சனி, மே 05, 2018

கம்பம், கரட்டுவாதம் கருப்பையா


அதோ கம்போட போறானே யாரு.... தெரியுமா ?
யாருண்ணே ?
அவன்தான் கரட்டுவாதம் கருப்பையா அவங்கிட்டே கவனமா பேசணும்.
எந்த ஊருக்காரர்ணே ?
கம்பம்.
யேண்ணே... வில்லங்கம் புடிச்சவரா ?
ஆமா எதைப் பேசுனாலும் கரட்டுவாதம் பண்ணி ஏழரையை இழுத்துடுவான்.
அப்படியென்ன பெரச்சனை ஓங்கூட... ?
ஆமாடா அன்னைக்கு அவன் வரும்போது சிங்கம் மாதிரி இருக்கீங்கனு சொல்லிட்டேன் அதுக்கு ஏண்டா... என்னை மிருகம்னு சொல்றியாடானு ? சண்டைக்கு வந்துட்டான்.
சரி அவென சொல்லிக்கிட்டு இருக்கும்போதே என்னை எதுக்கு மாடுனு சொன்னே ?
எப்பச் சொன்னேன் ?
எப்பவா இப்ப ஆமாடா அப்பிடினு சொல்லிப்புட்டு எப்பனு கேட்கிறே ?
ஒனக்கு அவனே தேவலை போலயே...
அப்படினா நான் சரியில்லாதவனா ?
நான் அப்படிச் சொல்லலையே...
அப்ப இதுக்கு அர்த்தம் என்ன ?
? ? ?

Chivas Regal சிவசம்போ-
கெரகம் கெழக்கே கெடந்து வருது

சாம்பசிவம்-
இது மாதிரி கேசுகளை எல்லாம் ஜேம்ஸ் ஊரணியில் நிற்கிற ஆளிடம் சொல்லி தண்ணிக்குள்ளே தள்ளி விடணும்

சிவாதாமஸ்அலி-
ஜேம்ஸ் ஊரணியைத்தான் மோடிஜி வாங்கிட்டாரே.... அதனாலதானே அதிராகூட ரெண்டு வருசமா குதிக்க வழியில்லாமல் இருக்காங்க...

தில்லைஅகத்தார்-
அப்ப நம்ம சென்னை கங்கை நதிக்கு வாங்க அதிரா

47 கருத்துகள்:

 1. தில்லை அகத்தார் தேம்ஸ் நதிக்கரையினரை அறைகூவல் விடுத்தும் சென்னை கங்கைக்கு வரமாட்டோம்னு இருக்காங்க போல!!! என்னதான் இருந்தாலும் தேம்ஸ் ஸாரி ஜேம்ஸ் போல இருக்குமானு கேள்வி...ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 2. கம்போடு போறவருக்கு பதிலடி கொடுக்கணும்னா தேம்ஸ் அதிரடி சிலம்பாட்டம் ஆடும் ஆள் தான் வேணும்....நம்மளால எல்லாம் முடியாது...ஹிஹிஹி

  கீதா

  பதிலளிநீக்கு
 3. மீ த ஃபர்ஷ்ட்ட்டு? படிச்சுட்டு வரேன்!

  பதிலளிநீக்கு
 4. ஹாஹாஹா! அதிரடி அதான் வரலையா? நல்ல பதிவு தான்! இப்படியும் அர்த்தம் எடுத்துப்பாங்க தான்!

  பதிலளிநீக்கு
 5. ஹா... ஹா... ஹா... யார் கிட்ட பேசினாலும் சாக்கிரதையா பேசோணும் போலவே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஜி வார்த்தை கட்டுப்பாடு முக்கியம்.

   நீக்கு
 6. ​ஓ... அதிரா வலையுலா வராததற்கு இப்படி ஒரு காரணம் இருக்கா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனி அதிராவும், ஏஞ்சலும் தொடர்ந்து வருவார்கள்

   நீக்கு
 7. விடாக் கொண்டன் கொடாக்கண்டன் கதை போல இருக்கு.

  பதிலளிநீக்கு
 8. ஒரு இடத்தில் தப்பித்து மற்றொரு இடத்தில் மாட்டி....

  பதிலளிநீக்கு
 9. பல பேரிடம் கவனமாகத் தான் பேச வேண்டி இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே நானும் கவனமாகத்தான் இருக்கிறேன்

   நீக்கு
 10. டேம்ஸ் ஊரணிய வித்துப் போட்டாங்களாமா?....

  ஆமா... அன்னிக்கு கெடா விருந்து கூட வெச்சாங்களே!...

  தகிடுதத்தம் தங்கசாமிக்கு இது தெரியுமா..மா?...

  அடுத்த வாரம் வருவாரில்லே... அப்போ கேக்கணும்!...

  பதிலளிநீக்கு
 11. சிலரிடம் வாதம் வம்பு கூடாது.

  பதிலளிநீக்கு
 12. வணக்கம் சகோதரரே

  எதை எப்படி சொன்னாலும் தப்பா? ஐயோ.. இந்த மாதிரி ஆட்களிடம் பேசவே முடியாது போலிருக்கே..

  முன்னே போனா முட்டும்.
  பின்னே போனா உதைக்கும்..அப்படீன்னு சொல்வாங்களே அது போல இருக்கே..

  மறுபடியும் விலங்குடன் ஒப்பீடா? சண்டைக்கு அடித்தளம் போட்டாச்சு. பிரச்சனையை யார் சமாளிக்க போறாங்களோ? நான் தப்பித்துக் கொள்கிறேன்.. ஹா ஹா ஹா ஹா.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோ என்னிடம் சொன்னது போல கருப்பையாவிடம் சொல்லி விடாதீர்கள் பிறகு அங்கும் பிரச்சனையாகி விடப்போகிறது.

   நீக்கு
 13. நாம பேசறதை அடுத்தவங்க எப்படி எடுத்துப்பாங்கன்னு ரொம்ப கவனமா பேச வேண்டியிருக்கு. நாம நினைத்தது ஒன்று அவங்க எடுத்துக்கறது வேறா இருந்தால் பிரச்சனைதான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே புரிதல் சரியாக இருத்தல் அவசியமானது.

   அரசியல்வாதிகளின் பேச்சைக்கூட மக்கள் அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக தவறாகவே புரிந்து கொண்டு வாக்களிக்கின்றார்கள்.

   கருப்பையாவும் அந்த வகைதான் போல...

   நீக்கு
 14. பிடிவாதம், முரட்டுவாதம் எல்லாம் தெரியும். அதென்ன கரட்டுவாதம்?!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே வம்பு இழுப்பதற்கென்றே பேசுபவர்களே கரட்டுவாதம் நமது கருப்பையா போல...

   நீக்கு
 15. கில்லர்ஜி சரிதான். நம் வார்த்தைகளையே மடக்கிப் பேசுபவர்கள் உண்டுதான். கவனம் தேவைதான்.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக இதனால்தான் பல நேரங்களில் "நான் ஊமை" என்று ஒதுங்கி விடுவேன்.

   நீக்கு
 16. பதில்கள்
  1. ஆமா சகோ கூவத்த, தூர் வாரியதால் கங்கையாகி விட்டது.

   கூவத்தூர் பங்களா நினைவு வந்தால் நான் பொருப்பல்ல!

   நீக்கு
 17. கரட்டு வாதம் கரடு முரடான வாதமோ? கரட்டு வாதம் இப்படித்தான் இருக்குமோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே கரடு முரடானவர்களின் செயல்பாடு இப்படித்தான்.

   நீக்கு
 18. ஏட்டிக்குப் போட்டி இடக்கு வாதம்தான்

  பதிலளிநீக்கு
 19. சண்டை போட வந்தவனுக்கு புல்லு ஆயுதம் மாதிரி வாய்சொல்லும் ஆயுதமா இருக்கே.....!!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் நண்பரே நாமதான் வாயில்லாப்பூச்சி ஆகிவிட்டோம்.

   நீக்கு
 20. ஆகா
  வாயைத் திறக்கும்போது எச்சரிக்கையோடுதான் திறக்க வேண்டும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே இன்றைய மனிதர்கள் இப்படித்தானே இருக்கின்றார்கள்.

   நீக்கு
 21. தலைப்பும் அருமை வாழ்த்துக்களுடன்

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...