்டாம்னுதான் சமஸ்கிரத்த்துல பேர் வச்சிக்கறாங்களோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தமிழரே நீங்கள் சொல்வது போலவும் இருக்கலாம்...

   நீக்கு
 5. காணொளிதான் இந்த பதிவை போட வைத்து இருக்கிறதோ!
  நல்லா இருக்கிறது, குதர்க்க பேச்சு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ ஆம் காணொளிதான் பதிவு எழுத வைத்தது.

   நீக்கு
 6. இது மாதிரி எடக்கு மடக்கு பதில் சொன்னா பேசுறவன் காண்டாயிடுவான்!

  பதிலளிநீக்கு
 7. வணக்கம் ஜி!

  எப்படி ஜி இப்படி எல்லாம் சிந்திக்கிறீங்க சாதாரண நடைமுறை வாழ்க்கையில் சந்திக்கும் உரையாடல்கள் அருமை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக பாவலரே தங்களது வருகைக்கு நன்றி

   நீக்கு
 8. ஏறுக்கு மாறாய்ப் பேசினாலும், அவங்க நிலைமை அப்போ என்னவோ

  பதிலளிநீக்கு
 9. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. ஹலோ என்றதும், இனி எப்படி ஆரம்பிப்பது என கொஞ்சம் ஐயமாக உள்ளது. ஹா ஹா ஹா. இனி ஃபோன் பேசும் போதெல்லாம் இந்தப்பதிவுதான் நினைவுக்கு வரும். படங்களும், காணொளியும் நன்றாக உள்ளது. பதிவை மிகவும் ரசித்தேன்.

  நேற்று முழுவதும் நாங்கள் வெளியில் சென்று விட்டதால் பதிவுலகிற்கு வர இயலவில்லை. அதனால்தான் தாமதமாக இன்று வந்துள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது வருகைக்கும், விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.

   நீக்கு
 10. ஹலோ நான் வட்ட செயலாளர் "வண்டு முருகன்" பேசுறேன்..

  நான் சதுர செயலாளர் "சந்துமுருகன்" பேசுறேன்...

  ஹலோ நான் பேங்க் மேனேஜர் "வடக்கன்" பேசுறேன்...

  பேங்க் மேனேஜரா? நீங்க எந்த பேங்க், எந்த பிராஞ்ச் மேனேஜர்?

  ஸ்டேட் பேங்க் ஆப் கோயம்பேடு. o.k.. கையில ATM கார்டு வச்சிருக்கீங்களா சாரே...

  எதுக்கு கேக்குறீங்க?

  அதுல உள்ள 16 டிஜிட் நம்பர சொல்லுங்க... அப்புறமா பின்னாடி உள்ள அந்த 3 டிஜிட் நம்பரும் சொல்லி கூடவே அந்த OTP யையும் சொன்னீங்கன்னா... அப்படியே உங்க பணத்த எங்க அக்கவுண்டுக்கு டிரான்ஸ்பர் பண்ணுறதுக்கு வசதியா இருக்கும்...

  ?????

  ஹலோ "வடக்கன்" நீங்க யாருகிட்ட பேசிக்கிட்டிருக்கீங்கன்னு தெரியுதா?

  யாருகிட்ட?

  "கில்லர்ஜி" கிட்ட பேசிக்கிட்டு இருக்கீங்க?

  இன்னாது.... கில்லர்ஜியா... (அடடே நாம போட்ட போன் நம்பரு "எமனேஸ்வரம்" வரைக்கும் போயிடுச்சா... ஐ யாம் எஸ்கேப்...)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே
   இதை யூடியூபில் வெளியிடலாம் போலயே...

   நீக்கு
 11. ஹாஹாஹா கில்லர்ஜி நல்ல வார்த்தை விளையாட்டு! எடக்கு மடக்கு...காணொளி செம...ஹாஹா அதைப் பார்த்துதான் உங்களுக்கு இந்த ஐடியா வந்துச்சோ!!?

  ஒரு சில வார்த்தைகள் மட்டும் ரொம்ப ஆப்டா இல்லைனாலும் ரசித்தேன்...

  கீதா

  பதிலளிநீக்கு