தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், மே 30, 2018

சத்தியமங்கலம், சந்தேகப்புயல் சத்தியமூர்த்தி


     பல திரைப்படங்களில், பார்த்து கேட்டு இருப்பீர்கள் கசாநாயகன் சொல்வார் கசாநாயகியிடம், ''உன் கழுத்துல நான்தான் தாலி கட்டுவேன் இதை அந்த ஆண்டவனே வந்தாலும் சரி தடுக்க முடியாது'' இந்த வசனத்தை, எனக்குத் தெரிய 1936 லிருந்து... 2018 வரை எல்லா நடிகர்களுமே பேசி விட்டார்கள் பெரும்பாலும் டப்பிங்காரர்கள் மூலம் என்றாலும் நம்ம பாமரப்பயல்க அவுங்க பேசியதா நினைத்துதானே கை தட்டுவதும், வாழ்க்கைக்கும் எடுத்து கொள்கிறார்கள். சரி இந்த வசனத்தின் பொருள் என்ன ? அதாவது நான் இறைவனைவிட பெரியவன் பலசாலி என்றுதானே அர்த்தம் ? இது இந்த வசனத்தை எழுதிய வசனகர்த்தாவுக்கு தவறாக தெரியவில்லை, இதை பேசிய நடிகருக்கு தவறாக தெரியவில்லை, படத்தின் இயக்குனருக்கு தவறாக தெரியவில்லை, பணத்தை கொட்டி படமெடுக்கும் தயாரிப்பாளருக்கு தவறாக தெரியவில்லை, டப்பிங் பேசியவருக்கும் தவறாக தெரியவில்லை (பாவம் அவரென்ன செய்வார் ? கூலிக்காக இருட்றையில் உட்கார்ந்து பேசி விட்டு வெளியுலகத்துக்கு தெரியாமல் வாழ்பவர்) சரி இவர்களுக்குத்தான் தெரியவில்லை காலம் காலமாய் பார்க்கும் மக்களுக்கு கூடவா தெரியவில்லை ?

இது எனக்கு சந்தேகமாக இருக்கிறது,

இப்படியெல்லாம் தைரியமாக பேசியவர்கள் ஒருநாள் இறைவனுடைய அடியாள் எமன் வரும்போது... சினிமாவில் ரௌடிகளை தூக்கிப் போட்டு மிதிப்பதுபோல் மிதிக்காமல், துப்பாக்கியை எடுத்தும் சுடாமல், அவரை நம்பியே வாழ்ந்து கொண்டு இருக்கும் ரசிகர்களிடமும் ஒன்றும் சொல்லிக் கொள்ளாமல், எமனுடன் எருமை மாட்டில் ஏறிப்போய் விடுகிறார்களே அது எப்படி ? அப்படியானால் இவர்களுக்கு எமனை கண்டால் பயமா ? இறைவனையே போங்க.... டுபுக்கு என்றவர்கள் இறைவனிடம் சம்பளத்திற்கு வேலை செய்யும் சாதாரண எமனிடம் பயப்படுகிறார்களே அதெப்படி ?

இதுவும் எனக்கு சந்தேகமாகவே இருக்கிறது.

 நட்பூக்களே இப்பதிவு எழுதியது 2013-ல் காணொளி தேடியதில் தாமதம் போதுமென்று நிறுத்தி விட்டேன் எமது படத்தொகுப்புக்காக காணுக ! கில்லர்ஜி

காணொளி

57 கருத்துகள்:

  1. ஆவ்வ்வ்வ்வ் மீதான் இங்கின 1ஸ்ட்டூஊஊ.. இருப்பினும் ச.ச மாதிரி எனக்கும் சந்தேகமாகவே இருக்கு ஒருவேளை 2ண்ட்டோ என:)) சரி போகட்டும்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆவ்வ்வ்வ்வ் சந்தேகமே இல்லை.. மீதான் 1ஸ்ட்டூஊஊஊஊஊ ஹா ஹா ஹா..:)

      நீக்கு
    2. சந்தேகம் தீர்ந்ததா ?

      நீக்கு
    3. ஹா ஹா ஹா ஓம் கீதா ஓம்ம்.. இன்று சிறி சிவசம்போ அங்கிளைக் காணம்.. வருவார் ஹா ஹா ஹா..

      நீக்கு
    4. அங்கிள் அடுத்த பதிவில் வருவார்

      நீக்கு
  2. சினிமாவைத் திட்டும் நீங்களே.. அதை நம்பி .. கடவுளோடு ஒப்பிட்டு இப்படி ஒரு கிளவியை... ஹையொ கேள்வியைக் கேட்கலாமோ கர்ர்ர்ர்:))...

    அது பணத்துக்காக வசனம் இயற்றி நடிக்கிறார்கள்.. அதுக்காக கடவுளை விட மேல் என ஆகிட முடியுமோ?...

    பார் சென்று குடித்தவர்கள்கூட போதையில் அப்படித்தானே பேசுவார்கள்.. கடவுள் எங்கே இருக்கிறார்? ஜெமன் எங்கே இருக்கிறார்? இப்போ வரச் சொல்லு என்பினம்? ஹா ஹா ஹா .. அதுக்காக அவர்களால் போற உயிரைப் பிடிசு நிறுத்த முடியுமோ?.. இது என்னைப் பொறுத்து ரைம் வேஸ்ட் பண்றீங்க கில்லர்ஜி!!.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா இது சிவாஸ் ரீகலோட பதிவு...பாருங்க அந்தாளைக் காணலை...ஹா ஹா ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    2. நீங்களும் நானும் அவரை அடிக்கப் போவோம்னு ஆள் டபாய்ச்சுட்டார் பாருங்க.....ஹா ஹா ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    3. வாங்க அதிரா...
      இப்படி சொல்லும் கடவுளை நம்பும் ஆத்திகர்களைவிட, கடவுள் இல்லை என்று சொல்லும் நாத்திகர்கள் உயர்ந்தவர்களே...

      நீக்கு
    4. இங்கு போட வேண்டிய கீதாவின் பதிலை மேலே போட்டு விட்டேன்ன்..

      அது உண்மைதான் கில்லர்ஜி.. கடவுள் பெயரைச் சொல்லிக்கொண்டு அநியாயம் பண்ணும் ஆத்திகர்களை விட.., நேரடியாக கடவுள் இல்லை எனத் திட்டுவோர் பறவாயில்லை எனத்தான் சில சமயம் எண்ணுவேன் நானும்..

      நீக்கு
    5. எனது கருத்துடன் இணைவதற்கு நன்றி

      நீக்கு
  3. காணொளி கலக்கல் தொகுப்பு ..எல்லா நடிகர்களும்,டைரக்டர்களும் வியாபார நோக்கில்தான் அப்படிப்பட்ட வசனங்களை வைக்க பேச அனுமதிச்சிருப்பாங்க .இவர்கள் மனிதர்களின் உணர்வுகளோடு விளையாடுகிறார்கள் .நேற்று வந்த ட்ரெய்லரும் எந்த சூழலில் வெளியாயிருக்கு என்பதை யோசிச்சி பார்த்தா தெரியும் .
    .சரி சமீபத்து ட்ரெய்லர் யூ ட்யூபில் பார்த்தேன் :) இப்போ உங்க பதிவுங்களையும் தொடர்ந்து வாசிக்கிறேனா சித்தப்பா ஒவ்வொரு வார்த்தை பேசும்போதும் அடுத்த வரிக்கு உங்க பதிவின் வரிகள் நினைவுக்கு வந்து ட்ரெய்லரை முழுசா பாக்க முடியாம தடை பண்ணுது .அங்கே பின்னூட்டம்லாம் பார்த்தா அவ்ளோதான் ஹார்ட் அட்டாக்கே வந்திடும் .அதனால் நான் சொல்வது நம்ம மக்களை திருத்துவது கஷ்டம் .நான்லாம் சினிமா பார்ப்பதில்லை எப்பவாது நல்ல படம்னா யூ டியூப் .
    ஆனா இந்த கூத்துகளையெல்லாம் வானத்து மேலேயிருக்கும் ஆண்டவன் :) கடைசில //ர் // போடக்கூட பயம்மாருக்கு :) பார்த்து சிரிப்பா சிரிக்கிறார் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ
      திரைப்படங்களின் வசனங்கள் கேனத்தனமாக போய்க்கொண்டு இருக்கிறது.

