தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், ஜூலை 24, 2017

வரலாறு முக்கியம்


     டந்த வாரத்தில் ஒருநாள் காலை பத்து மணி காளையார் கோவில் பேருந்து நிலையம் தேவகோட்டையிலிருந்து பரமக்குடி போவதற்காக சிவகங்கை பேருந்தில் ஏறியவன் வழியில் காளையார் கோவிலில் இறங்கி பரமக்குடி பேருந்துக்காக நின்று கொண்டு இருந்தவனின் விழிகளில் முதலில் தென்பட்டது விமானம் ஆம் காளையார் கோவிலின் கோபுரக் கலசத்தின் விமானம் சட்டென உடன் நினைவில் வந்தவர் சரித்திர பதிவர் இனிய நண்பர் திரு. கரந்தையார் அவர்கள் அவர் எழுதியிருந்த மன்னர் முத்து வடுகநாதர் வேலு நாச்சியார் மற்றும் குயிலியைப்பற்றிய பதிவின் நினைவோட்டங்கள் இதோ இந்த இடத்தில்தானே வெள்ளையர்கள் அவரை சுட்டு வீழ்த்தியதாக குறிப்பிட்டு இருந்தார் இதோ இந்த இடத்திலிருந்து சுமார் முப்பது அடி தூரமிருக்குமா ? இதே இடத்தில் நாம் கடந்த காலங்களில் ஐநூறு முறையாவது நின்று இருந்திருப்போமா ? நமக்கேன் உள்ளே சென்று வரவேண்டுமென்று தோன்றவில்லை இதோ நண்பரால் தோன்றி விட்டதே... பரமக்குடிதானே போகிறோம் ஒரு பேருந்தை விட்டால் மறு பேருந்தில் போவோமே உடன் கோவிலை நோக்கி நடந்தேன்.
வாயிலில் நுழைந்தவுடன் இந்நாட்டு மன்னர்கள் ஆம் ஐயா தர்மம் பண்ணுங்க சாமி... என்ற குரலோரையை கடந்து வாழ்வில் முதல் முறையாக உள்ளே காலை வைத்தேன் கையில் சிறிய சூட்கேஷ் வைத்திருந்தேன் வாயிலில் மேஜையைப் போட்டு உட்கார்ந்து இருந்த பெரியவர் என்னை ஒரு மாதிரியாக பார்த்து...


சார்..... கொஞ்சம் வரமுடியுமா ?
என்ன ?
உங்கள் பெட்டியில் என்ன இருக்கு ?
உள்ளே உடைகள் இருக்கிறது
சரி போயி சாமி கும்பிட்டு வாங்க
வேணும்னா பெட்டியை திறந்து காண்பிக்கட்டுமா ?
பரவாயில்லை கேட்கிறது எங்களோட கடமை தவறா நினைக்காதீங்க...
நல்லது புகைப்படம் எடுக்கலாமா ?
கூடாது பாத்துக்கங்க...
நன்றி.



