தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, ஜனவரி 22, 2016

அத்’’தாய்


இந்தப்பதிவை படிக்க வரும் சகோதரிகளிடம் மட்டும் எமது மன்னிப்பு கோரலோடு துவங்குகிறேன் அதன் காரணம் பதிவைப் படிக்கும்போது தங்களுக்குப் புரியும்.

என் இனிய தமிழகத்து சகோதரிகளே.... உங்களது கணவர் உங்களது மகனிடம் நீ அம்மாவை மறக்ககூடாது தாயை கடைசிவரை தெய்வம் மாதிரி நினைக்க வேண்டும் அப்பொழுதுதான் அவர்களின் ஆசீர்வாதம் உனக்கு எப்பொழுதும் கிடைத்து நீ நல்ல நிலையில் சந்தோஷமாக வாழ்வாய் அனைத்து மதங்களும்கூட இதைத்தான் போதிக்கின்றன என்று சிறுவயது முதலே தினம் சொல்லிக்கொண்டே வருகிறார் என்று வைத்துக் கொள்வோம் இதற்க்கு நீங்கள் ஆதரவு தெரிவிப்பீர்களா ? இல்லை எதிர்ப்பு தெரிவிப்பீர்களா ?

ஆதரவு என்றால் இது நல்லதொரு விடயம் தாங்கள் தங்களது மாமியாரை நல்ல விதமாக பார்த்துக் கொல்கின்றீர்கள் என்று அர்த்தம். மாறாக எதிர்ப்பு என்றால் விடயம் புரிந்து விட்டது தங்களது மாமியார் தற்போது மீனாம்பதி முதியோர் காப்பகத்தில் என்று அர்த்தம் மட்டுமல்ல தாங்கள் எதையும் ஒளிவு மறைவின்றி துட்டு ஒன்று புட்டு இரண்டு என்று உண்மை பேசும் தன்மையுடையவர் என்பதும் புரிகின்றது.

சரி ஆதரவு சொன்னவர்களுக்கு GOOD BYE அடுத்து எதிர்ப்பு தெரிவித்து உண்மையை பேசுபவர்களுடன் ஒரு கலந்துரையாடல்.

எதற்காக... பெண்கள் மாமியாரை வெறுக்கின்றீர்கள் நாளை நாமும் மாமியார் ஆவோம் என்பதை மறுக்கின்றீர்களா ? அல்லது மறக்கின்றீர்களா ? மருமகள் என்று ஏன் முறை வைத்தார்கள் தெரியுமா

தனது மகள் கண்டிப்பாக தன்னைப் பிரிந்து வேறொரு வீட்டுக்கு வாழப்போய் விடுவாள் அப்பொழுது உறவு அந்து போன அந்த மகளின் உறவை புதுப்பிக்கவே மறு உருவில் இந்த வீட்டுக்கு வந்தவளே மரு-மகள். மாமியாரும் சில நேரங்களில் மகளைப் பிரிந்த கவலையில் மருமகளை ஊசி போன்ற வார்த்தைகளால் பேசினாலும் அதை மறக்கடிக்க அந்த அத்து போன உறவை மீண்டும் இங்கு தைக்க வந்திருக்கிறேன் என்பதற்காகவே மருமகள் அத்தை என்கிறாள் என்றும், மகளை வாழ வைப்பதற்கு அனுப்பி வைத்த தாய் உனக்கு இனி நான் தாய் அல்ல வேறொரு தாய் தருகிறேன் அவர்தான் அத்தாய் என்று காண்பித்த அத்தாயை மருமகள் நாளடைவில் சுருக்கி அத்’’தாயை அத்தை என்று ஆக்கி விட்டார்கள் என்றும் நினைக்கிறேன் சரிதானே நண்பர்களே...

அப்படியானால் மாமியார்... ஒருவேளை அந்த வார்த்தை மியான்மர் நாட்டு மொழியிலிருந்து வந்து இங்கு ஊடுறுவியிருக்கலாம் என்பதும் எமது கருத்து.

எல்லாம் சரி இதில் மாமனார் வரவில்லையே... என்ற ஐயம் வருகின்றதா ? அந்த மாமனார்தான் நார் நாரா கிழிஞ்சு டாஸ்மாக்கில் கிடந்து பட்டு ஒருநாள் பொட்டுனு போயிடுவாரே... அதனால் அவர் அறிவியல் ரீதியில் சிந்தித்ததில் புவியியலின் ஈர்ப்பு சக்தியில் தமிழ் நாட்டு கணக்கில் வரமாட்டார் என்று வரலாறு சொல்வதாக ஆங்கிலப் பத்திரிக்கையில் படித்தேன்.

CHIVAS REGAL சிவசம்போ-
? ? ?

47 கருத்துகள்:

 1. வணக்கம்
  ீஜி

  அத்தையின் கருத்து தங்களின் பார்வையில்... நன்று ஜி... சிவசம்போ த.ம 2

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கவிஞர் ரூபனின் முதல் கருத்துக்கு நன்றி

   நீக்கு
 2. அத்தை வார்த்தைக்கு நல்ல விளக்கம் சொன்னீர்கள். மாமியார்-மருமகள் பிரச்னையை இப்படி ஒரு பதிவால் மாற்றிவிட முடியும் என்கிறீர்கள்?

  :))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதெப்படி மாற்ற முடியும் எத்தனை மாமாங்கமாக சண்டை போடுறோம்.... நீங்க இப்ப வந்துக்கிட்டு..... அய்யோ.... அய்யோ...

   நீக்கு
 3. அத்தாயின் வார்த்தைகள் ஊசி போல துளைப்பதால் ,அத்'தை' ஆகிவிட்டது ஜி :)

  பதிலளிநீக்கு
 4. நல்லதோர் பதிவு. விட்டுக்கொடுத்தலும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுதலும் எல்லா உறவுகளுக்கும் பொருந்தும்.....

  த.ம. +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக ஜி தங்களின் கருத்துரைக்கு நன்றி

   நீக்கு
 5. அன்புள்ள ஜி,

  அத்தை மடி மெத்தையடி
  ஆடி விளையாடம்மா
  ஆடும் வரை ஆடி விட்டு
  அல்லி விழி மூடம்மா....!

  அத்‘தாய்’க்கு மருமகள்... நல்ல விளக்கம்...!

  த.ம.6

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக மணவையாரே வழக்கமான பாடல் வரிகள் நன்று நன்றி

   நீக்கு
 6. துளசி ரொம்பவே பிசி...அதனால் இப்போது எனது கருத்து...

  எனக்கு நீங்கள் குட்பை சொல்லிவிடலாம். பதிவிற்கும் எதிர்ப்பு அல்ல. உலட நடப்பைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.

  இன்று மருமகளாக இருக்கும் பெண் ஒரு வேளை துன்புற நேரிட்டால் அதைப் படிப்பினையாகக் கொண்டு அவள் மாமியாராக நேரிடும் வாய்ப்பு அமைந்தால் நல்ல மாமியாராக இருக்க எண்ண வேண்டும்.

  இந்தக் கருத்தை நாம் இரு பக்கங்களிலிருந்தும் பார்க்க வேண்டும். மாமியாரும் பெண் தான் எனவே அவரும் புரிந்து கொள்ள வேண்டும். இவர்களை விட முக்கியமாக நான் நினைப்பது கணவன். அவன் தான் இருவருக்கும் இடையில் மிகவும் கவனமாக நடக்க வேண்டிய பொறுப்பு உடையவன் ஆகின்றான். அம்மாவையும் விட்டுக் கொடுக்கக் கூடாது. மனைவியையும் விட்டுக் கொடுக்கக் கூடாது. சர்க்கஸில் கயிற்றின் மீது நடப்பது போல. இரு பக்கமும் பாலன்ஸ்டாகச் செல்ல வேண்டும். அதாவது நான் சொல்லுவதுகூட்டுக் குடும்பம் பற்றி இல்லை என்றால் பாதி குறையும். அம்மா தவறு செய்தாலும் சரி மனைவி தவறு செய்தாலும் சரி அதைப் பக்குவமாக எடுத்துரைக்கத் தெரிய வேண்டும். இருவரும் அவனைத் தவறாக நினைக்காதபடி. அதாவது அம்மாக் கோந்து என்று மனைவியும், பார் கல்யாணம் ஆனதும் எனை மறந்தான் என்று அம்மாவும் நினைக்காதபடி..

  எந்த அம்மாக்களும் பொசசிவ்னெஸ் இல்லாமல் தன்னைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும், ஆண் பிள்ளை என்றாலும் சரி பெண் பிள்ளை பெற்றவர்கள் என்றாலும் சரி. பெண் பிள்ளைகளைப் பெற்ற அம்மாக்களும் பெண் குழந்தைகளை மாமியார் வீட்டில் எதிராகத் திருப்புபவர்களும் இருக்கின்றார்கள்தானே.

  ஒரு தாய் தன் பிள்ளைகளை வளர்க்கும் போது...அன்னையே உலகில் சிறந்தவள்/பெற்றோரே சிறந்தவர்கள் என்றெல்லாம் ஐடியலிஸ்டிக்காகப் போதித்து வளர்க்கக்கூடாது. பெற்றோர்கள் சிறந்தவர்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அவர்களை அன்பு செய்ய வேண்டும் என்று சொல்லி வளர்ப்பதிலும் தவறு இல்லை ஆனால் அதே சமயம் அவர்களும் தவறு செய்ய நேரிடலாம். அச்சயமயம் குழந்தைகள் அவர்களைத் திருத்தவும் அனுமதிக்க வேண்டும். நான் சொல்லுவதைத்தான் செய்ய வேண்டும் என்று சொல்லி வளர்த்தல் நல்லதல்ல. காலத்திற்கு ஏற்ப பெற்றோரும் மாற வேண்டிய கட்டாயம் உள்ளது. பெற்றோர் பிள்ளைகள் இடையில் நல்ல நட்புடன் கூடிய பாசம் (இங்கு நான் எல்லா உறவுகளிலும் இந்த நட்பு அவசியம் என்பதைச் சொல்லுவேன்) புரிதல் என்று இருந்துவிட்டால் அதாவது மனம் விட்டுத் தங்கள் பிரச்சனைகளைப் பேசுதல் ஈகோ இல்லாமல் ஏற்றுக் கொள்ளுதல், சில சமயங்களில் விட்டுப் பிடித்தல்/கொடுத்தல் என்பது வந்து விட்டால் எந்தப் பிரச்சனையும் எளிதாகத் தீர்ந்துவிடும்.

  எல்லா மாமனார்களும் டாஸ்மாக்கில் இல்லை என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.

  மருமகள் பேச்சு வழக்கில் நாம் சொல்லும் போது அர்த்தம் சரிதான். அப்படியானால் மரு என்பது "று" என்றல்லவா வந்திருக்க வேண்டும்??!!!!! ஏன் நாம் "மரு" என்று சொல்லுகின்றோம்? தமிழ்ச் சான்றோர்கள் இதற்குப் பதில் சொல்லலாம் என்பது எனது வேண்டு கோள். உங்கள் அர்த்தம் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதே. ஆனால் சொல்??? தெரிந்து கொள்ளும் விருப்பத்தில்தான் இந்த அவா.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதலில் குட்பைக்கு நன்றி இதை எல்லோரும் சொன்னால் சந்தோஷம்
   தங்களின் விரிவான அலசிய விடங்களுக்கும் நன்றி
   மாமனார்கள் வரும் காலங்களில் 90 சதவீதம் டாஸ்மாக்கில் கிடப்பார்கள் 80 புள்ளி விபர கணக்கு இது நடக்குமா ? நடக்காதா ? 80தை வரும் தேர்தலுக்குப் பிறகு முடிவு செய்வோம்
   இந்த (ரு - று) இதுவும் யோசிக்க வேண்டிய விடயமே....

   நீக்கு
  2. அருமையான கருத்து கீதாமா! இதே கருத்து தான் என்னதும் நான் கடைப்பிடிப்பதும் கூட, திருமணமாகி 19 வருடங்களானாலும் எனக்கு என் அத்தை தாய் தான், அவரில்லை என்பதில் எமக்கு கவலை,என் மகளை நான் என் அத்தையின் மறு பிரதி என தான் சொல்வேன், அவளும் அப்படியே தான் அவரைபோலிருப்பதால் அப்படி சொல்வதில் எனக்கு தயக்கமுமில்லை,

   மாமனார்கள் டாஸ்மார்க் செல்ல வீட்டு பிரச்சனை மட்டும் காரணம் அல்ல,, அவர்களுக்கு அது ஒரு வாக்கு, பெரும்பாலான குடும்பத்தில் நிஜமாக டாஸ்மாக் செல்ல வேண்டிய நிலையில் பெண்கள் தான் இருக்கின்றார்கள். ஆண்களுக்க்கு தான் குடிப்பதற்கு ஒரு சாக்கு வேண்டுமே! அதனால் வீட்டுப்பிரச்சனையை சாக்கிட்டு காசை தண்ணீரில் விடுவார்கள்.

   மரமானது வளரும் போது மண்ணில் வேரூன்றி இற்கபற்றினால் எத்தனை புயல் வெள்ளம் வந்தாலும் அதை ஒன்னும் செய்ய முடியாது,அதே போல் தான் குடும்பத்தில் வேரான ஆண்கள்பங்களிப்பும், திடமாய் உறுதியாய் இருந்தால் அதிலிருக்கும் கிளையாம் தாயும் தாரமும் தரமாய் இருப்பார்கள். ஆனால் நிஜம்?

   தங்கள் தப்பை உணராத ஆண்கள் இருக்கும் வரை இப்பிரச்சனை தொடரவே செய்யும்.

   நீக்கு
  3. நன்றி நிஷா! கீதாம்மா வேண்டாமே..கீதா போதுமே!

   கருத்து அருமை..உங்கள் பக்கமும் வாசித்தாதிகிவிட்டது..

   நீக்கு
 7. எனதுகருத்து நான் சிறு வயது முதலே என் வீடு கூட்டுக் குடும்பம் பெரிய குடும்பம் அதில் நான் கண்ணுற்றுக் கற்றதையும், பின்னர் என் வாழ்க்கை திசை மாறி என் சூழலுக்காக சைக்காலஜி/சைக்கியாட்ரி தெரிந்து கொள்ள வேண்டி, மனிதவள மேம்பாடு என்று பல புத்தகங்கள் வாசிக்க நேரிட்டதாலும், சில கருத்துகளை இங்கு முன் வைத்தேன். ஆனால் இதைப் பற்றிப் பேச வேண்டும் என்றால் நிறைய உள்ளன. மனப்பக்குவம் என்பது அவ்வளவு எளிதல்ல. என்னதான் நாம் பல பயிற்சிகள் மேற்கொண்டாலும், நமது மூளை என்பது எப்போது திசை மாறும் என்பது நமக்கே தெரியாது. நமது குணங்கள் கூட அதன் வேதியியலில் தான் அடங்கியுள்ளது என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.

  ஆனால் இனி வரும் காலத்தில் இந்தப் பிரச்சனைகள் குறைய வழி அதாவது பெரும்பாலும் எல்லோருமே தனிக் குடும்பங்கள் தான் வாழ்கின்றனர் என்பதால். மற்றும் பெண்களும் இனி தனியாக வாழ ஆரம்பித்துவிடுவர் என்று..இப்போதே புள்ளிவிவரம் சொல்லுவது பெண்கள் தங்கள் காலில் நிற்கத் தொடங்கிவிட்டதால் தனியாக வாழத்தொடங்கிவிட்டதாக. ம்ம்ம் என்னவோ போங்க ...மனிதம் மனித உறவுகள் அன்பு தழைத்தால் சரி நல்லது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மையே இனிமேல் கூட்டுக்குடும்பங்களை காண்பது அரிதான, வேதனையான விடயமே அதேநேரம் பெண்கள் தனியாக வாழ்வது அதிகரித்தால் எது எதிர்காலத்தில் வரும் சந்ததிகளுக்கும் நிறைய பிரச்சினைகளை கண்டிப்பாக தரும் விரிவான கருத்துக்கு நன்றி

