தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், ஜூலை 22, 2015

60 வருடம்.


சாம்பசிவம்-
ஐயா, இன்னும் எவ்வளவு விசயம் வச்சு இருக்கீங்க ?

Killergee-
6 மாதத்திற்கு உள்ளது கையிலிருக்கிறது, அடுத்த 60 வருடங்களுக்கு உள்ளது எனது மண்டையிலிருக்கிறது ஆனால் 60 வருடங்களுக்கு நான் இருப்பேனா ? 80 தான் பிரட்சினை.

CHIVAS REGAL சிவசம்போ- (தனக்குள்)
ஆனா, படிக்க இருக்கனுமே.....

ஞாயிறு, ஜூலை 19, 2015

கோயமுத்தூர், கோக்குமாக்கு கோபாலு.

அரிசிக்கும், அரசிக்கும் வித்தியாசம் சொல்லு ?
அரிசி மக்களுக்கும் உபயோகம், அரசி மன்னருக்கு உபயோகம்.
ஆசாரிக்கும், பூசாரிக்கும் வித்தியாசம் சொல்லு ? 
ஆசாரி மணியை வடிப்பாரு, பூசாரி மணியை அடிப்பாரு.
மெய்க்கும், பொய்க்கும் வித்தியாசம் சொல்லு ?
குடும்பத்தலைவி அழுதால் மெய், நடிகை அழுதால் பொய்.
காதலுக்கும், மோதலுக்கும் வித்தியாசம் சொல்லு ?
காதலாலே மோதல் வரலாம், மோதலால காதல் வராது.
காதலிக்கும், மனைவிக்கும் வித்தியாசம் சொல்லு ?
எது பேசினாலும், தேன்போல இனித்தால் காதலி, என்ன பேசினாலும் தேள்போல கடித்தால் மனைவி. 
அதிர்ஷ்டம், துரதிஷ்டம் வித்தியாசம் சொல்லு ?
அது இஷ்டத்துக்கு வந்தால், அதிர்ஷ்டம், துறத்திக்கொண்டு போனால் துரதிஷ்டம்.
இயற்கைக்கும், செயற்கைக்கும் வித்தியாசம் சொல்லு ?
10 மாதம் கழித்து குழந்தை பிறந்தால் இயற்கை, 8 மாதத்துல ஆபரேஷன் செய்து எடுத்தால் செயற்கை.
மணமேடைக்கும், பிணமேடைக்கும் வித்தியாசம் சொல்லு ?
கழுத்துல மாலையோட நடந்து போனால் மணமேடை, மாலையோட தூக்கிகிட்டு போனால் பிணமேடை.
மகளுக்கும், மருமகளுக்கும் வித்தியாசம் சொல்லு ?
இருக்கிறதை, அள்ளிக்கிட்டு போறவ மகள், இருக்கிறவனை தள்ளிக்கிட்டு போறவ மருமகள்.
உலோக தங்கத்துக்கும், மாமாமகள் தங்கத்துக்கும் வித்தியாசம் சொல்லு ?
உலோக தங்கத்தை உரசினால் சேதாரமாகும், மாமன் மகள் தங்கத்தை உரசினால் சேர்மானமாகும்.
பலனுக்கும், பிரதிபலனுக்கும் வித்தியாசம் சொல்லு ?
காதலிக்கு, கேட்காமலே வாங்கிகொடுப்பது பிரதிபலனை எதிர்பார்த்து, மனைவி கேட்டாலும் வாங்கி கொடுக்காமலிருப்பது பலன் இல்லை எனதெரிந்து.
பலி கொடுப்பதற்கும், பழி வாங்குவதக்கும் வித்தியாசம் சொல்லு ?
நம்ம பணத்துல, ஆடுவாங்கி கொடுத்தால் அது பலி, பிடிக்காதவன் ஆட்டைப்புடிச்சு கொடுத்தால் அது பழி.
மகனுக்கும், மருமகனுக்கும் வித்தியாசம் சொல்லு ?
கொஞ்சம், கொஞ்சமா சுரண்டுவாரு மகன், மொத்தமா வரண்டுவாரு மருமகன்.
பணக்காரனுக்கும், பிச்சைக்காரனுக்கும் வித்தியாசம் சொல்லு ?
பிச்சைக்காரனுக்கு, நினைத்த இடமெல்லாம் தூக்கம் வரும், பணக்காரனுக்கு நினைத்தாலும் தூக்கம் வராது.
கோயிலில் நிற்கும் பக்தனுக்கும், திருடனுக்கும் வித்தியாசம் சொல்லு ?
கோயில் உண்டியல்ல, பணத்தை போடுறவன் பக்தன், அந்த பணத்தை எடுத்துக்கிறவன் திருடன்.
அன்றைய அரசியல், இன்றைய அரசியல் வித்தியாசம் சொல்லு ?
அன்றைய அரசியல்வாதிகள் நாட்டு மக்களுக்கு உழைத்தார்கள், இன்றைய அரசியல்வாதிகள் வீட்டு மக்களுக்கும், சின்னவீடுகளுக்கும் உழைக்கிறார்கள்.
ORIGINALலுக்கும், DUPLICATEக்கும் வித்தியாசம் சொல்லு ?
ஸூட்டிங்கில, ORIGINALலா பல்டி அடிக்கிறவருக்குபேரு DUPMASTAR, சும்மா நடிச்சு காண்பிச்சவருக்கு பேரு ORIGINAL.
ABU DHABI க்கும், DUBAI க்கும் எழுத்து வித்தியாசம் சொல்லு ?
ABU DHABI யிலிருந்து, DUBAI எடுக்கலாம், DUBAI யிலிருந்து ABU DHABI முழுமையா எடுக்கமுடியாது.
ரயிலுல நாம ஏறுவதற்க்கும், ரயிலு நம்ம மேலே ஏறுவதற்கும் வித்தியாசம் சொல்லு ?
ரயிலுல நாமஏறினா போறஇடம் இராமேஸ்வரம், ரயிலு நம்ம மேலே ஏறினா போறஇடம் எமனேஸ்வரம்.
முட்டாளுக்கும், அறிவாளிக்கும் வித்தியாசம் சொல்லு ?
என்னத்தையாவது கேட்கிறவன் முட்டாள், எதையாவது சொல்லி சமாளிக்கிறவன் அறிவாளி.
சரி எனக்கு வேலையிருக்கு, நான் வர்றேன்.

வியாழன், ஜூலை 16, 2015

Mahesh Kumar.

அரபு நாடுகளில் பிற மதத்தினருக்கு மரியாதை இல்லை என்பது ஒரு காலத்தில் குறையாகவே கருதப்பட்டது உண்மையோ ? என்னவோ ? தற்கால நடைமுறையில் மாற்றம் தெரிகிறது, காரணம் ? படித்த திறமைசாலிகளின் வருகை அதிகரித்ததனால் மரியாதை கிடைக்கத்தான் செய்கிறது பெருங்கொண்ட பதவிகளில் நிறையப்பேர் இருக்கத்தான் செய்கிறார்கள், பிறநாட்டவருடன் ஒப்பிடும்போது இந்தியன் உயர்ந்துதான் நிற்கிறான் இதில் ஐயமில்லை. உதாரணம் மேலே காணும் இந்த najm Visa Card டில், (najm என்றால் அரபு மொழியில் நட்சத்திரம் என்று அர்த்தம்) இது வியாபார நோக்கத்தில் உருவாக்கப்பட்டது எனினும் முன்பெல்லாம் இந்த மா3 காணவே முடியாது, இந்த MAHESH KUMAR என்ற பெயரில் ஒருவர் இருக்கிறாரோ ? இல்லையோ ? ஆயினும் Shopping Mall லில் விளம்பரப் போர்டில் இதைப்பார்த்ததும் எனக்குள் சந்தோஷம் காரணம் The Great இந்தியனின் பெயர்.