தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, ஆகஸ்ட் 07, 2015

ராயப்பேட்டை, ராப்காடு ராதிகா

கண், (இமைக்குள்) வசப்படும்போது...
நிலவு, (மேகத்துக்குள்) வசப்படும்போது...
தாவரம், (மண்ணுக்குள்) வசப்படும்போது...
பாம்பு, (மகுடிக்கு) வசப்படும்போது...
மான், (புலியிடம்) வசப்படும்போது...
யானை, (அங்குஜத்துக்கு) வசப்படும்போது...
மை, (பேனாவுக்குள்) வசப்படும்போது...
பூட்டு,  (சாவியிடம்) வசப்படும்போது...
காற்று, (பலூனுக்குள்) வசப்படும்போது...
மாமியாரே, (மருமகளுக்குள்) வசப்படும்போது...
மின்சாரம், (ஸ்விட்சுக்கு) வசப்படும்போது...
ரயில், (தண்டவாளத்துக்குள்) வசப்படும்போது...
12 மாதங்கள், (ஒருவருசத்துக்குள்) வசப்படும்போது...
4 வாரங்கள், (ஒருமாதத்துக்குள்) வசப்படும்போது...
7 நாட்கள், (ஒருவாரத்துக்குள்) வசப்படும்போது...
24 மணிநேரம், (ஒருநாளுக்குள்) வசப்படும்போது...
பட்டதாரிகள்கூட, (நடிகர்களிடம்) வசப்படும்போது...
TELEVISON, (REMOTEட்டுக்கு) வசப்படும்போது...
I. A.S. படித்தவரே, (படிக்காத M.L.A) வசப்படும்போது...
கண்ணே, நீ ஏன் என் வசப்படக்கூடாது ?
ராதிகா-
யேண்டா, கயிதே யெனக்கு கண்ணாலம், நிச்சயமாயிடிச்சி ஒனக்கு தெரியாது ? பொரட்டாசிலே யென்னே பொறட்டியெடுக்க ஒர்த்தன் வந்துக்கினு கீரான் நீயூம் யேன்வூட்டாண்ட வா ! ஒன்னையும் பொறட்டச்சொல்றேன், கஸ்மாலம், ஓட்றா...

53 கருத்துகள்:

  1. நண்பா!
    இத்தனையும் வசப்படும்போது
    வானம் மட்டும் அல்ல!
    (தமிழ்மணம் ஒன்று)
    முதலிடம்
    உம்மிடம் வசப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை!
    த ம +
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே முதலில் நீங்கள் வசப்படுத்துங்கள்.

      நீக்கு
  2. அட.. இத்தனை விடயம் ஒன்றுக்கு ஒன்று வசப்படும்போது
    இவ மட்டும் ஏன் வசப்படவில்லை?..
    சோகம் தான்?..:)

    நல்ல கற்பனைக் கோர்வை! அருமை! வாழ்த்துக்கள் சகோ!

    த ம+

    பதிலளிநீக்கு
  3. ஹா...ஹா...ஹா
    ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  4. நிச்சயம் ஓர் நாள் வசப்படும் நண்பரே
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேலே படத்தில் உள்ளவனுக்குதானே.... நன்றி நண்பரே....

      நீக்கு
  5. வசப்பட்டாலும் சரி!..
    வசமா பட்டாலும் சரி!?..

    நமக்கெதுக்கு ஊர் வம்பு!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதானே அவன் வாங்குறான் பார்த்து ரசித்து விட்டு போவோம் அவ்வளவுதான்.

      நீக்கு
  6. படமும் பதிவும் நன்று!

    த.ம. 6

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எது நன்று மேலே விளக்குமாற்றால் அடிவாங்குவது தானே...

      நீக்கு
  7. தமிழ் மணம் வசப்படும் அண்ணா...
    10-ல் இருந்த நான் ரெண்டு மாசத்துல 105 போயி இப்ப 75 வந்திருக்கேன்.
    பகிர்வு அருமை.

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் சகோ,
    அனைத்தும் உங்களுக்கு வசப்படும், மணம் மட்டும் படாதா? என்ன?
    வாழ்த்துக்கள்.நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எமக்கு எமது மனம் வசப்பட்டால் போதுமானது சகோ.

      நீக்கு
  9. மணமானவரை வசப்படுத்தவா முயற்சி. ?

