தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், ஜூலை 07, 2016

முருங்கை அக்கா


பூவினும் மென்மையான வலைப்பூ இதயங்களுக்கு இது நான் முந்தானை முடிச்சு (1985) வெளியான நேரத்தில் நான் எழுதி பத்திரிக்கைகளுக்கு அனுப்பியது எதுவும் வெளியாகவில்லை என்றாலும் நண்பர்கள் ரசித்தவை ஆகவே தாங்களும் ரசிக்கட்டுமென பதிவிடுகின்றேன் அன்றைய பாணியில் எழுதியதை ஞாபகத்தில் கொண்டு வந்து இன்றைய கில்லர்ஜி பாணியில் கொஞ்சம் திருத்தி இருக்கின்றேன் I know this is too late.

கேள்வி 1 பதில் 9
கேள்வி இதுதாங்கோ...
ஏங்க இன்னைக்கு முருங்கைக்காய் சாம்பார் வைக்கவா ?

கார்பெண்டர், கார்மேகம் வீட்டில...
உன் இஷ்டத்துக்கு வச்சுப்புட்டு அப்புறம் என்னை ஏன்டி ? குறை சொல்றே ?

மேசன், மேகநாதன் வீட்டில்...
உனக்கு ஜெமினி கணேசனை பிடிக்கும்னு தெரியும் அதுக்காக தினம் முருங்கைக்காய் சாம்பாரா ?

சி பிட்டிங், காம்பரம் வீட்டில்...
பக்கத்து வீட்டு பங்கஜம் ஐடியா கொடுத்தாளோ ?

பிளம்பர், பிச்சைமுத்து வீட்டில்...
பதி நான் சொல்றதை நம்ம மாட்றே பாக்கியராஜ் சொல்றதை நம்புறியடி.

லக்ட்ரிசியன், த்திராஜ் வீட்டில்...
முருங்கைக்காய் விற்கிற விலையில சாம்பாரா ? மட்டன் குழம்பு வையி.

பெயிண்டர், பெருமாள் வீட்டில்...
வையி, வையி ஆனா ஊர்வசி மாதிரி வீட்டுல இருக்கிற முருங்கை மரத்தோட வெட்டிடாதே...

ஞ்சினியர், சக்கி வீட்டில்...
பேருதான் வேற எல்லாமே ரசம் மாதிரித்தான் இருக்கு.

ர்வேயர், ண்முகம் வீட்டில்...
நேத்து முந்தானை முடிச்சு படத்துக்கு போனது இதுக்குத்தானா ?

வுஸ் ஓனர், ரிஹரன் வீட்டில்...
வையி உனக்கே இஷ்டம் எனக்கென்ன ? கரும்பு தின்னக்கூலியா ?

Chivas Regal சிவசம்போ- 
ஹவுஸ் ஓனர்கூட முருங்கைக்காயில விழுந்தா ? வீட்டுக்கு கிரஹபிரவேசம் நடக்காது வீட்டுக்கு வீடு பிரசவம்தான் நடக்கும்.

செவ்வாய், ஜூலை 05, 2016

தமிழ் படும்பாடு in தமிழ்நாடு


தமிழக தலைநகரம் சென்னை

அந்தப் பெரியவர் கைத்தடியை ஊன்றிக் கொண்டு நடந்து வந்தவர் இரண்டு கல்லூரி மாணவர்கள் பேசிக்கொண்டு நின்றதை கண்டதும்...

ஐயா தர்மாஸ்பத்திரிக்கி எப்பிடி போறது..?
வாட்..?

தர்மாஸ்பத்திரி..?
ஹாய் மச்சி ஐ திங்க் ஹி ஆஸ்க் அபோட் கவர்ண்மெண்ட் ஹோஸ்பிட்டல்யா  

ஓஹ் வோவ்
ஓகே யூ கோ ட்டூ ஸ்ட்ரெய்ட் ஆஃப்டர் த ஃபோர்த் ஸிக்னல் லெப்ட், ஃபஸ்ட் ஃப்ரீ ரைட் வெஸ்ட்ஈஸ்டர் பில்டிங் நெக்ஸ்ட் ஈஸ் தேர்.
சாமி எனக்கு இங்கிலீஸு தெரியாதுங்க...

