தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், ஜூலை 05, 2016

தமிழ் படும்பாடு in தமிழ்நாடு


தமிழக தலைநகரம் சென்னை

அந்தப் பெரியவர் கைத்தடியை ஊன்றிக் கொண்டு நடந்து வந்தவர் இரண்டு கல்லூரி மாணவர்கள் பேசிக்கொண்டு நின்றதை கண்டதும்...

ஐயா தர்மாஸ்பத்திரிக்கி எப்பிடி போறது..?
வாட்..?

தர்மாஸ்பத்திரி..?
ஹாய் மச்சி ஐ திங்க் ஹி ஆஸ்க் அபோட் கவர்ண்மெண்ட் ஹோஸ்பிட்டல்யா  

ஓஹ் வோவ்
ஓகே யூ கோ ட்டூ ஸ்ட்ரெய்ட் ஆஃப்டர் த ஃபோர்த் ஸிக்னல் லெப்ட், ஃபஸ்ட் ஃப்ரீ ரைட் வெஸ்ட்ஈஸ்டர் பில்டிங் நெக்ஸ்ட் ஈஸ் தேர்.
சாமி எனக்கு இங்கிலீஸு தெரியாதுங்க...

இட்ஸ் ஓகே ஹாய் ஆட்டோ கம் ஹியர் ட்ராப் த ஓல்ட்மேன் கவர்மெண்ட் ஹோஸ்ப்பிட்டல் ஓகே 
  
(பெரியவரிடம் பணம் உள்ளதா ? என்பதையும் அவரின் ஒப்புதலையும் கேட்காமல் ஆட்டோவை அழைத்து உள்ளே நுழைத்து அனுப்பி விட்டான்)

ஓகே வாத்யாரே... ந்தே.. குந்துமே.
ஐயா ரொம்ப தூரமுங்களா ?
நீ கம்னு குந்து பெர்சு நம்க்கு தெர்யாத ரூட்டா..

(ஸிக்னலில் திரும்பியவன் பெரியவரிடம் பணத்தை பெற்றுக்கொண்டு)

பெர்சு அதோ தெர்துபாரு பில்டிங் அத்க்கு அந்தாண்டே பீச்சாங்கை பக்கமா போனீக்கா வந்துடும் 
பெரியவர் மீண்டும் இரண்டு பேரிடம் கேட்டு எப்படியோ... மருத்துவமனை வந்து வரவேற்பறையில் இருந்த இளம்பெண் ஒருத்தியிடம் கேட்டார்.

அம்மா பத்தாவது வாடு எப்பிடி போறது ?
கோ ட்டூ ஸ்ட்ரெய்ட் தென் ரைட் அவள் கையை நீண்ட வராண்டாவின் நேர்புறமாய் மேலும் கீழுமாய் ஆட்டி வலதுபுறமாய் கையை சாய்த்ததை வைத்து பெரியவர் புரிந்து கொண்டு நடந்து வந்து திருப்பத்தில் இருந்த வரவேற்பறையில் கேட்டார்

தம்பி செல்லப்பேன் எங்கே இருக்கான்..?
ஜஸ்ட் வெயிட் 

கணினியில் சீட்டு விளையாட்டை கீழிறக்கி விட்டு
எஸ் டெல் மீ ஃபேஷண்ட் நேம் ப்ளீஸ்
என்னதுங்கய்யா ?

ஃபேஷண்ட் பேரு.. பேரு... 
சடையாண்டிங்க

(கணினியில் பரிசோதித்து விட்டு சடையாண்டி என்ற பெயர் இல்லாததால்)

நோ தட் நேம்
என்ன...சாமி ? 

அந்தப் பேருல இங்கே யாரும் இல்லே... செவிடனிடம் சொல்வது போல் கத்தி விட்டு ச்சே கழுத்தறுக்குறதுக்குன்னே வருதுங்க வயசான காலத்துல வீட்ல கெடக்க வேண்டியதானே... கோபமாய் முணுமுணுத்து விட்டு மீண்டும் கணினியில் ராஜாவை ராணியோடு கூட்டி கொடுப்பதில் மும்முரமானான்

பெரியவர் குழப்பமாகி, மேலும் கேட்டால் கோபப்படுவான் என பயந்து ஒருவேளை குணமாகி வீட்டுக்கு போயிட்டானோ ? என நினைத்து வீட்டுக்கு திரும்ப வரவேற்பறையின் எதிர்புற கண்ணாடிச் சுவற்றின் மறுபுறத்தில் முதல் கட்டிலில் கீழே இறங்க முடியாத நிலையில் கிடந்த செல்லப்பன் இவரைப் பார்த்து கையசைத்து கூப்பிடுவது தெரியாமல் வெளியேறி கொண்டிருந்தார் பெரியவர் சடையாண்டி

