தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், நவம்பர் 09, 2022

வசந்தாவுடன் ஓர்நாள்

ணக்கம் நண்பர்களே... வசந்தத்தில் ஓர்நாள் என்று தட்டச்சு செய்த தலைப்பு வசந்தாவுடன் ஓர்நாள் என்று பிழையாக வந்து விட்டது மன்னிக்கவும். கணினியில் ஏதோ பிரச்சனை என்று நினைக்கிறேன். கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பாடலை எமது பாணியில் மாற்றி எழுதி இருக்கிறேன் கீழே யூட்டியூப்பின் இணைப்பும் கொடுத்துள்ளேன்  
இதோ எனது பாடல்...
 
வருடத்தில் ஓர்நாள் மணப்பாறையோரம்
தேவகி பூத்திருந்தாளோ... பாவி
தேவகி பூத்திருந்தாளோ...
 
பொய்யிட்ட உன்னோடு நான் வினைதேட
மோகத்தில் வீழ்ந்திருந்தாளோ பாவி
வேடர்கள் மூவரும் கருமண பாடை
அழிப்பதை தடுத்திருந்தாளோ.. பாவி
 
பெருமாள் கர்மா அவன் இன்னும் தேவர்
காதலில் சென்றிருந்தாளோ பாவி
தேவகி பூத்திருந்தாளோ...
வருடத்தில் ஓர்நாள் மணப்பாறையோரம்
தேவகி பூத்திருந்தாளோ... பாவி
 
உன் வண்ண மாலை ஸ்ரீராமின் கையில்
தேவரும் கண்டு கொண்டாரோ... இங்கே
எங்கும் நெகிழ்வோடு சிங்கள தாளில்
கங்கையை வீழ்த்த வந்தாரோ... இங்கே
 
சீடையும் தந்து சீடையில் வண்டு
சீதையை வீழ்த்த வந்தாரோ...
பாவி தேவகி பூத்திருந்தாளோ...
வருடத்தில் ஓர்நாள் மணப்பாறையோரம்
தேவகி பூத்திருந்தாளோ... பாவி
 
பாடல்-ஆச்சி-ரியர்-கில்லர்ஜி
 
வருடம்: 1971
படம்: மூன்று தெய்வங்கள்
பாடலாசிரியர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்: பி.சுசீலா
 
இதோ கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகள்
 
வசந்தத்தில் ஓர்நாள் மணவறை ஓரம்
வைதேகி காத்திருந்தாளோ... தேவி
வைதேகி காத்திருந்தாளோ...
 
மையிட்ட கண்ணோடு மான் விளையாட
மௌனத்தில் ஆழ்ந்திருந்தாளோ
தேவி தேவர்கள்-யாவரும் திருமண மேடை
தேவர்கள் யாவரும் திருமண மேடை
அமைப்பதை பார்த்திருந்தாளோ தேவி
 
திருமால் பிரம்மா சிவன் என்னும் மூவர்
காவலில் நின்றிருந்தாளோ தேவி
வைதேகி காத்திருந்தாளோ
வசந்தத்தில் ஓர்நாள் மணவறை ஓரம்
வைதேகி காத்திருந்தாளோ... தேவி
வைதேகி காத்திருந்தாளோ...
 
பொன்வண்ண மாலை ஸ்ரீராமன் கையில்
மூவரும் கொண்டு தந்தாரோ அங்கே
பொங்கும் மகிழ்வோடு மங்கள நாளில்
மங்கையை வாழ்த்த வந்தாரோ அங்கே
 
சீருடன் வந்து சீதனம் தந்து
சீதையை வாழ வைத்தாரோ
தேவி வைதேகி காத்திருந்தாளோ
வசந்தத்தில் ஓர்நாள் மணவறை ஓரம்
வைதேகி காத்திருந்தாளோ... தேவி
 
இதோ யூட்டியூப் இணைப்பு
https://www.youtube.com/watch?v=NklQTizVegM
நன்றி – கில்லர்ஜி தேவகோட்டை

Share this post with your FRIENDS…

32 கருத்துகள்:

  1. அபசகுனமாய் ஒலிக்கும் ஓரிரு வார்த்தைகள் தவிர ஓகே தான் ஜி.  ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி வழக்கம்போல்தானே... எதிர்மறை...

