சனி, ஏப்ரல் 23, 2016

கவிஞர் வைகறை அவர்களுக்கு அஞ்சலி...


வலையுலக நட்பூக்களுக்கு... புதுக்கோட்டை கவிஞர் திரு. வைகறை அவர்கள் மரணமடைந்து விட்டார் என்பது அனைவரும் அறிந்ததே இவருடன் நான் ஒருநாள்தான் பழகினேன் மென்மையாக பேசியவர், அன்பானவர் இவருடைய நூல் வெளியீட்டு விழாவுக்கு எனக்கு அழைப்பிதழ் கொடுத்தார் ஆனால் அந்த தேதியில்தான் நான் அபுதாபி திரும்ப வேண்டியநிலை ஆகவே கலந்து கொள்ள முடியவில்லை இந்த இளம் வயதில் இவருக்கு மரணம் வந்தது நம்பமுடியாத உண்மை இவரின் இழப்பை சகோதரி ஜோஸ்ஃபின் தனது 4 வயது மகனுடன் எப்படித்தான் தாங்கி கொண்டு வாழப்போகின்றாரே... அவருக்கு இறைவன் மன தைரியத்தை கொடுத்து தனது மகனில் நண்பர் வைகறையை காணும் பாக்கியத்தை கொடுப்பாராக... மரணம் தவிர்க்க இயலாதது ஆனால் இந்த மரணம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.
வேதனையுடன்...
தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி.
01.திரு. தி. தமிழ் இளங்கோ, 02.திரு. கரந்தை ஜெயக்குமார் ஆசிரியர்,
03.முனைவர், திரு. B. ஜம்புலிங்கம், 04.கவிஞர் திரு. சோலச்சி
05.திரு. கில்லர்ஜி, 06.கவிஞர் திரு. நா. முத்து நிலவன்
07.கவிஞர் திரு. வைகறை, 08.கல்வி அதிகாரி திருமதி. ஜெயா
09.திருமதி. மீனா, ஆசிரியர் 10.திருமதி. மாலதி, ஆசிரியர் 
11.கவிஞர் திருமதி. மு. கீதா அவர்கள் இடம் புதுக்கோட்டை.

20 கருத்துகள்:

 1. உண்மை ஜி...ஜீரணிக்கமுடியாமல் இருக்கிறேன்...அவரைப்பற்றிய பதிவை எப்படி எழுதவென்றும் புரியவில்லை...

  பதிலளிநீக்கு
 2. தாங்க முடியாத இழப்பு சகோ.

  பதிலளிநீக்கு
 3. பதிவர் சந்திப்பில் சந்தித்தேன். நன்றாக பழகக்கூடியவர். அவரின் குடும்பத்தார்களுக்கு இறைவன் துணையாக இருக்கவும், அவரின் ஆன்மா சாந்தியடையவும் பிரார்த்திக்கிறேன்

  பதிலளிநீக்கு
 4. மனதுக்கு மிகவும் கஷ்டமான செய்தி.அவர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இறைவன் மன ஆறுதலை தர வேண்டும்.

  பதிலளிநீக்கு
 5. கவிஞர் வைகறை அவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

  பதிலளிநீக்கு
 6. அந்தநாள். மறக்க முடியாத நாள்தான்.

  பதிலளிநீக்கு
 7. மிகவும் வருத்தமான செய்தி அண்ணா... அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

  பதிலளிநீக்கு
 8. மிக பெரிய இழப்பு அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்திக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 9. பாவலர் (கவிஞர்) எவரும்
  சாவடைந்ததாய் வரலாறில்லை
  வைகறை - நீ என்றும்
  வாழ்ந்து கொண்டிருக்கின்றாய்!

  ஓ! பாவலனே (கவிஞனே)!
  வைகறை என்னும் பெயரில்
  பாக்களால் அறிவை ஊட்டினாய்
  படித்தவர், கேட்டவர் நெஞ்சில் வாழ்கின்றாய்!
  கிட்ட நெருங்காமல் எட்டப் போய்
  எங்கிருந்தோ நம்மாளுங்க உள்ளத்தில்
  வாழும் வைகறையின் குடும்பத்தாருடன்
  துயர் பகிருகின்றோம்!

  பதிலளிநீக்கு
 10. கவிஞர் வைகறை பத்தி
  எதுவுமே தெரியாது எனக்கு
  ஆனால் ...
  இப்படிதான் அறிமுகம்
  ஆவார் என்று நினைத்ததே இல்லை
  அவரது ஆன்மா இறைவனிடம்
  சாந்தி கொள்ளவும்...
  அவரது குடும்பத்தாருக்கு
  ஆறுதல் கிடைக்கவும் இறைவனிடம்
  பிரார்த்திப்போம்...

  பதிலளிநீக்கு
 11. கவிஞர் வைகறை அவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டுவோம்..

  பதிலளிநீக்கு
 12. முகநூலிலும் பார்த்தேன். அறிமுகமே இல்லை எனினும் இளவயது மரணம் மனதைப் பாதிக்கத் தான் செய்கிறது. அவர் குடும்பத்தாருக்கு மன வலிமையை இறைவன் கொடுக்கட்டும். ஆழ்ந்த இரங்கல்கள்.

  பதிலளிநீக்கு
 13. கடந்த மாதம் அவர் மதுரை வந்திருந்த போது கடைசியாக பேசினேன் !அவர் இழப்பை என்னால் நம்ப முடியவில்லை :(

  பதிலளிநீக்கு
 14. என் ஆழ்ந்த இரங்கல்கள்

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...