தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், செப்டம்பர் 02, 2015

Mrs. பசுபதி


நடைமுறை வாழ்வில் ஒருவர் ஒருவரை வீழ்த்துவது சகஜம் அதேநேரம் திரைப்படங்களில் கசாநாயகன் மற்றவரை பந்துபோல் எத்துவது, 50 பேரை அடித்து வீழ்த்துவது, ஏற்றுக் கொள்ளக்கூடியதா ? அதுவும் எதிரிகளிடம் ஆயுதம் இருந்தும் ? ? ? இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்கள் இப்படியே.... இதற்கும் கைதட்டல் கிடைப்பதால்தானோ ? 

ஒரு திரைப்படத்தில் ரயிலில் பயணம் செய்யும் ஒரு பெண்ணை கொலை செய்வதற்காக வில்லனும் சுமார் 65 க்கும் மேற்பட்ட அடியாட்களும் ஜீப்புகளில் வந்து ரயில் நிலையத்துக்குள் வந்து விடுகிறார்கள் 
எல்லோர் கையிலும் திருப்பாச்சி அருவாள் இருக்கிறது, 
சட்டென கசாநாயகன் ரயிலிலிருந்து இறங்கி நடந்துதான் வருகிறார் உடனே அடியாட்கள் அனைவரும் அருவாளை கீழே போட்டு விட்டு ஓடுகிறார்கள், நான்கூட நினைத்தேன் கசாநாயகன் உடலில் வெடிகுண்டை கட்டி வைத்திருக்கிறார் போல அதனால்தான் எல்லோரும் பயந்து ஓடுகிறார்கள் என்று, வில்லன் மறித்து கேட்கிறார் ஏன்டா ஓடுறீங்க ? அதற்கு அவர்கள் சொல்கிறார்கள் 
7 மலை வர்றான்... 7 மலை வர்றான்... 
என்று, கசாநாயகன் நடந்து வந்து சட்டையை கழட்டி வீசிவிட்டு இடுப்பில் கை வைத்துக்கொண்டு கம்பீரமாய் நிற்கிறார் நான் நினைத்தது 100 % பொய்யாகி விட்டது கசாநாயகன் உடம்பில் ஒரு எழவும் இல்லை, பின்னே ஏன் எல்லோரும் பயந்து ஓடினார்கள் ?  7 மலைதானே வர்றான் 7 தலையோட வந்தால்தானே பயந்து ஓட வேண்டும்

சரி அவர்கள்தான் ஓடி விட்டார்கள் ஒருவேளை சம்பளம் குறைவு காரணத்தால் கூட ஓடியிருக்கலாம்... வில்லனாவது எதிர்த்து அடிக்கலாமே அவரும் பயந்து கொண்டே ஜீப்பில் ஏறிபோய் விட்டார் இதைவிட மானக்கேடு என்ன தெரியுமா ?
வில்லன் கையில் துப்பாக்கி இருந்தது
என்னங்கடா இது ? காலக் கொடுமையா இருக்கு எனக்கு வந்த ஆத்திரத்தில் ஓங்கி ஒரு உதை விட்டேன் முன்புற இருக்கையில் பட்டு காலின் கட்டைவிரல் நகம் பெயர்ந்து ரத்தம் வந்து விட்டது, என்மனம் கேட்டது என்னிடம் இது உனக்கு, தேவையா ?

சரி இதாவது பரவாயில்லை இன்னொரு படம் அதில் தனுஷ், பசுபதியை அடித்தே.... கொல்வது நடக்ககூடிய காரியம்தானா ? Mrs. பசுபதி இந்தக் காட்சிகளை பார்த்துவிட்டு உண்மையிலேயே வேதனை பட்டிருப்பாரா ? மாட்டாரா ? பசுபதிக்கு தூரத்து உறவுகூட இல்லாத எனக்கே வேதனையாக இருக்கும்போது Mrs. பசுபதிக்கு இருக்காதா ?

