தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, மார்ச் 22, 2015

மரணதண்டனை



மரணதண்டனை தவறென்றும், அதற்குப்பதில் ஆயுள் தண்டனை கொடுக்கலாம் எனசொல்வோரே... நீர் என்றாவது ஒருநாள் ஆயுள் தண்டனை கைதிகளின் மன நிலையை கேட்டறிந்திருப்பாயா ? எந்த வகையில் நீ தீர்மானித்தாய் ? மரணதண்டனை கூட ஒரு வகையில் விடுதலைதான் ஆம் உயிர் ''விடு''(ல்)லை நம் நாட்டில் சிறைச்சாலைகளின் அவல நிலையை கண்டறிந்தாயா ? அல்லது கேட்டுதான் அறிந்திருக்கின்றாயா ? வாழவும் முடியாமல், சாகவும் துணிவில்லாமல் மரண வேதனையில் மனநோயாளியாக, நடைபிணமாக வாழும் கைதிகளின் நிலையை நினைத்துப்பார், ஒரு தினம் வேண்டாம் ஒரு கணம் நினைத்துப்பார் புரியும்.

மரணதண்டனையின் வேதனை அவனுக்கு ஒரு நொடியில் தொடங்கி மறு நொடியில் முடிந்து விடும், குடும்பத்தாருக்கு அன்றைய ஒரு நாளில் கவலையும், கடமையும் முடிந்து மறுநாள் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடங்கி விடும், ஆயுள்தண்டனை கைதியின் மனைவி வாழ்க்கை கேள்விக் குறியிலேயே நிற்கும் ஆனால், மரணதண்டனை கைதியின் மனைவி வாழ்க்கை முற்றுப்புள்ளி வைத்து மறு அத்தியாயம் தொடங்கி விடும்... கைதிக்குத்தான் தண்டனை மனைவிக்குமா

எதையும் தொலைநோக்கு பார்வையுடன் பார் ஆயிரம் நட்சத்திரங்கள் உன் கண்களுக்கு புலப்படும் நீ இருட்டறையில் உட்கார்ந்து கரும்புள்ளியை தேடுகின்றாயே உனக்கு எப்படி தெரியும் ? மரணதண்டனை வேண்டும் மனிதா, வேண்டும் ஏன் தெரியுமா

கைதிகளில் பணக்கார, அதிகார வர்க்கங்களுக்கு சிறை வாழ்க்கையிலும் சொர்க்கம்தான் மரணதண்டனை ஒன்று இருந்தால் இவர்களுக்கு கண்டிப்பாக பயம் இருக்கும், குற்றங்கள் குறைய இதுவும் ஒருவழியே... சட்டத்திற்கு முன்னால் அனைவரும் சமம் என காலங்காலமாய் சொல்வதெல்லாம் நொண்டிச்சாக்கு உதாரணம் 
ஒரு வங்கியில் வேலை செய்யும் சாதாரண குமாஸ்தா, வங்கியில் நடந்த கொள்ளையில், சதிகாரர்கள் அவருக்கும் தொடர்பு உண்டு எனபொய் சொல்ல காவல்துறை வழக்கு தொடுக்கிறது அந்த குமாஸ்தாவின் நிலை ? வேலை கேள்விக்குறியாகி ரத்துகூட ஆகலாம், மனஉலைச்சலும் பொருளாதார நெருக்கடியும் அவரை தற்கொலைக்கு கூட அனுப்பி விடலாம் அதேநேரம் பெருங்கொண்ட பதவியில் உள்ள அரசியல்வாதிகள் கோடிக்கணக்கில் ஊழல் செய்து காவல்துறை பாதுகாப்புடன் கார் படைசூழ நீதிமன்றம் சென்று வருகிறார்கள் யாராவது தண்டனை பெற்றோ, அவமானத்தாலோ, இறந்திருக்கிறார்களா ? வங்கியில் பணம் கொள்ளை போனால் அது மக்களுக்கு நஷ்டத்தை கொடுப்பதில்லை ஆனால் அரசாங்கபணம் போனால் யாருக்கு நஷ்டம் ? சிந்தித்துப்பார் மனிதா, சிந்தித்துப்பார்.

மரணதண்டனை வேண்டும் மனிதா, மரணதண்டனை வேண்டும், அந்தக் குற்றவாளி கில்லர்ஜியாயினும் சரி கிளிநொச்சிக்காரன் ஆயினும் சரி, நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே !

குறிப்பு - அதற்காக பசு மாட்டை கொல்பவர்களை தூக்கிலிட வேண்டும் எனச் சொன்ன, கூட்டத்தில் உள்ளவன் அல்ல நான் அதற்காக பசு மாட்டை கொல்வது சரி எனச் சொல்பவனும் அல்ல  நான்.

CHIVAS REGAL சிவசம்போ (தனக்குள்)
இவ்வளவு விவரமா, எழுதியிருக்காரே... ஒருவேளை ஏற்கனவே உள்ளே போட்டு, கும்மிட்டாங்களோ ?

 காணொளி

அடிக்குறிப்பு – நண்பர் திண்டுக்கல்லார் மட்டுமே படித்திருந்த நான் மிகவும் நேசித்து எழுதிய எனது பழைய பதிவு இது.

74 கருத்துகள்:

  1. மரண தண்டனை தேவையா...?
    உண்மைதான் ஆயுள் கைதியின் நிலைக்கு மரண தண்டனை மேல்..
    நல்ல பகிர்வு அண்ணா...
    விருமாண்டி படத்தில் இருந்து மிகவும் அருமையான காணொளி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளி கண்டு ரசித்து எழுதியமைக்கு நன்றி நண்பரே....

      நீக்கு
  2. மரண தண்டனை சரியாகக் கொடுக்கப்பட்டால், அதுவும் நேரத்தில் கொடுக்கப்பட்டால், குற்றம் மன்னிக்க முடியாதக் குற்றமாக இருந்தால் கண்டிப்பாகக் கொடுக்க வேண்டும். பாம்பேயில் பல குற்றமற்ற சாதாரண மக்களையும், பிஞ்சுக் குழந்தைகளையும் கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாமல் யாருக்காகவோ, பணம் பெற்று ஒரு வெறியுடன் பகைமையுடன், மூளை என்பதே இல்லாமல் , சுட்டு சுட்டுக்கொன்றானே ஒரு படு பாவி அவனை ஏசி அறையில் வைத்து, தினமும் பிரியாணி கொடுத்துக் கொஞ்சிக் கொண்டிருந்தார்களே!...

    பெண்களை பலாத்காரம் செய்து கொன்று விட்டு தான் செய்ததை நியாயப்படுத்தும் கயவாளிகளுக்கும்.....பொருந்தும்...

    அல்லாமல் திருந்தி வாழ நினைக்கும் கைதிகளுக்கு மரண தண்டனை என்பது யோசிக்க வேண்டிய விசயம்.....(னம்ம ஊருல ஒரு தண்டனை கொடுப்பது மிகவும் தாமதம் ஆவதால் ...உங்களை இப்படி யோசிக்க வைத்ததோ...)

    தங்களின் கருத்து வரவேற்கப்பட வேண்டியதே..இதை நாங்கள் கல்ஃப் கன்ட்ரிஸ் மாதிரி நடுத்தெருவுல வைச்சுச் சுடணும் இவங்கள என்று சொல்லுவதுண்டு....ஆனால் .திருந்தி வாழ நினைப்பவர்களுக்கல்ல....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய வில்லங்கத்தார்களுக்கு...
      நான் மனிதநேயம் உள்ளவன் இருப்பினும் எமது இந்தப்பதிவு எதிரான கருத்துகளை பொதிந்ததாகவே இருக்கும் நமது இந்தியாவைப் பொருத்தவரை மரணதண்டனை வேண்டும் 80தே எமது கருத்து, இன்னும் சொல்லப்போனால் அரபு நாடுகளுக்குத்தான் தேவையில்லை காரணம் அங்கு கைதிகளும் சராசரி மனிதர்களாக நடத்தப்படுகிறார்கள்.
      ஆனால் ? நம் நாட்டில் நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியவேண்டுமா ? குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லையே 80தே எமது ஆதங்கம்.
      மேடையில் வாய் கிழிய மனிதநேயம் பேசுகிறார்கள் இவர்களால் அவர்களுக்கு சிறை அதிகாரிகளின், கொடுமையையோ, அல்லது அதனுள் இருக்கும் ரௌடிகளின் தொந்தரவுகளையோ, கேட்டு சிறைச்சாலை கைதிகளின் வாழ்க்கையை சரி செய்து கொடுக்க முடியுமா ? அவர்களின் நரக வாழ்க்கைக்கு இறப்பே மேல் 80ம் எமது கருத்து மட்டுமல்ல, கைதிகளின் கருத்தும் இதுவே. அவர்களின் நரக வாழ்க்கை உங்களுக்கு எப்படித்தெரியும் ? சொந்த அனுபவமா ? எனக்கேட்ககூடாது கேட்டால் ? நான் கோடரி எடுக்க வேண்டியது வரும் என எச்சரிக்கிறேன்.

      நீக்கு
  3. கடவுள் படைத்த உயிரைப் பறிக்க மனிதனுக்கு அறுகதை இல்லை என்பார்கள் ,அப்படி என்றால் தூக்கில் தொங்குபவனை அந்த கடவுளே வந்து காப்பாற்றலாமே ?அந்த சக்தி ,எல்லாம் வல்லவனுக்கு ஏன் இல்லாமல் போனது ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனிதனின் மரணம் இயற்கையாகத்தான் இருந்தது இன்றைய விஞ்ஞான வளர்ச்சியின் காரணமே மரணங்கள் பலவகைகளில் மனிதனுக்கு கிடைக்கிறது தூக்கு தண்டனையின் விளைவுகூட விஞ்ஞானத்தால் வந்ததே அதாவது அதில் செய்யும் தவறுகள்தான் அவனை இங்கு கொண்டு வந்து விட்டது ஜி.

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே.!

    நல்ல விளக்கமாக யோசித்து எழுதிய பதிவு.. உயிர் படும் சித்ரவதைகளை விட அதையும் தாண்டி தன் குடும்பம், தேவையற்று வரும் பற்று பாசங்கள் (குற்றவாளியானலும் பாசங்கள்உண்டே..) இவற்றினுடே, வாழ்ந்து "அனுபவித்து" இருப்பதை விட நீங்கள் ௬றிய தண்டனை சிறந்ததுதான்.. நல்லபகிர்வு..
    காணொளியும் அருமை...நன்றி.

    என்தளம் வந்து வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துரைத்தமைக்கும் நன்றி...