   நீக்கு
 8. அருமை நண்பரே
  விட்டுக் கொடுத்தலும்
  புரிதலும்தானே வாழ்க்கை
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களின் கருத்துரைக்கு நன்றி

   நீக்கு
 9. நல்ல ஆய்வு தோழர்
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 10. பதில்கள்
  1. தோழரின் கருத்துரைக்கும், வாக்குக்கும் நன்றி

   நீக்கு
 11. மற்றொன்று சொல்ல விட்டுப்போய்விட்டது. அத்தை நல்ல விளக்கம்....

  பதிலளிநீக்கு
 12. பதிவு மிக அருமை சகோ. வாழ்க்கையில் ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொள்வதும் விட்டுக்கொடுத்தலும் இருந்தால் எல்லா உறவுகளுடனும் சந்தோஷமாக இருக்கலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சகோவின் கருத்துரைக்கு நன்றி

   நீக்கு
  2. சாரதா மேடம் உங்க பதிவுகள் கொஞ்ச நாளா காணோமே பொங்கல் விடுமுறையா?

   நீக்கு
 13. விட்டுக் கொடுத்தலே வாழ்க்கை....
  எங்க வீட்டு அம்மணிக்கும் குட்பைதான்....

  மருமகள் + அத்தை விளக்கம் நன்று....

  கீதா மேடம் சொன்னது போல் 'மரு'மகளுக்கான விளக்கம் என்ன என்பதை அறிய ஆவல்....

  நல்ல பகிர்வு அண்ணா.

  மாமனார்கள் டாஸ்மார்க்கில் என்பதை ஏற்க முடியவில்லை... பல மாமனார்கள் நல்ல அப்பாக்களாகத்தான் இருக்கிறார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே கீழே அன்பின் ஜி அழகான விளக்கம் கொடுத்துள்ளார்

   டாஸ்மாக்கில் நான் பெரும்பான்மையைத்தான் கணக்கில் எடுத்தேன் நண்பரே உதாரணம் பீப் பாடல் தவறில்லை என்றாகி விட்டது காரணம் என்ன ? ஆதரிப்போப்போர் அதிகம் அவ்வளவுதான்

   நீக்கு
  2. வருக நண்பரே கீழே அன்பின் ஜி அழகான விளக்கம் கொடுத்துள்ளார்

   டாஸ்மாக்கில் நான் பெரும்பான்மையைத்தான் கணக்கில் எடுத்தேன் நண்பரே உதாரணம் பீப் பாடல் தவறில்லை என்றாகி விட்டது காரணம் என்ன ? ஆதரிப்போப்போர் அதிகம் அவ்வளவுதான்

   நீக்கு
 14. மருமகள் அனைவரும் தாங்களும் நாளைய மாமியார் தான் என்ற நினைப்பு வந்தாலே தங்கள் மாமியார்களிடம் அவர்கள் பாசத்தோடு நடந்துகொள்வார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே மிகவும் அருமையான கருத்தை முன் வைத்தீர்கள் நன்றி

   நீக்கு
 15. அத்தைக்கும் மருமகளுக்கும் கொடுத்த விளக்கம் ஏற்றுக்கொள்ள வேண்டிய கருத்து.

  ஆனால் அடிப்படையில் தாயா, தாரமா என்பதே அதாவது குடும்ப உறவில் எவர் முக்கியம் என்பதே வார்த்தையிலும் வரக்கூடாது சார், எல்லோரும் சமம் தான் எனும் மன நிலை தான் என்னுள்.