காணொளி

66 கருத்துகள்:

 1. சினிமாவில் எழுதப்படாத விதிகள் நிறைய உண்டு. வில்லன் குரூப் எத்தனை பேர் எவ்வளவு நவீன ஆயுதங்களோடு வந்தாலும் ஹீரோ நிராயுதபாணியாக தனியாளாகத் தான் சண்டை போடுவான். சிலசமங்கள் கையில் ஆயுதம் கிடைத்தாலும் அதை கீழே போட்டுவிட்டு வெறுங்கையோடு சண்டைப்போடுவதுதான் ஹீரோவுக்கு அழகு.
  த ம 1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே என்ன செய்வது கோபப்பட்டதால் எனக்கு கட்டை விரலில் அடிதான் மிச்சம்

   நீக்கு
 2. Mrs பசுபதிக்கு வேதனை இருக்காதா என கேட்டிருக்கிறீர்கள். அவருக்குத் தெரியும் இது நிஜமல்ல நிழல் என்று. ஆனால் நம் இரசிகர்கள் தான் நிழலை நிஜமென்று நம்பி வீணாய்போய்க்கொண்டிருக்கிறார்கள். காணொளியின் கடைசியில் சரியான பாடலைத்தான் இணைத்திருக்கிறீர்கள். இரசித்தேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரின் வருகைக்கும், கருத்துரைக்கும் இரசிப்பிற்க்கும் நன்றி

   நீக்கு
 3. தமிழ்சினிமாவின் தரத்தை இப்போதுதான் அறிந்தீர்களா நண்பரே!! அந்த ஒல்லி நடிகர்தான் "பார்போற்றும் "தன்தகுதிக்கு தேசிய விருது வாங்கிவிட்டேம் என்ற கேனத்தனமான நினைப்பில் வெட்கம் சூடு எதும் இல்லாமல் "மக்கள் ஜானதிபதி "அவர்கள் இறந்த நாளில் "தன் பிறந்த நாளை கோலகலமாக கொன்டாடி மகிழ்ந்தவர்!! அவ (ரை) னை இங்கு எழுதுவது கூட ஏற்கதக்கதல்ல!! அப்படிபட்ட நடிப்பு சூறாவளிக்கு அள்ளி அள்ளி கொடுக்கிறோம்! நம் நேரத்தையும் பணத்தையும்!! நன்றி!! நான் கூறிய கருத்தில் தவறு இருந்தால் மறக்காமல் மன்னிக்கவும் நண்பரே!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே சினிமா தொடங்கி 102 ஆண்டுகள் கடந்து விட்டது நண்பரே அன்றிலிருந்து நான் சினிமாவையும், நடிகர் - நடிகைகளையும் தாக்கித்தான் எழுதி வருகிறேன் சமூக கோமாளிகள் என்றும், சமூக கொலைகாரர்கள் என்று இப்பொழுது தங்களுக்கு புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

   நண்பா கருத்து சுதந்திரம் நிறைந்தது நமது நாடு இதில் மன்னிப்பு எதற்க்கு ? சரியான சவுக்கடிதான் கொடுத்து இருக்கின்றீர்கள் எனக்கல்ல ! வருகைக்கு நன்றி

   நீக்கு
 4. இதெல்லாம் கில்லர் ஜி நிஜத்திற்கு அப்பாற்பட்ட மிகைப்படுத்தப்பட்ட ஒன்று. ஒரு ஃபேன்டசி! அவ்வளவே. மிஸஸ் பசுபதிக்கு தெரிந்திருக்கும் இது வெறும் நடிப்பு என்று....படம் என்று...எல்லா திரைப்பட சம்பந்தப்பட்டவர்களும் அதை உள் வாங்கியவர்களே. திரைப்படம் என்பதே நடைமுறையை விட்டி விலகி மிகைப்படுத்திச் சொல்லப்படுவதே. (யதார்த்தப்படங்களும் உள்ளன....

  ஒருவரைத் தவிர டூப் போடுபவர்கள்..வயிற்றுப் பிழைப்பிற்காக பல ரிஸ்க்குகளை எடுப்பவர்கள்....அதுதான் வேதனை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க, வாங்க அவங்கே எப்படியோ போகட்டு்ம் எனக்கு கட்டைவிரல் நகம் பெயந்து போச்சே இதுக்கு யாரு பொருப்பு ?

   நீக்கு
 5. ஆகா!.. அபாரம் உங்கள் சிந்தனை!
  உங்கள் வருத்தமும் புரிந்துகொண்டோம்!..:)

  நல்ல நகைச்சுவை சகோ!
  த ம +1

  பதிலளிநீக்கு
 6. சினிமாவில் லாஜிக் பார்க்கக் கூடாது. இது அரிச்சுவடி பாடம் உங்களுக்குத் தெரியாததா, கட்டை விரல் நகம் போனதுதான் மிச்சம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா நீங்கள் சொல்வது போல் கட்டை விரல் நகம் போனதே மிச்சம்

   நீக்கு
 7. அனுபவமுள்ள பெரியவர்களால் சினிமா கதை என்கிற அளவில் புரிந்துகொள்ளமுடிகிறது, ஆனால் இன்றைய குழந்தைகள் இப்படிப்பட்ட காட்சிகளை பார்த்துவிட்டு அதுபோன்ற ஒரு சூழ்நிலை அவர்களின் வாழ்க்கையில் ஏற்ப்ப்படும்போது சற்றும் சிந்தனையின்றி அடி தடியில் வீழ்வதும் பிறகு அதனால் ஏற்ப்படும் பாதகங்களை எதிர்நோக்க முடியாமல் வாழ்க்கையை தொலைக்கும் சூழ்நிலை ஏற்ப்படுவதை யாரால்தான் ஏற்றுக்கொள்ளமுடியும் ... இதுபோன்ற திரைப்படங்களினால் இன்றைய இளைய சமுதாயத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகத்தான் இருந்துவருகிறது .... இப்படிக்கு கோகி என்னும் கோபால கிருஷ்ணன் -ரேடியோ மார்கோனி, புது தில்லியிலிருந்து.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே குழந்தைகளை சொல்கின்றீர்கள் வீட்டில் பெரியவர்களே சீரியலில் பார்த்து அதைபோலவே குடும்பத்திலும் பேசுகின்றார்கள் என்ன செய்வது தங்களின் கருத்துரைக்கு நன்றி நண்பரே...

   நீக்கு
 8. என்ன சோகம்னா ,வில்லனைக் கொன்ற அந்த வௌவாலுக்கு ஒரு நகக் கீறல் விழுந்து இருக்காது,உங்களுக்கு நகம் போச்சா :)

  பதிலளிநீக்கு
 9. அவ்வளவு கடுப்பு ஏன் பார்த்திங்களா கட்டை போனது தான் மிச்சம்.ஹஹ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சேர் கட்டையை சொல்றீங்களா ? இல்லை கால் விரலை சொல்றீங்களா ? 80 புரியவில்லையே...

   நீக்கு
 10. சினிமாவின் அபத்தங்களுக்கு எல்லை எது? நிஜ வாழ்க்கையில் பாட்டுப்பாடி ஆடிக் கொண்டிருக்கிறோமா என்ன!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே இதே கேள்வியைத்தான் ஒருமுறை திரைப்பட நடிகர் கமலஹாசன் கேட்டார் அதன் நினைவு வந்து விட்டது வருகைக்கு நன்றி

   நீக்கு
 11. சினிமாவின் கோமாளித்தனங்களுள் இதுவும் ஒன்று! நாமும் ரசித்துக் கொண்டுதானே இருக்கிறோம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே இன்னும் எத்தனை ஆண்டுகளோ... ஒருவேளை நாம் மாண்டு போகும்வரையோ.... என்னவோ...

