தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், மே 24, 2018

ரஜினிகாந்த் அவர்களுக்கு...


எமது உயிரினும் கீழான திரைப்பட நடிகர் திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு தாங்கள் உண்மையான கன்னடர்தானா ? எமக்கு ஐயம் வரக்காரணம் திடீரென்று தாங்கள் உம்மை க்ரீன் தமிழன் என்று சொல்லிக் கொள்வதால்தான். இது இனத்துரோகம் இல்லையா ? உம்மை கன்னடர் என்று சொல்லிக் கொண்டே அரசியலுக்கு வருவதில் என்ன தயக்கம் ? பதவி சுகத்துக்காக தனது இனப்பற்றை களைந்த நீர் பிற இனமான தமிழரின் பற்றை காப்பீரா ? உம்மை நம்பி தமிழக மக்கள் எப்படி வாக்கரிசி மன்னிக்கவும் விரலின் தவறு எப்படி வாக்கு அளிப்பார்கள் ?

உமது கட்சியின் கொள்கை என்னவென்று நிருபர்கள் கேட்டதற்கு உமது தலை கிறுகிறுத்து விட்டது என்று சொல்லி விட்டு சிரித்தது முறையோ ? கேவலம் மாநகராட்சி கடை வாடகையை நியாயமாக தர மனமில்லாத உமது மனைவியை கண்டிக்க வழியில்லாத நீர், உமது இரண்டாவது மகளை கணவரோடு வாழ வைக்க இயலாத நீர் தமிழக மக்களை ஆள நினைப்பது மக்கள் மாக்களாக இருப்பதாலா ? எல்லா சுகமும் அனுபவித்து விட்டோம் சிவலோகப்பதவி அடையும் முன்பு முதல்வர் பதவி சுகமும் அனுபவிப்போம் என்று நினைப்பது நியாயமாரே ?

ஸ்ரீ ராகவேந்திரா திருமண மண்டபம் ஏழைகளுக்கு என்றீரே பாத்திரம் கழுவுவதற்கு வந்த தொழிலாளர்களைத் தவிர வேறெந்த ஏழை அங்கு வந்து இருக்கிறாள்//ன் ? பெங்களூருவில் தொழில்த்துறைகள் தொடங்கிய நீர் தமிழ் நாட்டில் தொடங்காததின் காரணம் என்றாவது தமிழன் ஓலையை கட்டி விரட்டி விடுவான் என்ற தங்களது உண்மையான கணிப்புதான் காரணமா ? செல்வி. ஜெயலலிதா அவர்களின் மரணம்தான் தங்களது ஸிஸ்டம் சரியில்லை என்ற கண்டுபிடிப்பா ? அல்லது இதுவரை தாங்கள் உகாண்டாவில் தங்கி விட்டதால் தமிழக அரசியல் அறியாது இருந்து விட்டீரா ? அல்லது நம் இனத்தை எதிர்க்க வேண்டாம் என்ற தங்களது உயர்ந்த பண்பா ?

இரண்டு மலைகள் சரிந்து விட்டதால் இனி வெற்றி பெறலாம் என்ற நப்பாசையா ? தமிழர்களின் நலனுக்காக என்றாவது உமது குரல் ஒலித்ததுண்டா ? அப்படிச் செய்யாத நீர் முதல்வர் பதவிக்கு ஆசைப்படல் நன்றா ? உமது மூத்த மகளுக்கு ஐ.நா.சபையின் தூதர் பதவி கொடுத்தாரே மோடி இது மோசடி இல்லையா ? தீவிரவாதிகளுக்கு ஆயுதங்கள் வைத்துக் கொள்ள இடமளித்த காரணத்தால் ஹிந்தி திரைப்பட நடிகர் சஞ்சய் தத்தை கைது செய்து சட்டம் சிறைத் தண்டனை வழங்கிபோது அவர் எனது நண்பர் மன்னிப்பு கொடுக்கலாம் என்றீரே... இதுதான் உமது ஆண்மைத்தனமான ஆன்மீக அரசியலா ?

