தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, அக்டோபர் 22, 2017

அர்த்தமென்ன ?


ம் நாட்டில் பெரும்பாலானவர்கள் இறைவணக்கம் செய்கின்றார்கள் அப்படி என்றால் இறைவனை நம்புவதாகத்தானே அர்த்தம் கோயிலுக்குப் போகின்றார்கள் அங்கு சாதி அடிப்படையில் தனக்குத்தான் முதல் மரியாதை தரவேண்டுமென பிரச்சனையை கிளப்பி அடி, உதை, வெட்டு, குத்து என்று போய் பல உயிர்கள் கொலையில் வந்தும் முடிகிறதா ? இல்லை மீண்டும் அதையே காரணமாக வைத்து தொடர்கிறது.... பல ஊர்க்கோயில்களில் தேரோட்டம் நிறுத்தப்பட்டு இறைவனையே பல வருடங்களாக சிறை வைத்தும் பூட்டி இருக்கின்றார்கள் உண்மைதானே.... இதை சமூகத்தை சாக்கடையாக்கிய திரைப்படங்களிலும் கூட நாம் கண்டு இருக்கின்றோம்.

இந்த இடத்தில்தான் நாம் சிந்திக்க வேண்டிய விடயம் இருக்கிறது இறைவனிடம் பயமில்லாமல் மனிதன் இத்தனை ரத்தக்களரி விளையாட்டு விளையாடுகின்றான், இறைவனும் இதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கின்றார்ன் நண்பர்களுக்கு... அரசன்.சே அன்று கொல்வார் தெய்வம் நின்று கொல்லும் அப்படினு வசனம் சொல்லக்கூடாது இந்தக் கொலைகள் தொடர்கதை ஆவதற்கு இறைவனும் ஒரு காரணமே ஆம் தேவர் பிலிம்ஸ் திரைப்படங்களில் வந்தது போல... அரபு நாட்டில் பொது இடத்தில் நடந்த கொலைக் குற்றவாளிக்கு மூன்றே வாரங்களில் வழக்குகளை முடித்து தூக்குத்தண்டனை கொடுத்ததுபோல... இறைவனும் இதை செய்திருந்தால் ? ? ? அன்றே திருவிழாக் கொலைகள் மட்டுமல்ல இதர தெருக்கொலைகளும் நடக்காது ஏன் ? மதவாதக் கொலைகளும் நடக்காது மதக்கொள்கைகளும் ஒரு மூட்டைப்பூச்சி மாதிரிதான் மதச்சாயத்தை பூசிக்கொண்டால் அவை நமது ரத்தத்தை உறிஞ்சிக் குடித்து விடும்.


இன்றளவும்கூட மும்பையில் வெறும் பத்து ரூபாய்க்காக கொலைகள் நடந்திருக்கின்றது... நடக்கின்றது ஆம் தவறான கணிப்பில் இவனிடம் பணமிருக்கும் என்று கருதி கொலை செய்து விடுகிறான் பிறகு சோதித்துப் பார்த்தால் வெறும் பத்து ரூபாய் இதற்காக அவன் வருந்தப் போகின்றானா ? இல்லை திருந்தப் போகின்றானா ? பத்தோடு பதினொன்று அத்தோடு இதுவொன்று என ரயில் தண்டவாளத்தில் கிடத்தி விட்டு போய் விடுகிறான் அது தற்கொலைக் கணக்கில் மூடப்படுகிறது உண்மைதானே... நண்பர்களுக்கு இது கலிகாலம் என்று சொல்லக்கூடாது கொலையாளிக்கு மறுநாள் முதல் சிறையில் உணவு களிதான் என்ற நிலைப்பாடு இருந்தால் இந்தக் கொலைகள் மட்டுமல்ல எந்தக் கொலைகளும் நடக்காது. இங்குதான் பணத்தை அடித்தால் ஷாப்பிங் போய் வரமுடிகிறதே... ஆக தடுக்க வேண்டிய இறைவனும் தடுக்காமலிருக்கும் சூழலில் நிறுத்த வேண்டிய மனிதனும் நிறுத்தாமலிருக்கும் இந்த வேளையில் இறை வணக்கத்தின் அர்த்தம் என்ன ? (அவ்வ்வ்வ்வ்வ் தலைப்பு வந்துடுத்து) எனக்கு இந்தக் குழப்பம் விபரம் அறிந்த 2 ¾ வயதிலிருந்தே இருக்கிறது.


மன எண்ணங்களில் அழுக்கோடும் நடைமுறை வாழ்வில் அக்கிரமங்களோடும் இறைவனை வணங்கி வாழும் மனிதன், என்னை சோதிக்கின்றாய் என்று இறைவனிடம் போய் பொய் சொல்கின்றான், இது முரண்பாடு இல்லையா ? இந்தக் காரணங்களே என்னை ஆத்திகத்திலும் நாத்திகத்திலும் சேர்க்காத விசித்திகனாக வாழவைத்துக் கொண்டு இருக்கின்றது இறைவணக்கம் செலுத்தாதவன் எப்படியும் வாழட்டும் இறைவனை வணங்குபவன் மனிதநேயமுள்ள அப்பழுக்கற்றவனாக ஒழுக்கசீலனாக வாழவேண்டும் அவனே மனிதனாக இறைவனிடம் சரணடைய முடியும்.

நல்லதை நினை நன்மை நடக்கும்
தொண்டு செய் மேலான நிலை அடைவாய்.
- சிவமுத்தர் ஸாது ஸ்வாமிகள் குடமுருட்டி

1988-ல் தேவகோட்டை சகோதர நண்பர்கள் தெய்வத்திரு. தி. முத்துச்செழியன், திரு. கோ. கணேசன் அவர்களுடன் பரமக்குடி அருகிலுள்ள அபிராமம் மேலக்கொடுமலூர் என்ற ஊருக்கு அடுத்து இருக்கும் குடமுருட்டி என்ற சிறு கிராமத்தில் ஒரு வித்தியாசமான அரிஜனர் வகுப்பைச் சேர்ந்த அர்ச்சகரோடு வினோதமான ஐயப்பன் கோயிலில் நான் கண்ட பொன்மொழி அன்றுமுதல் இதை ஆத்மார்த்தமாய் உணர்ந்து இதன் வழியே இன்றுவரை நான் நடைபோடுகின்றேன்... நடைபோடுவேன்... கடைசிவரை...

காணொளி

77 கருத்துகள்:

  1. ​குற்றவாளிகளுக்கு உடனடி தண்டனை குற்றங்களைக் குறைக்கவும் உதவும். வேண்டாதவர்களை சரியான விசாரணை இன்றி முடிக்கவும் உதவும்.. ஜனநாயக நாடுகளில் இது ஒரு சங்கடம். இங்கு பாதிக்கப்பட்டவர்களைவிட, குற்றவாளர்களைக் காப்பதற்கும் வக்காலத்து வாங்குவதற்கும்தான் மனித உரிமை அமைப்புகள் இருக்கின்றன. மனிதனாய்ப் பார்த்துத் திருந்தா விட்டால் குற்றத்தைக் குறைக்க முடியாது. ஒருவர்மனத்தில் ஒன்பதடா என்று வாய்ப்பு கிடைக்கும்வரை பெரும்பாலானோர் நல்லவராகவே காட்சி அளிக்கின்றனர்!

    காணொளி பார்த்திருக்கிறேன் - பாடல் இல்லாமல்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஸ்ரீராம் ஜி
      உங்களது கருத்திலும் அர்த்தம் உண்டு அதேநேரம் பொதுவெளியில் கொலை செய்தவனின் குற்றத்தை நிரூபிக்க இவ்வளவு காலம் ஆகின்றதே இது சட்டமா ?

      நீக்கு
  2. ஹாஹாஹா, கில்லர்ஜி! நீங்களுமா? இறைவன் எதைத் தடுக்கணும்னு சொல்றீங்க? வெறும் பிக் பாக்கெட்டை மட்டுமா? அப்படிப் பார்த்தால் எத்தனை அப்பாவிப் பெண்களைக் கூட்டமாகப் பாலியல் கொடுமை செய்கின்றனர்! இதை எல்லாம் இறைவனா செய்யச் சொல்கிறான்? அவர்களை அவன் எதுவும் தண்டனை கொடுக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதும் சரியல்ல. உரிய காலம் வருகையில் அவர்களுக்கான தண்டனை கிடைத்தே தீரும். இப்போதைக்கு இது தான்! மறுபடி வருவேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ நீங்கள் சொல்வது அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்றும் கொல்லும் என்பதுதானே...

      குற்றங்களை நான் வரிசைப்படுத்தவில்லை காரணம் அவ்வளவு குற்றங்கள் நம்நாட்டில் நிகழ்கின்றது வருகைக்கு நன்றி சகோ.

      நீக்கு
  3. பொன்மொழியைத் தொடருங்கள். நம் மனதிற்குப் பிடித்த வழியில் செல்வதே சரி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவரின் ஆலோசனைக்கு நன்றி நிச்சயம் கை விடமாட்டேன்

      நீக்கு
  4. +வாக்கிட்டேன் ,கருத்துக்கு அப்புறமா வாரேன் ஜி :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம் இருவருக்கும் இதுவரை இந்த வாக்கிட்டேன் என்ற வார்த்தைகளை பற்றி எழுதுவதில்லை இன்று எழுதுவதற்கு பிரத்யேக காரணம் உண்டா ஜி ?

      நீக்கு
    2. ஹா ஹா ஹா பகவான் ஜீ நலம்தானே???:).. பத்திரமா கையை உத்துப்பார்த்து:) தம் அப்:) க்கு வோட் போட்டிருக்கிறாராம் என விளக்கமாச் சொல்றார்:)... எவ்ளோ பெரீய மனசூஊஊஊஊஊ:)..

      இப்போ புரிந்ததோ கில்லர்ஜி:)...

      நீக்கு
    3. மனதைக் காயப் படுத்தியிருந்தால் மன்னியுங்கள் ,நம் நட்பு வட்ட நண்பர்களிடம் என்னைத் தனிமைப் படுத்த சதி நடக்கிறது ,அதனால்தான் இப்படி சொல்ல வேண்டியதாய் இருக்கிறது ஜி :)

      நீக்கு
    4. என் அறிவுக்கு எட்டியவரை எந்தச்சதியும் நடக்கவில்லை தாங்களாகவே சில பிரச்சனைகளை தங்களுக்கு உருவாக்கி கொண்டீர்கள்.

      நீக்கு
    5. கில்லர்ஜி சொல்வது உண்மைதான் பகவான் ஜீ... நீங்கள் அனைத்தையும் கிட்னிக்கு எடுத்துப் போய்ச் சிந்திக்கிறீங்க.. அப்படியெல்லாம் எதுவுமே இல்லை... இவற்றை எல்லாம் மனத்தோடு விட்டு விடுங்கள்..:)

      மைனஸ் வோட் என்பது, நான் பார்த்த இடங்களில் ஸ்ரீராம் தவிர்த்து ஏனைய அனைவருக்குமே விழுந்திருக்கு...:) இதனால யாருமே பின்னடையவோ கவலைப்படவே இல்லையே... நோர்மலாகத்தானே இருக்கினம்... நீங்கள் மட்டும் எதுக்கு குழம்புறீங்க....

      ஒரு வெற்றி என்பது, நாம் எதிர்பார்க்கும் வெற்றி கிடைத்தால் மட்டுமே வெற்றியாகும்.... அதாவது ... எதையாவது சொல்லி உங்களை வலை உலகில் இருந்து தனிமைப்படுத்துவதே சிலரின் நோக்கம் எனில்..... அதை ஏன் நீங்க நிறைவேற்றி அவர்களுக்கு வெற்றியைக் கொடுக்கிறிங்க.... நீங்க முன்புபோல கலகலப்பா தொடருங்கோ யாரையும் திட்ட வேண்டாம்...
      நம் வாழ்க்கைப் பயணத்தில் கல்லு முள்ளு எல்லாம் இருக்கத்தானே செய்யும் அதுக்காக பயணத்தை நிறுத்துவது சரியா?:)..

      நீக்கு
    6. ஆமாம் பகவான்ஜி .. எல்லாத்தையும் பாசிட்டீவ்க்கா எடுத்துக்கோங்க .அந்த மைனஸ் எல்லாம் நமக்கொரு பொருட்டே இல்லைனு தூக்கி போட்டு மீண்டும் ஆரம்பிங்க கலகலன்னு ...

      நீக்கு
    7. அஞ்சூஊஊஊ நீங்களும் வோட் பொக்ஸ் வையுங்கோவன் பிளீஸ்ஸ்ஸ்ஸ்:)

      நீக்கு
    8. நான் காத்து வாக்கில் கேள்விப்பட்டேன் :) எனக்கும் சேர்த்து உங்களுக்கே அந்த மைனஸ் விழப்போதாம் :)

      ஹஆஹாஆ ஜஸ்ட் கிட்டிங் :) இந்த மைனஸிலாம் நமக்கொரு பொருட்டு இல்ல :) நாங்கல்லாம் செத்து செத்து விளையாடற டைப்
      ஜாலியா எடுத்துப்பேன்

      நீக்கு
    9. இனி நானும் உங்களைப் போலத்தான், ஜாலியா எடுத்துக்கிறேன் :)

      நீக்கு
  5. இறைவனின் பெயரால் நடக்கும் மோதல்கள் வேதனைதான் நண்பரே
    தம+1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே மக்கள் இன்னும் தெளிவு பெறவில்லை என்பதே உண்மை.

      நீக்கு
    2. அந்த கடவுள் இருந்தால் இப்படி மோதல் நடக்க விடாமல் தடுத்து இருப்பாரே :)

      நீக்கு
    3. தடுத்தால் நலமாகும் என்பதே அனைவரது விருப்பம் ஜி

      நீக்கு
  6. அன்பின் ஜி..

    நான்காண்டுகளுக்கு முன் நோன்பு காலத்தில் சாப்பிட்டு விட்டார்கள் என்று தன் வீட்டில் வேலை செய்த இரண்டு பேரை சுட்டுத் தள்ளி விட்டான் - அரபி..

    போலீஸ் வந்து அவனைப் பிடித்தது..
    ஆயினும் - அவனை மனநோயாளி என்று விட்டுவிட்டார்கள்..

    நீதியும் தண்டனையும் யாருக்கு?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜி இது யாருக்காக என்று அந்த அரபி அவர்களை சுட்டுக்கொன்றாளோ.... அவனுக்கு இது அநியாயம் என்று தெரியாதா ?

      மனிதர்களிடம் இருந்து தப்பலாம் நாளை இறுதிநாள் உண்டு என்று சிலர் இதற்கு பதில் சொல்லலாம்.

      நீக்கு
  7. நல்லதை நினை நன்மை நடக்கும்...

    உண்மை வரிகள்...

    நம் எண்ணத்திபடி தான் நம் வாழ்வு அமையும்...

    நான் கூறும் எண்ணம் என்பது ஆழ்மனத்திலிருந்து வரும் எண்ண அலைகளை...வெறும் வெளி பார்வையில் அடுத்தவருக்காக நினைப்பதை அல்ல...

    பதிலளிநீக்கு
  8. கில்லர்ஜி இதற்கு பதில் சொல்ல வேண்டும் என்றால் நிறைய நீளும். கொஞ்சமாக...நான் உங்கள் பதிவுகளில் ஏற்கனவே இட்டதுதான்..... இறைவன் என்பதைப் பற்றி நமக்கு வழி வழியாகப் பல தவறாகப் போதிக்கப்பட்டதனால், (அதாவது "சாமி கண்ணைக் குத்தும்" என்பதிலிருந்து தொடங்கலாம்).... பொதுவாக எல்லோருக்கும் வரும் கேள்விகள் இவை.
    எனக்கும் எழுந்தவையே கல்லூரிக் காலத்தில் அதன் பின் ஒரு சில வாசிப்புகளினால், அனுபவங்களினால், .. இறைவனுக்கும் இங்கு நடப்பவற்றிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. உலகில் இங்கு பொதுவாகப் பேசபடுவதென்றால் எல்லாமே அவன் செயல் என்று. அப்படி என்றால் நமக்கு நல்லது நடந்தால் பேசாமல் இருக்கிறோம்...கெட்டது நடந்தால் இறைவனைப் பழிக்கிறோம்...இவ்வளவுதான் நாம் இறைவனைப் புரிந்து கொண்டது...ஆனால் அந்த சக்தி இதற்கெல்லாம் அப்பாற்பட்டது என்ற புரிதல் வெகு குறைவு..நான் கண்டிப்பாத அரசன் அன்று கொல்லும் தெய்வம் நின்று கொல்லும் என்பதைச் சொல்ல மாட்டேன்..சரியான புரிதல் இல்லாததால் தான் இதைக் குறித்து ஆத்திகம் நாத்திகம் இறைவன் என்ற பெயரில் சச்சரவுகளும் வருகிறது....அந்த சக்தி இதற்கும் அப்பாற்பட்டது என்ற புரிதலால் நான் இதைச் சொல்கிறேன்... அது தனி.... இங்கு நீங்கள் கொடுத்திருக்கும் அந்த வாசகம் அழகான வாசகம். அதைத்தான் இறை வாசகமாக எல்லா மத ஸ்க்ரிப்சர்ஸும் சொல்லுகின்றன. அதைத் தொடரவும்....உங்கள் மனசாட்சியின் வழி நடங்கள்...வாழ்த்துகள் கில்லர்ஜி..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அழகான விளக்கவுரை அதற்கு முதலில் நன்றி.

      இறைவன் விவகாரத்தில் எல்லா மனிதர்களும் முதலில் சரியான புரிதலுக்கு வரவேண்டும். - கில்லர்ஜி

      சிவாதாமஸ்அலி-
      எப்படியய்யா... வரமுடியும் ? கண்ணுக்கு முன்னே அநியாயமாக சொத்து சேர்த்து வாழும் அரசியல்வாதியை தியாகி என்று கூவும் இந்த கூறுகெட்ட குக்கருகள் கண்ணுக்கு காணவே இயலாத இறைவனைப்பற்றி ஒருமித்த கருத்துக்கு வரமுடியுமா ?

      சாம்பசிவம்-
      மூதாதையர் சொன்ன கல்சிலையை இறைவணக்கம் செய்யிறான், மக்களுக்கு துளியும் உழைக்காத சோத்தை தின்னுட்டு பீயைப் பேளும் சாமியார்களை வணங்குறான், அவனை ரஞ்சிதா மேடத்தோட கண்ட பிறகும் வணங்குறான், அரசியல் தலைவனுக்கு சிலை வைத்து வணங்குறான், சினிமாவில் பல விபச்சாரிகளோடு இணைந்து கட்டிப்பிடித்து ஆடிய கூத்தாடியை வணங்குறான், குடிகாரத் தந்தை இறந்த பிறகு அவனையும் இறைவனாக்கி வணங்குறான் இதுல ஏதாவது நியாயமுண்டா ?

      Chivas Regal சிவசம்போ-
      மனசாட்சிக்கு பயந்து வாழுங்கடா தவறுகளே தடம் தெரியாமல் அழிந்து போகும்னு நாம சொன்னால் குடிகாரமட்டைன்னு சொல்லுவாங்கே...

      நீக்கு
    2. ஹா ஹா ஹா எப்பவும் சிவாஸ் ரீகல் சிவசம்போ அங்கிளுக்கே என் மொத்த வோட்ஸ்:).

      நீக்கு
    3. மோடியும் அங்கிள், சிவாஸ் ரீகல் சிவசம்போவும் அங்கிளா ? நல்லவேளை மதுரைத்தமிழன் இதைப் படிக்கவில்லை.

      நீக்கு
    4. ஹா ஹா ஹா அப்போ சிவசம்போ அங்கிள்:) மோடியை விட வயசானவரோ??? ஐயா என அழைக்கோணும்போல இரூக்கே:).. இப்போ மீ கொயப்பத்தில:) இருக்கேன்:)

      நீக்கு
    5. மோடியைவிட இளையவர்தான் விரைவில் வருவார்.

      நீக்கு
  9. மனித உளவியல் சிக்கலானது.எத்தகைய வன்முறைக்கும் அதர்மத்திற்கும் நியாயமான காரணம் இருப்பதாக நம்பப் படுகிறது. எது நன்மை எது தீமை என்பதை பிரித்தறிவதில் சிக்கல் உள்ளது .மனிதனைப் பொறுத்தவரை நல்லவை என்பது மனிதனுக்கு நன்மை பயப்பவை மட்டுமே.மனித இனம் சிக்கலின்றி அமைதியாக வாழவேண்டும். அநியாயங்களை கடவுள் அழிக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே //பிரித்தறிவதில் சிக்கல்// இதுதான் உண்மை கீழே திரு. புலவர் ஐயா அவர்களும் இதையே சொல்லி இருக்கின்றார்கள்.

      நீக்கு
  10. இன்று சட்டமோ, போடும் திட்டமோ எதுவும் செயல் படாது இறை வழிபாடு என்றால் எது என்றே தெரியாத மக்களே அதிகம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா உண்மையான வார்த்தை சொன்னீர்கள்.

      நீக்கு
  11. பலருக்கும் சரியான புரிதல் இல்லை விளக்க முயன்றால் அங்கும் சரியாகப் புரிந்து கொள்ளப்படுவது இல்லை எல்லாசெயலுக்கும் மனசாட்சியைத் துணைக்கழைப்பார்கள் அதற்கும் சரியான அளவுகோல் இல்லை அவரவர் இஷ்டப்படி வியாக்கியானம்செய்யலாம் கடவுள் என்பதே ஒரு கோட்பாடு நல்லவர்களாக இருக்கச் செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு விஷயம் அவரவர் போக்கில் அதற்க் அர்த்தம் சொல்வார்கள் அவர்களுக்கு பிடிக்க வில்லை என்றால் கச்சை கட்டிக் கொண்டு வருவார்கள்
    காணொளி நன்றாக இருக்கிறது எந்த இடம் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா அழகான விளக்கம் தந்தீர்கள் இதுதான் நடைமுறை உண்மை வருகைக்கு நன்றி.

      காணொளி கண்டமைக்கு நன்றி

      இது தேவகோட்டை என்று சொன்னால் சமூகம் ஏற்காது ஆகவே எடுத்த இடத்தை சொல்கிறேன் சைனா நாட்டில் சாதனைக்காக மலையின் உச்சியில் இக்கோவிலை உருவாக்கி இருக்கின்றார்கள் இதுவே உண்மை.

      நீக்கு
  12. கில்லர்ஜி... நம்ம நாட்டு சட்டம், ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்ற அடிப்படையில் அமைந்தது. அதனால் அதனைப் பற்றி விசனப்பட்டு உபயோகமில்லை.

    கடவுள் எல்லாவற்றிர்க்கும் சாட்சி. எப்போது பொறுக்கமுடியாத தவறு நிகழ்கிறதோ அப்போதுதான் உடனடியாக தண்டனை தருவான். மற்ற எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அவன் பார்த்துக்கொண்டுதான் இருப்பான்.

    பெரும்பாலான மக்கள் 'கடவுள்' என்றால் என்ன என்றே தெரியாமல்தான் வழிபாடு அது இதுவென்று செய்கிறார்கள். சக மனிதனை மதிக்கத் தெரியாமல் கடவுளை வழிபட்டு என்ன பிரயோசனம்? அனைத்தும் அவன் படைத்தது என்று நம்பும் நாம், அவனுடைய படைப்பையே குறை சொல்வது, அவனைக் குறைசொல்வது போன்றதல்லவா? அப்படிச் செய்துவிட்டு அவனை வழிபட்டு என்ன பிரயோசனம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே அழகான விளக்கமளித்தீர்கள்

      //கடவுள் என்றால் என்னவென்றே தெரியாமல்தான் வழிபாடு நடக்கிறது// நிதர்சனமான உண்மை

      வருகைக்கு நன்றி

      நீக்கு
  13. ஆஆஆவ்வ்வ்வ் கில்லர்ஜிக்கு ரெண்டெ முக்கால்ல்ல்ல்ல் வயசிலேயே விபரம் வந்தமையாலதான் மூணு:) வயசில அரிவாள் தூக்கினாரோ:)..?.. படம் போட்டிருந்தீங்களே முந்தின பதிவில்:)...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரவாயில்லையே உங்களது கண்களுக்கு எதுவும் தப்ப முடியவில்லை.

      நீக்கு
  14. கடவுள் இருக்கார் கில்லர்ஜி:)...
    அவர் ரொம்ப பிஸி:)... அதனால.... ச்சும்மா ச்ச்ச்சும்மா நடக்கும் குச்சு மிட்டாய் குருவி ரொட்டிச் சண்டைக்கெல்லாம் தலையிட மாய்ட்டார்ர்ர்ர்:)...

    தன்னால அனைத்தையும் தட்டிக்கேய்க்க:) முடியாதெண்டுதான் அப்பாவி அதிராவைப்:) படைச்சார்ர்ர்ர்ர்:)...
    மீ இருக்கே ன்ன்ன்ன்ன்ன் :).... அனைவரையும் கிழவி கேய்ப்பேன்ன்ன்ன்ன்:) ஹையோ இப்பவே டங்கு ஸ்லிப் ஆகுதே:)....
    கில்லர்ஜி ... இப்பயும்:) வியக்கீங்களோ?:) அதிராட அறிவைப் பார்த்து?:) ஹா ஹா ஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யாரு வேண்டாம்னு சொன்னா....
      இருந்தால் நல்லதுனுதானே உங்க அங்கிள் கமல்ஹாசன்கூட சொன்னாரே...

      நீக்கு
  15. அரசன் அன்றறுப்பார்... தெய்வம் நின்றறுக்கும்.....

    மெலியாரை வலியார் கேட்டால்... வலியாரைத் தெய்வம் கேய்க்கும்:)....
    இவை உண்மை கில்லர்ஜி...

    பதிலளிநீக்கு
  16. மனிதனுக்கு மனிதன் மரியாதை கொடுத்தாலே அனைத்துப் பிரச்சனையும் ஒழியும்...
    காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பது.... மதம், சாதி, அனைத்துக்கும் பொருந்தும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை இதைத்தான் மேலே நண்பர் திரு. நெ.த.வும் சொல்லி இருக்கின்றார்.

      நீக்கு
    2. கில்லர்ஜி, மொபைலூடாக வந்துபோவதாலும், லிங் இல்லாமையாலும் வோட் போட மறந்தே போயிட்டேன்.. இப்போதான் நினைவு வந்து ஓடிப்போய்ப் போட்டேன்ன்ன்...

      நீக்கு
    3. நன்றி மீள் வருகைக்கும்.

      நீக்கு
  17. "அரசன் அன்று கொல்வான்! தெய்வம் நின்று கொல்லும்!" என்பதற்கான உதாரணமாகத் திகழும் ஓர் சம்பவத்தைக் கடந்த இரு நாட்களில் கேட்டேன் கில்லர்ஜி! நினைக்க நினைக்க வேதனைப்பட வைத்த விஷயம் அது! :( நம்புபவர்கள் நம்பலாம்! எல்லாவற்றுக்கும் மேலான ஓர் சக்தி இருப்பதால் தான் இப்படி நடக்கிறது என நான் நம்புவது இன்னும் அதிகரித்திருக்கிறது என்றே சொல்லலாம்! மற்றபடி கடவுளிடம் பயம் எல்லாம் இல்லை. பயபக்திக்கும், மூட பக்திக்கும் வித்தியாசமே இல்லை! என்னைப் பொறுத்தவரை நாம் ஒருவருக்கு என்ன செய்கிறோமோ அது பலமடங்கு வேகத்துடன் நமக்குத் திரும்பி வருகிறது! பூமராங் மாதிரி! இதை இறைவன் தான் செய்கிறான் என்று சொல்லிக் கொள்ளலாம்! அவ்வளவு தான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னைப் பொருத்தவரை நம்மை மீறிய ஒரு சக்தி உண்மை இதில் தங்களைப் போலவே எனக்கும் நம்பிக்கை வலுப்பெற்று வருகிறது இதற்காகவே அந்த சக்தி என்னை வாழ்க்கையில் கசக்கி பிழிகிறதோ என்னவோ....


      நாம் ஒருவருக்கு செய்யும் உதவி நிச்சயமாக ஏதோவொரு வகையில் நமக்கு திரும் கிடைக்கிறது, அல்லது நமது சந்ததிகளுக்கு கிடைக்கிறது.

      சிவமுக்தர் ஸாது ஸ்வாமிகளும் இதையே வலியுறுத்துகிறார்

      பசியால் வாடுபவனுக்கு செய்யாமல் இறைவனுக்கு பூஜிப்பதற்கு செலவு செய்வதை அதே இறைவன் ஏற்றுக் கொள்ளமாட்டார் என்பதும் எமது கருத்து மட்டுமல்ல நம்பிக்கையும்கூட

      மீள் வருகைக்கு நன்றி

      நீக்கு
    2. சம்பவத்தைச் சொல்லவில்லையே கீதா சாம்பசிவம் மேடம்?

      கில்லர்ஜி - ஆங்கோர் ஏழைக்கு அறிவுப் பசியைத் தீர்ப்பது ஆலயம் வைப்பதை விட நல்லது.

      நீக்கு
    3. ஆம் நண்பரே நிதர்சனமான உண்மை. மீள் வருகைக்கு நன்றி

      நீக்கு
    4. சம்பவத்தைச் சொல்வதில் சங்கடங்கள் இருக்கிறது நெ.த. அவர்களே! :(

      நீக்கு
  18. பிறருக்குச் செய்யும் தீங்கோ நன்மையோ, சுடு சொல்லோ கெடுதல்களோ, நன்மைகளோ எதுவாக இருந்தாலும் அதன் பின் விளைவுகள் நம்மைத் தாக்காமல் இருப்பதில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயமாக இதை நான் நம்புகிறேன் ஆகவேதான் நான் விபரமறிந்த காலம் தொட்டு யாருக்கும் கெடுதல் நினைப்பதையே தவறாக கருதுகிறேன்.

      நீக்கு
    2. என்னளவில் இதை நான் பல சமயங்கள் அனுபவித்திருக்கேன். ஒரு துணியையே எடுத்துக்கோங்க! நான் ரொம்பவே விரும்பி வாங்கி இருப்பேன். அப்போது பார்த்து அதை யாருக்கானும் வைச்சுக் கொடுக்கும் நிலைமை வந்துடும். அப்போதெல்லாம் பணம் எப்போதும் கையில் இருந்ததில்லை. வீட்டில் இருப்பவை கொண்டே விருந்தினர் உபசாரம் எல்லாம். ஆகவே நான் கிட்டத்தட்டத் தியாகமாக எண்ணிக் கொண்டு (கவனிக்கவும்,எண்ணிக் கொண்டு) கொடுப்பேன். ஆனால் சில நாட்களிலேயே அதே போல் எனக்கு எப்படியோ வந்து சேரும்! ஆண்டவன் அந்த விஷயங்களில் எல்லாம் எனக்குக் குறையே வைத்ததில்லை! வீட்டில் எல்லோருக்கும் ஆச்சரியமாக இருக்கும்! ஆனால் கொடுக்கும்போது முழு மனதோடு கொடுக்கணும் என்னும் எண்ணத்தோடேயே கொடுப்பேன். அந்தச் சமயம் கணவருக்கு இவ்விதம் தான் உதவ முடியும்! சுமையைக் குறைக்கச் செய்யும் உதவியாக இருக்கும். இது ஒரு உதாரணம் தான்! இதைவிடப் பெரிய விஷயங்கள் எல்லாம் இருக்கு! :))))))

      நீக்கு
    3. அருமை சகோ...
      நான் முகம் அறியாத அனாதை குழந்தைகளுக்கு பணம் அனுப்பும் பொழுது மனம் நிறைந்த சந்தோஷத்துடன் அனுப்பி இருக்கிறேன்.
      (காரணம் யாரும் சொல்லாமல் நானாகவே உதவ வேண்டும் என்று கருதியதால்)

      அதேநேரம் முகம் அறிந்த உறவுகளுக்கு மனம் வருந்தி பணம் அனுப்பி இருக்கிறேன்.
      (காரணம் எவ்வளவு பணம் கொடுத்தாலும் என்னை மனைவி இல்லாதவன் என்று சொல்லிச் சொல்லியே நச்சரிப்பது நான் உலக சந்தோஷங்களை மறந்து என்னை வருத்தி உழைத்த பணம் வீணாக ஆடம்பர செலவு செய்யும்போது எனக்கு சந்தோஷமாக கொடுக்க முடியுமா ?)

      நீக்கு
  19. நமக்கும் மேலே ஒரு சக்தி இருக்கிறது. நம்மை வழி நடத்திச் செல்கிறது. நான் இதனை உணர்ந்து இருக்கிறேன். மற்றபடி உலகில் நடக்கும் சில விஷயங்களை வைத்துக் கொண்டு கடவுளை நம்புவதும் நம்பாததும் அவரவர் வாழ்க்கைச் சூழல், நம்பிக்கையைப் பொறுத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பருக்கு... இது முழுக்க முழுக்க எனது கருத்து, கொள்கையும்கூட சிறிதும் மாற்றமில்லை வருகைக்கு நன்றி.

      நீக்கு
  20. உங்கள் பதிவையும் கருத்துக்களையும் பார்த்தேன். ஆம், நமக்கு மேல் ஒரு சக்தி இருக்கிறது; தேவையான போது உதவுகிறது; கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். ஆனால், சமீப காலத்தில் என் மிக நெருங்கிய ரத்த உறவினர் நம்ப வைத்து கழுத்ததறுத்ததில் எனக்கும் தெய்வம் ரொம்ப தான் நின்று கொல்றாரோ என்று தோன்றியது. பின்னர், இதை நிர்ணயிக்க நான் யார் என்று நானே கேட்டுக் கொண்டு அந்த உறவே இல்லையென்று விட்டுவிட்டேன், என்ன நம் சட்டம் இந்த மாதிரி உறவு டிவோர்ஸ் எல்லாம் ஒப்புக் கொள்ளாது... :-(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ அருமையாக விளக்கினீர்கள் மனசாட்சியை கழட்டி வைத்த ஜடங்களே டைவோர்ஸ் கேட்கும்.

      விட்டுக் கொடுத்து வாழமுடியும் என்ற எண்ணம் நல்ல உள்ளங்களுக்கே வரும்.

      நீக்கு
  21. ‘எண்ணம்போல் வாழ்.’ என்று உங்கள் ஊர் பக்கம் சொல்வார்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

    எனவே சிவமுத்தர் ஸாது ஸ்வாமிகள் குடமுருட்டி அவர்களின் பொன்மொழியை கடைப்பிடித்துவரும் தங்களுக்கு நல்லதே நடக்கும். காரணம். தாங்கள் நல்லதை நினைத்து நல்லதையே செய்வதால்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரின் நல்லதொரு வார்த்தைகளுக்கு நன்றி

      நீக்கு
  22. பாடலும் காணொளியும் மிகவும் அழகு ..

