தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, ஜூலை 01, 2016

கனக ரங்கன் பவனம்


வன்
உயிர்
சொன்னாள்
ஏங்க, நாமலும்
ஒரு சின்னதா வீடு
கட்டுவோம் இடம் மட்டும்
சும்மா வச்சுருந்து பிரயோசனம்
என்ன ? வங்கியில கடன் எடுப்போமா ?
எடுக்கலாம் ஆனால் ? நம்ம குழந்தைகள் கல்வி
முக்கியம் இல்லையா ? அதனாலதான் யோசிக்கிறேன்
நீங்க சொல்றதும் சரிதான் அப்புறம் பிள்ளைங்களுக்கு படிப்பு
செலவுக்கு பணம் கட்டுறது கஷ்டம்தான் நானும் வீட்டுல சும்மாதானே
இருக்கேன் வேலைக்குப் போகட்டுமா ? கொஞ்சம் கஷ்டம் தீருமே என்ன
சொல்றீங்க ? குடும்பச் செலவுக்காக உன்னையும் கஷ்டப்படுத்துறது எனது
மனதுக்கு சங்கடமாக இருக்கு கனகா பொம்பளைங்க வேலைக்குப் போற
இடத்துல எவ்வளவு பிரச்சினைகள் இருக்குனு எனக்குத் தெரியும் உனக்கு
தெரிய சாத்தியமில்லை அதனால நீ இப்படிச் சொல்றே அதான்
யோசிக்கிறேன் பிறகு உங்க அப்பா, அம்மா, அண்ணன் என்னை
தவறாக  நினைக்க மாட்டாங்களா ? நாம அவர்களை  மீறித்தான்
கல்யாணம் செய்துக் கிட்டோம் அதனால நீ வேலைக்குப் போயி
கஷ்டப்படுறதை என்னால ஏத்துக்கிற முடியலை எனக்கு கூடிய
சீக்கிரம் கம்பெனியில் சூபர் வைசர் வேலை கிடைக்க சாத்தியம்
இருக்குமா பொறுமையா             இரு  எல்லாம்  விரைவில்
சரியாகி  விடும் அப்புறம்             வங்கியில்  கடன்  வாங்கி
வீடு கட்டுவோம்  நீங்கள்             சொல்றதை கேட்கும்போது
மனசுக்கு  சந்தோஷமாக              இருக்குங்க சீக்கிரமே நீங்க
சொல்றது    நடக்கட்டும்              நமக்கு  தெய்வம்  துணை
 இருக்கும் இனி கவலைப்              படாதீங்க நீ துணை இருக்க
 எனக்கு இந்த உலகத்துல              எதுவுமே கஷ்டமே இல்லை
கனகா  நிச்சயமாக  உங்க              அப்பா  - அம்மாவுக்கு முன்பு
 வாழ்ந்து காண்பிப்போம் சரிம்மா குழந்தைகளை பள்ளிக்குப் அனுப்பி
 வை நான் வேலைக்குப் புறப்படுறேன் மனசைப் போட்டுக் குழப்பாதே
சரியா ? சரிங்க நீங்க
                                                                   பத்திரமா போயிட்டு
                                                                வாங்க, கனகா டாடா
                                                             காண்பித்து அனுப்ப
                                                           படியிறங்கிய ரங்கன்
                                                        வேலைக்கு போனான்
                                                     சந்தோஷமாய் நடந்து...

குறிப்பு - மேலே இந்தப் பதிவை வீடு போன்ற வடிவில் எழுதி இருக்கிறேன் சிலரின் கணினியில் வடிவம் கிடைக்கவில்லை எனில் (Ctrl) பொத்தானை அழுத்திக்கொண்டு எலியை (Mousse) சிறிதாக உருட்டவும் வீட்டின் வடிவம் கிடைக்கும் விளக்கம் கொடுப்பதால் தவறாக நினைக்க வேண்டாம் - நட்புடன் கில்லர்ஜி

முந்தைய பானை வடிவத்தை காணதவர்கள் சொடுக்குக... என்னை

53 கருத்துகள்:

  1. வீடா அது. நான் தேர் என்று நினைத்தேன்.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தாங்கள் சொல்வதும் சரிதான் என்றே தோன்றுகின்றது.

      முயற்சியை ஊக்குவிற்க வேண்டும் என்பது கட்டாயமில்லைதான் என்னைக் கவர்ந்த ஒரு தத்துவம்

      பாக்கு விற்பவனை ஊக்கு வித்தால் தேக்கு விற்பான்
      - கவிஞர் வாலி

      நீக்கு
  2. அருமையான வழிகாட்டல்
    தொடரட்டும் தங்கள் பணி

    பதிலளிநீக்கு
  3. லாரியால் தூக்கி எறியப்பட்டு அந்த 'ரங்கன்' ஆவான்ன்னு படுது!வீடு மட்டுமல்ல ,கேள்விக்குறியும் என் கண்ணில் படுகிறது :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா உங்களுக்கு வினோதமாகத்தான் தெரியுது ஜி

      நீக்கு
  4. எனக்கு ரெண்டு வீடு தெரியுதே !!!

    சிவசம்போ கிருபையோ ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புகைப்படத்தையும் சேர்த்து தெரிகின்றதோ.... முனைவர் ஐயாவின் வருகைக்கு நன்றி

      நீக்கு
  5. அன்புள்ள ஜி,

    வீடு வரை உறவு...
    வீதி வரை மனைவி...
    காடு வரை பிள்ளை...
    கடைசி வரை யாரோ...?

    அருமையாக வீடு வரை(ந்து)காட்டி விட்டீர்கள்...!

    த.ம.4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மணவையாரின் கிரஹபிரவேச வருகைக்கு நன்றி

      நீக்கு
  6. எதையும் சொல்வதில்
    வித்தியாசம் காட்டும் உங்களிடம் இருந்து
    நிறையக் கற்றுக் கொள்ள இருக்கிறது

    வார்த்தைகள் செங்கலாக
    பதிவு வீடானது அற்புதம்

    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிஞரின் வாழ்த்துரை கண்டு மகிழ்ச்சி

      நீக்கு
  7. எளியோரின் கனவு ஒன்றுதான் - எப்படியாவது ஒரு வீடு..

    எனக்கும் அதுதான்..

    எல்லாருடைய விருப்பங்களும் நிறைவேறட்டும்..
    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஜி வீடு கட்டுவது அனைவருக்கும் ஒரு சவாலான கனவுதான்

      நீக்கு
  8. வீட்டின் வடிவில் ஒரு பதிவு
    தங்களின் உழைப்பு வியக்க வைக்கிறது நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரின் விரிவான கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  9. நல்லாருக்கு ஜி! புதுமனை புக நீங்கள் அழைப்பு விடலைனாலும் இதோ நாங்க படியேறி உள்ள வந்த்துட்டோம்ல....வடிவம் நன்றாக உள்ளது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வீடு கிரஹபிரவேச வருகைக்கு நன்றி

      நீக்கு
  10. பதிவில் காணும் கனக ரங்க பவனம் முகப்பு நன்றாய் இருக்கிறது பாராட்டுக்கள் . இப்போதெல்லாம் பெண்கள் பலரும் வேலைக்குப் போகிறார்களே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா ரங்கனின் கொள்கை மனைவியை வேலைக்கு அனுப்பாமல் வாழவேண்டும் காரணம் அவனது வாழ்வின் பின்புலம் அப்படி... நன்றி ஐயா.

      நீக்கு
  11. வித்தியாசமான வீடு கட்டி இருக்கிறீர்கள். வாழ்த்துகள். ரங்கனும் கனகாவும் வீடு கட்டிக் குடி போயாச்சு தானே! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ரங்கனுக்கு பேங்க் லோன் கிடைக்க ஸ்ரீரங்கம் பெருமாளை வேண்டிக்கோங்கோ...

      நீக்கு
  12. வீடுவடிவில் டைப் செய்ய ரொம்ப பொறுமை தேவை! அருமையான கருத்தை பொருமையோடு அழகாக வடிவமைத்து வெளியிட்ட விதம் சிறப்பு! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே வீடு கட்டுவதை விட வீட்டுக்குள் கதையை அடக்குவதற்குதான் சிரம்மப்பட்டேன் வருகைக்கு நன்றி

      நீக்கு
  13. அருமை ஐயா.வீடும் அழகு பதிவும் அழகு ஐயா.நன்றி.

    பதிலளிநீக்கு
  14. விதம் விதமா பதிவுகளில் சிறப்பையும் சிரத்தையும் காட்டுகிறீர்கள் நன்று

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களின் வருகைக்கு நன்றி

      நீக்கு
  15. வீடும் பதிவும் மிக அருமை சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ நலம்தானே.. வருகை குறைந்து விட்டதே... இந்தியா வருகை எப்போது ?

      நீக்கு
    2. இங்கு ரொம்ப பிஸி சகோ. நேரமே கிடைப்பதில்லை. அதனால் தான் தங்கள் பதிவை தொடர்ந்து பார்க்க முடியவில்லை. நாங்கள் இந்தியாவுக்கு செப்டம்பர் மாதம் இந்தியாவுக்கு வந்து விடுவோம்.

      நீக்கு
    3. நல்லது மீள் வருகைக்கு நன்றி சகோ

      நீக்கு
  16. பதிவிலாவது தங்கள் வீட்டை கட்டி விட்டீர்கள். ஒரு குடிசை வீட்டைக் கட்ட என் தந்தை முயன்றார் முடியவில்லை. என் தாயார் முயன்று ஓலைக் குடிசை வீட்டைக் கட்ட முயற்சித்தார் முடியவில்லை. அவர்கள் வழியில் வந்த நான் பெரு முயற்சி செய்து ஒரு ஓட்டு வீட்டைக் கட்டிவிட்டேன் அதுவும் அந்த இடம் வழக்கு 21ம் ஆண்டை நோக்கி வீறு நடை போடுகிறது நண்பரே......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பரே எல்லாம் விரைவில் சரியாகும் பகவான்(ஜி) துணையிருப்பார்.

      நீக்கு
  17. வீடு அழகாக் கட்டியிருக்கிங்க... வீடு தேரானாலும் அழகு அழகுதானே... ரொம்ப சிரத்தை எடுத்து பதிவு எழுதுவதற்கு வாழ்த்துக்கள் அண்ணா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி

      நீக்கு
  18. தனக்கென்று ஒரு வீடு... பலருடைய கனவு அது....

    பதிவினை வீடு வடிவிலேயே அமைத்திருப்பது அருமை. பாராட்டுகள். இப்படி பல விஷயங்கள் செய்வது உங்கள் தனித்துவம். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி ஜி

      நீக்கு
  19. பதிவு வீட்டை பார்க்க வந்து விட்டேன் சகோ. கலக்கல். வீடு கட்டட்டும் அவர்கள் விரைவாக....

    பானையை பார்க்கப் போகிறேன்.

    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ கிரஹபிரவேசத்துக்கு பத்திரிக்கை வரும் கண்டிப்பாக அந்தப் பொங்கப்பானையை எடுத்துட்டு வாங்க சீர் வைக்க.

      நீக்கு
  20. த மவை காணோம் மீண்டும் வருகிறேன்

    பதிலளிநீக்கு
  21. அருமையான வீட்டைக் கட்டி அதைக் கட்டும் விதத்தையும் விளக்கியமைக்கு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு