தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, செப்டம்பர் 13, 2014

Sweet Day in SWITZERLAND

You Want See Big size ? Just Click One Time Photo Inside.

SWITZERLAND நாட்டில், விசா முடியும் காலம் நெருங்கி விட்டதால் கூடுதலான இடங்களுக்கு செல்ல முடியவில்லை, SCHAFFHAUSEN என்ற ஊரில் RHEIN FALL இருக்கிறது புகைவண்டி நிலையத்திலிருந்து நடந்தே போய் விடலாம், நம்மூர் திருமூர்த்தி அருவி போலவே சிறிதான உயரத்திலிருந்து அருவி கொட்டுகிறது ஆனால் வேகம் கூடுதலானது, அதன் நடுவில் சிறியமலை படகில் போய் அதன் மேலே ஏறிச்சென்று சுற்றுப்புறத்தை காணமுடிகிறது, படகு தத்தளிக்கும்போது என்னைப் போன்ற பயந்த சுபாவம் உள்ளவர்களுக்கு அச்சமாகத்தான் இருக்கிறது, இரண்டு திசைகளிலும் பாலங்களில் புகைவண்டி செல்வது கண் கொள்ளாக்காட்சி, கண்ணாடி போன்ற தண்ணீரில் அறியவகை மீன்கள் நீந்திச் செல்வது அழகான காட்சி, மீன் பிடிப்பதற்கு SCHAFFHAUSEN நகராட்சி தடை செய்திருக்கிறது, 

அருவியில் விழப்போன ஒரு அமெரிக்கனின் புகைப்படக் கருவியை (CAMARA) எதிர்பாராத விதமாய் நான் சட்டென பிடித்து விட்டேன், அதற்கு நன்றி சொல்லாத அவன், 50 Dollar($) எடுத்து நீட்டினான் நான் அவனை முறைத்துப் பார்த்து விட்டு Throw Here என்று தண்ணீரைக் காட்டினேன், அவன் என்னை ஆச்சர்யமாய் பார்த்து மன்னிப்பு கேட்டு விட்டு, என்னை எந்த நாடென்று கேட்டான், நான் சொன்ன பிறகு சொன்னான், You or Great Indian என்று, அவன் வாயால் இந்தியனை GREAT என்று சொல்ல வாய்பளித்த இறைவனுக்கு, ஒட்டு மொத்த இந்தியனின் சார்பாக மனதிற்குள் நன்றி சொல்லிக் கொண்டேன்.

தெருக்களை ஒழுக்கமான முறையில் எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்கிறார்கள், சாலைகளில் பெரும்பாலும் மின்சார பேருந்துகளே அதிகம் செல்கிறது, இதற்கென தனியாக மின்கம்பங்கள் கிடையாது அதன் மின்சாரக் கம்பிகளை வீடுகளில்தான் இணைத்து இருக்கிறார்கள், ஏனெனில் பெரும்பாலும் பழமை வாய்ந்த வீடுகள், இடிப்பதற்கு வாய்ப்புகள் குறைவு, வட்டவடிவ சாலைகளில்கூட மின்சார இணைப்புகளோடு பேருந்து அழகாக செல்கிறது, பேருந்தில் ஓட்டுனர் மட்டுமே இருக்கிறார், பிரயாணச் சீட்டை நாமே பேருத்துக்குள் இருக்கும் தாணியங்கி இயந்திரத்தில், (SWISS FRANCS) நாணயத்தைப் போட்டால் பயணச்சீட்டும், பாக்கியும் வெளியே வரும் பெரும்பாலான இடங்களில் EURO () வைப்பெற மறுக்கிறார்கள், வங்கி சென்று பணமாற்றும் வரை கடன்அட்டையைத்தான் (Credit Card) உபயோகப்படுத்தினேன். 

