நட்பூக்களே மேற்கண்ட
விலைகளைப் பார்த்து மயங்கி விடாதீர்கள் உண்மையான விலைதான் இதையும் இவ்வளவு விலை
கொடுத்து வாங்குவதற்கு ‘’குடி’’மக்கள் இருக்கின்றார்கள்
அல்லவா அதனால்தானே நிறுவனங்களும் இதை தொடர்ந்து தயார் செய்து விற்கின்றார்கள். இவ்வளவு
உயர்ந்த வகையான மது குடிப்பதால் இவர்கள் குடிகாரர்கள் இல்லை என்ற நிலையைக் கடந்து
விடுகின்றார்களா ? இல்லையே
அப்பொழுதும் இவர்கள் குடிகாரன்தான் சரி அது கிடக்கட்டும் நாம் வந்த வேலையை
பார்ப்போம்.
இவ்வளவு விலை கொடுத்து
வாங்குவது யார் ? சாதாரண கைவண்டித் தொழிலாளியா ? இல்லை இந்திய அரசியல்வாதிகளும், திரைப்பட
நடிகர்களும், கிரிக்கெட் வீரர்(?)களும்தான் வாங்க முடியும் (ஐயா திரு. ஜியெம்பி அவர்கள் மன்னிக்கவும்) பணக்கார தொழில் அதிபர்களும்
வாங்குவார்கள் என்று சொல்லலாம் இருப்பினும் அது குறைவான சதவீதமே இருக்கும் காரணம்
அவர்கள் உழைப்பால் உயர்ந்தவர்கள் உலகிலேயே மிக ஆடம்பரமான தங்கும் விடுதி இருப்பது
இந்தியாவில்தான் என்று நண்பர் திரு எல்.பி.செந்தில் குமார் அவர்கள் ஒரு பதிவில்
சொல்லி இருந்தார் ஓர் இரவு தங்குவதற்கு ஐம்பது லட்சம் ஆனால் மேலே நான்
சொல்லியிருந்த மூவரும் அப்படியில்லை சுலபமாக அரசியல்வாதிகள் அரசியலில்
கொள்ளையடித்த பணத்தில் வாங்குவதில் மனக்கஷ்டம் வராது அதேபோல திரைப்பட நடிகர்களும்
அதிகபட்சம் சுமார் ஒரு மாதம் வரை இருக்கலாம் வேலை செய்ததற்காக கோடிகள் சம்பளம்
அவர்கள் வாங்குவதிலும் மனக்கஷ்டம் வராது அடுத்து கிரிக்கெட் வீரர்(?)கள் இவர்கள் கஷ்டப்பட்டு
வெயிலில் திறமையைக் காண்பித்து உழைத்தாலும் இவ்வளவு சம்பளம் வாங்குவது அதிகமே
அதுவும் நாட்டுக்காக உழைத்து நாட்டிடமே மேலும் இதன் பலனாய் விளம்பரங்களிலும்
நொடிக்கணக்குதான் கூடுதல் போனால் அரைநாள் நடித்திருக்கலாம் அதிலும் கோடிகள்
வாங்குகின்றார்கள் அதையும்கூட நாட்டின் முன்னோடியாக விளங்கும் இவர்கள் மது
விளம்பரத்தில் நடித்து மக்களை மது அருந்தச் சொல்கிறார்கள் இதையெல்லாம் மக்கள்
ஞாபகத்தில் வைத்திருக்க மாட்டார்கள் காரணம் மறதி. இந்த இடத்தில்தான் எனக்கு ஒரு
குழப்பம் தீரவில்லை இவர்களுக்கு மட்டும் இவ்வளவு சம்பளம் நிர்ணயிக்கும் சமூகம்
சமூகமா ? சமூகம்தானே வேறு யாராக இருக்கமுடியும் இந்த
சமூகத்திற்காக எந்த நொடியும் உயிரை இழக்கத்தயாராய் இருந்து கொண்டே நாட்டின்
எல்லையில் வேலை செய்கின்றார்களே இராணுவ வீரர்கள் அவர்களுக்கு இவ்வளவு சம்பளம்
கிடைக்க வழியில்லையே என்பதுதான் இது எனது பொதுநல மனவேதனை.
