தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, ஜூன் 06, 2015

தேவகோட்டை, தேவதை தேவகி.

 
என், நனவு தேவதை தேவகியும், நானும் தேவகோட்டை தியாகிகள் பூங்காவில் மாலை வேளையில், ஒருநாள்....
 
ஏங்க நாளைக்கு, நானும் உங்ககூட துணைக்கு சென்னைக்கு வர்றேங்க,
எதுக்கு ? துணைக்கு துணையா தொண்டை வலிக்கு வெணையான்னு போறதுக்கா ?
யேன் நான் வந்தா ? உங்களுக்கு அப்படியா இருக்கும் ?  
நானே, வேலை தேடிப் போறேன் எனக்கு அங்கே ஆளு இருக்கு, தேவையா ? நீ
எனக்குத் தெரியாம எவ ? அந்தச்சிறுக்கி ?
சிறுக்கியா ? யாரு ?  
நீங்கதானே, இப்பச் சொன்னீங்க யாரு ? அந்த தேவயானி.
அடி ஆக்கங்கெட்டகூவை, தேவயானின்னு சொல்லலே, தேவையா ? நீ ன்னு கேட்டேன்.
அப்படியா ? எனக்கென்னமோ சந்தேகமா ? இருக்கு.
உனக்கு, சந்தேகமென்ன இன்னைக்கு நேத்தா, என்னைக்கு உன்னை LOVE பண்ண ஆரம்பிச்சேனோ ? அன்னையிலேயிருந்து இருக்கே.
பின்னே, என்ன BANKல பணம் கெடக்குன்னு சொன்னீங்க, கல்யாணம் முடிஞ்சவுடனே ACCOUNTடே இல்லைன்னு, சொல்றீங்க.
பணம், கெடக்குன்னுதானே, சொன்னேன் என் பேரிலே கெடக்குன்னு சொன்னேனாடி ?  
சரி, சரி கோப்படாம சீக்கிரமா வேலைதேடி ஒரு நல்லவீடா, பார்த்துட்டு என்னைக் கூட்டிட்டு போங்க ! உங்க அம்மா புடுங்கு தாங்கலை.
உடனே எங்க அம்மாவை இழு, முதல்ல வேலை அப்புறமா சின்ன வீடு பார்த்து செட்டப் பண்ணிட்டு, உன்னைக் கூட்டிட்டுப் போறேன்.
என்னங்க ? சின்னவீடா ?  
அடியேண்டி... எதுக்கெடுத்தாலும் சந்தேகப்படுறே ?  
சரி, பார்த்து கவனமா போயிட்டு வாங்க ! பஸ்ஸூல தனி ஸீட்டாப் பார்த்து உட்காருங்க.
தனி ஸீட்டுன்னா, டிரைவர் ஸீட்லதான் உட்காரனும் எனக்கு டிரைவிங் தெரிஞ்சாத்தான், யாரையாவது வச்சு செல்வியப் புடிச்சுருவேனே.
அவ, யாருங்க செல்வி ?   
அடி, நாசமாப் போனவளே நம்ம ரூட்ல ஓடுற SELVI ROAD WAYS சை சொன்னேன்.
சென்னையில எங்கே ? தங்குவீங்க ?  
ஒரு தடவை, கல்யாணத்துக்கு போகும்போது தங்குனது போல நர்மதாவுலதான் தங்கனும்.
அவ, யாருங்க ? நர்மதா ?   
அடி, விளங்காமுடுமை நர்மதான்னுங்குறது லாட்ஜோட பேரு.
அப்படியா ? எனக்கு தெரியாதுல,
பார்க் வந்ததுக்கு பேசாம அருணாவுக்கு, போயிருந்தாலும் ரெண்டுமணி நேரம் நிம்மதியா இருந்துருப்பேன்.
அவ, யாருங்க ?   
அடி, முடுதாரு, முடுதாரு அருணா தியேட்டரே சொன்னேன்டி.
யேன், எதுக்கெடுத்தாலும் கோபப்படுறீங்க ?   
சரி, இதுக்குமேல இருந்தா ? ஏழரையாக்கிடுவே, கிளம்பு.  
ஏங்க, மணி ஏழுதானே ஆகுது.
நான், சொன்னது வேற முதல்ல சுந்தரி, சீச்சீ எந்திரி.
அது... யா...
அடியே, வாய் தவறி எந்திரின்னு சொல்றதுக்கு பதிலா, சுந்தரின்னு வந்துருச்சுடி.
சரி, நாளைக்கு ஊருக்கு போறீங்க, பாயசம் வைக்கனும் நம்ம பாலு ஸ்டோர்ல முந்திரி வாங்கி கொடுங்க.
சரி, சரி வா ! அப்படியே கோல்டன் காபி பார்ல ஒரு காஃபி சாப்பிட்டு போகலாம். 
 