நீதியை நிலைநாட்ட, தனது மகனையே தேர்க்காலில் நசுக்கி தண்டனை கொடுத்த மனுநீதிச்சோழன் வாழ்ந்த தமிழக வரலாறு உமக்குத் தெரியுமா ? உம்மைச் சொல்லிக் குற்றமில்லை உமக்காக //தமிழ் அழகனும் நானே// என்றும் //ஒருதுளி வியர்வைக்கு ஒரு சவரன் தங்கக்காசு// என்று பாடல் எழுதிக் கொடுத்தானே ஊதாத்தமிழன் அவனைப் போன்றவர்கள் இருக்கும்வரை உம்மைப் போன்றவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். கக்கா போகும் ஸிம்பிளை எல்லாம் உமது வேதவாக்காக கருதும் விசிலடிச்சான் குஞ்சுகள் தமிழகத்தில் ஏராளம்  உள்ளவரை இப்படித்தான் நடக்கும். இவ்வளவு கோடிகள் பணமிருந்தும் அடிக்கடி இமயமலை சென்று தவழ்ந்து வரும் உம்மைக்கண்டு நான் வியந்ததுண்டு உமது தேடல் என்னவென்று ? இப்பொழுது உமக்கு ஏனிந்த பேராசை ? உம்மால் கர்நாடகத்தில் அரசியல் செய்ய இயலாது என்பதாலா ? எவ்வளவு பெரிய அறிவாளி என்றாலும் அரசியலுக்கு வந்தால் கோமாளிதான் என்பது உமக்கு தெரியாதா ?

மஹாத்மா காந்தியையே அரசியலில் கோமாளி ஆக்கியவர்கள்தானே மக்கள். உமது உடன் பிறந்த சகோதரர் திரு. சத்திய நாராயணா அவர்களின் குணாதிசியம் கண்டு நான் இன்றுவரை வியக்கின்றேன் அவர் எனது சகோதரராக பிறக்கவில்லையே என்று நான் பலமுறை சுயநலமாக வருந்தி இருக்கிறேன். அந்தக் காரணங்களை விளக்கி எழுதினால் பல பக்கங்கள் வரும் ஆகவே வேண்டாம். தமிழக மக்களுக்கு உமது சகோதரரின் குணாதிசியம் தெரியாது காரணம் தமிழக மக்கள் நிழலை கண்டு மயங்குபவர்கள் ஆனால் நான் நிஜத்தை நாடுபவன் ஆகவே அவரது தம்பியான உமக்கு வேண்டாம் அந்த பேராசை. எல்லாம் சரி.

திரு. தமிழருவி மணியன் அவர்களுக்கு எமனேஸ்வரம் சென்று செய்வினை செய்து வந்தது முறையா ? தயவு செய்து அந்த செய்வினையை அகற்றி விடுக காரணம் அவர் சிறந்த தமிழ்ப் பேச்சாளர் அவர் மேலும் பண்படல் வேண்டும் வீணாக மண் ஆகிவிடல் கூடாது இது எமது பேராசை. உமது கௌரவத்தை இப்படியே காப்பாற்றிக் கொள்வதே உமக்கு அழகு. இல்லையேல் மேலும் வரும் இழுக்கு. அரசியல் அறியாத எமக்கு உம்மை கேள்வி கேட்கும் பக்குவம் அறியாததால் இத்துடன் நிறுத்துகிறேன்.

அன்புடன் தமிழக நலன் நாடும் உண்மைத்தமிழன்
தேவகோட்டை கில்லர்ஜி.

சாம்பசிவம்-
அடுத்து உலக்கை நாயகனாக இருக்குமோ...
Chivas Regal சிவசம்போ-
அவரு தமிழருல அவருமா ?


காணொளி

ரசிகன் என்ற நண்பர்களே... கர்நாடகாவுக்கு லாரி ஓட்டிச் சென்ற தமிழர் அவசியமின்றி அடி வாங்குவதை பாரீர். இவரை உனது தந்தையாக நினைத்துப்பார் இதன் வலிமை புரியும். சென்னையில் கன்னடன் குடும்பத்துடன் பாதுகாப்பு. இந்தியர்களிலேயே மொழி வெறியன் கன்னடரே இது நானறிந்த உண்மை. அபுதாபியில் ஒரு கன்னடனிடம் ஒரு தமிழர் கூட்டமே செத்துப் பிழைத்து வாழ்ந்தது, இன்றும் வாழ்கிறது. காரணம் மொழிவெறி விரைவில் இதனைக் குறித்து விபரமாக பதிவு தருகிறேன்..

