பொருளாதாரத்தில் நம்நாடு முன்னேறி விட்டது நாம் மூன்றாவது
இடத்தைப் பிடித்து விட்டோம் இரண்டாவது இடத்தைப் பிடித்து விட்டோம்
நாம் வல்லரசு ஆகிவிட்டோம் என்று நமது அரசியல்வாதிகள் பெருமையாக சொல்கிறார்கள்
முதலில் மக்களின் மனதில் நல்ல அரசு என்று பெயர் எடுக்கவேண்டும் பொருளாதாரம்
முன்னேற்றம் என்பது நாட்டுக்கோ, நாட்டு மக்களுக்கோ அல்ல அரசியல்வாதிகளுக்கும்,
அவரது மக்களுக்குமே என்பதே உண்மை பொருளாதார முன்னேற்றம்
என்றால் முதலில் அந்நாட்டில் பிச்சைக்காரர்கள் இருக்கவே கூடாது அதுதான் முதல்படி
காரணம்.
அந்நிய தேசத்தார் நமது நாட்டில் கால் வைத்ததும் அவர்கள் சந்திக்கும் முதல்
நபர் பிச்சைக்காரர்களே ஆம் விமான நிலையங்களின் இவர்களைக்கண்டு தெறித்து ஓடும் நிலை
பலருக்கும் இருக்கிறது காரணம் சில்லரை இல்லையென்றால் கேட்க மாட்டார்கள் விடாமல்
துரத்தி வருவார்கள் இதன் காரணமாக பல தேசத்தார் இவர்களுக்கு10 டாலர்கூட
போட்டு விட்டுப்போய் விடுவார்கள் இதை இந்திய பணமாக மாற்றும் கும்பல்கள் அவர்களிடம்
இந்த டாலரை அதட்டி அடிமாட்டு விலைக்கு வாங்கி போய் விடுவார்கள் இன்றைய நிலவரப்படி
ஒரு டாலருக்கு இந்திய ரூபாய் 67.00 வரும் அயல் தேசங்களில்
இந்தியரின் மதிப்பு குறைந்து போவதற்க்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் என்பதை யாரும்
மறுக்க முடியாது பெறும் பாலும் அமெரிக்கர்களிடம் சில்லரை காசுகள் இருக்கும் அதை
போடுவார்கள் அதேநேரம் அரபு நாடுகளிலிலிருந்து இந்தியா வரும் இந்தியர்களிடம்
பெரும்பாலும் இந்திய ரூபாய்கள் இருக்காது கண்டிப்பாக சில்லறையும் இருக்காது.
இந்த
பிச்சைக்காரர்கள் இவர்களைக் கண்டதும் விரட்டி வந்து நச்சரிப்பார்கள் இந்திய ரூபாய்
இல்லையென்றால் திர்ஹாம்ஸ் கொடுங்கள், இல்லையென்றால் ரியால் கொடுங்கள், குவைத்
தினார் கொடுங்கள் அதுவும் இல்லையென்றால் சர்வ சாதாரணமாக கேட்பார்கள் அமெரிக்க
டாலர் கொடுங்கள் என்று இதில் இவர்களில் பலரும் தன் வாழ்நாளில் டாலர்
பார்த்திருக்கவே மாட்டார்கள் அவர்களே மூன்று வருடத்திற்குப் பிறகு தனது மனைவி, குழந்தைகளை காணும் ஆவலில் இருப்பார்கள் இந்த வேதனை
இவர்களுக்குப் புரிவதில்லை அரசாங்கம் இவர்களைப் பற்றியோ அல்லது இவர்களது
வாழ்வாதாரத்தைப் பற்றியோ அல்லது நாட்டின் கௌரவப் பிரச்சனை பாதிக்கின்றதைப்
பற்றியோ கவலை கிடையாது இன்றைய அரசியல் தலைவர்களுக்கு அடுத்து எந்த நாட்டுக்கு
போகலாம் என்ற சிந்தனையே தவிர வேறொன்றுமில்லை.
அரபு நாடுகளில் பிச்சை எடுப்பது சட்டப்படி
குற்றமாக்கப்பட்டுள்ளது போலீசார் கண்டால் கைது செய்து அதற்குறிய தண்டனையை
கொடுக்கின்றார்கள் இருப்பினும் இங்கும் பிச்சை எடுக்கும் கூட்டம் இருக்கிறது
கண்டிப்பாக இந்தியர்கள் கிடையாது நம்மூர் மாதிரி துண்டு
விரித்தெல்லாம் சாலையில் உட்கார முடியாது கண்டிப்பாக அரேபியர்களிடம் கேட்க
மாட்டார்கள் காரணம் அவன் பிடித்து நிறுத்தி போலீஸை வரவழைத்து கையில் ஒப்படைத்து
விட்டுதான் மறுவேளை பார்ப்பான் காரணம் இது எனது நாட்டுக்கும், அவமானம் இஸ்லாம்
கொள்கைப்படியும் குற்றம் என்று நினைக்கின்றான் தனியாக சிக்கும் இரக்ககுணம் உள்ள
இந்தியர்களிடம் முகத்தைப் பார்த்தே கணித்து விடுவான் திடீரென முழுக்கை சட்டையை
தூக்கிக்காண்பிப்பான் அதைக்கண்டதும் நமக்கு மயக்கமே வந்து விடும் காரணம் அந்தக்கை
முழங்கை வரை நாய் கடித்து குதறினால் எப்படியிருக்கும் ? அதைப் போலிருக்கும் எனது
கம்பெனி என்னைக் கைவிட்டுருச்சு நாட்டுக்கு போகனும் பணமில்லை என்பார்கள் என்னை விட்டால்
போதுமென ஏதாவது கொடுத்து விட்டு ஓடிவிடுவார்கள் இந்தியர்கள்.
(இந்த
இடத்தில் ஒரு திர்ஹாம்ஸ் போடும் பிச்சை என்பதை மறந்து உதவி என்ற நிலைமாறி விடுகிறது அதன் காரணமாக பத்து அல்லது இருபது திர்ஹாம்ஸ் வரை கிடைத்து
விடும்)
இவர்களை
மறுவாரமோ, அல்லது மறுமாதமோ வேறிடத்தில் நாம் காணலாம் மீண்டும் இதே புண்களுடன்
நம்மிடம் கேட்பான் காரணம் இங்கு புண்கள் ஆற்றப்படுவதில்லை ஆக்கப்படுகின்றன ஆம்
நண்பர்களே தனது கையை தானே நாசமாக்கி பிழைப்புக்காக இப்படி வாழ்கிறார்கள்
என்னிடமும் இந்த வகை ஆசாமிகள் சிக்கினார்கள் ஆரம்ப காலத்தில் நானும் மனம் இளகி
உதவியிருக்கிறேன் இது தொடரும் போதுதான் நான் அவர்களிடம் கேள்வி கேட்க ஆரம்பித்தேன்
இதில் பலருக்கும் என்னை சட்டென அடையாளம் தெரிந்து விடும் இதனால் ஒதுங்கி
விடுவார்கள் காரணம் மீசையும் தொப்பியும் எனது ஃபேவரிட் அடையாளம் ஒருமுறை என்னிடம்
இதேபோல் பணம் கேட்கும்போது நான் சொன்னேன் எனது காரில் ஏறு ஹோஸ்பிடல் போவோம் இதன்
முழு செலவும் நான் ஏற்கிறேன் மறுநொடி காணாமல் போய் விடுவார்கள்
அவர்களுக்குத் தெரியும் காரை நேரே போலீஸ் ஸ்டேஷனுக்கு விட்டு விடுவேன் என்பது இதுவரை நான்
சொன்னது பாக்கிஸ்தானியர்களின் பாணி.
அடுத்து... சில பெண்களைப்பற்றி பார்ப்போமா ? ஒதுக்குப்புறமான சாலையோரங்களில்
(தற்போது
இந்த வகைகள் குறைந்து விட்டது)
பார்க்கலாம் சில பெண்கள் பணம்
கொடு என கையேந்துவார்கள் அரபு பேசத்தெரியாதவர்கள் குழம்பித்தான் போவார்கள் இவள்
பிச்சைதான் கேட்கிறாளா ? இல்லை ‘’அந்த’’ வகையான
பெண்ணோ ? என்று
ஃப்ளாட்டுகளில் பெல் அடிக்கும் திறந்தால் இந்தவகை பெண்கள் கதவைத் திறப்பது
இந்தியர் என்றால் பணம் கேட்பார்கள் இந்தியர்களும் உடன் பணத்தைக் கொடுத்து அனுப்பி
விடுவார்கள் காரணம் இவள் வேறு மாதிரி கதையை மாற்றிப் பேசினால்
சட்டப்படி ஆபத்து நமக்குத்தான் என்பது தெரியும் ஒரு வேளை
கதவைத்திறந்தது பாக்கிஸ்தானியர் என்றால் உடன் இடத்தைக்காலி செய்தி விடுவார்கள்
காரணம் அவர்களின் பார்வையே வேறுவகை மற்றபடி கதவைத் திறப்பது அரபு பேசத்தெரிந்த
நாட்டுக்காரர்கள் என்றால் ஏதாவது கேட்டு தவறுதலாக வந்து விட்டேன் என்று போய்
விடுவார்கள்.
இதில் ஆச்சர்யம் என்னவென்றால் ? நம்மிடம் பிச்சை கேட்பது தேவதைகள் ஆம் நண்பர்களே தேவதைகள்
நம்மிடம் பிச்சை கேட்டால் எப்படியிருக்கும் உண்மையிலேயே நம்மூர்க்காரர்களிடம்
என்னைக் கல்யாணம் செய்து கொள்கிறாயா ? எனக்கேட்டால் நான் நகை போட்டு செய்து கொள்கிறேன் என்பார்கள் நான் கூட இப்படி
நினைத்து இருக்கிறேன் என்னவொன்று இவளுக்கு நமது சம்பளம் ஃபெர்ப்யூம் வாங்கி
கொடுக்கவே பத்தாது ஆகவே நானும் பின் வாங்கி கொண்டேன் ஆம் நண்பர்களே இந்தப்பெண்கள்
உபயோகப்படுத்தும் ஃபெர்ப்யூம் வகைகள் நம்மில் பலர் வாழ்நாளில் வாங்கியே இருக்க
மாட்டோம் அவ்வளவு அழகாக இருப்பார்கள் இந்த அழகிகளை கட்டிக்கொண்டு நாம் காலம்
தள்ளமுடியுமா ? காலம்
நம்மைத் தள்ளிவிடும் இதுவரை மேலே நான் சொன்னது பாலஸ்தீனியப் பெண்களும் சிறிய
அளவில் எஜிப்த் பெண்களும் கடைப்பிடிக்கும் பாணியே இது..
இந்நாட்டில் சமீபத்தில் இதை முற்றிலுமாக ஒழிக்கப்பட
காவல்துறை புதிய குழு அமைத்து இருக்கிறது அதன்படி கடந்த மார்ச் மாதம்
அறிவிக்கப்பட்டதை துபாயிலிருந்து வெளியாகும் ‘’தினத்தந்தி’’ வெளியிட்டு இருந்தது அதன்
செய்தியைத்தான் நான் மேலே புகைப்படமாக கொடுத்து இருக்கிறேன்.
அமெரிக்காவிலும் பிச்சை எடுப்பவர்களை பார்க்க முடியும் ஆனால் இவர்கள் புடுங்கி எடுக்கமாட்டார்கள்
பதிலளிநீக்குதங்களின் கருத்துரையை பதிந்தமைக்கு நன்றி நண்பரே...
நீக்குஉண்மை தான் சகோ நன்றாகச் சொன்னீர்கள். எனக்கு ரொம்பப் பிடித்த பாடல் இது .... பூனைக்கு விளையாட்டு சுண்டெலிக்கு மரணமாம். அது போல ஆண்டவனின் ஓய்வு நேர விளையாட்டு........ நன்றி வாழ்த்துக்கள் .!
பதிலளிநீக்குவருக சகோ தங்களின் வருகைக்கு நன்றி
நீக்குவணக்கம் அருமை நண்பரே!! நாடு வளர்ச்சி பாதையை நோக்கி வளருதுனு வெறும் புள்ளி விவரம் படிக்கறவங்களுக்கு எப்படி தெரியும்!! அதுபோலதான் பிச்சைகாரர்களுக்கும் கண்டிப்பா விவரம் வச்சிருப்பாங்க!! அனைத்து விசயங்களும் அருமை!!
பதிலளிநீக்குஅன்புடன் கரூர்பூபகீதன்!!!
மிகச்சரியான கருத்துரையை வைத்தீர்கள் நண்பரே... நன்றி
நீக்குபாத்திரம் அறிந்து பிச்சை என்பது மாறி வாசனை அறிந்து பிச்சை என மாறி விட்டது.
பதிலளிநீக்குஹாஹ்ஹா மிகவும் ரசித்தேன் தங்கள் கருத்தை நன்றி நண்பா...
நீக்குஉண்மை நண்பரே
பதிலளிநீக்குஉண்மை
தம +1
நண்பரின் வருகைக்கு நன்றி.
நீக்குஎன்ன கொடுமை இது. ஒழிக்கப் பாட வேண்டும் என்று சொல்வதைவிட தீர்க்கப் பட வேண்டும் என்றுநினைக்கிறன்.
பதிலளிநீக்குபேசித்தீர்க்கப்படும் பொழுது தானாகவே ஒழிந்து விடும் நண்பரே... வருகைக்கு நன்றி.
நீக்குவறுமை கொடியது...
பதிலளிநீக்குவருக ஜி வறுமை கொடியதே...
நீக்குஇந்த மாதிரி ஏமாற்றுவது திருப்பதியில் அதிகம் .வந்த இடத்தில் பணம் பிக்பாக்கெட் அடிக்கப் பட்டு விட்டதாகவும் ,ஊருக்குப் போக காசு வேண்டுமென்று லம்பாக அடித்து விடுவார்கள் .பெண் பிள்ளைகளையும் காட்டுவார்கள் ,அதை நம்பி ஏமாறுவோர் அதிகம் !