அரசியல் தலைவனாவது நம்ம
தொண்டன் குளிக்கத் தண்ணியில்லாமல் தீக்குளிக்கும்போது வந்து பார்த்து விட்டு
குடும்பத்துக்கு ஐம்பது லட்சம் வழங்கப்படும் (?) அப்படினு தினத்தந்தி நிருபர் திரு. எஸ்.பி.செந்தில் குமார்
கிட்டே சொல்லிட்டாச்சும் போறாரு ஒருவேளை கொடுக்கா விட்டாலும் நம்ம செந்தில் குமாரு
கைப்பணத்தை தந்து விடுவாரு... நம்ம நடிகரு எவனுமே கேட்காத அநியாயங்களை நூறுபேர்
வந்தாலும் தரையிலே கால் படாமல் பறந்து பறந்து அடிச்சு கேட்கிறாரு, அந்த
நன்றிக்கடனுக்குத்தானே பாலாபிஷேகம் செய்யிறோம்... அப்புறம் நம்ம கிரிக்கெட் வீரர் (?) சிக்ஸரா அடிச்சு எதிரி நாட்டுக்காரன் முகத்துல கரியைப்
பூசிட்டாருல அதுனாலதானே நமக்கு வயிறு நிறையுது.
நட்புகளே... இதை வேறொரு கோணத்தில்
பார்ப்போமா ?
இதில் ஒரு பாட்டிலின்
விலையில் எத்தனை சிசுக்களின் உயிர்களை காப்பாற்றலாம் எவ்வளவோ குழந்தைகள்
ஒருவேளைக்கு அருந்த பாலில்லாமல் இருக்கின்றார்கள், இறக்கின்றார்கள் இவ்வளவு
விலையைக் கொடுத்து வாங்கி குடிக்கின்றானே மனிதன் அவனுள் மனிதம் வாழ்ந்திருந்தால் ? இந்தச் சமூகத்தில் எவ்வளவோ குழந்தைகள்
பட்டினியால் வாடுகின்றார்களே என்பதை நினைத்துப் பார்த்திருப்பானே.. ½ பவுன்
நகையில்லாமல் எவ்வளவோ குடும்பங்களில் சில சகோதரிகள் திருமணம் செய்ய முடியாமல்
வாழ்கின்றார்கள் பட்டினியால் சாலையோரமாய் எவ்வளவோ ஜீவன்கள் வாழ்கின்றார்கள் வீடு
இல்லாமல் சாலையோரங்களில் தார்பாயைக் கொண்டு உறங்குகின்றார்கள் இதையெல்லாம்
நினைத்துப் பார்க்கும் மனப்பக்குவத்தை அவனுள் கொடுக்காமல் அவனை பணத்தால்
புரளவிட்டது இறைவன்தானே கேட்டால் பிறந்த நேரம் என்பார்கள் இந்த இடத்தில்தான்
எனக்கு ஒரு குழப்பம் தீரவில்லை அதாவது அவன் பிறந்த நேரத்தில் எத்தனையோ
குழந்தைகளும் பிறந்தது அவைகளுக்கு மட்டும் தரித்திணியம் தாண்டவமாடுவது ஏன் ?
நட்புகளே... இதை மற்றொரு கோணத்தில்
பார்ப்போமா ?