    பதிலளிநீக்கு
  10. மணம் நிச்சயிக்கப் பட்டவரையா என்று இருந்திருக்கவேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயாவின் கருத்துப்பதிவுக்கு நன்றி.

      நீக்கு
  11. எல்லா பாசையும் தங்களுக்கு வரும் போல....

    பதிலளிநீக்கு
  12. குடும்பத் தலீவராக வருபவர் வசப்பட்டு கிடக்கும் டாஸ்மாககை பத்தி சொல்லவேயில்லையே நண்பா.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பா அவன்தான் வதங்கிப் போயிட்டானே....

      நீக்கு
  13. ஹஹஹஹ .....செம போங்க...அது சரி...அடைப்புக் குறியில் இருப்பவற்றை இல்லாமலேயே தந்திருக்கலாமோ நண்பரே!

    நல்லாவே சென்னைத் தமிழ் வருது போல..ஹஹஹஹ்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வசப்படுவது அடைபடுவது போல்தானே....

      நீக்கு
  14. சென்னை பித்தன் அவர்கள் கருத்தே என் கருத்தும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் நண்பரே... வருகைக்கு நன்றி.

      நீக்கு
  15. எப்பேர்பட்ட உத்தமியை ராப்காடு என்பதை கண்டிக்கிறேன் :)

    'ப'சையால் வசமாகா இதயமெது என்பதால் ,மீண்டும் முயற்சிக்கவும் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பரே உடன் சொலிலி விடுகிறேன்.

      நீக்கு
  16. கவிதை வாசித்த அவன், வார்கோலுக்கு வசப்படும்போது...

    ஹா... ஹா... ஹா...

    பதிலளிநீக்கு
  17. அன்புள்ள ஜி,

    இத்தனை வசப்பட்டும் - அந்த
    சத்தமான வசப்பாட்டு மட்டும்
    வாசல் பக்கம் வராதே என்று
    கஸ்மாலம் கீதே...!

    வா வாத்யாரே வூட்டாண்ட

    நீ வராங்காட்டி நா வுடமாட்டேன்

    ஜாம்பஜார் ஜக்கு நான்

    சைதாபேட்டை கொக்கு
    வாராவதிலே நின்னுக்கினிருந்தேன்

    அமராவதியாட்டம்

    சைட்டடிச்சு நீ ஜகா வாங்கினே

    அம்பிகாபதியாட்டம்
    லவ்வாப் பாத்து சோக்காப் பேசி

    டேக்காக் கொடுத்தே பின்னாலே

    சர்தான் வாம்மா கண்ணு படா

    பேஜாராச்சு நின்னு
    நைனா உன் நெனப்பாலே நான் நாஸ்தா பண்ணி நாளாச்சு

    மச்சான் ஒன் மூஞ்சப் பார்த்தேன்

    சால்னா நெனப்பு வந்தாச்சு

    ஆயாக்கடை இடியாப்பம் நான்

    பாயாக்கறியும் நீயாச்சு

    வா வா மச்சான் ஒண்ணா சேந்து

    வாராவதிக்கே போகலாம்...!


    வா கஸ்மாலம்.... என்னோட... இப்ப இன்னா சொல்றா...!

    த.ம.15.

    பதிலளிநீக்கு
  18. வருக மணவையாரே தங்களுக்கு பூர்வீகம் சென்னை என்று நினைக்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  19. மிரட்டலான தலைப்பு. பயமுறுத்தும் புகைப்படம். ஆனால் பதிவோ நெகிழ்வுடன். நன்றி.

    பதிலளிநீக்கு
  20. முன்னால் வசப்படுத்தும் கவிதை மழை!
    பின்னால் வசைபாடும் சென்னை மொழி!
    ரசித்தேன் நிறைய!

    பதிலளிநீக்கு
  21. உங்களின் அன்பில் [நாங்கள்]வசப்படும்போது...

    பதிலளிநீக்கு
  22. உங்களால மட்டும் எப்படி ஜீ ஒரு பக்கத்துல எழுதி கலக்கீறீங்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே உங்களுக்காகவே நாளையே பிரமாண்டமான பதிவு.

      நீக்கு
  23. விளக்குமாற்றால ராதிகாவிடம் அடி வாங்குவது யாரண்ணே!

    பதிலளிநீக்கு
  24. வணக்கம்
    ஜி
    நல்ல நகைச்சுவை படத்துடன் பதிவை அசத்தி விட்டீர்கள் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு