தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, ஜூலை 02, 2016

கிராமத்துக் கிளிகள்


தேவகோட்டை தேவதையே பொன்னழகி
நீ எனக்கு தேவையடி கண்ணழகி
தேவைப்பட்டா மட்டும் வரும் பொன்னழகா
போதுமய்யா உம் பாசாங்கு கள்ளழகா

ஆவணியில் மாலை இடுவேன் மயிலே
தாவணியில் என்னை முடிஞ்சுக்கடி குயிலே
ஆவணியும் பொறக்கட்டுமே அழகா
ஆசையோடு சேர்ந்துக்கிறலாம் பழக

பட்டணம் போயி வந்தேன் கிளியே
பலகாரம் வாங்கி வந்தேன் களியே
பொட்டனத்தை பிரிக்க மாட்டேன் குறவா
பிரிச்சுப்புட்டா என்னை உரிச்சுடுவே தறவா

இருந்து பேசுவோமடி இப்படியே
விருந்து தாரேண்டி உருப்படியே
மருந்து கொடுத்துடுவே கரு’’வா
அறுந்து போகக்கூடிய உறவா
 
சந்தேகம் கொள்ளலாமா மானே
சந்தோசம் கொண்டிடுவோம் தேனே
சந்தர்ப்பத்தை பயன் படுத்தத் தானே
சங்கீதத்தை மீட்டி விடுவே நீனே

தன்னானே தானே நன்னே நன்னானே
தானானே தானே நானே தன்னானே
லாலா லா லாலா லல்லி லல்லாலா
லாலா லா லாலா லல்லி லல்லாலா
 
 நீவீர் மலர்ந்த முகத்துடன் வாழ்க ! வளமுடன்.
அன்புடன் – கில்லர்ஜி.

பதிவர் திருமதி. கீதா சாம்பசிவம் அவர்கள் நான்கு கிளிகளை காண்பித்து பதிவு போட்டார்கள் உடனே தேவகோட்டைக்கு போண் செய்து எங்கள் வீட்டு கொல்லையில் புகைப்படம் எடுத்து அனுப்பச் சொல்லி பதிவு போட்டோம்ல.... எப்பூடி ?

38 கருத்துகள்:

  1. தேவகோட்டையில் கிளிகள் தவிர கிள்ளைகளும் இருக்கிறதோ கவிபாட

    பதிலளிநீக்கு
  2. என்ன ஒரு சொல்லழகு!..

    கொடுத்து வெச்ச பொன்னழகி - கள்ளழகன்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி தங்களின் வருகைக்கு நன்றி

      நீக்கு
  3. பாட்டு எழுத தயாராகீட்டிங்க பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இதை பாட்டு என்று ஏற்றுக்கொண்டமைக்கு நன்றி

      நீக்கு
  4. நன்றாக இருக்கிறது ஜி. ரசித்தோம்

    பதிலளிநீக்கு
  5. தேவகோட்டையின் அழகு கிளிதானோ...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேவகோட்டையில் மயிலும் அழகுதான் நண்பரே.

      நீக்கு
  6. அபுதாபியில் சம்பாதித்த காசை ,இப்படி கொல்லைப் புரத்தில் நெல் மூடையா அடுக்கி வச்சிருக்கிங்க போலிருக்கு ,கிளிகளுக்கு கொண்டாட்டம்தான் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி சம்பாரிப்பது (கிளிப்)பிள்ளைகளுக்குதானே...

      நீக்கு
  7. கவிதையும் வரிகளும் அருமை சகோ.

    பதிலளிநீக்கு
  8. எத்தனை கிளிகள்
    இத்தனை வரிகளைப் படிக்கும்
    அத்தனை கிளிகளும்
    பச்சைக் கிளிகள் தானே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் கருத்துரைககு நன்றி நண்பரே

      நீக்கு
  9. பாடலை ரசித்தேன் கில்லர்ஜி.....

    பதிலளிநீக்கு
  10. ‘கோவில் மணி ஓசை தன்னை செய்தாரோ ... அவர் என்ன பேரோ ...?’ தேவகோட்டைக்காரோ...!

    சாக்குச்சரப் பச்சைக்கிளி டூயட் பாடல் அருமை...!

    த.ம.8

    பதிலளிநீக்கு
  11. கிராமத்து மணம் மணக்கிறது கவிதையில்

    பதிலளிநீக்கு
  12. ஆஹா! அருமை! எத்தனை கிளிகள்! இம்மாதிரி ராஜஸ்தானில் இருந்தப்போப் பார்த்தது! இங்கேயும் தென்னை மரத்தில் வந்து அமருதுங்க! ஆனால் படம் எடுக்கிறதுக்குள்ளே ஓடிடும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க படம் எடுக்க வேண்டும் என்றால் எங்களைப்போல 100 மூடை நெல் அடுக்கி வைக்கவேண்டும்

      நீக்கு
  13. கிராமத்து கிளிகள் படம் அழகு.

    பதிலளிநீக்கு
  14. கிளிகள் கொஞ்சும் படமும் அழகிய கவிதையும் அட்டகாசம்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரின் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி

      நீக்கு
  15. படமும் அருமை. பாட்டும் அருமை.

    பதிலளிநீக்கு
  16. பெயரில்லா8/15/2016 12:36 AM

    அம்மாடி இவ்வளவு கிளிகளா....
    சூப்பர்ர்;ர்

    பதிலளிநீக்கு
  17. வருக சகோ மிக்க நன்றி

    பதிலளிநீக்கு