தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், ஜூலை 13, 2017

காட்சிக்கு நான் சாட்சி


ஒருமுறை அபுதாபியிலிருந்து... துபாய்க்கு காரில் போய்க்கொண்டு இருந்தேன் வழக்கமாக நான் முதல் ஃபாஸ்ட் டிராக்கில்தான் போவேன் பின்னால் வரும் நபர் எந்த நாட்டுக்காரராக இருந்தாலும் லைட் அடித்துக் காண்பித்தால் உடன் வழிவிட்டு மீண்டும் அவரை விரட்டிப்போய் பிடித்து அவருக்கு லைட் அடித்து வழி கேட்பதில் எனக்கு ஒரு விதமான சந்தோஷம் எப்போதுமே உண்டு.

அன்றும் அப்படி நூற்றி அறுபதில் போய்க்கொண்டு இருந்தேன் கேமரா வரும் இடம் எனக்கு முன்கூட்டியே தெரியும் அந்த இடத்தில் மட்டும் நூற்றி நாற்பதுக்கு வந்து விடுவேன் எனக்குப் பின்னால் என்னையும்விட வேகமாக வந்தவன் லைட் அடித்துக் கொண்டே வர நான் இரண்டாவது ட்ராக்குக்கு போக முடியாத சூழல் காரணம் வரிசையாக கார்கள் இத்தனைக்கும் நான் விலகுவதற்காக உடன் வலதுபுற இண்டிக்கேட்டரை போட்டு விட்டேன் சுமார் கால் கி.மீ தூரத்திற்கு விலகமுடியாத நிலையில் கார்கள் போய்க்கொண்டு இருக்க இவனும் விடாமல் லைட் அடித்து முட்டிவிடும் நிலையில் உரசுவதுபோல் வருகிறான் கண்ணாடி வழியே பார்த்தேன் நான் நினைத்ததுபோல அரபிக்காரனே ஒரு வழியாக இரண்டாவது ட்ராக் போனேன் அவனும் இரண்டாவது ட்ராக் மாறி லைட் அடித்தான், மீண்டும் மூன்றாவது ட்ராக் மாறினேன் அவனும்... நான்காவது மாற, அவனும்... ஐந்தாவது மாற, அவனும்... ரைட்டு சைத்தான் செவ்ரோலெட்டுல வருது ஓரமாக நிறுத்தி டபுள் இண்டிக்கேட்டரை போட்டு விட்டு இறங்கினேன் பின்புறமாய் நிறுத்தி விட்டு அவனும் இறங்கினான் முதலில் ஸலாம் சொல்வதுதான் இங்கு மரபு நான் சொல்ல அவன் கோபமாக கேட்டான்

லேஷ் இந்தே மாஃபி ஜீப் தரீக்... ?
ஏன் நீ வழி தரவில்லை.. ?
அனா கேஃப் ஜீப் எஹ்தர் தரீக் ஸாராக் த்தாணி மாஃபி மக்கான் அலத்தூல் ஈஜி சையாராஹ் இந்தே மாஃபி ஸூப் ?
நான் எப்படி வழி கொடுப்பது இரண்டாவது ட்ராக்கில் தொடர்ந்து கார்கள் வந்தது நீ பார்க்கவில்லை ?

அனா மோத்தன் லாசம் இந்தே ஜீப் தரீக்
நான் இந்த நாட்டுக்காரன் நீ கண்டிப்பாக வழி கொடுக்கணும்
அனா அறஃப் இந்தே மோத்தன் லேகின் அனா கேஃப் சீர் தரீக் த்தாணி ஃபோக் ?
எனக்குத்தெரியும் நீ இந்த நாட்டான் ஆனால் நான் எப்படி அடுத்த ட்ராக் போவது மேலேயா ?

லா இந்தே கலம்த் வாஜித், அனா மோத்தன்
இல்லை நீ ரொம்ப பேசுறே நான் இந்த நாட்டுக்காரன்

ஆஹா லூசுப்பக்கியில வந்துருக்கு இன்றைக்கு காலையிலே யாரு... பதிவை முதல்ல படிச்சோம் இந்த லூசை எப்படி... சமாளிப்பது ? என நான் யோசிக்கத் தொடங்கும் முன்பே சைரன் ஒலி கேட்டு கலைந்தேன் எங்கிருந்துதான் வந்தார்களோ... தெரியவில்லை அவனது காருக்குப் பின்னே விளக்குடன் இரண்டு போலீஸ்காரர்கள் இறங்கி வந்தார்கள் வந்தவர்கள் ஸலாம் சொல்லி கை கொடுத்து முதலில் என்னிடம்தான் கேட்டார்கள் அரபு மொழி போதுமே....


என்ன பிரச்சனை ?
அவர் முதலில் சொல்லட்டும் பிறகு நான் சொல்கிறேன்.
என்ன பிரச்சனை ?
இவன் ஃபாஸ்ட் ட்ராக்கில் போனான் லைட் அடிச்சுக் கேட்டால் ? வழி விடவே இல்லை நான் இந்த நாட்டுக்காரன்...
நீ சொல்லு...
தெளிவாக எல்லா விடயத்தையும் சொன்னேன்... அவனிடம் திரும்பி...
சத்தியம் செய்து சொல் இவன் சொல்வதில் பொய் இருக்கா ?
அவன் என்னை சிறிது முறைத்து விட்டு...
அல்லா மீது ஆணையாக இவன் பொய் சொல்லவில்லை
பின்னே அவன் எப்படி உனக்கு வழி கொடுப்பான் ?
நான் இந்த நாட்டுக்காரன்.
நீ எந்த நாட்டுக்காரனாக இருந்தாலும் அவன் எப்படி வழி கொடுக்கமுடியும் மேலே பறந்து போக முடியுமா ?
நான் இந்த நாட்டுக்காரன், அவன் இந்தியக்காரன் நீ அவனுக்கு ஆதரவா பேசுறே...
நான் யாருக்கும் ஆதரவாக பேசலை இதுதான் சட்டம் இப்படித்தான் பேசணும் காரை எடுத்துக்கிட்டு கிளம்பு.
அவன் போலீஸ்காரர்களை முறைத்து விட்டு அவனது காரை நோக்கிப்போக... போலீஸ் சொன்னார் என்னிடம்...
அவன் பேச்சு சரியில்லை அவன் போகட்டும் நீ கொஞ்சம் நேரம் கழித்து கிளம்பு உன்னைக்கண்டால், உனது கார் மீது மோதினாலும் மோதுவான்... நாங்க துபாய் பார்டர் வரை வருவோம்.
நன்றி ஸார்.

மூவருமே ரோட்டை விட்டு சரளிக்கற்களில் நிறுத்தியிருந்தோம் அவன் காரை எடுத்தவன் கோபத்தை ஆக்ஸிலேட்டரில் காண்பிக்க சடக்கென

‘’க்ரீச்ச்ச்ச்ச்
என்ற சத்தத்தை தொடர்ந்து...
‘’டொம்ம்ம்ம்‘’

என்ற பயங்கர ஒலியும் சரளியில் தேய்ந்த டயர்கள் ஐந்து ட்ராக்குகளையும் கடந்து தடுப்புச்சுவர் கம்பிகளை மடக்கி பேரீட்சம்பழ மரத்தை சாய்த்து காரின் பேனட் கீழே கிடக்க நல்லவேளையாக அந்த நேரம் கார்கள் தூரத்தில் வந்து கொண்டு இருந்தது ஓடிய போலீஸ்காரர்கள் கதவைத்திறந்து அரபியை வெளியில் தூக்கிக் கொண்டு வந்தார்கள் தலையிலிருந்த வட்டு காணவில்லை பெரிய அளவில் காயமில்லை முகம் அஷ்டகோணலாக இருக்க அவனை போலீஸ் காருக்கு கொண்டு வந்தார்கள் எப்பொழுதுதான் செய்தார்கள் என்பது எனக்கு தெரியவில்லை அவனது கையில் விலங்கு பூட்டி இருந்தது ஒரு போலீஸ் என்னிடம் கண்களால் பேசினார்...
போ
நான் கண்களில் நன்றி சொல்லி எனது காரை எடுத்துக்கொண்டு கிளம்பினேன் துபாயை நோக்கி....