      நீக்கு
  2. திரையுலகம் கண்ட நல்ல பாடல்களில் இதுவும் ஒன்று..
    நார் நாராகக் கிழிந்து விட்டது இன்று..

    என்ன கோபம்?.. சிறு கூடற்பட்டியார் மீது?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி சிறுகூடல்பட்டி மீது எனக்கும் காதலுண்டு.... வருகைக்கு நன்றி

      நீக்கு
  3. வசந்தத்தில் ஓர் நாள்... மிக அருமையான பாடல்... ஆமாம் உங்கள் பாட்டில் ஏன் அறச் சொற்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே எதிப்பதமான வார்த்தைகள் அவ்வளவே...

      நீக்கு
  4. ரஞ்சிதாவுடன் ஒருநாள் பொழுதை கழிக்கப்போக அங்கு ஒருவர் "கைலாசா" நாட்டிற்கே அதிபராகிவிட்டார். இங்கு நீங்களோ வசந்தாவுடன் களத்தில் இறங்கியுள்ளீர்கள்... உங்களையும் விரைவில் அதிபராக பார்க்கும் காலமும் வருமோ?... அதற்கு முன்னால் "SUN TV" யில்... ஹ.... ஹாஹா... ஹைய்யோ ஹைய்யோ... எனக்கு சிரிப்ப அடக்க முடியல...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது முதல் வருகைக்கு வந்தனம்.

      விரிவான கருததை பதிவு செய்தமைக்கு நன்றி தொடர்ந்தால்... நலமே...
      தொலைக்காட்சி பார்க்காதீர்கள் மனம் அலை பாயும்.

      நீக்கு
    2. @brabinbala எங்களோட ஜி அப்படி எல்லாம் இல்லை

      நீக்கு
  5. திரைப்பாடல் முயற்சியில் திறமை தெரிகிறது

    பதிலளிநீக்கு
  6. வழக்கம் போல் தங்களின் கற்பனை அருமை நண்பரே.

    பதிலளிநீக்கு
  7. "வசந்தத்தில் ஒருநாள்" என்று தட்டச்சு செய்த தலைப்பு "வசந்தாவுடன் ஒருநாள்" என்று பிழையாக வந்துவிட்டது என்று கூறியுள்ளீர்கள்???!!... கணினியில் ஏதோ பிரச்சனை இருப்பதாக வேறு குறைபட்டுள்ளீர்கள்...

    ஆனால், நீங்கள் பதிவேற்றியுள்ள "அந்த" போட்டோவில் நம்ம வசந்தா இடுப்பில் ஒரு கூடையுடன் கம்பங்காட்டில் தனியாக யாரையோ தேடி போவதைப் பார்த்தால் பிரச்சனை கணினியில் இருப்பதாக தெரியவில்லையே??!!....

    உண்மையை சொல்லுங்கள் கணினியில் பிரச்சனை என்று பொய்தானே சொல்லுறீங்க?...
    (ஹி... ஹிஹி...என்கிட்ட இருந்து நீங்க தப்பவே முடியாதாக்கும்....)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நான் எத்தனை முறைகள் திருத்தம் பெய்தாலும் இப்படித்தான் வருகிறது.

      நீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. "வசந்தத்தின் ஒர் நாள்" பாடல் மிகவும் அருமையான பாடல். எனக்கு சிறுவயதில் எனக்கு மிகவும் பிடித்த பாடலும் கூட. ஏனென்றால் பள்ளியில் படிக்கும் போது, பாட்டு வகுப்பில் எங்கள் பாட்டு டீச்சர் இந்தப்பாடலை என்னைப் பாடும்படி கேட்க நான் பாடி கைத்தட்டல் வாங்கித் தந்த பாடல்.

