தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, ஜூன் 03, 2023

முதலூர், முதலாளி முத்தையா

    ந்த முதலூர் முத்து தியேட்டரின் வளாகத்தில் வேலையற்ற ரசிகர்களின் பெருங்கூட்டம் நிரம்பி வழிந்தது ‘’வெல்டிங் ஸ்டார்’’ வடுகநாத் நடித்த சிவப்பு ரத்தம் வெளியாகி இருந்தது. அருபது அடி உயர பதாகையில் திருப்பாச்சி அருவாளிலிருந்து இரத்தம் சொட்டுச் சொட்டாக வழிந்தது போல வைத்து இருந்தனர். அதன் உச்சியில் ஏறி நின்று மூன்று முடுதாருகள் பாலை ஊற்றிக் கொண்டு இருந்தனர். தமது வாழ்வு பாழாவது தெரியாமல்.
 
பால் அந்த சாலையில் வழிந்தோடிக் கொண்டு இருசக்கர வாகனங்களை தடுமாற வைத்ததைக் கண்டு ரசிகக்குஞ்சுகள் காணொளி எடுத்து அதை உடனுக்குடன் வாட்ஸ்-ஆப்பில் வெளியிட்டு புலங்காகிதம் அடைந்தனர். ஆயிரம், ஐநூறு வாங்கி வாக்களித்த, மக்கள் வெட்கமே இல்லாமல் ஆளும் அரசை சபித்துக் கொண்டு சென்றனர் ஏதோ இவர்கள் அரிச்சந்திரன் குடும்பத்தில் பிறந்து வந்தவர்களைப் போல....
 
மேலும் ரசிகக்குஞ்சுகள் விசிலடித்தும், கரகோஷம் எழுப்பியும், தெருவில் செல்லும் மக்களின் காதை கிழிக்க வைத்து மகிழ்ந்தனர். காவல்துறையினர் தங்களது வாகனத்தை சாலையோரம் போக்குவரத்துக்கு இடையூராக நிறுத்தி வைத்து போக்குவரத்தை ஒழுங்கு படுத்திக் கொண்டு இருந்தனர். யாரையும் அடிக்க கூடாது என்று மேலிடத்திலிருந்து வந்த இரகசிய உத்தரவு. ஆனால் அவ்வழியே வேலை விசயமாக சென்றவர்களை தடியால் விரட்டினர்.
 
தியேட்டரின் முதலாளி முத்தையா மேலே மாடியில் நின்று கண்ணாடி வழியாக புன்முருவலுடன் பார்த்துக் கொண்டு நின்றார். திடீரென்று பரபரப்பு கருப்பு நிறத்தில் BMW கார் வந்து நிற்க, எம்.எல்.ஏ. வந்து விட்டாரோ என்று பயந்த காவல்துறையினர் அதிரடியாத சூழ்ந்திட, பிறகுதான் தெரிந்தது வந்தவர், அம்மாவட்ட வெல்டிங் தலைமை ரசிகர் மன்ற செயலாளர் செல்லத்துரை காரில் வந்து இறங்க, ரசிகர் வட்டம் சூழ்ந்து கொண்டு செயலாளர் செல்லத்துரை வாழ்க என்று கோஷமிட, வேறு வழியின்றி செயலாளரை உள்ளே அழைத்து கொண்டு விட்டனர்.
 
மாலைக்காட்சி தொடங்குவதற்கு சற்று நேரமே இருந்தது, திடீரென்று அலறல் சத்தம் கேட்டு கூட்டம் ஓடிப் போய் பார்க்க பதாகையின் மேலே நின்று தலைவனுக்கு பாலுற்றிக் கொண்டு இருந்தவன், சாரத்தின் பிடியிலிருந்து நழுவி கீழே விழுந்து இரத்த வெள்ளத்தில் துடித்தான். தலைவனுக்கு பாலாபிஷேகம் செய்தவன் இப்போது இரத்தாபிஷேகம் செய்து கொண்டு மயக்க நிலைக்கு போனான். உடல் மண்ணுக்கு, உயிர் தலைவனுக்கு.
 