73 கருத்துகள்:

 1. அடேயப்பா அரசியல் மேடையில் ஏறினால் நிச்சயம் கவனிக்கத்தக்கராய் இருப்பீர்கள் புள்ளிவிவரமும் சொல்லிச்செல்லும் லாவகமும் அற்புதம் வாழ்த்துக்களுடன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கவிஞரின் வருகைக்கு நன்றி.
   எமக்கு அரசியல் தெரியாது நினைவில் கொள்க!

   நீக்கு
  2. அரசியல் "பண்ண " எனச்சொல்லி இருக்கலாமோ

   நீக்கு
 2. மீதான் 1ஸ்ட்டூஊஊஊஊஉ.. ரஜனி அங்கிள் நா... இங்கிருக்கேன்ன்ன்ன்ன்ன்:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பரமக்குடியில் இருக்கிறேன் விரிவாக பதில் தர இயலுமென்று தெரியவில்லை.
   - கில்லர்ஜி

   நீக்கு
  2. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் முடியல்ல:)) ஏதோ மற்ரும்படி பந்தி பந்தியாப் பதில் குடுப்பவர்போலவேஏஏஏஏஏஏ ஒரு பில்டப்பூஊஊஊஊ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா:).

   நீக்கு
  3. செல்லில் ஒரு அளவே சொல்ல முடியும்.

   நீக்கு
 3. நல்லாத்தானே போய்க் கொண்டிருந்துது திடீரென ஆரு கில்லர்ஜியை அரசியலில் குதிக்கப் பண்ணியது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

  ச்சும்மா புளொக்கில எழுதாமல்.. நியூயோர்க் ல பெரிய மேடை போட்டு மைக் பிடிச்சுக் கோசம் போடுங்கோ.. உண்ணாவிரதத்துக்கு ஆட்கள் வேணுமெனில் ஜொள்ளி அனுப்புங்கோ.. தேம்ஸ் கரையில் இருந்து ஒரு பஸ் ல வாறோம்ம்:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா ஹா ஹா அதிரா நானும் வாரேன் கூவத்துலருந்து உங்களோடு...நமக்கெல்லாம் கும்பலோடு கோவிந்தா போட்டுத்தான் பயக்கம்... ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
  2. வாங்க அதிரா நான் அரசியல்வாதி அல்லன் ஆதரவுக்கு நன்றி.

   நீக்கு
  3. ஆஆஆஆஆஆ கீதா அப்போ வாங்கோ லெமோ கார் அனுப்புவார் கில்லர்ஜி:)).. ஹையோ மட்டின் பிர்ர்ர்ராஆஆஆணிக்கு மட்டும்தேன் ஓடர் குடுக்கச் சொன்னேன்ன் இப்போ வெஜ் பிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ராஆஆஆஆஆணிக்கும் ஓடர் பண்ணிடுங்கோ கில்லர்ஜி....

   நீக்கு
  4. உண்ணாவிரதம் இருக்க பிரியாணி எதற்கு ?

   நீக்கு
 4. வீடியோ என்ன கொடுமை.. பார்க்கவே முடியல்ல... இதைத்தட்டிக் கேட்க ஆருமே இல்லையோ தமிழ் நாட்டில்??????

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரஜினி ரசிகர்கள் தட்டிக் கேட்க வேண்டாம். உண்மையை புரிந்து கொண்டால் போதுமானதே...

   நீக்கு

 5. ஏண்ணா இப்படி எல்லாம் கேள்வியா கேட்டேள்ன்னா அவர் மறுபடியும் இமயமலைக்கு போயிருவார்ன்னா சித்த இருங்ககோ அவர் சொன்ன போர் தமிழ்நாட்டில் ஆரம்பிச்சிடுச்சு அதுக்கு பயிற்சி எடுத்துண்டு இருக்கிறார்

  பதிலளிநீக்கு
 6. அன்பின் ஜி...
  அருமையாகச் சொன்னீர்கள்...

  பிறகு வருகிறேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக ஜி ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

   நீக்கு
 7. சில கேள்விகள் நியாயமானவை.

  பதிலளிநீக்கு
 8. கில்லர்ஜி எனக்கு ஒன்றே ஒன்று புரியலை.....நீங்கனு இல்லை...பலரும் தமிழர் தமிழர்னு சொல்லுவது எனக்குப் புரியலை... சத்தியமாக எனக்குப் புரிவதில்லை...ஸோ மீ அவுட் ஆஃப் ஃபோக்கஸ்..