நண்பர்களே... இதை எதற்காக சொன்னேன் என்றால் இவர்கள் நினைத்திருந்தால் என்னையும் அலைக்கழித்து இருக்க முடியும் அங்கு போலீஸ்காரர்கள் நியாயப்படி, தர்மப்படி, சட்டப்படியே நடப்பார்கள் என்பதற்கு எனது கண்முன் நடந்த இந்த சம்பவம் ஒரு சாட்சி

வல்லாஹி ஊவா மாஃபி கலம் கஸாப்
அல்லா மீது ஆணையாக இவன் பொய் சொல்லவில்லை
ஒரு முஸ்லீம் பொய் சொல்லக்கூடாது மாட்டான் என்பது இங்கு ஆணித்தரமாக நம்பப்படுகிறது உண்மையும் அதுவே அதாவது நான் சொல்வது அரபு நாட்டாருக்கு புரிந்து இருக்குமென்று நினைக்கிறேன்

அங்கு பேரீட்சம்பழம் மரத்தை சாய்ப்பது மிகப்பெரிய குற்றம் அதுவும் கன்று என்றால் கூடுதல் தண்டணை

காணொளி

49 கருத்துகள்:

 1. இதுவரை அறியாத வித்தியாசமான
  ஒரு விஷயத்தை அறிந்தேன்
  நம் ஊரில் என்றால் எல்லாமே
  நேர் உல்டாவாகத்தான் இருக்கும்
  இல்லையா ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக கவிஞரே
   உல்டாவாக போனமைக்கு காரணகர்த்தா நாம்தானே அயோக்கியன் என்று தெரிந்தே வாக்களிக்கின்றோம் பிறகு எப்படி இருக்கும் ஆட்சி,

   நீக்கு
 2. பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்குதோ இல்லையோ , தண்டனை உடனே கிடைத்து விட்டதே ஜி :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி
   எல்லாம் அபுதாபியை ஆளும் அன்னை அகிலாண்டேஷ்வரியின் செயல்தான் ஜி

   நீக்கு
 3. புதிய செய்தி! எப்படியோ இறைவன் அருளால் தப்பினீர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோ தவறு செய்யாதவர்கள் பயப்படத் தேவையில்லை.

   நீக்கு
 4. த ம +1. எமிரேட்ஸ், ஓமன், பஹ்ரைன் தேசங்களின் அனுபவத்தை நினைக்கவைத்து விட்டீர்கள். உங்களின் இந்த அனுபவமே நம்ம ஊரில் நம்பமுடியாத்தாக இருக்கும். சட்டத்ததின் முன்பு அனைவரும் ஒன்று, போலீஸ் என்பது மக்களின் நன்மைக்குத்தான், யார் வேண்டுமானாலும் தைரியமாக அவர்களை அணுகலாம், நேர்மை, நட்பு இவைகளோடு காவல்துறை நடக்கும் என்பதெல்லாம் நம்ம ஊரில் இருப்பவர்கள் கேள்விப்பட்டிராத்துதானே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே உங்களுக்கு தெரியாத விசயங்களையா எழுதப்போகிறேன் வருகைக்கு நன்றி.

   நீக்கு
  2. கில்லர்ஜி.. அப்படியில்லை. சட்டத்தைக் காக்கும் காவலர்கள், நீதிமன்றங்கள், TRAFFIC POLICE போன்ற சட்டத் தூண்கள் நேர்மையாகவும் சட்டப்படியும் நடந்துகொள்ளும்போது, குடிமக்களுக்கு எவ்வளவு தைரியமும், தாமும் நேர்மையாக நடந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணமும் வரும். நல்ல தலைவர்கள், காவலர்கள், அதிகாரிகள், எப்போதும் குடிமக்கள் நல்லவர்களாக இருக்கத் தூண்டுகிறார்கள்.

   என் நண்பன் சொன்னதை இதற்கு முன்பே எழுதிய ஞாபகம். துபாய் அபுதாபி ரோடில், வேகமாக வந்ததால், ஆளும் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர், இன்னொரு வண்டிமேல் இடித்துவிட்டார். உடனே அவர் வண்டியை நிறுத்தி (அதுதான் சட்டம்) காவலர்களுக்காகக் காத்திருந்தார். காவலர் வந்ததும், தான் வேகமாக வந்து இடித்துவிட்டேன், தவறு தன் மேல்தான் என்று சொல்லி தம் மீது குற்றத்தை ஒப்புக்கொண்டார் (அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்).

   நானும் 1993ல் துபாய் போலீஸ் ஸ்டேஷன் போயிருக்கிறேன். அப்போதுதான் தெரிந்துகொண்டேன் அவர்களது மாண்பை.

   நீக்கு
  3. அதே சமயம், பொலிட்டிகல் சம்பந்தமான விஷயங்களில் அரசர்கள் சார்பாகத்தான் போலீசார் நடந்துகொள்வார்கள், ஏனென்றால் சட்டம் அப்படித்தான் சொல்கிறது. 'அரச குடும்பத்தையோ, ஆளுவோரைப் பற்றியோ' எதுவும் புறம்பாகப் பேசுவது பெரிய குற்றம்.

   நான் இருக்கும் ஊரில் நடந்தது. இங்கு ஏழை இந்தியர்கள், பெரும்பாலும் பங்களாதேசிகள், கார்களை தினமும் கழுவுவார்கள். தினமும் ஒரு காரைக் கழுவினால், மாதத்துக்கு 1800 ரூ, வாரம் இரண்டுமுறை என்று கழுவினால் 900 ரூ. ஒருவர் பல கார்களுக்கு இந்த உதவி செய்து பணம் சம்பாதிப்பார்கள். இவர்கள் காலை 4 மணிக்கே வேலை ஆரம்பித்துவிடுவார்கள்.

   ஒரு அரபி, இப்படி கார் கழுவிய இரண்டு தொழிலாளிகளை கடுமையாக அடித்துவிட்டான். உடனே அந்த அரபியை ஜெயிலில் போட்டதுமில்லாமல், நாட்டுப் பிரதமர், அந்தத் தொழிலாளிகளுக்குப் பண உதவி செய்து, அடித்த அரபியிடம், 'இந்தத் தொழிலை நீ செய்வாயா? அப்படிச் செய்ய முடியாதபோது செய்யும் தொழிலாளிகளிடம் உன் வேலையைப் பறிக்கிறார்கள் என்று எப்படிக் கோபப்படலாம்' என்று கேட்டு கடும் தண்டனை கொடுத்ததாகச் சொல்வார்கள் (சமீபத்தில்).

   நீக்கு
  4. மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழி என்பதுபோல்தான் நண்பரே
   முன்பு எனது தளத்தில் கருத்துரை சொன்னீர்கள் உண்மையே...

   நண்பரின் கம்பெனி லேபர் பிரச்சனை விசயமாக அடிக்கடி நான் போலீஸ் ஸ்டேஷன் போய் வந்து இருக்கிறேன் அந்த அனுபவங்களை இனியும் தொடர்ந்து பகிர்வேன்.

   நண்பரே என்னைப் பொருத்தவரை எமிரேட்ஸைவிட சவூதி அரேபியாவின் சட்டங்கள் கடுமையாகவும் நேர்மையாகவும் இருக்கிறது.

   சமீபத்தில் மன்னர் மகன் துபாய் ஹோட்டலில் ஒருவரை கொலை செய்து விட்டார் தீர்ப்பு எப்படி தெரியுமா ?

   தூக்குத்தண்டனை ஆனால் பாதிக்கப்பட்டவர் எவ்வளவு பணம் கேட்தின்றாரோ.... அதை கொடுத்து விட்டால் விடுதலை செய்யலாம் ஆனால் பாதிக்கப்பட்டவர் பணம் வேண்டாம் என்று சொல்லி விட்டார் தூக்கு நிறைவேறியது மன்னர் குடும்பத்தில் சமீபத்தில் நடந்தது பத்திரிக்கைகளில் படித்து இருப்பீர்கள்.

   நம் நாட்டில் வார்டு கவுண்சிலர் சிலர் ஆடும் ஆட்டமே தாங்கவில்லை.

   நீக்கு
 5. நேர்மையான காவல்காரர்கள்
  போற்றுதலுக்கு உரியவர்கள்
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே மக்களும் நேர்மையானவர்கள் ஆகவே ஆட்சியாளர்களும் நேர்மையானவர்கள்.

   நீக்கு

 6. அந்நிலையிலும் அல்லா மீது ஆணையாகச் சொல் என்றதும் அவன் உண்மையைப் பேசியது பாராட்டத் தகுந்தது. அந்நாட்டு காவலர்களும் பாராட்டப் படவேண்டியவர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம் ஜி ‘’வல்லாஹி’’ என்ற வார்த்தையில் சகலத்தையும் அடக்கி விடுவார்கள் மதம் சொன்னதை சரியாக புரிந்து கொண்ட மனிதர்கள் அவ்வளவுதான் நான் சொல்வேன்.

   நீக்கு
 7. இதைத் தானே சொல்லி வைத்தார்கள் -
  கேடு வரும் பின்னே..
  மதி கெட்டு வரும் முன்னே!.. - என்று..

  எங்கிருந்த போதும் தர்மமே வெல்லும்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை ஜி ஆளால் நம் நாட்டில் தர்மம் வெல்லுமா ? என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றதே.....

   நீக்கு
  2. அன்பின் ஜி..

   நம் நாட்டிலும் தர்மம் வென்று கொண்டு தான் இருக்கின்றது..

   சர்வ நிச்சயமாக தர்மமே வெல்கின்றது..

   நீக்கு
  3. ஜி வெல்கிறது குற்றவாளிக்கு தண்டனை கிடைக்கும் பொழுது அவர் தாத்தாவாகி விடுவதால் தப்பித்து விடுகிறார், அல்லது இயற்கை மரணம் அடைந்து விடுகிறார்.

   தாமதமான நீதி அநீதிதானே.
   மீள் வருகைக்கு நன்றி ஜி

   நீக்கு
 8. நல்ல வேளை.....

  எந்த ஊர்க்காரராக இருந்தால் என்ன. ஒழுங்காக பயணிப்பது அனைவருக்குமே நல்லது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி கடமை தவறாதவர்கள் அங்குள்வர்கள் அதனால் அனைவருக்கும் நல்வாழ்வு.

   நீக்கு
 9. சம்பவத்தை நேரில் கண்டதுபோன்ற அனுபவத்தைப் பெற முடிந்தது. தொடக்கம் முதல் முடிவுவரை கொஞ்சமும் தொய்வில்லாமல் காட்சிப்படுத்தியிருக்கிறீர்கள்.

  பாராட்டுகள் நண்பரே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது பாராட்டுகளுக்கு நன்றி.

   நீக்கு
 10. ஜி! கேரளத்துக்காரர்கள் அங்கெல்லாம் நிறைய இருப்பதாலும்/கீதா: என் உறவினர்கள் இருப்பதாலும் அங்குள்ள சட்ட திட்டங்கள் அறிந்து ஆஹா நம்ம நாடு எப்ப இப்படி மாறும் என்று நினைத்தது உண்டு....அந்த நபர் உண்மை சொன்னதும், போலீஸ் நியாயமாக நேர்மையாக நடந்து கொண்டதும் பாராட்ட வேண்டிய விஷயம். கோபமும் குடியும் மூளையை மழுங்கடிக்கும் எனவதற்கு (இங்கு அவரது கோபம்.) இந்த நிகழ்வு உறுதிப்படுத்துகிறது. அவரது செயல்....எப்படி முடிகிறது பாருங்கள்....

  சரி கொஞ்சம் நம்ம நாட்டில் இதனை அப்படியே கற்பனை செய்து பாருங்கள்...உங்களுக்கு ஒரு பதிவு கிடைக்கும் ஹஹஹ...

  நல்ல அனுபவம் ஜி....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதாவது அங்குள்ளவர்கள் லஞ்சம் வாங்குவதை பிச்சை எடுப்பது போன்று உணர்கின்றார்கள் ஆகவே நேர்மை தானாகவே வந்து விடுகின்றது.

   மேலும் அல்லா மீது ஆணையிட்டு சத்தியம் செய்த பிறகு பொய் சொல்ல பயப்படுகின்றார்கள் நாம் சத்தியம் சக்கரைப் பொங்கல் என்போம்.

   நீக்கு
 11. மற்றோன்று....அங்கு மரத்திற்கும் மரியாதை பாருங்கள்...இங்கு எவ்வளவு மரங்கள் வெட்டப்படுகின்றன....சந்தனம், தேக்கு, செம்மரம் என்று.....ஆனால் வெட்டுபவர்கள் சுக போகத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறார்கள்..ஹூம் என்ன சொல்ல...அவர்கள் வெறும் எண்ணை, ஈச்சம் பழம், வறண்ட பூமி...பாலைவனம் வைத்துக் கொண்டு எப்படி வளர்கிறார்கள்...இங்கு இல்லாத வளமா..காரணம்? அந்த நேர்மை...கட்டுப்பாடு...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவன் சாப்பிடும் பொழுது பக்கத்தில் யார் நின்றாலும் உட்கார்ந்து சாப்பிடு என்று சமபந்திக்கு அழைப்பான் நமது நாட்டில் ?