 உள்ளே பயபக்தியுடன் சென்றேன் எப்பொழுதுமே சிறு வயதிலிருந்தே கோவில்களுக்கு சென்றால் சிலைகளை பார்த்து அதன் வடிவமைத்த விதங்களை ஆராய்ந்து ரசிப்பது எனது வழக்கம் இதோ நீண்டகால இடைவெளிக்குப் பிறகு நண்பரால் இன்று இங்கு முதல்முறையாக. வெளிக்கூடாரத்தில் யானை நின்று கொண்டு இருந்தது அந்த யானை மலையாளி என்பதை அறிந்து கொண்டேன் எப்படி என்பதை பிறகு சொல்கிறேன். உள்ளே சென்றேன் நடக்கும் பொழுது சட்டென யாருக்கும் தெரியாமல் புகைப்படம் எடுத்துக்கொண்டேன் அர்ச்சகர் வந்திருந்த சிறிய கும்பலுக்காக தீபாராதனை காண்பித்து அவருடைய காரியத்தை நிறைவேற்றிக் கொண்டு இருந்தார் கோவிலைச்சுற்றி வந்தேன் கோவிலுக்கு வந்தால் உட்கார வேண்டும் என்று முன்னோர்கள் சொல்லி வைத்தது ஞாபகம் வர கீழே உட்கார்ந்திருந்தேன் மனதில் ஏதோ ஒரு அமைதி கிடைக்கத்தான் செய்கிறது வெளியில்தானே வாகன இரைச்சல்கள், வேகமாக இடித்துக்கொண்டு எதையோ தேடி ஓடும் இயந்திர மனிதர்கள் முடிவில் எதைப் பெறுகிறார்கள் ? மரணம்தானே இதனால்தான் சன்னியாசிகள் காவி உடையணிந்து கோவிலில் காலத்தை கடத்தி வாழ்கின்றார்கள் அப்படியானால் நித்தியானந்தா மட்டும் ஏன் திருமிகு. ரஞ்சிதாவுடன் துறவரம் பூண்டார் ? நண்பர் திரு. பகவான்ஜி அவர்களிடம் கேட்டால் விடை கிடைக்கலாம் ?  இங்கு வந்து ஏனிந்த குழப்பம் சிந்தனையை கலைத்தது. ஒரு பெரியவரின் குரல் தம்பி என்றதும் எழுந்து என்ன ஐயா என்று கேட்டதுதான் தாமதம் சட்டென எனது நெற்றியில் விபூதியை பூசி விட்டு குங்குமத்தையும் அப்பி விட்டார். என்ன செய்வது ? என்ன சொல்வது ? ஏதோ எதிர் பார்த்தார்... நிறைவேற்றவும் நூறு வயதுவரை மகிழ்வாய் வாழ்வாய் என்று வாழ்த்தி விட்டு சென்று விட்டார் நண்பர் திரு. பசி பரமசிவம் நினைவுக்கு வந்தார் மனதுக்குள் நினைத்துக்கொண்டேன் இந்த நிமிடம்வரை கிடைக்காத மகிழ்வு இனிமேல் கிடைத்து யாருக்கு பயன் ? ஹூம் அதுவும் நூறு வயசுவரை ஒருவேளை அவரை நான் திருப்தி படுத்தாமல் விரட்டி விட்டிருந்தால் ? இன்றே போய் விடுவாய் என்று சாபம் விட்டிருப்பாரோ ? நண்பர் திரு. வலிப்போக்கன் அவர்கள் இருந்தால் கேட்கலாம். சரியென்று எழுந்தேன் காளையார் கோவிலின் உள்ளே இன்று காலை கில்லர்ஜி உட்கார்ந்து இருந்தான் என்பதை வரலாறு எழுதிக்கொண்டது.



 எழுந்து யானை நிற்குமிடத்துக்கு வந்தேன் பார்க்க வேதனையாக இருந்தது காரணம் அதன் உடலில் நிறைய சிறாய்ப்புகள் இருந்தது கவனிப்பு சரியில்லை என்பதை பறைசாட்டியது யானைப்பாகன் சற்று தூரத்தில் சாப்பிட்டுக் கொண்டு இருந்தான் நான் யானையிடம் நினக்கு ராவுல பட்சணம் கிட்டியோ ? என்றதை சற்றும் மதிக்காமல் நின்றது எனக்கு சந்தேகம் யானைப்பாகன் மட்டும் மலையாளத்தில் இவிடே வன்னு நிக்கு என்றதும் கேட்டுக்கொண்டதே ஒருவேளை நாம் தமிழன் என்பதால் கேட்கவில்லையோ... பாகன் சிறிய வயதுக்காரன் பேசியதில் அவன் யானையைப் போலவே மலையாளியே என்பதை அறிந்தேன் பிறகு புறப்பட்டு வாசலுக்கு வந்தேன் பெரியவருக்கு மீண்டும் நன்றி சொல்லி விட்டு கோவில் உண்டியலில் போட நினைத்ததை கவனமாக போடாமல் இங்கு வாசலில் இருக்கும் உழைக்க இயலாத சிலரை மட்டும் தேர்ந்தெடுத்து காணிக்கை செலுத்தினேன் இவர்களின் வாழ்த்து நிச்சயம் பலிக்கும் காரணம் ஒருவேளை உணவுக்கு சிறிய அளவில் உதவுகிறதே நமது பணம். அப்படியானால் இவர்களின் வாழ்த்துகளை வாங்குவதற்காகத்தான் தர்மமா ?  அப்படியானால் இதுவும் பண்டமாற்று முறைதானோ ?  நல்ல மனதுடன் தர்மம் செய்யவில்லையா ?  மனக்குழப்பத்தை யாரிடம் கேட்கலாம் ?  அன்பின் ஜி குவைத் மன்னர் திரு. துரை செல்வராஜூ அவர்களிடம் கேட்டால் ?  சரியான விளக்கம் கொடுப்பார் என்ற நினைவுகளோடு கோவிலை விட்டு வெளியே வந்து உச்சி வெயில் மண்டையை பிளக்க மோடி ஸ்டைலில் செல்ஃபி எடுத்தேன் இதோ...