கில்லர்ஜி தேவகோட்டை

Share this post with your FRIENDS…

32 கருத்துகள்:

  1. சிவப்பு ரத்தம் எனில் வெள்ளைப்பால் ஊத்தத்தானே வேணும் கில்லர்ஜி.. ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:))..

    இப்படி எத்தனையோ கூத்துக்கள் நடக்கின்றன எனத்தான் கேள்விப்படுகிறோம், கோமாளி எனச் சொல்வதை விட, மூடர்கள் எனத்தான் சொல்லோணும், வீட்டில் சமையலுக்கு பொருள் வாங்கக் காசில்லை, ஆனா இப்படி பால் ஊற்றவும் படம் பார்க்கவும் பணத்தை வட்டிக்கு வாங்கியும் சிலர் செலவிடுகின்றனராம்.. என்னத்தைச் சொல்வது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சிவப்பு ரத்தம் எனில் வெள்ளைப்பால் ஊத்தத்தானே வேணும்//

      அடடே வாங்க அதிரா இதுவும் சரிதான். தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு
  2. இப்படியான மூடர்கள் நம் ஊரில் மிக அதிகம் தான்...... சென்ற தமிழகப் பயணத்தில் இப்படியான மூடர்கள் ஊர்வலமாக சென்ற காட்சியை நேரடியாக பார்த்து நொந்து போனேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி இதற்கு முடிவே இல்லாமல் போய் விட்டது.

      நீக்கு
  3. ரசகர் மன்றக் குஞ்சுகள் என்ற போர்வையில் முட்டாள்கள் தமிழகத்தில் மிக அதிகம். ராகவேந்திரா படத்தின்போது, தியேட்டர் நுழைவாயிலில் பெரிய தாம்பாளத்தை வைத்து, அதில் பாலைக் கொட்டி, அதில் காலை வைத்துத்தான் தியேட்டருக்குள் போகமுடியும்படி மதுரையில் செய்திருந்தனர். படம் பார்க்க வருபவர்களின் காலை பாலால் கழுவி விடுகின்றனராம். குடும்பத்தை கவனிக்க முடியாத கசடுகள் இவர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே அப்படியா ?
      நான் படித்த விடயம்.

      ராகவேந்திரா படம் வெற்றியடைய நூறு ரசிகர்கள் மேட்டுப்பாளையத்தில் அம்மனுக்கு வேண்டுதல் வைத்து பின்னோக்கிய முப்பது கி.மீ நடந்து சென்றனர்.

      ஆனாலும் அம்மன் கடைக்கண் பார்க்கவில்லை காரணம் படம் தோல்வி அடைந்தது...

      நீக்கு
  4. குறைமனம் கொண்ட குரங்குகள். இவர்கள் அறியாமையை, வெறியை காசாக்கிக் கொள்ளும் நடிக நடிகையர்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம்ஜி சரியாக சொன்னீர்கள்.

      நீக்கு
    2. ஸ்ரீராம் முன்பெல்லாம் இப்பூடியெல்லாம் பேசமாட்டாரே:).. இப்போ அதிகமான வார்த்தைகள் பாவிக்கிறார்ர்:), நிறைய மாறிட்டீங்க ஸ்ரீராம்:)))

      நீக்கு
    3. அச்சச்சோ...   என்ன அதிரா இப்படிச் சொல்லிட்டீங்க...  நான் நல்லவனா கெட்டவனா?!

      நீக்கு
    4. நாயகனாக இருந்தால் நல்லவர்
      வில்லனாக இருந்தால் கெட்டவர்

      இதுதான் தமிழக மக்களின் அளவீட்டு முறை ஜி.

