தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, நவம்பர் 27, 2022

மன அமைதிக்கு வழி

சில மனிதர்கள் தான் செய்தது துரோகம், தவறு என்பதை உணராமலேயே வாழ்வதைக் கண்டு இறை நம்பிக்கையில் எனக்கு ஐயம் ஏற்பட்டது உண்மை. இன்று அதையே வேறு கோணத்தில் சிந்திக்க வைக்கிறது இறைவன் உண்டு என்று. ஆம் நம்மால் எதையும் தடுக்க இயலவில்லையே நமக்கு மீறிய ஏதோவொரு சக்தி சர்வ நிச்சயமாய் இருக்கிறது.
 
ஆம் தொடர்ந்து துரோகம் செய்தவர்களுக்கு நல்வாழ்வு  தொடர்வதும் பாதிக்கப்பட்டவன் வாழ்வு தொடர்ந்து வீழ்வதும் இறையின் செயலே அன்றி வேறென்ன ? மனம் கனத்து யாரிடம் முறையிடுவது ? மனிதர்களிடம் சொல்வதில் ஆறுதல் கிடைக்கலாம் அதுவும்கூட சில மணித்துளிகளில் கேளிக்கை ஆக்கப்படலாம் என்பதும் உண்மை.
 
எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது நான் நினைவு தெரிந்த காலம் முதல் அமைதியாக இறைவனிடம் மனதுள் கோரிக்கை வைத்து வந்து இருக்கிறேன். முதலில் இவ் உலக மக்கள் அனைவரும் நலம் பெறவேண்டும் என்று. இதில் நான் மட்டுமல்ல, நீங்கள் மட்டுமல்ல, எனக்கு துரோகம் செய்தவர்களும் அடங்குவார்கள். மற்றொன்று நான் செய்த புண்ணிய காரியங்களுக்கு பலனை எனது சந்ததிகளுக்கும், அவர்கள் அறியாமல் செய்த தவறுகளுக்கு தண்டனையை எனக்கும் கொடு என்று...
 
இன்றைக்கு எனக்கு இடையூறு செய்யும் மனிதர்களால் எனது மன உளைச்சல்களை சந்திக்கும் பொழுது... அவர்களின் மீது கோபம் வருவது முறையா ? நான்தானே அவர்களுக்கும் நல்வாழ்வு வேண்டினேன் ? இன்று மனம் மறுக்கிறதே காரணம் என்ன ? வலியை உணரும் போதுதான் வலிக்குமோ ? நான்தானே எனக்கே தண்டனை கேட்டேன் ? தண்டனையை அனுபவிக்கும் போதுதான் வலிக்குமோ ? காலத்துக்கு தகுந்தாற்போல் மனதின் எண்ணங்களும் மாறுமா ? நேற்று இறை இல்லை என்ற மனது இன்று உண்டு என்பதின் மாயமென்ன ? என்றோ, எங்கோ படித்த தத்துவம் ஒன்று மனதில் அடிக்கடி ஊடுறுவிச் செல்கிறது.
 
//இறைவன் கொடுக்க நினைப்பதை மனிதன் தடுக்க முடியாது.
இறைவன் தடுக்க நினைப்பதை மனிதன் கொடுக்க முடியாது//
 
எவ்வளவு நிதர்சனமான உண்மை ஒன்று மட்டும் நிதர்சனம் நம்மால் நினைக்க மட்டுமே முடியும் செயல் படுத்துவது இறையின் செயலே... அரேபியர்கள் அடிக்கடி ஒரு வார்த்தையை உபயோகிப்பார்கள் இன்ஷா அல்லாஹ் இதன் அர்த்தம் இறைவன் நினைத்தால் ? இதுவொரு கேள்விக்குறியான வார்த்தையே வேதங்கள் அனைத்தும் மனிதர்களின் நல்வாழ்வுக்காகவே அருளப்பட்டது. நாம்தான் அவைகளை படிப்பது இல்லை படித்தாலும் கடைப்பிடிப்பதும் இல்லை.
 
மன அமைதிக்கு வழி இறையின் வழியே இது ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு சூழலில் ஒவ்வொரு மனிதருக்கும் உணரும் நிலைப்பாடு வருகிறது. எந்த மதத்தின் கோட்பாடுகளை உணர்ந்தாலும் மரணம் மட்டும் சர்வ நிச்சயம். செய்த தவறுகளை இறுதி கட்டத்தில் உணர்த்தியே இறைவன் அழைக்கின்றான். சிலரது மரணத்தின் கடைசி காலத்தை அருகிலிருந்து காணும் நிலை எனக்கு வந்ததால் அவர்களது முழுமையான வாழ்க்கையை அலச நேரிட்டது ஆகவே இந்த வார்த்தைகள் எமது அடி மனதிலிருந்து பீறிட்டது. தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்கிறது. என்பது நான் கண்டுணர்ந்த உண்மை.
 
