கடந்த சுமார் 16 வருடங்களாக அபுதாபியில் எனக்குப் பழக்கம் எனது அலுவலகத்தில்
வேலை செய்தவன் பாலஸ்தீனிய நண்பன் திரு. எக்ஸ் (அடையாளம் போதும்) ஜோக்காளியைப் போல் ஏதாவது செய்து கொண்டே
இருப்பான் இவனிடம் எல்லா விசயங்களும் சகஜமாக பேசித்தான் அரபி கற்றுக் கொண்டேன்
என்றும்கூட சொல்லலாம் என்னைப் பொருத்தவரையில் நல்லவன்தான் பொதுவாக பார்த்தால் ? நல்லவன் என்று சொல்ல
முடியாதுதான் எனக்கு பல வகையிலும் உதவியாக இருந்தான் பண உதவியைத் தவிர இவன்தான்
கணினியில் வேலை சொல்லிக் கொடுத்தான் (Program Arabic)
இவன் பிறந்தது யூ.ஏ.ஈ. நாட்டில்தான் இருமுறை மட்டுமே பாலஸ்தீன் சென்று இருக்கின்றான் இவனுடைய அப்பாவும் எனக்கு நல்ல பழக்கம் உள்ளவர் சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே அந்நாட்டுக்கு வந்தவர் அந்த நாட்டின் முக்கியமான அரசு அலுவலகத்தில் (அதன் பெயர் வேண்டாம்) முதன்மை கணக்காளராக வேலை பார்த்து தற்போது ஓய்வு பெற்றவர் அலுவல் நிமித்தமாக எனது அலுவலகத்துக்கு மாதம் இருமுறை வருவார் போவார் எனக்கும், இவருக்கும் அலுவலில் தொடர்பு இருக்கிறது அதற்காக எனது டேபிளில் உட்கார்ந்து எனது கணினியில் சில வேலைகள் செய்வார். நான் அதற்கான உதவிகளை செய்து கொடுப்பேன். இது எனது கடமை நல்லவர், வேலை விசயத்தில் வல்லவரும்கூட நாட்டுப்பற்று உள்ளவர் இதைக்குறித்து நான் இவரை அடிக்கடி பாராட்டுவேன் என்னை ஸினப்பு என்று அன்புடன் அழைப்பார் நான் பதிலுக்கு சித்தப்பு என்று அழைப்பேன்.

(இருவரும் அரபு மொழியில்தான் பேசுவோம் சித்தப்பு என்பது
மட்டுமே தமிழ் சித்தப்பு என்றால் என்னவென்று அவருக்கும் சொல்லி கொடுத்தேன் ஸினப் என்றால்
மீசை என்று அர்த்தம்)
இவர் நினைத்திருந்தால் எப்பொழுதோ அந்நாட்டின்
பிரஜையாகி இருக்கலாம் ஆனால் எனக்கு என் நாடு முக்கியம் என்ற கொள்கையாளர் மறைந்த
பாலஸ்தீன் அதிபர் திரு. யாசர் அரபாத் அவர்களின் உறவினரும்கூட அவர்களது வீட்டில்
புகைப்படங்களும் எனக்கு உறுதி செய்தன. எக்ஸ் நன்றாக சாப்பிடுவான் அலுவலக
விருந்துக்கு போனால் தட்டில் நிறைய அள்ளி வைத்து சாப்பிடுவான் அதோடு மட்டுமல்ல
எனக்கும் அவனே எடுத்து வைப்பான் எனக்கு பிடித்ததை அல்ல அனைத்தும் அவனுக்கு
பிடித்ததை அந்த நாட்டில் விருந்துகளில் என்னயிருக்கும், எப்படியிருக்கும் என்பதை
நான் உங்களுக்கு சொல்லவும் வேண்டுமா ? முழுமையான ஒட்டகம் தோலின்றி அப்படியே டேபிளின்
மீது உட்கார்ந்து இருக்கும் அதைப் பார்த்தாலே எனக்கு நடுங்கும் அதனுடன் சண்டை போட்டு
கொண்டு பிய்த்து எடுப்பார்கள்.
எனக்கு மீன் வகைகள் மட்டுமே பிடிக்கும் இவன் தட்டில் கோபுரம் கட்டுவான் எனக்கும் ராஜகோபுரம் கட்டித்தருவான் வேண்டாம் என்றாலும் கேட்க மாட்டான் கொண்டு வா நான் சாப்பிடுவேன் எனக்கு சங்கடமாக இருக்கும் பெண்கள் பார்த்து சிரிப்பார்கள் இருப்பினும் பலருக்கும் தெரியும் இது யாருக்காக ? நான் என்ன சாப்பிடுவேன், எவ்வளவு சாப்பிடுவேன் என்பது சரியென அவனுக்காக கோபுரத்தை தூக்கிக்கொண்டு வந்து டேபிளில் உட்காருவேன் பெரும்பாலும் நான் பெரிய லெவலில் இருக்கும் அரபிகளுடனே உட்காருவேன் காரணம் இவர்களிடம் சமத்துவம் இருக்கின்றது மேலும் யாரிடமும் பேசுவதில் எனக்கு பயமோ, கூச்சமோ கிடையாது பெரும்பாலும் இந்தியர்கள் தனியாக ஒதுங்குவார்கள் இந்தியர்கள் என்பது யார் ? மலையாளிகளே... தமிழன் நான் மட்டுமே. எக்ஸின் மனைவியும் எனது அலுவகத்திலேயே வேலை செய்தது ஜோர்டானிக்காரி மிகவும் நல்ல குணம் எனக்கும் பழக்கமே இவர்களுடைய காதல் திருமணத்துக்கும் போயிருக்கின்றேன்.
எக்ஸ் ஒருமுறை வேலையில் அவசியமற்ற தவறைச் செய்து விட்டான் பத்துப் பைசாவுக்கு பிரயோசனம் இல்லாதது அந்த தவறு எனக்கு சாதகமானதும்கூட நான் அடிக்கடி செய்யாதே என்றாவது உனக்கு பிரச்சனை வரும் என்று சொல்வேன் கேட்க மாட்டான் சாதாரணமாகவே ஆட்களை களையெடுக்கும் அலுவலகத்தில் இந்த தவறு விஸ்வரூபம் எடுத்து விட்டது அவனைத் தூக்கினார்கள், சட்டென ஒரு வருமானம் நின்று விட்டது இந்த காரணத்தை வைத்து மனைவியையும் தூக்கி விட்டார்கள் இருவரது வருமானமும் நின்று வாழ்க்கை கேள்விக்குறியாகியது ஒரு ஆண், இரண்டு பெண் குழந்தைகளின் படிப்புக்கு வருமானம் ? வேலை போனதால் விசா பிரச்சனையும் எழுந்தது நண்பரின் கம்பெனி விசா மூலம் எவ்வளவு காலம் தள்ளமுடியும் இவனும் பாலஸ்தீன் போகமுடியாது மனைவியையும் அழைத்துச் செல்ல முடியாது மனைவியின் நாடான ஜோர்டானுக்கு மனைவியையும் விசிட் விசாவில் குழந்தைகளையும் அனுப்பி வைத்தான்.
அபுதாபியில் பல இடங்களிலும் வேலை செய்தாலும் நல்ல வருமானம் இல்லை மேலும் அந்நாடு சமீபத்தில் சிலநாட்டு மனிதர்களுக்கு விசா கொடுப்பதை தவிர்த்து வருகின்றது ஐரோப்பிய நாடுகளுக்கு போகலாம் என்று முடிவு செய்தான் அங்கும் நாடு பிரச்சனை வந்தது ஆப்ரிக்கா சென்றான் ஒருமாதம் தங்கி அந்நாட்டு பிரஜையாகி வந்தான் இப்பொழுது என் நண்பன் சட்டப்படி ஆப்ரிக்கன். ரஷ்யாவுக்கு சென்று ஏதாவது பிஸினஸ் தொடங்கலாம் என்று தீர்மானித்தான் இவன் எனது அலுவகத்தில் வேலையை நிறுத்தி இரண்டு வருடங்களாகப் போகின்றது இவன் பலமுறை என்னிடம் கடன் வாங்கி இருக்கின்றான் திருப்பித் தந்து இருக்கின்றான் எனக்கு கடன் தரமாட்டான் ஆகவே நானும் கேட்க மாட்டேன்.