      நீக்கு
    5. ஸ்ரீராம், நாங்கள் புளொக் பக்கம் காணாமல் போன இந்தக் காலத்தில என்னமோ நடந்திருக்குதுபோல ஹா ஹா ஹா... முன்பெனில் சில வார்த்தைகள் பாவிக்க மாட்டீங்கள் இப்போ பாவிக்கிறீங்கபோல இருக்கு அதைப் பார்த்து வியந்திட்டேன் நான்ன்ன்ன்ன்ன்ன்ன்:))).. ஆனாலும் நீங்கள் நல்லவர்தான் அதில் எதுக்கு சந்தேகம்..

      நீக்கு
  5. இப்படிப்பட்ட மூடர்கள் தமிழகத்தில் மிக அதிகம் ..
    கண்ணால் பார்க்கின்றோமே..

    நாற்பது வருசங்களுக்கு முன்னால் தமிழ்க் குஞ்சுகளின் வேலை வேறு மாதிரி...

    சாணி எடுத்து போஸ்டரில் அடிப்பது.. சினிமா கொட்டாயில் ஆபாசமாகக் கத்துவது..

    எல்லாம் பொர்ச்சி தான்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி ஆம் இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் அதிகம்...

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. நாட்டில் நடப்பவற்றை அருமையாக எழுதி இருக்கிறீர்கள். தத்தம் வாழ்வில் ஒரு பொழுது போக்கு அம்சமாக சினிமாவை எடுத்துக் கொள்ள தெரியாத மக்கள். இப்படி தங்கள் உயிரை பணயமாக கொடுக்க வேண்டுமா? இந்த நிலை என்று திருந்தி மாறுமோ? ஆண்டவனுக்கே வெளிச்சம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ இந்த மக்களை இறைவன்தான் காப்பாற்ற வேண்டும்.

      நீக்கு
  7. ஆம் சார்.
    கடந்த பொங்கல் பட ரிரீஸில் நடந்ததை வைத்து எழுதியது போல் தோன்றுகிறது.
    தமிழ் மக்களின் சினிமா மற்றும் கிரிக்கெட் வெறியை வைத்து பெரிய வியாபாரச் சுரண்டலே நடக்கிறது.
    ஒருவர் ரிட்டையர் ஆகிறார் என பிள்ட் அப் செய்தே கடந்த இரு மாதம் யேமாற்றுவேலையும் நடந்தது.
    ஆகஸ்டு பத்து அன்று ஒரு படம் வெளியாக இருக்கிறது. உடனே அவர் வாயிலிருந்து பொன்னான அரசியல் கருத்துக்களை எதிர்ப்பார்க்கலாம்.
    மக்கள் எப்போதுதான் விழித்துக்கொள்வார்களோ தெரியலை.
    தியேட்டர் முதலாளி பெயரில் நேற்று ஒரு முத்தையா உனிவர்ஸ் ரிரீஸ் ஆகி இருக்கு.
    அது குறித்து அட்ரா சக்கை விரைவில் எழுதுவார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே
      இது காலம், காலமாக நிகழ்ந்து கொண்டே வருகிறது.

      தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

      நீக்கு
  8. பதில்கள்
    1. வாங்க ஜி இதற்கு பெற்றோர் இன்னும் அடிபட வேண்டும்

      நீக்கு
  9. கில்லர்ஜி இந்த லூசுங்க நம்மமக்கள் இப்படி இருக்கற வரை நாடு உருப்படாது. என்னவோ வளர்ச்சி கல்வி ன்னு டபாய்க்கிறாங்க..ஆனா இன்னமும் இப்ப்டியான கூட்டம் கூடுதே அல்லாமல் பாத்தீங்கனா...ஒரு அறிவியலாலர் பேசுவதைக் கேட்க மாணவர்கள் இல்லை. நான் இதை நேரடியாகக் கண்டேன். அந்த வகுப்பில் நான் இருக்க நேர்ந்தது சமீபத்தில் நான் இருக்கற ஊர் பகக்துலுள்ள தமிழ்நாட்டுப் பகுதி பொறியியல் கல்லூரியில். அறிவியல் அறிவுள்ளவர் பேசுகிறார் கேள்வி கேட்கிறார் ஆனால் பசங்க என்ன செய்யறான்றத பின் இருக்கையில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். நொந்து போனேன். அதுதனியார் கல்லூரி. பார்த்த மாணவர்கள் முகத்தில் கல்விக் களை இல்லை. ஆங்கிலம் புரியவில்லை. அதை விடுங்கள் அது பரவாயில்லை, பாடத்திலும் அறிவில்லை முன்னுக்கு வர வேண்டும் என்ற ஆர்வம் இல்லை. இவர்கள் வேலைக்கான காம்பஸ் நேர்முகத் தேர்வில் ஒழுங்காகப் பதில் சொல்வதில்லை என்று அழைத்த ஆசிரியை வருத்தப்பட்டாங்க

    இதே சமயம் ஈரோடு மகேஷ் அல்லது டிவி புகழ், அல்லது சினிமாக்காரங்களை பேச விடுங்க அவ்வளவுதான்..வகுப்பு பசங்க அப்படியே வாயைப் பிளந்து கேட்பாங்க.. முந்தி வீடியோ ஃபோட்டோன்னு எடுத்து தள்ளுவாங்க.
    பேசாம சினிமாக்காரங்க, டிவிக்காரங்களை பொறியியல் பாடம் நடத்தச் சொன்னாலோ? என்ன சொல்றீங்க கில்லர்ஜி?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      தாங்கள் சொல்வது போல் திரைப்பட கூத்தாடிகளை அழைத்து வந்தால் ஒருக்கால் இவர்கள் தலையில் பாடம் ஏறலாம்.

      நீக்கு
  10. இன்னும் எழுத நினைத்தேன் ஏற்கனவே எழுதி வைத்திருக்கிறேன். எனவே இங்கு கட் செய்து கொள்கிறேன்.
    சினிமா விழாக்களில் கூடும் கூட்டத்தைப் பார்த்திருக்கீங்கதானே...எல்லாம் இளைஞர்கள்...

    நீங்கள் சொல்லியிருக்கும் நிகழ்வு பாலக்கட்டில் கூட நடந்தது இல்லையா...விழுந்து இறந்து போனான் அந்தப் பையன்....விஜய் படம் என்று நினைக்கிறேன்...தானா திருந்தினாதான் உண்டு, கில்லர்ஜி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது அறச்சீற்றம் ஏதோவொரு பதிவை தயார் செய்ததிலிருந்து சிறுபாகத்தை எடுத்து கொட்டியது போலிருக்கிறது...

      நீக்கு
  11. இந்த நிலை மாறும் காலம் வரும்

    பதிலளிநீக்கு
  12. இவர்களில் பலரும் குடும்பத்தையும், தாய், தந்தையரையும் விரட்டி விரட்டிக் காசு பிடுங்கிக் கொண்டு வந்திருப்பார்கள். என்னைக் கேட்டால் எந்த நடிகருக்கும் ரசிக மன்றமே இருக்கக் கூடாது. இருந்தாலும் இம்மாதிரியான செயல்களில் ஈடுபடக் கூடாது. இதற்கு ஓர் அவசரச் சட்டம் பிறப்பித்தாலும் பரவாயில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      நீங்கள் சொல்வது சரியே ஆனால் அரசு செய்ய மாட்டார்கள் காரணம் அவர்கள் திரைத்துறையில் இருந்து வந்தவர்கள்.

      இப்படி கூமுட்டைகள் இவர்களுக்கு தொடர்ந்து வேண்டும்.

      நீக்கு
  13. ஆக... சாகுறதுக்கு முன்னாடியே அவனே அவனுக்கு பால் ஊத்திக்கிட்டான்னு சொல்லுறீங்க....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே
      நான் எங்கே சொன்னேன் ? நீங்கள்தான் சொல்றீங்க...

      நீக்கு
  14. தமிழகம் படும்பாடு.

    பதிலளிநீக்கு