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாக புரிந்து கொண்டமைக்கு முதற்க்கண் நன்றி சகோதரி நான் கைதிகளை விட அவரின் குடும்ப நலைனையே சிந்தித்தேன் அதன் விளைவே இந்தப்பதிவு.

      நீக்கு
  5. மணிமேகலை சிறைச்சாலையை அறச்சாலை ஆக்குகின்றாள். என்று இலக்கியங்கள் கூறுகின்றது தப்பிற்கு தண்டனை தீர்வல்ல அடிக்கடி செய்ந்தால் தண்டிக்கலாம் என மணிமேகலை க் கூறுகின்றது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே தாங்கள் சொல்வதெல்லாம் பண்டையகால கொள்கை அன்று மனிதர்கள் வாழ்ந்தார்கள் ஒரு சில மிருகங்களே இருந்தது, இன்று மிருகங்கள் நிறைந்து விட்டனவே... என்ன செய்வது மாற்றம் தேவையே....

      நீக்கு
  6. மரண தண்டனையா
    ஆயுள் தண்டனையா
    இரண்டும் கிட்டாதவாறு
    மக்களாயம் (சமூகம்)
    நல்வழியில் செல்ல
    வழிகாட்டும் தலைவர்கள் தேவை!

    பதிலளிநீக்கு
  7. நண்பர்களின் கருத்துக்களையும் அறிய மீண்டும் மீண்டும் வருவேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பரே...தொடருங்கள் முடிவில் தங்களது கருத்தைப்பதியுங்கள் அல்லது இதனைக்குறித்து தங்கள் பாணியில் அருமையான பாடல்களோடு ஒரு பதிவைப்போடுங்கள்.

      நீக்கு
  8. சிந்திக்க வேண்டிய பதிவு.
    பாதிக்கப்பட்ட இரண்டு குடும்பங்களை எனக்கு தெரியும். ஒரு குடும்பத்தின் தலைவர். தன் நண்பனை ஒருவர் கெட்ட வார்த்தையில் திட்டி விட்டதை பொறுக்கமுடியாமல் கத்தியால் குத்தி கொன்று விட்டார். அவர் இப்போது சிறையில்.

    மற்றொன்று ஒரு இளைஞன் வெறும் புரோட்டா வாங்கிகொடுத்ததற்காக 20 வருடங்களுக்கு மேல் சிறையில் இருக்கிறார். அவர் வாங்கிக்கொதுத்தது இமாம் அலியின் கூட்டாளிகளுக்கு என்பது போலீஸ் குற்றச்சாட்டு. இந்த ஒரு வழக்கில் மட்டும் 143 பேர் தாங்கள் எதற்காக சிறையில் இருக்கிறோம் என்றே தெரியாமல் இருக்கிறார்கள்.

    இவர்களை விட இவர்கள் குடும்பம் அனுபவிக்கும் வேதனை வார்த்தையில் விளக்க முடியாது. விசாரணையை விரைவில் முடிக்காமல் தாமதப் படுத்துவது ஆயுள் தண்டனை, மரண தண்டனையை விட கொடுமையானது.

    எனக்கு மரண தண்டனையில் உடன்பாடில்லை. ஆனாலும் உங்கள் பதிவை படித்த போது அது சரியென்றே பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் அதனுள் மறைந்துள்ள விடயங்களைத்தான் சொன்னேன் நண்பரே... இந்தியாவில் குற்றங்கள் பெறுகிக்கொண்டே வருகிறதே என்ன ? காரணம் சமீபத்தில் டெல்லியில், ஒரு கல்லூரி மாணவியை 5 அறிவுள்ள 5 மிருகங்கள் சூறையாடியதே அவர்கள் இப்போது என்ன செய்கிறார்கள், அன்றே அவர்களை நடுவீதியில் சுட்டுக்கொன்றிருந்தால் இந்த அவலங்கள் நீடிக்குமா ?

      நீக்கு
  9. கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
    களைகட் டதனொடு நேர்..

    வள்ளுவப்பெருந்தகையின் திருவாக்கிற்கு பரிமேலழகர் வழங்கிய உரை:-
    அரசன் கொடியவர்களைக் கொலையான் ஒறுத்துச் தக்கோரைக் காத்தல் – உழவன் களையைக் களைந்து பைங்கூழைக் காத்ததனோடு ஒக்கும்.

    (‘கொடியவர்’ என்றது - தீக்கொளுவுவார், நஞ்சிடுவார், கருவியிற் கொல்வார், கள்வர், ஆறலைப்பார், சூறை கொள்வார், பிறன்இல் விழைவார் - முதலானவரை)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருக்குறளால், குவைத்திலிருந்து குரல் கொடுத்தமைக்கு நன்றி நண்பரே.

      நீக்கு
  10. நீங்கள் எழுதியுள்ளதைப் படித்த பின் உங்கள் , கருத்தும் சரியென்றே தோன்றுகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எமது கருத்தை தெளிவாக புரிந்து கொண்டமைக்கு நன்றி ஐயா.

      நீக்கு
  11. ஒரு பட்டிமன்ற தலைப்பில் எழுதி இருக்கிறீர்கள், எப்படி வேண்டுமானாலும் விவாதிக்கலாம் நடுவர் என்று யாரும் இருக்கக் கூடாது.உப்பை தின்பவன் தண்ணீர் குடிக்க வேண்டும். அது எப்பேற்பட்ட தண்ணீர் என்பதே விவாதம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா, உப்பைத் திண்ணவன் தண்ணி குடிக்கணும், தப்பு செய்தவன் தண்டனை பெறனும் அப்பொழுதுதான் குற்றவாளிகளின் எண்ணிக்கை குறையும்.