இட்ஸ் ஓகே ஹாய் ஆட்டோ கம் ஹியர் ட்ராப் த ஓல்ட்மேன் கவர்மெண்ட் ஹோஸ்ப்பிட்டல் ஓகே 
  
(பெரியவரிடம் பணம் உள்ளதா ? என்பதையும் அவரின் ஒப்புதலையும் கேட்காமல் ஆட்டோவை அழைத்து உள்ளே நுழைத்து அனுப்பி விட்டான்)

ஓகே வாத்யாரே... ந்தே.. குந்துமே.
ஐயா ரொம்ப தூரமுங்களா ?
நீ கம்னு குந்து பெர்சு நம்க்கு தெர்யாத ரூட்டா..

(ஸிக்னலில் திரும்பியவன் பெரியவரிடம் பணத்தை பெற்றுக்கொண்டு)

பெர்சு அதோ தெர்துபாரு பில்டிங் அத்க்கு அந்தாண்டே பீச்சாங்கை பக்கமா போனீக்கா வந்துடும் 
பெரியவர் மீண்டும் இரண்டு பேரிடம் கேட்டு எப்படியோ... மருத்துவமனை வந்து வரவேற்பறையில் இருந்த இளம்பெண் ஒருத்தியிடம் கேட்டார்.

அம்மா பத்தாவது வாடு எப்பிடி போறது ?
கோ ட்டூ ஸ்ட்ரெய்ட் தென் ரைட் அவள் கையை நீண்ட வராண்டாவின் நேர்புறமாய் மேலும் கீழுமாய் ஆட்டி வலதுபுறமாய் கையை சாய்த்ததை வைத்து பெரியவர் புரிந்து கொண்டு நடந்து வந்து திருப்பத்தில் இருந்த வரவேற்பறையில் கேட்டார்

தம்பி செல்லப்பேன் எங்கே இருக்கான்..?
ஜஸ்ட் வெயிட் 

கணினியில் சீட்டு விளையாட்டை கீழிறக்கி விட்டு
எஸ் டெல் மீ ஃபேஷண்ட் நேம் ப்ளீஸ்
என்னதுங்கய்யா ?

ஃபேஷண்ட் பேரு.. பேரு... 
சடையாண்டிங்க

(கணினியில் பரிசோதித்து விட்டு சடையாண்டி என்ற பெயர் இல்லாததால்)

நோ தட் நேம்
என்ன...சாமி ? 

அந்தப் பேருல இங்கே யாரும் இல்லே... செவிடனிடம் சொல்வது போல் கத்தி விட்டு ச்சே கழுத்தறுக்குறதுக்குன்னே வருதுங்க வயசான காலத்துல வீட்ல கெடக்க வேண்டியதானே... கோபமாய் முணுமுணுத்து விட்டு மீண்டும் கணினியில் ராஜாவை ராணியோடு கூட்டி கொடுப்பதில் மும்முரமானான்

பெரியவர் குழப்பமாகி, மேலும் கேட்டால் கோபப்படுவான் என பயந்து ஒருவேளை குணமாகி வீட்டுக்கு போயிட்டானோ ? என நினைத்து வீட்டுக்கு திரும்ப வரவேற்பறையின் எதிர்புற கண்ணாடிச் சுவற்றின் மறுபுறத்தில் முதல் கட்டிலில் கீழே இறங்க முடியாத நிலையில் கிடந்த செல்லப்பன் இவரைப் பார்த்து கையசைத்து கூப்பிடுவது தெரியாமல் வெளியேறி கொண்டிருந்தார் பெரியவர் சடையாண்டி

வலைப்பூ நண்பர்களே... நண்பிகளே.... இந்தப் பெரியவர் செல்லப்பனை காணாமல் வீட்டுக்கு திரும்பியதற்க்கு காரணம் இந்த சமூகம்தானே அப்படியானால் குற்றவாளி யார் ? நானும் நீங்களும்தான். ஆம் சமூகம் என்பது என்ன அதற்கு உருவம் கிடையாது எனக்கு முன்னால் இருப்பவர்கள் எனக்கு சமூகம் அதில் நீங்கள் இருக்கிறீர்கள்... உங்களுக்கு முன்னால் உள்ளவர்கள் உங்களுக்கு சமூகம் அதில் நானும் இருக்கிறேன் ஆக குற்றவாளி நாம்தான் ஆகவே இனியெனும் குற்றத்தை தவிர்க்க... இனிய மொழியாம் நம் தமிழ் பேசத்தெரிந்தும் பேசாத தமிழனை செவிட்டில் அறைந்து இனிய தமிழ் பேசவைப்போம்

தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
காணொளி
இப்பதிவு தோன்றியதின் காரணப்பதிவு இதோ - சென்னையில், ஒருநாள்

திங்கள், ஜூலை 04, 2016

உடுக்கை உலகம்

Please ask audio voice then go to Read.