ஒருமுறை அவசர சூழலாக எனக்கு இரண்டாயிரம் திர்ஹாம்ஸ் வேண்டும் அடுத்த மாதம் தருகிறேன் என்றேன் உடன் தந்தான் மறுமாதம் இவனைத் தூக்கி விட்டார்கள் மனைவி இங்குதானே வேலை செய்கின்றது சில மாதங்களில் மனைவியையும் தூக்கி விட்டார்கள் சரி உள்ளூர்தானே கொடுப்போம் நான் பணப்பிரச்சனையில் பிறகு கொடுப்போம் என்று இருந்து விட்டேன் இதில் அதிசயம் என்னவென்றால் ? அவன் எனக்கு பணம் கொடுத்ததை மறந்து விட்டான் நானும் கொடுப்போம் கொடுப்போம் என்று இரண்டு வருடத்தை தள்ளி விட்டேன் காரணம் எனக்கு கடந்த நான்கு வருடங்களாகவே பணப்பிரச்சனை தீருவதில்லை.

கையில வாங்குனேன் பையில போடலே
திர்ஹாம்ஸ் போன இடம் தெரியலே
என்ற நிலையே தொடர்திருந்தது.
சிரியன், சூடானியன்,
பாலஸ்தீனியன், ஜோர்டானியன், எஜிப்தியன், தி கிரேட் இந்தியன் கில்லர்ஜி மற்றும்
எமராத்தியன்.
எக்ஸின் மகன் ஒஸாமா
(இதனுள் எனது தனிப்பட்ட வேதனை சிலர் சொல்வது
உனக்கென்ன மனைவியில்லை என்ன செலவு ? மனைவி என்பவள் இல்லாமல்
குழந்தைகளை வளர்க்கும் காரணத்தால் நான் அதிகமான பணத்தேவையில் வாழ்ந்தேன் என்பது
என்னைப் போன்ற விதவன்களுக்கு மட்டுமே தெரியும் இரண்டாவது மனைவியைக் கொண்டு
வந்திருந்தால் வேறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டியது இருந்திருக்கும் என்பது வேறு
விடயம்)
அவனைச் நான் கடைசியாக சந்தித்த ஏப்ரல் 02-ம் தேதி அவன் சொன்னான்.
தொடரும்...
வந்தாச்சு...பதிவு வாசித்துவிட்டு வரேன்
பதிலளிநீக்குகீதா
வருக நல்வரவு
நீக்குநோஓஓஓஓஓஓஓஒ இது திட்டமிடப்பட்ட ஜதீஈஈஈஈஈ:) .. மீதான் 1ஸ்ட்டூஊஊஊ:)) கிலர்ஜி இப்போ உல்லாசப்
நீக்கு“பயணத்தில” இருக்கிறாரோ?:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))
பயணமெல்லாம் இல்லை பழைய பதிவு போட்டு மூன்று தினங்கள் கடந்து விட்டதே...
நீக்கு'நான் அதிகமான பணத்தேவையில் வாழ்ந்தேன்' - இந்த வரிகள் உங்கள் துயரத்தைக் கோடிகாண்பிக்கிறது. மனைவி என்பவள், கணவன் எவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறான் என்று புரிந்து, குருவி சேர்ப்பதுபோல், தான் கஷ்டப்பட்டாலும் பணத்தைச் சேமித்து வைப்பாள். மற்றவர்களுக்கு பணத்தின் அருமை தெரியாது. ஏதோ..துபாயில் தங்கம் வெட்டிக் கொண்டுவருகிறார் என்று நினைத்து ஆடம்பரமாகச் செலவழிப்பர். உங்கள் எழுத்து உங்களின் வருத்தத்தைக் கோடிகாண்பித்தது.
நீக்குஉண்மை நான் சம்பாரித்த பணத்துக்கு இந்நேரம் எனது மனைவி இருந்திருந்தால் அவளை உலகம் கோடீஸ்வரி என்று சொல்லி இருக்கும்.
நீக்குஉழைத்தும், சேர்க்கும் பக்குவமறியாத என்னை நினைத்து நானே பல நேரங்களில் வெறுக்கிறேன்.
உறவுகள் செய்த துரோகம் மறக்க இயலவில்லை.
பாலஸ்தீனியனிடம் பணம் கொடுத்தால் வராது என்பதே வளைகுடா நம்பிக்கை... கடைசி வரி வாசிக்கையில் இதயம் கணத்தது நண்பரே..
