தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், ஜூலை 07, 2016

முருங்கை அக்கா


பூவினும் மென்மையான வலைப்பூ இதயங்களுக்கு இது நான் முந்தானை முடிச்சு (1985) வெளியான நேரத்தில் நான் எழுதி பத்திரிக்கைகளுக்கு அனுப்பியது எதுவும் வெளியாகவில்லை என்றாலும் நண்பர்கள் ரசித்தவை ஆகவே தாங்களும் ரசிக்கட்டுமென பதிவிடுகின்றேன் அன்றைய பாணியில் எழுதியதை ஞாபகத்தில் கொண்டு வந்து இன்றைய கில்லர்ஜி பாணியில் கொஞ்சம் திருத்தி இருக்கின்றேன் I know this is too late.

கேள்வி 1 பதில் 9
கேள்வி இதுதாங்கோ...
ஏங்க இன்னைக்கு முருங்கைக்காய் சாம்பார் வைக்கவா ?

கார்பெண்டர், கார்மேகம் வீட்டில...
உன் இஷ்டத்துக்கு வச்சுப்புட்டு அப்புறம் என்னை ஏன்டி ? குறை சொல்றே ?

மேசன், மேகநாதன் வீட்டில்...
உனக்கு ஜெமினி கணேசனை பிடிக்கும்னு தெரியும் அதுக்காக தினம் முருங்கைக்காய் சாம்பாரா ?

சி பிட்டிங், காம்பரம் வீட்டில்...
பக்கத்து வீட்டு பங்கஜம் ஐடியா கொடுத்தாளோ ?

பிளம்பர், பிச்சைமுத்து வீட்டில்...
பதி நான் சொல்றதை நம்ம மாட்றே பாக்கியராஜ் சொல்றதை நம்புறியடி.

லக்ட்ரிசியன், த்திராஜ் வீட்டில்...
முருங்கைக்காய் விற்கிற விலையில சாம்பாரா ? மட்டன் குழம்பு வையி.

பெயிண்டர், பெருமாள் வீட்டில்...
வையி, வையி ஆனா ஊர்வசி மாதிரி வீட்டுல இருக்கிற முருங்கை மரத்தோட வெட்டிடாதே...

ஞ்சினியர், சக்கி வீட்டில்...
பேருதான் வேற எல்லாமே ரசம் மாதிரித்தான் இருக்கு.

ர்வேயர், ண்முகம் வீட்டில்...
நேத்து முந்தானை முடிச்சு படத்துக்கு போனது இதுக்குத்தானா ?

வுஸ் ஓனர், ரிஹரன் வீட்டில்...
வையி உனக்கே இஷ்டம் எனக்கென்ன ? கரும்பு தின்னக்கூலியா ?

Chivas Regal சிவசம்போ- 
ஹவுஸ் ஓனர்கூட முருங்கைக்காயில விழுந்தா ? வீட்டுக்கு கிரஹபிரவேசம் நடக்காது வீட்டுக்கு வீடு பிரசவம்தான் நடக்கும்.

38 கருத்துகள்:

 1. இன்னும் முருங்கை ஞாபகம் மறக்கவில்லைப்போலும்)))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே ஏதோ ஞாபகம் வருகைக்கு நன்றி

   நீக்கு
 2. மிகவும் இரசித்துப் படித்தேன்
  காரணம் எனக்கும் முருங்கக்காய் பிடிக்கும்
  இறுதியில் முடித்த விதம் அருமை

  பதிலளிநீக்கு
 3. ஹா....ஹாங்.... ஹா.... ரசித்தேன்!

  பதிலளிநீக்கு
 4. பாத்து பாத்து முருங்கைகாயை மெள்ளும்போது, முருங்கை குச்சி பற்களுக்கு இடையில் சிக்கிக்கொள்ளும்..பிறகு பல்லை நோண்ட வேண்டியிருக்கும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் நண்பரே பிறகு பல்லாவரம், பல்டாக்டர் பல்ராமனிடம் போகவேண்டும்.

   நீக்கு
 5. பாக்யராஜே மறந்திருப்பார். நீங்கள் நினைவுக்கு வைத்து பதிவிட்டுள்ளீர்கள் நன்று

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே அன்று முருங்கை விலை ஏறியதற்கு பாக்கியராஜும் ஒரு காரணமே..

   நீக்கு
 6. பழைய நெனப்புடா பேராண்டி.. பழைய நெனைப்புடா!...

  பதிலளிநீக்கு
 7. பதில்கள்
  1. வாங்க சகோ நலம்தானே..... வருகைக்கு நன்றி

   நீக்கு
 8. ஹாஹா....

  துரை செல்வராஜூ ஜியின் கருத்துரையை ரசித்தேன்! :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி அப்படீனாக்கா.... பதிவு ரசிக்கும்படி இல்லையோ....

   நீக்கு
 9. அப்பவே உங்க லொள்ளு ஆரம்பம் ஆயிடுச்சா :)

  பதிலளிநீக்கு
 10. ஹாஹாஹா என்ன ஜி இப்படி ஜொள்ளிட்டீங்க ?

  பதிலளிநீக்கு
 11. முருங்கைக்காயில் அப்படி என்ன விசேஷம் ஜி?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா ஹாஹாஹா இதை 30 வருடத்துக்கு முந்தி பாக்கியராஜிடம் கேட்டு இருக்கணும்

   நீக்கு
 12. இது கொஞ்சம் ஓவரா இல்ல ஹிஹிஹி அப்ப அந்த வயசுலனா ஓகே...

  உங்கள விட லொள்ளு ஓவர் இந்த சிவாஸ் ரீகல் சிவசம்போவுக்கு எல்லாம் அந்த ரீகல் செய்யற ரியாக்ஷன்...ஹிஹிஹி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சிவசம்போ அப்போதிருந்து இப்படித்தான்.

   நீக்கு
 13. பாக்யராஜுக்குப் பெருமை சேர்த்த கில்லர்ஜிய பத்தி அவரு நினைப்பார் முருங்கைக்காய்க்கு இத்தனை மகத்துவமா இந்த வயசிலும் பேச வைக்குதேனு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க பாக்கியராஜுக்கு நான்தான் பெருமை சேர்க்கணுமா ?

   நீக்கு
 14. முருங்கைக்காய் நன்று. தமிழ் களஞ்சியம் வலைத்தளத்தில் பதிவுகள் மேற்கொள்வது குறித்து விளக்குமாறு கேட்டு கொள்கிறேன்

  பதிலளிநீக்கு
 15. ஒரே கலக்கல் சகோ. முந்தானை முடிச்சு படம் 1983 இல் தானே ரீலீஸ் ஆனது ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது கணக்கு உண்மைதான் நான் பத்திரிக்கைகளுக்கு அனுப்பிய வருடத்தை குறிப்பிட்டேன் விளக்கவுரைக்கு நன்றி

   நீக்கு
 16. ரசித்தேன். ஆனாலும் உங்களுக்கு ரொம்பத் தான் நக்கல்! :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நடைமுறை உண்மையை சொன்னது தவறா ?

   நீக்கு
 17. வணக்கம்
  ஜி
  தெய்வீக உணவு பற்றி நன்றாக சொல்லியுள்ளீர்கள் நகைச்சுவை பாணியில் வாழ்த்துக்கள்
  ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: ஆயுதப்பூ சிறுகதை நூல் வெளியீடு.-மலேசியா-சிங்கப்பூர...:
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 18. Chivas Regal சிவசம்போவின் கருத்தை இரசித்தேன்!

  பதிலளிநீக்கு