48 கருத்துகள்:

  1. காளையார் கோவில் என்றதும் "காளையார் கோவில் ரதம்" என்று படித்த கதை நினைவுக்கு வருகிறது!​ கோவி மணியக்காரன் எழுதியது என்று நினைவு!

    கோவிலுக்குள் சென்றதும் ஏகப்பட்ட சிந்தனைகளின் வசப்பட்டிருக்கிறீர்கள்.

    புகைப்படங்களை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மணிசேகரன் என்பது மணியக்காரன் என்று வந்திருக்கிறது. அந்தப்பெரிய எழுத்தாளர் என்னை மன்னிக்கட்டும்.

      நீக்கு
    2. கோவில்களுக்குள் சென்றால் சிந்தனை வருவது எனது நெடுங்கால வியாதி ஸ்ரீராம் ஜி

      நீக்கு
  2. கோவிலுக்குள் சென்று வந்த அனுபவம் நன்று. புகைப்படங்கள் நன்று.

    பதிலளிநீக்கு
  3. கிள்ளார் ஜி தர்மம் செய்தாலும் எதிர்பார்ப்பு இல்லாமல் செய்ய வேண்டும் எனவது எமது தாழ்மையான எண்ணம். அதாவது, இப்படிச் செய்தால் புண்ணியம் கிடைக்கும், அப்படிப் செய்தால் நம் அடுத்த தலைமுறை நன்றாக இருக்கும் என்று சொல்லப்படுவதற்காகச் செய்வதும் ஏதோ ஒரு எதிர்பார்ப்புடன் செய்வதே. அப்படி என்றால் புண்ணியம் இல்லை என்றால் நீங்கள்/நாம் அவர்களுக்குச் சாப்பாடு போட மாட்டீர்களா/டோமா...இல்லை அல்லவா....இன்னொன்றும்....இது கொடுத்தால்தான் புண்ணியம்.....அது கொடுத்தால்தான் புண்ணியம் எனவதும் கூட எதிர்பார்ப்புதான்....எனவே தர்மம் செய்வதையும் கூட நாம் பிள்ளைகள் நன்றாக இருப்பார்கள் என்ற நினைவும் இல்லாமல் புண்ணிய எதிர்பார்ப்பு இல்லாமல் செய்யலாமே...வலது கை கொடுப்பது இடது கைக்குக் கூடத் தெரியக் கூடாது என்பதுதான்....

    புகைப்படங்கள் நன்றாக உள்ளன...

    உங்கள் அனுபவம் நிறைய சிந்திக்க வைத்திருக்கிறது போலும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி

      வலது கை கொடுப்பதை இடது கை அறியக்கூடாது வலது கையே இல்லாமல் வாழ்பவர்கள் என்ன செய்வார்கள் ? என்று கேட்டால் தவறு ஆகவே கேட்க மாட்டேனே.....

      நீக்கு
    2. ஜி வலது கை என்று சொல்லுவது இலை மறை காயாக நாம் தர்மம் செய்வது வெளியில் தெரியாமல் செய்ய வேண்டும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்ய வேண்டும் என்பதற்காகச் சொல்லப்பட்டது அல்லாமல் நம் கையை அல்ல. வெளியில் தெரிந்தால் அது நமது சுய தம்பட்டம். நாம் கொடுத்தோம் என்பதை நாமே சொல்லிக் கொள்வது என்பது கூட ஒரு வித ஈகோ...நம்மை நாமே உயர்ந்தவர் நாம் அளீத்திருக்கிறோம் என்பதற்காக கோயிலில் கூட தனி மரியாதை கிடைக்கும்...நீங்களே கூடப் பார்த்திருப்பீர்கள். மட்டுமல்ல...கோயிலில் தனி மரியாதை மட்டுமல்ல கல்லில் செதுக்கியும் கூட வைத்திருப்பார்கள் போர்டில் என்று..இன்னார் இன்ன நன் கொடை இவ்வளவு அளித்திருக்கிறார்கள் என்றும் கூட...எனக்க்கென்னவோ அது கூட விளம்பரம் என்று தோன்றும். அது தவறா சரியா என்று தெரியாது. அது ஒரு கணக்கிற்கு என்றும் சொல்வதுண்டு...கணக்கு தணிக்கை அதிகாரிக்குத்தானே தவிர ஊருக்கேவா?