இதில் ஆச்சர்யமான விசயம் பேருந்தில் ஏறிய நான் செல்ல வேண்டிய இடத்தை பதிவு செய்யும்போது SWISS FRANCS 2.80 கேட்டது, நான் 3.00 EURO () வை உள்ளே செலுத்தினேன் இயந்திரம் நொடிக்குள் பணமாற்றம் (Money Transfer)  செய்து பாக்கி 0.77 SWISS FRANCS சை வெளியே தள்ளியது,

உதவும் மனப்பான்மையில் ஆண்களைவிட, பெண்களே அதிகம் என்பதை அந்த நாட்டில் நான் காணமுடிந்தது, 

SWITZERLAND வங்கிகளைப்பற்றி, தெரிந்து கொள்ள முயற்சித்தேன் இதற்காக இரண்டு முறை பணம் மாற்ற சென்றேன், விபரம் தெரிவிக்கும் (Information  Section) இடத்தில் வேலை நேரம் முடிந்து விட்டது, வங்கியை புகைப்படம் மட்டுமே எடுத்து (தெரியாமல்) வரமுடிந்தது.

Coming More Photos' Swiss Part – 2
F.P- 12 Feb 2013


38 கருத்துகள்:

  1. வணக்கம்
    அண்ணா.

    உலகம் சுற்றும் வாலிபனாகிவிட்டீர்கள் அழகிய இடங்கள் பார்ப்பதற்கு கொடுத்துவைத்தனிங்கள்.. அண்ணா... பதிவை மிக அருமையாக எழுதியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா9/11/2014 9:29 PM

    படங்கள் அத்தனையும் சூப்பர் ஜீ, இந்தியர் என்பதை காட்டிவிட்டீர்கள் போங்கள். இது போல் எப்போது நம் நாடு மாறுமோ ? அனுபவங்களைப் பகிர்ந்த உங்களுக்கு நன்றி ஜீ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிறைய வரும் நண்பா (நாடுகள்) பாருங்க...

      நீக்கு
  3. பராவாயில்லையே... சில்லரையை மொங்கா போடாம கொடுத்திருச்சே்......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பா, நான் ஸ்விஸ் நாணயத்தை போடாமல் யூரோவை போட்டதே பரிசோதிக்கத்தான் தவறென்றாலும் அவர்களிடம் திரும்ப வாங்கி விடலாம். என்ற நம்பிக்கை காரணம் அவர்கள் தமிழக அரசு பேரூந்து ஓட்டுனர்கள் அல்ல...

      நீக்கு
    2. ஓட்டுனர்கள் என்பதை நடத்துனர்கள் என்று திருத்தவும் கில்லர்ஜி!

      நீக்கு
    3. நீங்கள் சொல்வதுதான் சரி பகவான்ஜி.

      நீக்கு
  4. சிறந்த சுற்றுலாப் பகிர்வு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி நண்பரே.... நிச்சயமாக தொடரும்.....

      நீக்கு
  5. உங்களுக்கு தண்ணீரை கண்டால் பயம் என்று நான் நம்பிட்டேன் நண்பரே!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமா, அதுவும் ''சூட்தண்'' என்றால் ரொம்பவே பயம்.

      நீக்கு
  6. அன்பு நண்பரே இன்று தங்கள் வலைப்பதிவை வலைச்சரத்தில் நன்றியுடன் பகிர்ந்துள்ளேன்.
    http://blogintamil.blogspot.in/2014/09/blog-post_12.html
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டேன் முனைவர் அவர்களே... நன்றியுரைத்தேன் கருத்துரையில், தகவலுக்கும் நன்றி நண்பரே....

      நீக்கு
  7. உலகம் சுற்றும் கில்லர் ஜி! அருமையான கட்டுரை. அட! க்ரேட் இந்தியன் என்று சொல்ல வைத்து விட்டீர்களே அமெரிக்கரை! சூப்பர்! நன்றி என்பது பணத்தில் அல்ல என்பதை புரிந்து கொண்டிருப்பார் என்று நம்புவோம். எதையுமே பணத்தால் பார்ப்பது இந்தியன் அல்ல....என்பதையும்....அதுவும் தமிழன் அல்ல என்பதையும்!!!!!

