தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், ஜனவரி 18, 2016

Tirumurugan Transport


இந்தப்பதிவுக்கு முதன் முதலாக வருபவர்கள் இதன் தொடர்பான கீழ்காணும் பதிவுகளை படித்த பிறகு தொடர்ந்தால் பதிவின் காரணங்கள் விளங்கும் இதில் கொக்கி போட்டு தொடர் பதிவாக்கிய அன்பின் ஜி குவைத் மன்னர் திரு. துரை செல்வராஜூ அவர்களுக்கு நன்றி


கீழிருந்து பெர்ஃப்யூம் வர தலைவன் கதவைத் திறக்கச் சொல்ல சோமன் மெதுவாக திறக்க... கு....பீ.....ர்... என்று 6 பேரின் நாசியைத் துளைத்தது மணம்.
டேய்... பட்டுனு ஸ்ப்ரே அடிடா....
சர்.... சர்..... என்று அடித்து தீர்க்க... கொஞ்சம் ஆசுவாசமாகியது...
டேய் கங்கு நீ போயி வெளியில் ஃபயர்கோஸ் பைப்பை இழுத்து வா.
இரண்டு பேர் இழுத்து வர...
டேய் அவெங்களோட சேர்த்து அடிடா மொத்தமா சேர்ந்து கட்டருல போகட்டும்.
அவங்கெ... ட்ரெஸ் ?
அதான் போச்சே.. வெளியில காயப்போடுவோம் முதல்ல தண்ணியை அடி.
சுமார் ¼ மணி நேரம் தண்ணீர் அடித்து எல்லாமுமாக கட்டரில் ஓட...
டேய் உங்க ட்ரெஸ்ஸை அவுத்து அலசுங்கடா...
சடையாண்டியும், மந்தக்கட்டியும் உடலில் தண்ணீர் பட்டு குளித்ததால் கொஞ்சம் தெம்பாகி உடன் கழட்டி அலசி பிழிந்தார்கள், ஆனால் மொக்கைராசு இன்னும் கோமா நிலையிலேயே இருக்க...
அவனுக்கு என்னடா ஆச்சு ?
மயக்கமாயிட்டான்...

ரெண்டு பேரும் அவன் ட்ரெஸை கழட்டி அலசுங்கடா..
சடையும், மந்தக்கட்டியும், மொக்கைராசுவை புரட்டிப் போட்டு அவனது உடையை கழட்டி அலச...
டேய் பாண்டி இதை வெளியே வெயில் போடுற இடத்துல காயப்போடு, நீங்க அவனை என்னனு பாருங்கடா..
சோமனும், ராமனும் மொக்கையை தட்டி அழைத்துப் பார்க்க...
தலைவா.. ஆளு ஒரு மாதிரியாயிட்டான்..
உடன் கைப்பேசியில் கீழே அழைத்து விபரங்கள் சொல்ல, பிறகு டாக்டர் K 7 அவர்களுக்கு சொல்லப்பட்டு பிறகு பதில் வந்தது.

சிறிது நேரத்தில் ஒரு டாக்டரும், இரண்டு நர்ஸுகளும் மேல வந்து மொக்கையை செக் செய்தார் ஒரு கட்டிலை வரவைத்து கிடத்தி குளுகோஸ் ஏற்றி விட்டு டாக்டர் K 7 ஐ அழைத்து விபரம் சொன்னார் பிறகு தலைவனை வெளியே அழைத்து ரகசியமாக விபரங்கள் சொல்லப்பட மூவரும் சென்று விட்டார்கள்.

தல என்னச்சு ?
சொல்றேன்.. வெளியே வாங்கடா...
அனைவரும் வெளியே வந்து பீடியை புகைத்துக் கொண்டு பேசிக்கொண்டிருக்க.... மந்தக்கட்டியும், சடையும் ஒருவரையொருவர் பீதியுடன் பார்த்துக் கொண்டிருக்க... மொக்கைராசு விட்டத்தை பார்த்துக் கொண்டு இருந்தான் ஒரே நிலையில்...

