தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், ஜனவரி 14, 2016

கில்லர்ஜி in பயணங்கள் முடிவதில்லை


வணக்கம் நட்பூக்களே.. ஸ்விட்சர்லாந்தில் வசிக்கும் ஆல்ப்ஸ் தென்றல் என்ற தளத்தின் நிர்வாகி திருமதி. நிஷாந்தி பிரபாகரன் அவர்களுக்கு என்மேல் கோபமோ, என்னவோ தெரியவில்லை பயணத்தைக் குறித்த பத்து கேள்விகளுக்கு பதில் ‘’ஜொள்ள’’ வேண்டுமென்று சொல்லி விட்டார்கள் வேறு வழி.

 தெரியாத கேள்விகளுக்கு அறியாத பதில்களை வழக்கம்போல் தேடினேன்.
அது எது ? இது.

புகைப்படங்களை எலியால் சொடுக்கி பார்க்கவும்.

01. பயணங்களில் ரயில் பயணம் எப்பொழுதும் அலாதிதான் உங்கள் முதல் ரயில் பயணம் எப்போது என நினைவிருக்கின்றதா ?
1975 என்று நினைவு இராமநாதபுரத்திலிருந்து பாம்பன் சின்னம்மா வீட்டுக்கு இரயிலில் போனேன், போவேன் தொடர்ந்து பள்ளி விடுமுறைக்கு அங்கு எனது பொழுது போக்கு சிறிய தூக்குச்சட்டியில் 2 ½ Kg நண்டு மட்டுமே சின்னம்மா மசால் போட்டு பொரித்து தரும் நண்டுகளை வாங்கி கொண்டு இரயில் பாலத்துக்கு சென்று மையத்தில் தலைக்கு மேலே இரயில் போய்க்கொண்டு இருக்கும் அடியில் கூண்டு போல் இருக்கும் அதனுள் உட்கார்ந்து கொண்டு மீன்களுக்கு உணவு அளிப்பேன் ஆம் நண்டின் கறி மீன்களுக்கு பிடிக்காது என்பதை எனது ஞானத்தால் அறிந்த நான் கறியை மட்டும் தின்று விட்டு நண்டின் கூட்டை அன்புடன் மீன்களுக்கு எறிவேன் அதை மீன்கள் நுகர்ந்து பார்த்து விட்டு திங்காதது ஏன் ? என்ற சிந்தை மட்டும் இன்றுவரை எனது ஞானத்தால் அறிய முடியவில்லை அது ஒரு கனாக்காலம் சித்தப்பா இரயிவே டிபார்ட்மெண்டில் பாலத்தின் மையத்தில்தான் வேலை பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது

 


02. மறக்க முடியாத மகிழ்ச்சியான பயணம் எது ?
2012-ல் ஜெர்மனியிலிருந்து ஃப்ரான்ஸுக்கு பேருந்தில் போகும் பொழுது கிடைத்த அமெரிக்க நண்பன் வில்லியம்ஸ் அவனுடன் பேசிக்கொண்டே போனபோது குளிருக்காக பேருந்து நின்ற இடங்களில் எல்லாம் அவன் சிகரெட் ஊதிக்கொண்டே வந்தான் அவனது யோசனைப்படி வாழ்வில் முதல் முறையாக நானும் ஒரே இரவில் அவன் தந்த ஐந்து சிகரெட்டை புகைத்தது அதுவே எனக்கு கடைசி சிகரெட்டும்கூட மறக்க முடியாதது பிறகு ஜெர்மனியிலிருந்து ஸ்விட்சர்லாந்துக்கு ரயிலில் பயணம் போனேன் அதில் சந்தித்த இரண்டு ஸ்விஸ் மாணவர்கள் மொழி ஆர்வலர்கள் அவர்கள் என்னிடம் கேட்டு எழுதிக்கொண்ட தமிழ், ஹிந்தி வார்த்தைகள் அவர்கள் டெல்லி தாஜ்மஹாலைக் குறித்து கேட்ட பொழுது ஆர்வக் கோளாறு காரணமாக நானும் டெல்லிதான் எனது வீடு தாஜ்மஹால் எதிர்புறம்தான் என்று பொய் சொல்லி பிறகு அவர்கள் இராமேஸ்வரம் கோயிலைப்பற்றி கேட்ட பொழுது நானும் தமிழன்தான் எனது ஊர் தேவகோட்டையில் இருந்து இராமேஸ்வரத்துக்கு 105 K.M தான் என்று சொல்ல முடியாமல் வருந்தியது.