  எனக்கு என் அத்தை தாயாய் தான் இருந்தார்கள்,
  என் கணவர் விடயத்தில் அவர் அம்மாவுக்கு தான் முதலிடம் என நானே விட்டு கொடுத்து விடுவேன்.அதே போல் நாத்தனார்கள் மைத்துனர்கள் சேர்ந்து இருந்தாலும் யாருடனும் கருத்து வேற்றுமை படுவதில்லை.எனக்கு என் தாய் தந்தை சகோதரிகள் போல் தான் அவர் தாய் தங்கை சகோதரர்களும், எங்களுக்கான கடமைகள் பொதுவானது எனினும்இந்த விடயத்தில் என் கருத்தினை அறிய நம்ம குமாரின் மனசு தளத்த்தில் எழுதிய தாயா தாரமா பதிவில் சேனைத்தமிழ் உலாவில் நான் இட்ட பின்னூட்டங்கள் பார்க்க வேண்டும்
  http://www.chenaitamilulaa.net/t50859-topic#476787
  http://www.chenaitamilulaa.net/t50859p11-topic#476799

  இந்த அத்தை மருமகள் அடிப்படை பிரச்சனைக்கு காரணமே மகனாயும், கணவனாயும் இருக்கும் ஆண் தான் என நான் சொல்வேன், தாயா தாரமா என வந்தால் தராசு எந்தப்பக்கமும் சாயாம்ல் தன்னிலையில் உறுதியாய் இருக்கும் ஆண் வாழ்வில் இப்பிரச்சனைக்கு இடமில்லை. ஆனால் அவ்வாறு உறுதியாய் முடிவெடுக்கும் ஆண்கள் குறைவே!

  நான் பதிலிட்டால் அது நீண்ட பின்னூட்டமாகி விடும், அதனால் என் பிளாக்கில் இதற்கான பதிலை தனிப்பதிவாக தருகின்றேன்.

  இதை பற்றி நாம் காலம் காலமாக பேசியாகி விட்டது, இன்னும் பேசலாம்,

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் எனது பதிவு தாயா ? தாரமா ? என்பதல்ல... மாமியாருக்கும், மருமகளுக்கும் நிலுவையில் உள்ள எண்ணங்களின் வேறுபாட்டை காண்பித்தேன் அவ்வளவுதான்

   மற்றபடி ஆணோ, பெண்ணோ இருபாலருக்குமே தாய் இந்த உலகத்தில் இறைவனைப் போல் துதிக்கப்பட வேண்டியவள் என்ற கருத்துடையவன் நான்

   தாயின் உணர்வுகளை அல்ல பெற்றோர்களின் உணர்வுகளை இப்பதிவில் நான் கொடுத்திருந்த (மீனாம்பதி) இணைப்பைச் சொடுக்கி ஒரு 8 போய்ப் பார்த்தால் தெரியும் நான் எந்தப் பக்கத்தில் இருக்கின்றேன் என்பதை.

   கணவனைக் கொல்லும் மனைவியர்கள் உண்டு ஆனால் பிள்ளையைக் கொல்லும் தாய் உண்டா ? இருவருமே பெண்பால்தான்

   தங்களது சேனைத்தமிழ் பின்னூட்டங்களை முன்பே படித்து இருக்கிறேன் தங்களின் விரிவான கருத்துரைக்கு நன்றி

   நீக்கு
  2. பிரச்சனை என வரும் போது ஆண் பெண் இருவருமே சம்பந்தபட்டிருந்தாலும் பெரும்பாலான நேரம் வீட்டுப்பெண்களை சாக்குக்கொல்லி தப்பித்துக்கொள்ளும் ஆண்களுகானதே என் பதிவு.

   உங்கள் பதிவின் நோக்க்ம் நான் புரிந்து தான் என் பதிவையும் இட்டேன், மருமகள் மாசு மருவில்லாத ம்று மகளாய் இருப்பது போல் மருமகனுக்கும் அந்தக்கடமை உண்டல்லவோ? மருமகளானவளை சொல்லும் சமூகம் மருமகனை கண்டு கொள்ளாமல் போவதேன்!