பதிலளிநீக்குகடந்த மாதம் திருப்பதியில் நீங்கள் மேலே குறிப்பிட்ட காரணத்துக்காக நான் ஒருவருக்கு பணம் கொடுத்தேன். ஏமாந்துதான் இருப்பேன் போலிருக்கின்றது.
நீக்குதிரு. பகவான்ஜிக்கு...
நீக்குஎன்ன ? செய்வது ஜி இறைவனை நம்பி வந்தவர்கள் இது இறைவன் நமக்கு வைக்கும் பரீட்சை என்று நினைத்து தர்மம் செய்கின்றார்கள் இதில் பிச்சைக்காரர்கள் பாஸாகிவிட கொடுத்தவர்கள் பெயிலாகி விடுகிறார்கள் இதுதானே உலகம்.
திரு. சம்பத் கல்யாண்
நீக்குவருக நண்பரே... இரக்கப்படும் சூழலில் இதுதானே பலரது வாழ்வில் நடந்து கொண்டு இருக்கிறது.
சிந்திக்க வைக்கிறியளே!
பதிலளிநீக்குபிச்சைக்காரருக்கு
தொழில் ஒன்றைப் பழக்கி
பிச்சை எடுக்காமல் செய்யலாமே!
http://www.ypvnpubs.com/
வருக நண்பர் இதை அரசாங்கம்தானே செய்யமுடியும் நல்லதொரு ஆலோசனை.
நீக்குபிச்சையே தொழிலென்று நினைப்பவர்களை மற்றுவது கடினம்! பொதுவகவே நம்மவர்கள் உழைப்புக்கு அஞ்சுவபர்கள். நம்மில் 60-70 விழுக்காட்டினர் வேலை செய்யாமல் பிழைக்கவேண்டும் என்ற மனநிலை கொண்டவர்கள்.அதுவும் அரசாங்க வேலைக்கு வந்துவிட்டால் மிகச்சிலர் மட்டுமே உண்மையாக உழைக்கின்றனர்!
நீக்குநண்பர் இமய வரம்பன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி
நீக்குஉள்ளது.. உள்ளபடி கூறியிருக்கின்றீர்கள்..
பதிலளிநீக்குஇங்கு குவைத்திலும் இப்படித்தான்..
நம்ம ஊரு ஆட்களே - வெள்ளிக் கிழமைகளில் - தலையில் துணியைப் போட்டுக் கொண்டு மஜ்ஜித் வாசலில் பிச்சை எடுத்திருக்கின்றார்கள்.. தெரிந்தவர்கள் பிடித்து விசாரித்த போது எனக்குள்ள உரிமை.. என்று பேசப் போக - ஈவு இரக்கம் காட்டாமல் ஊருக்கு விரட்டி விட்டார்கள்..
அவ்வப்போது பச்சைகளும் மஞ்சப் பொடியும் நாலைந்து பேராக - கம்பெனி கை விட்டது.. காலை விட்டது என்று என்றூ வருவார்கள்.. பாவமாகத் தான் இருக்கும்..
ஆழமாக விசாரித்தால் - பாட்சா பாய்க்கு ஆண்டனி பாய் சொன்ன மாதிரி - முபாரஹ்ஹோ பாய்!.. என்று போய்விடுவார்கள்..
ஆனாலும், மை தீட்டிய விழிகள் புர்ஹாவின் வழியே ஊடாட - மெஹந்தி இடப்பட்ட கை (நீங்கள் தேவதை என்றீர்களே - அதற்காக!..)
நம் முன்பாக நீளும் போது சப்த நாடியும் ஒடுங்கிவிடும்!..
என்னடா வாழ்க்கை இது?.. - என்றிருக்கும்.. இரண்டு நாட்களுக்கு உறக்கம் வராது..
அதே சமயம் - பண்டிகை நாட்களின் போது சாலையில் போவோர் வருவோரை அழைத்து பரிசுகள் தரும் மெஹந்தியுடன் கூடிய வளைக் கரங்களையும் கண்டிருக்கின்றேன்..
பழைய திரைப்படத்தின் பாடலில் இருந்து இருவரிகள்..
இருவேறுலகம் இதுவென்றால்
இறைவன் என்பவன் எதற்காக!..
ஆயியே ஜி ஆயியே...
நீக்குஉரிமை மீறல் வேறு இருக்கின்றதா ? இங்கு பச்சைகள் இந்த வேலை செய்கின்றார்கள் ஆனால் ? மஞ்சப்பொடி பஞ்சப்பாடு பாடுவார்கள் அதுவும் ஒருவகை பிச்சையே...
கம்பெனி கையை விட்டது சரி காலையும் விடுமா ? அதிசயமாக இருக்கின்றது ஜி.