கில்லர்ஜி தேவகோட்டை
 
சிவாதாமஸ்அலி-
நல்லவனும், கெட்டவனும் ஒரே மாதிரித்தான் இருக்காங்கே...

Share this post with your FRIENDS…

32 கருத்துகள்:

  1. உண்மையான த்த்துவத்தைப் பகிர்ந்திருக்கிறீர்கள். மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது

    இறைவன் கொடுக்க நினைப்பதையும், தடுக்க நினைப்பதையும் நம்மால் என்ன செய்துவிட முடியும்?

    மனதிற்கு நான் இழந்த கோடிகள் நினைவுக்கு வந்தாலும், மிகச் சாதாரணமான எனக்குப் பல்வேறுபட்ட அனுபவங்களையும் நல்வாழ்க்கையையும் கொடுத்தானே என ஆறுதலும் சந்தோஷமும் பட்டுக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

      நீக்கு
  2. ஆமாம்... அந்த சாந்தி எங்குதான் இருக்கிறாள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாந்தி நம்-உள் இருக்கிறாள் அவளைக் காண இயலாது உணரவே முடியும்.

      நீக்கு
  3. அர்த்தமுள்ள பதிவு..

    நல்லவனும், கெட்டவனும் ஒரே மாதிரித் தான் இருக்காங்கே...

    அடையாளந்தான் தெரியலை..

    நீங்க வச்சிருக்கிற (!) வெளம்பரத்துல வருது..

    உள்ளே வெளியே ஒரே பெயிண்ட்.. ந்னு..

    அவ்வ்ளோதான்!..

    உள்ளே வெளியே எது.. ன்னு புரியலையே.. என்றால் -

    எது வெளியே இல்லையோ
    அது உள்ளே!..

    எது உள்ளே இல்லையோ
    அது வெளியே!..

    என்ன ஒன்னும் புரியலையா!..

    அது தாங்க வாழ்க்கை!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி புரிந்தும் புரியாமல் இருப்பதுதான் வாழ்க்கை.
      தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு
  4. நான் இல்லாவிட்டால் நிம்மதி கிடைக்கும்.

    பதிலளிநீக்கு
  5. எல்லாவற்றுக்கும் ஒரு காரணம் உண்டு என்று மனதில் கொள்ளவேண்டும்.  எல்லாம் நன்மைக்கே என்று மனதில் ஏற்றிக்கொள்ளவேண்டும்.  அததற்கான கதையை நினைவு வைத்திருக்க வேண்டும்.  இப்படி எல்லாம் காம்ப்ரமைஸ் செய்தால் நிம்மதியாக இருக்க முயற்சிக்கலாம் என்று நம்ப வேண்டும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி ஆம் நிம்மதி நமது மனதின் உள்ளேயே வாழ்கிறது.

      நீக்கு
  6. மனதிற்கு துயர்தரும் நினைவுகளில் இருந்து, மனதை வேறு சிந்தனைக்கு மடைமாற்றம் செய்வதும், நம்மை ஏதேனும் ஒரு பணியில் முழுமையாய் ஈடுபடுத்திக் கொள்வதும் பயன் அளிக்கும்,
    எத்துயர் வந்தாலும், அதுவும் கடந்து போகும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது ஆலோசனைகளுக்கு நன்றி.

      நீக்கு
  7. ஆழமான கருத்துடைய பதிவு கில்லர்ஜி. நல்ல பதிவு....

    நமக்கு என்ன நடக்க வேண்டுமோ அது நடந்தே தீரும். அதுவும் எந்த நேரத்தில் நடக்க வேண்டுமோ அப்போதுதான் நடக்கும். ஒவ்வொருவரின் செயல்களுக்கும் அவர்களே பொறுப்பாளிகள். வேறு யாரும் காரணமாக இருக்க முடியாது என்பதும் மனதில் பதிந்தால், நடப்பவற்றை ஏற்கும் மனப்பக்குவமும் வந்துவிட்டால் சாந்தி மனதில் குடி கொண்டுவிடுவாள். அந்த சாந்தியை அசைத்துப் பார்க்கும் நிகழ்வுகளே நம்மைச் சுற்றி நடந்தாலும் கூட....அப்படியான மனப்பக்குவம் பெறுவது என்பது மிகவும் கடினம் ஆனால் எல்லா தத்துவங்களும் அதை நோக்கிச் செல்லுவதற்கான மனப்ப்யிற்சியைத்தான் சொல்கின்றன. எல்லா சந்தோஷங்களையும் நாம் வெளியில் தேடிக் கொண்டிருக்கிறோம் அது மனதில் இருக்க....கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவது போலன்றது போல...

    இதை மனதில் நாம் பதிய வைத்துக் கொள்ள வேண்டுமே!!!! அங்குதான் இருக்கு சவால்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நமக்கு நடப்பனவற்றுக்கும் கடவுள் என்பதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அந்த சாந்தியை மனதுள் குடியிருக்க உதவும் மனப்பயிற்சியே

      கீதா

      நீக்கு
    2. வருக தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

      நீக்கு
  8. ஆமாம். நீங்க சொல்லி இருப்பதெல்லாம் சரியே! இறைவன் எதை எப்போ யாருக்குக் கொடுக்கணும் என உணர்ந்து தான் செய்கிறான். ஆனால் நம்மைத் தொந்திரவு செய்தவர்கள்மேன்மேலும் செய்பவர்கள் நன்றாக வாழ்வது மனதை உறுத்தத் தான் செய்கிறது. இது அவங்க பூர்வ ஜன்ம பலன் என நினைத்துக் கொள்வேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், தவறு செய்பவர்கள் நல்ல வாழ்க்கை வாழ்வதுதான் எனக்கு புரியவில்லை.

      நீக்கு
  9. //இறை நம்பிக்கையில் ஐயம் ஏற்படுவது உண்மை.//

    நாட்டில் நடக்கும் சில விஷயங்கள் நடப்பதை பார்க்கும் போது கடவுள் இருக்கிறாரா என்ற கேள்வியும் எனக்கும் எழும்.

    நீங்கள் சொல்வது போல அவர்கள் செய்யும் தவறுகள் தெரியாமலேயே வாழ்த்து கொண்டு இருக்கிறார்கள். தெரிந்தாலும் திருத்தி கொள்ள விரும்பவில்லை.

    தியானத்தின் முடிவில் நாங்களும் நீங்கள் சிறு வயது முதல் சொல்வது போல உலகமக்கள் அனைவருக் நலமாக இருக்க வேண்டுவோம்.அடுத்து
    "இன்னல் புரிவோர் , எதிரிகளாக நினைப்போர் எவரேனும் இருந்தால் அவர்களும் மனம் திருந்தி நல்வாழ்வு பெற கருணையோடு வாழ்த்துவோம்//

    அது போல உங்களுக்கு தீமை நினைத்தவர்களையும் வாழ்த்தி கொண்டு இருங்கள்.
    நம்மால் அது மட்டுமே செய்ய முடியும்.

    மன நிம்மதி வேண்டுமென்றால் இறைவனை வேண்டி விட்டு எல்லாம் நீயே ! பார்த்துக்கொள் என்று விட்டு விட்டால்தான் நிம்மதியாக இருக்க முடியும்.

    நானும் ஏதாவது நினைத்து கொண்டு வருந்தி கொண்டு இருப்பேன், அப்போது பாடமாக படித்ததை நினைத்து கொள்வேன்.

    நமக்கு நினைவு தெரிந்தது முதல் இன்று வரை உதவி செய்தவர்களை நினைத்து வாழ்த்தி கொண்டு இருப்போம் நன்றி சொல்வோம்,. நாம் சிலரை மனது வருந்தும்படி செய்து இருந்தால் அவர்களிடம் மானசீகமாய் மன்னிப்பு கேட்போம். வாழ்க வளமுடன் வாழ்த்தி அமைதியாக இருப்போம்.




    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      நமக்கு மீண்டும், மீண்டும் துரோகம் செய்பவர்களுக்கு நாம் எப்படி நம்மை நினைக்க தூண்டும் ?

      தங்களது அழகிய கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. நல்ல தத்துவார்த்தமான பதிவு.