இதற்கே இவ்வளவு செலவு
செய்கின்றார்கள் என்றால் இவர்களிடம் எவ்வளவு சொத்து இருக்கும் ? நான் தெரியாமல்தான்
கேட்கிறேன் மூதேவி பாட்டிலு கை தவறி கீழே விழுந்தால் உடையத்தானே செய்யும் ? உடையாதோ... அட
விளங்காமுடுமை மீறிப்போனால் இந்தப் பாட்டிலை குடித்து தீர்க்க உனக்கு ஒருநாள்
ஆகுமா ? அப்புறம் என்னாகும் Urine தான் இந்தப்பணத்தை வைத்து
பல ஆண்டுகளுக்கு பிறவிப்பயனையே அடையலாமே அதாவது இந்த என்னமோ ‘’ஜொள்ளு’’றாங்களே... ரம்பா,
ஊர்வசி, மேனகா (நான் நாளைய இந்தியாவை ஆளப்பிறந்த நடிகைகளை ‘’ஜொள்’’லவில்லை) அப்படி... இப்படினு... Mr. விசுகூட மயங்கினாருனு...
(நான் நடிகர் விசுவை
சொல்லவில்லை) அப்புறம் இந்தப் பணத்தால் ஆண்டிப்பட்டி முதல்
அமெரிக்கா வரை உலகத்தையே சுற்றி வரலாம் உனது பணத்தை வைத்து உலகத்தின் பல மனிதர்களை
சந்திக்கலாம் இந்தியாவின் உயர்ந்த மனிதன் கௌரவத்துக்காகவே உயிர் வாழும் கவரிமான்
அமிதாப்பச்சன் குடும்பத்தைப் போன்றவர்களை சந்திக்கலாம் இன்னும் விளங்கவில்லை
என்றால் முப்பது நாளில், முப்பது கோடியை செலவு செய்து காண்பிக்கும் அறிவாளிகளிடம்
ஆலோசனை கேட்கலாம் இந்த இடத்தில்தான் எனக்கு ஒரு குழப்பம் தீரவில்லை ஒருவேளை
இவங்களுக்கு அறிவு இல்லையோ.... என்னமோ போங்கடா இறைவன் படைத்த உயிரைவிட மனிதன்
படைத்த பேப்பருக்கு மதிப்பாகி போச்சு நல்லா இருந்து நாசமாப் போங்கடா...
நட்புகளே... இந்தக் கோணத்தில்
பார்ப்போமா ?
ஒருக்கால் இந்த முதல்
பாட்டிலின் விலைக்குறிய பணம் மட்டும் திடீரென லாட்டரியில் விழுந்து எனக்கு
கிடைத்தால் ? என்ன செய்வேன் தெரியுமா ? அதாவது (9,53,85,675.00) இந்த ஒன்பது கோடியே, ஐம்பத்தி மூணு லட்சத்து,
எண்பத்தி ஐந்தாயிரத்து, அறுநூற்றி எழுபத்து ஐந்து ரூபாயை நான்கு பங்குகளாக
பிரிப்பேன் அதில் ஒரு பங்கு எனது அன்பு மகனுக்கு, மறுபங்கு எனது இனிய மகளுக்கு,
அடுத்த பங்கு எனது உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், மற்றும் வலைப்பூ
நண்பர்களுக்கும், கடைசிப்பங்கு கடந்த இருபது வருடங்களாக எனக்கு தொடர்பு உள்ள
சென்னை சிவானந்தா சரஸ்வதி சேவாஸ்ரமம், சென்னை ஸ்ரீ சாரதா சக்தி பீடம் மற்றும்
கோயமுத்தூர் குருவம்பாளையத்தில் உள்ள தி யுனைடெட் ஹேண்டி ஹேப்பிட் ஸ்கூல்
இவைகளுக்கு எனது நேரடி கண் பார்வையில் அந்தக் குழந்தைகளின் பராமரிப்பு செலவுக்கு
செய்யப்படும்.
இது இந்த பரந்த பூமியின்
மீதும், உயர்ந்த வானத்தின் மீதும், நான் சுவாசிக்கும் காணக் கிடைக்காத காற்றின்
மீதும் சத்தியம்.
Chivas Regal சிவசம்போ-
ஹும் கற்பூரவாசனை கழுதைக்கு தெரியுமா ?
சாம்பசிவம்-
கழுதை... உனக்கு தெரிளிஞ்சா
சரிதான்...