      நீங்கள் சொன்னது போல் இறைவன் சிரிக்கத்தான் செய்வார்.

      நீக்கு
    2. கில்லர்ஜி அப்புறம் இன்னொன்னும் எழுத மறந்துட்டேன் .அம்மா எப்பவும் சொல்வாங்க சினிமா பாக்க போனா அங்கே படம் பார்த்து கடலை பாப்கார்ன் சாப்பிட்டு தோலையும் பேப்பரையும் வீசிட்டு வர மாதிரி சினிமாவையும் அங்கேயே விட்டுட்டு வந்திடனும் .
      அது பொழுதுபோக்கு அவ்வளவே.

      நீக்கு
    3. உண்மையான வார்த்தை இப்படி பொழுது போக்காக தமிழர்கள் நினைத்திருந்தால் நடிகர்கள் முதல்வராக வந்து இருக்க மாட்டார்களே...

      நீக்கு
  4. கில்லர்ஜி.... சினிமா வசனம், காட்சிகள் எல்லாம் சும்மா டைம் பாஸ். சமீப காலங்களில் (10 வருடங்களில்), கதாநாயகன் அறிமுகக் காட்சியே ஓவர் பில்டப்..அதுவும் முன்னணியில் உள்ள சில பல கதாநாயகர்கள்... இதையெல்லாம் சீரியசா எடுத்துக்கொண்டால் நமக்குத் தலைவலிதான்.

    அந்தர்பல்டி அடிக்கும் கதாநாயகனுக்கு சட்டை போடத் தெரியும், துப்பாக்கி சுடுபவனுக்கு துப்பாக்கி பிடிக்கத் தெரியும், ஆளைப் பார்த்த உடனேயே அழகிகள் பல் இளிப்பர் என்றெல்லாம் நாம் அர்த்தம் புரிந்துகொள்ளலாமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே கசாநாயகன் நடந்து வரும்போது தரையில் தீப்பொறி பறப்பதைக் கண்டு கை தட்டி மகிழ்கின்றானே... பாமரப்பயல் ரசிகன் வேறென்ன செய்வது ?

      நீக்கு
  5. கில்லர்ஜி படத்தை எல்லாம் சீரியஸா எடுத்துக்காதீங்க...இட்ஸ் ஜஸ்ட் ஃபார் ஃபன்.....சும்மா பார்த்துட்டுக் கடந்து போகணும் அம்புட்டுத்தான் ஆராயக் கூடாது!!!

    மனுஷன் கொஞ்ச நேரம் ஜாலியா இருக்க எடுக்கற படங்கள்....

    அப்புறம் படத்துலனு இல்லை வீட்டுல கூட சில சமயம் ஏதேனும் கோபத்துல நாம பேசுறதுதான்....ஆண்டவனே இல்லைனும் நம்பலைனும் கஷ்டம் அடுக்கடுக்கா வரும் போது பேசுவதில்லையா....இதெல்லாம் மொமென்ட்ரி...

    நோ ஆராய்ச்சி!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஆராய்சி கிடையாது.
      என்னிடம் சவால் விட்ட உறவினர் உண்டு.

      "நான் நினைச்சபடிதான் நடக்கும் கடவுள் நினைத்தது நடக்காது நீ பார்க்கத்தான் போறே"

      என்று இத்தனைக்கும் ஆத்திகர் அவர் சொன்னபடி நடந்ததும் உண்மை. பல நேரங்களில் நான் இதை நினைத்து சிரித்தது உண்டு.

      நீக்கு
  6. சுவாரஸ்யமான வசனத்தை எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆமாம் மொத்தமாகக் கேட்கும்போது சிரிப்புதான் வருகிறது! அதே போல நான் ஒரு வசனத்தைச் சொல்வேன். "தெரிஞ்சோ தெரியாமலோ..."

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம்ஜி
      ஆம் இந்த வசனம் மக்களிடமும் உண்டு.