    ஆம் உண்மைதான்.. இறைவன் நம் வினைகளுக்கு ஏற்பத்தான் எதையும் தருகிறான். நம்மக்கு நல்லதை நினைக்காதீர்கள் மேலும் மேலும் வளர்ந்து உயர்ந்து வரும் போது "போன பிறவியில் யாரை இந்த மாதிரி நாம் துன்புறுத்தினோமோ..! அதற்கான தண்டனையைத்தான் நமக்கு இப்போது இறைவன் தருகிறான்" என நினைத்துக் கொள்வேன். இதில் அவர்கள் மேல் உள்ள வருத்தம் அகன்று அவர்களுக்காகவும் பிரார்த்தனை செய்யத் தோன்றும். இதிலாவது இறைவன் மன மகிழ்ச்சியடைந்து அடுத்தப்பிறவியில் நமக்கு நல்லதை தரட்டுமே என்ற சுய பச்சாதாபமும் எழும்.

    /இறைவன் கொடுக்க நினைப்பதை மனிதன் தடுக்க முடியாது.
    இறைவன் தடுக்க நினைப்பதை மனிதன் கொடுக்க முடியாது//

    நல்ல வார்த்தைகள்.. எதையும் நமக்கென அளந்து தருபவன் அவன்தானே..! நம் கவலைகளை அவனிடம் ஒப்படைத்தால் நமக்கு கிடைப்பது மனசாந்தி. அவன் பார்த்துக் கொள்ளுவான் என்ற அசைக்க முடியாத அந்த நம்பிக்கையையும் அவனே தர வேண்டுமென தினமும் பிரார்த்தித்தபடிதான் உள்ளேன். நல்ல பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "நமக்கு நல்லதை நினைக்காதவர்கள்" என திருத்திப் படிக்கவும். தட்டச்சு பிழையினால் வார்த்தைகள் மாறி அர்த்தங்கள் வேறுபடுகின்றன. வருகின்றன.

      இதுவும் நமக்கு நல்லதை நினைக்காதவர்கள் சாபம் போலும்..! அதை குறிப்பிட்டு எழுதும் போதே வார்த்தைகள் மாறுகின்றன. ஹா ஹா.

      நீக்கு
    2. வருக சகோ
      தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றிகள் பல!

      நீக்கு
  11. நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதும் இல்லை
    நடந்ததையே நினைத்து இருந்தால் அமைதி என்றும் இல்ல

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஐயா தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  12. துரோகங்களும் ஏமாற்றும் வாழ்க்கையில் தொடர்ந்து நடந்து கொண்டு தானிருக்கின்றன! இவர்களிடமா அன்பும் நம்பிக்கையும் வைத்தோம் என்ற ஆச்சரியம் பல்லாண்டுகளுக்கு அப்பால் ஏற்படுகையில் அந்து துரோகங்களின் வலி கடந்து போகிறது. சில துரோகங்கள் நீறு பூத்த நெருப்பு போல. அடியில் உறையும் அந்த நெருப்பு எந்தக்காலத்திலும் அணைவதில்லை. சாம்பலாவதில்லை. என்றுமே தணலாய் கனன்று கொண்டு தான் இருக்கின்றன. எல்லாவற்றையும் கடந்து தான் வாழ்க்கை அது பாட்டிற்கு சென்று கொண்டிருக்கின்றது. ஒரு துரோகத்தில் பாடம் கற்றுக்கொண்டோமானால் இன்னொரு துரோகத்தை சந்திக்க மாட்டோம் என்பது உண்மை. தொடர்ந்து துரோகங்கள், வேதனைகளை சந்தித்துக்கொண்டிருந்தால் நாம் பாடம் கற்கவில்லை என்பதும் பக்குவம் பெறவில்லை என்பதும் நிதர்சனம்.
    இனிமையான இசை, நல்ல புத்தகங்கள், நம்மையே மறந்த தெய்வ வழிபாடு இவையெல்லாம் தான் நம்மை திசை திருப்ப வைக்கும் அற்பதங்கள்!!
    கண்ணதாசனின் வரிகள் நினைவுக்கு வருகின்றன.
    " வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்-வாசல் தோறும் வேதனை இருக்கும்.
    வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை.
    எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்"
    இது தான் ' ஷாந்தி கா ரஸ்தா' !!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கும், ஆறுதல் விடயங்கள் தந்தமைக்கும் நன்றி.

      நீக்கு
  13. ஆஹா... அருமை... அற்புதம்... கொஞ்சம் கொஞ்சமாக ஒரு ஞானியின் மன பக்குவத்தை நீங்கள் பெற்றுவருகிறீர்கள் போல் தோன்றுகிறது... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி

      நீக்கு
  14. துரோகங்கள் ஏமாற்றுகள் நடக்கும்போது மனதுக்கு கஷ்டமாகதான் இருக்கும் அப்புறம் மனம் அமைதி பெறுவது இயற்கை.

    பதிலளிநீக்கு