சுமார் ஒரு மணிநேரம் கடந்து போக... இரண்டு நர்ஸுகளும் மேல வந்து மொக்கையை செக் செய்து குளுகோஸ் இணைப்புகளை கழட்டி விட்டு ஒரு ஊசி போட்டார்கள் சிறிது நேரம் நின்று விட்டு தலைவனிடம் தலையசைத்து விட்டு சென்றார்கள்.. சிறிது நேரம் கழித்து மொக்கையிடம் அசைவு தெரிய... சடையும், மந்தக்கட்டியும் பக்கத்தில் போய் மொக்கை, மொக்கை என்றார்கள் மெதுவாக கண் விழித்தான்.

டேய் கங்கு இவெங்க ட்ரெஸ் காய்ஞ்சுருக்கும் எடுத்து கொடுடா...
இந்தாங்கடா, இதை போடுங்க அவனுக்கும் மாட்டி விடுங்கடா...
எல்லோரும், ரெடியாகவும் தலைவன் சடையின் அருகில் வந்து கேட்டான்.
இனிமேல் டாக்டருட்ட வயித்துவலினு போவீங்களாடா ?
இல்லைங்க சத்தியமா.. இனிமேல் சாராயக்கடை பக்கம்கூட போகமாட்டோம்.
கேட்டீங்களாடா.... சாராயக்கடை பக்கம் போக மாட்டாய்ங்களாம்.
கைத்தடிகள் ஹா ஹா ஹ் ஹா ஹா என்று கோரஷாக சிரித்தார்கள்.

டேய் நீங்க சாராயக்கடை பக்கம் போங்க போகமே இருங்க எங்களுக்குப் பிரட்சினை இல்லை ஆனா டாக்டர் 7 மலையை பார்க்ககூடாது சரியா ?
சரிங்க சத்தியமா இனி போக மாட்டோம்.
அப்படி போனீங்க, மறுபடியும் தூக்கி வந்து நச்சுப்புடுவோம் இன்னொன்னு உங்களை இங்கே கூட்டி வந்தது அடிச்சது இதை வெளியே யாருக்கிட்டேயும் குறிப்பா ஒங்க பொண்டாட்டி கிட்டேகூட சொல்லக்கூடாது சொன்னீங்கனு தெரிஞ்சது... சமாதிதான்.
இல்லைங்க சொல்லவே மாட்டோம்.
சரி இவனைத் கைத்தாங்களா கூட்டிக்கிட்டு கிளம்புங்க....
ஒன்பது பேரும் கீழே வர வேன் தயாராக நின்றது.

மூவரும் வேனில் ஏறிக்கொள்ள தலைவன் கங்குவின் கையில் எதையோ திணித்து விட்டு டேய் பாண்டி நீயும் போயிட்டு வாடா என்றான்
வேன் புறப்பட்டு ½ மணி நேர பயணத்திற்க்குப் பிறகு ஆள் அரவமில்லாத சடையங்காடு சாலையில் புளிய மரத்தடி பஸ் நிறுத்தத்தில் நிற்க.. கங்கு மூவரையும் இறங்கச் சொன்னான் சடையை அழைத்து கையில் 50 ரூபாயை கொடுத்து இப்போ தேவகோட்டையிலருந்து வர்ற பஸ்ஸு இந்த வழியாத்தான் போகும் ஏறி ஊருக்குள்ளே போங்கடா வெளியே சொன்னீங்க... மவுனே சங்குதான் ஆட்காட்டி விரலை காற்றில் ஆட்டிக் காண்பிக்க வேன் திரும்பி சீறிப்பறந்தது.

மந்தக்கட்டியும், சடையாண்டியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு நின்றனர் மொக்கையை கைத்தாங்களாக பிடித்துக் கொண்டு தூரத்தில் திருமுருகன் டிரான்ஸ்போர்ட் தேவகோட்டையிலிருந்து வருவது தெரிந்தது.

தொடரும்...

34 கருத்துகள்:

 1. வணக்கம் ஜி !

  ஆமா மொக்கைக்கு இப்போ போதை தெளிந்திடிச்சா ஆமா அந்த இரண்டு நர்சும் எப்படி இருப்பாங்க ......எனக்கும் 7 kill பார்க்கணும் போல இருக்கு ஜி

  ம்ம் அசத்தல் ஜி தொடரட்டும் தொடர்கிறேன் !
  தம 2

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக கவிஞரே மொக்கையின் நிலைப்பாடு கடந்த Dr. K 7 –ல் சொல்லி இருக்கிறேன் வருகைக்கு நன்றி.