சாம்பசிவம்-
சே... நனவு தேவதையைவிட, கனவு தேவதையே தேவலையோ ?


வியாழன், ஜூன் 04, 2015

முட்கள் 31

       மனிதனுக்கு ஆறறிவு என்று சொன்ன மனிதனுக்கு எத்தனை அறிவு ?      
மிருகத்திற்கு ஐந்தறிவு என்பது மிருகத்திற்கு தெரியுமா ?
அப்படியானால் ஆறறிவுக்கு மேலானது எந்த இனம் ?

தெய்வம் தனக்கு உயிர்ப்பலி கொடுவென்று, எந்த மனிதனிடம் கேட்டது ?
தெய்வ காணிக்கை என்று முடியை எடுப்பது மீண்டும் முளைப்பதாலா ?

இரக்கமில்லாத மனிதனின் இதயம் வேலை செய்யுமா ?
கொலை செய்தவனுக்கு மனிதனால் தண்டனையை கணிக்க முடியுமா ?

உயர் பதவியாளர்களின் உயிர் மட்டும் உயர்வாக மதிக்கப்படுவது ஏன் ?
Mr. T SUNAMI இவர், மட்டும் இவர்களை மதிப்பதில்லையே ஏன் ?
ஒருவேளை இவர் அகம்பாவம் அதிகம் உள்ளவரா ?

விஞ்ஞானத்தால் உலகம் அழியும் என்பது இறைவனுக்கு தெரியாதா ?
மெய்ஞானத்தால், இறைவனை கண்ட மனிதர்கள் உண்டா ?
உண்டெனில் இனிமேலும் காண்பதற்கு சாத்தியம் உண்டா ?

பூமியை பிரித்துக் கொண்ட மனிதனை, இறைவன் என்ன நினைப்பார் ?
பூமியை துளையிட்டது போல், வானத்தை, துளையிட்டால் நடப்பது என்ன ?

யானைக்கு, மதம் பிடித்ததென சொன்ன முதல் மனிதன் எந்த மதம் ?
மதத்தின் விளைவை அறிந்த மனிதன் தானும் பிடித்துக் கொண்டது ஏன் ?
உலகம் அழியப்போவது நாளை எனில் இன்றாவது மதங்கள் ஒழியுமா ?

ஆத்திகம் பேசிய சில மனிதருக்கு குழந்தை பிறந்ததில்லையே ஏன் ?
நாத்திகம் பேசிய பல மனிதருக்கு குழந்தை பிறந்து உள்ளதே ஏன் ?

உயிருள்ள, மனிதனைவிட உயிரற்ற பொருளுக்கு மதிப்பு உள்ளது ஏன் ?

மனிதனைத் தின்னும் மண்ணை, மனிதன் தின்ன முடியாதது ஏன் ?
மனிதன், உழைக்காமலேயே வாழ்வான் என இறைவன் எண்ணியதாலா ?

இறந்த, மனிதர்கள் பேயாகிறார்கள் என்பது உண்மையா ?
பேய்க்கும், சைத்தான் என்பதற்கும் வித்தியாசம் என்ன ?
உண்டென்றால் அவர்கள் எப்படி, எங்கு வாழ்கிறார்கள் ?
பேயைக் கண்டு அவர்களுடன், பேசிய மனிதர்கள் உண்டா ?
பேசினேன், என்று மந்திரவாதிகள் பொய் சொல்வது ஏன் ?
உண்மை எனில் அவர்களை, விஞ்ஞானிகள் விட்டு வைப்பார்களா ?

உயிர் பிரிவது கண்களின் வழியே என்பது உண்மையா ?
அப்படியானால் இறந்த பிறகும் கண்களுக்கு உயிர் இருப்பது எப்படி ?

சாம்பசிவம்-
இதுக்கெல்லாம் பதில் வேணும்னா ஓடிக்கிட்டு இருக்கிற, ரயிலை குறுக்கே பாஞ்சு நிப்பாட்டி, டிரைவர்ட்ட கேளும் அவர்தான் எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம்.