03. எப்படி பயணிக்க பிடிக்கும் ?
தனிமையில் தூரப்பயணமாகதல M.K.T. பாடல் கேட்டுக் கொண்டே நானே சீரூந்தை ஓட்டிச்செல்வது 220 K.M வரை ஜெர்மனியில் சீரூந்து ஓட்டிய அனுபவம் உள்ள எனக்கு அதன் கடைசி எல்லையான 380 K.M வரை ஓட்டுவது ஆனால் சாலையில் ஸைத்தான்கள் (RADAR) இருக்ககூடாது அடுத்து கால்களால் சீரூந்து ஓட்டுவதும் பிடிக்கும், அதை அப்படியே காணொளி எடுப்பது அதைவிட பிடிக்கும் மற்றொன்று மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு இரயிலில் செல்வது பிடிக்கும் இது இன்னும் நிறைவேறாத நீண்டநாள் ஆசை.
 

04. பயணத்தில் கேட்க விரும்பும் இசை ?
என்றுமே எனக்கு பிடித்த தல M.K. தியாகராஜ பாகவதர் பாடல், சீர்காழி S. கோவிந்தராஜன் மற்றும் புதிய பாடகர் T.M. சௌந்தரராஜன் பாடல்கள்தான்.

 காணொளி

05. விருப்பமான பயண நேரம் ?
அதிகாலையில் தெற்கு திசையிலிருந்து... மேற்கு திசை நோக்கி பறக்கும் விமானத்தில் ஜன்னல் ஓரமாக உட்கார்ந்து கிழக்கு திசையின் ஏழு நிறங்களை ரசிப்பது பிடிக்கும் இது பல தருணங்களில் எனக்கு கிடைத்தது.
 
இப்படிப் போகவும் ஆசையிருக்கூ.....

06. விருப்பமான பயணத்துணை.
துணை தேவையில்லை காரணம் எனது சிந்தை, பேச்சு பலருக்கும் பிடிக்காது அடிப்படை காரணம் நிகழ்கால மனிதர்களின் சிந்தனையோடு, செயல் பாட்டோடு ஒத்துப்போக என் மனம் இசைவதில்லை இதன் காரணமாக சில பதிவர்கள்கூட எனது பதிவுக்கு வருவதை நிறுத்தி விட்டார்கள் என்பது எனக்கே புரிகின்றது இருப்பினும் எனது தீர்மானமான எண்ணம் எனது சிந்தை உண்மையான நியாயமே என்னைப்புரிந்து கொண்ட ஒரு ஜீவன் தற்போது உலகில் இல்லை ஒருக்கால் இனி பிறக்கலாம் அதற்கு முன் நான் இறக்கலாம் ஆகவே நான் தனிமை விரும்பி எனக்கு தனிமை பிடிக்கும், அப்படி சிந்திப்பது பிடிக்கும் அதன் வழியேதான் எனது பதிவுகள் பிரசவமாகின்றன... ஆகி கொண்டும் இருக்கின்றன...


 

07. பயணத்தில் படிக்க விரும்பும் புத்தகம் ?
பொதுவாக சீரூந்து ஓட்டிச்செல்லும் பொழுது புத்தகம் படிப்பது நடவாத காரியம் ரயிலில் வாயிற்படியில் நின்று கொண்டு இயற்கை அழகை ரசித்து செல்வது பிடிக்கும் அதேநேரம் இரயில் ஓட்டுவது பிடிக்காது காரணம் இரயிலின் ஹாரன் சப்தம் எனக்கு பிடிக்காததே... அடுத்து விமானத்தில் போகும் பொழுது நான் ஓட்டுவதில்லை காரணம் சாலையே இல்லாமல் பக்கத்தில் போட்டியாக வேறு விமானம் வராமல் தனியாக ஓட்டுவதில் விருப்பமில்லாதவன் இதன் காரணமாக டிரைவர்களிடம் விமானத்தை கொடுத்து விடுவது வழக்கம் பெரும் பாலும் அந்த நேரங்களில் பதிவு எழுதுவேன் அப்படி எழுதிய பதிவுகளும் இருக்கின்றது அதேநேரம் கப்பலில் பயணித்த (கனவில்தான்) அனைத்து நேரங்களிலும் கண்டிப்பாக உறங்கி விடுவேன் அது என்னமோ தெரியவில்லை அது அப்படித்தான்.
 
இந்த வண்டி ஓட்டவும் ஆசையிருக்கு ஆனால்  ஊர் உலகம் Eyeயும், Earரும் வச்சு ஒரு மாதிரியாக பேசிடுமே...