      நீக்கு
  12. கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் என்பதுபோல் உயிருக்கு உயிர் என்பது ஏற்க இயலவில்லை.
    இருப்பினும் கொல்லர்ஜி (மன்னிக்க) கில்லர்ஜி சொல்வதில் நியாயம் இருக்கும் என மனசாட்சி குத்தியதால்..?!
    தம 7 குத்திட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பே சிவமான தாங்கள் மரண தண்டனையை ஆதரிக்க மாட்டீர்கள் நான் அதனுள் உள்ள கசப்பு உண்மைகளை வெறியேற்றி எழுதினேனே தவிற நானும் உங்கள் ஜாதியே... மரணதண்டனையை எதிர்க்கிறேன் நண்பா, ஆனால் இந்தியாவுக்கு தேவை 80ம் எமது கருத்தே... எமது கருத்து சரியாக இருக்கும் என்று சொல்லாதீர்கள், சரியாக இருக்கிறது அல்லது சரியாக இல்லை 80தை தீர்மானியுங்கள்.

      நீக்கு
  13. குற்றங்கள் நிகழும்போது, கொலையுண்டு பலர் இறக்கும் போது, கற்பழிக்கப் பட்டு துடி துடித்து சாகும்போதெல்லாம் கேசுவல் லீவில் அட்ரசே இல்லாமல் போகும் இந்த சமூக ஆர்வலர்கள், மனித உரிமைக்காரங்க எல்லாம் அந்த குற்றவாளி சிக்கிய பின்னர் எங்கிருந்தோ டான் என்று ஆஜராகிவிடுவார்கள். ஒரு பெண்ணை கற்பழித்து, பின்னர் அவள் பெண் உறுப்பை கத்தியால் கிழித்து அவளை குற்றுயிரும் குலையுயிருமாய் போட்டு சென்றதைப் பற்றி வாயைத் திறக்காத இவர்கள், அக்குற்றத்தை நிகழ்த்தியவன் அடையும் சிறு சிறு அசௌகரியங்களுக்காகக் கூட துடித்து கண்ணீர் சிந்துவார்கள். அவர்கள் மீது சிறு கீறலும் விழக் கூடாது, முக்கியமாக அவர்கள் 80 வயது வரை வாழ்ந்து இயற்கை மரணம் அடைய வேண்டும் என்று விரும்புவார்கள், ஏனென்றால் நாட்டுக்காக உழைத்த தியாகிகள் அல்லவா?

    மரணம் என்று சொன்னால், சமீபத்தில் கூட நாட்டைக் காக்க உயிரை ஈந்த ஒரு இராணுவ வீரரின் உடலுக்கு ஒரு ரோஜாவை வைத்து டாட்டா காண்பித்த அவரது மகளின் படத்தை பத்திரிகையில் பார்த்த போது நெஞ்சம் வெடிக்க வில்லையா? இது போல உயிரை விடும் வீரர்கள் எண்ணற்றோர் இல்லையா? அவர்களை விடவா இந்த குற்றவாளிகள் மேம்பட்டவர்களாகி விட்டனர்? மக்கள் நலனுக்காக தொழிற்சாலைகள், சுரங்கங்கள் போன்றவற்றில் உயிரை விடும் எண்ணற்ற தொழிலாளிகள் இல்லையா? சாலை விபத்தில் மரிப்போர் எத்தனை? அவ்வளவு ஏன் சாராயம் குடித்து உயிரை விடும் மக்கள் எண்ணிக்கை எத்தனையோ?

    ஆக மரணம் என்று பார்த்தால், எக்கச் சக்கமாக நிகழ்கிறது, ஆகையால் இக்குற்றவாளிகள் மரணத்தால், பின்னால் நடக்கவிருக்கும் குற்றங்கள் குறையுமானால் இவர்களைக் கொள்வதில் தவறே இல்லை. பத்து பேரை கொன்றாலும் மிஞ்சி மிஞ்சிப் போனால் ஆயுள் தண்டனைதானே, என்ற மனநிலை குற்றவாளிக்கு வந்துவிட்டால் நாடு தாங்காது.

    அதே சமயம், அப்பாவிகள் குற்றவாளிகளாக்கப் படுவதும், குற்றவாளிகள் நிரபராதிகளாக வளம் வருவதும் நெருடலான விஷயங்களே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே.. நான் தங்களுக்கு பின்னூட்டமிட என்ன ? இருக்கிறது அனைத்தையுமே விலாவாரியாக கிழித்தெழுதி விட்டீர்களே... ஒரு குற்றத்தை அரங்கேற்றி விட்டு அதற்க்கு நாங்கள் பொருப்பேற்கிறோம் என ஒரு அமைப்பு அறைகூவல் விடுகிறது அதைக்கேட்ட காவல்துறை என்ன ? செய்கிறது.
      8 கொலைகள் செய்து விட்டு 17 முறை சிறையிலிருந்த தப்பித்தவனை போலீஸ் வலைவீடி தேடுகிறதாம் ஏன் ? முதல் முறை வேண்டாம், இரண்டாவது முறை வேண்டாம், மூன்றாவது முறையாவது அவன் காலை எடுத்திருந்தால் அவன் ஓடுவானா ? கேட்டால் ? இது மக்களாட்சியாம் ? மனிதநேயமாம் முதல் கொலை தவிர்த்து அடுத்த நடந்த 7 கொலைகளுக்கும் காரணம் யார் ? சவூதி அரேபியாவில் கற்பழிப்பு குற்றவாளிகளை நடுரோட்டில் (ஆண்)மக்கள் பார்வையில் அவனது ஆண் குறியை வெட்டுகிறார்கள் இது அவனைத் தண்டிப்பதற்காக மட்டுமல்ல இதைக்காண்பவன் இனியெனும் செய்யக்கூடாது 80தற்காக தங்களது கருத்துரை அருமை நண்பரே.

      நீக்கு
  14. உயிர்விடுதலை என்னும் சொல்லாட்சி அருமை.
    மரண தண்டனை குறித்த விவாதங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
    தங்கள் கருத்தினை அறிந்தேன்.

    மரண தண்டனையினால் குற்றத்தைத் தடுத்துவிட முடியும் என்றால் ஒருவனுக்குத் தண்டனை அளித்த பின் அக்குற்றமே நடைபெறக் கூடாது.
    இதில் உள்ள இன்னொரு சிக்கல் என்ன வென்றால் தவறாகக் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை அடைந்து பின்பு அவர்கள் அந்தக் குற்றத்தைச் செய்யவில்லை என்று நிரூபணமாகும் நிலை.
    வரலாற்றில் இது போலப் பல நிகழ்வுகள் இருக்கின்றன.
    தங்களது பார்வை அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் கவிஞரே நிரபராதிகள் தண்டிக்கப்படும் ஆகவே அவர்களுக்கு ஆயுள் தண்டனை கொடுத்தாலும் பிறகு அவரை மீட்டு விடலாமென்ற தங்களின் (உள்)கருத்தை ஏற்கிறேன், அப்படியே அவர்கள் நிரபராதி என்று தீர்பளித்தாலும் சமூகம் அவரை எப்படி ? பார்க்கின்றது குற்றவாளிகளை தீர்மானிக்க காலஅவகாசம் எவ்வளவு ? அதேநேரம் ஒரு நீதிபதியின் குடும்பத்தை கடத்தி வைத்து கத்தி முனையில் பேரம் பேசும் பொழுது உடனடியாக நீதிகள் வழங்கப்படுகிறதே இது எப்படி ? திருமதி இந்திரா காந்தி அவர்கள் சுட்டுக்கொள்ளப்பட்டார் 80 உலகறிந்த விடயம் ஆனால் அந்த தீர்ப்பு முடிக்கப்பட்டது எப்பொழுது ? இதனால்தானே அடுத்தடுத்த குற்றங்கள் நிகழ்கிறது மரணம் உறுதி என்றால் நிச்சயமாக குற்றங்கள் நடக்காது என்று சொல்ல வரவில்லை, குறையும் 80தே எமது ஆணித்தரமான கருத்து.
      ஊழல் குற்றம் 18 ஆண்டுகளுக்குப்பிறகு நிரூபிக்கப்பட்டது என்னவாயிற்று ? இந்தியாவில் சட்டம் ஏழைகளுக்கு இரும்புக்கம்பியாகவும், செல்வந்தனுக்கு ரப்பர்த்தடியாகவும் இருக்கிறது இதை அடியோடு மாற்றவேண்டும் 80ம் எமது கருத்து.

      நீக்கு
  15. “நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே ”என்ற காலம் வந்ததால்தான் பெறும் ஊழல்வாதிகளும் கொள்ளக்கார-கொள்ளைக்காிரகளும் தண்டிக்க முடியும் நண்பரே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தக்காலம் எப்படி ? வரும் தோழரே... ஓட்டுப்போடும் மக்கள் நினைத்தாலே வரும்... யார் நினைக்கின்றார்கள் ?

      நீக்கு
  16. ஒரு விவாதக் களத்தை தொடங்கி வைத்து விட்டீர்கள். சகோதரர் ஜெயதேவ் தாஸ் சொன்ன கருத்துக்கள் யோசிக்க வைத்தன.
    த.ம.12

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் நண்பரே கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும் என்பார்கள்.... பார்ப்போமே...

      நீக்கு
  17. வணக்கம்
    ஜி
    தாங்கள் சொல்லிய கருத்தை படித்த போது.. ஒரு கனம் சிந்திக்கவைத்தது... யாவரும் அறிய வேண்டிய பதிவு.. எல்லாவற்றையும் சொல்லி விட்டு இறுதியில் சொல்லிய கருத்தை படித்து சிரித்தேன் ...(தங்களைப்பற்றிய செய்தி) பகிர்வுக்கு நன்றி... த.ம 13

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ரூபன், சிரிசீங்களா ? ஏன் ? எனது வேதனையை கொட்டி அழுதிருக்கேன் சிரிச்சேனு சொல்றீங்க... நியாயமா ?

      நீக்கு
  18. அன்புள்ள ஜி,

    மரண தண்டனை குறித்த நல்ல விரிவான அலசல்.

    நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே!

    தங்களின் கருத்து நியாயமானதே!

    காணொளி கருத்துக்கு வலுசேர்ப்பதாக இருந்தது அருமை!

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் மணவையாரின் வருகைக்கும், கருத்துரைக்கும் (மட்டுமே) நன்றி.

