தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, ஏப்ரல் 29, 2016

அரசியல் வியாதிகள்


முதல்வராக இருந்தவர்கள், இருக்கப் போகின்றவர்கள் இவர்கள் சில நேரங்களில் எதிர்க்கட்சித் தலைவர்களாக இருந்திருக்கின்றார்கள் என்பது அனைவரும் அறிந்த விடயமே... ஆனால் இவர்கள் அந்த நேரங்களில் சட்டசபைக்கு போய் இருக்கின்றார்களா ? போகவில்லையே ஏன் ? இவர்கள் முதல்வராகத்தான் போவார்களோ ? இப்படிப்பட்டவர்களுக்கு நாம் மீண்டும் வாக்களிக்காமல் ரிவிட் அடித்தால் என்ன ? நாம் செய்யமாட்டோம் இந்த நேரத்தில் எனக்கு நண்பர் திரு. ஜார்ஜ் புஷ் சொன்ன அமெரிக்க பழமொழி நினைவுக்கு வருகின்றது ‘’Peat the rivet again not coming Political man’’ உண்மைதானே இதனால்தான் இவர்கள் தைரியமாக எதிரிக்கட்சித் தலைவராக ஆனதும் சட்டசபை செல்வதில்லை.

ஐயா திரு. ஜியெம்பி அவர்கள் சொல்வதைப் போல இவர்கள் மக்களின் நாடித்துடிப்பை நன்கறிந்த மருத்துவர்களே.... (நான் மருத்துவர் திரு. ராமதாஸ் அவர்களை சொல்லவில்லை) கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் எவ்வளவு நெஞ்சழுத்தம் இவர்களுக்கு காரணம் என்ன ?

இப்பொழுது ஓட்டு வாங்குவதற்காக டாஸ்மாக்கை மூடப் போகின்றார்களாம் இதற்குத்தானே தோழர் திரு. கோவன் குரல் கொடுத்தார் இதற்காகத்தானே அவரை கைது செய்தார்கள் நள்ளிரவில் கைது செய்ய வேண்டிய அவசியம் அவர் தீவிரவாதியா ? அவரென்ன திரு. விஜய் மல்லையா போன்று வசதி படைத்தவரா ? விமானத்தில் பறந்து விடக்கூடியவரா ? மக்களே என்பதை மக்கழே என்று உச்சரிப்பவனைக்கூட தலைவனாக ஏற்றுக்கொண்டது தமிழனுக்கு இழுக்கல்லவா...

இந்த அரசியல் வியாதிகள் அனைவருக்குமே தாம் பேசுவது அனைத்தும் அக்மார்க் பொய் என்பது தெரியும் இருப்பினும் அவர்கள் பேசுகின்றார்கள் காரணமென்ன ? கொளுத்தும் வெயிலிலும் காத்து நிற்கின்றீர்களே.... இதுதான். அரசியல்வாதிகள் வரும் பொழுது ஒரேயொரு முறை யாருமே போகாமல் இருந்து பாருங்கள் குடியா முழுகிப் போய்விடும் அவர்கள் சிந்திக்க ஆரம்பித்து விடுவார்கள் போவதால்தான் நமது குடி மூழ்கி கொண்டு இருக்கின்றது டாஸ்மாக்கை இன்று தொடங்கினால் தேர்தலின் முதல் நாளுக்குள் மொத்தமாக மூடிவிட முடியாதா ? முடியும் ஆனால் மூடமாட்டார்கள் மற்றொரு கோஷ்டி நாங்கள் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக்கை மூடி விடுவோம் என்று கூவுகின்றது திறந்து விட்டதே இவர்கள்தானே தேர்தலுக்கு தேர்தல் ஒரு கட்சியில் கூட்டணி வைக்கின்றார்களே இவர்களை டெபாசிட் இழக்க வைக்கவேண்டும்.

இந்த தேர்தலில் தலைவர்களை அனைவரையுமே தோற்கடிக்க வைக்கவேண்டும் அப்பொழுதுதான் அடுத்த நமது சந்ததிகளுக்கு நல்ல வாழ்க்கை அமையலாம் வேட்பாளர்கள் அந்த தொகுதிக்குள் பிறந்து வளர்ந்தவராக இருக்க வேண்டும் அவர் சுயேட்சையாக இருந்தால் என்ன ? அவருக்கு வாக்களிக்க கூடாதா ? மேலூரில் பிறந்து வளர்ந்த கிராமராஜன் திருச்செந்தூரின் கடலோரத்தில் வெற்றி பெற்றார் அந்த தொகுதி மக்களுக்கு பலன் கிடைத்ததா ? இதன் காரணமென்ன ? அவர் சினிமா நடிகர் நன்றாக பால் கறப்பார் என்பதால்தானே.... இந்த அறியாமை என்று ஒழிகின்றதோ அன்றுதான் அக்கம் பக்கத்து மாநிலத்தான் தமிழனை மதிப்பான் அவன் தமிழனை என்ன நினைக்கின்றான் என்பது அயல் தேசத்தில் வாழும் தமிழர்களுக்கே தெரியும்.

கட்சியை மறந்து, ஜாதியை மறந்து மனிதனை நினைத்து வாக்களிப்போம் வாக்களிக்க விருப்பம் இல்லையா ? இதோ இருக்கின்றது நோட்டோ அதற்கு முத்திரை பதியுங்கள் கண்டிப்பாக நோட்டோவுக்கு பதியுங்கள் இல்லாவிடில் தேசத்துரோகிகள் நம்நாட்டில் நிறைய உண்டு அவர்கள் உங்களது வாக்குகளை பயன் படுத்தி விடலாம் நாடறிந்த நடிகர் திரு. சிவாஜி கணேசன் அவர்களின் ஓட்டையே போட்டவர்கள், இந்தியாவின் முதல் குடிமகன் என்ற நிலையிலிருந்த மறைந்த ஜனாதிபதி திரு. ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் சகோதரரின் ஓட்டையே போட்டவர்கள் நம்மவர்கள் ஆகவே நோட்டோவை மறக்காதீர்.


வாக்காளப் பெருங்குடி மக்களே எதை வேண்டுமானாலும் மறக்கலாம் ஆனால் குறிப்பாக சென்னை மக்கள் சமீபத்தில் வந்த வெள்ளத்தை மறக்ககூடாது இதில் அனைத்து கட்சிக்காரர்களும் செய்த ஊழை வேலைகளை மறக்கவே கூடாது அதிலும் சவப்பெட்டியில் ஸ்டிக்கர் ஒட்டியதை கண்டிப்பாக மறக்க கூடாது மக்களே அதிகமாக சிந்திக்க வேண்டாம் தேர்தல் நேரத்தில் மட்டும் அரசியல்வாதிகள் மக்களைத்தேடி வருகின்றார்களே மற்ற நேரங்களில் வந்து மக்களின் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்வதில்லையே ஏன் ? கேட்டால் மக்களுக்கு சேவை செய்வதற்காக சட்டமன்றம் சென்றோம் என்பார்கள் தேர்தல் அறிவித்த நாள்முதல் தமிழக சட்டமன்றம் திண்டுக்கல் பூட்டு போட்டு இருக்கின்றதாமே... இப்பொழுது மக்களுக்கு சேவை செய்வது யார் ? 

இதை மட்டும் யோசியுங்கள் மாநிலங்களிலேயே மொழியின் பெயரைக் கொண்டது நமது தமிழ்நாடு மற்ற மாநிலத்துக்கு இல்லாத பெருமை சமீபத்தில்தான் தெலுகுதேசம் என்று உருவானது ஆகவே... இனியாவது தமிழ்நாட்டை தமிழன் ஆள்வதற்கு வழியென்ன ? கொஞ்சம் சிந்திப்போம் இந்த சிந்தனை நமக்காக அல்ல ! மாற்றம் என்பது உடன் நிகழ்ந்து விடும் செயலும் அல்ல ! அதற்கு காலஅவகாசம் வேண்டும் எப்பொழுதுமே மரத்தை நட்டவன் கனியை சுவைப்பதில்லை இன்று நமது சிந்தனையை தொடங்கினால் நாளைய நமது சந்ததிகள் வாழலாம் நாம் சொத்து சேர்த்து வைக்கத் துடிப்பது நமது சந்ததிகளுக்காகத்தானே முதலில் அவர்களை மானமுள்ள தமிழனாக வாழ வைப்போம் பிறகு மற்றதை அவர்கள் தேடிக் கொள்வார்கள் - கில்லர்ஜி

காணொளி

49 கருத்துகள்:

 1. எனது வாக்கும் விற்பனைக்கு அல்ல....

  பதிலளிநீக்கு
 2. வாக்காள மக்கள் மறக்கத்தானே ஓட்டுக்கு பணமும் பிரியாணியும் மதுவும் இலவசமாக கொடுக்கிறார்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே இந்தக் கூட்டம்தான் அதிகமாகி விட்டது அதுதான் எல்லோருக்கும் பிரச்சினை.

   நீக்கு
 3. இருநூறு ரூபாய்க்கு உயிரை விடும் நாங்கள் 2000 ரூபாய்க்கு ஓட்டை வித்துட்டு போய்க்கிட்டே இருப்போம்...

  எங்க சிந்தனையை எல்லாம் மொத்தமாக அடகு வச்சிட்டோம்...

  யார் என்ன சொன்னாலும் கோடிகள் செலவழித்து கேடிகள்தான் செயிப்பார்கள் அண்ணா...

  இது தமிழகத்தின் சாபக்கேடு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே இந்த சாபக்கேடு என்றுதான் மாறுமோ ?

   நீக்கு
 4. தனிப்பட்டவர்களுக்கு வாக்களிப்பது எந்த பலனும் தராது பிடிக்கிறதோ இல்லையோ கட்சிகள்தான் ஆட்சி அமைக்கும் வேண்டுவதோ ஒதுக்குவதோ அவர்களைத்தான் இருக்க வேண்டும் கட்சிக் கூட்டத்துக்கு வருகிறவர்கள் பெரும்பாலும் பணம்கொடுத்தே வரவழைக்கப் படுகின்றனர் ஒரு வேளை நோட்டாவுக்கு வாக்களித்து அதுவே முதல் எண்ணில் வந்தால் மற்றவர்களில் முதலாமவருக்கு வாய்ப்பு இல்லையா . என் சந்தேகம் இது . யாராவது தெளிவித்தால் நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா, நோட்டோவுக்கு வாக்கு கூடினால் கவர்னர் ஆட்சிதானே வரும் கவர்னர் ஆட்சி என்பது அரசு அதிகாரிகளின் ஆட்சிதானே... அதையும்தான் பார்ப்போமே... போதுமே... கட்சிகளின் ஆட்சி.

   நீக்கு
  2. நோட்டாவுக்கு வாக்கு கூடினால் அது அந்தத் தொகுதியைத் தானே பாதிக்கும் கவர்னர் ஆட்சி வரவேண்டுமென்றால் எல்லாத் தொகுதிகளிலும்நோட்டாவுக்குப் பெரும்பான்மை விழவேண்டும் அல்லவா அது நடக்கக் கூடியதா கனவு காண்கிறோமோ

   நீக்கு
  3. ஐயா தாங்கள் சொல்வது சரிதான் கேரளாவில் மக்கள் அனைவரும் பேசி வைத்தது போல் வாக்களிப்பார்கள் யாருக்கும் அதிகமான மெஜாரிட்டி கொடுக்க மாட்டார்கள் எதிர்கட்சிகளுக்கு சரியான கடிவாளத்தை கையில் கொடுப்பார்கள் அதைப்போல் நாமும் செய்யலாமே....

   நீக்கு
  4. நோட்டா கூடினாலும் எந்தப் பயனும் இல்லை. நோட்டா இப்போதைக்கு வலுவற்றது. அதனால்தான் நான் நோட்டா போட வேண்டும் என்றிருந்த எனது எண்ணத்தை இறுதியில் மாற்றிக் கொண்டேன்...நாளை எனது பதிவில் இது பற்றி வரும்... நோட்டா பற்றிய எனது எண்ணங்கள்.

   மூங்கில் காற்று முரளி இதைப் பற்றித் தெளிவாக எழுதியிருக்கிறார். கூகுளிலும் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்..

   கீதா

   நீக்கு
 5. நல்ல பதிவு. ஆனால் வேட்பாளரை பிடிக்கவில்லை என்று NOTA வுக்கு வாக்களிப்பதன் மூலம் நாம் விரும்பும் மாற்றத்தை கொண்டுவர இயலாது. காணொளியை இரசித்தேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மாற்றம் வராது உண்மைதான் ஆனால் கட்சித் தலைவர்களை ஓரம் கட்ட முடியுமே... நண்பரே.

   நீக்கு
 6. நம்ம ஊர்லே நோட்டாவுக்கு விழும் ஓட்டை விட நோட்டுக்கு விழும் ஓட்டுக்கள் தானே அதிகம் ஜெயிக்குது ,அதுக்கு ஒரு தீர்வு கண்டாகணும் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி இந்த தீர்வை மக்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.

   நீக்கு
 7. ரொம்பக் கோபமா இருக்கீங்க போல! தமிழ்நாட்டு அரசியல் பத்தித் தெரிஞ்சது தானே! மறுபடி மறுபடி பழைய குட்டையில் ஊறிய மட்டை! :(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ரவா தோசையோடு வந்திருக்கலாம் கோபம் தணிந்திருக்கும்.

   நீக்கு
 8. இப்பவும் மக்கள் அரசியல் தலைவர்கள் பேசுவதைக் கேட்கவா கூட்டங்களுக்குச் செல்கிறார்கள்? ஒழுங்காய் வேலை இருப்பவர்கள் யாரும் இங்கு செல்ல மாட்டார்கள். பிரியாணி, பணம் செய்யும் மாயம். என்ன தேர்தலோ? என்ன அரசியலோ!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே இந்த அறியாமை நீங்கினால்தான் தமிழ் நாடு முன்னேற்றம் பெறும்.

   நீக்கு
 9. நன்றாக அலசி உள்ளீர்கள்

  தங்கள் பதிவுகளை இணைத்து மின்நூல் ஆக்க உதவுங்கள்
  http://tebooks.friendhood.net/t1-topic

  பதிலளிநீக்கு
 10. அருமையான அலசல் சகோ, நோட்டாவால் ஆட்சி மாற்றம் எதூம் இல்லை சகோ,, அது 100 விழுக்காடு ஓட்டு மட்டும் தான். தங்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படின்னா.. நோட்டு வாங்கிட்டு நோட்டோவுக்கு ஓட்டு போடலாமா ?

   நீக்கு
 11. அன்புள்ள ஜி,

  ‘நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
  வாய்நாடி வாய்ப்பச் செயல்.’

  காணொளி கண்டோம். மதுவிலக்கு விரைவில் வரவேண்டும். மதுவும் புகையிலையும் வேரோடும் மண்ணோடும் இல்லாமல் செய்ய வேண்டும்.

  நன்றி.
  த.ம. 8

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக மணவையாரே... இதுதானே எல்லோருடைய ஆவலும் வருகைக்கு நன்றி

   நீக்கு
 12. மிக நல்ல அலசல். சட்ட சபைக்கே போகாத தலைவர்கள் கண்டிப்பாக தோற்கடிக்கப்பட வேண்டியவர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே கண்டிப்பாக இதை மக்கள் செய்ய வேண்டும் வருகைக்கு நன்றி

   நீக்கு
 13. எதற்கு நோட்டோ அளிக்க வேண்டும். ஓட்டு கேட்க வரும்போது, ஓட்டிவிட்டால் சரியாகி விடும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பர் திரு. அசோகன் குப்புசாமி அவர்களின் முதல் வருகைக்கு சிவப்பு கம்பளம் விரிப்பு.

   நீக்கு
 14. வணக்கம் ஜி !

  அசத்தலான பதிவுகளை அள்ளி வழங்குகின்றீர்கள் மக்கள் அறிவார்களா ???? உங்களைப்போல் உணர்வுள்ள தமிழனாய் ஒவ்வொருவரும் இருந்தால் இருந்திருந்தால் தமிழ் நாடு தங்க நாடாகி இருக்கும் ! கட்டுமரம் சொன்னாலோ இல்லை அம்மா சொன்னாலோ தீக்குளிக்க இப்போதும் அறிவாளிகள் இருக்கும் தமிழ்நாட்டில் மாற்றம் என்பதே மாறாததுதான் ஜி !

  விற்பனைக் கல்ல வாக்கு
  விதியினை மாற்றும் செக்கு
  அற்பனாய் வாழ்தல் போதும்
  அறிவினைச் செதுக்கு வோமே !

  பகிர்வுக்கு நன்றி ஜி தொடர வாழ்த்துகள்
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக பாவலரே..
   அருமையான பாவரிகள் தந்தமைக்கு நன்றி

   நீக்கு
 15. அரசியல் வியாதிகளை முன்வைத்துள்ள விதம் நன்று. அது சரி, Peat the rivet again not coming political man என்றால் என்ன ஐயா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முனைவருக்கு, முதலில் இது சரியான ஆங்கிலம் இல்லை என்பதை சொல்லிக்கொள்கின்றேன் கடந்த பதிவில் பலநாட்டு மொழிகள் என்று பழமொழிகளை உல்டா செய்து சொல்லி இருந்தேன் அதற்கு கருத்துரை தந்த திரு. மதுரைத்தமிழன் அவர்கள் அடுத்த பதிவில் எங்கள் நாட்டு பழமொழி சொல்லாவிடில் கோர்ட்டில் கேஸ் போடுவேன் என்று சொன்னார் அவருக்காக உடனே அவசர பதிவு.
   அரசியல் தலைவர்களை இந்த தேர்தலில் ரிவிட் அடித்து அனுப்பினால் மீண்டும் வரமாட்டார்கள் என்பதற்காக அப்படி சொன்னேன் வேறொன்றுமில்லை கேள்வி கேட்டமைக்கு நன்றி.

   நீக்கு
 16. மிகச் சரியான நேரத்தில்
  மிகச் சரியான பதிவு
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கவிஞரின் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி.

   நீக்கு
 17. அரசியல்(தேர்தல்) களம் இந்த நிலைமைக்கு ஆளாகி விட்டதே!?..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடுத்த தேர்தலில் இன்னும் மோசமாகும் ஜி நமீதாகூட கட்சி ஆரம்பித்து முதல்வராக போட்டியிடலாம்.

   நீக்கு
 18. நறுக்..சுருக்...பதிவு..

  அத்தனை கேள்விகளும் ...மண்டையில் அடித்து சொல்ல வேண்டியவையே..ஹாட்ஸ் அப் ஜி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கவிஞரின் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி

   நீக்கு
 19. மறதி நல்லது ஜி ( சில சமயம் மட்டும் )

  பதிலளிநீக்கு
 20. ஓட்டுக்கு ஏலமே நடக்கும் போல...தெரிந்தது தானே....+1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விலைவாசி ஏறுவது போல இதுவும் ஆகி விட்டதே....

   நீக்கு
 21. அட போங்க ஜி இதுதான் நம்ம நாட்டு நிலைமை அரசியல்....மீண்டும் அதேதான் இப்போது..மாற்றம்??? ஏமாற்றம்தான்....நம்ம மக்கள் முதலில் எதிர்ப்பார்கள்...அப்புறம் அதுவே பழகிப் போய்விடும் என்பதால் போராட்டம் எதுவும் இருக்காது....எதிர்க்கவும் மாட்டார்கள். ஆனால் கேரளம் அப்படி அல்ல. அங்கு மக்கள் எப்போதுமே விழிப்புடன் தான் இருப்பார்கள். ஆளும் கட்சிக்கு எப்போதுமே கடிவாளம் இருக்கும். மக்கள் அப்படித்தான் வாக்கும் அளிப்பார்கள். இங்கு போல் அங்கும் ஒத்தையா ரெட்டையா என்றாலும் இரு கட்சிகளே மாறி மாறி வந்தாலும் கூட மக்களின் போராட்டம் அங்கு வலு. எதிர்க்கட்சியும் அப்படியே...இங்கிருப்பது போல் அவ்வளவு நாறுவதில்லை.

  அதனால்தான் அவர்கள் நம்மை அப்படிக் கேவலமாகப் பார்க்கின்றார்கள். உங்களுக்கும், குமாருக்கும், துரைசெல்வராஜு ஐயாவிற்கும் அந்த அனுபவம் நிறையவே இருக்கும்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் கேரளத்தைப்பற்றி நான் மிகவும் அறிந்தவன் அவர்கள் அறிவு நுற்பமானவர்கள் நம்மைப்போல் இல்லை

   நீக்கு