காணொளி

இப்பாடலில் இருந்து நாம் தெரிந்து கொள்வது, இந்த உலகம் தோன்றுவதற்கு முன்பே மாடு வாழ்ந்து இருக்கிறது
ஆம்
அப்படியானால் மாடு உண்பதற்கு புல் கிடைத்து இருக்கிறது புல் தாவரவகை அப்படியானால் மற்றவைகளும் கிடைத்திருக்கும் அதாவது தாவரவகையான நெல், செடி, கொடி, கோதுமை, கம்பு, சோளம், கத்தரிக்காய், புடலங்காய், முட்டகோஸ், காரட், பீட்ரூட், எனக்கு பிடித்த பாகற்காய், லொட்டு, லொசுக்கு இவை வளர்வதற்கு நீர் தேவைப்பட்டிருக்கும்.
அப்படியானால் இந்த உலகம் தோன்றுவதற்கு முன்பே மழை பெய்திருக்கிறது
மழை பெய்ய மேகம் கடலிலிருந்து நீர் எடுத்து வந்திருக்கும்
அப்படியானால் இந்த உலகம் தோன்றுவதற்கு முன்பே கடல் இருந்திருக்கிறது
மேலும் இவை உலர்வதற்கு வெயில் தேவைப்படும்
அப்படியானால் இந்த உலகம் தோன்றுவதற்கு முன்பே சூரியன் தோன்றியிருக்கிறது
மேலும் சூட்டைத் தணிக்க நிலவு வந்து இருக்கும்
அப்படியானால் இந்த உலகம் தோன்றுவதற்கு முன்பே நிலவு தோன்றியிருக்கிறது
காற்றில்லாமல் இவ்வுலகில் எதுவுமே வாழ முடியாது
அப்படியானால் இந்த உலகம் தோன்றுவதற்கு முன்பே காற்றும் இருந்திருக்கிறது
இந்த மாடு வாழ்ந்து இறந்தும் இருக்கிறது அல்லது கொல்லப் பட்டிருக்கிறது நிச்சயமாக கொல்லப் பட்டிருக்க வேண்டும்
ஆம்
கொன்றது மனிதனாகத்தான் இருந்திருக்க வேண்டும் அவன்தான் உணவுக்காக கொன்று நெருப்பிலிட்டு தின்று இருக்கிறான்
அப்படியானால் இந்த உலகம் தோன்றுவதற்கு முன்பே நெருப்பும் இருந்திருக்கிறது
அவன்தான் உணவுக்காக தின்று விட்டு டைம்பாஸிற்காக அதன் தோலை வைத்து உடுக்கை செய்திருக்கிறான்
அப்படியானால் இந்த உலகம் தோன்றுவதற்கு முன்பே மனிதன் வாழ்ந்து இருக்கிறான்.
ஆம்
அந்த உடுக்கையிலிருந்துதான் இந்த உலகம் படைக்கப் பட்டிருக்கிறது.

சாம்பசிவம்-
அடப்பாவமே ஒரு வார்த்தை எல். ஆர். ஈஸ்வரியம்மா தெரியாம பாடுனதுக்கு இவ்வளவு பிரச்சினை ஆக்கிட்டியய்யா உன்னை அந்த புண்ணை நல்லூர் மாரியம்மன்தான்யா காப்பாத்தணும்.

சனி, ஜூலை 02, 2016

கிராமத்துக் கிளிகள்


தேவகோட்டை தேவதையே பொன்னழகி
நீ எனக்கு தேவையடி கண்ணழகி
தேவைப்பட்டா மட்டும் வரும் பொன்னழகா
போதுமய்யா உம் பாசாங்கு கள்ளழகா

வெள்ளி, ஜூலை 01, 2016

கனக ரங்கன் பவனம்


வன்
உயிர்
சொன்னாள்
ஏங்க, நாமலும்
ஒரு சின்னதா வீடு
கட்டுவோம் இடம் மட்டும்
சும்மா வச்சுருந்து பிரயோசனம்
என்ன ? வங்கியில கடன் எடுப்போமா ?