    நல்ல அனுபவம் இல்லையா ஜி?!!! படங்களும் அருமையாக உள்ளன......இடங்கள் படு சுத்தம்.....அந்த ஆற்றின் நடுவெ உள்ள மலை எங்கே!?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக, நண்பரே,,, இப்படிச்சொல்லும் வாய்ப்பை வழங்கிய இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்,
      ஆற்றின் சுற்றிலும் அடித்து விழும் தண்ணீரின் மையத்தில் இருக்கிறது பாறை தண்ணீர் அரித்து அடிப்பாகம் குறைந்து கொண்டே.... வருகிறது அந்த இடத்தின் பெயர்தான் SCHAFFHAUSEN அதற்குத்தான் போட்டில் போகிறோம் தண்ணீரைக் கண்டாலே எனக்கு பயம் பயத்தை தவிர்க்க எவனை(ளை)யாவது பிடித்துக்கொள்வோம் என்றால் ? யாருக்கும் இதில் உடன்பாடில்லை வேறு வழியின்றி போட் ஸ்டேரிங்கை பிடித்து கொண்டேன்.

      நீக்கு
  8. நான்காவது படத்தைப் பார்த்தவுடன் தோன்றியது -- 'அடி ஆத்தி!' :) அழகோ அழகு! பகிர்விற்கு நன்றி சகோ.
    'Great Indian' என்று சொல்ல வைத்த உங்களுக்கும் அந்த காமேராவிற்கும் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி, கூடுதல் படங்கள் அடுத்த பதிவில் காண்க,,,,

      நீக்கு
  9. அழ்கான படங்கள்.. அருமையான பகிர்வுகள்.!

    பதிலளிநீக்கு
  10. ஐம்பது டாலரை தூக்கி எறியச் சொன்னீங்க சரி ,சுவிஸ் வங்கியில் நீங்கள் எத்தனைக் கோடி போட்டீர்கள் என்ற விபரத்தை சொல்லவே இல்லையே !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதையெல்லாம் பதிவில் சொல்ல முடியுமா ? நண்பரே... தங்களுக்கு மட்டும் மின்னஞ்சலில் அனுப்பி வைக்கிறேன்.

      நீக்கு
  11. அண்ணா நான் ச்விச்ஸ் நாட்டை பற்றி நிறைய படித்திருக்கிறேன். சாக்லட்க்கள், கடிகாரங்கள் அருமையாய் கிடைக்கும் என்றும் உலகின் விளையாட்டு மைதானம் என்றும், போர்களை புறக்கணிக்கும் தேசமென்றும் ஏதோதோ:) உங்கள் படங்கள் அழகு! வெள்ளைகாரரை வெட்கசெய்தது பெருமையாக இருந்தது:) சரி தெருக்கள் ஒழுங்கீனமாக என குறிபிட்டிருகிரீர்களே? அப்படி என்றால் ஒழுக்கமற்ற என்றல்லவா அர்த்தம் வருகிறது? எது எப்படியோ இன்னும் போட்டோஸ் இருக்குனு சொல்லிருகீங்க ,,,,,வெயிட் பண்றேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் சகோதரி சோக்லேட் நிறைய வாங்கினேன் கடிகாரம் ''என் இனிய மகளுக்காக'' ஒன்று, நான் விசா பிரட்சினையால் கூடுதல் இடங்களுக்கு செல்ல முடியவில்லை ஒழுங்கீனம் தவறே மன்னிக்க, மாற்றி விட்டேன், இந்த அளவுக்கு கூர்ந்து கவனித்து படிப்பது ஒருபுறம் சந்தோஷமாக இருப்பினும், மறுபுறம் சரியாக செய்ய வேண்டுமே என்ற பயமும் தோன்றுகிறது இருப்பினும் தவறுகளை சுட்டிக்காட்ட தயங்க வேண்டாம் அப்பொழுதுதான் இந்த ''கத்துக்குட்டி'' இன்னும் கற்றுக்கொள்ளமுடியும் நிறைய ஃபோட்டோக்கள் 16 ம்தேதி வரும் வருகைக்கு நன்றி சகோதரி.