சிவாதாமஸ்அலி-
கற்பூரவாசனை கழுதைக்கு எதுக்கு தெரியணும் ?
அதிராம்பட்டணம் அதிரடி அதிரா-
மோடி அங்கிள் ஆட்சியில் விலை இவ்வளவு
ஆகிப்போச்சே...
காணொளி
காணொளிப் படங்கள் கன்றாவியாய் இருக்கின்றன. அப்படி என்னதான் இருக்குமோ மதுவில்...
பதிலளிநீக்குஎனக்கும்தான் ஜி இதில் மயக்கம் உண்டானதில்லை.
நீக்குகாணொளி சரியா வரலை. நியாயமான கேள்விகள் தான். ஆனால் இந்த விலையை எல்லாம் இன்னிக்குத் தான் தெரிஞ்சுண்டேன். இதைப் பற்றி எல்லாம் கேள்விப் பட்டதே இல்லை.
பதிலளிநீக்குவருக சகோ என்னாலும்கூட இன்னும் விலையை நம்பமுடியவில்லை.
நீக்குஒன்பதரைக் கோடியில் மதுவா!!! ஒரே ஒரு ஸ்பூன் கிடைத்தால் ருசித்துப் பார்க்கலாம் போலிருக்கிறது.
பதிலளிநீக்குஎன் ஆசையை அடுத்த பிறவியிலாவது நிறைவேறுமா?!
அபூர்வமான தகவல். நன்றி கில்லர்ஜி.
வருக நண்பரே வியாழக்கிழமை தெட்சிணாமூர்த்திக்கு விரதம் இருந்தால் நிறைவேறும் என்று சொன்னார்கள்.
நீக்குநானும் முயற்சிக்கப் போகிறேன்.
மதுவின் விலை இவ்வளவு அதிகமாய் இருக்கிறதா
பதிலளிநீக்குவியப்பாக இருக்கிறது நண்பரே
வருக நண்பரே வியப்பான விடயமே
நீக்குகில்லர்ஜி வீடியோ ஹையோ!! அதை ஏன் கேக்கறீங்க..எங்க வீட்டுக்கு எதிர்த்தாப்புல ஒரு இந்தியநாட்டுக் குடி மகன் சுய உணர்வு இல்லாமல் படுத்து உளறலை என்னனு சொல்ல... அது எப்படி இப்படிக் கன்றாவிய குடிக்கத் தோணுது கப் அடிக்குது....குமட்டுது...அந்த நாத்தம்
பதிலளிநீக்குஇம்புட்டு விலையா அட சாமியோவ்...குடிக்காமயே மயக்கம் வருது ஹா ஹா ஹா கருத்துகள் அருமை ஜி!
கீதா
இதைக்கொண்டு வந்து தமிழ்நாட்டை பாழாக்கிய ஜெயலலிதாவின் மரணத்துக்குத்தான் மக்கள் வெட்கமின்றி அழுகின்றார்கள்
நீக்குமதுவை பூமிக்கு அடியில் புதைத்து வைக்கும் நாட்கள் அதிகமாக அதிகமாக அதன் விலையும் அதிகரிக்கும் என்று கேள்வி பட்டிருக்கிறேன், இவ்வளவு அதிகமா? நீங்கள் சொல்வது போல இத்தனை விலை கொடுத்து வாங்கவும் ஆட்கள் இருக்கிறார்கள்..
பதிலளிநீக்குவாங்க மேடம் நீங்கள் சொல்வதை முதன்முதலில் உருவாக்கியவர்கள் எஜிப்தியர்கள் அவர்கள் உணவு வகைகளைக்கூட ஆறுமாதம்வரை பூமிக்குள் வைத்து பதப்படுத்தி மீண்டும் உண்ணும் பழக்கத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்கள்.
நீக்குநானும் உண்டு இருக்கிறேன் உண்ட பிறகே அறிந்தேன் உணவின் பின்னணி பிறகு சாப்பிடுவதில்லை ஆனால் நல்ல சுவையாக இருக்கும் ஆனால் நாற்றம் வரும்.
பதிவு நல்ல கருத்துகள் உள்ளடக்கிய ஒன்று. அருமை. கேரளத்தில் இருக்கும் எனக்கு இதன் விலை இவ்வளவு இருக்கும் என்று எனக்குத் தெரியவில்லையே. சொத்தே வாங்கிவிடலாம் போல...
பதிலளிநீக்குதுளசிதரன்
கேரளத்தில் இருந்தால் மட்டும் தெரிந்து கொள்ளமுடியாது எங்களைப்போல் பணம் போட்டு வாங்கி வீட்டு அலமாரியில் அடுக்கி வைக்கவேண்டும்.
நீக்குநம்ப முடியவில்லை. இருந்தாலும் நீங்கள் சொல்வதால் நம்புகிறோம். இவற்றைப் பார்த்தபோதும், படித்தபோதும் நம் சமூகத்தை நினைத்து வேதனைப்படத்தான் தோன்றுகிறது.
நீக்குமுனைவர் அவர்களுக்கு நான் அபுதாபி ஷேக்குகளுக்கு செல்லும் உயர்ரக மது வகைகளை பார்த்து இருக்கிறேன். ஆனாலும் அவைகள் இதனோடு ஒப்பிடும்போது ஜுஜூபிதான்.
நீக்குகில்லர்ஜி... கைவண்டிக் கடையிலும் ருசியாக இட்லி சட்னி 5 ரூபாய்க்குக் கிடைக்கும், சரவண பவனில் 50 ரூபாய்க்குக் கிடைக்கும். சோழா ஓட்டலில் 750 ரூபாய்க்குக் கிடைக்கும். இதை விடுங்கள். கார், மாருதி 800ல் போனால் அது நாம் போக விரும்பும் இடத்துக்குக் கொண்டுசேர்க்காதா? ஏன் ஸ்விஃப்ட், ஹோண்டா, நம்ம ஊர் கெட்ட கேட்டுக்கு பிஎம்டபிள்யூ என்றெல்லாம் வாங்க எண்ணுகிறார்கள்? எல்லாம் அந்தஸ்துதான்.
பதிலளிநீக்குஅப்புறம் அளவுக்கு அதிகமாக சில தொழில்களில் காசு வரும், கணக்குக் காண்பித்து வருமான வரி கட்டி மாளாது. அப்போது இதுமாதிரி அதீத ஆடம்பரமாக செலவழிப்பார்கள் (வரி கட்டணும் கணக்கு காண்பிக்கணும் என்று பயந்துகொண்டு)
என்னைப் பொறுத்த வரையில் எதிலும் அடிக்ஷன் இருந்தால் அவர்கள் நோயாளிகள்தான். அது மதுவாக இருந்தாலும் டீயாக இருந்தாலும் காபியாக இருந்தாலும் சரிதான்.
வருக நண்பரே விரிவாக அலசி இருக்கின்றீர்கள் மறுக்க இயலாதுதான் நன்றி.
நீக்கு9 கோடி ரூபாய் செலவில் மது குடுவையா.
பதிலளிநீக்குஇதை விற்கும் நிருவனம் என்னா காரணம் சொல்லி விலையை நியாய படுத்த முடியும்
பெட்ரோல் விலை ஏறிவிட்டது, சரக்கு ஏற்றிப்போகும் வாகன ஓட்டுனருக்கு சம்பளம் கூடிவிட்டது, மின்சாரம் யூனிட்டுக்கு கூடிவிட்டது இப்படி நிறைய இருக்கிறதே நண்பரே...
நீக்குஎன்னாது 9 கோடிய
பதிலளிநீக்குமிச்ச பணம் 53,85,675.00 மறந்துட்டீங்களே நண்பா.
