தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், செப்டம்பர் 07, 2015

கண்கள்


சமீபத்தில், கோல்கொண்டாவுக்கு திருமணம் ஒன்றிற்கு சென்று வந்தேன், மணமகளை அலங்கரித்து கொண்டு வந்து நிறுத்தினார்கள். எப்படித் தெரியுமா ? கோவில் திருவிழாக்களில் யானையை அலங்கரிப்பது போலிருந்தது ஒட்டு மொத்த கண்களும் அந்தப்பெண் அணிந்திருந்த நகைகளைத்தான் பார்த்துக் கொண்டு இருந்தன, இதில் எத்தனை கண்கள் அதை வேறு விதமாக பார்த்திருக்கும் ?

சனி, செப்டம்பர் 05, 2015

தமிழ்ப் பதிவருடன், In U.A.E

 அன்பு நண்பர்களே வணக்கம்...
கடந்த பதிவில் சொல்லி இருந்தேன் அல்லவா... கண்ணேரு காரணமாக வெளிநாட்டு பதிவர்களை சந்திப்போமென ஆகவே எந்த நாட்டுக்குப் போய் யாரைச் சந்திக்கலாம் என்று வீட்டின் மொட்டை மாடியில் மல்லாந்து படுத்துக்கொண்டு ஆலோசித்தேன் இதுதான் சரியென ஒரு கருப்புத்தாளில்... (Sorry எழுதும்பொழுது வெள்ளைத்தாள் என்பதற்க்கு பதிலாக கருப்புத்தாள் என்று வந்து விட்டது அதை மாற்றி எழுத முயற்சித்தேன் முடியலை அவ்வளவு தொழில் நுற்பம் தெரியாத காரணத்தால் விட்டு விட்டேன்) 

வெள்ளி, செப்டம்பர் 04, 2015

பஞ்சனூர், பஞ்சுவியாபாரி பஞ்சவர்ணம்

பஞ்சனூர் மச்சான் பஞ்சவர்ணத்தோடு மணப்பாறை சந்தைக்கு பஞ்சு வியாபாரத்துக்குப் போய் வரும் பைங்கிளி மொடிச்சியம்மாள் நாற்று நடும்பொழுது அந்த நினைவோட்டங்களை பாட நாற்று நடும் கூட்டமும் சேர்ந்து பாடுகிறது.

புதன், செப்டம்பர் 02, 2015

Mrs. பசுபதி


நடைமுறை வாழ்வில் ஒருவர் ஒருவரை வீழ்த்துவது சகஜம் அதேநேரம் திரைப்படங்களில் கசாநாயகன் மற்றவரை பந்துபோல் எத்துவது, 50 பேரை அடித்து வீழ்த்துவது, ஏற்றுக் கொள்ளக்கூடியதா ? அதுவும் எதிரிகளிடம் ஆயுதம் இருந்தும் ? ? ? இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்கள் இப்படியே.... இதற்கும் கைதட்டல் கிடைப்பதால்தானோ ? 

ஒரு திரைப்படத்தில் ரயிலில் பயணம் செய்யும் ஒரு பெண்ணை கொலை செய்வதற்காக வில்லனும் சுமார் 65 க்கும் மேற்பட்ட அடியாட்களும் ஜீப்புகளில் வந்து ரயில் நிலையத்துக்குள் வந்து விடுகிறார்கள் 
எல்லோர் கையிலும் திருப்பாச்சி அருவாள் இருக்கிறது, 
சட்டென கசாநாயகன் ரயிலிலிருந்து இறங்கி நடந்துதான் வருகிறார் உடனே அடியாட்கள் அனைவரும் அருவாளை கீழே போட்டு விட்டு ஓடுகிறார்கள், நான்கூட நினைத்தேன் கசாநாயகன் உடலில் வெடிகுண்டை கட்டி வைத்திருக்கிறார் போல அதனால்தான் எல்லோரும் பயந்து ஓடுகிறார்கள் என்று, வில்லன் மறித்து கேட்கிறார் ஏன்டா ஓடுறீங்க ? அதற்கு அவர்கள் சொல்கிறார்கள் 
7 மலை வர்றான்... 7 மலை வர்றான்... 
என்று, கசாநாயகன் நடந்து வந்து சட்டையை கழட்டி வீசிவிட்டு இடுப்பில் கை வைத்துக்கொண்டு கம்பீரமாய் நிற்கிறார் நான் நினைத்தது 100 % பொய்யாகி விட்டது கசாநாயகன் உடம்பில் ஒரு எழவும் இல்லை, பின்னே ஏன் எல்லோரும் பயந்து ஓடினார்கள் ?  7 மலைதானே வர்றான் 7 தலையோட வந்தால்தானே பயந்து ஓட வேண்டும்

சரி அவர்கள்தான் ஓடி விட்டார்கள் ஒருவேளை சம்பளம் குறைவு காரணத்தால் கூட ஓடியிருக்கலாம்... வில்லனாவது எதிர்த்து அடிக்கலாமே அவரும் பயந்து கொண்டே ஜீப்பில் ஏறிபோய் விட்டார் இதைவிட மானக்கேடு என்ன தெரியுமா ?
வில்லன் கையில் துப்பாக்கி இருந்தது
என்னங்கடா இது ? காலக் கொடுமையா இருக்கு எனக்கு வந்த ஆத்திரத்தில் ஓங்கி ஒரு உதை விட்டேன் முன்புற இருக்கையில் பட்டு காலின் கட்டைவிரல் நகம் பெயர்ந்து ரத்தம் வந்து விட்டது, என்மனம் கேட்டது என்னிடம் இது உனக்கு, தேவையா ?

சரி இதாவது பரவாயில்லை இன்னொரு படம் அதில் தனுஷ், பசுபதியை அடித்தே.... கொல்வது நடக்ககூடிய காரியம்தானா ? Mrs. பசுபதி இந்தக் காட்சிகளை பார்த்துவிட்டு உண்மையிலேயே வேதனை பட்டிருப்பாரா ? மாட்டாரா ? பசுபதிக்கு தூரத்து உறவுகூட இல்லாத எனக்கே வேதனையாக இருக்கும்போது Mrs. பசுபதிக்கு இருக்காதா ?

காணொளி

செவ்வாய், செப்டம்பர் 01, 2015

நம்நாடு முன்னேறி விட்டதா ?


பொருளாதாரத்தில் நம்நாடு முன்னேறி விட்டது நாம் மூன்றாவது இடத்தைப் பிடித்து விட்டோம் இரண்டாவது இடத்தைப் பிடித்து விட்டோம் நாம் வல்லரசு ஆகிவிட்டோம் என்று நமது அரசியல்வாதிகள் பெருமையாக சொல்கிறார்கள் முதலில் மக்களின் மனதில் நல்ல அரசு என்று பெயர் எடுக்கவேண்டும் பொருளாதாரம் முன்னேற்றம் என்பது நாட்டுக்கோ, நாட்டு மக்களுக்கோ அல்ல அரசியல்வாதிகளுக்கும், அவரது மக்களுக்குமே என்பதே உண்மை பொருளாதார முன்னேற்றம் என்றால் முதலில் அந்நாட்டில் பிச்சைக்காரர்கள் இருக்கவே கூடாது அதுதான் முதல்படி காரணம்.