You want see big size ? Just click one
time Photo Inside.
பாமரப்பயல்களுக்கு,
பார்த்தாயா ? சம்பளத்தின் நிலைபாட்டை
இந்தக்கோடிகள் எங்கிருந்து போகிறது தெரியுமா ? தெருக்கோடியில்
நிற்க்கும் நம்மைப்போல் உள்ளவர்களிடமிருந்துதான்.... நம்மிடம் ஏது ? இவ்வளவு பணம் எனக்கூட நீ கேட்பாய், ஏனெனில் நீ இன்னும் பாமரனே.. சிறுதுளி
பெருவெள்ளம் என்பதின் பொருள் உனக்கு தெரியுமா ? தெரியாது, ஏனெனில் நீ இன்னும் பாமரனே.... தமிழ்நாட்டின் தற்காலமக்கள் தொகை 7 கோடி தலைக்கு ஒருதினம்
ஒருரூபாய் போதுமடா பாமரா... ஒருநடிகர் ஒரு திரைப்படத்தில் நடித்து
முடிக்க ஒரு மாதகாலம் தாராளம் மிகுதிக்குத்தான் டூப்
மாஸ்டர்கள் இருக்கிறார்களே... ஆபத்தான காட்சிகளில் நடிக்க அன்றாட அத்தக்கூலிக்கு, (முக்கியவிசயம், பெரும்பாலும் தமிழர்கள்) பாமரா இந்தப்பணத்தை நீ என்று சம்பாரிக்கமுடியும் ? எப்படி சம்பாரிக்க முடியும் ? முடியாது காரணம் நீ
உனக்காக வாழவில்லை இவர்களை போன்றவர்களுக்காக வாழ்கிறாய், இவர்களுக்காகவே சாகிறாய், ஏனெனில் நீ இன்னும் பாமரனே.... இதனால்தான் பெண்களும் துணிவே துணையென, துணிந்து விட்டார்கள்
துணிகளை களைந்து உன்மனதில் நிலைகொள்ள, காரணம் நீ சிலை வடிக்கிறாய், வருங்கால
தலைவியே என்கிறாய், ஏனெனில் நீ இன்னும் பாமரனே.... அற்புதமான மனிதப்பிறவி எடுத்து பூமிக்கு வந்திருக்கிறாய், உன்னைப்படைத்த
இறைவனுக்கு சேவை செய்து வாழவேண்டாம், உன்னைப்பெற்ற தாய்-தந்தையர்க்காக
வாழவேண்டாம், உனது தாய்நாட்டுக்காக வாழவேண்டாம், உனது ஊரின் புகழுக்காக
வாழவேண்டாம், உனது வீட்டிக்காக வாழவேண்டாம், உனக்காகவாவது சுயநலவாதியாக வாழலாமே ! புரிகிறதா, பாமரா ? ஒருவேளை புரியவில்லையெனில் நீ இன்னும் பாமரனே...
தந்தை பெரியார், Dr. M.S. உதயமூர்த்தி இவங்களெல்லாம்
சொல்லி கேட்காத நாங்க, நீ சொல்லி கேட்ருவோமாக்கும், தலைவன் படம்
ரிலீஸானா குவாட்டர் கிடைக்குமே நீ கொடுப்பியா ? கொடுக்கமாட்டே, ஏன்னா, நீ ஒரு கஞ்சனே....
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)





.jpg)