      நீக்கு
  12. வணக்கம் சகோதரரே.!

    இயற்கை காட்சிகளுடன், ௬டிய படங்கள் மிகவும் அருமையாக இருந்தது! சென்றவிடங்களின் சிறப்புக்களையும், நயம்பட எடுத்துக்௬றிய பகிர்வும் அற்புதம்.! மேலும் தொடர வாழ்த்துக்கள் சகோதரரே..!

    இவ்வார வலைச்சர அறிமுகத்திற்கும், எனது வாழ்த்துக்கள்..!

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துரைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி.

      நீக்கு
  13. அங்கே.. காந்தி எவரும் இல்லை போலிருக்கிறது..அதனால்தான் காந்தி கணக்குன்னு ஒன்று இல்லாமல் இருந்திருக்கிறது.. நண்பரே!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்மூர் அரசியல்வாதிகளை அனுப்பி விடுவோமா ?

      நீக்கு
  14. புகைப்பட்ங்கள் மூலமாய் எங்களையும் ஊரைச் சுற்றிப்பார்க்க வைத்து விட்டீர்கள்.... இந்தியரை கிரேட் என்று சொல்வதை நீங்கள் சொல்லும்போதே கேட்க இனிமையாய் இருக்கிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக அடுத்தபதிவின் ஃபோட்டோக்களையும் காண்க...

      நீக்கு
  15. அன்பு நண்பரே வணக்கம்
    விருது ஒன்றினைத் தங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன்
    வருகை தாருங்கள்
    http://karanthaijayakumar.blogspot.com/2014/09/blog-post_14.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விருது எனக்குமா ? விருதுபெற்ற தங்களை வாழ்த்துவதா ? எனக்கும் விருது கொடுத்த தங்களுக்கு நன்றியுரைப்பதா ?
      247 எழுத்துக்களையும் புரட்டிப்பார்க்கிறேன் என்ன ? எழுதுவதென்று தெரியாமல் நண்பரே...

      நீக்கு
  16. naanum painetha anupavam ingu iruthu petran. vaalthukal.

    பதிலளிநீக்கு
  17. எப்படியோ தேடிப்பிடித்து படித்து விட்டேன். அருமையான் அனுபவம் தான். சுவிஸ் வங்கி குறித்து அப்படி என்ன தான் அறிந்து கொள்ள ஆசைப்பட்டீர்கள் சார்?

    அத்தோடு சுவிஸில் ஈரோ வாங்க மாட்டோம் என சொல்ல மாட்டார்கள். நீங்கள் கொடுக்கும் ஈரோவுக்கான் மீதி பணத்தினை சுவிஸ் பிராங்காக தான் தருவார்கள். அத்தோடு காயின்களை அதாவது சில்லறை காசுகளை வாங்காமல் நோட்டாக மட்டும் வாங்குவார்கள். ஷாப்பிங்க் செண்டர்களில் இவ்வசதி உள்ளது. ஆனால் சில சின்ன கடைகளில் இருக்காது. சுற்றுலாத்தலங்களிலிருக்கும் ரயில் நிலையம், பேருந்துகளில் னிச்சயம் ஈரோவை பயன் படுத்தலாம். ஆனால் சுவிஸில் சுவிஸ் பிராங்க பயன் படுத்துவது உங்களுக்கு இலாபம.