   மனிதனை மனிதனாக பார்ப்பதை நான் அங்குதான் படித்துக் கொண்டேன்.

   நீக்கு
 12. இதுவல்லவோ நியாயம்...

  நம் நாட்டை நினைத்தால்... ம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி எல்லாம் தேர்வு முறைகள் ஜி மன்னர் வழியே மக்கள் வழி.

   நீக்கு
 13. இதுவே..இந்தியாவில் இருந்தால்...............

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பிழைக்க வந்த வெளிநாட்டுக்காரனை பாஸ்போர்ட்டை வாங்கி கொண்டு மிரட்டி, டாலரை வாங்கி விட்டு, உள்நாட்டுக்காரனை செவுலில் ரெண்டு வைத்து கையில் உள்ளதை பிடுங்கி கொண்டு இன்றைய வருமானம் இவ்வளவுதான் என்று வீட்டுக்கு போவார்கள்.

   நீக்கு
 14. மனிதமும், நேர்மையும் இருப்பதை உணரமுடிந்தது. உங்கள் பதிவு பலருக்குப் பாடங்களாக அமைகின்றன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முனைவர் அவர்களின் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி

   நீக்கு
 15. நேர்மையான காவலர்கள் பாராட்ட வேண்டும்.

  பொய் சொல்லாத ஆனால் கோபத்தை அடக்கமுடியாமல் அவர் பட்ட கஷ்டம் ! படிப்பினை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ எத்தனை காவலர்களை பாராட்டுவீர்கள் 90 சதவீதம் காவலர்களும் இப்படித்தான் மீதி 10 சதவீதத்தினரும் குணாதிசயங்களின் காரணமாக தலைக்கனம் இருந்தாலும் கடமையில் நேர்மையாகவே இருப்பார்கள் காரணம் இவர்களின் உறுதிமொழிகள் அனைத்துமே குர்ஆன் வழி நன்றி சகோ.

   நீக்கு
 16. தெரியாத தகவல்கள் நன்றி ஜி

  பதிலளிநீக்கு
 17. கடந்த ஒருவாரமாக பொலிஸும் வீடுமாய் அலையும் சூழலில் உங்கள் பதிவு வந்துள்ளது.எல்லா பொலிஸும் கெட்டவர்கள் இல்லைதானே? நல்ல பொலிஸும் உண்டு. நம்மூரிலும் உண்டு, நாம் தான் அவர்களை நல்லவர்களாக தொடர விடுவதில்லையே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நம்ம ஊருக்கும், இவர்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு நம்மவரில் 10% நல்லவர்கள் இவர்களில் 10% கெட்டவர்கள்.

   அவர்களின் உறுதிமொழி மதரீதியாக எடுக்கப்படுகிறது.

   நீக்கு
 18. அபுதாபிப் பேரிச்சம்பழம் மரத்திற்கு
  இந்நிலை என்றால்
  சேலம் மாம்பழம், கறுத்தக்கொழும்பு மாம்பழம்
  மரங்களிற்கு எந்நிலை வரும்?
  மரங்களை அழித்து
  மழையை நிறுத்தும்
  நம்மவர் நிலையை எப்படிச் சொல்வேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சேலம் மாம்பழம், கருத்தக்கொழும்பு மாம்பழம் கிடக்கட்டும் முதலில் மனிதர்களை மனிதர்களாக மதித்தால் போதுமே...

   நீக்கு
 19. ‘தன் வினைத் தன்னைச் சுடும்’ என்பது அந்த அரபிக்காரருக்கு புரிந்திருக்கும். தங்களின் அனுபவத்தை அருமையாய் பகிர்ந்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்! இது போன்ற அனுபவங்களை அறிய காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரின் கருத்துரைக்கு நன்றி.
   தொடர்ந்து எமது அனுபவங்கள் வரும்.

   நீக்கு
 20. அனுபவப் பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 21. ஆச்சரியம். துபாய் போலீஸ் மற்ற மத்தியக்கிழக்கு காவல் துறையை விட மேல் போலிருக்கிறது. அரபி தெரிந்திருந்தால் பிழைத்தீர்களோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே உலகத்தரத்துக்கு போட்டி போடத்தகுதியானவர்கள்.

   நீக்கு