      நீக்கு
  19. தங்களின் வாதம் சரியே.தண்டனை அவனுக்கு மட்டுமல்ல அவன் சார்ந்த குடும்பம் முழுவதும் ஆயுள் முழுவதும் துன்பப்படவேண்டுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிஞரின் வருகைக்கும் விரிவான கருத்துரைக்கும் நன்றி.

      நீக்கு
  20. விவாதத்துக்குரிய விஷயம்தான். நாம் சொல்லலாம். அனுபவிப்பவர்கள் மனதில் என்ன இருக்குமோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் நண்பரே.. அனுபவிப்பவர்களின் வேதனை வெறுப்பாகத்தான் இருக்கின்றது.

      நீக்கு
  21. மரணதண்டனை கூடாது என்று ஒரு சாராரும், மரணதண்டனை வேண்டும் என்று ஒரு சாராரும் சொல்கிறார்கள். உணமையான குற்றவாளி தண்டிக்கப்பட்டால் பரவாயில்லை ஆனால் பொய் சாட்சிகள் மூலம் அப்பாவிகளும் தண்டிக்கபடக் கூடும்.

    வேதாத்திரி மகரிஷியின் கவிதை ஒன்று.:-

    கொலைசெய்தான் ஒரு மூர்க்கன் அறிவிழந்து
    கொலையுண்டான் நீதிபதி அளித்த தீர்ப்பால்
    கொலைக்குக் கொலை நீதியென்றும் குற்றம்செய்த
    கொடுமைக்கே தண்டனைகள் என்றும் சொன்னால்
    கொலையு?ண்?டோர் மனைவிமக்கள் பெற்றோர் செய்த
    குற்றமென்ன ? குடும்பத்தின் தலைவன் ஆங்கே
    கொலையுண்ட நிகழ்ச்சி அன்னார் வாழ்வில் என்றும்
    கொடுந்துன்பம் தரவில்லையா நீதி எங்கே?

    மரணதண்டனை வேண்டாம் என்கிறார்
    .
    சமுதாயம் திருந்தினால் போதும். என்கிறார்.

    சமுதாய அமைப்பில் உள்ள குறைபாடே
    தனிமனித குற்றங்கள் அனைத்திற்கும் மூலம்.
    சமுத்தாயம் தனியாரை தண்டித்து மேலும்
    தவறிழைக்கும் செய்கியினை நீதியெனில் நன்றோ?
    சமுதாயத்தை அமைப்புமுறையை சீர்திருத்தி பொருட்கள்
    சமுத்துவாய் அனைவருக்கும் கிட்டுமெனில் உலக
    சமுதாயத்தில் குற்றம்நிகழைடமேது?
    தண்டனைக்கு எனவகுத்த சட்டங்கள் ஏனோ?
    என்று சொல்கிறார்..

    ஆயுள் தண்டனையில் அவன் செயலை நினைத்து திருந்த வாய்ப்பு உள்ளது, நிரபராதி என்றால் தண்டனையிலிருந்து தப்பிக்கவும் வழி உள்ளது..





    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ, வேதாத்திரி மகரிஷியின் கவிதையின் பொருள் அருமை. ஆனால் இது அன்றைய மனிதாபிமானமுள்ள மனிதர்கள் வாழ்ந்த காலத்திற்க்கு பொருந்தியது இன்றைக்கு மிருகங்கள் வாழும் சுடுகாடாய் போய் விட்டது. காலம் மாறும்போது மனிதன் எவ்வளவு விடயங்களை காலத்தின் போக்குக்காக மாற்றிக்கொண்டான், இல்லை மாற்றிக்கொண்டோம் காரணம் நானும், தாங்களும் இந்த கூட்டத்தில்தானே இருக்கின்றோம்.
      அதுபோல நாம் மாற்றுக்கருத்துக்கு மாறவேண்டிய சூழலில் இருக்கின்றோம், நான் சொல்வது இந்தியாவுக்குதான் உலகிற்க்கே அல்ல காரணம் மனிதனை மனிதன் கொள்வதற்க்கு இறைவனின் அகராதியில் இடமில்லை.

      மனிதநேயம் காப்போம்.
      மனிதனாக வாழ்வோம்.
      நன்றி சகோ.

      நீக்கு
  22. மரணதண்டனைக்கும் ஆயுள் தண்டனைக்கும் பலிகடாவுக்குவதற்கு மூல காரணமாக இருக்கிற ஆளும் நிலவும் சமூகத்தை பற்றி சொல்லவில்லையே நண்பரே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே எல்லாவற்றிக்குமே மூலம் மனிதன்தானே..... அதில் நாமும்தான்.

      நீக்கு
  23. சிறப்பான சிந்தனை ... வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  24. நல்ல பதிவு அண்ணே ! இன்னும் விவரமாக எழுதியிருக்கலாம் . சிறிது வேலையால் யார் ப்ளாக்குக்கும் வரமுடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதால் வரமுடியவில்லை . தம+

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களைப்போல சீனப்பெருஞ்சுவரைப்போல் கட்ட முடியவில்லை கழுதை கெட்டால் குட்டிச்சுலரு 80போல்தான் முடிகிறது இருப்பினஉம் தங்களைப்போல முயல்கிறேன். ஆமா வலைப்பூவுக்கு வரவிடாமல் உங்களை யார் தள்ளியது ?

      நீக்கு
  25. தேசதுரோகிகளுக்கும்
    பாலியல் வன்முறையாளர்களுக்கும்
    அவசியம் மரண தண்டனை வழங்கப்பட்டே ஆக வேண்டும்என்பது
    எனது கருத்து நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே எனது கருத்துடன் ஒத்துப்போனது கண்டு மகிழ்ச்சியும், நன்றியும்.