      வலது கை இல்லாதவர் அல்லது இரு கையுமே இல்லாதவர் கூட தர்மம் செய்யலாம்..மனமிருந்தால் மார்கமுண்டு..உங்களுக்குச் சொல்லவா வேண்டும் என்று கேட்டுக் கொண்டே சொல்லியும் விட்டேன் ஜி ஹிஹிஹி..

      கீதா

      நீக்கு
    3. த ம இப்பதான் போட முடிஞ்சுச்சு...

      நீக்கு
    4. நன்கொடை அளிப்பவர்களின் பெயர்களை கல்வெட்டில் பதிந்து வைப்பதைக்குறித்து நான் ஏற்கனவே பதிவு போட்டு இருக்கிறேன்.

      சாதாரண டியூப் லைட்டில் பல்பையே மறைக்கும் அளவு உபயம்: இன்னாரு மகன் மன்னாரு என்று விளம்பரப்படுத்தி எழுதி இருப்பார்கள்.

      உபயம் இறைவனுக்குதானே மனிதர்கள் அறிய வேண்டிய அவசியம் ?

      நீக்கு
  4. அருமை அருமை படங்கள் மிகவும் நன்று

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா தங்களது தொடர் வருகை மகிழ்ச்சி தருகிறது.

      நீக்கு
  5. காளையார் கோவிலுக்குள் என்னை நினைத்திருக்கிறீர்கள். உங்கள் உள் மனதில் இடம்பிடித்துவிட்டதில் மகிழ்ச்சி. நானும் உங்களை நூறு ஆண்டுகள் வாழ்க என்று வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நாறு ஆண்டுகளா ? அரை சதம் அடிக்கவே இல்லை அதற்குள் முழுவதும் உணர்ந்து துறந்து விட்டேன் நூறெதற்கு ?

      நீக்கு
  6. நேற்றிரவு தூக்கத்தில்
    மகா ஞானி ஒருவர் தோன்றியிருக்கிறார் - என்று பட்சி சொன்னது..

    நீங்கள் தானா!...

    கோயிலுக்குள் சென்றும் கூட்டாளிகளின் நினைவு - என்றால்,
    உங்களுடன் தான் தெய்வம் நிற்கின்றது..

    ஆக - என்னையும் உங்கள் கேள்வி வளையத்திற்குள் கொண்டு வந்து விட்டீர்கள்..

    மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி ஞானி என்ற நிலை எதற்கு ?
      பதில் வரும் என்று காத்திருக்கிறேன் ஜி

      நீக்கு
  7. அனுபவக்கட்டுரை சிறப்பு ☺

    பதிலளிநீக்கு
  8. மோடி ஸ்டைலில் தாங்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டதால் தங்களின் வரலாறு முக்கியம் என்பதை குறித்துக் கொண்டேன். நண்பரே....அதோடு ..நித்தி ..திருமிகு ரஞ்சிதாவுடன் துறவறம் பூண்ட வரலாற்றையும் தெரிந்து கொண்டால் குழப்பத்திற்கு தெளிவு கிடைக்கும் என்று என் வீட்டு வடக்கு பக்கத்திலிருந்து பல்லி கத்தியது நண்பரே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல்லியிடம் கேட்டு சொல்லுங்கள் நண்பரே தமிழ் நாட்டில் தேர்தல் வருமா ? என்று

      நீக்கு
  9. காளையார் கோவில்-நல்ல தரிசனம்தான். பரமக்குடி என்ற பெயரைப் பார்த்தவுடனே என் 1வதுலிருந்து 3வது வரை அங்கே படித்தது, என் நண்பனின் பெற்றோர், ரவி தியேட்டர், எங்க அப்பா வேலைபார்த்த மேல் நிலைப் பள்ளி எல்லாம் ஞாபகம் வந்துவிட்டது. காலைலயே த ம போட்டுவிட்டேன்.