08. விருப்பமான ரைட் அல்லது டிரைவ் ?
மலைகளில் வளைந்து குழைந்து சீரூந்து ஓட்டிச்செல்வது ரொம்ப ரொம்ப பிடிக்கும் அது இங்கு அலைன் என்ற ஊரில் ஜுபைல் அல் ஹபீப் என்ற இடத்தில் அடிக்கடி நிறைவேற்றிக் கொள்வேன் சீரூந்தில் ஃபாஸ்ட் ட்ராக்கில் வேகமாக போய்க்கொண்டு இருக்கும் பொழுது பின்னால் வந்து லைட் அடித்து காண்பித்து வழி கேட்பவருக்கு உடன் வழி கொடுத்து விட்டு விரட்டிப்போய் பின்னால் லைட் அடித்து வழி கேட்பது பிடிக்கும் இப்படி ஒருமுறை 2011-ல் நள்ளிரவில் OMAN நாட்டில் சீரூந்து ஓட்டிச் சென்று அந்த நாட்டு POLICE C.I.D யிடம் மாட்டிக் கொண்டு எனது பிளேடால் தொலைஞ்சு போடா என்று அபராதத்திலிருந்து விடுபட்டதும் உண்டு.

09. பயணத்தில் நீங்கள் முணுமுணுக்கும் பாடல் ?
சொன்னால் நம்புவீர்களோ இல்லையோ நான் பிறந்ததிலிருந்து இதோ இந்த பாடல்தான் நான் எப்பொழுதுமே கேட்பது நீங்களும் கேளுங்களேன்.

காணொளி

10.  கனவுப் பயணம் ஏதாவது ?
சிறிய வயதில் என் ஐயா ஞானி ஸ்ரீபூவு ஊரில் வீட்டருகே கிடக்கும் சாணம், குப்பைகளை ஏற்றிக்கொண்டு தொலை தூரத்திலிருக்கும் வயல் வெளிகளுக்கு மாட்டு வண்டிகளில் கொண்டு செய்வார்கள் அந்த மாட்டு வண்டிகளை பின்புறமாக பிடித்துக்கொண்டே நடந்து போய் குப்பைகளை வயல்களில் பரப்பி விட்டு காலியாக வரும் மாட்டு வண்டியில் ஏறி வீட்டுக்கு வருவது மறக்க முடியாத நினைவுகள் அவை மீண்டும் கிடைக்குமா ? என்ற கனவு எனக்கு இன்னும் இருக்கின்றது மேலும் கப்பலில் ஒரு நாள் உறங்காமல் பயணிக்கும் (நனவில்தான்) கனவும் இருக்கின்றது.

 

இப்புட்டுதாங்கோ... இதுக்கு மூன்று பதிவர்களை கோல்மூட்டி விடுவதும் மரபாம் இதுதான் கஷ்டம் காரணம் நான் தொடர் பதிவு ஆரம்பிக்கும் பொழுது வெகு சுலபமாக பத்து நபர்களை வலையில் பிடித்து வலைப்பூவில் இணைத்து விடுவேன் இப்ப என்ன செய்வது ? விரட்டிப் புடிச்சேன் இந்த மூன்று நபர்களை...

01. அன்பின் ஜி குவைத் மன்னர் திரு. துரை செல்வராஜூ அவர்கள்.

02. இனிய ஜி திரு. திண்டுக்கல் தனபாலன் அவர்கள்.

03. அன்பு நண்பர். ஃப்ரான்ஸ் புதுவை வேலு அவர்கள்.

பதிவர்களுக்கு பயணம் என்ற பெயரில் நல்ல சிந்தனையை தூண்டி விட்ட சகோ திருமதி. மைதிலி கஸ்தூரி ரெங்கன் அவர்களுக்கு இந்த இடத்தில் பாராட்டுகளையும் தெரிவிக்கிறேன் இவ்வகை தொடர் பதிவுகள் நமது நட்பை இன்னும் இறுக்கமாக்கும் என்பது உண்மை கீழ் காணும்...

‘’தொட்டார் மனதுக்குள் இடாதோர் பிணக்கு
கனி மனதுள் வருமோ இழுக்கு’’
என்ற குறளைப் போல SORRY என் குரலைப் போல நன்றான செயலே...

வலை நட்பூக்களுக்கு பொங்கல் நல்வாழ்த்துகள்
அன்புடன்

தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி

76 கருத்துகள்:

 1. பார்த்தாச்சு... கருத்து நாளை
  ஓட்டு மட்டும் போட்டாச்சு.

  பதிலளிநீக்கு
 2. சுவாரசியமான பதில்கள் சகோ. பயண அனுபவங்கள் விதம் விதமாக தூள் கிளப்புகின்றன. வழிவிட்டுவிட்டு மீண்டும் லைட் அடித்து வழி கேட்பது :))))) பயண காணொளியும் இறுதியில் பாம்பன் பாலம் பற்றிய காணொளியும் அருமை, பகிர்விற்கு நன்றி. போகாத கப்பலில் நன்றாக தூங்குபவர் அல்லவா? அதனால் போகும் கப்பலில் தூங்காமல் ரசிக்க வாழ்த்துகள்!:)

  த.ம.3

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ பதிவை ஆழமாக உணர்ந்து படித்தமைக்கு முதற்கண் நன்றி குரலைப்பற்றி சொல்வீர்கள் என்று எதிர் பார்த்தேன் சகோ.

