தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, மே 01, 2016

குஞ்சிதாவும், குத்தியானந்தாவும்


முன்குறிப்பு - இது கவிதை அல்ல ! பாடல்.
‘’வெள்ளை மனம் உள்ள மச்சான்
விழியோரம் ஈரம் என்ன‘’
என்ற சின்னவீடு (1985) பாடலின் மெட்டில் பாடவும் இளையராஜாவின் இசையில் மறைந்த மலேசியா வாசுதேவனும், சுனந்தாவும் பாடிய பாடல் இப்பாடலாசிரியர் கவிஞர் திரு. வாலி - கில்லர்ஜி

குஞ்சிதா
நித்திரையை களைத்தாய் நித்தமுமே
சித்திரையில் கொடுத்தாய் முத்தமுமே
எத்திசையும் வளைத்தாய் சொத்தையுமே
என்னையும் கெடுத்தாய் மொத்தமுமே

குத்தியானந்தா
வீழ்ந்தாய் எனது நயவஞ்சனையில்
வாழ்ந்தாய் என்னுடன் நெஞ்சணையில்
வாழ்ந்தோம் இருவரும் பஞ்சணையில்
வீழ்ந்தோம் வீணர்களின் வீண் பழியில்

குஞ்சிதா
அன்றே சொன்னேன் கேட்கவில்லை
தட்டிக்கழித்தாய் நீ என் சொல்லை
தாலி கட்டியிருந்தால் நீ நல்லபிள்ளை
வேலி இல்லாமல் எனக்கும் தொல்லை

குத்தியானந்தா
ஒன்றா இரண்டா நான் தாலிகட்ட
எத்தனை என நான் கணக்கு காட்ட
எவனும் வருவான் உனக்கு பணத்தை நீட்ட
எவர் வருவாரோ இன்று என்னை மீட்ட

குஞ்சிதா
மஞ்சத்தில் பேசிய பேச்சு எங்கே
மறந்து விட்டாயா இன்று இங்கே
நடந்தது என்ன அன்று அங்கே
சொல்ல வேண்டியது எனது பங்கே

குத்தியானந்தா
சொல்லி விடாதே சொக்கத் தங்கமே
சொன்னால் வரும் உனக்கும் பங்கமே
நமக்கு ஆளுண்டு உலகில் எங்குமே
நாம் இணைந்தால் வசந்தம் பொங்குமே

குஞ்சிதா
நம்புகின்றேன் உன்னை நம்பி ராஜாவே
தேம்புகின்றேன் தெனம் தேசிங்கு ராஜாவே
விரைவாக வந்து விடுவாய் வசந்த ராஜாவே
இன்றும் பறந்து வா என்றார் பாரதிராஜாவே

குத்தியானந்தா
போய் விடாதே அங்கு பொக்கிஷமே
போனால் குடிப்பேன் நான் விஷமே
ஸ்விஸ் அக்கவுண்ட்டும் உன்வசமே
என்னிடம் இருப்பதோ அங்குசமே.

சிவாதாமஸ்அலி-
ஸ்விஸ் பணம் திசைமாறிப் போய் விடாமல் மீண்டும் திரும்பி வந்து அனாதைக் குழந்தைகளை பராமரிக்கும் செலவுக்காவது பயன்பட்டு இந்தப் பணத்தை அருளிய பாமரப்பய மக்களுக்கு நல்ல புத்தியை கொடுக்க வேண்டுமென எல்லாம் வல்ல திருவண்ணாமலையாரை வேண்டுகிறேன்.

காணொளி

சகலையை உள்ளே வைத்த காலகட்டத்தில் எழுதினேன் வெளியிட தாமதமாகி விட்டது - கில்லர்ஜி

42 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களின் ரசிப்புக்கு நன்றி நண்பரே...

      நீக்கு
  2. பதில்கள்
    1. நண்பரின் வருகைக்கும், ரசிப்புக்கும் நன்றி

      நீக்கு
  3. //கஞ்சிக்கு உழைச்சா 'மே' தினம்
    ரஞ்சிக்கு உழைச்சா 'ஆ'தினம்//
    அருமை. அருமை.
    ரசித்தேன் நண்பரே!
    உங்களுக்கு எப்போதும் குத்தியனந்தாவின் அருளாசிகள் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தாங்கள் ரசித்த வரிகள் எனது கற்பனை அல்ல ! அதன் கீழே இருக்கும் குறள் Sorry குரல் எனது கற்பனையே...
      ஆம் நண்பரே அவருடைய ஆசி எனக்கு உண்டுதான் நான் தினம் இவர்களது புகைப்படத்தைத்தான் எனது கால்மாட்டில் வைத்து உறங்குகின்றேன்.

      நீக்கு

  4. அந்த பாடலை இயற்றியவர் கவிஞர் வாலி அவர்கள். அந்த பாடல் இப்படி ஆரம்பிக்கும்.

    “வெள்ளை மனம் உள்ள மச்சான்
    விழியோரம் ஈரம் என்ன
    பக்கத்திலே நானிருந்தும்
    துக்கத்திலே நீ இருந்தால்
    கரைசேரும் காலம் எப்போ
    வெள்ளை மனம் உள்ள மச்சான்
    விழியோரம் ஈரம் என்ன’


    என்ன அரசியல் பதிவுகள் எழுதுவதை விட்டுவிட்டு ‘ஆன்மீகத்திற்கு’ போய்விட்டீர்கள்? !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே வரிகளை மாற்றி விட்டேன் வாலி எழுதிய தகவல் தந்தமைக்கு நன்றி.
      அரசியல் பதிவுகள் தேர்தல்வரை உண்டு நண்பரே இது மே தின ஸ்பெஷல் சரி இது ஆன்மீகமா ? ஹாஹாஹா...