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாம் அனைவருமே ஓரினம் என்றால் தமிழன் கேரளாவிலோ, ஆந்திராவிலோ, கர்நாடகத்திலோ முதல்வராக வேண்டாம் சட்டமன்ற உறுப்பினாக இயலவில்லையே ஏன் ?

   எல்லோரும் இந்தியரே என்ற நிலைப்பாடு வரட்டும் நான் தமிழர் என்ற வகையை மறக்கிறேன்.

   சம்பாரிப்பதற்கு மட்டுமே தமிழ்நாடு முதலீடு பிறந்தகத்தில்.

   காரணம் என்ன ? நாமும் தமிழரே என்ற எண்ணம் அவர்களது மனதில் இல்லை.

   நீக்கு
 9. நல்ல கருத்துத் தான். ஆனால் யார் தமிழர் என்பதில் வேறுபடுகிறேன். என்னைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் வாழும் எவரும் தமிழரே! :)))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தனது வீட்டுக்குள் தாய்மொழி பேசிக்கொண்டு வெளியில் தமிழுக்காக உயிரைக் கொடுப்பேன் என்ற அயோக்கியர்களே இன்றைய அரசியல்வாதிகள் பலரும்.

   நீக்கு
 10. என்றாலும் இப்போதெல்லாம் மாநிலப் பற்று அளவுக்கு அதிகமா இருக்கோனு தோணும்! :)))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காணொளியில் ஒரு தமிழர் அவசியமின்றி அவமானப்படுகிறார் உலகமே பார்க்கிறது.

   அவரது குடும்பத்தினருக்கு எப்படி இருக்கும் ?

   நீக்கு
 11. 1996 தேர்தலுக்கு பின் முதல்வர் பதவியை தப்ப விட்டு விட்டோமோ என்ற எண்ணம் ரஜினிக்கு உண்டு. அதே போல் ஒரு பிரேக் கிடைக்கவேண்டுமென்பதற்காக அவ்வப்போது மூக்கை நுழைத்துப் பார்த்தார்.. இப்போதும் கூட நேரத்துக்காக காத்திருக்கிறேன்னு சொல்வதும் ஏதாவது ஒரு பெரிய புரட்சி இவரை முன்னிட்டு உண்டாக எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார் என்பதே உண்மை. அந்த பிரேக் பாஜக மூலமாக செயற்கையாக உண்டாக்கப்படும். இவர் மோடிக்கு விரோதமாக பேச, எச்ச ராஜா இவருக்கு விரோதமாக கலகம் உண்டுபண்ண, வரும் தேர்தலில் ஓட்டைப்பிரிக்க, அப்புறம் அடுத்த தேர்தலில் பாஜகவோடு கூட்டணி வைக்க... என்று ஏராளமான திட்டம் உள்ளது இவரிடம். தமிழக மக்கள் இவரை புறந்தள்ளவேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருத நண்பா விரிவான கருத்துரைக்கு முதற்கண் நன்றி.

   மிகவும் தெளிவாக இவனை கவனித்து வந்து இருக்கின்றீர்கள்.

   காலம் பாடம் புகட்டும், அதற்கு முன்னோடியாக "காலா" காலை வாறிவிடும்.

   நீக்கு
 12. ரஜினியின் சொந்த வாழ்க்கை பற்றிய தாக்குதல்களை நீக்கி விட்டால் நியாயமான கேள்விகள்தான்.
  "எனக்கு அரசியல் தெரியாது" என்று சொல்வது,"நாங்கள் நண்பர்கள்தான்" என்று கிசுகிசுவில் அடிபடும் நடிகர்கள் கூறுவதை போலத்தான். கமல், ரஜினி எல்லோரும் அப்படி சொன்னவர்கள்தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க மேடம் வாடகைப்பாக்கி விபரமும் சொந்த விடயம் அதை விமர்சிக்ககூடாது என்கிறீர்களா ?

   தாங்கள் அவசியம் அடுத்த பதிவுக்கும் வரவும்.

   நீக்கு
 13. எதிரியையும் நேசிக்க வேண்டும் ஜி எல்லோரும் ஒத்த கருத்தூடையவர்கள் அல்ல மொழிவெறி எனக்கு என்னவோ 1965 க்கு பிறகுதான் கன்னடியரிடம் அதிகம்தெரிகிறது அவர்கள் ஒருவேளை தமிழரிடமிருந்து ஹிந்திஎதிர்ப்பு போராட்டத்துக்கு பின் கற்றதோ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜயா நான் எதிரியின் நிலையிலிருந்தும் சிந்திப்பவனே... ரஜினி எனக்கு கிடையாது.

