தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், ஜூலை 17, 2017

என் நினைவுக்கூண்டு (4)


இதன் பின்னணிகளை அறிவதற்கு கீழே சொடுக்கலாம்...


தேவகோட்டை நமது வீட்டுக்கு நீ வாழ்ந்த வீட்டில் உன்னை கொண்டு வந்து இரவு முழுவதும் உறங்க வைத்ததில் அந்நிலையிலும் எனது மனதில் சிறிய நிறைவு ஏற்பட்டது.

   னிதா காலன் மிதிக்காத வாயிற்படிகளே இல்லை என்பார்கள் ஏன் நமது வீட்டிலும் மிதித்து இருக்கிறான் பலமுறை வென்றும் இருக்கின்றான் ஆனால் உன்னைக் கொண்டு செல்வதை இன்னும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உன்னை அசைவற்ற சடலமாக பார்க்க, பார்க்க என்னால் இயலவில்லை இன்றோடு உன்னை காண முடியாதே, பேச முடியாதே என்ற எனது சிந்தனை ஓட்டத்தில் நான் நடப்பதை ஜீரணிக்க முடியாமல் பதட்டமாகவே இருந்தேன் உனக்கு செய்ய வேண்டிய சடங்குகளை நானே செய்யவேண்டும் என்று நினைத்தேன் அதை எனது கடமையாகவும் நினைத்தேன் உனது நெற்றியில் வைக்கப்படும் ஒரு ரூபாய் நாணயமும் என்னுடையதாக இருக்க வேண்டும் என்பதில் அந்நிலையிலும் கவனமாய் இருந்தேன் நமது வீட்டில் 24 மணிநேரமும் தண்ணீர் வந்து கொண்டே இருக்கும் எந்த நேரமும் அண்டா தொடங்கி குண்டாவிலிருந்து சிறிய கிண்ணம் வரை தண்ணீர் பிடித்து வைப்பாய் இதன் காரணமாக ஈரமாகவே இருக்கின்றாயே.... என்று அனைவரும் உன்னை பேசுவோம் உன் வசதிக்காகவே வீட்டிற்குள் தண்ணீர் பிடிக்க ஐந்து இடத்தில் பைப்புகள். தண்ணீர் பஞ்சமே வராத நம் வீட்டில் அன்று தெரு முழுவதுமே தண்ணீர் வராமல் உன்னைக் குளிப்பாட்டுவதற்கு பணம் கொடுத்து தண்ணீர் வாங்கும் அதிசய நிகழ்வு அது மட்டுமல்ல இன்னொன்றும் நடந்தது.

   நேரம் கடக்க, கடக்க இனி உன்னைக்காணவே முடியாது என்ற உணர்வு வரும் பொழுதெல்லாம் என்னை மறந்தே பலமுறை அழுதேன் நான் மட்டுமல்ல உனக்காக எவ்வளவு நபர்கள் அந்த தெரு மட்டுமல்ல நமது ஏரியாவைக் கடந்து அடுத்த ஏரியாவில் முஸ்லீம் பெண்கள் வரை நீ பழக்கம் பிடித்து வைத்திருக்கின்றாய் என்பதை அன்றே அறிந்தேன் அவர்கள் அனைவரும் நீ வாசலில் கோலமிடுவதை பார்த்து நீ அவர்களிடம் கோலம் நல்லாருக்கா ? என்று கேட்டதை சொல்லிச் சொல்லி அழுதனர் உனக்குத்தான் எவ்வளவு மாலைகள் உனக்கு எந்த நிகழ்ச்சிகளும் நடக்கவில்லை என்பதால் உனது மரணத்துக்கு இறைவன் பிரமாண்டத்தை கொடுத்து விட்டானோ... ? ஒரு வழியாக வாகனத்தில் நீ அமரர் பூங்கா பயணத்திற்கு ஆயத்தமானாய்....