புர்ஹாவின் வழியில் மெஹந்தியா ? ஆச்சர்யமாக இருகிறதே ஜி இதெப்படி சாத்தியம் நான் இதுவரை கண்டதில்லை.
நைட் டூட்டி பார்த்து விட்டு டே டூட்டிக்கு மாறும் பொழுது உறக்கம் வருவது கஷ்டம்தானே.... ஜி, ஒருகாலத்தில் (1999) நானும் நைட் டூட்டி பார்த்து இருக்கிறேன்.
பாடல் வரிகள் மிகவும் அருமை ஜி தங்களின் நீண்ட விளக்கவுரைக்கு நன்றி
பிச்சை எடுப்பவர்களில் பாதிபேர் உழைக்க சோம்பல்பட்டு கையேந்துபவர்கள் தான். அவர்களை அடையாளம் கண்டு ஒதுக்கவேண்டும். மீதி பேருக்கு அரசு மறு வாழ்வு இல்லங்கள் அமைத்து அவர்கள் சுயவேலை செய்து சம்பாதிக்க ஆவன செய்யவேண்டும்.
பதிலளிநீக்குவருக நண்பரே மிகவும் சரியான வார்த்தையே... சோம்பேறிகளால் நாடும் சோம்பல் பட்டு வளர்வது குறைந்து போகும் அரசுதான் இதை சரி செய்ய முடியும் ஆனால் ? நமக்கு அப்படி அரசாங்கத்தை தேர்வு செய்யத் தெரியவில்லையே...
நீக்குபிச்சையெனும் பெயரில் ஏமாற்றுவேலையும் உண்டே,
பதிலளிநீக்குஎப்படியாயினும் வறுமை ஒழிப்பு,,,,,,,,,
காணொளிக் காண முடியல சகோ,
ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வான் நாம் ஏமாந்து விட்டு என்னை ஏமாற்றி விட்டான் 80 நமது தவறே...
நீக்குஏன் ? சகோ காணொளி தெரியவில்லை...
இதையே தொழிலாக செய்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். என்ன செய்வது?
பதிலளிநீக்குவருக சகோ இதை அரசுதானே கவனிக்க வேண்டும்.
நீக்குஎன்ன சொல்ல? வறுமைதான் காரணம்!..
பதிலளிநீக்குவறுமையை நீக்குவதே ஆட்சியாளர்களின் வேலை கவிஞரே...
நீக்குபிச்சை எடுப்பது இன்றைய நேற்றைய சமச்சாரமல்ல. கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே . பாத்திரமறிந்து பிச்சையிடு. ஈவது விலக்கேல் ஐயம் இட்டுண் என்றெல்லாம் சொல்லி இருப்பது தெரியுமல்லவா. துபாயிலிருந்து தினத் தந்தி வருகிறது என்பது தெரியாத செய்தி. நன்றி.
பதிலளிநீக்குவாங்க ஐயா சங்கதாலம் தொட்டே இருப்பது உண்மைதான் அவர்கள் உடல் ஊனமுற்றவர்களாக, உழைக்க முடியாதவர்களாக இருந்தார்கள் அதன் காரணமாகவே நாமும் தர்மம் செய்து வந்தோம் ஆனால் ? இன்று அதுவே பிழைப்பாகி விட்டதே....
நீக்குஆம் ஐயா துபாயில் தொடங்கி 1 ½ வருடம் ஆகிறது.
நம்ம ஊரிலும் இதெல்லாம் சகஜமப்பா!! தன்னைத்தானே துன்புறுத்திக் கொண்டு பிச்சை எடுப்பது என்பது....ஆனால் என்ன வற்புறுத்த மாட்டார்கள். ஆனால் இந்த நன் கொடை கேட்டு வர்ராங்க பாருங்க அவங்க ரொம்பவே நச்சரிப்பாங்க...
பதிலளிநீக்குகொடிதுகொடிது வறுமை கொடிது...என்பதுதான் நினைவுக்கு வருது கில்லர்ஜி. ஆனால் இந்த வறுமை என்ற முகமூடியில் ஏமாற்றுதலும் நடக்கின்றது..வ்றுமை உள்ள வரை நம் நாடு முன்னேறப் போவது இல்லை.
//வறுமை உள்ளவரை நம்நாடு முன்னேறப் போவது இல்லை//
நீக்குமிகச்சரியாக சொன்னீர்கள் நன்றி
உறு பசியும் ஓவாப்பிணியும் செரு பகையும் சேராதியல்வது நாடு!