   நீக்கு
 12. Ellam Sari Picture la Fight panra hero yaru??? atha solungal.. periya hero mari irukare....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களின் முதல் வருகைக்கு நன்றி
   அது நடிகர் அல்ல! எனது தங்கையின் மகன் K. விவேக் மதுரை

   நீக்கு
 13. என் மனதிலும் என்றைக்கும் உடன்பட முடியாத விடயம் இது. சிறிதளவாவது நடைமுறையில் நடக்கக் கூடியதை சித்தரிக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சகோ கீதா ரவி அவர்களின் முதல் வருகைக்கு நன்றி
   எனக்கு இவைகளக் கண்டாலே ரத்தம் கொதிக்கிறது சகோ ஆகவேதான் நான் திரைப்படம் பார்ப்பதை நிறுத்தி 20 வருடங்கள் ஆகிறது.

   நீக்கு
 14. அன்புள்ள ஜி,

  திரைப்படம்ன்னா உண்மையை எதிர்பார்க்கக்கூடாது. நாயகன் ஒரு அடி வாங்கினால் வில்லன் பத்தடி வாங்கி பந்தாடப்படுவான். நிஜ காதல் வாழ்க்கையில் யார் பாட்டுப்பாடிக் கொண்டு அலைகிறார்கள். விடுங்க இதெல்லாம் தமிழ்த் திரைப்படத்தில் சகஜம். இதென்ன ‘முள்ளும் மலரும்’ நாவலா திரைப்படமாகிறது?

  காணொளி கண்டேன்...நாயகன் அடித்து வில்லன் சாகவேண்டும். தனுஷ் அடித்து பசுபதி சாகமுடிமா? முடியும்... திரைப்படம்.
  முடியாது நிஜம்!

  த.ம. 8

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாருங்கள் மணவையாரே... முள்ளும் மலரும் எனக்கு பிடித்தபடம் நடைமுறை வாழ்க்கையை அழகாக சித்தரித்து இருப்பார் இயக்குனர் மகேந்திரன் அதில் வரும் சண்டைக்காட்சிகளும் நாம் ரோட்டில் எப்படி நடந்து கொள்வோமோ அதைப்போலவே இருக்கும்.

   காணொளி கண்டு மிரண்டமைக்கு நன்றி

   நீக்கு
 15. இதுதான் இன்றைய இந்திய சினிமா!இதைதான் விசிலடித்து வரவேற்கிறார்கள் பாலாபிஷேகம் செய்யும் கண்மணிகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா விசிலடிப்பவர்கள் எல்லாம் வீட்டில் வளர்த்த விட்டில் பூச்சிகளே...

   நீக்கு
 16. உண்மை ஜீ, அருமையான பதிவு

  பதிலளிநீக்கு
 17. படங்கள் பல மாஜா உலகத்தில் தான் இருக்கு கட்டைவிரல் காயம்பட்டதே மிச்சம்)))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே கட்டை விரல் போனதே மிச்சம்

   நீக்கு
 18. ...500பேர் கூடியிருக்கிற ஒரு கூட்டத்தை பத்து இருபது போலீசார் அடித்து விரட்டுகிறார்கள்... இது நிஜம்..ஒரு ஒல்லி பச்சான் பத்து இருபது குண்டர்களை அடித்து துவம்சம் செய்வது நிழல்..நிழலைக் கண்டு கோபப்பட்டுவிட்டீர்கள்..பொருமை கடலிலும் பெரிது என்பதை மறந்துவிட்டீர்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பொருமை இருந்திருந்தால்தான் இந்தியா சுதந்திரம் வாங்காமல் நல்லா இருந்திருக்குமே நண்பா...

   நீக்கு
 19. அண்ணே...
  சினிமான்னாலே கற்பனையாத்தானே வாழுவானுங்க... பில்டப்பெல்லாம் இருக்கத்தான் செய்யும்... கதைகளை நம்பி படமெடுக்கும் மலையாளப் பட உலகத்தில் கூட இப்பல்லாம் இது போன்ற சண்டைகள் இருக்கு....