    தாங்கள் அதே ராகத்தில் இட்டுக் கட்டிய பாடலும் நன்றாக உள்ளது. பாடவும் வருகிறது. ஆனால் சில இடங்களில் வரிகளுக்கான அர்த்தங்கள் புரியவில்லை. ஒரு பாடலை குறைந்த பட்சம் அதன் மெட்டு மாறாமல் வேறு பாட்டு இயற்றும் தங்களின் திறமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரரே. . பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ நான் இப்பாடலை தினமும் ஓர் முறை கேட்டு விடுவேன் பாடலை ரசித்து கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

      நீக்கு
  9. வணக்கம் ஜி !

    தேவியைப் பாவி என்றாய்
    சீரினைச் சீடை என்றாய்
    மூவுல காள்வான் தன்னை
    மூடனே என்று சொன்னாய்

    என்னதான் கோபம் அந்த
    இறைகவி பாடல் தன்னில்
    முன்னைநாள் வலியோ இல்லை
    முற்றிய கிறுக்கோ அறியேன் !

    அருமை ஜி சில வேண்டத்தகாத சொற்கள் இல்லையேல் இன்னும் அழகாக இருந்திருக்கும் வாழ்க நலம் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக பாவலரே
      நான் இதுவரை எழுதிய முப்பது உல்டா பாடல்களும், இப்படி எதிர்மறையான வார்த்தைகளில் தான் கோர்த்து இருக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. நல்ல பாடலை எதிர்மறையாக ஏன் எழுத வேண்டும் ஜி
    நீங்களே நல்ல கவிதை எழுதலாம்.

    வசந்தத்தில் ஒர் நாள் பாடல் கேட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ நான் தேர்வு செய்யும் பாடல்கள் எல்லாமே சிறப்பானவையே... அவைகளை களங்கப்படுத்தும் எண்ணம் இல்லை.

      அப்பாடலின் மெட்டில் வேறு வார்த்தைகளை தேடுகிறேன் ஆகவே எதிர்ப்பதமாக அமைகிறது.

      மற்றபடி நான் எழுதும் கவிதைகள் நல்ல வார்த்தைகளில்தானே... அமைக்கிறேன்.
      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    2. தலைவரே இந்த பாட்டுக்கு ஏன்உங்களை எல்லோரும் கழுவி கழுவி ஊத்துறாங்க??...

      நீக்கு
    3. தலைவரே... உங்களை எல்லோரும் இந்த பதிவில் கழுவி கழுவி ஊத்துறத பார்த்தா நீங்களும் நம்ம டிக்டாக் புகழ் "ஜி.பி முத்து" மாதிரி திடீருன்னு பிரபலமாகிட்டீங்களோன்னு எனக்கு தோணுது!...

      நீக்கு
    4. மேலே கமெண்டில் அன்பர் "சீராளன்.வீ".... "முற்றிய கிறுக்கோ அறியேன்" என உங்களைப்பற்றி கவிதை எழுதியுள்ளார்...

      வர வர எல்லோருக்கும் உங்கள் மீதுள்ள பயம் விட்டுப்போச்சு... உங்களை திட்டி கருத்து போடுறவங்களை எல்லாம் நம்ம ஜமான் ஸ்டார் "ஜி.பி. முத்து" மாதிரி சும்மா வச்சு அறுத்து கிழிங்க.... தலைவரே...

      நீக்கு
    5. வருக கருத்துரைகள் அவரவர் மனதில் உள்ளபடி தான் வரும், பாராட்டும் பொழுது ஏற்றுக்கொள்ளும் நாம் இதையும் அவ்வகையில் பார்ப்போம்.


      கவிஞர் சீராளன் எமது நண்பர் உரிமை எடுத்து விட்டதாக கருதுகோள். வார்த்தைகளை தன்மையாகவே கையாள்வோம்.

      தங்களது மீள் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  11. நல்ல பாடல். எதிர்மறைக்கருத்துகள் இல்லாமல் இருந்திருக்கலாமோ? என்றாலும் உங்கள் திறமை போற்றத்தக்கது. வசந்தத்தை வேணுமென்றே தான் வசந்தாவாக்கி இருக்கீங்க என்பதும் புரிந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு