தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, ஜூன் 23, 2023

தீய அஞ்சலி

ணக்கம் நட்பூக்களே... மேலே கண்ட புகைப்படத்தில் பார்த்தீர்களா ? கோவை குண்டு வெடிப்பில் பலியான அப்பாவி இந்து மக்களுக்கு தீப அஞ்சலி நல்ல செயல்தான் ஆனால் இந்த குண்டு வெடிப்பில் இந்துக்கள் மட்டும்தான் பலியானார்களா ? இஸ்லாமிய, கிருஸ்துவ சகோதரர்கள் பலியாகவில்லையா ? இது தீப அஞ்சலி அல்ல! தீய அஞ்சலி.
 
மேலும் அப்பாவி மக்கள் மட்டும்தான் இறந்தார்களா ? இழிபிறவிகளும் இறந்திருக்கலாம்தானே.. ஒரு கட்சியோ அமைப்போ இருந்தால் அனைத்து சமூக மனிதர்களுக்கும் பயனாக, பலனாக இருப்பதுதானே முறை. இப்படி அஞ்சலி செலுத்துவதில்கூட பேதம் பார்த்தால் இந்த கட்சி மட்டுமல்ல, எந்த சமயம் சார்ந்த கட்சியும் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் வளர முடியாது. பிறகு இவர்களை பிற சமூக மக்கள் ஆதரிப்பார்களா ? முன் கை நீண்டால்தானே முழங்கை நீளும் ?
 
இவர்களைப் போன்ற மதவாதிகளால்தான் பிற நாடுகளில் வேலை செய்யும் இந்துக்களுக்கு அங்கு கிடைக்கும் மரியாதை இழிவாக இருக்கிறது கேட்டால் ஏன் அங்கு போகிறாய் ? என்பார்கள் இந்தியாவில் எல்லோருக்கும் வேலையும், நல்ல வருமானமும் கிடைத்தால் எதற்காக அயல் தேசங்களுக்கு போகின்றார்கள் ? இவர்களெல்லாம் உழைக்காத சோம்பேறிகள் இந்த மாதிரி ஏதாவது மக்களிடம் மதப் பிரச்சனையை கிளப்பி விட்டுக் கொண்டே மேலிடத்திலிருந்து கிடைக்கும் எலும்புகளுக்காக வாழும் இழிபிறவிகள்.
 
நீ சொல்லும் அஞ்சலியை மரணித்த அனைத்து மக்களுக்கும் என்று சொல்வதில் உனது தரம் உயர்ந்துதான் போகுமே தவிர தாழ்ந்து விடுவதில்லை. எண்ணங்கள் உயர்வானால் எல்லாமே உயர்வாகும் என்பதை அறியாத இவர்களெல்லாம் ஆன்மீகவாதிகளா ? மதத்தின் பெயரில் உள்ள கட்சிகள், அமைப்புகள், சாதீ சங்கங்கள் அனைத்தையும் அரசு தலையிட்டு கலைத்து விடல் வேண்டும். ஆனால் அரசே மதவாதமாக இருக்கும்போது எங்கு முறையிடுவது ?
 
மதம் மறப்போம் மனிதம் காப்போம்.
 
கில்லர்ஜி தேவகோட்டை
 
காணொளி

Share this post with your FRIENDS…

49 கருத்துகள்:

  1. ஆம்.  இது மக்களைக் கிளப்பி விடும் முயற்சி.  மக்கள் தெளிவாகவே இருப்பார்கள்.  இதில் கேவலமான எழுத்துப்பிழை வேறு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மக்கள் தெளிவுதான் ஆனால் அரசியலில் தெளிவாக இல்லையே ஜி

      நீக்கு
  2. காணொளி நிறைவாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  3. அது சரி. போஸ்டரில் குண்டு குண்டி ஆனது எப்படி?? உங்கள் கைவண்ணம்??

    குண்டு வெடிப்பு, பணம் மதிப்பிழப்பு, ஜி எஸ் டி கொரோனா என்று அடுத்தடுத்த பொருளாதார சரிவுகளில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது கோவை. ஆனால் இவர்கள் அதை மீண்டும் குழியில் தள்ளப் பார்க்கிறார்கள். இதை முளையிலேயே கிள்ளி விட வேண்டும்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா இந்த இழிவான வேலையை நான் எப்போதும் செய்ய மாட்டேன்.

      அந்த எழுத்துப்பிழையே இப்பதிவுக்கு வித்து.

      நீக்கு
    2. https://dindiguldhanabalan.blogspot.com/2023/06/Thirukkural-Accounting-Chapter-First-and-Last-Letters-Precision-and-Technique-4.html?showComment=1687334392729&m=1#c153218745140001222

      நீக்கு
  4. உங்களின் அடிமனதில் அடங்கிக் கிடந்த அடங்காத கோபம் வெடித்திருக்கிறது. எல்லோரும் இப்படிக் கோபப்பட்டால் இவர்கள்[மற்ற மத வெறியர்களும்தான்] இருக்கும் இடம் தெரியாமல் விரட்டியடிக்கப்படுவார்கள்.

    அந்த நல்ல நாளும் வரும். காத்திருப்போம்.

    நெஞ்சார்ந்த பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே
      இந்த அறச்சீற்றம் எல்லா மனிதருக்கும் வரவேண்டும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி

      நீக்கு
  5. இதுபோல் உள்ள இழிபிறவிகளுக்கு மேலான இழிபிறவிகள் உண்டு... அவர்கள் இவர்களின் தொண்டர்கள்... இதற்கும்.ஒரு தலைமை உண்டு... நம் நாட்டின் வெங்கோலன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி மதவாதிகளை நாடு கடத்த வேண்டும்

      நீக்கு
  6. மணிப்பூரில், நாட்டை சீரழிக்கும் இந்த கேடுகெட்ட கும்பல், தன் மதவாத கொடூரங்களை சரியாக செய்கிறது... பேடிப பயல் ஊர் மேய போயிருக்கு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாப்பயலும் இறுதியில் இறைவனுக்கு பதில் சொல்ல வேண்டும்

      நீக்கு
  7. கில்லர்ஜி சரியான கேள்வி. இது உணர்வுபூர்வமாக மதிகெட்ட மக்களைத் தூண்டும் சம்பவம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  8. கேவலமான எழுத்துப் பிழை....என்னத்த சொல்ல?

    காணொளி அருமை....எனக்குச் சில கேள்விகள் எழுகின்றன...பொதுவெளியில் வேண்டாம்..எனத் தவிர்க்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எழுத்துப்பிழையோடு அச்சடித்தது தவறில்லை அதை பொதுவெளியில் வைத்தது மிகப்பெரிய தவறு.

      நீக்கு
  9. மனிதம் வளர்ப்போம்.

    எழுத்துப் பிழை - தமிழ் இப்படி எல்லோர் கையிலும் மாட்டிக்கொண்டு விழி பிதுங்குகிறது.

    பதிலளிநீக்கு
  10. மனிதம்தான் முக்கியம். மாற்று சமயத்தினர் தீப அஞ்சலி என்பதை ஏற்றுக்கொள்வதில்லை என்றாலும், இந்து என்று குறிப்பிடாமல், அனைத்து மக்களுக்கும் என்றல்லவா குறிப்பிட்டிருக்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே
      இவர்கள் பிரிவினையை உருவாக்குவதற்காகவே இப்படி நிகழ்வுகள் நடத்துகின்றனர் வேறென்ன ???

      நீக்கு
  11. சாதாரன மக்கள் பெருவாரியாக திருந்திவிட்டார்கள்.
    அரசியல் வியாதிகள் மட்டுமே மதத்தை உபையோகித்து அல்லது மதசார்பற்றோர் என்று பொய் சொல்லிக்கொண்டும் குழப்ப முயன்றுகொண்டே இருக்கிறார்கள். மதப்பிரிவினை வேலை செய்யவில்லையென்றால் ஊழல் என்னும் ஆயுதத்தை கையில் எடுத்து மக்களைக் குழப்பி தங்கள் வழிக்கு கொண்டுவருகிறார்கள்.
    மக்கள் விரைவில் இவர்கள் அனைவரின் முகத்திறையைக் கிளிப்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே உண்மையை மக்கள் உணரவேண்டும்

      இதுவே எனைப் போன்ற நடுநிலையாளர்களின் அவா!

      தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி

      நீக்கு
  12. மனிதம் தான் முக்கியம். அதில் மாற்று கருத்து இல்லை..

    செத்தவர்க்கு தீப அஞ்சலி என்பதை அராபிய ஐரோப்பிய வழிகள் ஏற்றுக் கொள்வதில்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி தங்களது கருத்து உண்மைதான்.....

      நீக்கு
    2. கிருத்துவத்தில் பல புனிதர்களும் (Saints) மனிதர்களாய் இருந்தவர் தானே. தெரேசா அன்னை போன்றவர். அவர்களை தொழுவது உண்டே!

      Jayakumar

      நீக்கு
    3. தங்களது மீள் வருகைக்கு நன்றி ஐயா

      நீக்கு
  13. இந்து என்று குறிப்பிடாமல், இருந்திருக்கலாம்.. அல்லது இதற்கான செலவை ஏழையர்க்கு தானம் கொடுத்திருக்கலாம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனாலும் இந்து என்ற வார்த்தைதான் பிரிவினையை உண்டாக்குகிறது...

      நீக்கு
    2. இப்போது மட்டும் ஒற்றுமை தலைவிரி கோலமாக ஆடுகின்றதா?..

      அது அதற்குள் ஒற்றுமையும் வேற்றுமையும் கலந்தே கிடக்கின்றன..

      நீக்கு
    3. பிரிவினையை விதைப்பது அரசியல்வாதிகள்தானே..

      நீக்கு
  14. இங்கே தமிழ் -
    திங்க ணத்தோம்..