  ரவுடியின்னா இப்படித்தான் இருக்கணுமின்னு இல்லையில்ல... ஒல்லியா இருக்கவனும் ரவுடிதானே... அப்புறம் ஏன்டா அவனைச் சுடலைன்னு கேக்கக்கூடாது... ஹீரோ செத்துட்டா... கதை போயிருமுல்ல...

  சினிமா புடிக்காதுன்னு சொல்லிக்கிட்டு உங்களை யாரு இன்னைக்கு 7மலையையும் சுள்ளானையும் பாக்கச் சொன்னது. எதாவது ஒரு சேரன் படம் பாத்திருக்கலாம்... இல்லே ஒரு கண்டவராயன்பட்டி கன்னையான்னு பதிவு எழுதியிருக்கலாம்...

  வருந்தி என்னாகப் போகுது... அந்த வழி அப்படித்தான்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பரே சரியாக சொன்னீங்க பூவை காதுல சுத்தினால் பரவாயில்லை தலையிலேயே சுத்துறாங்களே...
   தலைப்பு கொடுத்ததற்க்கு நன்றி இதோ ஆரம்பிச்சுடுறேன்.

   நீக்கு
 20. நிஜத்தை சினிமாவா எடுத்தா நீங்களே பார்க்க மாட்டீங்க பாஸ்!! புரூஸ் லீ மாதிரி கோடியில ஒருத்தன் தான் இருப்பான், அவனாலும் சட்டத்தை மிஞ்சி எதையும் செஞ்சிட முடியாது. நாலு தட்டு தட்டி உள்ளே போட்டுடுவாங்க. மூளையே பலம் என்பதற்கு இன்றைய அரசியல் வாதிகளே சாட்சி. ஒருத்தன் வில் சேர்லயே போறான், நிக்கவும் உட்காரவுமே முடியாது, இன்னொருத்தியை குட்டி யானை முட்டி தள்ளியது, பறந்து போய் விழுந்தாள். ஆனாலும் ஆறு கோடி சனத்தை வச்சு இவங்க மேய்க்கிறாங்க, அதில் ரவுடிங்களும் அடக்கம்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அருமை நண்பரே சரியான விமர்சனம் சவுக்கடியால் விளாசி விட்டீர்கள் வருகைக்கு நன்றி.

   நீக்கு
 21. நீங்களே உணர்ச்சி வசப்பட்டு கால் கட்டைவிரல் நகத்தைப் பேர்த்து விட்டீர்களென்றால் அந்தந்த நடிகர்களின் ரசிகர்கள் எந்த அளவிற்குப் போகமாட்டார்கள்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்னங்க ஐயா நீங்க வேற கோணத்துல பார்த்து என்னையும் அவங்களோட கொண்டு போயி சேர்ந்துட்டீங்க எனக்கு வேணும், எனக்கு வேணும்

   நீக்கு
 22. சினிமாவில் வில்லன் எவ்வளவு பலசாலியாகஇருந்தாலும்
  ஒல்லி ஹிரோவிடம் அடிவாங்கித்தான் ஆக வேண்டும்
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே உண்மையே இதில் கொடுமை என்ன தெரியுமா ? அதே வில்லன் பின்நாளில் ஹீரோவாகி அவனையே அடிக்கின்றான்

   நீக்கு
 23. வணக்கம்
  ஜி

  சொல்ல வேண்டிய கருத்தை தெளிவாக சொல்லியமைக்கு பாராட்டுக்கள் .. த.ம 12
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ரூபன் நலம்தானே... வருகைக்கும், கருத்துப்பதிவுக்கும் நன்றி

   நீக்கு
 24. சினிமாவையும் வாழ்க்கையும் பிரித்தறியும் பக்குவம் இருந்தால் போதும்.. மனக்காயம் உடற்காயம் இதெல்லாம் ஏற்பட வழியே இல்லை. நல்ல ரசனையோடு எழுதியுள்ளீர்கள்.. :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களின் கருத்துரைக்கு நன்றி