   ரஜினி கர்நாடகாவில் அரசியல் செய்யாததற்கு காரணம் என்ன ?

   (ஹிந்தி எதிர்ப்பு) தாங்கள் சொன்ன காரணம் எனக்கும் உண்மை என்றே தோன்றுகிறது.

   நீக்கு
 14. போகிற போக்கினைப் பார்த்தால் நீங்களும் அரசியலில் புகுந்து, சாதிக்க...சோதிக்க... உள்ளீர்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக முனைவரே...
   அரசியலில் நுழைந்தால் நிச்சயம் சாதிப்பேன், கண்டிப்பாக மக்களை சோதிக்க மாட்டேன்.

   என்னை யாருக்குத் தெரியும் ? வலைப்பூ நண்பர்களைத் தவிர...

   நீக்கு
 15. என் மனசுல இருப்பதை அப்படியே சொல்லிட்டீங்கண்ணே! என்னை கட்டுன மனுசனுக்கு ரஜினின்னா அம்புட்டு பிரியம். அந்தாளு வந்தா நல்லா இருக்காதுன்னு அவரே சொல்றாரு. ஒழுங்கா வருமான வரி கட்டி இருக்காப்லயா இந்தாளு. நதிநீர் இணைப்புக்கு கொடுக்குறதா சொன்ன 1 கோடி என்னாச்சு?!’’

  அவரோட ரசிகர்க்களை கூந்தலாய்கூட மதிப்பதில்லை. என் ஓட்டு ரஜினிக்கல்ல.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ வருமானவரியை விடுங்கள் நியாயமான வாடகைப் பாக்கியை கொடுக்காதது ஏன் ?

   சந்தர்ப்பவாதிகளை ஒதுக்கியே தீரணும் மாமாவிடம் சொல்லுங்கள்.

   நீக்கு
 16. மொழிவெறி என்ற வெறுப்பு அரசியலை விதைத்ததே தமிழன் தானே... தமிழ் நாட்டிலேயே சாதி அரசியல், அதை வைத்து பிறரைத் துன்பப்படுத்துவது எப்போதும் உள்ளதுதானே. என்றைக்காவது, அப்படி தாழ்ந்த நிலையில் இருக்கும் சாதியைப் பற்றி நாம் கவலைப்பட்டிருக்கோமா? அதனால் கன்னடர்களைப் பற்றி பொதுவாக வெறுப்புடன் எழுதுவது எனக்கு சரியாகத் தோன்றவில்லை.

  காணொளி இன்னும் பார்க்கலை. என்னைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் வாழ்ந்து தமிழில் பேசுபவர்கள் தமிழர்களே. ரஜினி, மற்ற எல்லா அரசியல்வாதிகளைப் போன்று குறைகள் உடையவர்தான். ஆனால் அதையும் மீறி தமிழகத்துக்கு அவரால் நன்மை செய்ய முடிந்தால், அவருக்கு வாக்களிப்பதில் தவறைக் காணவில்லை.

  கில்லர்ஜி எதிர்பார்ப்பது ஐடியல் உலகம். அது இங்கு கிடையாது. என்ன செய்ய?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே...
   தமிழன் வந்தாரை வாழவைக்க மட்டும்தானா ?

   ரஜினி இந்தியாவின் பிரதமராக வரட்டும் நான் எதிர்க்க மாட்டேன். காரணம் அவரும் இந்தியரே...

   கன்னடன் கர்நாடகத்தில் முதல்வராக வரட்டுமே... தமிழன் அங்கு முதல்வராவதை நினைத்துக்கூட பார்க்க முடியாது.

   பிரதமராவதற்கு அரசியலில் குதித்தாக வேண்டும் என்கின்றீர்களா ?

   அதற்கு கர்நாடகத்தில் போய் குதித்து முதல்வராகி நல்ல ஆட்சி செய்யட்டும் இவர் பிரதமராக நானும் ஓட்டுப் போடுவதைப்பற்றி யோசிக்கிறேன்.

   பிழைக்க வந்து தமிழ் பேசுவதால் தமிழன் என்றால் ???
   அரபு நாட்டில் பிழைக்கப் போய் அரபு பேசுபவன் எல்லாம் அரேபியன் என்று சொல்ல முடியுமா ?

   நீங்களும், நானும் கூடத்தான் அரபி பேசுகிறோம் நாம் கடைசிவரை தமிழன்தானே ?

   தமிழக மக்களால் சம்பாரித்த ரஜினி தமிழ் நாட்டில் தொழில் தொடங்கி வேலை வாய்ப்பை கொடுத்து இருக்லாமே...

   தனது மகள் திருமணத்துக்கு (அழையா விருந்தாளியாக) சென்ற ரசிகர்களை போலீஸை வைத்து ஓட, ஓட விரட்டியதை மறந்து விட்டார்களா ?

   மறதி தமிழர்களின் பரம்பரை வியாதி.

   நீக்கு
  2. கில்லர்ஜி - எனக்கு இன்னொரு மொழியைக் கற்றுக்கொள்ளும் திறமை இல்லை. தமிழ் மட்டும்தான் தெரியும். (ஆங்கிலம் வேலைக்கான மொழி). மற்றபடி, அரபி கற்றுக்கொண்டவர்களைப் பார்த்து வியந்து பாராட்டுகிறேன். நீங்கள் திறமை/புத்தி சாலிதான். இதில் சந்தேகமே இல்லை.

   நீக்கு
  3. நானும் திறமைசாலியா ? நன்றி நண்பரே...

   நீக்கு
 17. ஆசை யாரை விட்டது ? இமயமலை சென்றாலும் விடாது .
  காணொளி வரவில்லை வந்தபின் பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா ஹா ..போகாது ஐயா போகாது.. எங்கு போனாலும் ஆசை போகாது:))

   நீக்கு
  2. வருக சகோ இமயமலை செல்பவருக்கு இந்த ஆசை எதற்கு ?
   காணொளி கண்டிப்பாக காணவும்.

   நீக்கு
  3. அதிராவின் மீள் வருகைக்கு நன்றி

   நீக்கு
 18. உங்கள் கேள்விகளில் ஒன்றுக்குக்கூட ரஜினியால் பதில் சொல்ல முடியாது. ஒருவேளை, உங்களின் இந்தப் பதிவை அவர் படிக்க நேர்ந்தால் அரசியலிலிருந்து விலகிவிடவும் கூடும்...அவர் சூடுசொரணை உள்ளவராக இருந்தால்!

  வழக்கம்போல் தாமதமாக வந்ததற்கு வருந்துகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே ரஜினிக்கு தமிழ் படிக்க வராதே... ஒருவேளை தமிழருவி மணியன் படித்து சொல்லலாமோ ?

   நீக்கு
 19. காணொளி பார்த்தேன். தமிழன் எப்படியெல்லாம் அவமானப்பட்டிருக்கிறான். அப்போதெல்லாம் இந்தக் கூத்தாடிகளும் அரசியலை வைத்துக் கூத்து நடத்துபவர்களும் என்ன செய்துகொண்டிருந்தார்கள்?

  இன்னமும் மனசு பதைபதைக்கிறது நண்பரே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களைப்போல் எல்லோரும் உணரவேண்டும் மாற்றம் வரலாம்.

   நீக்கு
 20. வணக்கம் சகோதரரே

  என்ன சொல்வதென்று தெரியவில்லை.
  நானும் காலையிலிருந்து ரெண்டு மூன்று தடவை பதிவை படித்து விட்டேன். தங்களின் தாக்கம் புரிகிறது... எந்த மொழி பேசினாலும், என்றுமே ஒரு மனிதரை ஆசை என்ற வியாதி தொத்தாமல் போவதில்லை. ஏனெனில் அது ஒரு பயங்கரமான தொத்து வியாதி. அந்த வியாதி பரிபூரணமாக இல்லாமல் மறைந்தால்தான் உண்மையான, நேர்மையான அரசு எங்கும் அமையும்.
  காணொளி பரிதாபமாக இருந்தது.மனதை சங்கடபடுத்தியது.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ
   காணொளியில் இருப்பவரை நமது குடும்ப நபராக நினைத்தால் நல்ல சிந்தனைகள் தமிழருக்கு வரும்.

   தங்களது விரிவான கருத்துரைக்கு நன்றி.

   நீக்கு
 21. உண்மைத்தமிழன் என்று ஒரு பதிவரும் உண்டு. தெரியுமல்லோ !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படியா ? எனக்கு இப்பொழுதே தெரியும் தகவலுக்கு நன்றி.