      நீக்கு
  7. சினிமாவில் ஆழ்ந்து போகாமல் உலக நினைப்பு இருந்தாலே போதும் கில்லர்ஜி! இதை எல்லாம் தீவிரமாய் எடுத்துக்கக் கூடாது. வீடியோவைப் பின்னர் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ காணொளி அவசியம் பார்க்கவும்.

      நீக்கு
  8. எப்படி..
    இதெல்லாம் எப்படி!?...

    நாங்க ஆடுறதும் பாடுறதும் காசுக்கு..
    பல ஆளை குல்லா போடுறதும் காசுக்கு..
    இப்புடி அடுக்கடுக்கா பேசுறதும் காசுக்கு..
    காசுக்கு.. காசுக்கு.. காசுக்கு!...

    அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தில் வரும் பாடல் இது...

    ஜி!../ உங்களுக்குத் தெரியும்...

    நம்ம ஊர் ஆளுங்களுக்குத் தான்
    அலிபாபா ஹீரோ...

    ஆனா, அரபு நாட்டுல -
    அலிபாபா திருடன் கிட்ட திருடின திருடன்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி
      அருமையான விசயம் சொன்னீர்கள் உண்மையே. அது எம்ஜிஆர் என்பதால் திருடன் என்பதை நம்ம ஆள் ஏற்றுக்கொள்ள மாட்டான்.

      ஏன் அரபு நாட்டுக்கு வந்து அரபு பழகிக்கொண்ட எம்ஜிஆர் ரசிகனே ஒத்துக்கொள்ள மறுக்கின்றானே...

      நீக்கு
  9. நம்ம ஊர்லயே பேசுனானுங்களே....

    எம்ஜியார் மட்டும் கட்டபொம்மனா நடிச்சிருந்தா (!?)...

    பானர்மெனை தூக்குல கட்டி
    தொங்க உட்டுருப்பாரு....ந்னு!...

    அந்த அளவுக்கு வெவரமானவனுங்க!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி இவர்கள்...

      சரித்திரத்தின் அர்த்தங்கள் தெரியாத தரித்திரங்கள்.

      நீக்கு
  10. நான் சின்ன வயதிலும், படித்து முடித்துக் கொஞ்ச நாள் வேலையில்லாமல் இருந்தபோதும் எருமை மேய்த்திருக்கிறேன். அவ்வப்போது அதன்மீது பயணிப்பது உண்டு; குப்புறப் படுத்துச் சுகமாகத் தூங்கிவிடுவதும் உண்டு. இடைஞ்சல் பண்ணாமல் அதுபாட்டுக்கு மேய்ந்துகொண்டிருக்கும்.

    மரணமடைந்தால் மீண்டும் எருமை மீதான சுகப்பயணம் காத்திருக்கிறது. மகிழ்ச்சிதான். யமதர்மனையும் நரகலோகத்தையும் நினைத்தால்தான் பயமாக இருக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

      நீக்கு
  11. காணொளி நல்ல தொகுப்பு.
    நன்றாக இருக்கிறது.

    தலைப்பு அருமை.
    'தன்னை தானே நம்பாது சந்தேகம்' என்ற சிதம்பரம் ஜெயராமன் அவர்கள் பாடல் நினைவுக்கு வருது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ நல்லபாடலை நினைவூட்டினீர்கள் நன்றி.

      நீக்கு
  12. இறைவன் யம தூத்ர்கள் என்றெல்லாம் கேட்கும் போது என்னதான் நினைப்பில் எழுதுகிறார்களோ என்று எனக்குத்தோன்றுகிறது எல்லாமே கற்பனைதானே அதன் அர்த்தத்துக்கு ஆழ அகலம்காண்பது சரியாஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இறைவன் கற்பனையோ, இல்லையோ "இறைவன்கள்" நிச்சயமாக கற்பனைதான் ஐயா.

      அதனைச்சுற்றி பின்னப்பட்டவைகளும் கற்பனைதான்.

      நீக்கு
  13. எமனுடன் போராடமுடியுமா?! போராடினால் ஜெயிக்கதான் முடியுமா?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ, துப்பாக்கியை வைத்து பயமுறுத்த முடியாதா ?