    'வாழ்த்துக்களை வாங்குவது தர்மமா?' - கில்லர்ஜி, நாம் செய்யும் தர்மத்துக்கு எந்த வழியிலாவது நேரிடையான விளைவு ஏற்பட்டால் (அதாவது நாம சொல்லிக்காட்டி பெருமைப்பட்டால், அல்லது வாங்குபவர்களிடமிருந்து வாழ்த்துக்கள் போன்றவற்றைப் பெறுவதனால் பெருமிதப்பட்டால், பிறரிடம் விளம்பரப்படுத்தினால்) அந்த தர்மத்தினால் நமக்கு பயன் கிட்டாது. இதனால்தான் வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியக்கூடாது என்ற சொல் ஏற்பட்டது.

    இன்னொன்று கில்லர்ஜி. அர்ச்சகர்கள், பூசாரிகள், சாமியார்கள் (பெரும்பாலான) ஆகியோரும் அவரவர்க்கு உரிய தொழிலைச் செய்கிறார்கள் என்றே நாம் நினைக்கவேண்டும். (ஓட்டுனர், நடத்துனர், ஆசிரியர், மாநகராட்சிப் பணியாளர், பொறியாளர், மருத்துவர் போன்று பல தொழில் வல்லுனர்களைப்போலவே). பலர் அந்தத் தொழிலுக்குரியவகையில் வேலை செய்வார்கள். சிலர் அப்படிச் செய்யமாட்டார்கள். அவ்வளவுதான்.

    கோவில்களிலோ அல்லது திருவிழாக்களிலோ யானையோ அல்லது எந்த விலங்குகளையோ காட்சிப்பொருளாக்குவது எனக்கு உடன்பாடான விஷயம் அல்ல.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது பரமக்குடி நினைவுகளை மீட்டி விட்டதில் மகிழ்ச்சி.

      தர்மம் செய்வதைப்பற்றிய தங்களது உயர்வான கருத்துக்கு எமது இராயல் சல்யூட் நண்பரே.

      எமது கருத்தும் இதுவே பிறரிடமிருந்து வரும் மாறுபட்ட கருத்துகளை வெளிக்கொண்டு வரவே நான் மாற்றுக்கருத்தை முன் வைப்பேன் மற்றபடி தர்மம் செய்வதில் பிரதிபலன், எதிர்பார்ப்பு கூடாது.

      அடுத்து அர்ச்சகர் ஆம் அவர்களின் வாழ்வாதாரம் அதுதானே ஆகவே சரியே.

      விலங்குகள் குறித்த பார்வை. மிகச்சரி மிருகக்காட்சி கூடங்கள், சர்க்கஸ் கூடாரங்கள் தகர்த்து எறியப்படல் வேண்டும் என்பது எமது கொள்கை.

      நான் ஆட்சிக்கு வந்தால் ??? இது உடனடி நடைமுறை படுத்தப்படும்.

      நீக்கு
  10. அருமையான படங்கள். காளையார் கோவில் நிறைய முறை பார்த்து இருக்கிறேன்.
    போன முறை போன போது படங்கல் எடுத்தேன் , முக நூலில் போட்டேன். என் வலைத்தளத்தில் பதியவில்லை.
    போட வேண்டும்.

    நிறைய கேள்விகள் நிறைய சிந்தனைகள். அமைதி கிடைத்தது மகிழ்ச்சி.
    அங்கு இருந்த போது பெரியவரின் ஆசி கிடைத்தது நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ பொதுவாக இறைஸ்தலங்கள் என்றுமே அமைதியாகத்தான் இருக்கும் ஆகவே அந்த அமைதி மனதுக்கும் கிடைக்கிறது.

      நம்பிக்கை உள்ளதோ... இல்லையோ... பெரியோரின் ஆசி மனதுக்கு இதமானதே... வருகைக்கு நன்றி.

      நீக்கு
  11. காளையார் கோயில் போனதில்லை! போகணும். ஆனால் கோயிலுக்குப் போனாலே சிந்தனைகள் எதுவும் எனக்குள் தோன்றுவதில்லை! அதுக்காகத் தீவிர பக்தினு நினைக்காதீங்க! அதெல்லாம் இல்லை. மனது ஏதோ வெறுமையை உணரும்! பிச்சைக்காரர்களுக்கு தானம் கொடுப்பது என்பது அவரவர் சொந்த விருப்பம்! உடல் நலமாக இருக்கும்போதும் பிச்சை எடுப்பவர்களை நான் ஆதரிப்பதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //உடல் நலமாக இருக்கும் பொழுது பிச்சை எடுப்பவர்களை நான் ஆதரிப்பதில்லை//

      அருமை இதை அனைவரும் கடைப்பிடித்தால் நாட்டில் பகுதி பிச்சைக்காரர்களை உழைப்பாளி ஆக்கி விடலாம்.

      நீக்கு
  12. தன் தேவைக்கு மீறி வைத்திருப்பவன் எங்கோ ஒரு திருடனையோ பிச்சை காரனையோ உருவாக்குகிறான் என்று காந்திஜி சொன்னாராம் கோவில் வாசலில் அமர்ந்திருப்போர் அப்படி உருவாக்கப் பட்டவர்களோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா இவர்களைவிட சிக்னல்களில் பிச்சை எடுக்கும் கூட்டத்தினர்தான் உருவாக்கப்பட்டு வழி நடத்தப்படுகிறார்கள் சில கூட்டத்தினரால்....

      நீக்கு
  13. நித்தியே இன்னும் சிற்றின்பத்தைக் கடக்கவில்லை ,இவர் எப்படி அடுத்தவருக்கு பேரின்பம் அடைய வழிகாட்ட முடியும் ?இவரை விட நீங்களும் நானும் எவ்வளவோ நேர்மையானவர்கள் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் ஜி நாம் உயர்ந்தவர்களே

      ஆனால் சமூகம் நித்தியைப் போன்ற நாதாரிகளையே நம்புகிறது.

      நீக்கு
  14. கோபுர தரிசணம் கண்டேன்!

    பதிலளிநீக்கு
  15. உங்களின் தர்மம் சிறப்பு... மிகச் சிறப்பு ஜி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி சிறப்பை சிறப்பாக்கியமைக்கு நன்றி

      நீக்கு
  16. உங்கள் பதிவிலிருந்தோ பின்னூட்டமோ எதையும் காபி பேஸ்ட் செய்ய முடியவில்லையே..
    துரை செல்வராசுவின் பின்னூட்டம் நகைச்சுவை. யானையின் மொழிப்பற்றும் (?) நகைச்சுவை.

    கோபுரம் பிரம்மாண்டமாகவே இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே துரை ஜி அவர்களின் அனைத்து பின்னூட்டமும் இப்படித்தான் இருக்கும் அனைவரும் ரசிப்பர்.

      நீக்கு
  17. கோவிலுக்கு அலிக்கும் காணிக்கைக்கும் வெளியே இருந்தோர்க்குத் தரும் காணிக்கைக்கும் - தர்ம நோக்கில் இரண்டுமே செல்லும். கோயில் அறநிலையத்துறையின் கீழே இருந்தாலொழிய.
    கோவிலுக்கு வெளியே தெரியும் ஏழ்மைக்கு வருந்தி ஒரு முறை உதவியபோது நேரே கோவிலின் பக்கத்து தெருவிலிருக்கும் சாராயயகடைக்கு ஒதுங்கியதையும் பார்த்திருக்கிறேன், கோவிலுக்குள் கொடுத்த தானம் சுற்றுப் பிரகார நடைக்கு உதவியாக குடைகளாக மாறியதையும் பார்த்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மறுக்க இயலாத ஒரு நடைமுறை உண்மையை அழகாக சொன்னீர்கள் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  18. (காளையார்) கோவிலுக்கு சென்று வந்ததை (நகைச்)சுவையோடு படங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  19. படங்கள் அருமை. யானை பாவம்ல்ல... புத்துணர்வு முகாமுக்கு அனுப்பலிஒயோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதை அறநிலையத்துறை கவனிக்க வேண்டும் அதற்கு அவர்களை "கவனிக்க வேண்டுமே"

      நீக்கு
  20. தமிழகத்தில் பார்க்கவேண்டிய கோயில்களில் ஒன்று இக்கோயில். வித்தியாசமான ஆன்மீகப்பதிவு. அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் வருகைக்கு நன்றி

      நீக்கு
  21. நல்அனுபவம்....அருமை..

    பதிலளிநீக்கு
  22. தமிழக வரலாற்றில் பொன்னேடு களில் பொறிக்கப்பட வேண்டிய இடம் காளையார்கோயில். ஆங்கிலேயரின் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியான முதல் அரசர் முத்துவடுகநாதர். உயிர் துறந்த இடம்.
    வேறு நாச்சியார் தன் கணவரைக் கொன்றவரை வீழ்த்த சபதம் எடுத இடம். அத்தகு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் தங்களைக் கண்டு மகிழ்ந்தேன் நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது வருகை கண்டு மகிழ்ச்சி.

      நீக்கு