   நீக்கு
 3. வணக்கம்
  ஜி

  சிறப்பான அசத்தல்..அவும் வித்தியாசமாக.
  இனிய தைப்பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் த.ம5

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கவிஞர் ரூபனின் கருத்துரைக்கு நன்றி பொங்கல் நல்வாழ்த்துகள்

   நீக்கு
 4. ஹாஹா! கில்ல்லர்ஜி சார் உங்களை என்னமோன்னு நினைத்தேன்! அசத்திட்டிங்க! அத்தனை பதிலும் முத்துக்கள் தான்.

  பாம்பன் பாலமும் நண்டுக்கறியும்,மீனுக்கு உணவும் படித்து சிரித்து விட்டேன்.ஆனாலும் வித்தியாசமான அனுபவம். பாலத்தின் மையத்தில் உட்கார்ந்து நண்டுக்கறி சாப்பிட்ட சுகம் நினைப்பே இனிமையாய் இருக்கிறதே!படமெல்லாம் போட்டு காட்டி விளக்கிய உணர்வு பூர்வமான முதல் பதிலுக்கு என் சல்யூட்.

  இரண்டாவது பதில் பயணத்தில் கிடைத்த அனுபவம், அடடா தாஜ்மகால் பார்க்க வர என நினைக்கும் என் பிரெண்டுங்களை உங்க வீட்டுக்கு பெட்டி படுக்கையோட அனுப்பி வைத்து விட்டேன் சார். நானும் கிளம்பி விட்டேன். உங்க வீட்டிலிருந்து எட்டிப்பார்த்தால் தாஜ்மகால் தெரியும் தானே.. நான் கேட்பதும் நீங்கள் சொன்னதும் நம்ம ஷாஜகான் மும்தாஜிக்கு கட்டிய வெள்ளை கல்லறையைத்தானே?

  மூன்றாவது பதிலிலிருக்கும் தமிழ் நடையை ரசித்தேன்.

  நான்காவது பதிலும் காணொளியும் பாடலும் பயணமுமாய் அட்ட்ட்ட்ட்ட்ட்டரா சக்கை போட வைக்கின்றது.

  தனிமை பிடிக்கும் என்பதன் பின்னிருக்கும் நிஜம் வலியைத்தருகின்றது. கிட்டத்தட்ட என் குணமும் அதுவே தான். நானும் ஒரு தனிமை விரும்பி தான்.

  ஏழாவது கேள்விக்காக வண்டியை எங்கேயோ பார்த்த நினைவு.

  ஒன்பதாவது பதிலில் காணொளி! உங்கள் பதில் ஏன் தமாதமானதெனும் உண்மைக்கு உரியதாய் .. உலகம் சுற்றும் வாலிபன் நீங்கள் என்பதை நம்பி விட்டேன் சார். பாம்பன் பால நிகழ்வுகள் பதில் சொல்ல எடுத்த ஈடுபாட்டினை காட்டுகின்றது.

  மொத்தத்தில் பாராட்ட வார்த்தை வரவில்லை. அத்தனை பதிலும் அர்த்தமானவை ஆழமானவை. நிரம்ப நன்றிகள் சார்.

  உங்களுக்கும் எமது இனிய பொங்கல் நல் வாழ்த்துகள். அப்படியே பொங்கல் பார்சல் ஒன்றை சுவிஸுக்கு அனுப்பி விடுங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் விரிவான அலசல் கண்டு மகிழ்ச்சி
   தாஜ்மஹால் காண வரும் பொழுது தேவகோட்டை வந்து என்னையும் கையைப் பிடித்து அழைத்துப் போக சொல்லுங்கள் டெல்லி எந்த திசையில் இருக்கின்றது என்றே இதுவரை எனக்கு தெரியாது.

   ஏழாவது வண்டியை எங்கோ பார்த்த நினைவாக இருக்கோ.. அது எங்க ஐயா ஞானி ஸ்ரீபூவு எனது 18 வது வயதில் நடை பழக அவரே செய்து கொடுத்தது அப்பொழுது கூகுள் நிறுவனத்தார் விளம்பரத்துக்காக புகைப்படம் எடுத்துப் போய் விட்டார்கள் அதைத்தான் சமீபத்திய தங்களது பதிவில் போட்டு இருக்கின்றீர்கள்

   இதில் நம்பிக்கை இல்லை என்றால் எனது 2014 ஆண்டு July பதிவு ‘’விஸ்வகர்மா’’ அதில் பாருங்கள் அதே புகைப்படம்தான் இது
   தங்களுக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்.

   நீக்கு
 5. கில்லர்ஜியின் பயணங்களில்
  குழலின்னிசை இசைக்கும்
  பொங்கல் கம்போசிங் முடிந்த பிறகு
  நன்றி நண்பா!
  த ம +
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பா விரைவில் இசையுங்கள் காத்திருக்கிறேன் ஆவலுடன்.