      நீக்கு
  26. குற்றங்களைப் பொறுத்து தணடனை மாறுபடனும். 10 ஆண்டுகளுக்கு மேல், இரட்டை ஆயுள் தண்டனை இது எல்லாம் தேவையா? வெளியில் தின்று கொழுத்த கூட்டங்கள் உள்ளேயும் செகுசாக திங்க சட்டம் தரும் காலமாகத் தான் இது இருக்கு. அப்புறம் தவறில் சுற்றத்தாருக்கு பங்கு இல்லையா? அப்புறம் தண்டனை மட்டும் தேவையில்லையா? மரணதண்டனை அவசியம் தேவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ அருமையான விளக்கவுரை தந்தீர்கள் ஸூப்பர்.

      நீக்கு
  27. சிறைகள் அற்ற சமுதாயத்தை உருவாக்கத் தவறிய நாம், சிறைத்தண்டனைகளைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். நாம் வேண்டுவது சமுதாய மாற்றம்.

    அய்யா குற்றங்கள் குறையவேணும்- உலகில்
    அன்பு நெஞ்சம் பெருகவேணும்!!!
    அனைத்து சிறைகளும் மூடவேணும்- தரமான
    கல்வி நிலையங்கள் நிறையவேனும்!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே... தாங்கள் அடிப்படைக்கு போய் விட்டீர்கள் தும்பை விட்டு விட்டதால் வாலைப்பிடித்துக்கொண்டு ஓடுகிறோம்.
      அருமையான கவிதை வரியில் சொல்லியுள்ளீர்கள் மனித மனங்களில் அன்பு நிறைந்து விட்டால் உலகில் ஏது பிரட்சினை, எதற்க்கு காவல் நிலையங்கள், எதற்க்கு நீதி மன்றங்கள், எதற்க்கு வழக்கறிஞர்கள் தங்களின் கருத்துரை மூலம் எனக்கு ஒரு பதிவு எழுத மூலக்கரு தந்தமைக்கு நன்றி நண்பரே....

      நீக்கு
  28. உண்மைதான் சிறையில் வாழ்(வதை)விட மரணதண்டனை மேல்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே இதனால் குடும்பத்தினரும் விடுதலை பெறுகிறார்கள்.

      நீக்கு
    2. சரி, தங்களின் மரணதண்டனைக்கு என் பதில், மரணதண்டனை ஒரு தண்டனையே அல்ல... குற்றவாளிக்கு நாம் அளிக்கும் நிரந்தர விடுதலை. குற்றம் புரிந்தவன் அவன் வாழும் காலத்திலேயே அவனது குற்றத்திற்கான தண்டனையைப் பெறவேண்டும். அதற்காக தினமும், பிரியாணி போட்டு கொழுக்க வைக்க வேண்டும் என்று நான் சொல்ல வரவில்லை. அவன் செய்த குற்றத்தின் அளவைப் பொறுத்து வாழ்ந்துகொண்டே நின்று நிதானமாக சாகவேண்டும்.

      நீக்கு
    3. மீள் வருகைக்கு நன்றி, நண்பரே நான் சொல்லும் மரணண்டனை குற்றவாளிக்கு மட்டுமல்ல அடுத்து ஒரு குற்றவாளி உருவாகாமல் இருப்பதற்க்கு அரபு நாடுகளில் கற்பழிப்புக்குற்றங்களுக்கு நடுரோட்டில் ஆண்கள் முன்னிலையில் அவனது ஆண் குறியை வெட்டுகிறார்கள் அதனாஸ்தான் இந்நாட்டில் ஆண்டுக்கு ஒன்றோ, இரண்டோ சிலமிருகங்களால் கற்பழிப்பு நடக்கிறது காரணம் என்ன ? பயம் மரணபயம்.
      ஆனால் நம் இந்தியாவில் ஒரு மணிநேரதிற்க்கு ஒரு பெண் எங்கோ ஒரு மூலையில் கற்பழிக்கப்படுகிறாள் காரணம் என்ன ? சட்டத்தின் ஓட்டைகள், அரசியல் பலம், பணத்தைக்கொடுத்து வெளியாகி விடலாம் என்ற தினாவெட்டு.

      சமீபத்தில் நடந்தது சவுதி மன்னர் குடும்பத்து நபர் ஒருவர் துபாயில் ஒருவரை கொன்று விட்டார் முடிவு வழக்கு சவுதியில் அந்நாட்டின் சட்டப்படி கொலைக்குற்றவாளி பாதிக்கப்பட்ட குடும்பத்து நபர்கள் நிர்ணயிக்கும் தொகையை தந்து விட்டால் தூக்கு இல்லை ஜெயில் மட்டுமே. ஆனால் சவுதி மன்னர் குடும்பம் பணம் கொடுக்க முன் வரவில்லை முடிவு தூக்கு அரங்கேறி விட்டதே... அவர்களிடம் இல்லாத பணமா ?
      இந்தியாவில் மனிதர்கள் எண்ணிக்கை குறைந்து, மிருகங்களின் எண்ணிக்கை கூடி விட்டது நண்பரே மிருகங்களை கொல்வதில் தப்பில்லை.
      மேலே நான் கொடுத்திருக்கும் அனைத்து பின்னூட்டங்களையும் படியுங்கள் நண்பரே அதிலும் இருக்கிறது விரிவான பதில்கள். நன்றி.