   எல்லாவற்றிலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் சரி நிக்ர் உரிமை உண்டு என்பதையே நான் எடுத்து காட்ட வேண்டும்.

   மற்றப்படி என் கருத்து பெண்ணியவாதத்துடன் சம்பந்தமானதில்லை.

   நீக்கு
  3. இக்கலியுகத்தில் பெற்ற பிள்ளையை கொல்லும் தாயும் உண்டு சார்.உயிரோடு கொல்வதும், உயிரில்லாத ஜடமாக்குவதுமான மனம் கல்லான தாய் மார்களும் உண்டு தான்.

   நீக்கு
 16. அத்தை விளக்கம் சிறப்பு ஜி! நல்லாவே யோசிக்கிறீங்க! சிறப்பான பதிவு! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 17. யதார்த்தம். நிதர்சனம். அதுதான் தங்களின் எழுத்து.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முனைவரின் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி

   நீக்கு
 18. அன்பின் ஜி..

  உடனடியாக வருதற்கு இயலவில்லை.. இரண்டு காரணங்கள்..

  முதலாவது - இழுவையாகிப் போன இணையம்..

  மற்றது - முன்பு தனியறையில் நான்.. ஏக சிம்மாசனம்.. இப்போது மற்றும் இருவர்களுடன்.. விடியற்காலையில் அமைதியாக நான் கணினியில் வேலை செய்யும்போது அவர்கள் இடையூறாக உணர்கின்றார்கள் போலிருக்கின்றது.. எனவே முள்ளின் மீது நடந்து கொண்டிருக்கின்றேன்..

  சரி.. விஷயத்திற்கு வருவோம்..

  மரு என்றால் நறுமணம் சுகந்தம் என்றும் பொருள் உண்டு..

  பூத்துக் குலுங்கும் மலர்களுக்கிடையே மருக்கொழுந்து என்றொரு வாசமுடைய இலையும் உண்டு..

  மனம் மலர்ந்த தன்மை முகத்தில் தெரியும்.. அதனால் சொல்லும் செயலும் ஒருவருக்கொருவர் உணர்ந்து கொள்ளும் நறுமணத்துடன் விளங்கும்.. விளங்க வேண்டும்..

  அதனால் தான் - மருமகள்..

  மற்றபடி, உடலில் தோன்றும் நோய்க் குறிகளான பருக்களும் மரு என்றுரைக்கப்படும்..

  ஒரே வார்த்தை - இருவேறு அர்த்தங்கள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி
   தங்களுக்கு மீண்டும் தனி காட்டு ராஜாவாக இருக்கும் வாய்ப்பு கிட்டட்டும் அழகான விளக்கம் அறிந்தேன் இன்று நம் முன்னோர்களின் வார்த்தைகளுக்குள் ஏதோவொரு அர்த்தங்கள் புதைந்துதான் இருக்கும் என்பது உண்மையே

   நீக்கு
 19. ஆழமாக யோசித்து அலசி இருக்கின்றீர்கள்... பதிவினூடே பின்னூட்டங்களும் அசத்தலாக....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே கேள்விகளுக்கு பதில் சொல்வது நமது கடமை இல்லையா...

   நீக்கு
 20. எந்த உறவானாலும் நட்பானாலும் புரிதலும் விட்டுக்கொடுத்தலும் தான் முக்கியம் சகோ. என்னைப் பொறுத்தவரை பொதுவாகக் கருத்திடமுடியாத பதிவு இது. ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு மாதிரி, இவர்களால் பிரச்சினை என்று பொதுவாகக் சொல்லிவிட முடியாது. அவரவர்க்குரிய மதிப்பையும் அன்பையும் கொடுத்து தான் எனும் ஈகோவையும் விட்டுவிட்டு வாழ்ந்தால் எல்லாம் சுகமே :-)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சகோவின் விரிவான கருத்துரைக்கு நன்றி

   நீக்கு