   நீக்கு
 2. அருமை நண்பரே
  தொடர்கிறேன்
  நன்றி
  தம +1

  பதிலளிநீக்கு
 3. அந்த பஸ் கட கடன்னு..ல போவும்..
  ஏதாவது டாக்ஸியில ஏத்தி விட்டுருக்கலாம்..ல!..

  பாவம்.. தன்னால கெரகம் புடுச்சி வாட்டுது..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி முதல்ல அவங்கே இந்த இடத்தை விட்டு கடந்து போகட்டும் அதுவே பெருசு அவங்களால வீட்ல கொண்டு போயி இறக்கி விடாமல் ஊருக்கு வெளியே கொண்டுபோய் விட காரணம் என்ன ? நாளை சட்டச்சிக்கல் வரக்கூடாதே....

   நீக்கு
 4. அருமை சகோ. தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோ நலம்தானே..... வருகைக்கு நன்றி

   நீக்கு
 5. உடன் வந்து கொண்டிருக்கிறோம் ஜி....தம +1

  பதிலளிநீக்கு
 6. விடாப்பிடியாக தொடர்கிறேன்ஜி

  பதிலளிநீக்கு
 7. தொடரைத் தொடர ஆரம்பத்திருக்கின்றேன் ஜீ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்லது நண்பரே பழையவைகளையும் நேரமிருந்தால் பாருங்கள்

   நீக்கு
 8. அன்புள்ள ஜி,

  திருமுருகன் அருகினிலே வள்ளிக்குறத்தி... போக்குவரத்துக் கலகம் என்றால் நன்றாக இருக்கும். தேவகோட்டையிலிருந்து வசந்(த்)தம் வந்ததைப் போலத் தெரிகிறது.

  த.ம.9

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக மணவையாரே இது எங்கள் ஊரில் பிரபலமான டிரான்ஸ்போர்ட் ஆகவே கதையில் கொண்டு வந்தேன் வருகைக்கு நன்றி

   நீக்கு
 9. தேவகோட்டைக்குப் போகலையா அவங்க? நல்லதாயிற்று...அப்ப நாங்க தேவக்கோட்டைக்குப் போறோம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க இவங்க எல்லோருமே சங்ககிரி ஆளுக தேவகோட்டைக்கு எதுக்கு போகணும்.
   நீங்க வேண்டுமானால் தேவகோட்டை வருக...

   நீக்கு
 10. தேவகோட்டைக்குப் போகாம சடையங்காட்டுல இறங்கி எங்கிட்டுப் போறானுங்க... லெப்டா... ரைட்டா.... ரைட்... ரைட்... திருமுருகன் வந்திருச்சு... ஆளுங்களை முதல்ல ஏத்திக்கட்டும்... அதுவரைக்கும் சடையங்காட்டு கடையில சோடா குடிச்சிக்கிட்டு காத்துக்கிட்டு இருக்கேன் அண்ணா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இவங்கே போறது தேவகோட்டையிலிருந்து வரும் பஸ்ஸில்தான் தேவகோட்டைக்கு அல்ல நண்பரே...

   நீக்கு
 11. ஒட்டுப்போட்டேன்.வந்து சேர்ந்தால் தந்தி அடிக்கவும்.

  தொடர் ரசித்தேன். தொடரட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஓட்டுப் போட்டதற்கு நன்றி தொடர்வதற்கும்...

   நீக்கு
 12. எலியால் சொடுக்குக. ஆரம்பமே அசத்தல். அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முனைவரின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 13. தேவக்கோட்டைக்கு அவர்கள் போனார்களா? மேற்கொண்டு என்னவாயிற்று என அறிய தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே அவர்கள் தேவகோட்டையிலிருந்து வரும் பேரூந்தில் ஏறி சங்ககிரிக்குத்தான் போகின்றார்கள்

   நீக்கு
 14. வணக்கம்
  ஜி

  தொடர் அசத்தல் ....தொடருங்கள்.காத்திருக்கேன்.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு