தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், மே 22, 2018

அழைப்பு விடுப்பாயாடா ?


திருத்தலங்கள் எல்லாம் தவமிருந்து
மகனே தவசி உன்னை பெற்றோமடா
தெருவோரம் தவிக்க விட்டாயடா
பாசம் கொட்டி வளர்த்தோமடா
பாதையோரம் படுக்க விட்டாயடா
கால் கடுக்க பாதயாத்திரை சென்று
வந்தோமடா உன்னைப்பெற – இன்று
என் கால் வலி தீர வழி இல்லையடா
உன்னை ஈன்றபோது வலிக்கவில்லையடா
உன்னவள் ஈட்டி வார்த்தை இன்னும் வலிக்குதடா
மனைவியவள் வந்தவுடன் மதி மயக்கமாடா
மனிதநேயம், பாசம், நேசம் மறந்து விட்டாயடா
உனை மறக்க எமக்கு முடியாதடா உடன் நாங்கள்
மரணித்தால் மீண்டும் உனக்கே வந்து பிறப்போமடா
அப்பொழுதாவது உனது நேசம் கிடைக்குமடா
இறைவா எங்கள் குரல் கேட்பாயடா
இன்றே மரணம் கொடுப்பாயடா...
உடனே ஜனனமும் கொடுப்பாயடா...
எங்களுக்கு அழைப்பு விடுப்பாயாடா ?

திரு. வெங்கட்ஜி அவர்கள் தளத்தில் அவரது படத்திற்கேற்ற கவிதை தொகுப்பில் முன்பு நான் எழுதிய, ஒருகோடி ரூபாய் பரிசை தவற விட்ட கவிதை. மீண்டும் உங்கள் பார்வைக்கு.

45 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரரே

    சூப்பர் கவிதை. அன்பு பாசம் கனிவு என்ற சொற்களை மறந்த பிள்ளைகளுக்கு பெற்றோராக இருப்பதை விட, மரணத்தின் மடியில் படுத்துறங்கும் வாய்ப்பை 'தா'வென இறைவனை வேண்டும் அந்த வேளையிலும், மறு பிறப்பில் மறுபடியும் அவனுக்கே மக(ளா)னாக வந்து பிறந்து அவனின் பாசத்தை ஸ்வாசிக்க ஆசைப்படும் அந்த தாயுள்ளத்திற்கு விலையேயில்லை. அருமை.. அருமை..

    கோடி ரூபாய் பரிசை தவற விட்டீர்களா? பரவாயில்லை... அதுதான் கோடியில் ஒரு கவிதையை படைத்து விட்டீர்களே.. வாழ்த்துகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது விரிவான, ரசித்து எழுதிய கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

      நீக்கு
  2. வயதான கைவிடப்பட்ட தாயின் உள்ளக் குமுறலை நன்றாகப் பதிவு செய்திருக்கிறீர்கள். மகனுன் பாசத்துக்கு ஏங்கும் வயதான தாய்.

    அட.. இன்று நான்தான் முதலோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டாவதாக வருகை தந்தமைக்கு நன்றி நண்பரே

      நீக்கு
    2. நோஓஓஓஓஓஓஓ மீதான் 1ஸ்ட்டூஊஊஊஊஊஊஊஊ

      http://www.funnycatpictures.net/wp-content/uploads/2012/07/cool-cat-holding-gun.jpg

      நீக்கு
    3. பூனை துப்பாக்கியோடு இருக்கிறதே...

      நீக்கு
  3. சில வயதானவர்கள் நிலை இப்படித்தான் வருந்தக் கூடிய சூழ்நிலையாய் அமைந்து விடுகிறது. நன்றாய்ச் சொல்லியுள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம்ஜியின் பாராட்டுகளுக்கு நர்றி

      நீக்கு
  4. தவறவிட்ட ஒரு கோடி என்ன, அதற்கும் மேலே கொஞ்சம் கூடவே நான் தருகிறேன். இதோ... இங்கு போய் எடுத்துக் கொள்ளுங்கள் ஜி! :)))

    https://www.khaskhabar.com/local/maharashtra/mumbai-news/news-sbi-says-still-115-lakh-crore-rupees-notes-need-to-be-printed-news-hindi-2-192240-KKN.html

    பதிலளிநீக்கு
  5. நெஞ்சம் கனக்கிறது ஐயா...

    பதிலளிநீக்கு
  6. இப்படியும் நடக்கத்தானே செய்கிறது. தாயின் உள்ளக்குமுறலை அப்படியே பதிவு செய்திருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி

      நீக்கு
  7. கோடி ருபாய் தவர விட்டாலும் அடிக்கோடிடும் படியான கவிதை படைத்திருக்கின்றீர்கள்

    பதிலளிநீக்கு
  8. நக்கீரனிடம் எழுதி வாங்கியதாக நிணைத்து விட்டார்களோ...???

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே ஒரு கோடி ரூபாய் பணத்தையா ?

      நீக்கு
  9. நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் ....... வாழ்க்கை இனிக்குமா ஹோப் ஃபர் த பெஸ்ட் பி ப்ரிபேர்ட் ஃபர் த வொர்ஸ்ட்

    பதிலளிநீக்கு
  10. உள்ளம் கணத்தது ஒரு கணம்.

    பதிலளிநீக்கு
  11. கோடியெல்லாம் ஈடாகாது.இது விலைமதிப்பற்ற கவிதை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே மிக்க நன்றி.
      முந்தைய பதிவு அவசியம் படிக்கவும்.

      நீக்கு
  12. ஒரு கோடியா?!

    எப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமா வெங்கட் ஜி அறிவிப்பு கொடுத்திருந்தாரே...

      நீக்கு
  13. முன்பே படித்தாலும் மீண்டும் படிக்கும் போது நெஞ்சம் கனக்குது.
    தாயின் மனக்குமறல் நன்றாக தெரிகிறது கவிதையில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

      நீக்கு
  14. சே.சே..சே ஒரு கோடி மிஸ் ஆச்சே:))... இதில் ஏதொ உள் ஜதி நடந்திருக்குது கில்லர்ஜி.. கேஸ் போடுங்கோ::) பிரித்தானியாக் காண்ட் கோர்ட்டில்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போயிட்டு போகுது ஒரு கோடிதானே... இதுக்கு போயி அலட்டிக்கலாமா ?

      நீக்கு
  15. கவிஞர் கில்லர்ஜி கவிதையை புரியும் படி எளிமையாக அதே நேரத்தில் மிக அழுத்தம் கொடுத்து எழுதியதற்கு பாராட்டுகள் பலரும் கவிதை என்ற பெயரி ஏதோ எழுதுகிறார்கள் ஆனால் அதற்கு உரை நடை விளக்கம் எழுதினாலே ஒழிய அதில் என்ன சொல்ல வருகிறார்கள் என்று புரியாது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே தங்களது விரிவான கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

      நீக்கு
  16. உங்கள் கவிதையினை ரசித்தேன், ஆத்மார்த்தமாக.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் ரசிப்புக்கு நன்றி.

      நீக்கு
  17. இரண்டாம் குழந்தை பருவத்தை எட்டிய ஒரு தாயின் உள்ள குமுறலை அழகாய் சொல்லி விட்டீர்கள்

    பதிலளிநீக்கு
  18. கோவில்-குளம் போய் நேர்ந்து
    பெற்றெடுத்த பிள்ளை தான்
    தெருவிலே வாழ விட்டதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே பெரும்பாலும் இப்படி பிள்ளைகளே பெற்றோரை கை விடுகிறது.

      நீக்கு
  19. கில்லர்ஜி மிக நன்றாகக் கவிதை எழுதுகின்றீர்கள். எங்கள் இருவருக்குமே அது வராஆஆஆஆஆஆது.

    அருமையான வரிகள். அங்கும் வாசித்த நினைவு இருக்கிறது

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு
  20. கோடிகள் தொலைத்தாலும் தாயுள்ளத்தைக் கோடிட்டுக் காட்டிய கவிதை.

    பதிலளிநீக்கு