      நீக்கு
    2. அட! நடன சபாபதி ஐயா இந்த பாட்டை தெரிஞ்சு வச்சுருக்காரே!

      நீக்கு
    3. இந்த வகையான பல விடயங்களுக்கு எனக்கு ஐயம் தீர்ப்பவர் அவர்தான் நண்பரே.

      நீக்கு
  5. குத்தியானந்தா சுவாமிகளின் ஆசீர்வாதம்
    எப்போதும் உங்களுடன் இருப்பதாக...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி நண்பரே அவர் குலம் காக்கும் தெய்வமாயிற்றே...

      நீக்கு
  6. அங்குசமே போதும் ,அகிலத்தை ஆளலாம் :)

    பதிலளிநீக்கு
  7. கஷ்ட காலம்!...
    இருக்கிற பிரச்னை போதாது..ன்னு இதுங்க வேற!..

    இதுங்களப் பத்தித்தான் அன்னைக்கு நம்ம கனக சுந்தரமும் மச்சக்கன்னியும் மருதையில் பேசிக் கொண்டார்கள்..

    நாம் என்றைக்குமே உயர்ந்தவர்கள்...

    கீழான விஷயங்களைச் சிந்திப்பதில் பயனேதும் இல்லை!..
    நமது எண்ணமும் இரத்தமும் தான் மாசுபடுகின்றது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி இன்றைக்கும் இந்த கேவலப்பட்ட தம்பதியினருக்கு ஊரெங்கும் வரவேற்பு கிடைக்கின்றதே என்ன செய்வது ? கலிகாலத்தின் துவக்கமிது....

      நீக்கு
  8. கில்லர்ஜி குறளையும், பதிவையும் அதிகம் ரசித்தேன். இருந்தாலும் நீங்கள் பிறருடைய உள்கட்சி விவகாரத்தில் தலையிடுவது நன்றாக இல்லை என்று நினைக்கிறேன். அவர்களின் சாபம் உங்களை சும்மா விடாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக முனைவரே அதை குறள் என்பதைவிட குரல் என்பதே நன்று
      நான் பச்சை வாழை மட்டையை விறகாக்கி சமையல் செய்த நல்லதங்காளைப்பற்றி எழுதவில்லையே... ஹாஹாஹா ரஞ்சிதாவின் சாபமா பலிக்கப் போகின்றது ?

      நீக்கு
  9. ஹாஹாஹாஹாஹா, நல்ல குறும்பு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பாட்டு நல்லா இருக்கா ? இல்லையா ? அதை விட்டுப்புட்டு குறும்பு என்றால் ?

      நீக்கு
  10. பாடலை நித்தியானந்தாவுக்கு அனுப்பி வைக்கலாம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா பார்ட்டி தற்போது அமெரிக்காவில் இருப்பு

      நீக்கு
  11. அருமை மே தினத்தில் ஆதீனம் நித்தி படித்தால் உங்களுக்கு சாபம் இட்டு விடுவார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவங்க சாபம் இட்டாலும் பலிக்குமா நண்பரே.... ?

      நீக்கு
  12. தலைப்பு இன்னும் பக்குவமாக இருக்க வேண்டும் தோழர்.
    இயன்றால் பக்குவமாக மாற்றவும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தோழரே நேரடியாக பெயரைக் குறிப்பிட முடியாதே.... ஆகவே இப்படியாகி விட்டது....

      நீக்கு
  13. வாலியின் பாடலை இப்படி ஆன்மீக பக்கம் மாற்றிவிட்டீங்க ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  14. தங்களின் வருகைக்கு நன்றி நண்பா.

    பதிலளிநீக்கு
  15. ஒவ்வொரு பதிவின் மூலமும் ஆச்சரியமளிக்கிறீர்கள் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா தங்களின் கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

      நீக்கு
  16. பதில்கள்
    1. நண்பர் திரு. யோகன் பாரிஸ் அவர்களின் முதல் வருகையை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறேன் நன்றி.

      நீக்கு
  17. என்ன நண்பரே நமக்கு இது தேவையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நடைமுறை உண்மையை எழுதினேன் தவறெனில் மன்னிக்கவும் நண்பரே.

      நீக்கு
  18. தலைப்பே அசத்தலா இருக்கே....
    11

    பதிலளிநீக்கு
  19. தலைப்பு குமுதம் போன்று ஹஹஹஹ்

    கண்டிப்பாக நித்தியானந்தாவின் சாபம் உங்களுக்கு ஹிஹிஹி..

    ஸ்விஸ் அக்கவுண்ட் தான் யாருக்கும் இல்லையே ஜி நீங்கள் பிரதம்ரென்றால்...ஓ அதைத் தக்கவைத்துக் கொள்ளாமல் விட்டுவிட்டீர்களே ஹஹஹஹ்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லோரும் நித்தியானந்தாவை உசுப்பேற்றி எனக்கு சாபம் இட வைத்து விடுவீர்கள் போலயே....

      நீக்கு