தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, ஜூலை 15, 2017

புரியாத புதிர்


இது எப்படி சாத்தியம் ? தன் உடம்பை உலகிற்கு காண்பிப்பவர்களுக்கு நடந்து வர சிவப்பு கம்பளம் விரிப்பது இவர்கள் என்ன தியாகிகளா ? இந்த மரியாதையை இவர்களுக்கு கொடுக்க தீர்மானித்தது இந்த சமூகம்தானே... அப்படியானால் இந்த சமூகம் இளைஞிகளுக்கு என்ன சொல்கிறது ? விபச்சாரிகளுக்கு மரியாதை கிடைக்கும் என்றா ?

நாட்டில் பெண்களை சினிமாவில் நடிக்கும் ஆசையை தூண்டுவதற்கும் அதன் விளைவாய் சில பெண்கள் நல்ல வாழ்க்கையைக்கூட இழந்து போவதற்கும் காரணம் இந்த சமூகம்தானே ! இந்த சமூகம் என்று சொல்கிறோமே இது யார் ? இதற்கு உருவம் இருக்கிறதா ? இல்லை நாம் தான் சமூகம் எனக்கு முன்னால் உள்ளவர்கள் எனக்கு சமூகம் அதில் நீயும் இருக்கிறாய். உனக்கு முன்னால் உள்ளவர்கள் உனக்கு சமூகம் அதில் நானும் இருக்கிறேன். ஆக சமூகம் என்பது உணர்வு பந்தப்பட்ட மனிதப்பிண்டம். இவனுக்கும் குடும்பம்தானே இருக்கிறது நாளை தனது சந்ததிகள் இப்படி வருவதை இவன் விரும்புகின்றானா ?

நான் கேட்பது ஆங்கிலேயனை அல்ல !
என் இனத்தமிழனை மட்டுமே !  

சாம்பசிவம்-
தமிழன் ஒருபடி மேலே போயி கோயிலும் கட்டிட்டானே இந்த பாவத்தை எங்கே போயி தொலைக்க ?

காணொளி

51 கருத்துகள்:

 1. அழகு தமிழில் கவிதைகள், கதைகள், கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் தமிழ் சார்ந்த படைப்புகள் என உங்கள் திறமைகளுக்குக் களம் அமைக்க நாம் தயாராக உள்ளோம். இலக்கியம், விஞ்ஞானம், அரசியல், கணிதம் மற்றும் பொருளியல் என எது சார்ந்த படைப்புகளாக இருந்தாலும் சிகரம் இணையத்தளத்துக்கு அனுப்பி வையுங்கள். தமிழால் இணைவோம்! தமிழை வளர்ப்போம்!
  தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்!
  சிகரம் இணையத்தளம் : https://www.sigaram.co
  தொடர்புகளுக்கு : editor@sigaram.co

  பதிலளிநீக்கு
 2. வருந்த வேண்டிய செய்தி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ திருந்த வேண்டியவர்களுக்காக நாம் வருந்துவோம்.

   நீக்கு
 3. சாட்டை எடுத்து அடித்தாலும் வலிக்காது..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இவனுகளை துபாய்க்கு கொண்டு போய் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் வேலைக்கு விடணும் ஜி

   நீக்கு
 4. தாய்மொழியையும் தன் இனத்தையும் மறந்து தண்ணியில் மிதக்கும் தமிழன், நடிகைகளின் ஆபாச அங்க அசைவுகளில் கட்டுண்டு கிடக்கிறான். மயக்கம் தெளிவது இப்போதைக்கு இல்லை நண்பரே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை நாம் காணமுடியாது அப்படித்தான் இருக்கிறது நிலைப்பாடு.

   நீக்கு
 5. எவ்வளவு தான் மூட்டி மோதிக்கொண்டாலும் திரைப்பட மோகம் கொண்ட நம் மக்களை திருத்தமுடியாது கில்லர்ஜி அவர்களே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் நண்பரே என்னதான் செய்வது ? சாபக்கேடுதானோ ?

   நீக்கு
 6. த ம . கேட்கவேண்டிய கேள்விதான்.

  சிம்ரனுக்குச் சிலைவைத்ததும், நயனதாராவுக்குக் கோவில் கட்டுவதுபோல் சினிமாவில் காண்பித்து உங்கள் நினைவில் விட்டுப்போய்விட்டது.

  சில நாட்களுக்கு முன், செய்த குற்றத்துக்காக நடிகர் திலீப் கைது செய்யப்பட்டபோது, போலீசார் திலீபுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட படம் செய்தித்தாள்களில் வந்ததே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிம்ரன் விசயம் தெரியாதே.... நண்பரே.

   திலீபுடன் செல்ஃபியா ? இவன் உள்ளே போனாலும் ராஜவாழ்க்கை வாழலாம் போலயே...... காலவினை

   நீக்கு
 7. பணம் பாஸ் பணம்!​ அதுக்குதான் மதிப்பு.