பதிலளிநீக்குஇது 99 சதவீதம் மட்டுமே உண்மை வருகைக்கு நன்றி நண்பரே
நீக்குமனைவி இருந்திருந்தாலும் சரி இல்லை என்றாலும் சரி செலவு இல்லாமலா இருக்கும். மனைவி இல்லை என்றால் செலவு இல்லை என்பது எப்படிப் பொருந்தும் தெரியவில்லை...குடும்பம் என்று இல்லை என்றால் சரி ...ஆனால் குழந்தைகள் இருக்கும் போது...
பதிலளிநீக்குஎக்ஸின் மகன் அழகாக இருக்கிறார். எமராத்தியன் சட்டென்று ஏமாத்தியன் என்று முதலில் பாட்டுவிட்டது ஹா ஹா ஹா....
சரி அவரை எப்படித் தொடர்பு கொண்டீர்கள் என்ன ஆச்சு என்று அறிய தொடர்கிறோம் ஜி
கீதா
வருக தங்களது கருத்துரைக்கு நன்றி.
நீக்குஎமராத்தியன் உங்களது கருத்துரையை படிக்காதவரை நல்லது.
காத்திருப்புக்கும் நன்றி
உண்மை.. மனைவி இல்லை எனில்தான் செலவு அதிகமாகும் என திட்டும் மூடர்களுக்குச் சொல்லி வையுங்கோ..
நீக்குஅது ஒன்றுமில்லை நீங்கள் பணம் கையில் நிக்குதில்லை எனச் சொல்லிச் சொல்லி கார் வாங்கிட்டீங்கள் எனும் பொறாமை மக்களுக்கு ஹா ஹா ஹா.. இப்படிச் சந்தோசம் கூட இல்லை எனில் வாழ்வதன் அர்த்தம்தான் என்ன.. இது அவர்களுக்குப் புரியாது..
ஆம் எனக்கு எல்லா வகையிலும் பணம் கூடுதல் செலவு ஆனது உண்மையே...
நீக்குநண்பர் சொன்ன வார்த்தை வியப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்...
பதிலளிநீக்குவாங்க ஜி விரைவில் நிறைவுப்பகுதி வருகைக்கு நன்றி
நீக்குஎக்ஸ் என்ன சொன்னார் என்பதை அறிய தொடர்கிறோம் ஜி. ஏதோ ஒன்று இருக்கிறது என்று தெரிகிறது.
பதிலளிநீக்குதுளசிதரன்.
ஆம் விடை விரைவில்... நன்றி
நீக்குமுதல் படத்தில் கில்லர்ஜியைக் காணவில்லையே..
பதிலளிநீக்குஆஆஆஆஆ தன் வேலை இல்லா டென்ஷனால மறந்திருப்பாரோ அனைத்தையும் அந்த எக்ஸ்:).. குண்டுப்பையன் ரொம்ப அழகு.
சரி சரி கெதியா தொடருங்கோ.. அந்த ரெண்டாயிரம் என்னாச்சு? இந்தியப் பெறுமதி எவ்வளவு?..
முதல் படத்தில் மைய வரிசையில் ஒரு அரபிக்கும், பெண்ணுக்கும் இடையில் நிற்கிறேன்.
நீக்குஇந்திய ரூபாய் 34000/
ஆஆஆங்ங் கண்டு பிடிச்சிட்டேன்ன்ன்:)
நீக்குநீங்க ஸ்கோட்லாண்டில் இருக்க வேண்டியவர்.
நீக்குஎன்ன திடீர்னு தொடர் ஒன்று ஆரம்பித்து விட்டீர்கள்? தொடர்கிறேன். அப்புறம் கொஞ்சம் பத்தி பிரித்துப் போடலாமே ஸினப் ஜி... படிக்க வசதியாய் இருக்கும்.
பதிலளிநீக்குபதிவு நீண்டதால் இரண்டாக பிரித்தேன் ஜி இனி கவனம் செலுத்துகிறேன் நன்றி
நீக்குசிறு சிறு பத்திகளாகப் பிரித்தால் சிரமமில்லாமல் படிக்கலாம். முடிந்தால் செய்யுங்கள்.
நீக்குமாற்றி விட்டேன் நண்பரே தற்போது சரியாக இருக்குமென்று நினைக்கிறேன்...