   நீக்கு
 6. வித்தியாசமான பதில்கள். நீங்களும் வெங்கட்டும் பயண மனனர்கள். சுவாரஸ்யம் உங்கள் பதில்களில் இருப்பது ஆச்சர்யமில்லை!

  எப்பவும் போலவே தம + வாக்கிட்டு விட்டேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களின் கருத்துரை கண்டு மகிழ்ச்சியுடன் நன்றி

   நீக்கு
 7. அடுத்த முறை வரும்போது ஊட்டி ரயிலில் போய்ட்டு வந்துடுவோம். என் உபயம்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா கண்டிப்பாக முனைவர் ஐயாவுடன் ஊட்டி போகிறோம் மிக்க நன்றி ஐயா.

   நீக்கு
 8. மீன்களை ஏமாற்றி விட்டீர்களே, இனிய உழவர் திருநாள் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரே என்னை ஏமாற்றுக்காரன் என்று சொல்லி மன வேதனையை உண்டாக்காதீர்கள் நான் மீனை திங்க வேண்டாம் என்று சொல்லவில்லையே அவர்களுக்காகத்தானே தூக்குச்சட்டியை தூக்கி கொண்டு பாலத்தில் நடந்து போனேன் தங்களுக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள் நண்பரே.

   நீக்கு
 9. அசத்தலான உண்மையான பதில்கள்... ஆறாவது பதில் சிறிது மன வருத்தத்தை தந்தது ஜி... அட...! முடிவில் குறள்...!

  விரைவில் பகிர்ந்து கொள்கிறேன் ஜி... நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி நான் எப்பொழுதும் எழுத்தில் பொய்யுரைப்பதில்லையே...
   அதை குறள் என்று சொல்லாதீர்கள் ஜி குரல் என்று வேண்டுமானால் சொல்லலாம் காரணம் ஐயனுக்கும் நமக்கும் வித்தியாசம் வேண்டாமா ? அதே பாணியில் நானாக கருத்தை திணித்தேன் அதனைக் குறித்து எழுதியமைக்கு நன்றி தங்களது பாடலைக் (பதிவை) கேட்க ஆவலுடன் நானும்.

   நீக்கு
 10. அன்புள்ள ஜி,

  பயணங்கள் பற்றிய அனுபவங்களை தந்தது அருமை.

  சீருந்தில் தங்கள் சீரிய பயணம் எப்படி எடுத்தீர்கள்...? யாரும் காருக்குள் இருப்பதாகத் தெரியவில்லையே...!

  காணொளி இராமேஸ்வரம் பாலம் பற்றிய பல செய்திகள்... மற்றும் பாம்பனில் மீன்களுக்கு நண்டு போட்டது...!

  அந்தி மழை பொழிந்ததும் நன்று...

  பயணம் பயணம் பயணம்
  பத்து மாத சித்திரமொன்று ஜனனம்
  அது எத்தனை நாளோ எங்கெங்கேயோ பயணம்..........?!

  நன்றி.
  த.ம.9

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக மணவையாரே காருக்குள் யாரும் இல்லையா ? நான் இருப்பது உங்களுக்கு தெரியவில்லையா ? எப்பொழுதுமே நானே காணொளி எடுப்பேன் நண்பர்கள் இருக்கும் பொழுது எடுக்க மாட்டேன் காரணம் அவர்கள் பயப்படுவார்கள் தனிமையில் இருக்கும் பொழுது எனக்கு சுதந்திரம் கிடைத்து விடும் நான் பல காணொளிகளை முன்பு தந்து இருக்கின்றேனே... வருகைக்கு நன்றி.

   நீக்கு
 11. அன்பின் ஜி..

  தங்களின் கைவண்ணம் அருமை..
  என்னையும் அழைத்ததற்கு மகிழ்ச்சி..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி தங்களின் பயணத்தை ரசிக்க ஆவலுடன் இருக்கின்றேன் வருகைக்கு நன்றி.

   நீக்கு
 12. அழகான பதிவு நண்பரே, அருமையாக வடித்துள்ளீர்கள். காரில் எடுக்கப்பட்ட காணொளி ஆச்சர்யமாக இருக்கிறது. ரிமோட் கேமரா என்றாலும் அதில் பேனிங் ஷாட் வருகிறது. டில்டப் ஷாட் வருகிறது, டிராலி ஷாட் வருகிறது. ஒரு சின்னக் காருக்குள் இதெல்லாம் எப்படி சாத்தியம்? மிக சிறிய கேமரா, மிக சிறிய கிரேன் வைத்து எடுத்தாலும் சில ஷாட்களில் கிரேன் தெரிந்துவிடும். சிறிய ஹெலிகாப்ட்டர் கொண்டு எடுக்கப்பட்டாலும் ஸ்டியரிங் பின்னால் எல்லாம் அது நுழைய முடியாது. அந்த தொழில்நுட்பத்தை சொல்லுங்கள் தலைவரே, இல்லையென்றால் என் தலை வெடித்துவிடும்.
  த ம 10

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வலது கையில் கமெரா இருக்கின்றது. இடது கையால் கார் ஸ்யரிங்க் பிடித்த்திருக்கின்றார்.இந்த பதிவுக்கு என் எடுக்கப்பட்ட பதிவாய் தெரிகின்றது. பின்னர் கைமாறி கையில் வைத்தே செய் செய்து கொண்டிருக்கின்றார்.

   எனக்கு இப்பதிவு இரு வேறு வீடியோவை இணைத்ததோ எனவும் தோன்றுகின்றது!

   நீக்கு
  2. இனிய நண்பர் S.P.S அவர்களுக்கு என்னென்னமோ கேட்கின்றீர்களே... எனது கையில் கேமரா கிடைத்தால் சுழன்று விளையாடும் சாதாரண கேமராதான் நண்பரே கடந்த எனது பதிவான (2015 March - Police your Friend) அதில் 18 நிமிடம் இதைப் போலவே சுழன்று ஓடக்கூடிய காணொளி பார்த்து இருப்பீர்களே.. கேமராக் கலைஞரான உங்களிடம் ஊருக்கு வரும் பொழுது கேமராவைப் பற்றி 2 நாள் கிளாஸ் எடுக்கலாம் என்று இருக்கின்றேன் வருகைக்கு நன்றி.

   நீக்கு
  3. வாங்க ஸ்விஸ்சர்லாண்ட் 2 காணொளி எல்லாம் இல்லை சுழன்று வருவது தெரியவில்லையா ?

   நீக்கு
  4. சுழல்வது தெரிகினது. முதலில் வலது பக்க கையில் அப்புறம் அருகில் வந்து பின்னர் இடதுபக்கமாய் போய் ... கடசியில் தீடிரென அந்த கட்டடங்களிருக்கும் தெருவில் போகும் போது தான் எனக்குள் அப்படி யோசனை வந்திச்சு. பட் அப்படி இல்லன்னால் ஒக்கே சார்.

   நீக்கு
  5. செட்செய்து என்பது செய் செய்து என தவறுதலாக தட்டாச்சாகி விட்டது. மன்னிக்கவும்.

   நீக்கு
  6. எனது பதிவில் வரும் கொணொளிகள் எல்லாமே நான் எடிட்டிங் செய்ததே மீள் வருகைக்கு நன்றி மேலும் காணொளி காண....
   (2015 March Post Police your Friend)

   நீக்கு
 13. சுவாரஸ்யம் + வித்தியாசம் = கில்லர்ஜி.
  சுவையாய் இருந்தது தங்களின் பதில்கள்.முழுமையாய் ரசித்து எழுதி இருக்கீங்க சகோ...தம+1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ நலம்தானே ? தேவகோட்டையானின் பதிவுகளை உள்ளூர்க்காரர்களே மிஸ் செய்யலாமா ? தெய்வ குற்றமாகி விடும் தங்களுக்கும் தங்களது குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

   நீக்கு
 14. நல்ல சுவையான அனுபவங்கள். இனி உலகின் எந்த மூலையில் இருந்தாலும் உங்கள் சொந்த ஊர் எது என்று கேட்டால் சொல்லுவீர்கள் என்று நினைக்கிறேன். உங்கள் மூலம் உங்கள் ஊர் பெயர் மற்றும் பெருமை பரவட்டும்.
  (நல்லது, கெட்டது என்று ஒரே அலைச்சல். அடிக்கடி உறவினர்கள் இருக்கும் கிராமங்களுக்கு பயணம். எனவே எனக்கு இன்னும் தொடர்பதிவு எழுதும் சூழல் உருவாகவில்லை.).

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே உண்மைதான் அது எனக்கு ஒரு மரணஅடிதான் இனிமேல் அப்படி பொய் சொல்ல மாட்டேன் தங்களின் பயண அனுபவங்களை படிக்க ஆவலுடன் நானும்.

   நீக்கு
 15. இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!!!

  புதிய பாடகர்T.M.சௌந்தரராஜன் பாடல்கள்தான்.

  #ராஜா ரஹ்மான் சண்டைக்கு வருவார்களென
  எதிர்பார்க்கிறேன்,,,

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே எனக்கு டி.எம்.சௌந்தரராஜனே புதிய பாடகர் என்றால் மற்றவர்கள் எனது கணக்கில் எங்கு நிற்பார்கள் இளையராஜா ஒரு நல்ல இசைக்கலைஞன் இதில் சங்கீத ஞானம் உள்ள யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது பொங்கல் நல்வாழ்த்துகள் நண்பரே..