    அந்த பொன்மொழி ஆத்மார்த்தமான உண்மை .
    எனக்கும் சில சமயம் தோணும் நல்லது மட்டும் நினைக்கிறவங்களுக்கு ஏன் பலநேரம் கெட்டது நடக்குதுன்னு ..அதுக்காக கடவுள் கிட்ட கா எல்லாம் விட மாட்டேன் :)

    இந்த மதம் கடவுள் கொள்கைகள் பற்றி எல்லாரும் பின்னூட்டத்தில் சொன்னதை நானும் வழிமொழிகிறேன் ..கடவுள் சொல்லாததையும் புதிதாக புகுத்தியது நம்ம மக்கள்ஸ் முன்னோர்கள்தான் ..
    அப்புறம் கெட்டதை தட்டிகேக்கலாம் கடவுள் வருவார்னு எதிர்பார்க்கக்கூடாது நம் எல்லாரிலும் கடவுள் இருக்கார் .
    கடவுள் அறிவை கொடுத்திருக்கார் நாம் தான் பயன்படுத்தனும் ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கடவுள் கொடுத்த அறிவை வைத்து நாம் பொருளறிந்து வாழ்தல் வேண்டும்.

      நீக்கு
  23. ஜீ செம சீரியஸா படிச்சிட்டே வந்தேன் கையை ஆட்டி தலையை ஆட்டி நடுவுல ஒரு ஒரு நிமிஷம் நின்று சிரிச்சி சிரிச்சி அர்த்தமென்ன என்ற தலைப்புக்கு அர்த்தமான பதிவு எஸ் இறைவன் இல்லை என்று சொல்பவனை கேள்விகள் கேட்கவே வேண்டாம் இருக்கு என்று சொல்லிவிட்டு பாதகம் செய்யாம இருந்தால் போதும் பார்வையாளர்களுக்கு குழப்பமில்லாமல் இருக்கும் கடைசி கண்ணொளி மனதை அள்ளிக்கொண்டு போனது அதுவும் அதில் வந்த பாட்டுஇசை குரல் மிகவும் அருமை எனக்கு அந்த லிங்க் தரமுடியுமா நான் கேட்பதற்க்கு மட்டுமே கேட்கிறேன் எங்கும் ஷேர் செய்ய அல்ல

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நான் சொல்ல வரும் பொருளே இதுதான் இறைவனை வணங்குபவன் தவறு செய்தல் கூடாது.

      நீக்கு
  24. உங்கள் பதிவு அனைவரையும் அருமையான கருத்துக்களை பகிரவும் , சிந்திக்கவும் வைத்து இருக்கிறது.
    அனைவருக்கும் நல்லதே நினைத்தும், மனதால், வாக்கால் யாரையும் காயபடுத்தாமல் வாழ்ந்த வாழ்ந்து கொண்டு இருப்பவர்களுக்கும் குடும்பத்தில் கஷ்டம் வருகிறது . உதவி பெற்றவர்கள் இதெல்லாம் பெரிய உதவியா? இன்னும் செய்யலாம் செய்தால் என்ன என்று நினைக்கிறார்கள்.

    நம்மால் முடிந்த உதவியை செய்வோம், நல்லபடியாக வாழ்வோம்.

    காணொளி நன்றாக இருக்கிறது பாடலும் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ விரிவான விளக்கம் தந்தீர்கள் காணொளி கண்டமைக்கும் நன்றி

      நீக்கு
  25. ஜீ இங்கே இரண்டேமுக்காவை விட்டுவிட்டேன் போட்டுக்கோங்கோ அப்புறம் ஏன் சிரிச்சேன் குழப்பம் வருமில்ல //ஒரு ஒரு நிமிஷம் நின்று சிரிச்சி சிரிச்சி//

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க இதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது ?

      அன்றைய உண்மையான வயதை சொன்னேன்.

      நீக்கு
  26. கடவுளே ஊழலின் கண்தான்.. நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்பாதவரை இப்படியும் சொல்லலாம் நண்பரே வருகைக்கு நன்றி

      நீக்கு
  27. நேர்மையான வாழ்க்கை வழிமுறையிலிருந்து நாம் வெகு தூரம் விலகி வந்து விட்டோம். எதிலோ படித்தேன். கலியுகம் பிறந்ததும் நாம் இனி இங்கு இருக்கலாகாது என்று பல முனிவர்களும் துறவிகளும் வானுலகம் எய்தினார் என்று. யோசித்து பார்த்தால் அவர்கள் நம்மை கைவிடட்டு விட்டதாக தோன்றும். ஆனால் உண்மையில் அவர்கள் விலகி போனது தங்களை நம்மிடம் இருந்து தற்காத்து கொள்ளத்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே அற்புதமான உளவியல் ரீதியான கருத்துரை தந்தீர்கள் நன்று.

      நீக்கு