  பதிலளிநீக்கு
 8. அய்யோ அய்யோ....அதாங்க..
  மொய்ப் பெட்டி கண்ணுக்குத். தெரிலே மொபைலில். ஸோ வீட்டுக்கு வந்ததும் மறக்காம மொய் வைச்சுடறோம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க இதுக்கு முடிவே வராது போலயே...... திருந்தும் வாய்ப்பும் இல்லை.

   நீக்கு
  2. இப்பத்தான் பெட்டி கண்ணுல பட்டுச்சு. மொய் போட்டுட்டோம்...!!!

   நீக்கு
  3. ஆமாம் ஜி தமிழ்மண ஓட்டுப் பெட்டி கூடப் புரியாத புதிராகத்தான் இருக்கு...ம்ம்ம்

   நீக்கு
  4. வருக புதிருக்கு வாக்களித்தமைக்கு நன்றி

   நீக்கு
 9. vaalthukal aya. naagaregam uadaiel iruka? ila paarvaiel alathu manathil iruka?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே நாகரீகம் மனதில் தோன்றினால் உடையில் வெளிப்படும் பிறகு பார்வை செம்மைபட்டு விடும் வருகைக்கு நன்றி நண்பரே

   நீக்கு
 10. arumaiyana padil aya. thaagal pala kandagalai parnanthu pala naagaregam paarthu vanthu irukega: iruthalum en paarviyel namai sari seithu kondal pirarin thani pata naakereiyathai kandu anja thevai ilai.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் நண்பரே மீள் வருகைக்கு நன்றி

   நான் பழமையில் மூழ்கிய புதுமைச்சித்தன் என்னை புதுமைகள் மாற்றி விடமுடியாது அந்தப்பயம் கிடையாது.

   ஆனால் இளைய தலைமுறைகளின் போக்கு பாதைமாறி விடக்கூடாது என்பது எமது பொதுநலக்கவலை.

   நீக்கு
 11. Arumai aiya. thevaiyana visiyathai athega paduthium, aavana paduthium iruthaal thevai ilathathu thaanaga marinthu poogum alava. thevai atrathai pala per athai paarthu athuvaga maara vaaipaga amithu vidatha.

  பதிலளிநீக்கு
 12. திசை மாறும்கோபம்.?

  பதிலளிநீக்கு
 13. ரசிக்கிறவங்க தானே அதிகம். அவங்க இருக்கிறவரைக்கும் இவங்களுக்குத் தான் சிவப்புக் கம்பள வரவேற்பு! :(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ எல்லாமே தலைகீழாகி கொண்டுதான் போகிறது.

   நீக்கு
 14. ஹாஹா! இதென்னெ பெரிய விடயமாம்? விளையாட்டுப்போட்டிகள் ஆரம்பிக்கும் போது வந்திறங்கும் அழகிகள் அணிவகுப்பை நீங்கல் கணடதில்லையோ? இதெல்ல்ல்ல்ல்ல்ல்ல்லாமே ஜூஊ ஜூ பி சார். இதை விட இன்னும் பல உண்டல்லோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க இதையெல்லாம் தடுக்க முடியாத கவலையில்தான் விரலில் நகச்சுத்தி வந்துருச்சு.

   நீக்கு
 15. திருந்திடுவோமா?!

  பதிலளிநீக்கு
 16. கழுவி...கழுவி..ஊத்தினாலும் இனமான தமினுக்கு சூடு சொரனை இல்லாமல்தானே ஆக்கிபுட்டாங்களே நண்பரே..........

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நம்மைப்போல் சிலருக்காவது இருக்கிறதே.... பெருமை கொள்வோம் நண்பா.

   நீக்கு
 17. இதெல்லாம் இலுமிநாட்டிகள் செய்யும் வேலை :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உலகையே இயக்குவது இலுமிநாட்டிகள்தானே ஜி

   நீக்கு
 18. சமூகம் சாக்கடை ஆகி வெகு நாட்களாயிற்று!அதிலே சந்தண மணம் வருமா??????

  பதிலளிநீக்கு
 19. இது பற்றி எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன் ஜி ! அது என்ன 'கேனஸ்'-ஸில் ஃபாஷன் என்ற பெயரில் கவர்ச்சிப் படங்கள் எடுத்துப் போடுகிறார்கள்....அதுபோன்ற செய்திகளுக்கு நிறைய க்ளிக் கிடைக்கிறதே...! என்ன சொல்ல !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பிழைக்கத் தெரிந்த கூட்டம் பணமாக்குகின்றது அறியாமை கூட்டம் ஏமாறுகின்றது நண்பரே இதில் மானமுள்ளவனும் பாதிக்கப்படுவது வேதனை.

   நீக்கு
 20. இந்தக் கொடுமைய எங்க போய் சொல்றது நண்பரே....

  பதிலளிநீக்கு