   நீக்கு
 16. இன்னும் பல பயண அனுபவங்களைச் கேட்க ஆவலாக உள்ளேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக கவிஞரே நான் ஏற்கனவே (2015 March - சிலிர்க்க வைத்த ஸ்ரீலங்கா) - (2015 January - Gentleman in Germany) - (2014 September - Sweet day in Switzerland) - (2014 August - Fantastic France) என்று பல பயண அனுபவங்களை எழுதி உள்ளேன் தங்களுக்கு நேரமிருப்பின் படியுங்கள் தங்களுக்காக மேலும் எழுதுகிறேன் தங்களுக்கு பொங்கல் நல்வாழ்த்துகள்.

   நீக்கு
 17. வித்தியாசமான கருத்துக்களை சுமந்து பயாணிக்கும் சுகமான பயணம் அண்ணா....
  அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி.

   நீக்கு
 18. பொங்கல் வாழ்த்துக்கள்... ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாருக நண்பரே தங்களுக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்.

   நீக்கு
 19. கடலலை தாலாட்டும் அதே இடத்தில் உட்கார்ந்து சாப்பிட எனக்கும் ஆசை ,நடக்குமா ஜி :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி தங்களது ஆசை முயன்றால் முடியும் அதேநேரம் ஊருக்கு வந்தால் இன்றும் அங்கு போய் வரும் எனக்கு அதற்கெல்லாம் நேரம் கிடைப்பதில்லையே காரணம் என்ன ? எல்லாவற்றுக்குமே ஒரு நேரம் உண்டு என்றுதான் தோன்றுகிறது.
   மேலும் இப்பொழுது முன்புபோல் யாரும் பாலத்தில் நடக்க முடியாது என்று நினைக்கிறேன் காரணம் ஃபாம் வைத்து விடுவார்கள் என்ற அச்சமாக இருக்கலாம்.

   நீக்கு
 20. உங்கள் அனுபவம் அத்தனையும் சுவையாக உள்ளது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே சில பதிவுளில் தங்களைக் காண முடியவில்லையே.... பொங்கல் நல்வாழ்த்துகள் நண்பா.

   நீக்கு
 21. படங்களை பார்த்தாலே தெரியுதே கில்லர்ஜிக்கு பயணங்கள் முடிவதில்லை என்று.......

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பரே நமது கடைசிப்பயணம் வரை நமது பயணம் நிற்காது நண்பரே..

   நீக்கு
 22. பயணங்களில்...
  தங்கள் பயணங்களில்...
  எத்தனை எத்தனை
  அருமையான எண்ணங்கள்...
  மாற்றார் உள்ளம் நிறைவடைய
  எத்தனை எத்தனை
  தங்கள் சிறந்த பதிவுகள்
  தொடருங்கள்
  தொடர்ந்து வருவோம்
  இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாருங்கள் நண்பரே தங்களின் விரிவான கருத்துரை கண்டு மிக்க மகிழ்ச்சி தங்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

   நீக்கு
 23. இந்த கேள்வி பதில் பதிவின் மூலம் தங்களைப் பற்றிய மேலதிக தகவல்களை அறிய முடிந்தது. அருமையான பதில்களுக்கு பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு
 24. தங்களுக்கு எனது இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே நான் உண்மைகளை எழுதுவதில் தயங்குவதில்லை. தங்களுக்கு பொங்கல் நல்வாழ்த்துகள்.

   நீக்கு
 25. அருமையான பதில்கள்! உங்கள் பயணங்கள் அலுக்கவே செய்யாது என்று தோன்றுகிறது! தொடருங்கள்! நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களின் கருத்துக்கு நன்றி

   நீக்கு
 26. தமிழர் திருநாள் வாழ்த்துக்களை
  மகிழ்வோடு நவில்கின்றேன்
  கனிவோடு ஏற்றருள்வீர்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களுக்கும் உரித்தாகுக...

   நீக்கு
 27. வணக்கம் சகோதரரே,

  கேள்விகளும், பதில்களும், பயண அனுபவங்களும் மிகவும் ரசிக்கும்படியாக இருந்தது. வித்தியாசமான கோணத்தில் யோசித்து மிகவும் நன்றாக எழுதி உள்ளீர்கள்.பாராட்டுக்களுடன் ௬டிய வாழ்த்துக்கள்.

  தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும், என் இதயம் கனிந்த பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள். இவ்வாண்டின் பொங்கும் மங்கலம் அனைவருக்கும் எங்கும் எதிலும், எப்போதும் தங்குக..! என இறைவனிடம் மனமாற பணிவுடன் வேண்டுகிறேன்.

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது விரிவான கருத்துரைக்கு நன்றி
   தங்களுக்கும், குடும்பத்தினருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள் சகோ

   நீக்கு
 28. நீங்களோ உலகம் சுற்றும் வாலிபர் கேட்கணுமா அஹஹ்ஹ ....அசத்திட்டீங்க போங்க! பேஷ் பேஷ்!!! அந்தக் கார் வீடியோ போன்று முன்பு ஒரு பதிவில் பார்த்த நினைவு இல்லையா ஜி???!!

  எனக்கும் காமெரா கிடைத்தால் போதும்...ஆனால் எனது காமெரா பழுதாகிவிட்டது...,ம்ம்ம் விரிவா எழுத முடியலை...இன்னும் பல பதிவுகள் பார்க்கணும்...மட்டுமல்ல நாளை/இன்று பொங்கல்..தூங்கி எழுந்து பல வேலைகள்.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வருகைக்கு நன்றி இந்தக்காணொளி முதல் முறையாக இடுகிறேன் பெரும் பாலும் இப்படித்தான் இருக்கும் கெட்டப் மட்டுமே மாறியிருக்கும்

   நீக்கு
 29. 2016 தைப்பொங்கல் நாளில்
  கோடி நன்மைகள் தேடி வர
  என்றும் நல்லதையே செய்யும்
  தங்களுக்கும்
  தங்கள் குடும்பத்தினருக்கும்
  உங்கள் யாழ்பாவாணனின்
  இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தங்களுக்கும், குடும்பத்தினருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள் நண்பரே

   நீக்கு
 30. தங்களுக்கும், குடும்பத்தாருக்கும், இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 31. வருக நண்பரே தங்களுக்கும், குடும்பத்தினருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 32. சுவையான இரசனையான கேள்வி, பதில்கள்!

  தங்களுக்கும் தங்களின் இனிய குடும்பத்தார்க்கும் பொங்கல் நன்னாள் நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களுக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்.

   நீக்கு
 33. தொடர் பயணம் வித்தியாசமாக தங்கள் பாணியில். ரசித்தேன். இன்று காலை தங்களின் தொலைபேசி அழைப்பு மகிழ்வினைத் தந்தது. இனிய வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முனைவரின் வருகைக்கு நன்றி பொங்கல் வாழ்த்துகளுடன்.....

   நீக்கு
 34. பயணங்களில்தான் எத்தனை சுவாரஸ்யம்,எத்தனை அனுபவங்கள். சில பயணங்கள் மறக்கமுடியாமல் இருக்கும்.உங்க பயணம் பற்றிய பதில்கள் ரசிக்கவைத்தன. இங்கு வளைந்து போக நிறைய இடங்கள் இருக்கு. ஆனால் காரை துரத்தினால் போலீஸ் உங்களைத்துரத்தும்.!!
  இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் கருத்துரைக்கு நன்றி சகோ தங்களுக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்

   நீக்கு
 35. மீனுக்கு நண்டுக்கறி போட்டு பதிவை தொடங்கும்போதே பதிவு களைகட்ட தொடங்கிவிட்டது. உங்கள் குரள் அருமை. தூங்காத கப்பல் பயணம் அமைய வாழ்த்துக்கள்! எனது நோக்கத்தை புரிந்துகொண்டமைக்கும், பயணத்தில் இணைந்தமைக்கும் மிக்க நன்றி அண்ணா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களின் விரிவான கருத்துரைக்கு நன்றி
   குறளையும், குரலையும் குழைத்து குரள் என்றதை ரசித்தேன் மீண்டும் நன்றி.

   நீக்கு
 36. அருமை தோழர்
  அத்துணைப் பதில்களும் நன்றாக இருந்தது...
  உங்களை புரிந்து கொண்டவர்கள் எப்போதும் கூடவேதான் இருக்கிறோம் ..
  நீங்கள் தனியாக இல்லை
  தொலைவுகள் நம்மைப் பிரித்துவிடுமா என்ன..
  நான் ரசித்த உங்களின் பல பதிவுகளில் இது தற்போதைக்கு முதன்மையானது.
  நிகில் குறித்து சில செய்திகள்

  பதிலளிநீக்கு
 37. வருக தோழரே தங்களின் வரவும், கருத்துரையும் புத்துணர்ச்சியைத் தருகின்றது யதார்தத்தை எழுதினேன் தோழரே வெறொன்றுமில்லை வருகைக்கு நன்றி.

  30 August 2014 இந்த பதிவு படித்து இருக்கின்றேனே தோழர்

  பதிலளிநீக்கு
 38. அன்பின்சகோ தங்கள் பயணம் மிக்க நன்று
  ரசித்தேன்.பழைய பாடல் ரசிகர்.
  என்னையும் தொடர் பதிவிற்கு 3 பேர் அழைத்தமைக்கு நன்றி எழுதுகிறேன்
  மிக்க நன்றி.
  (வேதாவின் வலை)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது பயண அனுபவத்தை படிக்க நானும் காத்திருக்கிறேன் வருகைக்கு நன்றி

   நீக்கு