      நீக்கு
  29. உண்மை தான் சகோ ஆயுள் தண்டனை எவ்வளவோ மேல். அருமையான பதிவு.நான் கொஞ்சம் பிஸியாக இருந்த படியால் கருத்து கொடுக்க முடியவில்லை. ஆனால் நேற்று உங்கள் பதிவை படித்து விட்டேன்.அடுத்த பதிவை பார்க்க உடனே வந்து விடுவேன்.

    பதிலளிநீக்கு
  30. மரணதண்டனை வேண்டும் என்றால்...துடிக்க துடிக்க தூக்கில் போட்டு கொல்வதா... நோகாமல் சாகடிப்பது நல்லதா...நண்பரே.........

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதாவது இதைப்பார்பவன் அடுத்து தவறு செய்யக்கூடாது அப்படி இருக்க வேண்டும்.

      நீக்கு
  31. தண்டனைகள் மனிதனை திருத்தவே மேலும் குற்றம் செய்ய அல்ல ஒரு சிலர் சந்தர்ப்ப சூழ்நிலையால் குற்றவாளி ஆகின்றார்கள் அவர்களை திருத்தி பூமியை சொர்க்கமாக்க வேண்டும் நரகமாக அல்ல ஒரு உயிர் எத்தனை தடைகளை கடந்து மனிதனாக பரிணாமிக்கின்றது அதனை அழிப்பது எவ்வளவு பாவம் அவர்கள் நிச்சயமாக சட்டம் தெரியாமல் செய்கின்றார்கள் தெரிந்தால் செய்யமாட்டார்கள் . சொல்ல வேண்டியது நம் கடமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீள் வருகைக்கு நன்றி நண்பரே பின்னூட்டங்களை படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். நண்பா, நானும் மனிதநேயம் உள்ளவனே பாதிக்கப்பட்ட குடும்பத்திற்க்கு நியாயம் கிடைத்தால் அவன் சமாதானமாகி விடுவான் இல்லையேல் பழிக்குப்பழி வாங்க அவனது குடும்பத்தில் உள்ளவர்களை தீர்க்கப்பார்ப்பான் மீண்டும் சொல்கிறேன் இது இந்தியாவுக்கு மட்டுமே வேண்டும் தாங்கள் படித்தவர்தான் இன்றைய அரசியல்வாதிகளைப்பற்றி தெரிந்திருக்கும் யார் தண்டணை பெற்றார்கள் 80தை ஒரு நிமிடம் நினைத்துப்பாருங்கள்.

      நீக்கு
  32. மரண தண்டனை தேவையா என்கிற இந்த விவாதம் உலகெங்கிலும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில் இந்த தவறுக்கு இந்த தண்டனை எண்டு சொல்லும்போது, அந்த தண்டனையைப் பார்த்து மற்றவர்கள் அந்த தவறை செய்யாமல் இருக்க வேண்டும். அதனால் அது மரண தண்டனையாக இருந்தாலும் சரி,ஆயுள் தண்டனையாக இருந்தாலும் சரி, அந்த தண்டனையின் மீது ஒரு பயம் இருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமையான விளக்கவுரை தந்தீர்கள் அந்தப்பயம் இருந்தால் இந்தப்பதிவு நான் எழுத வேண்டிய அவசியமும் வந்திருக்காது நண்பரே...

      நீக்கு
  33. உணர்ச்சிவயப்பட்டு குற்றவாளியாகி , தன் மானம், மரியாதை, அனைத்தையும் இழந்து நடைபிணமாய் வாழ்வோர் ஆயுள் கைதிகள்! விடுதலை பெற்று வந்தாலும், நடமாடும் ஜீவனாய் இருந்தாலும் நடைபிணமாகத் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
    மரணம் .... இறைவன் ஒவ்வொருவருக்கும் இப்படி அனுபவித்து மரணிக்குமென தீர்ப்பு எழுதியபின், அவ்வாறு தானே நடக்கும்!
    சட்டம்... மனிதன் வகுத்த சட்டம் மாறுபடலாம்! தீர்ப்புகள் திருத்தப்படலாம்!
    ஆனால், குற்றவாளியின் மனசாட்சி அளிக்கும் தண்டனையே... அவனை திருந்தவும் வைக்கும்....அல்லது நடைபிணமாகவும் வைக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //குற்றவாளியின் மனசாட்சி அளிக்கும் தண்டனையே அவனை திருத்தும்//
      அருமையாக சொன்னீர்கள் நண்பரே... இதையேதான் நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களும் சொல்லியிருந்தார்.

      நீக்கு
  34. குடும்பம் இருப்பதையும் உணர்ந்து தானே தவறு செய்கிறார்கள். தண்டனை என்பது திருந்துவதாக அமைந்தால் நல்லது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

      நீக்கு
  35. பயம் இல்லாததால் தானே மேலும் மேலும் குற்றங்கள் நடக்கின்றன...மும்பை, டில்லி கேஸ் போல நிரூபிக்கப்பட்ட குற்றங்களுக்கு மரண தண்டனைதான் சரி..விட்டு வைத்தால் பேசுவதைக் கேட்டீர்களா? :(

    பதிலளிநீக்கு
  36. மரண தண்டனைக்குத்தான் மரணம் வேண்டும்

    பதிலளிநீக்கு