   நீக்கு
 22. Test msg.

  கில்லர்ஜி பார்க்கவும்

  பதிலளிநீக்கு
 23. சாட்டைஅடி வரிகள்..

  இதில் பல எங்கள் மனதிலும் எழும்...

  எத்தகைய சுயநல நடிகர்கள்...வாழ்க்கையிலும் நடிக்கும் கொடுங்கோல் மனிதர்கள்...இவர்கள்...


  பதிலளிநீக்கு
 24. அன்பின் ஜி..

  பிறகு வருகிறேன் என்று தான் சொன்னேன்...

  அதற்குப் பிறகு ஏழெட்டு தடவை இந்தப் பதிவைப் படித்து விட்டேன்..

  தேவையில்லாமல் ஏன் இவரைப் பற்றி நினைத்துக் கொண்டு?..

  தன் மகள் திருமணத்திற்கு வந்த ரசிகர்களை போலீஸ் வைத்து விரட்டியடித்த சம்பவத்தை நீங்களே சொல்லி விட்டீர்கள்..

  இதன் பின்னும் அவருக்குக் கொடி பிடிப்பவர்களை என்ன என்று சொல்வது!..

  சாட்டையை எடுத்து நமக்கு நாமே அடித்துக் கொள்ள வேண்டியது தான்.. வேற என்ன செய்ய!?..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி
   அயோக்கியர்களை தடுக்காமல் இருப்பதுகூட குற்றச்செயல்தானே..

   நீக்கு
 25. ரசிகர் என்றோர் இனமுண்டு..அதற்கோர் தனியே குனமுண்டு ...தலைவரே....

  பதிலளிநீக்கு
 26. கில்லர்ஜீ!

  இந்த யு ட்யூப் வீடியோக்கு யார் பதில் சொல்றது/?

  https://www.youtube.com/watch?v=JuH89DZcMbw

  https://www.youtube.com/watch?v=lnRwAWi-eIg

  பதிவில் இதையும் அதோட சேர்த்து போடுங்க! தமிழன் பூராம் யோக்கியன் கெடையாது. சும்மா ஒரு பக்கத்தை மட்டும் பார்ப்பது சரியல்ல!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பருக்கு வணக்கம்.
   நான் வெளியூரில் இருக்கிறேன் ஆகவே இந்த இணைப்புக்கு செல்வழி செல்ல இயலாத நிலை. வீட்டிற்கு போனதும் கணினியில் அவசியம் பார்ப்பேன். அதற்கு இன்னும் நான்கு தினங்கள் ஆகலாம்.

   மேலும் நான் என்றுமே நியாய உணர்வாளன் இது உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. எனது பதிவுகளை தொடர்பவர்களுக்கு கண்டிப்பாக தெரியும். இதன் காரணமாகவே குடும்பத்தினரே என்னை குறை சொல்வர்.

   நீங்கள் ரஜினியைப்பற்றி எழுதிய காரணத்துக்காக மட்டுமே வருபவர் அதுவும் தாமதமாக கடைசியில் "கருத்து" போடுவதின் காரணமென்ன ?

   அடுத்த பதிவுக்கு கண்டிப்பாக வந்து கருத்துரை போடவும். நான் எப்படிப்பட்டவன் என்பதை அறிய சற்றே உதவம்.

   பிற மாநிலத்தை தமிழன் ஆள முடியாதபோது தமிழகத்தை பிறர் ஆளக்கூடாது இதுதான் நியாயம்.

   செல்லில் கூடுதல் எழுத இயலவில்லை.வருகைக்கு நன்றி.

   நீக்கு
  2. நண்பரே: நீங்க காரைக்குடி/தேவகோட்டை பக்கம்னு எனக்குத்தெரியும். உங்க பர்சனல் லைஃப் முதல்க்கொன்டு உங்க பதிவிலிருந்து தெரியும். நான் உங்கள குற சொல்ல நான் இங்கே வரவில்லை.

   நீங்க கேட்ட கேள்விக்கெல்லாம் ரஜினிகாந்த் பதில் சொல்லட்டும். எனக்குத் தேவையில்லாதது அது. :)

   ஆனால் நீங்க வெளீயிட்ட வீடியோ பார்க்கும்போது ரத்தம் கொதிக்கிறது. நான் பங்களூரில் வாழும்போது இது போல் கலவரம் வந்ததுண்டு. அநேரத்தில் என்னை அடிவாங்காமல் பார்த்துக் கொண்டவர்கள் கன்னடிகா நண்பர்களதான்.

