பல மனிதர்கள்
தான் நியாயமானவன் என்பதால் மற்றவர்களும் நியாயமாக இருக்க வேண்டும் என
நினைக்கிறார்கள் இந்த எண்ணம் பிறரின் பார்வையில் அவரை கோமாளியாக்கி விடுகிறது.
சில மனிதர்கள்
தான் நஷ்டப்பட்டு கெட்டுப் போனதால் மற்றவர்களும் கெட்டுப்போக வேண்டுமென நினைத்தால்
நாட்டில் தொழில் வளர்ச்சியின் நிலையென்ன ?
ஆ
பல மனிதர்கள்
தான் மதவாதி என்பதால் மற்றவர்களும் அதேபோல் இருக்கவேண்டும் என நினைக்கிறார்கள்
இந்த எண்ணம் பிறரின் பார்வையில் அவரை மதவெறியனாக்கி விடுகிறது.
சில மனிதர்கள்
தான் திருடன் என்பதால் மற்றவர்களும் திருட வேண்டுமென நினைத்தால் நாட்டில்
திருட்டுத் தொழில் நலிந்திடுமோ ?
இ
பல மனிதர்கள்
திடீரென பக்திமான் ஆகி விடுவதோடு மற்றவர்களும் அதேபோல் இருக்கவேண்டும் என நினைக்கிறார்கள்,
இதுவும்கூட பிறரின் பார்வையில் அவரை கேலிக்குறியவனாக்கி விடுகிறது.
சில மனிதர்கள்
தான் பணக்காரன் என்பதால் மற்றவர்களும் பணக்காரனாக வேண்டுமென நினைத்தால் நாட்டில்
தொழிலாளர்கள் கிடைக்க மாட்டார்களோ ?
ஈ
பல மனிதர்கள்
தான் ஆத்திகன் என்பதால் மற்றவர்களும் அதனைபோல் இருக்க வேண்டும் எனநினைக்கிறார்கள்
இது அவன் அயோக்கியன் ஆயினும் அவனை நல்லவனாக்கி விடுகிறது.
சில மனிதர்கள்
தான் வாக்களிப்பதில்லை என்பதால் மற்றவர்களும் வாக்களிக்ககூடாது என நினைப்பதுபோல் எல்லோரும் இருந்தால் நாடு
முன்னேற
சாத்தியமுண்டா ?
உ
பல மனிதர்கள்
தான் நாத்திகன் என்பதால் மற்றவர்களும் அதனை போலவே இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள்
இது அவன் நல்லவன் ஆயினும் அவனை கெட்டவனாக்கி விடுகிறது.
சில மனிதர்கள்
உலக நாடுகள் அனைத்தும் நமது கைக்குள் கட்டுப்பட்டு நடக்க வேண்டுமென நினைப்பதுபோல்
நடந்து விட்டால் அவனது ஆசைகள் இத்துடன் தீர்ந்து விடுமா ?
கில்லர்ஜி தேவகோட்டை
சார் நீங்க கடுமையா யோசிக்க ஆரம்பிச்சிடீங்க பேசாம நீங்க ஒரு ஆசிரமம் ஆராம்பிக்கலாம் கில்லர்ஜியானந்தா ஸ்வாமிகள் என்கிற பெயரில் சிஷ்யனாக என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள் ப்ளீஸ்
பதிலளிநீக்குநண்பர் திரு.விமல் அவர்களின் முதல் வருகைக்கு சிவப்பு கம்பளம் விரிக்கிறேன்.
நீக்குவந்தவுடன் நான் அதிகமாக சிந்திக்கிறேன் என்று சொல்லி விட்டீர்களே... தொடர்ந்தால் நலமாகும் நண்பா.
ஏற்கனவே கில்ஜியானந்தா மற்றும் கிஸ்ஜியானந்தா ஸ்வாமிகள் இருக்கின்றார்கள் இதில் நானுமா ?
உங்களை சிஷ்யராக சேர்ப்பது என்றால் இரண்டு கேள்விகளுக்கு உண்மையான பதில் தேவை.
1. வீடியோ எடுக்கத் தெரியுமா ?
2. க்ராப்ஃபிக்ஸ் தெரியுமா ?
பதிலே கேள்வி ஐயா.
பதிலளிநீக்குபதில் நான் சொல்லவில்லை நண்பா ஆலோசனையோடு கேள்விக்கணையை இணைத்திருக்கிறேன்.
நீக்குரசித்தேன். விமலின் பின்னூட்டம் ரசிக்க வைத்தது!
பதிலளிநீக்குஸ்ரீராம் ஜியின் வருகைக்கு நன்றி
நீக்குஐயையோ நம்ம ஸ்ரீராம ஸ்ரீராம்ஜி நு சொல்லி அவரையும் உங்க கூட சாமியாராக்கிடாதீங்க!!! அஹஹஹ்ஹ்
நீக்குகீதா
எல்லாரும் ராஜா என்றால் பல்லாக்கு தூக்குவது யாருங்க!?..
பதிலளிநீக்குஉடுக்கையடி உலக நாதன் வந்து தான் மந்திரிக்கோணும்!..
வாங்க ஜி சரியான கேள்விதான்
நீக்குஎன்ன யோசனை பலமா இருக்கு? ரசித்தேன். த ம
பதிலளிநீக்குவருக நண்பரே சும்மா இருக்கும் பொழுது சும்மாகாச்சுக்கும் யோசித்தேன்.
நீக்குஆகா
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குநல்ல சிந்தனை
பதிலளிநீக்குசகோவுக்கு நன்றி
நீக்குதீராது தீராது 😍😍
பதிலளிநீக்குஹா... ஹா... ஹா... நன்றி நண்பரே
நீக்குசிந்தனையின் உச்சத்திற்குப் போய்விட்டாற்போலத் தெரிகிறது.
பதிலளிநீக்குமுனைவரின் கருத்துரைக்கு நன்றி ஏதோ மனதில் தோன்றியவை.
நீக்குஎல்லாம் நல்லா இருக்கு. ஆனால் மத்தவங்களுக்காக மாறக் கூடாது! மாற்றம் தானாக வரணும்.
பதிலளிநீக்குஉண்மை சுயமாக மாறவேண்டும் அருமை சகோ
நீக்குகேள்விகள் பலம்! ஆனால் பதில்கள்? ரெட்டுக்குச் சொல்லிடலாம்...ப்ளூவுக்குச் சொல்லுவது கொஞ்சம் கடினமோ.. ரசித்தோம்
பதிலளிநீக்குகீதா: அக்கருத்துடன்.... நல்ல கேள்விகள்!!! இந்தக் கேள்விகளின் மூலகாரணம் என்னவோ மேட்டர் எல்லாம் சொல்லுதே!! புரிந்தது...கேள்வியின் நாயகனே உங்கள் கேள்விக்குப் பதி"லேது"ஐயா!! ஹஹஹ
வாங்க பதில் ''லேது'' ஹா.... ஹா... ஹா.... தெலு(ங்)கா ?
நீக்குநினைப்புதான் பிழைப்பைக் கெடுக்கும் ,சில நேரங்களில் சில மனிதர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள் :)
பதிலளிநீக்குவாங்க ஜி கருத்துரைக்கு நன்றி
நீக்குநல்லகேள்விகள்!
பதிலளிநீக்குஐயாவின் வருகைக்கு நன்றி
நீக்குயாரையாவது விட்டு வைத்திருக்கிறீர்களா ஜீ
பதிலளிநீக்குவாங்க ஐயா இப்படி கேட்டால் எப்படி சொல்வேன் ?
நீக்குபலதரப்பட்ட மனிதர்களைக் காட்சிப்படுத்திப் பல கோணங்களில் சிந்திக்க வைத்திருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குமனிதர்களின் எண்ணங்கள் பலவகைப்பட்டதற்கு அடிப்படை காரணம் மதங்களின் பிரிவினைதானே நண்பரே.
நீக்குசிந்தனையை தூண்டும் கேள்விகள்! அருமையான பதிவு! வாழ்த்துக்கள் ஜி!
பதிலளிநீக்குவருக நண்பரே நன்றி நலமா ?
நீக்குஆசை ...கடல்.... பேராசை---பெருங்கடல் போன்றது..நண்பரே...
பதிலளிநீக்குபொதுநலமாகவும் ஆசைபடக்கூடாதா ?
நீக்குஆஹாங்! கிளம்பிட்டாங்கையா,கிளம்பிட்டாங்க, கமலுக்கு போட்டியாக..
பதிலளிநீக்குஇது அப்படியா இருக்கூ ?
நீக்குநானும் அதைத் தான் நினைச்சேன்.. :-)
நீக்குதிரு. அப்பாதுரை அவர்களின் முதல் வருகை கண்டு மகிழ்ச்சி.
நீக்குஅருமை நண்பரே
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி நண்பா...
நீக்குதங்களின் கேள்விக்கான பதில்கள் ஏட்டிக்கு போட்டி என்பது போல் உள்ளது. பதிவை இரசித்தேன்!
பதிலளிநீக்குவருக நண்பரே பதிவை சரியாக புரிந்து கொண்டீர்கள்
நீக்குஅதாவது பொருந்தணும் ஆனால் பொருந்தக்கூடாது இதுதான் எனது பதிவின் மையக்கருத்து.
அருமை ஜி (from mobile)
பதிலளிநீக்குநன்றி ஜி வருகைக்கு.
நீக்கு