வலைப்பூ நண்பர்களே... நண்பிகளே.... இந்தப் பெரியவர் செல்லப்பனை காணாமல் வீட்டுக்கு திரும்பியதற்க்கு காரணம் இந்த சமூகம்தானே அப்படியானால் குற்றவாளி யார் ? நானும் நீங்களும்தான். ஆம் சமூகம் என்பது என்ன அதற்கு உருவம் கிடையாது எனக்கு முன்னால் இருப்பவர்கள் எனக்கு சமூகம் அதில் நீங்கள் இருக்கிறீர்கள்... உங்களுக்கு முன்னால் உள்ளவர்கள் உங்களுக்கு சமூகம் அதில் நானும் இருக்கிறேன் ஆக குற்றவாளி நாம்தான் ஆகவே இனியெனும் குற்றத்தை தவிர்க்க... இனிய மொழியாம் நம் தமிழ் பேசத்தெரிந்தும் பேசாத தமிழனை செவிட்டில் அறைந்து இனிய தமிழ் பேசவைப்போம்

தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
காணொளி
இப்பதிவு தோன்றியதின் காரணப்பதிவு இதோ - சென்னையில், ஒருநாள்

44 கருத்துகள்:

 1. ஆங்கிலத்தில் பேசுவதுதான் நாகரிகம் என்று நினைக்கிறார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் நண்பரே இளைய சமூகத்தின் நிலைப்பாடு இதுதான்

   நீக்கு
 2. சமூக அவலங்கள் ஏராளம் நம்மால் முடிந்ததைச் செய்வோம் ஆங்கிலத்தில் ஒரு சொல்வழக்கு இருக்கிறதுCharity begins at home. வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா உண்மை நம்மால் இயன்றதை சொல்வோம்

   நீக்கு
 3. கில்லர்ஜி சென்னை தர்மாஸ்பத்திரியில் இந்த நிலைமை கிடையாது ஜி. அதாவது மொழிப் பிரச்சனை. அது வேறு விதமான பிரச்சனை. அதாவது ஒழுங்காகப் பதில் சொல்ல மாட்டார்கள். ஆனால் இப்படிப் பேசுவது கிடையாது ஜி. என்னுடைய சிற்றறிவுக்கு எட்டியவரை, சென்னையில் நுனி நாக்கு ஆங்கிலம் பேசுபவர்கள் இருந்தாலும், பையன்கள் அப்படிப் பேசுவது மிகவும் குறைவு. அதுவும் தமிழ் தெரியும் பசங்க பேசுவது இல்லை..ஜி. பெரிய பெரிய ஆஸ்பத்திரியில் கூட வரவேற்பரையில் தமிழ் பேசுபவர்கள் இருக்கின்றார்கள். நான் தமிழில்தான் பேசுவேன். சில மருத்துவமனைகளில் ஹிந்திக்காரர்கள், தமிழ் தெரியாதவர்கள் இருந்தாலும் அவர்கள் தமிழ் தெரிந்தவர்களிடம் கைகாட்டிவிடுவார்கள். மருத்துவர்கள் கூட, தமிழ் தெரிந்தவர்கள் குறிப்பாக ஆண் மருத்துவர்கள் தமிழில்தான் பேசுகிறார்கள். ஜி.

  ஆனால் மொழிப் பிரச்சனையை விட, கண்டு கொள்ளாமல், மரியாதைக் குறைவாக, அலட்சியமாக நடப்பதுதான் அதிகம். ஜி

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக இன்றைய இளைய சமூகம் பெரியவர்களுக்கு மதிப்பு கொடுப்பதில்லை தங்களது விரிவான தகவலுக்கு நன்றி

   நீக்கு
 4. முடியாது.. ஜி.. அவங்களால தமிழ் பேசவே முடியாது!..

  தமிழ்ல படிக்காமலேயே உயர் கல்வி கற்று -
  தமிழன் கிட்டயே காசு பணம் கறப்பவர்கள்..

  மழலையர் கூடத்தில் இருந்தே - தமிழ் அல்லாத மொழியே பயிற்று மொழியாகின்றது..

  ஏதோ சுற்றுச் சூழலால் தமிழைக் காதால் கேட்பதோடு சரி..

  அவர்களுடைய சிந்தனை கூட வேற்று மொழியில் தான்...

  எங்க ஊர் காமராஜ் மார்க்கெட்டில் - காய்கறிகளாஈ ஆங்கிலத்தில் கேட்டு வாங்கிச் செல்லும் தமிழச்சிகளைக் கண்டிருக்கின்றேன்..

  இதெல்லாம் - தமிழ் மண்ணிற்குக் கிடைத்த கொடுமைகளில் ஒன்று..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி சரியாக சொன்னீர்கள் இவ்வகையில் மலையாளிகள் உயர்ந்தவர்கள் என்பதையும் நான் இங்கு பதிவு செய்கிறேன் மொழிப்பற்றாளர்கள்.

   நீக்கு
 5. நல்ல முயற்சி! ஆனால், இதில் பாதிதான் சரி. மருத்துவமனை போன்ற இடங்களைப் பொறுத்த வரை நீங்கள் கூறுவது சரிதான். ஆனால், இளைஞர்களைப் பொறுத்த வரை நிலைமை இன்னும் அந்த அளவு மோசமாகி விடவில்லை. தன் நெருக்கமான நண்பர்கள் கொஞ்சம் கூடுதலாக ஆங்கிலத்தில் பேசினாலே, "இவரு பெரிய வெள்ளைக்கார துரை! இங்கலீஷ்லியேதான் பேசுவாரு. அடச்சீ! தமிழ்ல பேசுடா" என்று சொல்கிற அளவில்தான் நம் இளைஞர்கள் இன்றும் இருக்கிறார்கள். ஆனால், ஆண்களோடு ஒப்பிடும்பொழுது இளம்பெண்களில் அந்த அளவு தமிழ்ப் பற்றுடையவர்கள் குறைவாகவே இருக்கிறார்கள்.

  எது எப்படியோ, நீங்கள் கூறுவது போல் உண்மையிலேயே நடக்க வாய்ப்பு மிகவும் நிறையவே உள்ளது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே ஆணைவிட நுனிநாக்கு ஆங்கிலம் பேசுவதில் பெண்களே முன்னோடி என்பது உண்மையே வருகைக்கு நன்றி

   நீக்கு
 6. இது எங்கே போய் நிற்குமோ :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வரும் காலங்களில் இன்னும் மோசமாகும் ஜி

   நீக்கு
 7. தமிழில் பேசினால் தரக்குறைவு என்று நினைப்பவர்களுக்கு சரியான சூடு, மிக நன்று

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது கருத்துப் பகிர்வுக்கு நன்றி

   நீக்கு
 8. நல்ல பகிர்வு. பலருக்கு தாய் மொழியில் பேசினால் கேவலம் என்ற நினைப்பு....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக ஜி இப்படி நிறைய மனிதர்கள் உண்டுதான்.

   நீக்கு
 9. நானே இப்படி ஒருமுறை அனுபவப்பட்டு இருக்கிறேன் அய்யா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே பலருக்கும் இந்த அனுபவம் இருந்திருக்கும்.

   நீக்கு
 10. தெளிவூட்டும் பதிவு
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கவிஞரின் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி

   நீக்கு
 11. இன்றைய நிலைமையை உணர்த்தியிருக்கும் அருமையான பதிவு சகோ.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ உண்மையான கருத்து வருகைக்கு நன்றி

   நீக்கு
 12. தம்பி! - நீ
  செல்லத் தமிழ் - எங்கள்
  சொந்தத் தமிழ் பேசு - ஆனால்
  ஆங்கிலத்தைப் பேசாதே! - இதை
  தங்கச்சிக்கு வேறையா சொல்லணுமா?
  ஆங்கிலம் தெரியாத தமிழரிடம்
  ஆங்கிலம் பேசினால்
  அடி, உதை தான் பரிசு - ஆனால்
  "How are you?" என
  ஆங்கிலம் பேசினாலும்
  "நான் நலமாக இருக்கிறேன்,
  தாங்கள் நலமா?" என
  தமிழில் பேசுவோர் தான்
  அறிவாளிகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே அழகான விரிவான கருத்துரை தந்தமைக்கு நன்றி

   நீக்கு
 13. இன்றைய வேதனையான நிலை இதுதான் நண்பரே

  பதிலளிநீக்கு
 14. வாழத் தகுதியற்ற இந்த சமூகத்தை.. வாழத் தகுந்த சமூகமாக மாற்றுவோம் நண்பரே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிச்சயமாக நம்மைப்போன்ற சிலர் இருப்பதால்தான் தமிழ் வாழ்கின்றது நண்பரே...
   சிலர் தமிழுக்காக தண்டவாளத்தில் தலை வைப்பேன் என்று சொல்லி விட்டு கடைசி தருணத்தில் தொண்டனை தள்ளி விட்டு விடுவார்கள்

   நீக்கு
 15. தமிழகத்தின் நிலையை பதிவு செய்திருக்கிறீர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீண்ட இடைவெளிக்குப் பிறகு வருகை தந்த நண்பர் திரு. வேகநரி அவர்களுக்கு நன்றி

   நீக்கு
 16. See ! What I want to say is ..... I mean ...... I hope you understand what I mean ......