   அதே சமயத்தில் நான் தொடுப்புக் கொடுத்த இந்த வீடியோ பார்த்தீர்கள்ணா இன்னொரு பக்கம் தெரியும். ஒன்னும் அவசரமில்லை. நீங்க பரமக்குடி, ராம்நாடெல்லாம் போயிட்டு நேரம் கிடைக்கும்போது பாருங்க. அப்போது அப்பாவி கன்ன்டிகா அடிவாங்குவதும், அவர்களீன் வாகனங்கள் தமிழர்கள் சூறயாடப்படுவதும் தெரியும்.

   அதையும் நாம் சமாளீக்கலாம்..

   அவந்தான் மொதல்ல அடிச்சான்னு சொல்லலாம்.

   இல்லைனா காவிரி சட்டப்படி நமக்குத்தான் சொந்தம்னு சொல்லலாம்.

   எப்படி இருந்தாலும் இந்த வீடியோவை பார்ப்பது நல்லது

   நான் கடந்த ஒரு வாரமாகத்தான் கொஞ்சம் ஃப்ரீயாக இருக்கேன். அதனால் இந்தப் பக்கம் வர முடிந்தது. மற்ற நேரங்களீல் தலைக்கு மேல் வேலை. திடீர்னு பிசியாக வாய்ப்புள்ளது.

   நீக்கு
  3. நான் தமிழர்கள் அனைவரும் நல்லவர்கள் என்று நினைக்கவும் இல்லை, சொல்லவும் இல்லை. எல்லா மதத்திலும், ஜாதியிலும், இனத்திலும், மொழியிலும் நல்லவர்களும், கெட்டவர்களும் உண்டு.

   தமிழர்கள் அனைவரும் நல்லவர்களாக இருந்தால் ??? நல்ல சிந்தனை வந்து நல்லவர்களின் ஆட்சியை கொண்டு நல்லவாழ்க்கை வாழலாம். ஆனால் தெளிவான சிந்தனை இல்லாமல் அ.தி.மு.க. அல்லது தி.மு.க. இவர்களிடமே அடிமை வாழ்க்கை வாழ்கிறோம். எனக்கும் அபுதாபியில் கன்னட உயிர் நண்பர்கள் உண்டு.

   இவையெல்லாம் பழக்கத்தின் அடிப்படையில் கிடைப்பதே...
   மீள் வருகைக்கு நன்றி. இன்றைய இரவு பதிவு வரும் நேரமிருந்தால் அவசியம் படித்து கருத்துரை இடுக...

   நீக்கு
 27. ரஜனி பக்கம் வேறு
  தமிழக மக்கள் பக்கம் வேறு
  நாம் இந்தியர் என்போம்
  தமிழை விரும்பும் ஒவ்வொருவரும் தமிழரே!
  நடிகர்மார் ஆட்சி செய்ய
  தமிழக மக்கள் விரும்பமாட்டார்களே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நடிகர்கள்தானே இவ்வளவு காலமும் தமிழகத்தை ஆள்கிறார்கள்.

   நீக்கு
 28. நல்ல வேளை என் உயிரினும் மேலான என்று எழுதாமல் விட்டு விட்டீர்கள்.....!!!!!!!!!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே எனக்கென்ன தலையெழுத்தா ? அப்படி எழுத...

   நீக்கு
 29. சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சி பற்றி பேசி பேசியே தம் படத்தை ஒட்டி விட்டார் என்பது என் எண்ணம்.
  தனிப் பட்ட விமறிசனங்களை தவிர்த்து வேறு விஷயங்களை பார்த்தால் நன்றாக கிழித்து விட்டீர்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சரியாக சொன்னீர்கள் நண்பரே
   தனிப்பட்டது மகள் விவாஹரத்து மட்டும்தான்.

   வேண்டுமானால் அதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்.

   நீக்கு
 30. கேள்விகள் இங்கே. பதில் எங்கே.. சம்பந்தப்பட்டவர் பதில் சொல்வார் என்று தோன்றவில்லை. கேள்விகள் மக்களைச் சென்றடைய வேண்டும். பதிலை வாக்குகளாகச் இவர்கள் சொல்ல வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே அருமையாக சொன்னீர்கள் மிக்க நன்றி

   நீக்கு