   அமரர் பூங்காவில் ஒவ்வொரு நொடியும் எனக்கு பித்துப்பிடிப்பது போன்ற நிலை கோவை தனியார் மருத்துவமனையில் நீ ஐசியூவில் இருக்கும் பொழுது உனது கழுத்திலிருந்து ஊக்கு ஒன்றை எடுத்துக்கொடுத்து வச்சுக்க என்றாய் யாருமே உன்னிடமிருந்து ஊக்கு வாங்க முடியாது அப்படியே வாங்கினாலும் மறுநாள் காலையில் எழுப்பி ஊக்கை தா என்று வாங்கி விடுவாய் அப்படிப்பட்ட நீ தானே முன் வந்து கழட்டிக் கொடுத்தது எனக்கு ஆச்சர்யமாக இருந்த விடயம் இதோ இப்பொழுது ஞாபகம் வந்தது எனது வாழ்வில் பலமுறை நான் தனிமையில் மௌனமாய் அழுதிருக்கின்றேன் நமது வீட்டு மரணங்களும் என்னை அழ வைத்திருக்கின்றது. ஆனால் பொதுவெளியில் முதன் முறையாக நான் கதறியது எனது வாழ்வில் உனக்காக அன்றுதான் என்பது நானே அறிந்து கொண்ட உண்மை ஏனோ தெரியவில்லை குழியில் கிடத்திய உனது முகத்தை பார்த்துக்கொண்டே இருந்தேன் உனது நெற்றியில் இருந்த நாணயத்தை நீ எடுத்துக்கண்ணே என்று சொல்வது போல் மீண்டும், மீண்டும் ஒரு உணர்வு, பிரம்மை ஆகவே... பலர் தடுத்தும் மரபு மீறி எனக்கு வேண்டும் என்று பாஸ்கரன் சித்தப்பாவிடம் கதறி அழுது பொக்கிஷம் போல் பெற்றுக்கொண்டேன். உறவினர்கள் கூடாது என்று சொல்லியும் உன்னை போர்த்தி இருந்த புதிய உடைகளை வருத்தத்தோடு கத்திரிக்கோலால் கிழித்து, கிழித்து இடச் சொன்னேன் காரணம் ஆறறிவு இந்த திருட்டு சமூகம் மட்டுமல்ல ஐந்தறிவு பிராணிகளும்கூட காரணத்தை பிறகு விளக்குவேன்.

   அமரர் பூங்காவில் நான் நிலை மறந்து நடந்து கொண்டதாக மறுநாள் பிறர் சொல்லி அறிந்தேன் அன்று மட்டுமல்ல வனிதா இந்நொடிகூட உனது நினைவு வந்தாலும் ஏதோ சொல்ல முடியாத படபடப்பு இன்னும் என்னால் ஜீரணிக்க முடியவில்லையடா... எல்லாம் முடிந்து வீடு வந்தாலும் மனதில் ஏதோ ஒரு பாரம் அதிசய நிகழ்வுகளில் மற்றொன்று மாலையில் வீட்டின் பின்புறமுள்ள வேப்பமரத்தில் ஒரு காகம் அதிசயமாக கரைந்தது உறவினர்கள் உள்பட அதிசயமாக பார்த்தோம் காரணம் யாராலும் நம்ப முடியவில்லை இதைப் படிப்போர் நம்புவார்கள் என்ற நம்பிக்கைகூட எனக்கு இல்லை அந்த காகம் வினோதமாக அக்க்கா, அக்க்கா என்றும், பிறகு வ்வா, வ்வா என்றும் அழுத்தமாக ஒரு குழந்தை கத்தினால் எப்படி இருக்குமோ ? அப்படியே இருந்தது இது சுமார் ஒரு மாத காலமாக ஒரேயொரு காகம் மட்டும் காலை வந்து விட்டு மாலையில் போய் விடும் அந்த நேரத்தில் தில்லை அகத்து சகோ திருமதி. கீதா ரெங்கன் அவர்களிடம் பேசிக்கொண்டு இருந்த பொழுது ஸ்பீக்கரில் போட்டு கேட்கச்சொன்னேன்.

  அன்றைய இரவு உன்னை கிடத்தி இருந்த அதே இடத்தில் உறங்கினேன் நீ கனவில் வருவாய் என்ற நினைவுகளோடு உறங்கினேன் ஆனால் நீ அன்று வரவில்லை. கடந்த மூன்று இரவுகளாக உறக்கம் இல்லாத காரணத்தாலோ, என்னவோ நானும் உறங்கி விட்டேன் மறுநாள் விடிந்தும் விடியாமலும் இருந்த அதிகாலையில் எழுந்து தம்பி கண்ணனிடம் வண்டியை வாங்கி கொண்டு நீ உறங்கும் இடத்துக்கு வந்தேன் உள்ளே நுழைந்தவுடன் உன்னை அடக்கம் செய்திருந்த இடத்தில் கண்ட காட்சியால் அதிர்ச்சி. ஆனாலும் ஆச்சர்யமான சந்தோஷமே...