    அங்கே தமிழ் -
    ததிங்க ணத்தோம்!..

    ஐம்பது ஆண்டுகளில்
    தமிழ் வளர்ந்த லட்சணம் இது தான்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழின் அலங்கோலத்திற்கு அரசு மட்டுமே காரணமல்ல!

      நீக்கு
  15. இங்கே என்றால் எழுதிக் கொடுத்த ஆசாமி.

    அங்கே என்றால் தட்டச்சு செய்த ஆசாமி!..

    பதிலளிநீக்கு
  16. இதே போல சில ஆண்டுகளுக்கு முன்பாக சூரிய தோக்காவிலும் குண்டு என்பதற்குப் பதிலாக

    குண்..... - என்று செய்திச் சுருள் போட்டு ஓட்டியிருந்தனர்..

    தங்களுக்கு நினைவு இருக்கும் என நினைக்கிறேன்..

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் சகோதரரே

    பதிவில் படித்த செயல்கள் கொடூரம். தவறான எழுத்துப் பிழை வேறு படிக்க சகிக்கவில்லை. முதலில் மதம் என்பதை பிரித்தவனே ஒரு மனிதன்தானே! .. அப்படியும் அது வேறாகினாலும், உயிர்கள் ஒன்றல்லவா? மனிதன் என்று அதை புரிந்து கொள்ளப் போகிறான்.? காணொளி நன்றாக உள்ளது. இதுவரை நான் இப்பதிவை பார்க்கவில்லை. அதனால் தாமதம்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      ஆம் மதத்தை உருவாக்கியதே மனிதன்தானே...

      தங்களது அழகிய கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  18. மதபபிரிவினை கொடூரம். எங்கும் பிரிவினை தமிழ் கொலை.

    பதிலளிநீக்கு
  19. இந்தப் போஸ்ட் வந்ததை நான் கவனிக்கவில்லை, இன்று ஏனோ தமிழ் பொண்ட் உம் குழப்பம் காட்டியதால் கொம்பியூட்டரை மூடி விட்டேன்.

    நீங்கள் சொல்வதனைத்தையும் நானும் படு வன்மையாக, ஆணித்தரமாக, உறுதியாக ஆமோதிக்கிறேன்... பிரிவினை காட்டாமல் போட்டிருக்கலாம் அல்லது போடாமலே விட்டிருக்கலாம், ஆனால் அது அந்த ஆண்டவனுக்கே பொறுக்கவில்லைப்போலும், அதனாலதான் எழுத்துப்பிழை.. ஹா ஹா ஹா... என்ன கொடுமை, ஒரு நோட்டீஸ்கூட சரியான முறையில் அடிக்க முடியாமல் போய்விட்டதோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அதிரா எழுத்துப் பிழைகளை பெரிதாக கருதி குற்றம் சுமத்தக்கூடாது .

      நானும்கூட தங்களது பெயரை திருகாணி அதிரா என்று படித்து விட்டேன்.

      பிறகுதான் தெரிந்தது திருக்கிய ஆணி என்று...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி

      நீக்கு
    2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கில்லர்ஜி.. என்ர பெயரை ஒயுங்காப் படிக்கோணும் ஜொள்ளிட்டேன்ன்:))

      நீக்கு
    3. தமிழில் என்ன இருக்கிறதோ... அதையே படிக்கப்படும்.

      நீக்கு
  20. இழிபிறவிகளின் இழிந்த செயல்பாடுகளை இதைவிட யாரும் மனத்தில் தைக்கும்படியாய் சொல்ல முடியாது. இந்த இழிபிறவிகள் தேர்தல் சமயத்தில் தரும் பணத்துக்காகச் சோரம் போகும் பொது மக்களை எந்த வகையில் சேர்ப்பது?
    முனைவர் அ.கோவிந்தராஜூ, கரூர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்களை இவர்களைவிட ஈனப்பிறவிகள் எனலாம் ஐயா.

      முனைவர் ஐயா அவர்களின் வருகைக்கு நன்றி

      நீக்கு
  21. குண்டு வெடிப்பில் மரணித்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்துவதுதான் நல்ல பண்பு.

    மதம் மறந்தால் மனிதம் தழைக்கும் காணொளி அருமை.
    எங்கள் குடியிருப்பில் சின்ன பிள்ளையார் கோவில் கட்டி இருக்கிறார்கள். அனைத்து மதத்தை சார்ந்தவர்களும் நன்கொடை அளித்து இருக்கிறார்கள்.
    முன்பு அக்கம் பக்கத்தினர் எல்லாம் அத்தை ,மாமா என்று பேசி உறவாடி மகிழ்ந்தோம் .
    மதம் கடந்த அன்பு. நம் பண்டிகையை அவர்களும் அவர்கள் பண்டிகையை நாமும் மதித்து பலகாரங்களை பகிர்ந்து மகிழ்ந்தோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      ஆம் மதம் மறப்பது நன்று.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி

      நீக்கு