      நீக்கு
  14. வணக்கம் சகோதரரே

    தலைப்பின் வார்த்தைத் தொகுப்பும், காணொளியின் தொகுப்பும் அருமை.
    நாம் அனைவருமே ஆண்டவனால் படைக்கப்பட்டவர்கள். அப்படியிருக்கும் போது "ஆண்டவனே வந்தாலும்" என்ற வார்த்தை மனிதனிடத்தில் வெளித் தோன்றும் போது வரும் மமதையும். கடைசியில் அவனிடம் சென்று அடங்குவதும் அனைத்துமே அவன் செயல்தான். நம்முள் இருந்து எதையும் பேச வைப்பதும் அவன்தான்.
    ஆரம்பம், நடுவில் சுழல்வது, முடிவில் அடக்கம் எல்லாமே ஆண்டவன் செயல்தான். நல்ல சிந்தனையை தூண்டும் பகிர்வு.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ இறைவனை வணங்குபவன்.

      "அவனே வந்தாலும் என்னை ஒன்றும் செய்யமுடியாது"

      என்றால் அகம்பாவம்தானே...

      நீக்கு
    2. நிச்சயமாக தலைக்கேறிய மமதைதான்.

      நீக்கு
    3. மீள் வருகைக்கு நன்றி சகோ.

      நீக்கு
  15. சினிமாகாரன்கள் மாதிரியே..தாங்களும் எமன் என்பவன் எருமை வாகனத்தில் வருவான்..என்று....எமன் என்பவன் எருமை வாகனத்தில் வருவதை இதுவரை யாரும் பார்த்தில்லை..இதை உலாவ விட்டவர்கள்..சினிமாக்காரனைவிட ரெம்ப பலசாலிய இருப்பான் நண்பரே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எமன் வந்தால் உங்களிடம் வாலாட்ட முடியாது நண்பரே...

      நீக்கு
  16. பதில்கள்
    1. முனைவர் அவர்களின் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  17. காதல் காதல் காதல் காதற்போயின் காதற்போயின் சாதல் சாதல் சாதல்
    குயில் பாட்டு பாரதியார்.
    ஏனோ இந்தப் பாட்டு நினைவிற்கு வந்தது. காதலி கடைக்கண்ணைக் காட்டிவிட்டால் மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம் - பாரதிதாசன்
    தமிழ் சினிமாக்களும் இது மாதிரி வசனத்தைத்தான் பேசுகின்றன. பிழைத்துப் போகட்டுமென்று விட்டுவிடுலாமே ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இப்படியே விட்டுக் கொடுத்ததால்தான்... இன்று திரைப்படங்களில் ஒருவன் நூறுபேரை அடித்து வீழ்த்துகிறான் அதை அப்படியே உண்மையாக நம்பிய ரசிகன் அவனைத் தனைவனாக்குகிறான்.

      நீக்கு
  18. நல்ல சந்தேகம் தான்,....

    பதிலளிநீக்கு
  19. சரிதான் மன்னருக்கே சந்தேகமா?
    பதிவு சிந்திக்க வைத்தது பாஸ்

    பதிலளிநீக்கு
  20. அண்ணே! சந்தேகப் புயலா?
    சந்தேகத்திற்குச் சந்திர மண்டலத்திலும்
    மருந்து இல்லையாமே!

    பதிலளிநீக்கு
  21. இந்த வசனத்தை கேட்டு இப்படியெல்லாம் தோணி இருக்கே உங்களுக்குன்னு மலைப்பாக இருக்கு. வித்தியாசமாக தோணுவது தானே நீங்கள். யோசிக்க வைக்கிறது சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது வலையுலக வரவுக்கு வாழ்த்துகள்.

      நீக்கு
  22. எத்தனை படங்களில்,"அந்த ஆண்டவனே வந்தாலும்.. " வசனம் வந்திருக்கிறது என்று நினைவில் வைத்துக் கொண்டு தொகுத்திருக்கிறீர்களே..! பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மேடம் பாராட்டுகளுக்கு நன்றி.

      நீக்கு