கூண்டுகள் சுழலும்...

23 கருத்துகள்:

 1. அக்கா காகம் அங்கே இருந்ததா ஜி ?

  பதிலளிநீக்கு
 2. கனமான நினைவுகள். அங்கு புதிதாக ஒரு பூச் செடி முளைத்திருந்ததோ...​

  பதிலளிநீக்கு
 3. ஜி! இது போன்ற கனமான பதிவுகளுக்கு தமிழ்மண வாக்கு அளிப்பது இல்லை ஜி..தவறாக நினைக்காதீர்கள்....ஓட்டுப் பெட்டியும் தெரியவில்லை என்பது வேறு விஷயம். வாசித்துவிட்டு வருகிறோம்...மீண்டும்

  பதிலளிநீக்கு
 4. உனக்கு எவ்வளவு மாலைகள்! உனக்கு எந்த நிகழ்வுகளும் நடக்காததால் மரணத்திற்கு இறைவன் பிரம்மாண்டத்தைக் கொடுத்துவிட்டானோ?// மனம் கனத்துவிட்டது ஜி!!

  பதிலளிநீக்கு
 5. கனமான நினைவுகள்...

  பதிலளிநீக்கு
 6. படிக்கும்போது மனதில் சொல்லமுடியாத உணர்வு.

  பதிலளிநீக்கு
 7. மனதை உலுக்குகிற/உருக்குகிற உணர்ச்சிபூர்வத் தொடர்.

  பதிலளிநீக்கு
 8. வருத்தமான மனம் கனக்கச் செய்யும் நினைவுகள்.ஆழமாகப் பதிந்து போயிருக்கிறது உங்களுக்கு. காலம் உங்கள் மனப்புண்ணை ஆற்றட்டும். அமரர் பூங்காவில் மறுநாள்! காலை அங்கே கண்டது என்ன? ஆவலுடன் காத்திருக்கேன்.

  பதிலளிநீக்கு
 9. உள்ளம் கலங்குது வேறென்ன சொல்ல

  பதிலளிநீக்கு
 10. ninivugal neekamara nirithu vitergal vaalthukal aya. https://horizon9994013539.blogspot.com/2017/06/blog-post_16.html

  பதிலளிநீக்கு
 11. கனமான நினைவுகள்
  ஆயினும் பகிருங்கள்
  கொஞ்சம் மனப்பாரம் இறக்கிவைத்த
  திருப்தியாவது கிடைக்கும்

  பதிலளிநீக்கு
 12. மனது கனமாகி விட்டது படித்து முடித்ததும்!

  பதிலளிநீக்கு
 13. கூண்டுகள் சுழலட்டும்.............

  பதிலளிநீக்கு
 14. மனித இனம் தோன்றியதிலிருந்து நடக்கும் நிகழ்வு இது.கலங்காதிரு மனமே என எனக்கு இந்த 68 வயதில் பெரியோர்களால் அறிவுறுத்தப் பட்டதை உங்களுடன் பகிர்வதைத் தவிர வேறொன்றுமில்லை பராபரமே. ஸ்ரீநாத்.

  பதிலளிநீக்கு
 15. இப்போதுதான் சேர்த்துப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நெகிழவைத்துவிட்டீர்கள்.

  பதிலளிநீக்கு
 16. இழப்புகள் குறித்து மீண்டும் மீண்டும் எழுதுவது உங்களை வலிமிகுந்த மனப்பழக்கத்திற்கு ஆளாக்கிவிடும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது அன்புக்கு நன்றி தோழர் சற்றே பொறுங்கள் இன்னும் சில நினைவுகளே.....
   நான் நிறைய தாங்கி பழகி விட்டேன் தோழர்.

   நீக்கு
 17. குழந்தையின் அன்புடன் பழகிய தங்கையை பிரிவது கஷ்டம்.
  அனைத்து மதத்தினரும் அன்புக்கு அடிமைதானே!
  தங்கையின் மரணத்தில் அன்பால் கூடிய கூட்டம். வனிதாவின் ஆத்மா
  அண்ணனை தேடி வந்ததோ காக்கை வடிவில் அன்பாய் கூவ

  பதிலளிநீக்கு