   நீக்கு
 25. திரைப்படம் வேறு, வாழ்க்கை வேறு. நிழல் வேறு, நிஜம் வேறு. பதிவு அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக முனைவரே இது நமது பாமரப்பயல்களுக்கு தெரியவில்லையே,,,, அதனால்தானே தமிழ் நாட்டில் இன்னும் கட்டவுட் கலாச்சாரம் கொடி கட்டி பறக்கிறது

   நீக்கு
 26. நா.. நேத்து ராத்திரியே படிச்சிட்டு கிறுகிறுத்துப் போனேங்!...
  அந்தால... வேலைக்கு நேரமாச்சா..
  கட்டை எடுக்க.. சரி.. சரி.. கருத்து உரைக்க(!) ஏலலை!..

  அவனுங்களுக்காக கட்ட வெரலை பேத்துக்கலாமா?....
  சரி.. அந்த நாக்காலிக்கு என்னாச்சு..ன்னு சொல்லலையே?...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி என்னைப்பற்றி கவலைப்படாமல் கட்டையைப்பற்றி கேட்கிறீங்களே... நியாயமா ?

   நீக்கு
 27. சினிமாவில் எல்லாவற்ரையும் மிகையாக காட்டுவதே வழக்கம் தானே!
  கற்பனைகளை நிஜம் என்று ரசிகர்கள் ஏமாறாமல் இருக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்னும் நம்மாளுங்க எவ்வளவுதான் ஏமாறப் போறாங்களோ.... வருகைக்கு நன்றி சகோ

   நீக்கு
 28. Mrs.பசுபதியை நினைத்து கவலைபடும் நீங்கள் வீட்டில் அவரவ்ர் Mrs.களிடம் ஏச்சும், பேச்சும், அடியும் வாங்கினாலும் திரையில் பஞ்ச் டயலாக்கும், எத்தனை பேர் வந்தாலும் அடித்து வீசுமாறும் நடிக்கும் நமது ஹீரோக்களை பற்றி நினைத்துப் பாருங்கள். தன்னாலே சிரிப்பு பொங்கி வரும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் நண்பரே சரியாக சொன்னீங்கள்....

   நீக்கு
 29. விவிசி, விவிசி, அதுவும் அந்த மிஸஸ் பசுபதி பத்தின கவலை ரொம்பவே ஓவர்! :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்ன செய்வது பொதுநலத்துக்கே கவலைப் பட்டுத்தான் இப்படிக் கெடக்கேன்
   அதென்ன ? வி.வி.சி

   நீக்கு
  2. ஹாஹா, விழுந்து விழுந்து சிரித்தேன்! விவிசி.

   நீக்கு
  3. அடடே நான்கூட டிவி நியூஸ் சொல்றீங்களோன்னு நினைச்சேன் அய்யோ....அய்யோ....

   நீக்கு
 30. ஏன், நீங்கள் பார்க்க நல்ல படங்களே கிடைக்கவில்லையா ஐயா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்னோட நேரம் வேறென்ன ? சொல்ல நண்பரே....

   நீக்கு
 31. தொப்பி படம் தேடுவதற்குள் அடுத்த பதிவாஆஆ.
  அவ்வ்.. நானும் யோசித்ததுண்டு பல விடயம். பின்பு இது சினிமா என நினைப்பு வரும்.
  படம் பார்க்கும்போது இனிமேல் கால் கவனம் அண்ணா ஜி.
  கடைசியில் சிரிப்புதான்.காணொளி அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்பொழுதெல்லாம் டிவி பார்க்கும் பொழுதுகூட சம்மணம் கூட்டிதான் உட்காருகிறேன் சகோ

   நீக்கு
 32. வணக்கம் சகோ,
  இப்படி கோபப்பட்டா? எவ்வளவு விடயத்திற்கு ???????
  நமக்குதான் நட்டம், பாத்தீங்களா? இரண்டு கட்டையும் போச்சி,,,,,,,

  பதிலளிநீக்கு