நீக்குபதிவை தொடர்கிறேன்.நண்பரின் மகன் நன்றாக இருக்கிறார்.
பதிலளிநீக்குவருக சகோ தொடர்வதற்கு நன்றி
நீக்குமுக்கியமான இடத்தில் 'தொடரும்' போட்டுட்டீங்களே.
பதிலளிநீக்குநீங்க அரபிக்களோடு உட்காருவதற்கு உங்களுக்கு தைரியம் கொடுத்தது அரபி மொழி கற்றதுதான் என்று நினைக்கிறேன். அதற்கு உங்களுக்குப் பாராட்டுகள்.
'தவறு' என்ன என்பதையும் கோடி காண்பித்திருக்கலாம்.
பத்தியாகப் பிரித்திருந்தால் படிக்க எளிதாக இருந்திருக்கும்.
உங்கள் மொழி ஆர்வத்துக்கு என் பாராட்டுகள். சில நாட்கள் முன்பு மலையாளி, அருமையா அரபியில் வக்கீல் ஒருவரோடு பேசிக்கொண்டிருந்தார். ஒரு மொழியைக் கற்றுக்கொள்வது மிகவும் உதவியாக இருக்கும்.
வருக நண்பரே பேசும் தைரியம் இருந்ததே நான் சமபந்தி விருந்துகளில் முன்ணணியில் நிற்பதற்கு காரணம்.
நீக்குதவறு ஃபைல்களில் முக்கியமான பேப்பர்களை தவிர்த்து மற்ற பேப்பர்களில் மேலாளர் இடவேண்டிய கையெழுத்தை இவன் போட்டு விட்டதே...
நான் பலமுறை சொல்லியும் கேட்கவில்லை ஒருநாள் மாட்டிக்கொண்டான். இதனால் எனது வேலைகள் துரிதமாக முடியும்.
மலையாளிகள் மொழி பழகுவதில் வல்லவர்கள் இதில் அவர் முஸ்லீமாக இருந்தால் 90% படிக்கத் தெரிந்தவர்களே...
மிஸ்டர் எக்சின் குட்டி ஜுனியர் அழகா இருக்கார் .
பதிலளிநீக்குஅந்த பணத்தை நீங்க நிச்சயம் கொடுத்திருப்பிங்க ஆனா எக்ஸுக்கு என்னாச்சோ அவர் என்ன சொன்னார் ? அந்த கடைசியாக எனும் வரி கொஞ்சம் பதைக்க வைக்குது அடுத்த பகுதியை சீக்கிரம் போடுங்க .
வருக நிச்சயமாக நான் பணத்தை கொடுத்து விடுவேன் என்ற தங்களது நம்பிக்கைக்கு நன்றி.
நீக்குபதிவு நீண்டதால் தொடரும் போட்டேன்.
விதவன்... நல்லாவா இருக்கு இந்த வார்த்தை?!
பதிலளிநீக்குவாங்க சகோ விதவை என்ற பெண்பாலுக்கு எதிர்பதம் விதவன் என்பது சரிதானே ?
நீக்குநீங்களும் இடம் பெற்ற முந்தைய பதிவுக்கு வரவில்லையே....
கொஞ்சம் பிசி
நீக்குஅருகில் இருந்து கவனிப்பதைப்
பதிலளிநீக்குபோல இருக்கிறது..
தொடர்கிறேன்...
வாங்க ஜி தொடர்பவமைக்கு நன்றி
நீக்குவரிக்கு வரி சுவாரசியத்தைக் கூட்டுகிறீர்கள். இயல்பாய் அமைந்த திறமை இது. தொடருங்கள்.
பதிலளிநீக்குவருக நண்பரே வருகைக்கு நன்றி
நீக்குஅருமை
பதிலளிநீக்குநன்றி
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஉண்மை பதிவு சுவாரஸ்யம் குறையாமல் எழுதி உள்ளீர்கள்.
முழுவதும் படித்தேன். அனைவரும் தங்களுடன் அலுவலகத்தில் வேலை பார்த்தவர்களா? தங்களின் பல மொழிகள் கற்றுத் தேர்ந்த திறனுக்கு என் பாராட்டுக்கள்.
எக்ஸின் குழந்தை முகத்தோற்றம் அருமையாய் இருக்கிறான். எக்ஸின் தந்தை அவருக்கு ஏதாவது உதவிகள் செய்திருக்கலாமே. .. தந்தை மகன் பாசமெல்லாம் அங்கு எடுபடாதோ ?
விலைவாசியின் ஏற்றத்தில் பணபிரச்சனை நமக்கு எப்போதுமே தீராதுதான். எப்போதுமே நம்மை விட வசதியாக வாழ்பவர்கள் கூட நம்மைக் கண்டு பொறாமையால் ஏதாவது சொல்லிக் கொண்டேதான் இருப்பார்கள். அது சில மனிதர்களின் சுபாவம்.
கடைசியில் தங்கள் நண்பர் என்ன கூறினார் என்பதை அறியும் ஆவலில் நானும்...
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருக சகோ என்னுடன் பணியாற்றியவர்களும், சிலரது குடும்ப உறுப்பினர்களும் இதில் எமராத்தி பெண்கள் இல்லை அவர்கள் பெரும்பாலும் குரூப் படங்களை தவிர்ப்பார்கள்.
நீக்குதந்தையின் உதவியாலும் குடும்பம் ஓடியது இருப்பினும் வேலை கிடைப்பது அதுவும் பாலஸ்தீனியருக்கு குதிரைக் கொம்பு.
தங்களது விரிவான கருத்துரைக்கு நன்றி.
வரவும் செலவும் பிரிக்க முடியாத நாணயத்தின் இரு பக்கங்கள்!
பதிலளிநீக்குசிறப்பான பதிவு
முடிவைப் பார்த்து முடிவைச் சொல்கிறேன்.
வருக நண்பரே தங்களது கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி.
நீக்குமுழு அறிமுகத்திற்குப் பின் விசயத்திற்கு வந்ததால் உணர்ந்து படிக்க முடிகிறது தொடர்கிறேன்
பதிலளிநீக்குகவிஞரின் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி
நீக்குசினப்பு கில்லர்ஜி யின் பதிவு ரசிக்க வைத்தது
பதிலளிநீக்குஹா.. ஹா.. ஹா.. வருகைக்கு நன்றி ஐயா.
நீக்குபதிவின் கடைசி..இரண்டாவது..கொண்டு வந்திருந்தால்.... பிரச்சினையை ரெம்ப ரெம்ப சந்திக்க வேண்டியிருக்கும் ..உண்மை..நண்பரே...இங்கே ஒருத்தர் ஒன்னுக்கூட கொண்டு வராமலயே ஏகப்பட்ட இம்சைகளை சந்திச்சுகிட்டு இருக்காரு.... தங்கள் கருத்துரையில் கிளிக் செய்தால் கூகுள் பிளசில் பழைய பதிவை காட்டுகிறது... நண்பரே...அண்டார்டிகாவை சுத்தி வர வேண்டி இருக்கிறது... இத்துண்டு கல்கோவிலையே சுற்றாதவன்.. அண்டார்டிகாவை சுத்த விட்டால் தாங்குவேனா... .. என்னவென்று பார்க்கவும் நண்பரே.... நேரம் கிடைப்பது கஷ்டமாக இருக்கிறது..
பதிலளிநீக்குவருக நண்பரே இந்தக் குழப்பம் புதிதாக இருக்கிறதே... பக்கத்தில் இருக்கும் முண்டக்கன்னி அம்மனை வேண்டிக் கொள்ளுங்கள் நண்பரே...
நீக்குஎக்ஸீன் குழந்தை அழகு! சஸ்பென்ஸீல் விட்டிருக்கீங்க! அடுத்ததுக்குப் போறேன்.
பதிலளிநீக்குவருக வருகைக்கு நன்றி
நீக்குஅபுதாபியில் வாழ்க்கை மற்றும் உத்தியோகம் நிதியகண்டம் பூர்ணாயுசு என்று சொல்லாமல் சொல்லியுள்ளீர்கள். பாலஸ்தீனியரின் கதை இதற்குச் சான்று. அடுத்த பதிவை எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன்.
பதிலளிநீக்குவருக நண்பரே தங்களின் கருத்துரைக்கு நன்றி.
நீக்குஅடுத்த பதிவு "ஒஸாமாவும், நானும்" வெளியிட்டு விட்டேன்.