தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, ஜனவரி 16, 2016

தேடுகின்றேன் நான்...


தேடுகின்றேன் நான்...
வாங்கிய கடனை திரும்ப கேட்பதற்கு முன் திருப்பிக் கொடுக்கும் மானிடர்களை,
தேடுகின்றேன் நான்...
எனது இந்தியாவில் கட்சித் தொண்டன் அல்ல ! அரசியல் தலைவன் தீக்குளிப்பதை,
தேடுகின்றேன் நான்...
வாக்காளர்களுக்கு பணம் தராமல் ஓட்டுக்கேட்கும் அரசியல்வாதிகளை,
தேடுகின்றேன் நான்...
வேட்பாளர்களிடம் பணம் கேட்காமல் ஓட்டுப் போடும் வாக்காளர்களை,
தேடுகின்றேன் நான்...
தேர்தல் இல்லாத நேரத்தில் தொகுதி மக்களை கை எடுத்து வணங்கும் எம்எல்ஏக்களை,
தேடுகின்றேன் நான்...
சட்டசபையில் எதிர்க் கட்சியை கேள்வி கேட்கும் எம்எல்ஏக்களை,
தேடுகின்றேன் நான்...
பொதுக்கூட்டத்தில் எதிர்க் கட்சியை கேள்வி கேட்காத எம்எல்ஏக்களையும்,
தேடுகின்றேன் நான்...
வெள்ளை வேஷ்டி வெள்ளை சட்டை அணியாத அரசியல்வாதியை,
தேடுகின்றேன் நான்...
தோளில் துண்டு போடாத அரசியல்வாதியையும்,
தேடுகின்றேன் நான்...
முன்னும் பின்னும் கார்படை சூழாமல் காரை தானே ஓட்டிப் போகும் அரசியல்வாதியை,
தேடுகின்றேன் நான்...
அந்தக் காரில் வெட்டியாய் நால்வர் இல்லாமல் போகும் அரசியல்வாதியையும்,
தேடுகின்றேன் நான்...
ஸ்விட்சர்லாந்த் நாட்டின் திசையறியா அரசியல்வாதியை,
தேடுகின்றேன் நான்...
ஆஸ்திரேலியாவுக்கு தன் மக்களை படிக்க அனுப்பாத அரசியல்வாதியையும்,
தேடுகின்றேன் நான்...
வீட்டுக்குள் மருமகள் வர-தட்சினை கேட்காத குடும்பங்களை,
தேடுகின்றேன் நான்...
தனிக்குடித்தனம் போகும் மகளை கண்டித்து தடுக்கும் தாயை,
தேடுகின்றேன் நான்...
தனிக்குடித்தனம் போகும் மருமகளை வாழ்த்தியனுப்பும் மாமியாரை,
தேடுகின்றேன் நான்...
போன வருடம் கட்டிக்கொடுத்த தன் மகள் வாந்தி எடுக்காமல் இந்த வருடம் வீட்டுக்கு வந்த மருமகள் வாந்தி எடுப்பதை கண்டு பூரிக்கும் மாமியாரை,
தேடுகின்றேன் நான்...
மகள் இறந்த பிறகும் மருமகன் நல்லாயிருக்க வேண்டுமென நினைக்கின்ற மாமன்-மாமியாரை,
தேடுகின்றேன் நான்...
மகன் இறந்ததினால் மருமகளுக்கு மறுமணம் முடித்து வைக்கும் மாமன்-மாமியாரையும்,
தேடுகின்றேன் நான்...
மாமியார் மடியில் படுத்துக் கொண்டு டிவி பார்க்கும் மருமகளை,
தேடுகின்றேன் நான்...
டிவியில் சீரியல் பார்க்க பிடிக்காது என்று சொல்லும் மாமியார்-மருமகளையும்,
தேடுகின்றேன் நான்...
மருமகளுக்கு பேன் பார்க்கும் மாமியாரை,
தேடுகின்றேன் நான்...
மாமியாரின் கால் நகத்தை வெட்டி விடும் மருமகளையும்,
தேடுகின்றேன் நான்...
துபாயிலிருந்து வீட்டிற்கு போண் பேசும் போது பணம் கேட்காமல் பேசி முடிக்கும் குடும்பத்தினரை,
தேடுகின்றேன் நான்...
கணவன் வாங்கி வந்த நெக்லஸை நாத்தனார் கழுத்தில் போட்டு அழகு பார்க்கும் மனைவியரை,
தேடுகின்றேன் நான்...
அழகு பார்ப்பதற்காக போட்ட நெக்லஸை சந்தோஷமாய் கழட்டிக் கொடுக்கும் சகோதரியை,
தேடுகின்றேன் நான்...
வரும் போது உங்க மச்சானுக்கு கோல்ட் வாட்சு எடுத்து வாங்கண்ணா என்று சொல்லாத சகோதரியை,
தேடுகின்றேன் நான்...
பேச்சே வராத குழந்தையிடம் ஜிமிக்கி வாங்கிட்டு வாங்க மாமான்னு சொல்லு என்று சொல்லாத சகோதரியையும்,
தேடுகின்றேன் நான்...
எப்ப கேன்சலில் வருவீர்கள் என்று கேட்கும் மனைவியர்களை,
தேடுகின்றேன் நான்...
வரும் போது ரெட்டை வடம் செயின் எடுத்து வாங்க என்று சொல்லாத மனைவியர்களையும்,
தேடுகின்றேன் நான்...
வாங்கும் இடத்தை மருமகள் பெயரில் முடிக்கச் சொல்லும் தாயாரை,
தேடுகின்றேன் நான்...
வாங்கும் வீட்டை மாமியார் பெயரில் முடிக்கச் சொல்லும் மனைவியரையும்,
தேடுகின்றேன் நான்...
காலேஜூக்கு போகணும்னா ஹீரோ ஹோண்டா வேண்டுமென டிமாண்ட் வைக்காத மகனை,
தேடுகின்றேன் நான்...
மகனுக்கு காரியம் சாதிக்க கணவனுக்குப் பிடித்த கீரைப் போண்டா செய்து கொடுக்காத மனைவியரை,
தேடுகின்றேன் நான்...
கல்லானாலும் கணவன் என்று நினைக்கும் பூவையரை,
தேடுகின்றேன் நான்...
மண்ணானாலும் மனைவி என்று நினைக்கும் ஆடவரை,
தேடுகின்றேன் நான்...
தேடுகின்றேன் நான்...
தேடுகின்றேன் நான்...
தேடுகின்றேன் நான்...


சண்டாளன் சாம்பசிவம்-
அட மூதேவி இப்படியே தேடிக்கிட்டு கடைசியிலே சுடுகாட்டுல வந்து நிக்கிறியே இங்கேகூட கிடைக்க மாட்டாங்களே...

குறிப்பு - இது கவிதையோ கட்டுரையோ நானறியேன் ஆயினும் எனக்கு மனக்காயத்தை கொடுத்து இதை எழுதுவதற்கான அடிப்படை ‘’கரு’’ தருவதற்கு  காரணகர்த்தாவாகிய என் மனைவியின் தாய் - தந்தையருக்கு நன்றி - கில்லர்ஜி

49 கருத்துகள்:

  1. தேடுகிறேன் நான்...
    ஒவ்வொன்றையும் தேடி... தேடி... கடைசியில் நம்மளைத்தான் தேடணும் அண்ணா...
    அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் வருகைக்கு நன்றி நண்பரே இப்படி தேடியவர்கள் பெரும்பாலும் காணாமல் போனது உண்மையே...

      நீக்கு
  2. புதிய சிந்தனையில் அருமையான கேள்விகள். சில விஷயங்களை சாத்தியமாக பார்த்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களின் கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  3. அன்புள்ள ஜி,

    ‘தேடினேன் தேடினேன் .. கண்டு கொண்டேன் அன்னையை
    கண்டு கொண்டேன் அன்னையை...’ அன்னையும் தந்தையும் மாமியாரும் முன்னறி தெய்வம் என்றும்... அவர்களால் தேடல் தொடங்கியது... என்றாலும் தேடிய அனைத்தும் நன்றுதான்... ஆனால் எங்கு எப்பொழுது கிடைக்கும் என்பது காந்தி இருந்தால் ஒருவேளை நடந்தாலும் நடக்கலாம்.

    ‘தேடினேன் வந்தது நாடினேன் தந்தது வாசலில் நின்றது வாழவா என்றது...!’

    நன்றி.
    த.ம.3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக மணவையாரே கடல்லயே கிடைக்காதாமே... ஊருல இப்படித்தான் பேசிக்கிறாங்க...

      நீக்கு
  4. திக்குத் தெரியாத காட்டில்-உனைத்
    தேடித் தேடி இளைத்தேனே –

    என்று பாரதியைப் போல தேடித்தேடி இளைத்து விடாதீர்கள். சில தேடல்களில் சுகமும் உண்டு. அது என்ன கடைசியில், காரணகர்த்தா மனைவியின் தாய் – தந்தையர் என்று முடித்து விட்டீர்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே அவர்களின் சவுக்கடி வார்தைகளின் சிந்தனையே என்னை இவ்வளவு தூரம் தேடிப்போக வைத்தது உண்மையே...

      நீக்கு
  5. ஆடுதல்,பாடுதல்,ஓடுதல்,கூடுதல்,ஊடுதல்,சாடுதல் - என, அனைத்தும் முடிந்து விடலாம்..

    ஆனால் -

    தேடுதல் ஒருபோதும் முடிவதில்லை!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி உண்மையான வார்த்தை சொன்னீர்கள் நன்று

      நீக்கு
  6. இதில் கில்லர்ஜி நீங்கள் தேடும் மாமியார்களையும், மருமகள்களையும் பார்த்ததுண்டு. நீங்கள் தேடும் நாத்தனார், மனைவி...அதான் இதை அடிப்பவள்தான் ஹிஹிஹி..இன்னும் மாமியார் மட்டும் ஆகல...ஆனாலும் நீங்கள் தேடும் அந்த மாமியாரும் ஹிஹி வேறு யாரு...அஹஹாஹ் சும்மா ஜி...ஆனால் உண்மையாகவே நான் பார்த்திருக்கின்றேன் என்பதால் சொல்லுகின்றேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க, எங்கே பார்த்தீங்க கனவுலயா ? ஒருவேளை 1977க்கு முன்பாக இருக்குமோ....

      நீக்கு
  7. தேடினாலும் கண்டுபிடிக்க இயலாது நண்பரே
    தம+1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே உண்மைதான் வருகைக்கு நன்றி

      நீக்கு
  8. தேடுதல் ஒரு தொடர்கதை....
    தம +1

    பதிலளிநீக்கு
  9. தேடல் விசித்திரம் தான் ஜீ.

    பதிலளிநீக்கு
  10. நல்ல தேடல். அனைவருக்கும் ஒரு பாடம்.

    பதிலளிநீக்கு
  11. வணக்கம்
    ஜி
    தேடுதல் ஒரு தொடர் பயணந்தான்... எப்போது கிடைக்குதோ அப்போது எடுத்துக்கொள்வோம்...த.ம12

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  12. ஒட்டுப்போட்டாச்சு.
    தேடுங்கள்... தேடுங்கள் தேடிக்கொண்டே இருங்கள்... கண்டடைந்தாலும் அடைவீர்கள். தேடலில் காணாமல் போனாலும் போவீர்கள்.. !ஆனாலும் தேடுங்கள். நல்ல சிந்தனைப்பதிவு. நான் தேடப்புறப்பட்டு விட்டேன்.

    உங்கள் தேடல் தொடரட்டும். கண்டு பிடித்தால் சுவிஸ் பக்கமும் அனுப்பி வையுங்கள்.என் தலையில் பேன் பார்க்கும் மாமியாரை தான் தேடுகின்றேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க தங்களது தேடுதலும் படித்தேன் அருமை
      தலையில் பேன் பார்க்கும் மாமியார் கிடைக்கவில்லை எனில் தலையில் பேன் பார்க்கும் மாமியாராய் ஆகலாமே வெகுசுலபம்.

      நீக்கு
    2. பேன் பார்க்க தலையில் முடி வேண்டுமே.. என் பையன் எப்பவோ சொல்லிட்டான் நம்மூரு பெண்ணுங்களை தான் எனக்கு மருமகளாகக்கன்னும் என ஆசைப்படக்கூடாதாம்! இதில் ஈரும் பேரும்-...! காசு கொடுத்து தான் வளர்க்கணும்.-

      நீக்கு
    3. இனி வரும் காலங்களில் தலை முடியும் காசு கொடுத்துதான் வாங்கணும் போல...

      நீக்கு
  13. ஒரு மேதை பகல் வேளை கையில் விளக்குடன் மனிதனை தேடினாராம்... அப்படி தேடியும் மனிதன் கிடைக்கவில்லை நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பா ஹாஹாஹா பகலில் விளக்குடன் தேடி போதை மனிதன் மா3த்தான் நானும் இருக்கின்றேனோ....

      நீக்கு
  14. மத்தவங்க கிடைச்சாலும் கிடைக்கலாம், அந்த இரண்டாம் நபர் கிடைக்கவே மாட்டார்.

    பதிலளிநீக்கு
  15. பதில்கள்
    1. தங்களின் முதல் வருகைக்கு நன்றி நண்பரே

      நீக்கு
  16. உங்களின் தேடல்கள் பெரிது! பலரும் தேடிக்கொண்டிருப்பது! சிலதாவது கிடைப்பின் சிறிது நிம்மதி கிடைக்கும்தான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களின் கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  17. 40 வயதைத் தாண்டி விட்டாலே, எது நடக்காதோ அதை நடப்பதாக நினைக்கத் தோணும்... நீரும் விதிவிலக்கல்ல போலும் நண்பரே!

    நீங்க ரொம்ப நல்லவங்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே 40ஐ தொட எனக்கு இன்னும் 24 இருக்கின்றதே நண்பரே...

      நீக்கு
  18. தேடுகின்றேன் நான்
    தேடற்கரியவர்களை மட்டுமல்ல
    தேடற்கரிய செயல்களையும் தான்...
    தேடுகின்றேன் நான்
    அருமையான தொகுப்பு இது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் கருத்துரைக்கு நன்றி நண்பரே

      நீக்கு
  19. தேடினாலும் கிடைக்காதவற்றை தேடி தேடி எழுதியிருக்கிறீங்க. சூப்பர்.

    பதிலளிநீக்கு

  20. இந்த தேடுதல் வேட்டை இன்னும் பல காலம் தொடரும் என்றே நினைக்கிறேன்.

    பி.கு நான்கு நாட்களாக ஊரில் இல்லாததால் வலைப்பக்கம் வர இயலவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தாமதமானாலும் மொத்தமாக எல்லா பதிவுகளையும் படடித்து விடுகின்றீர்களே மிக்க நன்றி

      நீக்கு