பூவிற்கு வாசமுண்டு என்றால்
என் பேருக்கும் வாசமுண்டு காரணம்
என் பெயர் ஸ்ரீபூவு
உன்னை நாட்டையாளும் ராஜா என்றால்
என்னையும் சொல்லலாம் காரணம்
என் பெயர் எச். ராஜா
உனக்கு குழந்தைகள் உண்டென்றால்
என்னிடமும் உண்டு காரணம்
என் பெயர் குழந்தைவேலு
உன்னிடம் அன்பு உள்ளதென்றால்
என்னிடமும் உண்டு காரணம்
என் பெயர் அன்புமணி
உனது வீட்டில் பலாமரம் உள்ளதென்றால்
என்னிடமும் உண்டு காரணம்
என் பெயர் ரூபலா
உனக்கு இசையுணர்வு உண்டென்றால்
என்னிடமும் உண்டு காரணம்
என் பெயர் சங்கீதா
உனக்கு கீர்த்தனைகள் தெரியுமென்றால்
என்னிடமும் அவை உண்டு காரணம்
என் பெயர் கீர்த்தனா
உனக்கு மொழியுணர்வு உண்டென்றால்
என்னிடமும் உண்டு காரணம்
என் பெயர் தேன்மொழி
உனக்கு கவியுணர்வு உண்டென்றால்
என்னிடமும் உண்டு காரணம்
என் பெயர் கவிமுகேஷ்
உனக்கு பதவிஆசை உண்டென்றால்
என்னிடமும் உண்டு காரணம்
என் பெயர் ஆசைத்தம்பி
உனக்கு அழகு உண்டென்றால்
என்னிடமும் உண்டு காரணம்
என் பெயர் அழகுமுத்து
உனக்கு விவேகம் உண்டென்றால்
என்னிடமும் உண்டு காரணம்
என் பெயர் விவேக்
உனக்கு ஐஸ்வர்யம் உண்டென்றால்
என்னிடமும் உண்டு காரணம்
என் பெயர் ஐஸ்வர்யா
உனக்கு கலையார்வம் உண்டென்றால்
என்னிடமும் உண்டு காரணம்
என் பெயர் கலைச்செல்வி
உனக்கு வித்யாசமான கருத்தென்றால்
என்னிடமும் அவை உண்டு காரணம்
என் பெயர் வித்யா
உன்னிடம் கார் உண்டு என்றால்
என்னிடமும் உண்டு காரணம்
என் பெயர் கார்மேகம்
உனக்கு அண்ணன்கள் உண்டென்றால்
எனக்கும் உண்டு காரணம்
என் பெயர் அண்ணாதுரை
உனக்கு தமிழுணர்வு உண்டென்றால்
என்னிடமும் உண்டு காரணம்
என் பெயர் தமிழ்வாணன்.
இன்று எனது மகன் தமிழ்வாணன் அகவை 25 வெள்ளி விழா ஆண்டு வாழ்த்துங்கள் நட்பூக்களே... டு
புரோட்டாவுடன்...