காணொளி

செவ்வாய், ஜூன் 02, 2015

Delhi, Doctor Don

எமது இனிய நண்பர் Bஜி in கோரிக்கையை ஏற்று Kஜி in அவசரடி.
(இது 2 G விவகாரமல்ல)
 
01.
டாக்டர் எனக்கு உருவங்கள் எல்லாமே வித்தியாசமா தெரியுது.
அப்படி எந்த  வகையான உருவங்கள் தெரியுது ?
காலையிலே எந்திரிச்சா கடன்காரன் எல்லாம் சொறிநாய் உருவத்துல காட்சி தர்றான்.
? ? ?

02.
டாக்டர் நான் ஆபரேஷன் செய்யலைனா... பிழைக்க மாட்டேனா ?
பிழைக்கலாம்தான், ஆனால்  நான் பொழைக்க முடியாதே..
? ? ?

03.
டாக்டர் என்னை எப்படியாவது காப்பாற்றிடுங்கள் அது உங்க கையிலதான் இருக்கு.
உண்மைதான் ஆனால்  அது இப்ப உங்க பையிலதான் இருக்கு.
? ? ?

04.
டாக்டர் எனது கணவருக்கு வர்ற சனிக்கிழமைதான் ஆப்ரேஷன் செய்வேனு ஏன்  அடம் பிடிக்கிறீங்க ?
அன்றைக்குதான் என்னைப் பிடிச்சுருந்த பீடை விலகுதுனு சோலந்தூர் சோஸியர் சோனைமுத்து சொல்லியிருக்காரே... இதனாலே உங்களுக்கு பிரச்சனை என்ன ?
இல்லை சனிப்பொணம் தனியாப் போகாதுனு சொல்வாங்க, அதான்....
? ? ?

05.
டாக்டர் எனது இடது கண் பார்வை இப்ப நல்லாத் தெரியுது ஆனால்  ஏற்கனவே நல்லாத்தெரிஞ்ச வலது கண் பார்வை தெரியலையே... ?
ஒரு நல்ல காரியம் நடக்கும்போது சில தவறுகள் நடக்கும் இதை அனுசரிச்சு போறதுதான் வாழ்க்கை.
? ? ?

06.
டாக்டர் போனமுறை நெஞ்சுவலிக்கு வேற மருந்து எழுதி தந்ததீங்களே....
உண்மைதான் இந்தக் கம்பெனி எனக்கு நிறைய கமிஷன் தர்றாங்களே...
? ? ?

07.
டாக்டர் என்னோட இருதய ஆப்ரேஷனுக்கு எவ்வளவு செலவு ஆகும் ?
நாளைக்கு வாங்களேன் பில்டிங் இஞ்சினியர் இருதயராஜ் கிட்டே கேட்டு சொல்றேன்.
அவருட்டே ஏன் கேட்கிறீங்க ?
அவர்தானே என்னோட புது கிளினிக் கட்டிக்கிட்டு இருக்காரு...
? ? ?

08.
டாக்டர் எனக்கு இரவு முழுக்க தூக்கம் வராமல் கஷ்டமாக இருக்கு.
பகல் நேரத்தில் ஆபீஸில் தூங்குவதை நிறுத்துங்க...
டாக்டர் நான் பகலில் வீட்டில்தானே தூங்குறேன்.
அப்ப எங்கே வேலை செய்றீங்க ?
இரவு நேரத்துல பேங்க்ல செக்யூரிட்டி.
? ? ?

09.
டாக்டர் இந்த மருந்தை தொடர்ந்து சாப்பிட்டால் எனக்கு குழந்தை பிறக்கும்னு சொல்றது நம்ப முடியலையே...
ஏன்  நம்பிக்கை இல்லை பலரும்  இதை சாப்பிட்டு பலன் அடைஞ்சிருக்காங்க...
இல்லை டாக்டர் எல்லார் வீட்டிலும் மனைவிதானே குழந்தை பெறுறாங்க அதானாலதான் கேட்டேன்.
? ? ?

10.
கங்கிராட்ஸ் நீங்க அப்பாவாகப் போறீங்க உங்க மனைவி கர்ப்பமாக இருக்காங்க...
அப்படினா என்னோட மனைவி அம்மாவாக முடியாதா ? டாக்டர்.
? ? ?

பகவான்ஜி படிச்சோமா, கருத்துரை போட்டோமானு போகனும் மறுபடியும் கொக்கியை போடக்கூடாது சொல்லிட்டேன்

குறிப்புகடந்த எனது பதிவு அந்த நாள்க்கு நான் பின்னூட்டம் இடவில்லை காரணம் பிறகு சொல்வேன்.