நீக்குஎத்தனையோ ஆதங்கங்கள்இப்படி எழுதியாவது ஆற்றிக் கொள்ளலாம் தவிர்க்க முடியாவிட்டால்,அனுபவித்துதானே ஆக வேண்டும்
பதிலளிநீக்குஹா.. ஹா.. ஹா... ஆதங்கம் என்றும் சொல்லலாம் ஐயா வருகைக்கு நன்றி
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குசாதரண மதுவுக்கு இத்தனை விலையா? ஆச்சரியத்தில், விலையை பார்த்தே மயக்கம் வருகிறது. புராணங்களில் தேவர்கள் அருந்துவதாக கூறப்படும் அமிர்தம் கூட இவ்வளவு விலை இருக்காது போலிருக்கே... கோடிக்கணக்கில் எண்களை படிப்பதற்குள் கண்ணை கட்டி கொண்டு வருகிறது. தங்கள் நியாயமான அலசல்களை ரசித்தேன். தங்கள் வருத்தமும் புரிகிறது. மனிதர்களை திருத்த ஆண்டவன் மற்றொரு அவதாரம் எடுத்து வர வேண்டும்..
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருக சகோ அமிர்தம் விலைமதிப்பில்லாதது அது பாவபுண்ணியங்களுக்கு ஏற்ப கிடைக்ககூடியது தங்களது வருகைக்கு நன்றி
நீக்குஉண்மை.. அது விலைமதிப்பல்லாதது. அற்ப மானிடர்களுக்கு என்றுமே கிடைக்காதது. இவர்கள் கோடியில் புரண்டு இதை வாங்கி பயன்படுத்தாமல், தான தர்ம காரியங்களுக்கு உபயோகித்தால், சிறிதளவு புண்ணியத்துக்கு வாய்ப்புண்டு. ஒன்றும் சொல்வதற்கில்லை..
நீக்குஆம் மீள் வருகைக்கு நன்றி சகோ
நீக்குஒரு பாட்டிலின் விலை கோடிக்கணக்கிலா?! ஐயோடா
பதிலளிநீக்குவாங்க சகோ மாமாவுக்கு ஒன்று எடுத்து வைங்களேன்....
நீக்குவிலையை வாசித்து கவலையாக இருக்கிறது.
பதிலளிநீக்குஉங்களுக்கு அந்த பணம் கிடைத்தால் எவ்வளவு பேர்களுக்கு நன்மை! நல்ல உள்ளம் வாழ்க!
வருக சகோ பணம் கிடைத்தால் சொன்னதை செய்வேன்.
நீக்குஒவ்வொரு கோணமும் சிந்திக்க வைக்கிறது ஜி...
பதிலளிநீக்குவாங்க ஜி இது நடந்தால் நலமே...
நீக்குஉங்கள் உள்ளம் சொல்லும் தீர்ப்பு பலிக்கட்டும். குப்பைகள் குப்பைகளாகவே
பதிலளிநீக்குஇருக்கட்டும்.
வாழ்க வளமுடன்.
வாங்க அம்மா வருகைக்கு மிக்க நன்றி.
நீக்குஇவ்வளவு விலை கொடுத்து வாங்கவும் ஆட்கள் இருக்கிறார்களே.... சோகம் தான்.
பதிலளிநீக்குஇந்தியா வல்லரசுதான் ஜி.
நீக்குபெட்ரோல் ஏறிப்போனதென்று பொங்கியெழும் நண்பர்கள் இந்தச் சரக்குகளின் விலையைத் தெரிந்துகொண்டு மேலும் பொங்கி எழப்போகிறார்கள்.
பதிலளிநீக்குவருக நண்பரே இதை வாங்குபவர்கள் கஞ்சிக்கு செத்தவர்கள் இல்லையே...
நீக்குஆ.... காற்றின் மீது சத்தியமா...? அப்ப...சத்தியம் சக்கர பொங்கலுக்கு அர்த்தம் இதுதானோ...!!!
பதிலளிநீக்குவருக நண்பரே இதை வெண்பொங்கல் கணக்கில் சேர்க்கலாம்.
நீக்கு