    தினம் தினம் வாங்கும் விற்கும் நாணய மாற்று வீதம் மாறுபடுவதால் ஒரு நாளில் தேவையான சுவிஸ் பிராங்குகளாக மாற்றிக்கொண்டால் இலாபமாக முடியும். சின்ன சின்ன ஷாப்பிங்க் செய்யும் போது பிராங்குக்கு ஈரோ கணக்கு ந்ஷ்டம் தரும்.

    நிஜமாக சொன்னால் சுவிஸில் நீங்கள் பார்த்த இடத்தினை விட அழகாக அருமையான சுற்றுலாத்தலங்கள் உண்டு. மிஸ் செய்து விட்டீர்கள் சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதுக்காக ? தேடினீர்கள் நான்தான் விபரம் கொடுத்தேனே 2014 செப்டம்பர் மாத பதிவு என்று தலைப்பும் சொன்னேனே....
      நான் போனது சின்ன கடை மாதியும் இல்லை பெரிய கடை மாதிரியும் இல்லை, அதை கடைனு சொல்ல முடியாது மாலுனு சொல்ல முடியாது சில நேரம் சின்ன கடைனு சொல்லலாம், சில நேரம் பெரிய கடைனு சொல்லலாம்.
      அடுத்தமுறை வந்தால் பார்க்கலாம்.... நன்றி

      நீக்கு
  18. நீங்கள் ஒருத்தருக்கு உதவி செய்கின்றீர்கள். அல்லது பேருந்தில் ஒரு பையை கண்டெடுத்து ஓட்டுனரிடம் ஒப்படைக்கின்றீர்கள். அப்பையில் என்ன இருந்தாலும் சரி அதை பெறும் ஓட்டுனர் செய்யும் முதல் காரியம் தன் பர்சை திறந்து ஐந்தோ பத்து பிராங்குகளோ தருவது. இதுவே பைக்கு சொந்தக்காரரிடம் ஒப்படைத்தால் பையில் இருக்கும் பணத்திலிருந்து பத்து வீதம் அவர் உங்களுக்கு தர வேண்டும்.

    இது இங்கே கடைப்பிடிக்கும் விதி. நன்றி செலுத்தல் போலவும் ஊக்கப்படுத்தல் போலவும் பலர் முன்னால் பாராட்டி பணமோ பொருளோ கொடுத்து விடுவார்கள். அது தான் கமெராகாரரிடமும் நடந்தது. வேண்டாம் என சொன்னதில் உங்கள் பெருந்தன்மை மிளிர்ந்தது..

    நானும் பாராட்டுகின்றேன்!

    பேருந்துகளுக்காக் மின் இணைப்பு த்னியார் விடுகளிலிருந்து செல்லாது சார். இங்கே மிகவும் செலவு பிடித்த விடயம் மின்சாரம் தான். தண்ணீரும் மின்சாரமும் இங்கே சேமிக்கப்பட வேண்டியது. அதனால் தனியார் வீடுகள்பேருந்துக்குரிய மின்சாரத்தினை கொடுக்காது. இங்கே மின் கம்பிகள் நிலத்தின் கீழ் தான் செல்கின்றது , மின்கம்பிகள் தொலைபேசி இணைப்புக்கான கேபிள்கள், குடினீர், கழிவு நீர் என அனைத்தும் நிலத்தின் கீழாக தான். நிலத்துக்கு மேலே ஒரு கம்பி கூட செல்ல விட மாட்டார்கள். அலங்கார விளக்குகள் மட்டுமே அங்கங்கே தொங்க விடுவார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்கள் சொன்ன விடயம் அறியாதது இருப்பினும் பணம் கொடுப்பது உதவியை கொச்சை படுத்துவதாக இருக்கின்றதே..
      வீடுகளில் வயர்களின் (கம்பிகளின்) இணைப்புகள் இருக்கிறது என்றுதான் சொன்னேன்
      கூடுதல் விபரம் தந்தமைக்கு மீண்டும் நன்றி

      நீக்கு