பதிலளிநீக்குஐயாவின் கருத்துரைக்கு நன்றி
நீக்குவறுமையை ஒழிக்க முடியாதவர்கள் பிச்சையை ஒழிக்க போகிறார்களா...? ..தமிழ்நாட்டில் சரக்கடித்து போதையில் வீழ்ந்து கிடப்பவனுக்கும், தலைசுற்றல் மற்றும் பசியால் வீழ்ந்து கிடப்பவனுக்கும் வித்தியாசம் தெரியாத மாதிரி.....உண்மையில் கம்பெனியால் நீக்கப்பட்டவர்களுக்கு ஊரு போய் சேர விரும்புவர்களுக்கு இவர்கள் எந்த உதவியும் கிடைக்காது போலிருக்கே........
பதிலளிநீக்குஆம் நண்பரே அதுதான் நடக்கின்றது நல்லவன்க கெட்டவன் தெரியவதில்லை.
நீக்குபிச்சை எடுத்தே பணம் சேர்த்தவர்களும் உண்டாம்! இங்கு!
பதிலளிநீக்குஉள்ளதுதான் ஐயா சில திரைப்படங்களில் நகைச்சுவைக்காக காண்பித்தாலும் அது உண்மையே...
நீக்குசோம்பேறியாக இருந்து விட்டால் சோறு கிடைக்காது நண்பா!
பதிலளிநீக்குகாலிங்பெல் அடித்தபோது கதவை திறந்த தங்களது நிலைபாட்டை சொல்லவே இல்லையே !
நட்புடன்,
புதுவை வேலு
‘’டிங்டாங்’’
நீக்குகதவைத் திறந்தேன் திறக்கவும் எதிரே தேவதை....
என்னைக் கண்டதும் இரண்டடி நகர்ந்தாள் ஏனென்று தெரியவில்லை அவள் கண்களில் மிரட்சி அவளின் விழியின் ரேகையில் படித்தேன் குரு 8ம் வீட்டை விட்டு ராகுவிடம் இடம் பெயர்வதை.. இருப்பினும் கேட்டேன்..
ஸ்சூ... ரீத் ? (என்ன ? வேணும்)
ஜீப் புலூஸ் (பணம் கொடு)
நான் ஒரு மா3யாக பார்த்தேன் சந்தேகக் கண்ணோட்டத்துடன்...
லேஸ் ? (ஏன் ?)
அனா மிஷ்கின் (நான் ஏழை)
அலசான் அனா லேஷ் ? ஜீப் மிஷான் இந்தே புலூஸ் ? (அதுக்காக நான் எதற்க்கு ? கொடுக்கணும் பணம்?)
ஜக்காத்..... (தர்மம்…)
சிறிது யோசித்து உள்ளே சென்றேன் கதவை பூட்டி விட்டு காரணம் இவள் உள்ளே நுழைந்து சத்தம் போட்டாள் என்றால் ? நான் மறுநாள் முதல் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து.... மீண்டும் ஒன்று, இரண்டு புரிஞ்சுதோனோ....
ச்சே இவ்வளவு அழகாக இருக்கிறாளே... 2 திர்ஹாம்ஸ் கொடுத்தால் தேவகோட்டைக்காரன் இப்படியிருக்கானே என்று நினைத்து விட்டால் ? தேவகோட்டை மண்ணுக்குதானே சிறுமை ஆகவே 5 திர்ஹம்ஸ் கொடுத்தேன் பெற்றுக் கொண்டவுடன்.
ஸுக்ரான் (நன்றி)
ஆஃப்ஒன் (பரவாயில்லை)
ஈபிள் டவர் மேல சத்தியமா... இதுதான் நண்பா நடந்தது
அற்புதமான பதிவு நண்பரே,
பதிலளிநீக்குஇந்த பிச்சை எடுப்பவர்களைப் பற்றி நானும் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். இது மிகப் பெரிய தொழிலாக உருவெடுத்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
த ம 18
நம் நாட்டில் ஒழிக்க வேண்டியது முதலில் அரசியல்வாதிகளை நண்பரே... பிறகுதான் மீண்டும் ஒரு நல்ல இந்தியாவைக் கொண்டு வரமுடியும்
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஜீ
தகவலை தெளிவாக சொல்லியமைக்கு நன்றி
ரூபனின் கருத்துரைக்கு நன்றி
நீக்குஅன்புள்ள ஜி,
பதிலளிநீக்கு‘பிச்சை’ - எடுப்பது நன்றாக அலசிய ஒரு அருமையான கட்டுரை.
‘நான் பிறந்த நாட்டுக்கெந்த நாடு பெரியது
இங்கு பெண்ணும் ஆணும் வாழும் வாழ்க்கை இனியது
மேலை நாடு பரபரப்பில் வாழ்ந்து பார்க்குது
எங்கள் கீழைநாடு தனி வழியே நடந்து பார்க்குது
விஞ்ஞானம் அந்த நாட்டில் போரை நாடுது
எங்கள் மெய்ஞானம் உலகமெங்கும் அமைதி தேடுது
நான் பிறந்த நாட்டுக்கெந்த நாடு பெரியது
இங்கு பெண்ணும் ஆணும் வாழும் வாழ்க்கை இனியது.......‘
தாங்கள் விமானநிலையத்தில் நமது நாட்டிற்கு வந்திறங்கியதும் படும் இன்னல்களை... வெளிநாட்டினர் நம் நாடு பற்றி நினைக்கும் அவலத்தை எண்ணி நம் தாய்நாட்டிற்கு ஒரு இழிவு என்றால் அது நமக்கல்லவா? என்று உணர்ந்து உள்ளத்தில் உள்ளதைக் கொட்டிவிட்டீர்கள்.
பிச்சைக்காரர் மறுவாழ்வுக்கு திட்டம் போட்டு அவர்களுக்கு வீடுகள்கூட கட்டிக்கொடுத்தும் பார்த்தார்கள். அவர்களுக்கு எளிதில் வருமானம் வருவதை விட அவர்களால் விடமுடியவில்லை. பேருந்து நிலையங்களில் மஞ்சள் சேலை கட்டிக்கொண்டு கோயிலுக்குச் செல்வதாக பிச்சை எடுக்கும் பெண்கள்... கைக்குழந்தையைக் வாடகைக்கு வாங்கிக்கொண்டும் பெண்கள் பிச்சை எடுத்தும் பிழைப்பு நடத்துகிறார்கள் .
அரபு நாடுகளில் பிச்சை எடுப்பது சட்டப்படி குற்றமெனத் தடுக்கப்பட்டுள்ளது அறிந்து மகிழ்ச்சி. அங்கு பெண்கள் எடுக்கும் பிச்சை பற்றியும் விளக்கியிருந்தீர்கள். இங்கு பெண் (கே.ஆர்.விஜயா) தாய் தந்த பிச்சையிலே பிறந்து.... நீ தந்த பிச்சையிலே வளர்ந்தேன்னம்மா... அதையும் காணொளியில் காட்டிவிட்டீர்கள்-
நான் 1994 -இல் எழுதிய சிறுகதை “எனக்கு பிச்சை வேணாம் சார்” மாலை முரசில் வெளியானது. அதற்கு நான் கொடுத்திருந்த தலைப்பு ”ஊனமா(க்)கிப் போனவன்” எனது வலைத்தளத்தில் அந்தச் சிறுகதையை வெளியிட்டுள்ளேன்.
நன்றி.
த.ம. 19
வருக மணவையாரே...
பதிலளிநீக்குஅழகான படலுடன் கருத்துரை அருமை உண்மைதானே நாட்டுப்பற்று இல்லாதவன் அந்த நாட்டில் இருக்க கூடாது 80 எமது கருத்து
தங்களின் சிறுகதையின் இணைப்பு தரலாமே....
http://manavaijamestamilpandit.blogspot.com/2014/11/blog-post.html
நீக்குதிங்கள், 3 நவம்பர், 2014 ”ஊனமா(க்)கிப் போனவன்”
லேபிள்-சிறுகதை
மணவையாரே சென்று வந்தேன் நான்தான் ஏற்கனவே படித்து கருத்துரை இட்டு இருக்கின்றேனே.... இருப்பினும் மீண்டும் இட்டேன்.
நீக்குஅருமையான பதிவு சகோ.
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி சகோ
நீக்குNice post with lot of information!
பதிலளிநீக்குதாங்க்யூ வெரிமச் சார்
பதிலளிநீக்குஇங்கேயும் இந்த பிச்சை எடுக்கும் குழுக்கள் அல்பேனி,உக்கிரைன்வாசிகள் தொல்லை அதிகம்தான் இதை அரசு கட்டுப்படுத்த நினைத்தாலும் மாப்பியாக்கள் வலை அதிகம்.
பதிலளிநீக்குவருக நண்பரே நானும் ஃபாரீஸில் கண்டு இருக்கிறேன் இருப்பினும் அவர்கள் ஏதாவது வித்தையை காண்பித்துதான் பணம் கேட்கின்றார்கள்.
நீக்குதமிழை ஆட்சிமொழியாகக் கொண்ட சிங்கை மற்றும் மொரிஷியஸ் மண்ணில் பிச்சைக்காரர்களை என்னால் பார்க்கமுடியவில்லை, சிங்கையில் பிச்சை எடுக்க முடியாத அளவில் அங்கு நிலவும் அரசாங்க கேடுபடிகள் ஒரு அரணாக விளங்குகிறது, சிங்கையில் 90 வயதைக்கடந்த ஓர் மூதாட்டிகூட உழைத்துச் சம்பாதிப்பதை இன்றளவும் காணமுடியும் (அவர் தமிழர்களின் "லிட்டில் இந்திய" பகுதியில் கடை கடையாக சென்று உபயோகமல்லாத காகித அட்டைப் பெட்டிகளை பெற்று அதை விற்று சம்பாதிக்கிறார்) ஆகவே நமது இந்தியா சிங்கை ஆட்சியாளர்களைப் பார்த்துக் கற்றுக்கொள்ளவேண்டியது நிறைய இருக்கிறது..... இப்படிக்கு கோகி-என்கிற கோபால கிருஷ்ணன்- ரேடியோ மார்கோனி.... தற்போது புதுதில்லியிலிருந்து .....
பதிலளிநீக்குவருக நண்பரே நல்லதை யார் சொன்னால் என்ன ? ஏற்றுக்கொள்வதே மனிதப்பண்பு அற்புதமான விடயத்தை ஆணித்தரமாக வைத்தமைக்கு மிகவும் நன்றி
நீக்குநண்பரே மொரிஷியஸ் தெரியும் ‘’சிங்’’கை என்று சொல்வது எனக்கு எந்த ? நாடென்று புரியவில்லை விளக்கினால் நலம்.
குறிப்பு:- சரித்திர சான்றுகளின் வழி இன்னமும் சிங்கப்பூர் தமிழர்களால் "சிங்கை" என்றுதான் அழைக்கப்படுகிறது .....நன்றிகளுடன் கோகி
நீக்குவணக்கம் சார் ...
பதிலளிநீக்குபிச்சை இந்தியாவின் அடையாளக் கோடுகளில் ஒன்றாகிவிட்டது, அதை தவிர்ப்பது கடினமென்றே நினைக்கிறேன், அரசாங்கம் முன்வந்தாலும் மக்களும் முன் வரவேண்டுமே!
முன்னமே சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன், உங்களது எழுத்தை பத்தி பத்தியாக எழுதுங்கள் சார், ஒழுங்கற்ற வடிவத்தில் இருப்பதினால் படிப்பதற்கு மிகவும் சிரமமாக இருக்கிறது. இன்னொன்று என்பது , மாதிரி, பத்து இப்படி எழுத்துக்களுக்கு பதிலாக எண்களை பயன் படுத்துகையில் சில இடங்களில் சுவராசியமாக இருந்தாலும் தொடர்ச்சியான வாசிப்பிற்கு முட்டுக் கட்டை போடுகிற உணர்வை தருகிறது சார் .. சொல்வதை கொஞ்சம் கவனத்தில் கொள்ளுங்கள் நன்றி
வருக நண்பரே அருமையாக சொன்னீர்கள் இதுவும் மக்கள் கையில்தான் இருக்கிறது.
நீக்குதங்களது கருத்தை பரிசீலிக்கின்றேன் பத்திக்காகத்தான் வர்ணம் கொடுத்து மாற்றம் செய்கிறேன் இருப்பினும் இனி மாற்றம் செய்கிறேன் வருகைக்கு நன்றி.
நல்ல பதிவு...சகோதரா.
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி சகோ.
நீக்குமதநம்பிக்கையின்படி பிச்சை போடுவது என்பது தர்ம சிந்தனைகளில் ஒன்று என்றாகிவிட்டது. எனவே ஒழிப்பது என்பது சற்று கடினம்தான். பிச்சை எடுப்பதிலும் தொழில் தில்லுமுல்லு செய்கிறார்கள் என்பதை நன்றாகவே சொன்னீர்கள். பாத்திரம் அறிந்து பிச்சை போடு, பிச்சை புகினும் கற்கை நன்றே - என்று நீதி நூல்களில் சொல்லி இருக்கிறார்கள்.
பதிலளிநீக்குமேலே அரசன் அவர்கள் சொன்ன , உங்கள் எழுத்துநடை பற்றிய கருத்தினை அப்படியே வழி மொழிகின்றேன்.
வருக நண்பரே... தில்லுமுல்லுகளால்தான் மக்களுக்கு பிரட்சினையே தொடங்குகிறது
நீக்குதங்களது கருத்தையும் ஏற்கிறேன்
படிக்கையிலேயே அதிர்ச்சி. அரபு நாடுகள் குறித்த என் எண்ணத்தையே மாற்றிவிட்டது. இப்படியும் பிச்சை எடுக்கிறார்களா? பயமாகவன்றோ உள்ளது! கவனமாக இருந்தால் பிழைத்தோம். அமெரிக்காவிலும் பிச்சைக்காரர்கள் உண்டு என்றாலும் இன்னும் நாகரிகமாகப் பாட்டுப் பாடியோ, வயலின் வாசித்தோ, சித்திரங்கள் வரைந்தோ காசு கேட்பார்கள்.
பதிலளிநீக்குவருக சகோ உண்மைதான் அமெரிக்கர்கள் பிச்சை எடுத்தாலும் அதில் சிறிய உழைப்பைக் கொடுத்து விடுகிறார்கள்.
நீக்கு