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புரிந்து கொண்டேன் வருகைக்கு நன்றி சகோ

   நீக்கு
 17. உண்மைதான்.
  வேதனையான விஷயம்தான்...
  இப்போது இதுதானே பேஷனாகிவிட்டது...

  பதிலளிநீக்கு
 18. தமிழ் பேச தெரியாத வேற்று மொழிக்காரர்கள் கூட தமிழ் கற்று கொண்டு பேசி விடுகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் உள்ளவர்கள் தமிழ் தெரியாத மாதிரி ஆங்கிலத்தில் பேசுகிறார்கள்.

  நல்ல பதிவு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ உண்மையான கருத்தை சொன்னீர்கள் நன்றி

   நீக்கு
 19. ம்ம்ம்ம்ம், தர்மாஸ்பத்திரிகளை விடத் தனியார் மருத்துவமனைகளிலேயே ஆங்கிலம் கூத்தாடுவதாகத் தோன்றுகிறது. ஆனால் நான் கூடியவரை தமிழிலேயே பேசுவேன். தில்லையகத்து "கீதா" சொல்கிறாப்போல் சென்னை தர்மாஸ்பத்திரிகளில் கேட்ட கேள்விக்கு விடை கிடைப்பது கஷ்டம்! :( சரியான வழிகாட்டுதல் இருக்காது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தங்களது கருத்தும் உண்மைதான் வருகைக்கு நன்றி

   நீக்கு
 20. பிரபல பெண்கள் பத்திரிகை ஒன்று அவங்க போட்டி குறித்த விளம்பரங்களை முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே வெளியிடுகிறது. பத்திரிகைகள் இப்படித் தமிழ் வளர்த்தால் என்ன செய்ய முடியும்? கல்கிப் பத்திரிகையிலும், மங்கையர் மலர் பத்திரிகையிலும் கூட இப்போது பிரபலமாக இருக்கும் தங்கிலீஷ் மொழியில் தான் எல்லாமும் வருகின்றன. வருடம் முழுவதும் வீ வில் மீட்! என்று போடுகின்றார்கள். இதை யார் கண்டிக்கின்றனர்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்த பத்திரிக்கைகளை குற்றம் சொல்வதைவிட அவைகளை பணம் கொடுத்து வாங்குவதை நாம் நிறுத்தவேண்டும் பிறகு அவர்கள் தானாகவே மாறி விடுவார்கள் கண்டிப்பதற்கு இதுவே எளிமையான வழி

   நீக்கு
 21. நீங்கள் சொல்வது சரிதான். பலர் தங்களது தாய்மொழி தமிழாக இருந்தும் ஆங்கிலம் சரியாகத் தெரியாவிட்டாலும் ஆங்கிலம் பேசுவதாக நினைத்துக்கொண்டு பேசுகிறார்கள். அவர்களை அடித்துத் திருத்தமுடியுமா என்ன? அவர்களாக திருந்தவேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே உண்மைதான் தானாக திருந்த வேண்டும் ஆனால் நாட்டின் போக்கு அப்படியே இல்லையே....

   நீக்கு
  2. ஆனால் நாட்டின் போக்கு அப்படியே இல்லையே....

   சரியாக சொன்னீர்கள் கில்லர்ஜி. தாய்மொழி தமிழை பேசுவதை கேவலமாகவும், ஆங்கிலம் பேசுவதை உயர்வாகவும் நம்பும் தமிழகத்தின் போக்கே இந்த நிலைக்கு காரணம்.
   ஆங்கில பாஷை சரியாக பேச தெரிந்த தமிழர்கள் ஆங்கிலம் பேசுவதை எல்லாம் எதற்காக ஒரு சிறப்பு தகுதியாக தமிழகத்தில் எடுத்த கொள்ள வேண்டும்?

   நீக்கு
  3. வருக நண்பரே மக்களின் மனதில் தாய்மொழிப்பற்று தானாக வருவேண்டும் என்பதே எனது கருத்து நண்பரே

   நீக்கு